என் மகனை தூக்கில் போடுங்கள் : ஆவேசமான தந்தை!!

மத்திய பிரதேசத்தில் 8 வயது சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டது தொடர்பாக, என் மகன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் துக்கு தண்டனை வழங்குங்கள் என குற்றவாளியின் தந்தை கூறியுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் கடந்த ஜூன் 26-ம் தேதி பள்ளி சென்ற 8 வயது சிறுமி, தந்து தந்தையின் வருகைக்காக பள்ளியின் வெளியே காத்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த, இரு காமுகர்கள் சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததோடு, உண்மையை வெளியில் சொல்லிவிட கூடாது என்பதற்காக கழுத்தையும் அறுத்து, லட்சுமண் தார்வாஜா பகுதியில் நின்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் வீசி சென்றுள்ளனர்.

நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால், பயத்தில் உறைந்த பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ளும்பொழுது, பேருந்து ஒன்றிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.

அங்கு ரத்த வெள்ளத்தில் மிதந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 3 மணி நேர சிகிச்சைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர், டெல்லியை உலுக்கிய நிர்பயா வழக்கு போன்றே சிறுமியும் சிதைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து சமூக ஆர்வாளர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் குற்றவாளிக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவிக்க ஆரம்பித்தனர். இதற்கிடையில் விரைந்த செயல்பட்ட காவல்துறையினர் குற்றவாளிகள், இர்பான் மற்றும் அவரது நண்பர் ஆசிப் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், எனது மகன் குடிகாரன். அவன் ஒரு அப்பாவி என்று நான் நினைக்கவில்லை. அவன் மீது தவறு உறுதி செய்யப்பட்டால் தூக்கு தண்டனையை நிறைவேற்றுங்கள் என குற்றவாளியின் தந்தை ஆவேசமாக கூறியுள்ளார்.

முன்னதாக சிறுமியின் தந்தை, தனக்கு இழப்பீடு எதுவும் வேண்டாம் குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை வழங்கினால் போதும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கல்லூரி வளாகத்தில் அடித்து கொலை செய்யப்பட்ட மாணவர் : அதிர்ச்சிக் காரணம்!!

கேரளாவில் கல்லூரி ஒன்றில் புதியவர்களை வரவேற்கும் வாசகம் எழுதுவதில் ஏற்பட்ட மோதலில் எஸ்எப்ஐ மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார்.

எர்ணாக்குளம் மகாராஜா கல்லூரி வளாக சுவரில் புதிய மாணவர்களை வரவேற்கும் வாசகங்கள் எழுதுவதில் போட்டி நிலவியதாகக் கூறப்படுகிறது.

இந்த மோதல் கலவரமாக வெடித்த நிலையில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் எஸ்எப்ஐ மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர் அபிமன்யூ கேம்பஸ் முன்னணி மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

இன்னொரு எஸ்எப்ஐ உறுப்பினரான அர்ஜுன் (19) மோதலில் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கேம்பஸ் முன்னணி, தேசிய வளர்ச்சி முன்னணி சங்கங்களைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள சந்தேகப்படும்படியான நபர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மரணித்த கணவர் : நிறைமாத கர்ப்பிணி மனைவியின் நெகிழ்ச்சி முடிவு!!

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றும் முத்துக்கிருஷ்ணன் என்பவர் விபத்தில் இறந்துபோனார்.

தகவல் அறிந்த பொலிசார் அவரது உடலை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்துபோன முத்துகிருஷ்ணனின் மனைவி சந்திரா கர்ப்பமாக இருந்துள்ளார்.

இதனிடையே மரணமடைந்த முத்துக்கிருஷ்ணின் இரண்டு கண்களும் உயிர்த் துடிப்பிலிருப்பதையறிந்த மருத்துவர்கள் உடனடியாக அவரது மனைவி சந்திராவைத் தொடர்புகொண்டு முத்துக்கிருஷ்ணனின் இரண்டு கண்களையும் தானமாகக் கேட்டிருக்கிறார்கள்.

கணவனைப் பறி கொடுத்த சோகத்திற்கிடையே சந்திராவும் அதற்குச் சம்மதித்து, தனது கண்வரின் கண்களை தானமாக வழங்கியுள்ளார்.

நான்கு நாட்களே பிரசவத்திற்கு உள்ள நிலையில், அடுத்தவர் வாழ்வில் ஒளி விளக்கேற்றி வைத்த அவரின் தானக் கொடை அந்தப் பகுதியினரை நெகிழச் செய்திருக்கிறது.

பாதிரியார்களால் சீரழிக்கப்பட்டது இந்த பெண்ணா? வெளியான உண்மைத் தகவல்!!

கேரளாவில் 5 பாதிரியார்களால் மிரட்டி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் ஒரு மருத்துவரது என தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் பத்தனம்திட்டா பகுதியில் குடியிருக்கும் மருத்துவர் அஞ்சு ராமச்சந்திரன் என்பவருக்கு கேரள பாதிரியார்களின் லீலைகள் மிகவும் தாமதமாகவே தெரியவந்துள்ளது.

அதுவும் பாதிரியார்களால் சீரழிக்கப்பட்ட பெண் என இவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்த பின்னரே.

ஜூன் 25 ஆம் திகதி இவரது முன்னாள் சக மருத்துவர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து குறித்த புகைப்பட விவகாரத்தை தெரிவித்தபோது, உண்மையில் மருத்துவர் அஞ்சு ராமச்சந்திரன் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளார்.

இவர் மட்டுமல்ல, இவரது கணவருக்கும் குறித்த பாதிரியார்களின் புகைப்படங்களுடன் அஞ்சு ராமச்சந்திரன் புகைப்படமும் இணைக்கப்பட்டு ஒரு வாட்ஸ் ஆப் தகவலும் கிடைத்துள்ளது.

மருத்துவர் அஞ்சு ராமச்சந்திரனுக்கு இவ்வாறு புகைப்பட சிக்கல் ஏற்படுவது இது முதன் முறையல்ல.

கடந்த 2017 ஆம் ஆண்டு இவரது பேஸ்புக் பக்கத்தில் இருந்த புகைப்படத்தை எடுத்து அதன் தலைப்பகுதியை பயன்படுத்தி ஒரு ஆபாச புகைப்படத்துடன் இணைத்து சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது.

பின்னர் அதே புகைப்படம் கேரளாவுக்கு கிடைத்த புது ஆபாச நடிகை என்ற பெயரில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் பொலிசில் சிக்கிய ஆபாச நடிகையின் உரையாடல் என்ற பெயரில் இவரது புகைப்படத்தை இணைத்து வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான மருத்துவர் அஞ்சு ராமச்சந்திரன் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளதுடன் சைபர் பிரிவினருக்கும் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் இத்துடன் முடிவுக்கு வரும் என நம்புவதாக தெரிவித்துள்ள மருத்துவர் அஞ்சு, இதுபோன்ற விவகாரங்களால் பேஸ்புக்கில் உள்ள அனைத்து தனியான புகைப்படங்களையும் தாம் அகற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பூட்டிய வீட்டுக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் : திடுக்கிடும் பின்னணித் தகவல்கள்!!

டெல்லியில் ஒரே வீட்டிற்குள் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்திற்கு மத நம்பிக்கை காரணமா என பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புராரி பகுதியில் 2 அடுக்குகளை கொண்ட வீட்டில், பாவனேஷ் மற்றும் அவரது சகோதரர் லலித் பாட்டியா ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

பாவனேஷ் பலசரக்கு கடையும், லலித் பாட்டியா தச்சுவேலையும் செய்து வந்துள்ளனர். நேற்று காலை 7.30 மணி வரை ஆகியும் கடை திறக்கப்படாததால், அருகே உள்ளவர்கள் பாவனேஷ் வீட்டு கதவை தட்டியுள்ளனர். தகவல் அறிந்து வந்த பொலிசார் கதவை உடைத்து பார்த்தபோது 11 பேர் இறந்து கிடந்தனர்.

பாவனேஷ் தாய் நாராயன் தேவி கழுத்து அறுக்கப்பட்டு தரையில் இறந்து கிடந்தார். அவரது மகள் பிரதீபா, இரு மகன்கள் பாவனேஷ் மற்றும் லலித் பாட்டியா, பாவனேஷ் மனைவி சவிதா, அவரது 3 குழந்தைகள் மீனு, நிதி, துரவ் மற்றும் லலித் பாட்டியாவின் மனைவி டினா, மகன் ஷிவம் ஆகியோர் கண்கள், கால்கள் கட்டிய நிலையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தனர்.

வீட்டில் உள்ள பொருட்கள், பெண்கள் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் அப்படியே இருந்தது. கொள்ளையடிக்கும் நோக்கில் இச்சம்பவம் நடைபெறவில்லை என முடிவுக்கு வந்த பொலிசார் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ள சில குறிப்புகளின் அடிப்படையில், குடும்பத்தினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக குறிப்பிட்ட மதநம்பிக்கையை பின்பற்றியது தெரியவந்துள்ளது.

அந்த வீட்டில் கைப்பற்றப்பட்ட குறிப்பில், வாய், கண்கள், கைகளை கட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டால் பயத்தை வென்று விடலாம், ஆலமரத்தை ஏழு நாட்கள் பயபக்தியுடன் வழிபடுங்கள், யாராவது வீட்டுக்கு வந்தால் அடுத்தநாள் இதை செய்யுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே குடும்பத்தினர் வளர்த்து வந்த நாய் மட்டும், மாடியில் கொண்டுபோய் விடப்பட்டுள்ளது.

கீழே இருந்த நாயை கொலையாளி மேலே கொண்டுபோய் விட்டிருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

பொலிசார் கூறுகையில், இந்த குடும்பத்தை சேர்ந்த யாரோ மூவர் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர், ஆனால் அதன் பின்னர் குடும்பத்தினரை கொல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

நாயை மாடியில் கொண்டு போய் விட்ட நபரின் கைரேகையை சேகரித்துள்ளோம், இதனை ஆய்வு செய்தபின்னரே அது யார் என்பது தெரியவரும் என கூறியுள்ளனர்.

மதநம்பிக்கையா, கடன்தொல்லையா அல்லது வேறு எதாவது பிரச்சனைக்காக மொத்த குடும்பத்தாரும் தற்கொலை செய்து கொண்டனரா என்று பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த குடும்பத்தை சேர்ந்த யாரோ ஒருவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக மொத்த குடும்பத்தையும் கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இலங்கையின் தேசிய விருதை வென்ற தமிழ் இசையமைப்பாளர்!!

“ஓவியா” என்னும் படத்திற்காக, இலங்கை அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை சிவா பத்மஜனுன் என்பவர் பெற்றுள்ளார்.

இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில், காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து, நடித்துள்ள படம் “ஓவியா”. அறிமுக இயக்குனர் கஜன் ஜெகநாதன் இயக்க, சிவா பத்மஜன் இசையமைத்துள்ளார்.

இதில் நாயகியாக இலங்கையை சேர்ந்த மிதுனா என்பவரும், “ஓவியா” என்னும் சிறுமி கதாபாத்திரத்தில் சுவிக்சா ஜெயரத்னம் என்ற குழந்தையும் நடித்துள்ளனர். நிசாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய, அனீஸ் ரஹ்மான் நடனம் அமைத்துள்ளார்.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன முன்னிலையில், கடந்த 22-ம் தேதி நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த பாடலுக்கான பிரிவில், ஓவியா படத்தில் இடம்பெற்றுள்ள “அள்ளிக்கொள்ளவா” பாடல் விருதை தட்டி சென்றது.

அதனடிப்படையில் இசையமைப்பாளர் சிவா பத்மஜனுக்கு, சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை கலைத்துறை அமைச்சர் எஸ்.பி.நவய்நெ (S.B.Nawwine) வழங்கியுள்ளார்.

முன்னதாக தனியார் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான, பாடகர் ஆனந்த் அரவிந்தக்ஷன் தான் இப்பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் முடித்தவர்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யமாட்டார்களா? யாழில் நீதிமன்றம் கேள்வி!!

திருமணம் முடித்தவர்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்ய மாட்டார்களா? என மல்லாகம் நீதிமன்றம் சட்டத்தரணியிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் பாடசாலை மாணவிகள் மூவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய சம்பவம் அண்மையில் மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் சார்பில் ஆஜரான சட்டத்தரணியிடம் இந்த கேள்வியை நீதிமன்று எழுப்பியிருந்தது.

“இந்த ஆசிரியர் கௌரவமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், திருமணம் முடித்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார், அவர் மீது சேறு பூசும் நடவடிக்கையாகவே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது” என்று சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, “திருமணம் முடித்தவர்கள் இவ்வாறான செயற்பாட்டை செய்யமாட்டார்களா? திருமணம் முடிக்காதவர்கள் தான் இப்படி செய்வார்களா?” என்று கேள்வி எழுப்பிய மல்லாகம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசா, சந்தேகநபரான ஆசிரியருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

யாழ்.வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற பதின்ம வயது மாணவியை வன்புணர்ந்தமை மற்றும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டையைச் சேந்த ஆசிரியர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூன்று பெண்களை கத்தியால் குத்திவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்!!

மாத்தறை – ஊருபொக்க, கல்பொக்க பிரதேசத்தில் கத்தி குத்துக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 28 வயதான பெண் உயிரிழந்துள்ள நிலையில், 32 மற்றும் 64 வயதான ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் படுகாயமடைந்து எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட 40 வயதான நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மனநோய் முற்றியதால் இந்த கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டு விட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த குழந்தை : இருவர் படுகாயம்!!

 

மட்டக்களப்பு – தும்பங்கேணி, பழுகாமம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

தும்பங்கேணி, பழுகாமம் சந்தியில் இன்று காலை டிப்பர் வாகனமும் முச்சக்கரவண்டியும் மோதுண்டதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பலாச்சோலையில் இருந்து களுவாஞ்சிகுடிக்கு சென்ற முச்சக்கரவண்டியும், சம்மாந்துறையில் இருந்து கொக்கட்டிச்சோலைக்கு சென்ற டிப்பர் வாகனமும் மோதிய நிலையில் முச்சக்கரவண்டி இழுத்துச் செல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்தி இரண்டு வயது சிறுவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாகவும் சிறுவனின் தாயாரும் முச்சக்கரவண்டி சாரதியும் படுகாயமடைந்ததாகவும் வெல்லாவெளி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் படுகாயமடைந்தவர்களும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இரண்டு வாகனங்களினதும் வேகமே விபத்து காரணம் என தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்ணை துஷ்பிரயோகம் செய்து விட்டு 10 ஆண்டுகளாக மறைந்திருந்த நபா்!!

காலியில் பெண் ஒருவர் துஷ்பிரயோகம் செய்து விட்டு 10 ஆண்டுகளுக்கும் அதிக காலம் உருவத்தை மாற்றி மறைந்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதியான இந்த நபர் நேற்று காலி, கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரால் 2008ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி, பாதிக்கப்பட்ட பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த முச்சக்கர வண்டி சாரதி பாதிக்கப்பட்ட பெண்ணுடன் காதல் ஒன்று தொடர்பு ஒன்றும் வைத்திருந்துள்ளார். எனினும் பலவந்தமாக அந்த பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

பின்னர் இது தொடர்பில் பெண் காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். எனினும் சந்தேக நபர் பாணந்துறை பிரதேசத்திற்கு தப்பி சென்று மறைந்திருந்துள்ளார்.

7 வருடங்களின் பின்னர் அந்த பிரதேசத்தில் பெண் ஒருவரை திருமணம் செய்த நபர் ஹபராதுவ பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார்.

அவர் தனது உருவத்தை மாற்றி முச்சக்கர வண்டி சாரதியாக செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த நபர் தொடர்பில் தகவல் கண்டுபிடித்த புலனாய்வு பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.

யாழில் மற்றுமொரு பயங்கரம் : கணவனின் கண் முன்னே மனைவி கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகம்!!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியில் கணவனின் கண்முன்னே மனைவியை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்த திருடர்கள், வீட்டில் இருந்த நகைகள், பணம் என்பவற்றையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த திருடர்கள், இந்த கொடூரத்தை அரங்கேற்றி விட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீட்டிற்குள் நுழைந்த இரு திருடர்கள் கணவனை கடுமையாக தாக்கியதுடன் அவரின் வாய் மற்றும் கைகளை கதிரையுடன் சேர்த்து கட்டி வைத்துள்ளார்கள்.

பின்னர் மனைவியை தாக்கி அவர் அணிந்திருந்த நகைகளை பறித்ததுடன் அங்கிருந்த ஒரு தொகை பணத்தையும் அபகரித்துள்ளார்கள்.

தொடர்ந்து மனைவியின் வாயை கட்டி வைத்து அவரை மிகவும் கொடூரமான முறையில் துஷ்பிரயோகம் செய்துள்ளார்கள்.

குறித்த பெண்ணின் உடல் உறுப்புக்கள் அனைத்திலும் கத்தியால் வெட்டி காயப்படுத்தியதுடன் வாய், தலை என்பவற்றில் பலமாக தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளார்கள்.

அதிகாலையில் புகுந்த திருடர்கள் சுமார் 3 மணி நேரம் வரை அவர்களை சித்திரவதை செய்துவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பிச்சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 59 வயதான பெண்ணும் அவருடைய கணவரும் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இக் கொடூர சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதுடன், இவ்வாறான சம்பவங்களுக்கு விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, திருடர்கள் இருவரும் அரைக்காற்சட்டையும் ரிசேட்டும் அணிந்து முகத்தை மூடி துணி கட்டியிருந்தனர். கைகளுக்கு குளோஸ் போட்டிருந்தனர் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு!!

வவுனியா நெடுங்கேணி சேனப்புலவு பகுதியில் கடந்த மாதம் காணாமல்போன இளைஞனின் சடலம் நேற்று ஒட்டுசுட்டானில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 17.05.2018 அன்று காலை 10.30 மணியளவில் நெடுங்கேணிக்கு கடைக்குச் சென்றுவருவதாகத் தெரிவித்து விட்டுச் சென்ற இராஜகோபால் கஜமுகன் என்ற 22 வயது மகன் வீடு திரும்பவில்லை என்று அவரது தாயாரால் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் கடந்த மாதம் 23ம் திகதி இளைஞனின் மோட்டார் சைக்கில் வீட்டிற்கு அருகிலிருந்து உறவினர்களினால் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிசார் மோட்டார் சைக்கிலினை நீதிமன்றத்தில் முற்படுத்தி மேலதிக விசாரணைகளை துரிதப்படுத்தினார்கள்.

நேற்று குறித்த இளைஞனின் சடலம் ஒட்டுசுட்டான் தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதியிலிருந்து உருக்குலைந்த நிலையில் கைகள், கால் பகுதிகளின் எலும்புகள் சதையின்றி உடலின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனின் கடத்தல் மற்றும் கொலையுடன் தொடர்புபட்டுள்ளதாகத் இரு இளைஞர்களைக் கைது செய்த பொலிசார் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது சந்தேக நபர்களில் ஒருவருடைய மனைவியுடன் குறித்த இளைஞன் தொடர்பு வைத்துள்ளதாகவும் இதனாலேயே சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் நேற்று மாலை கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மெஸ்ஸியின் உலகக்கிண்ண கனவுக்கு ஆப்பு வைத்த பிரான்ஸ் : முக்கிய அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் பிரான்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு பின் அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் பலம் வாய்ந்த அணிகள் தொடரை விட்டு வெளியேறுகின்றன, கத்து குட்டி அணிகள் எல்லாம் சிறப்பாக விளையாடி அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னெறி வருவது கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தி வருகிறது.

அப்படி இந்த உலகக்கிண்ணம் தொடர் துவங்குவதற்கு முன்பே பலம் வாய்ந்த அணிகளின் வரிசையில் இருந்த அர்ஜெண்டினா அணி, பிரான்ஸ் அணிக்கு எதிரான நாக் அவுட் சுற்றில் பரிதாபமாக தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.

இந்த அணியில் பெரிதும் நம்பப்பட்ட மெஸ்ஸியின் மாயாஜாலம் ஒன்றும் எடுபடவில்லை.

அவரின் கால்பந்து வித்தை கிளப் அணிகளுக்கு விளையாடுவதில் மட்டும் தான் இருந்துள்ளது. ஆனால் அவர் பிறந்த அர்ஜெண்டினா நாட்டின் உலகக்கிண்ண போட்டி வெற்றிக்கு உதவாமலேயே போய்விட்டது

மெஸ்ஸி முதன் முறையாக 2006-ஆம் ஆண்டு அர்ஜெண்டினா அணிக்காக விளையாடினார். அதன் பின் 2014-ஆம் ஆண்டு இவர் தலைமையிலான அணி உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடியது. ஆனால் கிண்ணத்தை பெற்றுத் தர முடியவில்லை.

இதனால் அவர் தன்னுடைய ஒய்வை அறிவித்தார். அதன் பின்னர் ஓய்வு முடிவிலிருந்து பின்வாங்கி மீண்டும் விளையாடத்துவங்கினார்.

இந்நிலையில் தனது ஓய்வு உலகக் கிண்ண போட்டியின் முடிவைப் பொறுத்து அமையும் என தெரிவித்திருந்தார். ஆனால் பிரான்ஸ் அணியுடன் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக அதன் விரக்தியை வெளிப்படுத்தும் வகையில் தன் ஓய்வை மெஸ்ஸி மீண்டும் அறிவித்துள்ளார்.

மெஸ்ஸியின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், மீண்டும் அவர் விளையாட வேண்டும் என்று தான் ரசிகர்கள் விரும்புகின்றனர்.

கணவருடன் சேர்ந்து மது போதையில் மிதந்த மனைவி : அடுத்து நிகழ்ந்த சோகம்!!

பிரித்தானியாவை சேர்ந்த பெண் கணவருடன் சேர்ந்து மது அருந்திய போது உயிரிழந்த நிலையில், கணவர் மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிரேட்டர் மான்செஸ்டரை சேர்ந்தவர் ஸ்டுஅர்ட் பிஷப் (46). இவர் மனைவி பவுலா (37). இருவரும் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

சுற்றுலா சென்ற இடத்தில் இருந்த இரண்டு மது கூடங்களில் பிஷப்பும், பவுலாவும் மது அருந்திய பின்னர் ஹொட்டல் அறைக்கு திரும்பியுள்ளனர்.

பின்னர் காலையில் பிஷப் எழுந்து பார்த்த போது பவுலா சடலமாக கிடந்துள்ளார்.

பவுலாவின் பிரேத பரிசோதனை முடிவில் அவர் அதிகளவு மது குடித்ததால் அந்த நச்சு உடலில் கலந்து இதயம் செயலிந்து உயிர் பிரிந்தது தெரியவந்தது.

இது குறித்து பிஷப் கூறுகையில், பவுலா கொஞ்சம் பீர் வகை மற்றும் இரண்டு கிளாஸ் வைன் மது மற்றும் ஐரீஸ் காபியை தான் குடித்தார்.

ஆனால் அவர் ரத்தத்தில் 15 யூனிட் அளவில் மது இருப்பது தெரியவந்தது, இதை என்னால் நம்ப முடியவில்லை. நான் எல்லோருக்கும் கூறுவது ஒன்று தான், வேறு நாடுகளுக்கு போனால் மது விடயத்தில் கவனமாக இருங்கள்.

ஏனெனில் பிரித்தானியா போல மதுவின் அளவு பல நாடுகளிலும் சரியான அளவு கணக்கிடப்படுவதில்லை.

என் மனைவியை நான் அதிகம் மிஸ் செய்கிறேன், அவரில்லாமல் வாழ்வது கடினமாக உள்ளது என வேதனை தெரிவித்துள்ளார்.

என் வாழ்க்கையை நாசமாக்கி விட்டனர் : காதலி கொலை வழக்கில் தேடப்படும் முதல் குற்றவாளி பேட்டி!!

காதலி கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் முதல் குற்றவாளியான Santoro என்பவன் தனது வாழ்க்கையே நாசமாகி விட்டதாக பேட்டி அளித்திருக்கிறான்.

கடந்த ஏப்ரல் மாதம் சிட்னியில் உள்ள லேன் கோவ் ஆற்றில் Cecilia Haddad 38 எனும் பெண்மணி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இவர் கண்டெடுக்கப்பட்ட அடுத்த நாளே இவரது காதலன் Santaro பிரேசில் நாட்டிற்கு தப்பியோடி விட்டான்.

அதனால் இவனை சந்தேகித்த போலீசார் இவனை ஒரு சர்வதேச குற்றவாளி என்று அறிவித்துள்ளனர். தேடப்படும் குற்றவாளியான santaro தற்போது ரியோ டி ஜெனீரோவில் தனது குடும்பத்தாரோடு வசித்து வருகிறான்.

இவனை கைது செய்ய சர்வதேசத்தில் உள்ள காவல்துறையினரும் முயன்று வருகின்றனர். இந்நிலையில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த குற்றவாளி தனது வாழ்க்கையே இந்த கைது உத்தரவால் நாசமாகி விட்டதாக தெரிவித்திருக்கிறார். தன் மேல் கைது வாரண்ட் இருப்பது தனக்கு தெரியும் என்று கூறும் santaro அங்கு வந்தால் மக்கள் என்னை அடித்து துன்புறுத்துவார்கள் என்று கூறுகிறார்.

தான் மிகுந்த குழப்பத்தில் இருப்பதாகவும் ஒரு பக்க கதையை கேட்டு மக்கள் தன் மேல் கோபமாக இருப்பதாகவும் போன் மூலம் மிரட்டுவதாகவும் இவர் கூறியிருக்கிறார்.

கொலை செய்யப்பட்ட Cecilia Haddad மிக சிறந்த படிப்பாளி மற்றும் அறிவாளி என்று கூறப்படுகிறது. சிறந்த தொழித்தவராகவும் இருந்த ஹடாட் santario வை பள்ளி படிப்பின் போது நட்பாக சந்தித்து பழகியிருக்கிறார், அதன் பின் பல வருடங்களுக்கு பின் இருவருக்கும் திருமணமான நிலையில் மீண்டும் இவர்கள் நட்பு தொடர்ந்திருக்கிறது.

அந்த சமயத்தில்தான் இந்த கொலை நிகழ்ந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர் குடும்பத்தார் தெரிவித்தனர். ஹடாட்

சடலமாக மிதந்த ஆற்றில் பூங்கொத்துகள் வீசி அவரது குடும்பத்தார் அஞ்சலி செலுத்தினர்.

சர்வதேச முறையில் தேடப்படும் குற்றவாளி என்பதாலும் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டதாலும் இந்த கொலை குற்றம் விடயமாக பிரேசில் போலீசார் விரைவில் santaro வை கைது செய்வார்கள் என்று அறியப்படுகிறது.

20 அடி தூரம் வரை தூக்கியெறியப்பட்ட நான்கு வயது குழந்தை : விளையாட்டுக்கூடம் வெடித்ததால் ஏற்பட்ட சோகம்!!

இங்கிலாந்தில் Norfolk எனும் இடத்தில கடற்கரையோரம் குழந்தைகள் விளையாடும் பவுன்சிங் கூடாரம் ஒன்று திடீரென வெடித்தது. அதே சமயத்தில் சிறு குழந்தை ஒன்று 20 மீட்டர் உயரத்திற்கு தூக்கி எறியப்பட்டாள்.

இந்த விபத்தை நேரில் பார்த்த பல பொதுமக்கள் பயத்தில் உறைந்து நின்றனர். உடனடியாக காவல்துறைக்கும் அம்புலன்சிற்கும் தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த போலீசார் விபத்தில் பாதிக்கப்பட்ட 4 வயது பெண் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும் அந்த குழந்தை இறந்து விட்டது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறும்போது என் வாழ்வில் இதுவரை இப்படி ஒரு பயங்கர சம்பவத்தை பார்த்ததில்லை என்கிறார்.

குழந்தைகள் விளையாடும் காற்று நிரப்பப்பட்ட பலூன் போன்ற கோட்டை ஒன்றில் அந்த குழந்தை வெயில் கொளுத்தும் நேரத்தில் விளையாடி இருக்கிறது. அதிக வெயிலால் அந்த கோட்டை வெடித்து அதில் இருந்தகுழந்தை தூக்கியெறியப்பட்டு விட்டாள். தயவு செய்து குழந்தைகளை வெயில் நேரங்களில் இது போன்ற இடங்களுக்கு விளையாட அனுப்பாதீர்கள் . குழந்தையின் குடும்பத்தாருக்கு என் இரங்கல்கள் என்று அவர் கூறினார். இந்த விபத்து பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.