வவுனியாவைச் சேர்ந்த பெண் செய்த கொடூரம் : 9 வயது மகளை கொலை செய்து புதைத்து அம்பலம்!!

சிறுமியை கொலை செய்து புதைத்த தாய்

ஒன்பது வயதான பெண் பிள்ளை கொலை செய்து இரகசியமாக புதைத்ததாக கூறப்படும் பெண்ணொருவரையும் அவரது இரண்டாவது கணவரையும் தாம் இன்று கைது செய்துள்ளதாக ஹாலி-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹாலி- எல பொலிஸ் பிரிவில் கந்தேகெதர மஹாதென்ன பிரதேசத்தில் வசித்து வரும் 26 வயதான பெண்ணும் 31 வயதான ஆணும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தை இந்த பெண்ணின் முதல் கணவர் அவரை விட்டுப் பிரிந்துள்ளார். இந்த பெண்ணும் அவரது 9 வயதான மகளும் இரண்டாவது கணவருடன் கந்தேககெதர மஹாதென்ன பகுதியில் குடியேறி வசித்து வந்துள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 வயதான மகளை கொலை செய்து, தோட்டத்தில் புதைத்துள்ளதாக பதுளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து ஹாலி- எல பொலிஸார் பெண்ணையும் ஆணையும் கைது செய்துள்ளனர்.

புதைக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் சடலம் நாளைய தினம் தோண்டி எடுக்கப்பட உள்ளது. பதுளை சட்ட வைத்திய அதிகாரி வசந்த கந்தேவத்தவின் ஆலோசனையின் பேரில் ஹாலி-எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்கத்திற்கு மாறாக நுவரெலியாவில் பனிப்பொழி!!

நுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட சில இடங்களில் இன்று அதிகாலை பனிபெய்துள்ளது.

நுவரெலிய குதிரை பந்தய திடல், கோல்ப் மைதானம் உட்பட சில இடங்களில் பனிபொழிந்து காணப்பட்டது.

இன்று அதிகாலை நுவரெலியாவின் வெப்ப நிலை 6 பாகை செல்சியஸ்ஸாக காணப்பட்டது. பிரதேசத்தில் நிலவும் கடும் குளிருடன் கூடிய காலை நிலை காரணமாக அங்கு அதிகாலையில் பனிபொழிந்து வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாலையில் பொழியும் பனி சூரிய ஒளி தென்படும் வரை காணப்படுவதாகவும் இது பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் காய்கறி செய்கை மற்றும் தேயிலை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் மர்மப் பொதியை வீசிச் சென்ற சந்தேக நபர் கைது!!

 

சந்தேக நபர் கைது

வவுனியா, புதூர் பகுதியில் பிஸ்ரல் மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை வீசிவிட்டு தப்பியோடிய நபர் தொடர்பில் சந்தேகத்தில் நபரொருவரை புளியங்குளம் பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்புகாவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2 ஆம் திகதி புளியங்குளம், புதூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் காணப்படுவதாக புளியங்குளம் பொலிசாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதிக்கு சிவில் உடையில் நான்கு பொலிசார் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதன்போது அவ்வீதியில் சென்ற இனந்தெரியாத நபர் ஒருவர் தனது கையில் வைத்திருந்த மர்மப் பொதியை தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளார். தாம் அவரைத் துரத்திச் சென்றபோதும் அவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.

அன்று இரவிலிருந்து அடுத்த நாள் மதியம் வரை இராணுவம் பொலிசார் இணைந்து அப்பகுதியில் சுற்றி வளைப்பு மேற்கொண்டு தேடுதல் நடத்திய போதும் எவரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் குறித்த பொதியை பொலிசார் பார்வையிட்டபோது அதனுள் கைத்துப்பாக்கி அதற்குரிய ரவைகள், கைக்குண்டுகள் நான்கு, ஸ்மாட் கைத்தொலைபேசிகள் 2 அதற்குரிய மின்கலத்துடனான மின் வழங்கி என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வவுனியா சாளம்பைக்குளத்தினை சேர்ந்த நபரை கடந்த வெள்ளிக்கிழமை (04.01) சந்தேகத்தின் பெயரில் கைது செய்து நேற்றையதினம் (05.01) வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சமயத்தில் நாளை திங்கட்கிழமை (07.01) வரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக முளைத்த மதுபானசாலை!!

 

மதுபானசாலை

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று திடீரென புதிதாக பியர் விற்பனை நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டதனால் அப் பகுதியில் குடியிருக்கும்
மக்கள் விசனம் அடைந்துள்ளனர்.

ஏற்கனவே வடக்கை பொறுத்தவரையில் வவுனியாவில் அதிகமான மதுபான விற்பனை நிலையங்கள் இருப்பதாக பொது அமைப்புக்களும் பெண்கள் நலன் சார்ந்த அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்ற நிலையிலே புதிய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று திறந்து வைக்கப்பட்டது அப்பகுதி மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற காலம் தொடக்கம் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்போவதில்லை என்று கொள்கை ரீதியாக முடிவெடுத்துள்ள நிலையில் ஏற்கனவே பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் இயங்கி வந்த பழைய மதுபானசாலையின் அனுமதி பத்திரத்தை வைத்து கொண்டு புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக திறந்திருப்பதென்பது ஏற்கனவே போதிய வசதிகளற்ற சனநெருக்கடியான நிலையில் உள்ள புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாகவும் அதைவிடவும் அம்மாச்சி பாரம்பரிய உணவகத்திற்கு முன்பாக இந்த மதுபானசாலை திறந்து வைத்திருப்பது என்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக அப் பகுதியில் வசிக்கின்ற மக்கள் தங்களுக்கு இந்த மதுபானசாலை அமைந்தது தொடர்பில் எந்தவிதமான உடன்பாடும் இல்லை எனவும் இது நமது கலாச்சாரத்தையும் தமது இயல்பு வாழ்க்கையையும் பாதிக்கும் எனவும் சாராயத்தை வாங்கியவர்கள் தங்களது வீடுகளுக்கு முன்பாகவோ அல்லது ஒழுங்கைகளுக்கு முன்பாகவோ குடித்துவிட்டு அதனை வீடுகளுக்கு வீசுவதற்கும், சமூக சீர்கேடுகளுக்கும் சாத்தியம் இருப்பதாகவும் இவ் விடயம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதியில் சூழ்ந்திருந்த மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்திருந்தார்கள்.

இவ் விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை தலைவரை தொடர்பு கொண்டு கேட்ட போது, அதற்கான எந்த ஒரு அனுமதியும் வழங்கவில்லையெனவும் ஏற்கனவே இருந்த மதுபானசாலை மட்டுமே புதுப்பிப்பதற்கான அனுமதிக்கப்பட்டதாகவும் அதற்கான அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பாக வேலை நாளான நாளை திங்கள்கிழமை இது தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

11 வயது சிறுமியை வனப்பகுதிக்கு அழைத்து சென்று 15 வயது மாணவன் செய்துள்ள படுபயங்கர செயல்!!

 

படுபயங்கர செயல்

11 வயதான சிறுமியை கத்தியால் குத்தி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய 15 வயதான மாணவன் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஹிக்கடுவை காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவனை காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஹிக்கடுவை – எகடகொட பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கடந்த 4 ஆம் திகதி இருவரும் விளையாடுவதற்காக அருகில் இருந்த வனப்பகுதியொன்றுக்கு சென்ற போதே இந்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுமிக்கும், சிறுவனுக்கும் இடையே வாய்த்தகராறு அதிகரித்து சிறுமி கூச்சலிட்டுள்ள நிலையில், சிறுவன் கத்தியால் சிறுமியின் கழுத்து மற்றும் முகத்திலும் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தி குத்தில் படுகாயமடைந்த சிறுமி, காலி – கராபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

4 ஏக்கர் கஞ்சா பண்ணையை சுற்றி வளைத்த அதிரடிப்படையினர்!!

 

கஞ்சா பண்ணை

புத்தளம் கொஸ்லந்த – அலுத்வெல பிரதேசத்தில் மிகவும் பாதுகாப்பாகவும், இரகசியமாகவும் நடத்திச் சென்ற 4 ஏக்கர் கஞ்சா பண்ணையை புத்தளம் விசேட அதிரடிப்படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.

50 லட்சம் பெறுமதியான கஞ்சா அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சுற்றி வளைப்பின் போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், கடந்த மாதம் 25 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 3 கோடி ரூபா பெறுமதியான கஞ்சா பண்ணையை புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப்படை சுற்றி வளைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க ஊழியர்களிற்கு 2019இல் ஓர் மகிழ்ச்சிகர செய்தி!!

 

மகிழ்ச்சிகர செய்தி

அரச பணியாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அது குறித்த நடவடிக்கைகளை தற்போது அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக, பிரதி அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொதவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த முறை முன்வைக்கப்படவுள்ள பாதீட்டின் மூலம் அரச பணியாளர்களுக்கு பலன்கள் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாம்பு போன்று உடை அணிந்திருந்த மனைவியின் கால்களை பதம் பார்த்த கணவன் : நடந்த வினோத சம்பவம்!!

 

வினோத சம்பவம்

அவுஸ்திரேலியாவில் பாம்பு போன்று உடை அணிந்திருந்த மனைவியின் காலை ஹாக்கி மட்டையால் தாக்கிய கணவன் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தன்று குறித்த பெண்மணி பாம்பு போன்ற டிசைன் கொண்ட ஸ்டாக்கிங்ஸ் அணிந்து கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் இரவில் அறைக்குள் வந்த கணவர், விளக்குகள் அணைக்கப்பட்டிருந்ததால் கட்டிலில் இரண்டு பாம்பு கிடக்கிறது என தவறாக நினைத்து விட்டார். உடனடியாக அருகில் இருந்த பேஸ்பால் பேட்டால் அந்த பாம்புகளை, அதாவது மனைவியின் காலில் பலமாகத் தாக்கியுள்ளார்.

மனைவி வலியில் அலறியபோது தான் அவருக்கு உண்மை தெரியவந்துள்ளது. அது பாம்பு அல்ல மனைவியின் கால்கள் என்று உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் கணவன். தற்போது காலில் பலத்த காயமடைந்த மனைவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக அப்பெண்ணின் மற்றும் அவரது கணவரின் பெயர் ஊடகங்களில் வெளியாகவில்லை என்பது அவரது அடிபட்ட கால் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த காதலியை குத்திக்கொன்ற இளைஞன்!!

 

காதலியை குத்திக்கொன்ற இளைஞன்

தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் பல் பொருள் அங்காடி ஒன்றில் பணியாற்றும் பெண்ணை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் 32 வயதான செல்வி. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துச் செய்த செல்வி தனியாக வசித்து வந்துள்ளார்.

அவருக்கு 14 மற்றும் 10 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தை காப்பாற்ற செல்வி கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரில் உள்ள பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் பணியில் சேர்ந்தார். தினமும் பணிக்குச் செல்லும்போது அதே பகுதியில் தனியார் ஜவுளிக்கடையில் பணியாற்றும் 30 வயதான தௌலத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு முதல் இருவரும் நட்பாக பழக நாளடைவில் நட்பு நெருக்கமாகியுள்ளது. செல்வியின் பணத்தேவைகளுக்காக தௌலத் அவ்வப்போது பணம் தந்தும் உதவி வந்துள்ளார். இந்நிலையில் மாலை 4 மணி அளவில் செல்வி வேலை செய்யும் கடைக்கு தௌலத் சென்றுள்ளார். கடையில் செல்வி மட்டும் இருப்பதை அறிந்து அங்கு வந்த தௌலத் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்,

திடீரென அங்கிருந்த கத்தியால் செல்வியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் செல்வி அலறவே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்துள்ளனர். ஆனால் அதற்குள் தௌலத் தப்பி ஓடிவிட்டார். கத்தியால் குத்துப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய செல்வி கடைக்குள்ளேயே உயிரிழந்தார்.

இதையடுத்து பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் செல்வியின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தப்பி ஓடிய தௌலத் கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில்,

தனக்கு இரண்டாயிரம் பணம் தேவைப்படுவதாக செல்வி கேட்டதை அடுத்து தான் பணம் கொடுப்பதற்க்காக செல்வி பணி புரியும் கடைக்கு வந்ததாகவும், அப்போது செல்வி வேறு ஒரு ஆணுடன் செல்போன் மூலம் பேசிகொண்டு இருந்ததாக தெரிவித்துள்ளார்.

அது தொடர்பாக கேட்டதை அடுத்து தங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அதனால் ஆத்திரம் அடைந்த தான் கடையில் இருந்த கத்தியை எடுத்து செல்வியை கழுத்து வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தியதாகவும் செல்வி உயிரிழந்ததை அடுத்து தான் பொலிசாரிடம் சரணடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். தௌலத் தெரிவித்துள்ளது உண்மையான தகவல்தானா என பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகை சிம்ரன் கொலையில் அதிரடி திருப்பம்!!

 

நடிகை சிம்ரன்

ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தின் கொய்ரா மாதா எனும் கிராமத்தில் மகாநதிக்கரையில் நடிகை சிம்ரன் சிங்கின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இந்த கொலை தொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பல்பூர் எனும் ஒரே ஒரு பாடல் மூலம் ஒடிசா முழுவதும் பிரபலம் ஆனவர் நடிகை சிம்ரன். இவரது முழுப் பெயர் சிம்ரன் சிங். நண்பர்களை சந்தித்துவிட்டு வருவதாக சென்ற மகள் வீடு திரும்பவில்லை என்று தாயார் புகார் அளித்திருந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து சிம்ரனின் உடலில் கண்டெடுக்கப்பட்டது.

சிம்ரனின் கணவர் Dhrubraj Suna இந்த கொலைக்கு காரணம், அவர்தான் இந்த கொலையை செய்தது என தாயார் புகார் அளித்ததையடுத்து இன்று போஸ்கோ சட்டத்தின் கீழ் கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இறந்துபோவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர், தனது தோழிக்கு மெசேஜ் ஒன்றை சிம்ரன் அனுப்பியுள்ளார். மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன், எல்லோரையும் விட்டு செல்லப்போகிறேன் என அனுப்பியுள்ளார். சிம்ரனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் அவர் உயிரிழந்திருப்பது தெரியந்துள்ளது.

ஒரே பெண்ணை காதலித்த 3 ஆண்கள் : பொறாமையால் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவன்!!

 

கொடூரமாக கொல்லப்பட்ட மாணவன்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவன் கொலைக்கு காதல் விவகாரம் தான் காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்டம் ஆவணியாபுரத்தைச் சேர்ந்த சாகுல் அமீதின் மகனான 20 வயதான முன்தாசர், மயிலாடுதுறை ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். துபாயில் தந்தை வேலைபார்த்து வரவே, தனது தாய் மும்தாஜ் பேகத்துடன் அவர் வசித்து வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணியளவில், திருமங்கலக்குடியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு முன்தாசர் சென்றுள்ளார். அதன்பின் தனது நண்பரின் பிறந்தநாள் விழாவுக்கு செல்வதாக அவர் தனது தாய்க்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார்.

அதனைதொடர்ந்து இரவு எட்டு மணியளவில், அவரின் செல்போனில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் முன்தாசரை கடத்தியுள்ளதாகவும், ஐந்து லட்ச ரூபாய் தரவேண்டுமெனவும் செல்போனில் பேசிய நபர் மிரட்டியுள்ளார்.

முன்தாசர் போனிலிருந்து வந்த அழைப்பு திருபுவனம் பகுதியிலிருந்து வந்ததை பொலிசார் கண்டறிந்தனர். இந்த நிலையில் நேற்று காலை எட்டு மணியளவில், திருபுவனம் வீரசோழன் ஆற்றின் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், முன்தாசரின் சடலம் கிடந்துள்ளது.

மாணவரின் பிரேதத்தை கைப்பற்றிய பொலிசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். முன்தாசரின் செல்போன் அழைப்புகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்திய பொலிசார், காதல் விவகாரத்தில் முன்தாசர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

முன்தாசரின் நண்பர்களான நியாஸ் அகமது, முகம்மது ஜலீல், சலீம் ஆகிய மூவரும் ஒரு பெண்ணை காதலித்த நிலையில், அந்தப் பெண் முன்தாசரை காதலித்ததால் ஆத்திரமடைந்த மூவரும் திட்டமிட்டு அவரை வர வைத்து கழுத்தறுத்துக் கொன்றுள்ளனர் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கணவரை பிரிந்தது ஏன் : மனம் திறந்த பிரபல நடிகை!!

 

நடிகை பிரியங்கா

தனது காதல் கணவரை பிரிந்துது குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் பிரபல நடிகை பிரியங்கா. தமிழில், ‘வெயில்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர், பிரியங்கா. தொடர்ந்து தொ (ல்) லைபேசி, செங்காத்து பூமியிலே, தீயோற்கு அஞ் சேல் ஆகிய படங்களில் நடித்தார்

கடந்த 2012-ஆம் ஆண்டு இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதியம்மன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்,

2013 ஆம் ஆண்டு, ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி, பிரியங்கா மனு தாக்கல் செய்தார். கணவருக்கு எதிராக, தனது சமூக வலைத்தள பக்கங்களை தவறாக பயன்படுத்தியது உட்பட 4 வழக்குகளை பதிவு செய்தார்.

இந்நிலையில் தனது கணவரை பிரிந்தது ஏன் என்பது பற்றி இப்போது அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கணவர் லாரன்ஸ், தனது அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரவவிட்டார் என்று கூறியுள்ளார். அதோடு, சினிமாவில் தன்னை மீண்டும் நடிக்க தடை விதித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

எனக்கு நடிப்பு மட்டும்தான் தெரியும். அதனால் மீண்டும் நடிக்க வந்துள்ளேன் என கூறியுள்ளார். பிரியங்காவில் இந்த தகவல் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நண்பனின் பிறந்தநாளுக்கு சென்ற இளைஞன் கழுத்தறுபட்டு சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்!!

 

இளைஞன் படுகொலை

தமிழகத்தின் கும்பகோணம் அருகே மர்ம கும்பலால் கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் ஆடுதுறை அருகே ஆவணியாபுரத்தைச் சேர்ந்த சாகுல் அமீது என்பவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். தாயார் மும்தாஜ் பேகத்துடன் வசித்து வந்த இவரது மகன் மும்தசர் மயிலாடுதுறை பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் மும்தசர் நேற்று மாலை சுமார் 6.30 மணி அளவில் திருமங்கலக்குடியில் உள்ள தமது அக்கா வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து தமது நண்பர் பிறந்தநாள் விழாவுக்குச் செல்வதாகப் போன் மூலம் தனது தாயாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இரவு 8.15 மணி அளவில் மும்தசர் போனிலிருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் மும்தசரை கடத்தியுள்ளதாகவும் ரூ.5 லட்சம் கொடுத்தால்தான் விடுவிப்போம் எனவும் மிரட்டியுள்ளனர். இதனால் பதற்றம் அடைந்த மும்தாஜ் பேகம் மற்றும் அவரின் உறவினர்கள் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் இரவு 8.15 மணி அளவில் மும்தசர் போனிலிருந்து வந்த அழைப்பு திருப்புவனம் பகுதியிலிருந்து பேசப்பட்டது என்பதை செல்போன் சிக்னல் மூலம் கண்டறிந்தனர். தொடர்ந்து அந்த செல்போனில் தொடர்புகொள்ள முயன்றபோது அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. இதனால் மேலும் உறவினர்களிடையே பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று காலை திருப்புவனம் வீரசோழன் ஆற்றங்கரையில் மாணவர் மும்தசர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் மாணவர் மும்தசர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவர் மும்தசர் சென்ற ஸ்கூட்டர் எங்கு உள்ளது என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தப்பட்டது உண்மையா, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது யார், அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளைஞன் மர்ம மரணம்!!

 

இளைஞன் மர்ம மரணம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த இளைஞர் திடீரென மர்மமான முறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆணவக்கொலை எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம், இறையூர் கிராமத்தை சார்ந்த சபாபதி அவர்களின் மகன் பரந்தாமன்(25). இவர் கேரளாவில் உள்ள தனியார் சுத்திகரிப்பு ஆலையில் வேலை செய்து வருகிறார். பரந்தாமன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்டம், முத்தையன்பட்டி கிராமத்தை சார்ந்த 18 வயதான ராமுவின் மகள் சிவானி என்பவரை காதல் திருமனம் செய்து கொண்டு தலைமறைவானார்.

இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இதற்கு இளம்பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மதுரை சிந்துப்பட்டி பொலிஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் 18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்ததாக கூறி, போக்ஸோ சட்டத்தின் கீழ் பரந்தாமனை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, 3ம் தேதி வரை மதுரையில் தங்கி சிந்துபட்டி பொலிஸ் நிலையத்தில் கையெழுத்து இட வேண்டும் என கடந்த 25ம் தேதி நீதிமன்றம் அவரை நிபந்தனையுடன் கூடிய ஜாமீனில் விடுவித்தது.

அதேபோல மதுரையில் தங்கி பரந்தாமன் தினம்தோறும் கையெழுத்து போட்டு வந்தார். இந்த நிலையில் கடைசி நாளான 3-ம் தேதியன்று பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பரந்தாமன் வீடு திரும்பவில்லை. மாறாக புனேவில் உள்ள அறையில் பரந்தாமன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், பரந்தாமன் ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பேசிய அவருடைய தாய், கடைசி நாளில் கையெழுத்து போட்டபின் வீடு திரும்பி விடுவேன் என என்னுடைய மகன் போன் செய்து பேசினான். அப்படி இருக்கையில் மதுரையில் இருந்து ஒருநாளில் எப்படி புனே சென்றிருப்பான் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற திட்டக்குடி தாசில்தார் கண்ணன், மண்டல துணை தாசில்தார் ஜெயச்சந்திரன், விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன், இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.  மேலும், புகார் கொடுத்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளனர். இதனை ஏற்று தற்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் அறிமுகமாகும் புதிய வகை கடவுச்சீட்டு!!

வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இந்த வருடத்தில் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் கடவுச்சீட்டை அச்சிடுவதற்கான கேள்வி மனு தற்போது கோரப்பட்டுள்ளது. அடுத்து வரும் ஆறு மாத காலப்பகுதிகுள் புதிய கடவுச்சீட்டு விநியோகம் நடைமுறைக்கு வரும்.

கடந்த வருடத்தில் ஐந்து இலட்சம் கடவுச்சீட்டுகளை குடிவரவு குடியகல்வு திணைக்களம் விநியோகித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு கடந்த மாதம் 31ம் திகதியுடன் நிறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை இந்தியா மற்றும் நேபாளத்திற்கு யாத்திரைகளுக்காக செல்வதற்காக வழங்கப்படும் கடவுச்சீட்டு வழமை போன்று விநியோகிக்கப்பட்டு வருவதாக கட்டுபாட்டு ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வீடு நோக்கி சென்ற இருவருக்கு நேர்ந்த கதி!!

 

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிரான்குளத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இருவரும் மோட்டர்சைக்கிளில் வீடு நோக்கி பயணித்து கொண்டிருந்த போது மோட்டார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டியும், மோட்டர்சைக்கிளும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியதுடன் குறித்த இருவரும் பயணித்த மோட்டார்சைக்கிள் பல துண்டுகளாக உடைந்து சிதறியுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவரும், காயமடைந்தவரும் கிரான்குளத்தினை சேர்ந்தவர்கள் என்பதுடன், இருவரும் உறவினர்கள் என தெரியவருகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.