96 கிலோ உடல் எடையை குறைத்த உலகின் குண்டுச்சிறுவன் : அவரது ஆசை என்ன தெரியுமா?

 

உலகின் குண்டுச்சிறுவன்

உலகின் குண்டுச்சிறுவனாக கருதப்பட்ட இந்தோனேசியாவின் ஆர்யா பெர்மனா ஒரேயடியாக 96 கிலோ அளவுக்கு உடல் இடையை குறைத்துள்ளார். உடல் எடையை குறைத்த பின்னர் குண்டாக இருந்தபோது பயன்படுத்திய உடையை அணிந்து தமது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆர்யா.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீர்த் தொட்டியில் தனது குண்டான உடலை குளிரவைக்கும் குண்டுச்சிறுவனின் விசித்திர புகைப்படம் ஒன்று வெளியாகி சர்வதேச அளவில் பலரது கவனத்தை ஈர்த்தது.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஒரு குட்டி கிராமத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த நிலையில் குறித்த சிறுவன் உடல் எடையை குறைக்க தீவிர சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக இந்தோனேசிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டது.

3 ஆண்டுகளுக்கு முன்னர் 197 கிலோ உடல் எடையுடன் இருந்த சிறுவன், தற்போது சுமார் 96 கிலோ வரை எடையை குறைத்துள்ளான். 12 வயதேயான ஆர்யா தற்போது தமது நீண்ட நாள் கனவையும் தெரிவித்துள்ளான். தீவிர கால்பந்து ரசிகரான ஆர்யா, இனிமுதல் கால்பந்து பயிற்சியிலும் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளான்.

தற்போது தினசரி 5 கிலோ மீற்றர் தொலைவு தமது நண்பர்களுடன் நடக்க முடிகிறது என கூறும் ஆர்யா, மாலை நேரங்களில் கால்பந்து விளையாடுவதாகவும் தெரிவித்துள்ளான்.

மாதம் 100 பவுண்டுகள் மட்டுமே வருமானமாக கொண்ட ஆர்யாவின் குடும்பம், சிறுவனின் அகோர பசிக்கு உணவளிக்கவே திண்டாடியுள்ளது. ஒருகட்டத்தில் தினசரி 5 முறை உணவளிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆர்யாவின் பெற்றோர் தள்ளப்பட்டிருந்தனர்.

வெறு 9 வயதாக இருக்கும்போதே நடந்து சென்று பாடசாலைக்கு செல்ல முடியாமல் முடங்கியுள்ளான். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தீவிர சிகிச்சையில் ஏற்பட்டிருந்த ஆர்யாவின் உடல் எடை வெறும் 3 வாரத்தில் 165 கிலோவாக குறைந்தது.

சர்க்கரை கலந்த உணவுகளை ஒட்டுமொத்தமாக தவிர்த்ததனாலையே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது சாதாரண சிறார்கள் போன்றே ஆர்யாவும் பாடசாலைக்கு நடந்து செல்வதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தொடரும் புதுமைகள் : நாடாளுமன்றத்தில் இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள்!!

சபாநாயகர் இன்னும் தன்னை பதவியில் இருந்து நீக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் விசேட உரையொன்றை ஆற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தற்போது இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இருவர் வகித்து வருவதாக கருத வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்திருந்தார்.

ஆளும் கட்சிக்கு அடுத்தப்படியாக அதிக உறுப்பினர் கொண்ட கட்சியின் உறுப்பினருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படும்.

அதற்கமைய அதிக உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

எனினும் தாமரை மொட்டு தலைவராகிய மஹிந்த ராஜபக்சவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்குவது எப்படி என ஐக்கிய தேசியக் கட்சியால் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மஹிந்தவின் கட்சி விவகாரம் குறித்து ஆராய்ந்து பார்ப்பதாக சபாநாயகர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மஹிந்தவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்திருந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க தானும் பிரதமர் என தெரிவித்து வந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் தற்பொழுது பிரதமர் பதவி யாருக்கு என்ற பிரச்சினை ஓய்வடைந்துள்ள போது, இரு எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளதாக நாடாளுமன்றில் சம்பந்தன் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

-தமிழ்வின்-

பேஷ்புக் காதல் : இறுதியில் நேர்ந்துள்ள விபரீதம்!!

திருகோணமலை பகுதியில் 15 வயதுடைய சிறுமியொருவரை அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சந்தேகநபரை இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சீனக்குடா, திருகோணமலை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சந்தேகநபர் குருணாகல் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியை பேஷ்புக் ஊடாக ஆறு மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் திருகோணமலை பகுதியை சேர்ந்த சந்தேகநபர் சிறுமியை தேடிச் சென்று தனிமையில் சந்தித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்பின்னர் சிறுமியை அவரது பெற்றோர்களுக்கு தெரியாமல் திருகோணமலைக்கு அழைத்து சென்று நண்பர் ஒருவரின் வீட்டில் வைத்து சந்தேகநபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை சிறுமி சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் பதாதைகள்!!

வவுனியா நகரப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன.

வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தி, வைத்தியசாலை சுற்றுவட்டம் ஆகிய பகுதிகளில் இப் பதாதைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை வாழ்த்தியும், பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுத்தீனை வாழ்த்தியுமே குறித்த பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக வீதிக் குறியீடுகளை அவதானிக்க முடியாதுள்ளதுடன், போக்குவரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை குறித்த பதாதைகளை அமைப்பதற்கு நகரசபைக்கு செலுத்த வேண்டிய வரி செல்லுத்தப்பட்டுள்ளதா எனவும் வரியிறுப்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து வவுனியா நகரசபை கவனம் செலுத்தவேண்டும் என பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மரப்பட்டைகளால் 30 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம்!!

 

மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மரப்பட்டைகளை கொண்டு சுமார் 30 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மரம் மட்டக்களப்பு மாநகர சபையினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

நத்தாரை முன்னிட்டு வருடாந்தம் மட்டக்களப்பு மாநகரசபையினால் கழிவுப் பொருட்களால் நத்தார் மரம் அமைக்கப்பட்டு ஒளியூட்டப்பட்டு மக்கள் பார்வையிடுவதற்காக திறந்து வைக்கப்படும்.

முத்தம் கொடுத்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்திய ஹிருணிக்கா எம்.பி!!

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர, கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவருக்கு முத்தம் கொடுத்து பாராட்டியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது.

இதன் போது கட்சியின் நலனுக்காக அர்ப்பணிப்பு செய்வதாகவும், அமைச்சுப் பதவி எதனையும் ஏற்கப் போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

இதன்போது ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கை தட்டி தங்களது பாராட்டுக்களை மலிக் சமரவிக்ரமவிற்கு தெரிவித்துள்ளனர்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர, மலிக் சமரவிக்ரமவிடம் சென்று அவருக்கு முத்தமொன்றைக் கொடுத்து தனது பாராட்டினை வெளிப்படுத்தியுள்ளார்.

-தமிழ்வின்-

யாழில் வெளிநாட்டிலிருந்து வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை!!

வெளிநாட்டுப் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ். கொட்டடிப் பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புடவை வியாபாரத்தின் நிமித்தம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தனது கணவருடன் வருகை தந்திருந்த இந்திய பெண்ணே இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த ஒரு மாதகாலமாக கொட்டடி நமசிவாயம் பாடசாலைக்கு அருகாமையில் தனது கணவருடன் தங்கியிருந்த போது, அந்த பெண் வயிற்று வலி என அடிக்கடி கூறியுள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நேற்று இரவு நித்திரைக்குப் போன பின்னர், காலையில் எழுந்து பார்த்த போது மனைவி தூக்கிட்ட நிலையில் சடலமாக காணப்பட்டதாக கணவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அம்பலமானது ஆதாரம் : பெரும் சிக்கலில் மஹிந்த!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நிலையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை சபாநாயகரினால் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பதிவு செய்யப்படாத அரசியல் கட்சி ஒன்றில் மஹிந்த ராஜபக்ஷ உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளதுடன், அந்தக் கட்சியின் தலைவராகவும் செயற்பட்டு வருகிறார்.

இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து பிரிந்து சென்ற மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

மஹிந்த தொடர்பிலான சிக்கல் நிலை குறித்து கடிதம் மூலம் தெரியப்படுத்துமாறு சபாநாயகர், தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சி தலைவராக்குவதற்கான நடவடிக்கை வெள்ளிக்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவி பிரமாணம் செய்த பின்னர் கடந்த 11ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உறுப்புரிமை பெற்றுக் கொண்டதாக மஹிந்த தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார்.

அதற்கமைய அவர் அந்த கட்சியின் தலைவரான ஜீ.எல்.பீரிஸிடம் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். ஆரம்ப உறுப்பினராகவே அவர் உறுப்புரிமை பெற்றுக் கொண்டார் என்பதற்கு பல டுவிட்டர் பதிவுகள் ஆதராமாக கிடைத்துள்ளது.

மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உறுப்புரிமை பெற்று கொண்டதன் பின்னர் அவரது மகன் நாமல் ராஜபக்சவும் அதில் உறுப்பினராக இணைந்து கொண்டார்.

அதனை உறுதி செய்வதற்கு நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினராக மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டு வருவது உறுதியானால் அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறி போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

வவுனியாவைச் சேர்ந்த சிறுவன் கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக மரணம்!!

 

விபத்தில் பரிதாபமாக மரணம்

வவுனியா – தோணிக்கல் பகுதியை சேர்ந்த சிறுவன் கிளிநொச்சி, முறிகண்டி பகுதியில் வைத்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியையே சோகமயமாக்கியுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

தோணிக்கல் பகுதியை சேர்ந்த சிறுவன் கிளிநொச்சியில் உள்ள உறவினர் ஒருவரின் இறப்பு வீட்டிற்கு சென்று விட்டு நேற்று மதியம் தனது மாமாவுடன் வவுனியா நோக்கி மோட்டார்சைக்கிளில் பயணித்துள்ளார்.

இதன்போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் குழாய் கிணறு பொருத்தும் இயந்திரத்துடன் பயணித்த கனரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் சிறுவன் வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

விபத்தில் லிதுசன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கைக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைக்கு சாட்சி கேட்பானா ஒரு ஆண் : லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேசம்!!

 

லட்சுமி ராமகிருஷ்ணன்

பிரபலமான ஆண்கள் மீது, பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை எழுப்பும்போது இந்தச் சமூகம் அந்தப் பெண்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்பது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பாலியல் குற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வாங்கி தர நீதிமன்றம் இருக்கிறது, அல்லது இந்த அசிங்கத்தையெல்லாம் பெண்கள் ஏன் வெளியே சொல்ல வேண்டும் என கேள்வி எழுப்புகிறார்கள்? பாதிக்கப்பட்டவர்கள் ஏன் அசிங்கப்படனும்? இதுதான் எனது கேள்வி.

நம்ம வீட்டில் ஒரு பெண், ‘அண்ணா, ஒரு ஆளு என்கிட்ட அத்துமீறி நடக்கப் பார்த்தார்’னு சொன்னா அந்த ஆண் நம்புவான் இல்லையா. சொந்த தங்கைக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைக்கு சாட்சி கேட்பானா ஒரு ஆண். கேட்க மாட்டான் இல்லையா.

தங்கையால் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட ஆண், சமூகத்தில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், தங்கை சொல்வதைத்தான் நம்புவான். அதே போன்று, இது நம்ம வீட்டு பெண் என்கிற மனப்பான்மை வந்தால், `மீ டூ’ என்று சொல்கிற பெண்களை இந்தச் சமூகம் நம்பும் என கூறியுள்ளார்.

தூக்கில் சடலமாக தொங்கிய இளம்பெண் : அதிர்ச்சிக் காரணம்!!

 

தூக்கில்  தொங்கிய இளம்பெண்

சென்னையில் மருத்துவர் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த 17 வயது சிறுமி, தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த புழலை சேர்ந்தவர் தாமோதரன். இவர் சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவரக பணியாற்றுகிறார்.

இவரின் மனைவியும் மருத்துவராக உள்ளார். இவரின் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் விருத்தாசலத்தைச் சேர்ந்த சசிகலா (17) என்ற சிறுமி வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் சசிகலா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிசார், சசிகலா தூக்கில் தொங்கிய அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சசிகலாவின் உறவினர்கள் கூறுகையில், 12 நாட்களுக்கு முன்தான் டாக்டர் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார். அவர், நன்றாகத் தான் எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பொலிசிடம் கூறியுள்ளோம். சசிகலா தூக்கில் தொங்கிய இடத்தில் அவரின் கால், நாற்காலியின் மீது உள்ளது. இதுதான் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.

பொலிசார் கூறுகையில், சசிகலாவின் செல்போனை நாங்கள் ஆய்வு செய்தபோது எங்களுக்கு முக்கிய தகவல் கிடைத்துள்ளது. சென்னைக்கு அவர் வேலைக்கு வருவதற்கு முன் ஊரில் சில பிரச்சனை ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. மேலும், அவர் குறிப்பிட்ட ஒரு செல்போன் நம்பரில் நீண்ட நேரம் பேசியுள்ளார் என்றனர்.

இந்தச் சூழலில் மருத்துவர் தரப்பில் பேசியவர்கள், வேலைக்குச் சேர்ந்த பிறகு வீட்டில் எல்லோரிடமும் சகஜமாகத் தான் பேசிக் கொண்டிருந்தார்.

சம்பவத்தன்று பள்ளியில் பயிலும் பேத்தியை அழைத்து வர மருத்துவரின் அப்பா தனசேகர் வெளியில் சென்றுவிட்டார். வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில்தான் சசிகலா இந்த முடிவை எடுத்துவிட்டார் என கூறியுள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே சசிகலாவின் மரணம் குறித்த காரணம் தெரியவரும் என பொலிசார் கூறியுள்ளனர்.

கணவருக்காக 8 மாதங்கள் காத்திருந்த மனைவி : அடுத்தடுத்து நடந்த திடீர் திருப்பங்கள் : சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்!!

 

சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்

மதுரை மாவட்டத்தில் கடனை திருப்பித்தராத நபரை அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்து அதனை மறைந்துள்ள விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியான தகவல்கள் சினிமாவை மிஞ்சியுள்ளது. அபிமன்யூ – நாகேஸ்வரி ஆகிய இருவரும் அனாதை இல்லத்தில் வளர்ந்தவர்கள். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை, ஒரு வயதில் ஒரு குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், தனியார் கார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்த அபிமன்யூ கடந்த மார்ச் மாதம் கொடைக்கானலுக்கு சவாரி செல்வதாக தனது மனைவியுடம் கூறிவிட்டுச் சென்றார். சென்றவர், 8 மாதங்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பொலிசில் மனைவி புகார் அளித்துள்ளார். பொலிசார் நடத்திய விசாரணையில் 8 மாதங்கள் கழித்து குற்றவாளிகள் சிக்கியுள்ளனர்.

சுதாகரும், அபிமன்யூவும் பள்ளியில் ஒன்றாக படித்தது மூலம் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். மேலும் சுதாகரோடு திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த துரைசிங்கம் என்பவரும் அபிமன்யூவின் நட்பு வட்டாரத்திற்குள் வந்துள்ளார்.

இந்நிலையில், தனது உறவினரிடம் அபிமன்யூவுக்கு சுதாகர் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் ஒரு மாதத்தில் வாங்கிய கடனைத் திருப்பித் தருவதாகக் கூறிய அபிமன்யூ மூன்று மாதங்களாகியும் கடனைத் திருப்பித் தராமல் இருந்துள்ளார். இதன்பிறகுதான் சுகாதகர் மற்றும் துரைசிங்கம் ஆகிய இருவரும் அபிமன்யூவை கொலை செய்து விட்டு காரின் பதிவு ஆவணங்களை மாற்றி விற்பனை செய்து பணம் பார்க்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, கொடைக்கானலுக்கு அபிமன்யூவை சவாரிக்கு அழைத்து சென்று, மூவரும் அங்கிருந்த ஏரியின் ஒதுக்குப்புறமான பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

இதில், பணப்பிரச்சனை தொடர்பான வாக்குவாதம் முற்றிய நிலையில் சுதாகர், துரைசிங்கம் இருவரும் இருசக்கர வாகனத்தின் கேபிள் வயரால் அபிமன்யூவின் கழுத்தை இறுக்கித் துடிக்கத் துடிக்கக் கொலை செய்துள்ளனர். பிறகு சடலத்தைக் காரில் ஏற்றிய இருவரும் மலைப்பகுதியில் 600 அடி பள்ளத்தாக்கில் சடலத்தை வீசியுள்ளனர். இதையடுத்து காரின் பதிவு எண்ணை மாற்றி விற்பனை செய்துள்ளனர்.

கணவன் அபிமன்யூவை காணாமல் பதறித் துடித்த நாகேஸ்வரிக்கு கொலையாளிகள் சுதாகரும், துரைசிங்கமும் ஆதரவாக இருப்பதுபோல் நடித்துள்ளனர்.

இவை அனைத்தும் பொலிசார் விசாரணையில் குற்றவாளிகள் இருவரும் வாக்குமூலமாக தெரிவித்துள்ளனர். தற்போது இருவரையும் கைது செய்துள்ள பொலிசார் கொடைக்கானல் அருகே பெருமாள் மலையில் வீசப்பட்ட அபிமன்யூவின் சடலத்தைத் தேடி வருகின்றனர்.

குற்றவாளிகள் சிக்கினாலும் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த நாகேஸ்வரி தனக்கு கணவன், தந்தை என எல்லாமுமாக இருந்த அபிமன்யூவைப் பறிகொடுத்துவிட்டு மீண்டும் குழந்தைகளுடன் அனாதையானது பலரையும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கணவரை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கணவரை கொலை

இந்தியாவில் கணவரை கொலை செய்த மனைவி இணையதள உதவியுடன் கொலைக்கான திட்டத்தை தீட்டியது தெரியவந்துள்ளது. கொல்கத்தாவை சேர்ந்தவர் ராஜட். இவர் மனைவி அனிந்திதா, தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த வாரம் ராஜட், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அனிந்திதா பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

இதை நம்பிய பொலிசார் ராஜட்டின் சடலத்தை கைப்பற்றிய நிலையில் அனிந்திதாவின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து பொலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

பின்னர் நடத்தப்பட்ட கிடுக்குபிடி விசாரணையில், கணவரின் கழுத்தை செல்போன் சார்ஜர் மூலம் நெரித்து கொலை செய்ததை அனிந்திதா ஒப்பு கொண்டார். அவர் பொலிசில் அளித்த வாக்குமூலத்தில், கணவர் ராஜட் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்தார்.

அதனால் அவருடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் ராஜட்டிடம் விவாகரத்து கோரியது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டதால் கொலை செய்தேன் என கூறினார். இந்நிலையில் கொலைக்கான திட்டத்தை இணைதளம் மூலம் அனிந்திதா போட்டது தற்போது தெரியவந்துள்ளது.

எப்படி கொலை செய்வது என கூகுளில் அனிந்திதா தேடிய நிலையில் பின்னர் search history-ஐ அழித்துள்ளார். இதோடு காதலனை இளம்பெண் கொன்று சடலத்தை சாப்பிட்டார் என்று வந்த செய்தியை பேஸ்புக்கில் அனிந்திதா பகிர்ந்துள்ளார்.

இதன் மூலம் அவரின் மனநிலை எந்தளவில் இருந்தது என்பதை உணர முடிகிறது என பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனிடையில் கைது செய்யப்பட்ட அனிந்திதாவை டிசம்பர் 28ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நடிகர்களுக்கு முன்மாதிரியான சூரி : மூதாட்டிக்கு செய்த உதவியால் குவியும் பாராட்டுக்கள்!!

 

நடிகர் சூரி

கஜா புயலால் பாதிக்கப்பட்டு தனது உடைமைகளை இழந்த பாட்டிக்கு காமெடி நடிகர் சூரி உதவி செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் உள்ள சிறுவாவிடுதி கிராமத்துக்கு நடிகர் சூரி சென்றிருந்தார்.

சூரியைப் பார்த்ததும் அந்த பாட்டி ஒருவர் கட்டித்தழுவி வீட்டை இழந்ததைத் தெரிவித்தார். கூடவே “வீட்டோடு தனது செல்போனும் புயலால் பாதித்துவிட்டது. இதனால் என் பேரப்பிள்ளைகளிடம் பேச முடியவில்லை” எனக் கூறி வருத்தப்பட்டுள்ளார்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு வந்தபின் முதல்வேலையாக ஒரு செல்போனை வாங்கி, கூடவே சிறிது தொகையும் கொடுத்து அனுப்பி அந்த மூதாட்டியிடம் கொடுக்கச் சொல்லிக் கொடுத்துள்ளார். தஞ்சை கிராமங்களில் மூன்று நாள்கள் தங்கியிருந்து உதவி செய்து வந்தார் நடிகர் சூரி.

சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள ரணில்!!

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவை பட்டியலில் ரவி கருணாநாயக்கவுக்கும் பாலித ரங்கே பண்டாரவுக்கும் இடம்பெற்றுள்ளனர். குறித்த இருவரும் கடந்த அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கவில்லை.

இந்நிலையில் அமைச்சரவையை 30 ஆக கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கைப்படி மனோ கணேசன், மலிக் சமரவிக்கிரம மற்றும் ரிசாத்

பதியுதீன் ஆகியோர் தாம் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று அமைச்சரவை பட்டியலை நிறைவு செய்ய முடியாமை காரணமாக இன்று அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்படவுள்ளது.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் அமைச்சரவை அமைச்சர் பதவியை கேட்டு வருவதால் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாக தெரிய வருகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு சில விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்ளுமாறு சிரேஷ்ட உறுப்பினர்களிடம் ரணில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாணவியின் ஆசையை நிறைவேற்றிய ஜனாதிபதி மைத்திரி!!

அரங்கேற்ற கலைகள் துறையில் முன்னேறுவதை தனது கனவாகக்கொண்ட பொலன்னறுவை ரோயல் கல்லூரி மாணவி பிரபோதி லஹிருனியின் எதிர்பார்ப்பொன்றை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று நிறைவேற்றி வைத்துள்ளார்.

உயர்தரப் பரீட்சையின் பின்னர் அரங்கேற்ற கலைகள் பீடத்திற்கு சென்று அத்துறையில் முன்னேறுவது மாணவி பிரபோதி லஹிருனியின் கனவாகும். இதற்காக இசைத் துறையை தெரிவு செய்த லஹிருனி தனது முக்கிய வாத்தியக் கருவியாக சிதாரை தெரிவுசெய்தார்.

பல்வேறு பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இம்மாணவியின் பெற்றோர் அவருக்கு இந்த இசைக் கருவியை வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு வசதியில்லாத காரணத்தினால் இம்மாணவி மிகவும் அநாதரவான நிலையில் இருந்தார்.

இவரைப்போன்றதொரு மாணவரான ஷாலிக லக்ஷான் என்ற மாணவனின் புதிய வீட்டுக் கனவை நிறைவேற்றி வைப்பதற்காக கடந்த டிசம்பர் 08ஆம் திகதி ஜனாதிபதி அவர்கள் பொலன்னறுவை கனங்கொல்ல என்ற பிரதேசத்திற்கு சென்றிருந்தார்.

அச்சந்தர்ப்பத்தில் பிள்ளைகள் மீது பாசங்கொண்ட தந்தையாக ஜனாதிபதி அவர்கள் தனது கோரிக்கையையும் நிறைவேற்றித் தருவார் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன் மாணவி பிரபோதி லஹிருனி ஜனாதிபதி அவர்களின் அருகில் சென்றார்.

உண்மையான தந்தைக்குரிய பாசத்துடன் அம்மாணவியின் கோரிக்கையை செவிமடுத்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அக்கோரிக்கையை விரைவில் நிறைவேற்றித் தருவதாக அம்மாணவியிடம் உறுதியளித்தார்.

ஒரு சில நாட்களில் அம்மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுத்ததுடன், இன்று முற்பகல் தனது பெற்றோருடன் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த பிரபோதி லஹிருனி தனது சிதாரை ஜனாதிபதி அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.