இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்தின் சிறந்த செயற்பாட்டாளர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் நாடாளுமன்றம் என்பது அதியுயர் சட்டவாக்க சபையாக காணப்படுகின்றது. இலங்கை நாடாளுமன்றம் 225 உறுப்பினர்களை கொண்டுள்ளது.
அந்த வகையில் கடந்த ஒக்டோபர் மாதத்தின் சிறந்த செயற்பாட்டாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், டக்லஸ் தேவானந்தா மற்றும் ஸ்ரீநேசன் ஆகியோர் முதலாம், இரண்டாம் மற்றும் நான்காம் நிலைகளாக தரப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த தரப்படுத்தல் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளுதல், மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக உரையாற்றுதல், மக்களது நன்மை கருதி கேள்விகளை தொடுத்தல் போன்ற நாடாளுமன்ற செயற்பாடுகளை கொண்டு கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா – தேக்கவத்தை பகுதியில் ஹெரோயினுடன் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் சிறப்பு போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்திருந்தனர். குறித்த சம்பவம் நேற்று காலை 11 மணியளவில் நடைபெற்றுள்ளது.
சிறப்பு போதை ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியிலுள்ள பாழடைந்த வீடு ஒன்றில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஹெரோயினை பயன்படுத்துவதற்கு தயார் நிலையில் இருந்த 5 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் வவுனியாவை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கைதுசெய்யபட்டதுடன் அவர்களிடமிருந்து சில ஹெரோயின் பொதிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும் கைதுசெய்யபட்டவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அமைச்சர்கள் சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியில் அமைச்சர்களுக்கான சத்தியப்பிரமாணம் தற்போது இடம்பெற்று வருகிறது.
ஊடகங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறைக்குள் அழைக்கப்பட்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ நியமனம்
தேசிய கொள்கை, அபிவிருத்தி நடவடிக்கை மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சி, இளைஞர் விவகாரம், திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் அபிவிருத்தி அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சராக ஜோன் அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பௌத்த சாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சராக காமினி ஜயவிக்ரம பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சராக ராஜித சேனாரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளார்.
நகர திட்டமிடல், நீர்பாசன மற்றும் உயர் கல்வி அமைச்சராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
மின்சக்தி, எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சராக ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநகர சபை மற்றும் மேல் மாகாண சபை அபிவிருத்தி அமைச்சராக பட்டாலி சம்பிக்க ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
வீடமைப்பு மற்றும் கலாச்சார அமைச்சராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வி அமைச்சராக அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றம் மற்றும் சிறைச்சலை சீர்த்திருக்க அமைச்சராக தலதா அத்துகோரல நியமிக்கப்பட்டுள்ளார்.
துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சராக சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
தபால் சேவை மற்றும் முஸ்லிம் மத விவகார அமைச்சராக அப்துல் ஹலீம் மொஹமட் ஹாஷிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சராக அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
காணி மற்றும் நாடாளுமன்ற சீர்த்திருத்த அமைச்சராக கயந்த கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சராக பழனி திகாம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில் உறவு அமைச்சராக தயா கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
பெருந்தோட்டத்துறை அமைச்சராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக் கழகத்தின் மைதான அபிவிருத்திக்கு நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபனின் கோரிக்கைக்கு அமைவாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட பணத்தின் மூலமாக கரப்பந்தாட்ட மைதானத்திற்கான மின்னொளி வசதிகள் ஏற்படுத்தப்பட்டு கழகத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (18.12.2018) நடைபெற்றது.
இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் சார்பாக புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரும் வவுனியா நகர சபையின் உறுப்பினருமான சுந்தரலிங்கம் காண்டீபன் கழக நிர்வாகத்திடம் கையளித்தார்.
இந் நிகழ்வில் திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சந்திரேஸ்வரன் ரவி, ஐயனார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பே.அனோஜன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் கெர்சோன் கரிஸ், திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர் திருச்செல்வம் புவி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த எவருக்கும் அமைச்சுப் பதவி கிடைக்க இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன், கட்சி தாவிய அனைவரும் கட்சியிலிருந்தும் நீக்கப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சற்று முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“நாளை காலை அமைச்சர்கள் பதவியேற்க கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனினும், அமைச்சர்களின் பட்டியலை தான் இறுதி செய்த பின்னரே அது நடக்க வாய்ப்பிருப்பதாக ஜனாதிபதி இதன் போது கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த எவருக்கும் அமைச்சுப் பதவி கிடைக்க இடமளிக்க மாட்டேன் எனவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்ட எவருக்கும் அமைச்சு பதவி வழங்கக் கூடாது என நேற்று மாலை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா பொது வைத்தியசாலையில் நத்தார் தினத்தை முன்னிட்டு இன்று (19.12) ஆராதனை நிகழ்வுகள் நடைபெற்றது.
‘சுகநல சேவை கிறிஸ்தவ ஐக்கியம்’ அமைப்பின் தலைவர் கெ.கென்னடி தலைமையில் நடைபெற்ற இவ் ஆராதனை நிகழ்வில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நோக்கம் குறித்து சொல்லப்பட்டதுடன் நோயாளர்கள் சுகம் பெற வேண்டி பிராத்தனை செய்யப்பட்டது.
நாற்சதுர சுவிசேச சபையின் தலைமை போதகர் பி.என் சேகர் மற்றும் ஆராதனை குழுவினர் இப் பிராத்தனை நிகழ்வில் கலந்துகொண்டு நோயாளர்களுக்கு சிற்றுண்டி வகைகள் குழந்தைகளுக்கு பரிசில் பொருட்களும் வழங்கினர்.
மந்திரத்தினால் யானைகளை அடக்க முயற்சித்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வெஹெரகல நீர்த்தேக்கத்திற்கு அருகில் யானைகளை வசியம் செய்ய முயற்சித்த வேளையில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
கதிர்காமத்தை சேர்ந்த 41 வயதான குறித்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மேலும் பலருடன் இணைந்து மிருகங்களைப் பார்ப்பதற்காக நேற்று சுற்றுலா சென்றுள்ளார்.
அந்த நேரத்திலே குறித்த நபர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மந்திரத்தினால் யானைகளை வசியப்படுத்துவதில் பிரபல்யம் அடைந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு – கொள்ளுப்பிட்டி, கிளிபார்ட் ஒழுங்கையில் இரண்டு மாடிகளை கொண்ட ஆடம்பர வீட்டில் இயங்கி வந்த பாலியல் தொழில் விடுதி ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார், அதனை நடத்தி வந்த சீனப் பெண்ணுடன் பல்கலைக்கழக மாணவி மற்றும் வியட்நாம் நாட்டை சேர்ந்த யுவதியை கைது செய்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பொலிஸார், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட போதே இந்த பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள வியட்நாம் யுவதி, மூன்று மாத சுற்றுலா வீசா அனுமதியில் மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை வந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னர், குறித்த இடத்தில் பாலியல் தொழில் விடுதி இயங்கி வந்ததுடன் தொழிலில் ஈடுபட்டிருந்த 9 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
சீனாவை சேர்ந்த தம்பதி, இந்த வீட்டை மாதாந்தம் இரண்டு லட்சம் ரூபாய் செலுத்தும் வகையில் வாடகைக்கு பெற்றுள்ளனர். பொலிஸார் தேடுதல் நடத்திய சீன ஆண் வீட்டில் இருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
யுவதிகள் 5,000 முதல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட யுவதிகள், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடியில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று பிள்ளைகளின் தாயார் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் தனது இல்லத்தில் உள்ள கடையில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தேற்றாத்தீவு பகுதியைச் சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க செல்வரட்ணம் ஶ்ரீகலா என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயாரான குறித்த பெண் குடும்ப வறுமை காரணமாக வீட்டில் சிறுகடை ஒன்றை நடாத்தி வந்துள்ளார்.
பெண்ணின் கணவன் வேலை நிமித்தம் கொழும்பிற்கு சென்றுள்ள சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு குடும்ப தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பெருங்குற்றப் பிரிவினர் முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வவுனியா பத்தினியார் மகிழங்குளத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, பத்தினியார் மகிழங்குளத்தை சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாரான பாலசுப்பிரமணியம் அஞ்சுதன் என்பவர் இன்று காலை அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை தனது முகநூலில் கடந்த 16ம் திகதியே தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி என்று பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை குறித்த நபர் கடந்த சில காலமாக கடன் தொல்லையில் சிக்கித் தவித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியாவில் கடன்தொல்லை காரணமாக தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், நிதி நிறுவங்களின் அதீத வருகையை இவற்றுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வவுனியா பத்தினியார் மகிழங்குளத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
பத்தினியார் மகிழங்குளத்தை சேர்ந்த 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாரான அஞ்சுதன் என்பவர் அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை குறித்த நபர் கடந்த சில காலமாக கடன் தொல்லையில் சிக்கி தவித்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழகத்தில் தன் ஜோடி பாம்பை கத்தியால் வெட்டி துடிதுடிக்க கொன்றவரை அடுத்த அரை மணி நேரத்தில் பாம்பு பழிவாங்கிய சம்பவம் மக்களுக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கடலுார் மாவட்டத்தின் வடக்கு கஞ்சங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சுசீலா. இருவரும் பிளாஸ்டிக் பொருட்களை இருசக்கர வாகனத்தில் விற்பனை செய்து வந்தனர். வேலையில்லாத சமயத்தில், மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிச் செல்வது வழக்கம்.
இரு தினங்களுக்கு முன்னர் முருகேசன், ஆடுகளை கருப்பசாமி கோவில் சாமி தோப்பில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அங்குள்ள கருவேல மரத்தில் இரண்டு பாம்புகள் சல்லாபத்தில் ஈடுபட்டிருந்தன. இதைப் பார்த்த முருகேசன் தன்னிடம் இருந்த கத்தியால் ஒரு பாம்பை துண்டாக வெட்டி கொன்றார்.
மற்றொரு பாம்பு தப்பியோடிய பின், முருகேசன் அதே இடத்தில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். உயிர் தப்பிச் சென்ற பாம்பு, 30 நிமிடங்களுக்கு பின் மீண்டும் வந்து முருகேசனின் காலில் கடித்தது. வீட்டிற்குச் சென்ற முருகேசன், சிறிது நேரத்தில் வாய் வழியாக ரத்தம் கக்கி மயங்கினார்.
அதிர்ச்சியடைந்த மனைவி சுசீலா முருகேசனை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தன் ஜோடியை வெட்டி கொன்ற முருகேசனை பழி தீர்த்த பாம்பு மீண்டும் வரும் என்ற அச்சத்தில் கஞ்சங்கொல்லை கிராம மக்கள் உள்ளனர்.
அமெரிக்காவில் துரோகம் செய்த காதலனை பிறந்தநாள் விழாவில் கழட்டி விடும் காதலியின் வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் பகுதியை சேர்ந்தவர் டியனா பெரே. இவர் சமீபத்தில் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து 21வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். பிறந்தநாள் விழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றினை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோ காட்சி தற்போது 5.9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்றுள்ளது. நண்பர்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி முடித்ததும் டியனா பேச ஆரம்பிக்கிறார்.
முதலில் தன்னுடைய காதலன் சாண்டோஸ்க்கு நன்றி தெரிவித்த டியனா, சிறிது நேரத்திலே தனக்கு காதலன் இழைத்த துரோகம் பற்றி அனைவரின் முன் கூறி, வீட்டை விட்டு வெளியேறுமாறு அசிங்கப்படுத்துகிறார். இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
குழந்தை ஒன்று வயிற்றில் வளரும் மகிழ்ச்சியில் குடும்பமே அதற்கு பெயர் வரைக்கும் வைத்து கொண்டாடி மகிழ்ந்த நேரத்தில், அதை இழக்க வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட, அந்த குழந்தையை தனது உள்ளங்கையில் ஏந்திய அந்த தாயின் புகைப்படம் அவளது மன வலியை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்து காண்போரை நெகிழச் செய்கிறது.
அவுஸ்திரேலையாவைச் சேர்ந்த Justine Zampogna (28) தான் இரண்டாவது முறை கருவுற்றபோது மசக்கையால் மிகவும் அதிகமாக கஷ்டப்பட்டிருக்கிறார். எனவே அது ஒரு பெண் குழந்தையாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில், அவரும் அவர் கணவரும் அதற்கு Gia என்று பெயரிட, அவர்களது மூத்த மகனான Chase, அதற்கு Gigi என்று பெயர் வைத்திருக்கிறான்.
ஆனால் திடீரென ஒரு நாள் Zampogna வயிற்றிலிருந்த குழந்தையின் மூளையின் வளர்ச்சி தடை பட்டிருக்கிறது. அதனால் சில மணி நேரம் மட்டுமே அந்த குழந்தை பிழைத்திருக்கும் என தெரியவந்ததால், ஒன்றில் அதைக் கருக்கலைப்பு செய்து விடலாம் அல்லது பிரசவிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
16 வாரக் குழந்தையான Gia, முழு வளர்ச்சியடைந்து பிறப்பாள் என காத்திருந்த பெற்றோர், அவளை பெற்றெடுப்பது என முடிவு செய்தனர். அவள் பிறந்த போது உள்ளங்கையளவு இருந்த Giaவை கையில் ஏந்திய Zampognaவின் வேதனையை வெளிப்படுத்த வார்த்தைகள் கிடைக்கவில்லை, கூடவே சோகத்தில் அவரது கணவரும் மகனும் சேர்ந்து கொள்ள, Gia வானில் ஒரு நட்சத்திரமாகிவிட்டாள் என்று மகனை ஆறுதல் படுத்திவிட்டாலும், தங்களால் Giaவின் இழப்பை தாங்கிக் கொள்ள இயலாமல் தவித்திருக்கிறார்கள் Zampognaவும் கணவரும்.
உள்ளங்கையில் தனது குழந்தையை ஏந்திக் கொண்டிருக்கும் அந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள Zampogna, ஒரு குழந்தையை இழக்கும்போது அதனால் அந்த குழந்தையின் தாயும் தந்தையும் படும் பாடு மிகவும் கோரமானது.
அது வெறும் கருச்சிதைவு என்று எண்ணும் உலகின் முன், தங்கள் குறை பிரசவக் குழந்தை இறந்ததை வெளியில் சொல்லவும் இயலாமல், தாங்கிக் கொள்ளவும் இயலாமல், அவர்கள் படும்பாடு பயங்கரமானது என்று கூறும் Zampogna, தன் போன்று குறை பிரசவத்தில் குழந்தையை இழந்தவர்களை, அதைக் குறித்துள்ள உங்கள் கவலையை மனம் விட்டு பேசுங்கள் என்கிறார்.
அது வெறும் குறை பிரசவ குழந்தை அல்ல, அது உங்கள் குழந்தை, அதற்கு பெயரிடுங்கள், அதைக் குறித்து எப்போதும் பேசுங்கள், உங்கள் கவலை குறையும் என்கிறார் Zampogna.
தெய்வீக முறையில் குணமாக்குவதாகக் கூறி 300 பெண்களை துஷ்பிரயோகம் செய்த நபர், தனது சொந்த மகளையும் விட்டு வைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. பிரேஸிலைச் சேர்ந்த Joao Teixeira de Faria (76) என்பவர் தான் பிரச்சினைகளையும் நோய்களையும் தெய்வீக முறையில் குணமாக்குவதாகக் கூறி ஒரு மருத்துவமனை நடத்தி வந்தார்.
மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளிப்பதாகக் கூறி தங்களை Joao பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டதாக 10 பெண்கள் வெளிப்படையாக தொலைக்காட்சியில் பேட்டியளித்ததைத் தொடர்ந்து, 300 பெண்கள் அவர் மீது புகாரளிக்க முன்வந்தனர். சனிக்கிழமை 3 மணிக்குள் சரணடையுமாறு பொலிசார் அவருக்கு கெடு விதித்திருந்த நிலையில், நேற்று அவர் பொலிசாரிடம் சரணடைந்தார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் உட்பட பல பிரபலங்களுக்கு சிகிச்சையளித்துள்ள Joao, தன்னிடம் சிகிச்சைபெற வரும் பெண்கள் ஏராளமானோரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அவர்களில் Joaoவின் மகளான Teixeiraவும் ஒருவர். குணமாக்குவதாகக் கூறி தனது தந்தை தன்னை 10 வயது முதல் 14 வயது வரை துஷ்பிரயோகம் செய்ததாகத் தெரிவித்துள்ளார் Teixeira.
அவரிடம் வேலை செய்த ஒருவரால் தான் கர்ப்பமாக்கப்பட்டபின்தான், தன்னை துஷ்பிரயோகம் செய்வதை தன் தந்தை நிறுத்தியதாக தெரிவிக்கும் Teixeira, பின்னர் தன்னை அவர் அடித்ததில் தனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கிறார்.
டாக் ஷோ புகழ் ஓப்ரா வின்ஃப்ரே, ஒரு முறை Joaoவை பேட்டியெடுக்கச் சென்றதாகவும், அப்போது மயக்கமருந்து கொடுக்காமலே ஒரு பெண்ணின் மார்பகத்தை அவர் வெட்டி எடுத்ததைப் பார்த்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் பல பிரபலங்களும் முன் வந்து தாங்களும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக புகாரளிக்க, பொலிசாரிடம் சிக்கியிருக்கிறார் Joao. ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தபின் அவருக்கு வைரங்களையும் விலையுயர்ந்த கற்களையும் பரிசாக அளிப்பது Joaoவின் வழக்கமாம்.