வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வீதியோரத்தில் வீசப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
வவுனியா – ஈச்சங்குளம் வீதியில் தாண்டிக்குளம் பகுதியில் உள்ள நீர்பாயும் கால்வாய் மற்றும் வீதியோரங்களில் கழிவுகள் வீசப்பட்டு வருகின்றன.
வீட்டுக் கழிவுகள், கடைக் கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள் என அப் பகுதியில் வீசப்படுவதால் அப்பகுதி துர்நாற்றம் வீசுவதுடன், அவ் வீதியால் பயணிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
அங்கு வீசப்படும் கழிவுகள் ஓடும் நீரினாலும், நாய் மற்றும் காகம் போன்றவற்றினாலும் காவிச் செல்லப்படுவதனால் அயலில் உள்ள வீடுகளிலும் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சூழல் மற்றும் நீர் என்பன கழிவுகளால் மாசடைந்து வருவதுடன், தொற்றுநோய் பரவக்கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து வவுனியா நகரசபை கவனம் செலுத்தி கழிவு முகாமைத்துவத்தை மேற்கொண்டு தம்மை நிம்மதியாக வாழ வழியை ஏற்படுத்தவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
தமிழகத்தில் கழுத்தை நெரித்து மகளை கொலை செய்துவிட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அருப்புக்கோட்டையை சேர்ந்தவர்கள் ராஜாகனி- ரோஸ்ஜெப ஜென்ஸிமேரி தம்பதியினர். இவர்களின் மகள் அபிநயா பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், அபிநயா அப்பகுதியில் உள்ள ஒரு வாலிபருடன் பழகியதாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த அவரது தாய் ரோஸ்ஜெப ஜென்ஸிமேரி தனது மகள் அபிநயாவை கண்டித்துள்ளார். அப்போது தாய்க்கும் மகளுக்கும் வாக்குவாதம் அதிகரித்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அபிநயாவின் கழுத்தை ரோஸ்ஜெப ஜென்ஸிமேரி நெரித்ததாகவும் அதில் அபிநயா உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் பதட்டமும் மனவேதனையும் அடைந்த ரோஸ்ஜெப ஜென்ஸிமேரி வீட்டினுள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவம் பற்றி தகவலறிந்த பொலிசார் ரோஸ்ஜெப ஜென்ஸிமேரி வீட்டினுள் சென்று பார்த்தபோது வீட்டில் தாய், மகள் இருவரது சடலங்களும் இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விசாரணையில் அவரது கணவர் ராஜாகனி மற்றும் உறவினர்கள் ரகசியமாக இருவரது உடல்களையும் புதைக்க திட்டமிட்டது தெரிய வந்தது.
இருவரது சடலங்களையும் ராஜாக்கனியின் சொந்த ஊரான மீனாட்சிபுரத்திற்குக் எடுத்துச் சென்றது தெரிந்தது. இதைனையடுத்து விரைந்து சென்று உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உயிரிழந்த இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் கணவர் ராஜாகனியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது பொருத்தமானது என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல்களுக்கு பயந்துள்ளதாக சிலர் சுமத்தும் குற்றச்சாட்டை நிராகரிக்கின்றோம். எந்த தேர்தலுக்கும் தயார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியும் என்பதால், இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் யோசனை ஒன்றை நிறைவேற்றுவோம்.
அதன் மூலமாக ஜனாதிபதித் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது பொருத்தமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நிறுத்தப்பட்டதால், பட்டாசு வெடித்து கொண்டாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நளின் பண்டார, நீதித்துறை கட்டமைப்பு மற்றும் அரசியலமைப்பின் கௌரவம் பாதுகாக்கப்பட்டது தொடர்பில் மகிழ்ச்சியடைந்தே மக்கள் பட்டாசு கொளுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த முதிய தம்பதி கோடிக்கணக்கான பணத்தை மக்களின் தொண்டுக்காக செலவிடும் நிலையில் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். மதுரை திருநகரைச் சேர்ந்த அந்த தம்பதிகளின் பெயர் ஜனார்த்தனன் – ஜலஜாவாகும். மத்திய அரசு ஊழியர்களாக இருந்த இவர்கள் தொண்டு செய்வதற்காகவே விருப்ப ஒய்வு பெற்றனர்.
ஒய்வு பெற்ற போது கிடைத்த பணத்தைக் கொண்டு திருநகரில் ஐந்து கிரவுண்டு இடத்தை வாங்கிப்போட்டனர். அதன் இன்றைய மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேலாகும். அதில் முதியோர் இல்லம் நடத்தலாம் என்று முடிவு செய்திருந்தனர். ஜனார்தனனுக்கு திடீரென பார்வைக் கோளாறு ஏற்படவே தாம் முதியோர் இ்ல்லம் நடத்தமுடியாது நடத்துபவர்கள் யாருக்காவது இடத்தை கொடுத்துவிடலாம் என முடிவு செய்தனர்.
அந்த நேரத்தில் டாக்டர் பாலகுருசாமி உள்ளீட்ட சில இளம் டாக்டர்கள் ஒன்று சேர்ந்து ‛ஐஸ்வர்யம் அறக்கட்டளை’ என்ற அமைப்பினை துவங்கி ஆதரவில்லாமல் தெருவில் வீசப்பட்ட வயதானவர்களை காப்பாற்றி தகுந்த மருத்துவமும் உணவும் கொடுத்து காப்பாற்றி வந்தனர். ஆனால் போதுமான இடவசதி இல்லாமல் சிரமப்பட்டனர், இதனைக்கேள்விப்பட்ட ஜனார்த்தனன்-ஜலஜா தம்பதியினர் தங்களது இடத்தை தானமாக கொடுத்தனர்.
ஆனாலும் மருத்துவர்கள் குழு தானமாக இடத்தைப் பெற சிறு தயக்கம்காட்டினர், இடத்தை பதிவு செய்ய இரண்டரை லட்ச ரூபாய் தேவை என்பதுதான் அந்த தயக்கத்திற்கு காரணம். இதைக் கேள்விப்பட்ட தம்பதியினர் இடத்தை தானமாக கொடுத்ததுடன் நி்ற்காமல் தங்களது சேமி்ப்பில் இருந்த பணத்தை எடுத்து இரண்டரை லட்ச ரூபாய் செலவு செய்து இடத்தை பதிவும் செய்து கொடுத்தனர்.
இடம் கிடைத்துவிட்டது இனி இதில் கட்டிடம் கட்டவேண்டுமே என்ற நிலை வந்த போது மீண்டும் இதே தம்பதியினர் தங்களது வெளிநாட்டு உள்நாட்டு உறவுகள் நட்புகளிடம் விஷயத்தைச் சொன்னதும் நிதி வந்து சேர்ந்தது, இரண்டு மாடி கட்டிடமும் கட்டப்பட்டது. இவ்வளவு பணத்தையும் தானமாக கொடுத்துவிட்டு எங்காவது போகவேண்டும் என்றால் கூட டவுன் பஸ்சில்தான் இப்போதும் போய்வந்து கொண்டு இருக்கின்றனர்.
வீட்டு வேலைக்கு ஆள் கிடையாது தங்களது வேலைகளை தாங்களேதான் செய்து கொள்கின்றனர் அக்கம் பக்கம் இருக்கும் குழந்தைகளை அழைத்து மாலை நேரங்களில் தங்களது அறிவை பகிர்ந்து கொண்டு இலவச ட்யூஷன் எடு்க்கின்றனர்.
இவர்களின் தயவால் இப்போது வாழ்வின் விளிம்பு நிலையில் மரணத்தின் வாசலில் இருப்பவர்கள் என்று யாருமே கவனிக்காமல் குப்பையாக வீசியெறியப்பட்ட ஆண்,பெண் முதியவர்கள் 39 பேர் ஐஸ்வர்யம் அறக்கட்டளையில் தங்கி கடைசி காலத்தை நிம்மதியாக கழித்துவருகின்றனர்.
இந்தியாவில் 13 வயது மகளை இரண்டாண்டுகள் சீரழித்துவிட்டு பின்னர் கொன்று புதைத்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தின் கோடக் கிராமத்தை சேர்ந்தவர் சுக்ரா பகதூர் பிரதன் (45). இவருடைய மனைவி கடந்த 2016-ல் வீட்டை விட்டு சென்றுவிட்ட நிலையில் தனது 13 வயதான மகளுடன் சுக்ரா வசித்து வந்தார். மகள் என்றும் பாராமல் கடந்த இரண்டாண்டுகளாக சிறுமியை தொடர்ந்து சீரழித்து வந்துள்ளார் சுக்ரா.
இந்நிலையில் கடந்த 9-ஆம் திகதி, பாதிக்கப்பட்ட சிறுமி தனது தந்தை சுக்ராவிடம், உன்னை குறித்து ஊர் மக்களிடம் சொல்கிறேன் பார் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன சுக்ரா தனது மகளை கொலை செய்து வீட்டுக்கு பின்புறம் புதைத்துள்ளார்.
இதையடுத்து அடுத்த நாள் தனது உறவினரிடம், தனது மகள் தற்கொலை செய்து கொண்டார், அதனால் அவர் சடலத்தை புதைத்துவிட்டேன் என கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சிறுமியின் சடலத்தை எடுத்து பிரேத பரிசோதனை செய்த போது சுக்ராவின் குட்டு வெளிப்பட்டது. இதையடுத்து பொலிசார் சுக்ராவை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
சென்னையில் இருசக்கர வாகனம் கேட்ட தம்பியை அண்ணன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். கூலித்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வெங்கடேசனின் தம்பி குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.
பின்னர் அண்ணன் வெங்கடேசனிடம், இரு சக்கர வாகனம் வாங்கித் தரும்படி போதையில் தகராறு செய்துள்ளார். தம்பியின் செயலால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் தன்னிடமிருந்த கத்தியை எடுத்து கணேசன் கழுத்தை அறுத்தார்.
இதில் ரத்தம் சொட்ட சொட்ட வெங்கடேசனின் தம்பி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் பொலிசார் வெங்கடேசனை கைது செய்துள்ளார்கள். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
ஹொரணையில் பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வர்த்தகர்களை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு அச்சுறுத்தி கப்பம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாணந்துறை பொலிஸ் பிரிவின் சட்டத்தை அமுலாக்கும் பிரிவினருக்கு நேற்று மாலை கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தம்வசம் வைத்திருந்த ஒரு கிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள், ஹொரணை வெவல மற்றும் புளத்சிங்கள அதுர ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 35 மற்றும் 50 வயதானவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் கிடைக்காமல் போகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி குறித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விலகி வேறு ஒரு கட்சியில் அங்கத்துவத்தை பெற்றுள்ள காரணத்தினால், அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் நிலைப்பாடாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி பிரதமராக பதவியேற்ற பின்னர், அவரும் அவரது அணியில் அங்கம் வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டனர்.
ஐதராபாத்தில் தம்பதியினர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதில் மனைவி சம்பவ இடத்தியிலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். ஐதராபாத் மாநிலம் சரூர் நகர் பகுதியை சேர்ந்த 35 வயதான சந்தோஷ். தீயணைப்பு துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ராஜானி என்ற மனைவியும், 3 வயதில் ஒரு மகன் 18 மாதமான மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் ராஜானியின் சகோதரன் ராகேஷ், சந்தோஷ் எண்ணுக்கு நீண்ட நேரமாக போன் செய்துள்ளார். ஆனால் அவர் பதில் தெரிவிக்காததால், நேரடியாக வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். அப்பொழுது கூட அவர் கதவை திறக்காததால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளார்.
அங்கு அக்கா ராஜானி ஹால் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். மறுபுறம் வீட்டின் அறையில் சந்தோஷ் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார். உடனே கயிற்றை அறுத்து அவரை மீட்ட ராகேஷ், வேகமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இந்த சம்பவம் அறிந்து விரைந்த வந்த பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
ஆனால் தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கைவில்லை எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தோஷ் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை அரசாங்க மாற்றத்தினால் நிறைவேற்ற முடியாது போயுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார். எனினும் வழியை ஏற்படுத்தும் அரசியல் பலமிக்க பாரிய அணியை உருவாக்க முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் விசேட உரையை நிகழ்த்தும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தேர்தல் இன்றி பிரதமர் பதவியை வகிக்க நான் எந்த எதிர்பார்ப்புகளையும் கொண்டிருக்கவில்லை. முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுக்கும் போது ஜனாதிபதி இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காக பிரதமர் பதவியில் இருந்து விலகி, புதிய அரசாங்கத்தை நியமிக்க ஜனாதிபதிக்கு இடமளித்தேன்.
அத்துடன் ஒரு வருடமும் மூன்று மாதங்களும் தாமதமாகியிருக்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்த வைப்பதே தமது பிரதான எதிர்கால இலக்கு எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவில் நீர்சுழற்சியில் மாட்டிக் கொண்டு உயிருக்கு போராடிய தாய் மற்றும் மகன்களை மூன்று இளைஞர்கள் காப்பாற்றியுள்ள சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது. கேரளாவின் Pathanamthitta மாவட்டத்தின் Mallappally தாலுக்காவின் Kottangal பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா(32). இவருக்கு ஜிதின் என்ற 10 வயது மகன் உள்ளார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 5 மணியளவில் திவ்யா மற்றும் ஜிதின் மணிமலா ஆற்றின் வழியே சென்றுள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக ஜிதின் ஆற்றின் நீர்சுழற்சியில் மாட்டிக் கொண்டார். இதனால் அந்த சிறுவன் தப்பிப்பதற்கு போராடியுள்ளான்.
உடனடியாக இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த திவ்யா தன் மகனை காப்பாற்றும் எண்ணத்தில் அவரும் குதித்துவிட்டார். ஜித்தின் ஒருவழியாக அங்கிருந்த ஒரு மூங்கில் மரத்தின் கட்டையை கெட்டியாக பிடித்துள்ளார். ஆனால் மகனைக் காப்பாற்ற முயன்ற திவ்யா நீர்சுழற்சியின் காரணமாக உள்ளே மூழ்கினார்.
இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நேரத்தில் அங்கிருந்த இளைஞர்கள் மூன்று பேரும் உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டுள்ளனர். நீர்சுழற்சியில் சிக்கியவர்களை மீட்பது மிகவும் ஆபத்தானது, காப்பாற்ற செல்பவர்களையும் அது இழுத்துவிடும், இருப்பினும் Olomana Madhusoodanan(42), அவரின் உறவினர் Ameer(25) மற்றும் உதயா(30) ஆகியோர் அவர்களை காப்பாற்றியுள்ளது பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
மணிமலா ஆற்றை Olomana kayam என்றும் அழைப்பர். சுமார் 300 மீற்றர் நீளம் கொண்ட இந்த ஆறு, 18 அடி ஆழம் கொண்டது எனவும் இதில் அதிகளவில் பாறைகள் இருக்கும், இந்த ஆற்றின் நீர்சுழற்சியில் சிக்கினால், அவர்களின் நிலைமை அவ்வளவு தான் ஆனால் இவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ள நிலையில், அவருக்கு ஆதரவான அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் சேவை புறக்கணிப்பு போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான தேசிய நல்லாட்சி அரசாங்கம் பதவியில் இருந்த போது, மருத்துவ சேவை தவிர்த்து ஏனைய விடயங்கள் தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சேவைப் புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தி வந்தது.
இதன் காரணமாக நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.
புதிய அரசாங்கத்தில் ராஜித சேனாரத்னவுக்கு மீண்டும் சுகாதார அமைச்சர் பதவி வழங்கப்பட்டால், அது கடும் நெருக்கடியான நிலைமைக்கு காரணமாக அமையும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
கடந்த சில வருடங்களாக ராஜித சேனாரத்னவின் கீழ் சுகாதார துறை பெரும் சீரழிவை சந்தித்ததாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் நளிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவிக்கு வந்த பின், கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் செயற்பாடுகளை காணமுடியவில்லை.
அரச மருத்துவ அதிகாரிகள், இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்திருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம், சிங்கப்பூர் உடனான உடன்படிக்கையை இரத்துச் செய்யாது என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் முன்னிலையிலேயே தெரிவித்திருந்தார்.
எனினும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அப்போது அதற்கு எந்த எதிர்ப்பையும் வெளியிடவில்லை. மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலக போவதாக அறிவித்த உடனேயே மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளது.
இதன் மூலம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இந்த தீர்மானத்தால் நாட்டு மக்கள் சிக்கலை எதிர்நோக்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் சர்ச்சை நிலை காணப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் பிரதமர் பதவி வகித்த மஹிந்த, இல்லாத பதவியில் இருந்து எவ்வாறு பதவி விலகுவார் என்பது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையின் உத்தியோகபூர்வ பிரதமர் மஹிந்த என்பதை, நாடாளுமன்றமோ, நீதித்துறையோ ஏற்றுக்கொள்ளவில்லை.
இவ்வாறான நிலையில் அவர் எவ்வாறு இல்லாத பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை உத்தரவு அடுத்த மாதம் வரை நீடிக்கப்பட்ட நிலையில், இன்று தனது பதவியில் இருந்து விலகுவதாக மஹிந்த உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சாகல ரட்நாயக்க தனது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் தீப்பிடித்து எரிந்த காரின் உள்ளே இருந்த டிரைவர் பத்து நிமிடத்திற்கும் மேலாக காரின் கதவை தட்டிய போதும், அங்கிருந்த மக்கள் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமானநிலையத்திற்கு அருகே அமைந்திருக்கும் மேம்பாலத்தில் நேற்றிரவு சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த வழியே சென்ற பலரும் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் கார் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்.
அந்த காரின் ஓட்டுனர் விண்ட்ஷீல்ட்டில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக ஈக்காட்டுத்தாங்கலிலிருந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது விமானநிலையம் அருகே வந்த போது, காரின் இன்ஜின் இருக்கும் பகுதியிலிருந்து கரும்புகை வெளிவந்துள்ளது. இதைக் கண்ட ஓட்டுனர், விரைவாக காரை நிறுத்திவிட்டு இறங்குவதற்குள் கார் முழுவதுமாக தீப்பிடித்து எரியத் துவங்கியது.
கார் கதவுகளின் லாக், ஆட்டோமேட்டிக்காக என்கேஜ் ஆகிக்கொண்டதால் காருக்குள் மாட்டிக்கொண்ட ஓட்டுனர், பின்பக்கக் கண்ணாடியை உடைத்து அதிலிருந்து வெளியேறி, கடும் போராட்டத்துக்குப் பிறகே உயிர் பிழைத்தார். இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தெரியவந்ததால், விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
இருப்பினும் தீயை அணைப்பதற்குள் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு விமான நிலையத்தைச் சுற்றிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் காரிலிருந்து தப்பிய ஓட்டுனர் கூறுகையில், பத்து நிமிடத்துக்கும் மேல தீப்பிடித்து எரியும் காருக்குள் மாட்டிக் கொண்டேன்.
சுற்றி ஐம்பது பேருக்கும் மேல நான் கதவ தட்டினதை வேடிக்கை தான் பார்த்தார்களே தவிர, உதவ முன்வரவில்லை, கார் கதவை உடைத்தாவது காப்பாற்ற முயற்சி செய்திருக்கலாம் ஆனால் வரவில்லை. காரின் மதிப்பு 16 லட்சம் ரூபாய் எனவும் வேதனையுடன் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச இன்றைய தினம் பதவி இராஜினாமா செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணைகள் இரண்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை மற்றும் நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டமையினால் மஹிந்தவினால் தொடர்ந்தும் பிரதமர் பதவியில் செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் எடின்பரோ சட்ட பீட பேராசிரியர் அசங்க வெலிகலவிடம் கருத்து கேட்ட போது,
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற்ற பிரதமரை பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்பதே எனது நிலைப்பாடாகும்.
எனவே ஜனாதிபதியினால் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்சவை பதவியில் நியமிப்பதற்கு சட்டம் இல்லை.
நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அதிகாரம் இல்லை என கடந்த வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
எனவே வேறு வழியின்றியே மஹிந்த பதவியை இராஜினாமா செய்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய தேவையற்ற வகையில் பிரதமர் பதவியை மஹிந்த பெற்று, தற்போது அவமானப்பட்டுள்ளா் என அவரின் விசுவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார். விஜயராம மாவத்தையிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மும்மத வழிபாடுகளின் பின்னர் மஹிந்த பதவி விலகுவதற்கான கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
மஹிந்த, பிரதமர் பதவியிலிருந்து விலகுகின்றமை தொடர்பில் நேற்று தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இன்றைய தினம் ராஜினாமா கடிதத்தில் அவர் கையெழுத்திடப்பட்டுள்ளது.
மேலும், மஹிந்த பிரதமராக பதவி வகிப்பது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்திருந்த இடைக்கால தடையுத்தரவினை உச்ச நீதிமன்றமும் நேற்று நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.