யாழில் அதிகாலை பொலிசார் அதிரடி : வசமாக சிக்கிய 11 பேர்!!

யாழில் ஆவா குழுவை சேர்ந்த 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வட மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இன்று அதிகாலை 3 மணியளவில் யாழ். மானிப்பாய் பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 11 பேரில் இருவர் ஆவா குழுவின் முக்கியஸ்தர்களான போல் விக்டர் மற்றும் அஞ்சித் என்பதுடன், ஏனைய 9 இளைஞர்களும் ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 11 பேரும் சுமார் 22 வயது முதல் 24 வயதுடையவர்கள் என்றும், இவர்கள் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசம் ஒன்றில் வானிலும், மோட்டார் சைக்கிளிலும் பயணித்த போது 6 வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 11 இளைஞர்களும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின் 11 பேரையும் மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் விபத்தில் உயிரிழப்பு!!

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லங்கா பட்டினம் பிரதான வீதி வாழைத்தோட்டம் பகுதியில் நேற்றிர வ இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் வெருகல், மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த தங்கராசா விஜிகரன் (24 வயது) எனவும், படுகாயமடைந்தவர் மாவடிச்சேனை, சேனையூர் பகுதியைச் சேர்ந்த கனகராசா வசந்தகுமார் (24 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் லங்கா பட்டினம் வீதியினூடாக சென்று கொண்டிருந்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்த தங்கராசா விஜிகரன் உடைய சடலத்தை மூதூர் தள வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும், பலத்த காயங்களுக்குள்ளான கனகராசா வசந்தகுமார் 24 வயதுடைய இளைஞரை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்து தொடர்பில் விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!!

நாடாளுமன்றத்தில் மோதலில் ஈடுப்பட்ட அனைவரும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் உள்ள பாதுகாப்பு கமராக்களின் காட்சிகள் மற்றும் ஊடகங்களில் வெளியாகிய காணொளிகளுக்கமைய குற்ற விசாரணை திணைக்களத்தினால் அவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிராக பொலிஸார் மீது தாக்குதல், மிளகாய் தூள் தாக்குதல், உச்ச நிலை இடமான நாடாளுமன்றத்தில் சொத்துக்களை சேதப்படுத்தல், பொது மக்களின் சொத்துக்களை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அனைத்து சந்தேக நபர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வர வேண்டும் என்பதே சட்டமா அதிபரின் கருத்தாகியுள்ளது.

எனவே இது தொடர்பான சந்தேக நபர்களை கைது செய்வதற்கு எவ்வித சட்ட ரீதியான தடைகள் இல்லை என சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த 50 நாட்களுக்கும் மேலான காலப்பகுதியில் நாட்டில் அமைதியின்மை நிலை காணப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகள் சிலவற்றின் போது கடும் மோதல் நிலைமை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இரவு பகல் பாராது கைக்குழந்தையுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் பெண்!!

வவுணதீவில் இரு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனது கணவனை விடுதலை செய்யுமாறு கோரி, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன், கைது செய்யப்பட்டவரின் மனைவி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

குறித்த போராட்டம் நேற்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கடந்த 30ஆம் திகதி வவுணதீவில் இரண்டு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள அஜந்தன் எனப்படும் சி.இராஜகுமாரனின் மனைவி மற்றும் பிள்ளைகளே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தனது கணவன் கைதுசெய்யப்பட்டு 18 தினங்கள் கடந்துள்ள நிலையில், இதுவரையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாது தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தனது கணவரை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், வலியுறுத்தியே குறித்த தாய் மற்றும் பிள்ளைகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தனது கணவர் எந்தவித குற்றமும் செய்யவில்லை அதனை பொலிஸாரும் கூறுகின்றனர். ஆனால், அவரை ஏன் தொடர்ந்து தடுத்துவைத்துள்ளார்கள் என்பது தெரியாத நிலையில் உள்ளதாக உண்ணாவிரததத்தில் ஈடுபட்டுள்ள அஜந்தனின் மனைவி செல்வராணி இராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.

தனது கணவனே தங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்துவந்த நிலையில், கடந்த 18 தினங்களாக எந்தவித உதவிகளும் இன்றி கைக்குழந்தைகளுடன் கடுமையான துன்பத்தை தாங்கள் எதிர்நோக்கிவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தனது கணவன் குற்றவாளியென்றால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி குற்றத்தினை நிரூபித்து தண்டனை வாங்கிக்கொடுங்கள்.

அவ்வாறு இல்லாவிட்டால் அவரை விடுதலை செய்யுங்கள், அவரை விடுதலை செய்யும் வரையில் நானும் எனது பிள்ளைகளும் இந்த உண்ணாவிரத போராட்டத்தினை தொடர்வோம் என்றும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள பெண் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வுண்ணாவிரத போராட்டமானது இரவு பகல் பாராது நடைபெற்று வருவதுடன், இப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக தேசத்தின் வேர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் அதன் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சுமந்திரன் எம்.பி!!

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் அமைச்சரவையின் பிரதானியாகும். அப்படி என்றால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எப்படி எதிர்கட்சியாகும் என அவர் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்சியை விட்டு விலகி நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத கட்சி ஒன்றில் உத்தியோகபூர்வமாக இணைந்தவர்களுக்கு நாடாளுமன்றத்தில் எவ்வாறு உரிமை பெற முடியும். இது இரண்டும் எனது கேள்விகளாகும் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே எதிர்க்கட்சி தலைவர் பதவியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ள முடியாதென்பதனை சபாநாயகர் புரிந்து கொள்ள வேண்டும் என சுமந்திரன் கூறியுள்ளார்.

சுமந்திரனின் வாதத்தினை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், அது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆராய்ந்த பின்னர் முடிவு வழங்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துளளார்.

மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய மைத்திரி!!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் நான் முன்னர் சேர்ந்தது என் முழு மனதின் சம்மதம் இன்றியே. அந்த தேர்தல் மேடைகளில் நின்ற போது நான் பட்ட வேதனைகளை என் உள்மனம் மட்டுமே அறியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரின் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒன்பது பேர் இருந்தால் தேசிய ஆட்சியமைக்கலாமென ரணில் ஓடித்திரிகிறார்.

அப்படியே எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் 9 எம்.பிக்கள் எங்கள் பக்கம் வந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றியும் நீங்கள் சிந்தியுங்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் நான் முன்னர் சேர்ந்தது என் முழு மனதின் சம்மதம் இன்றியே. அந்த தேர்தல் மேடைகளில் நின்ற போது நான் பட்ட வேதனைகளை என் உள்மனம் மட்டுமே அறியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக செயற்படுங்கள். அப்போதே நாம் எமது பயணத்தினை தொடரலாம் என அவர் ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணியிடம் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த நியமனம்!!

எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

ஆளும் கட்சிக்கு அடுத்தப்படியாக அதிக உறுப்பினர் கொண்ட கட்சியின் உறுப்பினருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படும். அதற்கமைய அதிக உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

எனினும் தாமரை மொட்டு தலைவராகிய மஹிந்த ராஜபக்சவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்குவது எப்படி என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.மஹிந்தவின் கட்சி விவகாரம் குறித்து நாளை ஆராய்ந்து பார்ப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சியின் உறுப்பினர், எதிர்க்கட்சி தலைவராகலாம் என்ற சபாநாயகரின் கருத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

அடேய் முட்டாளே : நீ நினைப்பதை செய்ய முடியாது : மகிந்தவை தரக்குறைவாக திட்டிய சரத் பொன்சேகா!!

மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை , நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வார்த்கைளினால் கடுமையாக தாக்கியுள்ளார். காலி முகத் திடலில் நேற்று இடம்பெற்ற மாபெரும் கூட்டத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

மஹிந்த ராஜபக்ச கூறுகின்றான் மக்களுக்காக தேர்தல் தேவை என்று, அடேய் முட்டாள், அடேய் பேயே, நீ நினைக்கும் போது தேர்தலை நடத்த முடியாது. உனக்குத் தேவையான நேரத்தில் தேர்தலை நடத்த முடியாது.

கோதபாய ராஜபக்ச நகர அபிவிருத்தி என்ற பெயரில் பாரியளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டார். கொழும்பில் குப்பைகளை அகற்றுவதாகக் கூறி மிகவும் பாரியளவில் ஊழல் செய்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் இன்று சிலர் மிகுந்த வேதனை அடைகின்றார்கள், ஆணைக்குழுக்களை அமைத்து விசாரணை நடத்துகின்றார்கள்.

எனினும், ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களில் ராஜபக்சக்கள் பாரியளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டனர். ஹெட்ஜின் கொடுக்கல் வாங்கல், கிரேக்க பிணை முறி உள்ளிட்ட பல்வேறு கொடுக்கல் வாங்கல்களில் ராஜபக்சக்கள் பாரியளவில் ஊழல் மோசடிகள் ஈடுபட்டனர்.

அவன்ட் கார்ட் கொடுக்கல் வாங்கல்களின் மூலம் பாரியளவில் மோசடி இடம்பெற்றுள்ளது, இந்த அனைத்து ஊழல் மோசடிகள் பற்றியும் இவர்கள் வாய் திறப்பதில்லை. மத்திய வங்கி பிணை முறி மோசடி பற்றி மட்டுமே பிதற்றுகின்றார்கள்.

நான் இன்று ஜனாதிபதியை விமர்சனம் செய்ய மாட்டேன் எனினும் ஒன்றை மட்டுமே சொல்ல வேண்டும்.

நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து ரணிலை மீளவும் பிரதமராக நியமித்தேன் என மைத்திரிபால சிறிசேன கூறினார். எனினும் அது முற்று முழுதான ஓர் பொய்யாகும்.

நாடாளுமன்ற சம்பிரதாயங்கள், நாடாளுமன்ற மரபுகள் போன்றவற்றுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதிப்பளிக்கவில்லை என சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் விபத்தில் படுகாயமடைந்த பெண் மரணம்!!

வவுனியா செட்டிகுளம் பகுதியில் கடந்த 5ம் திகதி இடம்பெற்ற விபத்தில் 75 வயதான பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் செட்டிகுளம் தபால்நிலையத்திற்கு அருகாமையில் சென்றுகொண்டிருந்தபோது அவ்வீதி வழியே மாடுகளை கலைத்துச்சென்ற வயோதிபப்பெண்ணை மோதியதிலேயே விபத்து இடம்பெற்றதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை அப்பகுதியில் நின்றவர்கள் மீட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றபட்டார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு வீட்டிற்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (16.12) அதிகாலை குறித்த பெண் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பெரியசாமி செவனை என்ற மூதாட்டியே மரணமடைந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் போலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கணவனை விடுதலை செய்யக்கோரி நான்கு குழந்தைகளுடன் தாய் உண்ணாவிரதப் போராட்டம்!!

மட்டக்களப்பு, காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் தனது கணவனை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் இன்று முற்பகல் முதல் ஈடுபட்டுவருகின்றார்.

கடந்த 30ஆம் திகதி வவுணதீவில் இரண்டு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள அஜந்தன் எனப்படும் சி.இராஜகுமாரனின் மனைவி மற்றும் பிள்ளைகளே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தனது கணவன் கைதுசெய்யப்பட்டு 18 தினங்களை கடந்துள்ள நிலையிலும், இதுவரையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தாத நிலையில் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது கணவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியே குறித்த தாய் மற்றும் பிள்ளைகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனது கணவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. அதனை பொலிஸாரும் கூறுகின்றனர். ஆனால் அவரை ஏன் தொடர்ந்து தடுத்துவைத்துள்ளார்கள் என்பது தெரியாத நிலையில் உள்ளதாக உண்ணாவிரததத்தில் ஈடுபட்டுள்ள செல்வராணி இராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 18 தினங்களாக எந்தவித உதவிகளும் இன்றி கைக்குழந்தைகளுடன் கடுமையான கஸ்டங்களை தாங்கள் எதிர்நோக்கி வருவதாகவும், தமது கணவனே தங்களுக்கு எல்லா உதவிகளையும் வழங்கி வந்த நிலையில் தற்போது எந்தவித உதவிகளும் இல்லாத நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவன் குற்றவாளியென்றால் நீதிமன்றில் நிறுத்தி குற்றத்தினை நிரூபித்து தண்டனை வாங்கிக்கொடுங்கள், அவ்வாறு இல்லாவிட்டால் அவரை விடுதலைசெய்யுங்கள், அவரை விடுதலை செய்யும் வரையில் நானும் எனது பிள்ளைகளும் இந்த சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தினை தொடர்வோம் என்று கூறியுள்ளார்.

இதேவேளையில் குறித்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பித்தளைத் தாலியைக் கட்டி பெண்ணை திருமணம் செய்ய முயன்றவருக்கு ஏற்பட்ட நிலை!!

பித்தளைத் தாலியைக் கட்டி பெண்ணொருவரைத் திருமணம் செய்த நபர் ஒருவர், பதிவுத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த போது அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்ட வேளை உறவினர்களால் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் வடமராட்சி பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்று உள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடமராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தரகர் மூலம் கொழும்பில் வசிக்கும் நபர் ஒருவர் மணமகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருமணத்துக்கு முன்னர் சீதனமாக 5 லட்சம் ரூபா பெண் வீட்டார் மாப்பிளைக்கு கொடுத்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் திருமணம் நடைபெற்றது.

தாலி கட்டிய பின்னர் பதிவுத் திருமணத்துக்கு தயாராகுமாறு பெண் வீட்டார் மாப்பிள்ளையை அழைத்துள்ளனர். அவசரமாக கொழும்புக்குச் செல்ல வேண்டும் ஆகவே பதிவுத் திருமணம் வேண்டாம் என்று மாப்பிள்ளை மறுத்துள்ளார்.

அதன் போது பெண் வீட்டாருக்கு சந்தேகம் ஏற்பட்டு மணப்பெண்ணுக்கு கட்டிய தாலியைப் பார்த்த போது அது பித்தளை என்று தெரியவந்தது. அதனை அடுத்து மாப்பிள்ளையை மடக்கி பிடித்து வல்வெட்டி துறைப் பொலிஸில் பெண் வீட்டார் ஒப்படைத்தனர்.

மாப்பிள்ளை ஏற்கனவே கொழும்பில் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தந்தை என்றும் ,பெண்ணுக்கு தோழியாக வந்தவர் மாப்பிள்ளையால் பணம் கொடுத்து வவுனியாவில் இருந்தும் அழைத்து வரப்பட்டவர் என்றும் பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

அதனை அடுத்து திருமணப் பெண்ணின் எதிர் காலத்தை கொண்டு விடயத்தைப் பெரிது படுத்தாமல் சீதனமாகக் கொடுத்த பணத்தை மாப்பிள்ளையிடம் இருந்து வாங்கித் தருமாறு பெண் வீட்டார் பொலிஸாருக்கு கூறியுள்ளனர்.

அதனை அடுத்து மாப்பிள்ளையாக வந்தவர் அந்தப் பணத்தை மீண்டும் பெண் வீட்டாருக்கு ஒப்படைத்து விட்டு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்டுள்ள நவீன முறை சிகை அலங்காரம்!!

பாடசாலை மாணவர்களுக்கு நவீன முறை சிகை அலங்காரம் எம்மால் தடை செய்யப்படுகிறது என 2019 ஆம் ஆண்டு வடமாகாண அழகர் சங்க சம்மேளனத்தின் கிளிநொச்சி மாவட்ட கிளை அறிவித்தல் வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சி, கூட்டுறவு மண்டபத்தில் நேற்று இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அழகர் சங்கத்துடன் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் தவிசாளர் சமூக கட்டுப்பாடு குறித்தும், மாணவர்களிடையே எழுந்து வருகின்ற முடி திருத்துதல் தன்மையையும் சமூக பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டிய தேவையும் பற்றி உரையாற்றினார்.

அதுமட்டுமன்றி புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் உங்கள் முகத்தை அவலட்சணமாக்கும் என்ற தொனிப்பொருளில் தங்களுடைய அழகுக்கலைகளை மேம்படுத்துவதற்கு அவர்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆகவே சபையினால் மேற்கொள்ளப்பட்ட பிரேரணை தொடர்பாக அழகர்கள் சங்கம் எடுத்துள்ள முயற்சிக்கு கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு நவீன முறை சிகை அலங்காரத்தினை தடுக்குமாறு கரைச்சி பிரதேச சபையின் ஜந்தாவது சபை (2018.07.10) அன்றைய தினம் அமர்வு ஒன்று நடைபெற்றுள்ளது.

அமர்வில் பிரதேச சபை உறுப்பினர் அருணாசலம் சாத்தியனாந்தினால் பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்க விழுமியங்களை சீர்ப்படுத்தத்தக்க வகையில் மாணவர்களின் சிகையலங்காரத்தினை உரிய கட்டொழுங்கில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக முடி திருத்தும் நிலையங்களை அறிவுறுத்தி முகாமைப்படுத்தல் என்ற பிரேரணைக்கு அமைவாக சபையிலே நீண்ட நேரமாக விவாதிக்கப்பட்டு இச் சபை தீர்மானம் கொண்டு வரப்பட்டு கிளிநொச்சி மாவட்ட அழகர் சங்கத்திற்கு அனுப்பப்பட்டது.

இவர்களை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள கூடாது : கடும் தீர்மானத்தில் ஐ.தே.முன்னணி!!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில், விஜயதாச ராஜபக்ச, திலங்க சுமதிபால, தயாசிறி ஜயசேகர, மகிந்த சமரசிங்க ஆகியோரை, ஜனாதிபதி அழுத்தங்களை கொடுத்தாலும் எந்த காரணம் கொண்டும் இணைத்துக்கொள்ளக் கூடாது என ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி இணைய வேண்டுமாயின் அணியாகவோ கட்சியாகவே இணைத்துக்கொள்ளப்பட கூடாது எனவும் அனைவரும் தனித்தனியாக ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தில் இணைய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைத்துக்கொள்ள வேண்டுமாயின் 5 முதல் 7 பேரை மட்டுமே இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசியலமைப்புச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களை தவிர வேறு அமைச்சுக்களை வழங்குவதில்லை எனவும், ஜனாதிபதி ஏற்கனவே வர்த்தமானியை வெளியிட்டு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள நிறுவனங்களை அவரிடம் இருந்து பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

19வது அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்ளலாம். ஏனைய அமைச்சுக்கள் அமைச்சரவைக்கு வழங்கப்பட வேண்டும்.

இதனை புதிய அரசாங்கம் தேசிய அரசாங்கம் அல்லது என்பதால், அமைச்சரவையின் எண்ணிக்கை 30 ஆக இருக்க வேண்டும் ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களின் எண்ணிகை 45 ஆக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

ஆறு முறை கருச்சிதைவான பெண்ணுக்கு குரங்கால் நடந்த அற்புதம்!!

 

பெண்ணுக்கு குரங்கால் நடந்த அற்புதம்

ஆறு முறை கருச்சிதைவான ஒரு பெண்ணின் வயிற்றை குரங்கு ஒன்று முத்தமிட்டதால் அவருக்கு நல்லபடியாக குழந்தை பிறந்த அற்புத சம்பவம் ஒன்று பிரித்தானியாவில் நடைபெற்றுள்ளது.

பிரித்தானியப் பெண்ணான Nina Marston ஆறு முறை கருவுற்றும், ஆறு முறையும் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டு விட்டது. இதனால் வருத்தத்துடன் இருந்த Nina Colchester ஏழாவது முறையாக தான் கருவுற்றபோது விலங்குக் காட்சியகத்திலுள்ள ஒராங்குட்டான் வகை குரங்கான Rajangஐச் சந்தித்தார்.

2015ஆம் ஆண்டு, Rajang, Masie Knight என்னும் பெண்ணின் மேடிட்ட வயிற்றைக் கண்டதும் அதைப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியது. அதிலிருந்து எந்த கர்ப்பிணிப்பெண் வந்தாலும், அவர்களிடம் மிகுந்த ஆர்வம் காட்டுவது Rajangஇன் வழக்கம்.

விலங்குக் காட்சியகத்திற்கு சென்ற Nina தனது சட்டையை உயர்த்தி தனது வயிற்றை Rajangஇடம் காட்டினார். ஆச்சரியப்படும் விதமாக அவர் அருகில் வந்த Rajang, Ninaவின் வயிற்றில் நீண்ட நேரம் முத்தமிட்டது.

பின்னர் Nina அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். நேற்று Rajang என்னும் அந்த அற்புதக் குரங்கு மரணமடையவே, அந்த சம்பவம் குறித்து நினைவுகூறும் Nina, நான் Rajangஐப் பார்ப்பதற்காக நீண்ட வரிசயில் நின்றேன்.

நான் அருகில் வந்து எனது சட்டையை உயர்த்திக் காட்டவும் Rajang என் வயிற்றில் பெரிய முத்தம் ஒன்றைப் பதித்தது, நான் அழுது விட்டேன் என்கிறார்.

Rajang அப்படி செய்யாமல் இருந்திருந்தால் நான் வாழ்க்கையே வெறுத்துப் போயிருப்பேன் என்று கூறும் Nina, நான் கர்ப்பமாக இருக்கும்போது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட விடயங்களில் அதுவும் ஒன்று என்கிறார்.

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் நாளை!!

வவுனியா பூந்தோட்டம் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் நாளை(16.12) நடைபெறவுள்ளது.

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் நாளையதினம் (16.12.2018) நாளை காலை 10 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பாடசாலையின் மேம்பாடு கருதி அனைத்து பழைய மாணவர்களயும் கலந்துகொள்ளுமாறு பழைய மாணவர் சங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கணவர் இறந்த 6 நாளில் மகளுடன் தற்கொலை செய்துகொண்ட தாய் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

 

மகளுடன் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் அருகே கணவர் இறந்த 6 நாட்களில் சோகம் தாளாமல் குழந்தையுடன் சேர்ந்து தாயும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கல்லடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ (வயது 35). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாக ரெட்டணை கிராமத்தை சேர்ந்த புவனேஸ்வரி (27) என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இந்த தம்பதியினருக்கு 4 வயதில் விஷாலி என்ற மகள் இருந்தாள். கடந்த சில மாதங்களாகவே குடும்ப பிரச்னை காரணமாக தம்பதியினர் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராஜு, 8ம் தேதியன்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அன்றிலிருந்தே மனவருத்தத்துடன் சோகமாக இருந்த புவனேஸ்வரி, தனக்கு இனி யாரும் ஆதரவு இல்லை என பக்கத்து வீட்டர்களிடம் புலம்பியுள்ளார்.

இந்த நிலையில் ராஜூவிற்கு கரும காரியங்கள் செய்யவேண்டியிருந்ததால், புவனேஸ்வரியை அதிகாலையிலிருந்தே உறவினர்கள் தேடியுள்ளனர். குழந்தையும் காணாமல் போயிருந்ததால், சந்தேகமடைந்த உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் பொலிஸாரும் தேடுதல் வேட்டை நடத்த ஆரம்பித்தனர். இதற்கிடையில் அதே கிரமத்தை சேர்ந்த பூங்காவனம் என்பவர் தன்னுடைய விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்றிருக்கிறார். அங்கு கிணற்றை எட்டிப்பார்த்த போது, உள்ளே புவனேஸ்வரி மற்றும் அவருடைய மகள் விஷாலி சடலமாக மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக பொலிஸார் மற்றும் புவனேஸ்வரியின் உறவினர்களுக்கு அவர் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து விரைந்து வந்த பொலிஸார் உள்ளூர் இளைஞர்களின் உதவியுடன் இருவரின் உடல்களையும் வெளியில் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் இறந்த 6 நாட்களே ஆகியிருந்த நிலையில், துக்கம் தாளாமல் மனைவியும் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.