வவுனியாவில் சூட்சுமமான முறையில் கஞ்சா கடத்தல் : பொலிசாரால் குடும்பஸ்தர் கைது!!

 

கஞ்சா கடத்தல்

முச்சக்கர வண்டியில் சூட்சுமமாக மேற்கொள்ளப்பட்ட கஞ்சா கடத்தல் நடவடிக்கை ஓமந்தை பொலிசாரால் முறியடிக்கப்பட்டுள்ளதுடன், குடும்பஸ்தர் ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து கற்பிட்டி நோக்கி குடும்பம் ஓன்றுடன் பயணித்த முச்சக்கர வண்டி ஓன்றை ஓமந்தை, இறம்பைக்குளம் பகுதியில் மறுத்து பொலிசார் சோதனை செய்த போது இருக்கையின் உள்ளே சூட்சுமமான முறையில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த சாரதி கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து ஓரு கிலோ 770 கிராம் கஞ்சா மீட்கப்பட்டது. மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த ஓரு வாரத்தில் சொகுசுக் கார் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா கடத்தல் நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டுள்ளதுடன், 8 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் ஓமந்தை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பாவற்குளத்தினை அண்டிய பகுதியில் வெள்ளப் பெருக்கிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான ஒத்திகை!!

மக்களை பாதுகாப்பதற்கான ஒத்திகை

வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரால் இன்று (06.12.2018) காலை 8.30 மணி தொடக்கம் 11.30 மணிவரை பாவற்குளம் கிராமத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து அனர்த்தம் ஏற்பட்டால் எவ்வாறு மக்களை பாதுகாப்பாக கிராமத்திலிருந்து வெளியேற்றுவது என அனர்த்த ஒத்திகை இடம்பெற்றது.

வவுனியா பாவற்குளம் நீர் நிரம்பிக்கொண்டிருக்கும் நிலையில் திடீரென குளம் உடைப்பெடுத்தால் குளத்தின் நீர் செல்லும் பகுதிகளை அண்டியுள்ள கிராமங்களான, பாவக்குளம் படிவம் 01, 04, 05, 06, சூடுவெந்தபுலவு, ஆண்டியாபுளியங்குளம், கந்தசாமிநகர் போன்ற கிராமங்களிலிருந்து மக்களை எவ்வாறு பாதுகாப்பாக வெளியேற்றி முகாம்களில் தங்கவைத்து பராமரிப்பது என்பது தொடர்பான அனர்த்த ஒத்திகை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஐ.கனீபாவின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றது.

இப்பாரிய ஒத்திகையின் போது ஏழு கிராமங்களை சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு பொது மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டு பராமரிப்பு மற்றும் முதலுதவி, மருத்துவ ஒத்திகைகள் செய்யப்பட்டதுடன், கிராமங்களிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் உதவிகளை மேற்கொண்டனர்.

இவ் ஒத்திகை நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை மருத்துவ உத்தியோகத்தர்கள், தாதியர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பெற்ற குழந்தையை கொடூரமாக கொலை செய்த தாய் : அதிர்ச்சிக் காரணம்!!

 

குழந்தையை  கொலை செய்த தாய்

தமிழகத்தில் இரண்டு திருமணம் செய்த பெண் தனது குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளித்தலையை சேர்ந்த தம்பதி தங்கதுரை- ரம்யா. இருவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் அனுதினமும் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு வந்தது.

இதற்கு காரணம் பக்கத்து வீட்டில் வசித்து வந்த மணிமாறன் என்பவரை ரம்யா காதலித்தது தான். இருவரும் நெருங்கி பழகிய நிலையில் கர்ப்பமான ரம்யா குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் தங்கதுரையுடன் சண்டை அதிகமான நிலையில் அவரை பிரிந்து மணிமாறனை திருமணம் செய்த ரம்யா இரண்டாவது கணவர் மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் அந்த குழந்தையை பார்க்கும்போதெல்லாம் இந்த குழந்தை எனக்கு பிறந்ததில்லை. உனக்கு நான் 2-வது கணவன் தானே, இன்னமும் நீ நிறைய பேரை கல்யாணம் செய்திருப்பாய் என கூறி ரம்யாவுடன் மணிமாறன் சண்டை போட்டு வந்தார். இதையடுத்து மீண்டும் முதல் கணவனிடம் தஞ்சம் அடைய ரம்யா சென்ற நிலையில் அவர் ஏற்று கொள்ளவில்லை.

இது எல்லாவற்றுக்கும் காரணம் குழந்தை தானே என ஆத்திரமடைந்த ரம்யா தனது குழந்தையை காலால் மிதித்தும் கயிற்றால் இறுக்கியும் கொன்றிருக்கிறார். மேலும் மண்ணெண்ணெயை குடித்து தற்கொலைக்கும் முயன்றிருக்கிறார்.

ஆனால் அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ரம்யாவை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவலறிந்த பொலிசார் விரைந்து வந்து குழந்தையின் சடலத்தை கைப்பற்றி விட்டு ரம்யாவின் இரண்டு கணவர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

3 வயது குழந்தையை காலால் மிதித்தே கொன்ற கொடூர தாயார் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

 

அதிர்ச்சிக் காரணம்

தமிழகத்தின் குளித்தலை அருகே தாயார் ஒருவர் தன் மகளை கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ரம்யா. இவருக்கும் கொளக்குடியை சேர்ந்த தங்கத்துரை என்பவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு மேலாகிறது.

இருவரும் அதே பகுதியில் விவசாயக்கூலி வேளை செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்தச் சூழலில் திருமண முடிந்த ஓராண்டிற்கு பிறகு ரம்யா தன் கணவருடன் அடிக்கடி பிரச்னையில் ஈடுபட்டதாக கூறுகின்றனர். இதனைத்தொடர்ந்து கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக தன் குழந்தை வேதவர்சினியுடன்(3) தாய் வீடான பரளியில் வசித்து வந்தார்.

இந்நிலையில் குடியிருப்பில் யாரும் இல்லாத நிலையில் வீட்டை பூட்டிக்கொண்டு தன் மகள் வேதவர்சினியை காலால் மிதித்து கொன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் குளித்தலை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த குளித்தலை காவல்துறையினர் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது குழந்தை வேதவர்சினி இறந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது.

தாய் ரம்யா ஓராமாக அமர்ந்திருந்துள்ளார். குழந்தையை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு காவல்துறையினர் அனுப்பிவைத்தனர். பின் ரம்யாவை கைது செய்த பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலி இறந்த சோகத்தில் பைத்தியமாக திரிந்த காதலன் : இறுதியில் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

 

பைத்தியமாக திரிந்த காதலன்

திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காத நிலையில் காதலி தற்கொலை செய்துகொண்டதால், துக்கம் தாங்காமல் காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரைச் சேர்ந்தவர் 21 வயதான ஹேமந்த். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக சென்னையில் பணியாற்றி வந்துள்ளார். சென்னையில் தங்கி வேலை பார்த்த போது மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டினா(19) என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.

தங்களது காதல் தொடர்பாக இருவரும் பெற்றோர்களிடம் தெரிவிக்க திருமணத்திற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த கிறிஸ்டினா, கடந்த 28 ஆம் திகதி சென்னை மதுரவாயல் பகுதியில் தற்கொலை செய்து கொண்டார்.

காதலி தற்கொலை செய்து கொண்டதிலிருந்து கடந்த 3 நாட்களாக மனவருத்தத்தில் இருந்து வந்த ஹேமந்த் புதுச்சேரியில் உள்ள தனது குடியிருப்பில்வ் செவ்வாய்க்கிழமை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹேமந்த் தற்கொலை சம்பவம் தொடர்பில் ரெட்டியார்பாளையம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வரலாற்றில் முதல் முறையாக 280 கோடி பெறுமதியான போதைப்பொருள் பிடிபட்டது!!

 

231 கிலோ 54 கிராம் பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பலப்பிட்டிய மற்றும் பேருவளை கடற்பிரதேசத்தில் நேற்றிரவு மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி இரண்டாயிரத்து 778 மில்லியன் ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பேருவளையைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய ஹெரோயின் போதைப்பொருள் இதுவாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் சூழ்நிலையால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை!!

சர்வதேச பொருளாதார குறிகாட்டியான பிட்ச் தரப்படுத்தலின்படி இலங்கையின் பல வங்கிகளின் மதிப்பு கீழிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு அமைய தேசிய சேமிப்பு வங்கி பி பிளஸ் தரத்தில் இருந்த பி தரத்துக்கு குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கை வங்கி, பி பிளஸ் தரத்தில் இருந்து பி தரத்துக்கு குறைக்கப்பட்டுள்ளது.

டிஎப்சிசி வங்கியின் தரம் பி பிளஸில் இருந்து பி தரத்துக்கு குறைக்கப்பட்டுள்ளது. பீப்பல் லீசிங்கின் தரம் பி யில் இருந்து பி மைனஸாக குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாகவே இந்த தரக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நீண்டகால மற்றும் குறுங்கால வெளிநாட்டு நாணய மதிப்புக்களும் குறைந்துள்ளன.

மீண்டும் மந்திரக் கோலுடன் மஹிந்த : பரபரப்பாகும் கொழும்பு!!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் தனது மந்திர கோலை கையில் எடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் அவரது கையில் எப்போதும் மந்திர கோல் ஒன்று இருக்கும்

அந்தக் காலப்பகுதியில் மந்திர கோல் மிகவும் பிரபலமான ஒன்றாக பேசப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் பிரதமராக மஹிந்த நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் தனது மந்திர கோலை மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.

இது பயன்படுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

கேளராவிலுள்ள மந்திரவாதிகளால் இந்த மந்திர கோல் விசேடமாக தயாரிக்கப்பட்டு மஹிந்தவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு காரியத்தையும் வெற்றி பெறச் செய்வதே இதன் நோக்கம் என முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன.

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமராக மஹிந்த தொடர்ந்து செயற்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளன.

இந்நிலையில் மஹிந்த மந்திர கோலுடன் வலம் வர ஆரம்பித்துள்ளார் என கொழும்பிலுள்ள அரசியல்வாதிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை அலரி மாளிகைக்குள் இந்திய மந்திரவாதிகள் பூஜை நடத்தி வருவதாக நேற்று தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

மன்னாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள மனித எலும்புக் கூடு : அச்சத்தில் உறவினர்கள்!!

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியானது 112 ஆவது நாளாக இன்று சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்றது.

இதுவரை மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான பல ஊகங்களை உண்மையாக்கும் வகையில் இன்றைய தினம் மனித எலும்புக்கூடு ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் அளவில் இரண்டு கால்களும் இரும்பு கம்பியால் இறுக கட்டப்பட்ட நிலையில் இரண்டு வித்தியசமான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது ஒட்டு மொத்த மக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுவரை நாட்களும் மனிதப் புதைகுழி தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்ட போதும் குறித்த மனித புதைகுழியில் காணப்படும் மனித எலும்புக்கூடுகள் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளாக இருக்கலாம் என காணாமல் போன உறவுகளின் பெற்றோர் அச்சம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று கண்டு பிடிக்கப்பட்ட இரும்பு கம்பியால் கட்டப்பட்ட மனித எச்சம் என்னும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த வாரத்தில் மனிதப் புதைகுழியில் இருந்து பெண் ஒருவரின் மோதிரம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மற்றும் தடையப் பொருட்களும் மீட்கப்பட்டு வருகின்றன.

இதுவரை மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து 256 முழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 250 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நொச்சிமோட்டையில் இரண்டு கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் இன்று (06.12.2018) அதிகாலை 12.05 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து பதுளை நோக்கி பேரூந்தில் கேரள கஞ்சாவினை கடத்தி செல்வதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நொச்சிமோட்டை பாலத்தடியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இரண்டு கிலோ கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கேரள கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பதுளை மாவட்டத்தினை சேர்ந்த 33 வயதுடைய நபரொருவரை பொலிஸார் கைது செய்ததுடன் கைப்பற்றிய கேரள கஞ்சாவினையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வு!!

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளது.

எதிர்வரும் 12ம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது, ஐக்கிய தேசிய கட்சி இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றவுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக கூறிவரும் நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இவ்வாறான நம்பிக்கைத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதில்லை. ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அது இலங்கை வரலாற்றில் இடம்பெறும் முதல் நிகழ்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நாம் போட்ட பிச்சையில் வந்த மைத்திரி : ஆட்டம் விரைவில் அடங்கும் : ரணில் சாட்டையடி!!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிச்சையில் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வாதிகார ஆட்டம் போடுகின்றார். அவரின் இந்த ஆட்டம் விரைவில் அடங்கும என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் கையொப்பமிட்டுக் கொடுத்தாலும் பிரதமர் பதவியை எனக்கு வழங்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரி இறுமாப்புடன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் போட்ட பிச்சையால் ஜனாதிபதியான அவர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக சத்தியம் வழங்கினார். எனினும், அந்தச் சத்தியத்தை – வாக்குறுதியை நிறைவேற்றாமல் அவர் செயற்படுகின்றார்.

என்னால் நாடு சீரழிந்தது என்று வாய்கூசாமல் ஜனாதிபதி கூறுகின்றார். உண்மையில் யாரால் நாடு சீரழிந்து போகின்றது என்பது பாமர மக்களுக்குக்கூடத் தெரியும்.

என்னை விமர்சிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிக்கு எந்த அருகதையும் இல்லை என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றேன்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டவருடன் கைகோர்த்து அவருக்கு சட்டவிரோதமான முறையில் பிரதமர் பதவியை வழங்கி நாட்டின் நற்பெயரை ஜனாதிபதி கெடுத்துவிட்டார்.

அவர் நியமித்த போலிப் பிரதமரும் போலி அமைச்சர்களும் நீதிமன்றத்தின் தீர்ப்பால் முகவரியற்றுப் போய்விட்டார்கள்.

இறுதியில் ஜனநாயகமே வெல்லும். சர்வாதிகாரம் பொசுங்கிப் போகும். ஜனாதிபதியின் சர்வாதிகார ஆட்டமும் விரைவில் அடங்கும். இது உறுதி.

நாம் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறுவோம். நாட்டை முன்னேற்றுவோம். மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் வீதிக்கு வந்த முதலையால் பதற்றம்!!

 

வீதிக்கு வந்த முதலை

வவுனியா,நெளுக்குளம் பகுதியில் வீதிக்கு வந்த 12 அடி நீளமான முதலையால் இன்று காலை பதற்ற நிலை ஏற்பட்டது.

வவுனியா, நெளுக்குளம் பகுதியில் வசிக்கும் மக்கள் காலை வீதியில் பயணித்த போது 12 அடி நீளமான முதலை ஓன்றை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து பதற்றமடைந்த மக்கள் முதலையை விரட்ட அவ்விடத்தில் கூடிய போது முதலை வீதியோரத்தில் இருந்த சிறிய பற்றைக்குள் புகுந்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஊர்மக்கள் பொலிசாருக்கு கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை வந்த நெளுக்குளம் பொலிசார், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை வரவழைத்தனர். அவர்கள் முதலையை மீட்டு பாதுகாப்பான இடத்தில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர்.

வவுனியா பழைய பேரூந்து நிலையம் நாளை முதல் மீளத்திறப்பு!!

 

பழைய பேரூந்து நிலையம்

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. என்.டக்ளஸ் தேவானந்தாவின் ஒழுங்கமைப்பில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாக நாளை(07.12) முதல் வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் சகல பேருந்துகளும் வந்து செல்வதற்கு இன்று (06.12.2018) காலை ஆளுநர் தலைமையில் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக வவுனியா வர்த்தக சங்கத்தினர் தெரிவித்தனர்.

இன்று ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் குறித்து வவுனியா வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ்.சுஜன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வவுனியா பழைய பேருந்து நிலையத்தினை மீளத்திறப்பது குறித்து பல தரப்பினர் வர்த்தகர் சங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து பல கலந்துரையாடல்கள் வவுனியா வர்த்தகர் சங்கத்தினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

இந் நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வவுனியா வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ்.சுஜன், செயலாளர் ஆ.அம்பிகைபாகன், உறுப்பினர் கே.கிருஸ்ணமூர்த்தி, மேலதிக அரசாங்க அதிபர் ரி.திரேஸ்குமார், வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மஹிந்த வில்லுவராச்சி, வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம் எஸ். எம்.தென்னக்கோன், வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர், வவுனியா இ.போ.ச சாலை முகாமையாளர்,

வடமாகாண தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், உள்ளுராட்சி ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்ட கலந்துரையாடலில் வவுனியா பழைய பேருந்து நிலையத்தினை மீளத்திறப்பது குறித்து இதன் போது முடிவு எட்டப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தினை மீளத்திறப்பது குறித்து அனைத்துத் தரப்பினரிடமும் இணக்கம் ஏற்பட்டுள்ளதுடன் இதனையடுத்து நாளை முதல் இதை நடைமுறைப்படுத்துவதற்கு ஆளுநர் முடிவு மேற்கொண்டு தொடர்புபட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் நாளைய தினத்திலிருந்து சகல பேருந்துச் சேவைகளும் பழைய பேருந்து நிலையத்தினூடாக வந்து செல்வதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர் சங்கத்தின் தலைவர் எஸ்.சுஜன் மேலும் தெரிவித்தார்.

இதே வேளை கடந்த ஜனவரி முதலாம் திகதியிலிருந்து புதிய பேருந்து நிலையத்தில் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்து சேவைகளும் மேற்கொண்டுள்ளதால் பழைய பேருந்து நிலையம் வெறிச்சோடிக்காணப்படுகின்றது.  இதனால் பாடசாலை மாணவர்கள்,
பொதுமக்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், தொழில்புரியும் இளைஞர்கள், யுவதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அத்துடன் பழைய பேருந்து நிலையத்திலிருந்த வர்த்தக நிலையங்களில் வியாபார நடவடிக்கை இன்றி ஐந்திற்கும் மேற்பட்ட வாத்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வட மாகாண ஆளுநருடன் வர்த்தகர் சங்கத்தின் பெரு முயற்சியினால் இடம்பெற்ற கலந்துரையாடலில் பழைய பேருந்து நிலையத்தினை மீளத்திறந்து சகல பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதற்கு இணக்கம் ஏற்பட்டு வடமாகாண ஆளுநரினால் நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த பிரதமர் யார்? இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்!!

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் பிரதமர் ஒருவரை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமரை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அதன் பங்காளி கட்சிகள் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்.

ஜனாதிபதியின் கருத்தை நிராகரிக்கும் ரணில் தானே பிரதமராக தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறார்.

ரணில் விக்ரமசிங்கவின் பிடிவாதம் காரணமாக ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஒன்றை உருவாக்கு சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ள நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

பிரதமர் வேட்பாளரை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரபலங்களுக்கு இடையில் நீண்ட கலந்துரையாடல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இரகசிய வாக்கெடுப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் 80 பேர் மாத்திரம் கலந்து கொள்ளவுள்ளனர்.

பிரதமரை பெயரிடுவதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் தெளிவான பதில் ஒன்றை பெற்றுக் கொள்ள முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரபலங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ வெளியிட்ட கருத்துக்களுக்கு அதிக பாராட்டுக்கள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

பிரதமராவதில் ரணிலுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் : ஆதரவு வழங்க ஆறு பேர் மறுப்பு!!

ரணில் விக்ரமசிங்க பிரதமராவதற்கு மக்கள் விடுதலை முன்னணியில் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருபோதும் ஆதரவு வழங்கப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் ரணில் விக்ரமசிங்க மற்றும் மகிந்த ராஜபக்சவுக்கு இடையில் சந்திப்பு இடம்பெறுவதை நாம் அவதானிக்கின்றோம்.

எதிர்காலத்தில் வழக்குகளில் இருந்து காப்பாற்றுகின்றேன். அதனால் பிரதமர் பதவியை வழங்குமாறு ரணில் விக்ரமசிங்க கூற முற்படுகின்றார்.

எனினும், அரசுக்கு எதிராக எவரும் சூழ்ச்சிகளில் ஈடுபடமுடியாது. சூழ்ச்சிகளை முறியடிக்கவே நாம் இருக்கின்றோம். 122 பேர் தனக்கு ஆதரவு வழங்குவதகாக ரணில் கூறுகின்றார்.

அதனால் பிரதமராக வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார். எனினும், ரணிலுக்கு 122 பேர் ஆதரவு வழங்கவில்லை. நாடாளுமன்றில் இதுவரை 122 அல்லது 123 பேர் வாக்களித்துள்ளனர்.

அது சூழ்ச்சிகளை முறியடிப்பதற்காக வழங்கப்பட்ட வாக்குகளாகும். அது ரணிலை பிரதமராக்குவதங்கு வழங்கப்பட்ட வாக்குகள் அல்ல. ஏனைய கட்சிகளுடன் இணைந்து 113 பேரின் ஆதரவை பெற்றுக்கொள்வாரா என்பது எமக்கு தெரியாது.

எவ்வாறாயினும், ரணில் பிரதமராகுவதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருபோது உதவ மாட்டோம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.