வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜ்புரம், ஊஞ்சல்கட்டு , நெடுங்கேனி பகுதியில் நேற்று (30.11.2018) மதியம் 3.15 மணியளவில் கிணற்றிலிருந்து 8 மாத குழந்தையொன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்
குறித்த குழந்தையின் தயார் அவரது மூத்த பிள்ளையுடன் காட்டிற்கு விறகு எடுப்பதற்காக குழந்தையினை அவரது மாமியின் அரவணைப்பில் விட்டுச் சென்றுள்ளனர்.
மாலை வீடு திரும்பிய தயார் குழந்தையினை தேடிய சமயத்தில் குழந்தையினை காணவில்லை . வீடு முழுவதும் சுற்றிப்பார்த்து விட்டு கிணற்றிக்கு அருகே சென்று பார்வையிட்ட சமயத்தில் குழந்தை கிணற்றில் சடலமாக மிதந்துள்ளது.
இதனையடுத்து புளியங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணை முன்னேடுத்தனர்.
மாமியின் அரவணைப்பில் குழந்தை இருந்த சமயத்தில் மாமி குழந்தையினை ஊஞ்சலில் போட்டு ஊஞ்சலுடன் கிணற்றில் தூக்கி ஏறிந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்தமையினையடுத்து 75வயதுடைய குறித்த பெண் நபரை (மாமி) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என அயலவர்கள் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் முன்னேடுத்து வருவதுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபையில் உறுப்பினர்களினால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் அனைத்தும் தீர்மானங்களாக முன்மொழியப்பட்டும் வழிமொழியப்பட்டும் வருகின்றனவே தவிர அதனை நிறைவேற்றுவதற்குரிய எவ்விதமான நடவடிக்கையும் இடம்பெறுவதில்லை இவ்விடயத்தில் தலைவர் ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நேற்று இடம்பெற்ற 8ஆவது நகரசபை அமர்வின்போது அகில இங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நகரசபை உறுப்பினர் ஆர். எம். லரீப் தெரிவித்துள்ளார்.
.
மேலும் உயரிய சபையில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதில் தாமதங்கள் ஏற்படுகின்றன. பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் காட்டி வருகின்றனர்.
இவ்விடயத்தில் நகரசபை தலைவர் உடனடியாக தலையிட்டு அத் தீர்மானங்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சபையில் தெரிவித்துள்ளார்.
உதாரணமாக பள்ளிவாசல் முன்பாக அமைக்கப்பட்டுள்ள வியாபார நிலையம், மடுவத்திற்கு சி.சி.ரி கமரா பொருத்துதல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் பெரும்பான்மையான தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதிலும் இன்றுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
சபையில் அனுமதி பெறப்பட்டபோதிலும் பல விடயங்களில் ஒன்றும் நிறைவேற்றப்படவில்லை என்றுநகரசபை உறுப்பினர் ஆர். எம். லரீப் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு சகல பேருந்துகளும் வந்து தமது சேவைகளை மேற்கொள்வதற்கு வடமாகாண ஆளுனருடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டவுள்ளதாக வவுனியா வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ்.சுஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து வர்த்தகர் சங்கத்தலைவர் மேலும் தெரிவிக்கும்போது,
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் உள்ளுர், வெளியூர் பேருந்து சேவைகள் இடம்பெறாமையால் வர்த்தகர்கள், பாடசாலை மாணவர்கள், பொது மக்கள், பல சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் இதற்கு சுமூகமான தீர்வு ஒன்றினை பெற்றுத்தருமாறு பொது அமைப்புக்கள், கிராம அபிவிருத்திச்சங்கம், பாடசாலைச் சமூகத்தினர் கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தனர்.
இக்கோரிக்கைக்கு அமைவாகவும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கும் வவுனியா வர்த்தகர் சங்கத்தின் முயற்சியினால் புதிதாக திருத்தி அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடத்தினூடாக வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு சகல பேருந்துகள் வந்து செல்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கடந்த 24.11.2018 அன்று வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தோம்.
இதன்போது வவுனியா பேருந்து நிலையத்திலுள்ள நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இதையடுத்து அமைச்சர் தொலைபேசியூடாக வடமாகாண ஆளுனருடன் தொடர்பினை ஏற்படுத்தி வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை 03.12.2018 வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகளும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுனர் ஆகிய முற்தரப்பினருடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு சுமூகமான தீர்வு ஒன்றினை பெற்றுத்தருவதாக மேலும் தெரிவித்துள்ளார்.
இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அவர்களின் இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்த இரு துப்பாக்கிகளையும் கொலையாளிகள் எடுத்துச்சென்றுள்ளதாகவும் விசாரணைகளின் போது வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிஸார் இருவரையும் இனந்தெரியாதோர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு அவர்களிடம் இருந்த இரு கைத்துப்பாக்கிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். கல்முனை நீலாவணையைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் தினேஸ் மற்றும் காலியைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இருவரும் வலையிறவு பாலத்திற்கு அருகில் இருக்கும் பொலிஸ் வீதிச் சோதனைச் சாவடிக்கு வழமைபோல் சம்பவதினமான நேற்று வியாழக்கிழமை இரவு கடமைக்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சோதனைச் சாவடிக்கு இன்று காலையில் கடமைக்கு சென்ற பொலிஸார் , துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் குறித்த இரு பொலிஸாரும் சடலமாக இருப்பதை கண்டுள்ளனர். இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தபோது அவர்களை சுட்டு கொலைக் செய்துவிட்டு அவர்களிடம் இருந்த இரு துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றுள்ளததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி றிஸ்வி எம்.ஜ.என் றிஸ்வி சென்று சடலங்களை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்குட்படுத்துமாறு உத்தரவிட்டதையடுத்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வவுணதீவு பொலிஸார் மற்றும் புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரிக்க விஷேட குழுவொன்று மட்டக்களப்புக்கு கொழும்பிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விஷேட குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய குறித்த குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
உலக்கோப்பை கால்பந்து போட்டியின் போது, இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் தரையில் மயங்கி விழுந்த பெண் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் நடந்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ரோசினா வார்பர்டன் (34) என்ற பெண் ஜூலை மாதம் 3ம் தேதி கொலம்பியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கால்பந்து போட்டியை தன்னுடைய வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து பார்த்து கொண்டிருந்துள்ளார்.
ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் 3-3 கோல்கள் அடித்து சமநிலையில் இருந்ததால், பெனால்டி வாய்ப்பை பெற்றனர். அதில் ஒரு கோல் அடித்து இங்கிலாந்து அணி காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதனை ரோசினா, அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடி கொண்டிருந்துள்ளார். திடீரென அங்கு குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டுள்ளது. உடனே திரும்பி பார்த்த ராபர்ட் மோர்லி குழந்தையின் மீது ரோசினா விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து குழந்தையை வெளியில் எடுத்துள்ளார்.
பின்னர் ரோசினாவை எழுப்ப முயன்றபோது எந்த உணர்வும் இன்றி கிடந்துள்ளார். மேலும் அவருடைய உதடு ஊதா நிறத்தில் மாறியுள்ளது. உடனே ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்த மோர்லி, ரோசினாவிற்கு முதலுதவி கொடுக்க ஆரம்பித்தார். 7 நிமிடம் கழித்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ரோசினாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை மேற்கொண்டனர்.
அதில் ரோசினாவிற்கு மூளைபகுதியில் ரத்த அழுத்தம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் ரோசினா அடுத்த இரு நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மோர்லி வேதனை தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலி, தனக்கு கிடைக்காத காரணத்தால் அவளை கொலை செய்தேன் என காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ரவீந்திரன் மற்றும் மெர்சி ஆகிய இருவரும் ஒரு ஜவுளிக்கடையில் ஒன்றாக வேலை பார்த்து வந்தபோது நட்பாக பழகியுள்ளனர். நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதற்கிடையில் தனக்கு வேலை பிடிக்காத காரணத்தால், ரவீந்திரன் வேலையை விட்டு நின்றார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பேருந்து நிலையத்திற்கு எதிரே ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மெர்சி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது காதலன் ரவீந்திரனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
பொலிசில் ரவீந்திரன் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் மெர்சியை தீவிரமாக காதலிக்க ஆரம்பித்தேன். அவளும் என்னை காதலித்தாள். எனக்கு வேலை பிடிக்காததால் திடீரென வேலையை விட்டு நின்று விட்டேன். அதன் பிறகு வேலைக்கு எதுவும் நான் செல்லவில்லை. ஆனாலும் நாங்கள் இருவரும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்தோம்.
கடந்த சில வாரங்களாக என்னுடன் பேசுவதை மெர்சி தவிர்த்து வந்தாள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மெர்சியை எனது வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். எனது அப்பா, அம்மாவிடம் அவளை அறிமுகம் செய்து வைத்தேன்.
அவர்களுக்கும் மெர்சியை பிடித்துவிட்டது. பின்னர் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற மெர்சியிடம், திருமணத்தை பற்றி பேசினேன். ஆனால் அதற்கு அவள், எனக்கு திருமணத்தில் உடன்பாடு இல்லை. நட்பாக பழகுவோம் என்றாள்.
நேற்று முன்தினம் மெர்சிக்கு போன் செய்து வெளியே அழைத்தேன். அவளும் வந்து நின்றாள். அவளிடம் மீண்டும் திருமணத்தை பற்றி பேசினேன். ஆனால் அவள், எப்போதும் போல நட்பாக பழகுவோம் என்று கூறி திருமணத்துக்கு மறுத்தாள்.
இதனால் எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் எனக்கு கிடைக்காத மெர்சி, வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற ஆத்திரத்தில் நான் அவளை கத்தியால் குத்திக்கொன்றேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
வவுனியாவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 9 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் டி.விஜயபாலன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் உயர்ந்த மட்டத்தில் நீர் விநியோகிக்கும் வகையில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு திருத்த வேலைகள் நடைபெற்று வருகின்றது.
இதன்காரணமாக எதிர்வரும் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வவுனியா பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.
அந்த வகையில், காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரையிலான 9 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மும்பையில் திடீரென ரயில்முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற தாயை காப்பாற்ற சென்ற 16 வயது மகளும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பை ஜோகேஸ்வரி ரயில் நிலையத்தில், வேகமாக வந்து கொண்டிருந்த ரயில் முன் பெண் ஒருவர் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.
உடனே ஒரு சிறுமி தண்டவாளத்திற்குள் புகுந்து அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக இருவருமே தண்டவாளத்தில் சிக்கி கொண்டனர். வேகமாக வந்த ரயில் இருவரின் மீதும் மோதி சென்றது. இதனை பார்த்த ரயில்வே நிர்வாகம் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் தற்போது சிறுமி அபாய கட்டத்திலிருந்து வெளியே வந்துள்ளார். ஆனால் அவருடைய தாய் பலத்த காயங்களுடன் இன்னும் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது சுனிதா வித்ஹலே என்ற 38 வயது பெண், என்பதும் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டது அவருடைய மகள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் சுனிதா தன்னுடைய வலது கையினை இழந்துள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர்.
நீ ஆபாசமா நடித்ததால் தான், உனக்கு பட வாய்ப்புகள் வரவே இல்லை என்று சக நடிகர்கள் கேலி செய்ததாலேயே நடிகை ரியாமிகா தற்கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், எக்ஸ் வீடியாஸ், அகோரி போன்ற திரைப்படங்களில் நடித்த ஈரோட்டை சேர்ந்த நடிகை ரியாமிகா இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
முதல்கட்டமாக இந்த தற்கொலையில் சில காரணங்கள் கூறப்படுகின்றன. தான் நடித்த படம் ஒன்றில் ரியாமிகா ஆபாசமாக நடித்திருந்திருக்கிறார். இவ்வளவு ஆபாசமா நடித்ததால் தான் படவாய்ப்புகள் எதுவும் உனக்கு வரவில்லை என்று சக நடிகர்கள் கேலி செய்தார்களாம்.
அதற்கேற்றபடி, பட வாய்ப்புகளும் வராமல் போகவே ரியாமிகா மனம் நொந்து போய் உள்ளார். போதிய வருமானமும் இல்லை .
எங்கே போனாலும் தான் ஆபாசமாக நடித்ததை பற்றியே பேசி கிண்டல் செய்ததால் உச்சக்கட்ட விரக்திக்கு ரியாமிகா சென்றிருக்கலாம் என காரணங்கள் கூறப்படுகின்றன. மேலும் காதலன் தினேஷிடமும் அவருக்கு நிறைய மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கஜா புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் மூன்று நாட்களாக தங்கி தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் நடிகர் சூரி, அங்குள்ள மக்களின் நிலை குறித்து பேசியுள்ளார்.
தமிழ்நாட்டின் டெல்டா மாவாட்டங்களை கஜா புயல் புரட்டி போட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள மக்களுக்குக் கடந்த மூன்று நாள்களாக ஆறுதல் கூறி வருகிறார் நடிகர் சூரி. அவர் கூறுகையில், கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் இன்னும் முழுமையாக சீர்செய்யப்படவில்லை.
இந்தப் பகுதிகளைப் பார்ப்பதற்கே மிகவும் வேதனையாக இருக்கிறது. தஞ்சாவூரில் பல கிராமங்களைச் சுற்றி வந்துவிட்டேன். மிகப் பெரிய துயரத்துக்கு இந்த மக்கள் ஆளாகியிருக்கிறார்கள். ஊருக்குள் நுழையவே முடியவில்லை. இந்த மக்கள் மீண்டு வருவதற்கே பல வருடங்கள் ஆகும்.
ஒவ்வொருவரின் கதைகளையும் காதுகொடுத்துக் கேட்க முடியவில்லை. நான் வளர்த்த தென்னம்பிள்ளை, என்னைக் கைவிட்டுப் போயிருச்சு, இன்னும் சாகாம உக்காந்திருக்கோம்யா என மக்கள் கதறியழுகிறார்கள்.
தென்னை மரங்களை இழந்த ஒரு விவசாயி என்னிடம் பேசும்போது, `நான் கட்டியிருக்கிற இந்த வெள்ளை வேட்டிதான் கடைசின்னு நினைக்கிறேன். இனி இதைக் கட்டறதுக்கு எனக்கு லாயக்கில்லை என வேதனைப்பட்டார்.
நேற்று வரையில் முதலாளியாக இருந்தவர்களெல்லாம் இன்று தொழிலாளியாக மாறிவிட்டார்கள். அனைவரும் சமமாக இருப்பது நல்ல விடயம்தான். இப்படிப்பட்ட துயரம் மூலமாக, இந்த நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது என வேதனையுடன் கூறியுள்ளார்.
ஓமந்தை விளாத்திக்குளம் பகுதியில் இன்று அதிகாலை பிறந்த குழந்தை புதைக்கபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
கர்பிணியான தாய் குழந்தையை வீட்டிலேயே பிரசவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது குழந்தை உயிரிழந்த நிலையில் பிறந்தமையால் அதனை நிலத்தில் புதைத்திருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியபடுத்தபட்டதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் நிலத்தில் புதைக்கபட்டிருந்த குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளனர்.
மேலும் குழந்தையின் தந்தையை கைது செய்துள்ளதுடன் தாய் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதமர் பதவியை தாம் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என மஹிந்த ராஜபக்ச திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கு பற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தாம் பதவியை துறக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
பதவியை இராஜினாமா செய்வீர்களா? என சிலர் வினவி வருவதாகவும் அதற்கு வாய்ப்பு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் வழக்கு தீர்ப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கவனம் செலுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டினையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கொண்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இன்று நாடாளுமன்றத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இன்று முற்பகல் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று சந்தித்த பின்னர், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மைக் காலமாக வெள்ளிக்கிழமைகளில் முக்கிய முடிவுகளை எடுத்து வருவதால், இன்றைய தினமும் ஏதேனும் முக்கிய முடிவை எடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார். அதேபோல் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை கலைத்தார்.
மனைவியின் தவறான நடத்தை குறித்து தட்டி கேட்ட கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (46). இவருக்கும் சபீனா பானு (34) என்பவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
தற்போது வரை தம்பதிக்கு குழந்தை இல்லை. வேலைக்காக ஜாகிர் உசேன் வெளிநாடு சென்றிருந்த நிலையில் சபீனாவுக்கு எதிர்வீட்டில் இருந்த வாகன ஓட்டுநர் யுவராஜுடன் (29) கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்த நிலையில் இந்த சந்திப்பு அந்த பகுதி மக்களுக்கு தெரியவந்தது.
கடந்தாண்டு வெளிநாட்டிலிருந்து திரும்பிய ஜாகீரிடம், சபீனா-யுவராஜ் இருவரின் தனிமை சந்திப்பைப் பற்றி பகுதி மக்கள் கூறினர். ஆனால் மனைவி மீதுள்ள நம்பிக்கையால் அதை அவர் நம்பவில்லை.
ஒரு கட்டத்தில் இருவரும் தனிமையில் சந்திப்பது, நீண்ட நேரம் போனில் பேசிக்கொண்டிருப்பது போன்ற செய்கைகளால் ஜாகீருக்கு சந்தேகம் ஏற்பட, இவ்வளவு நேரம் யாருடன் போனில் பேசிக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்கத் தொடங்கினார். சபீனா அதை பொருட்படுத்தாமல் எப்போதும்போல தனது காதலைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
அதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நீடித்து வந்திருக்கிறது. இந்நிலையில் நேற்றும் இது தொடர்பாக சண்டை ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சபீனா, கணவர் ஜாகீர் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தியுள்ளார். இதையடுத்து வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் ஜாகீர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பொலிசார் சபீனா மற்றும் அவரது காதலன் யுவராஜை கைது செய்துள்ளனர்.
ஏலியன் போன்ற உருவம் கொண்ட விசித்திர உயிரினம் ஒன்று காட்டுப்பகுதியில் சுற்றித் திரிந்ததால், அது தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது இருக்கும் உலகில் வானில் விசித்திரமாக ஏதேனும் பறந்தால், அது ஏலியனகாத் தான் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகின்றன.
அது ஏன் விமானிகள் கூட, வானில் செல்லும் போது, தங்கள் விமானத்தை திடீரென்று ஏதோ ஒன்று அதிவேகமாக கடந்து சென்றது. அது வேற்றுகிரகாவசிகளா? என்பது எங்களுக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
இந்தியாவில் இருக்கும் ஆந்திரா மாநிலத்தில் விசித்திரமான உயிரினம் காட்டுப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளது. அதன் தலையை பார்க்கும் போது ஏலியன் போன்று இருக்கிறது. ஆனால் அதன் உடலமைப்பை பார்த்தால் விலங்கு போன்று இருக்கிறது.
உண்மையில் இது விலங்குதானா? எங்கிருந்தது? இப்படி ஒரு உயிரனத்தை இதுவரை பார்த்ததே இல்லையே என்றும், ஒரு சிலர் இது ஏலியன் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இதைக் கண்டால் மிகவும் பயமாக இருக்கிறது என்றும் கூறி வருகின்றனர்.
சென்னையில் நடிகை ரியாமிகா தற்கொலை செய்த நிலையில் அவரின் இம்முடிவுக்கு மூன்று காரணங்கள் இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். வளசரவாக்கம் பகுதியில் வசித்து வந்த நடிகை ரியாமிகா குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், எக்ஸ் வீடியோஸ், அகோரி ஆகிய 3 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நடத்தப்பட்ட பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின பொலிசார் கூறுகையில், ரியாமிகாவுடன் உறவினர் பிரகாஷும் உடன் தங்கியிருந்தார்.
ரியாமிகா, தினேஷ் என்பவரை காதலித்துவந்துள்ளார். இந்நிலையில், படவாய்ப்பே இல்லாததால் ரியாமிகா, சில மாதங்களாக மனவருத்தத்தில் இருந்துவந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு தினேஷுக்கு போன் செய்து உடனடியாக வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். நேரமாகிவிட்டதால் காலையில் வருகிறேன் என்று தினேஷ் கூறியுள்ளார். அதன்பிறகு பிரகாஷுக்கும் ரியாமிகாவுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, தன்னுடைய அறைக்கு ரியாமிகா சென்றுவிட்டார்.
காலையில் கண்விழித்த அவர் அறையிலிருந்து வெளியில் வந்துள்ளார். அதன்பிறகு மீண்டும் அறைக்குச் சென்று தூங்கிவிட்டார். அப்போது, தினேஷ் வீட்டுக்கு வந்துள்ளார். தினேஷும் பிரகாஷும் சமையல் செய்துள்ளனர். அதன்பிறகு சாப்பிடுவதற்காக ரியாமிகாவை எழுப்ப அறைக்குச் சென்ற போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளது.
இதனால், பின்பக்க ஜன்னல் வழியாக அவர்கள் அறையை எட்டிப்பார்த்துள்ளனர். அப்போதுதான் ரியாமிகா தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்துள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக நாங்கள் சென்று ரியாமிகாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
இது தொடர்பாக பிரகாஷ், தினேஷ் ஆகியோரிடம் விசாரித்தபோது சில மாதங்களாக படவாய்ப்பு இல்லாமல் அவர் மனவேதனையில் இருந்ததாக தெரிவித்தனர். மேலும், ரியாமிகாவின் அறையை சோதனை செய்தபோது அங்கு குறிப்பிடும் வகையில் எந்தத் தடயங்களும் கிடைக்கவில்லை. இதனால் அவரின் செல்போனில் உள்ள வீடியோக்கள், ஆடியோக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்துவருகிறோம். இதற்கிடையில் ரியாமிகாவின் தம்பி பிரகாஷுக்கும் நிரந்தர வேலை இல்லை.
இதனால் ரியாமிகாவின் தற்கொலைக்கு பொருளாதார நெருக்கடியே முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறோம். மேலும், தற்கொலைக்கு முன் தினேஷ், ரியாமிகாவிடம் சரியாகப் பேசவில்லை. அதுவும் ஒருகாரணமாக இருக்கலாம். அதோடு தம்பி பிரகாஷும் ரியாமிகாவுடன் தகராறு செய்துள்ளார்.
இந்த மூன்று காரணங்களுக்காக நடிகை ரியாமிகா தற்கொலை செய்துகொண்டாரா என்று விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர். ரியாமிகா குறித்து விசாரித்தபோது அவரின் சொந்த ஊர் ஈரோடு. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அவரின் பெற்றோர் இறந்துவிட்டனர்.
இன்ஜினீயரிங் முடித்த நடிகை ரியாமிகாவுக்கு சினிமாவில் கதாநாயகியாக நடித்து பெயரும் புகழும் பெற வேண்டும் என்று சிறுவயதுமுதல் ஆசை. இதனால்தான் அவர் சினிமாவுக்குள் நுழைந்து கதாநாயகியாக நடித்தார். இதற்கிடையில், ரியாமிகா தற்கொலை தொடர்பாக அவர் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.