இலங்கையில் வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!!

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியான தகவலொன்றை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் எதிர்வரும் ஆண்டில் வாகனங்களின் விலைகள் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பானது தற்போது நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை மற்றும் டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி என்பவற்றால் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று 179 ரூபாயை தாண்டியதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டிருந்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சியடைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அத்துடன் இந்த நிலை நீடித்தால், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 190 ரூபாய் வரை உயரும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேறு சாதி இளைஞனுடன் திருமணம் : இளம் கர்ப்பிணியை குடும்பமே சேர்ந்து கொலை செய்த கொடூரம்!!

கர்ப்பிணி பெண்

வேறு சாதி வாலிபரை திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் கர்ப்பிணி பெண்ணை கொன்று உடலை கால்வாயில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முத்துராஜ் மற்றும் ஜோதி ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களின் காதல் விவகாரம் ஜோதியின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. முத்துராஜ் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் ஜோதியின் குடும்பத்தினர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் ஜோதி தனது காதலில் உறுதியாக இருந்தார்.

இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய ஜோதி முத்துராஜை திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் ஜோதி கர்ப்பமானார். இந்த நிலையில் முத்துராஜ் மற்றும் அவரது பெற்றோரும் வீட்டைவிட்டு வெளியே சென்று இருந்தனர். ஜோதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இதுபற்றி அறிந்ததும் ஜோதியின் தந்தை கிருஷ்ணய்யா, தாய் வெங்கடலட்சுமம்மா, தாத்தா கோவிந்தய்யா, பாட்டி திருமம்ம ஆகியோர், முத்துராஜின் வீட்டுக்கு சென்று ஜோதியிடம் தகராறு செய்து அவளை வீட்டிலிருந்து கடத்தி சென்றனர்.

பின்னர், ஜோதியின் கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்தனர். மேலும் அவரது உடலை கால்வாயில் வீசிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து முத்துராஜ் அளித்த புகாரின்பேரில் கொள்ளேகால் புறநகர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரையும் தேடிவருகிறார்கள்.

தாலி கட்டும் நேரத்தில் மணமகனுக்கு நேர்ந்த அதிர்ச்சி : பின்னர் 3 மணி நேரத்தில் நடந்த அதிசயம்!!

மணமகனுக்கு நேர்ந்த அதிர்ச்சி

இந்தியாவில் திருமணமாகும் நேரத்தில் மணமகனை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட நிலையில், அந்த காயத்துடனேயே மணப்பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

புதுடெல்லியை சேர்ந்தவர் படல் (25). இவருக்கும் இளம் பெண் ஒருவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்தது. திருமணம் நடைபெறும் இடத்துக்கு அருகில் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டிருந்தன. நிகழ்ச்சி முடிவுக்கு வந்த பின்னர் திருமணம் நடக்கவிருந்தது.

அப்போது அங்குள்ளவர்கள் ஆடிபாடி மகிழ்ச்சியாக இருந்தபோது இரண்டு மர்ம நபர்கள் பைக்கில் வந்தனர். பின்னர் மணமகன் படல் தோள்பட்டையை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அவர்கள் அங்கிருந்து தப்பினர். இதன் பின்னர் கீழே சுருண்டு விழுந்த படலை அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு காயத்துக்கு கட்டுபோடப்பட்டது. பின்னர் 3 மணி நேரம் கழித்து மீண்டும் திருமணம் நடைபெறும் இடத்துக்கு படல் வந்த நிலையில் அவருக்கு திருமணம் நடைபெற்றது.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வரும் நிலையில் தனிப்பட்ட விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என கூறியுள்ளனர். இதனிடையில் முன்னர் ஒரு கொலை முயற்சி வழக்கில் மணமகன் படல் ஈடுபட்டது தெரியவந்துள்ள நிலையில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

என் மகள் துடிதுடித்து இறப்பதை ஒரு மணிநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன் : கதறும் தாய்!!

கதறும் தாய்

தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கஜாப்புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கஜா புயலின் தாக்கத்தால் உயிரிழப்புகள், உடமைகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான நிதியுதவிகளை தமிழக அரசு, சினிமா பிரபலங்கள் மற்றும் பல அமைப்புகள் செய்து கொடுத்துள்ளன.

புயலால் உயிரிழந்தவர்களின் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது 14 வயதான பட்டுக்கோட்டை சிறுமி விஜயலட்சுமி. இவர் பூப்படைந்திருந்த காரணத்தால், தனியாக சிறிய குடிசை அமைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்துள்ளார். ஆனால், கோரத்தாண்டவம் ஆடிய புயலில் பெயரி மரணம் ஒன்று இவரது குடிசையின் மீது விழுந்ததில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், நடந்த சம்பவம் குறித்து விஜயலட்சுமி தாய் பானுமதி பகிர்ந்துள்ளார். என் மக்ளை தனியாக தூங்குவதற்கு நாங்கள் அனுமதித்தது கிடையாது. ஆனால், வயதுக்கு வந்துவிட்டாள் சடங்குகள் செய்வதை வரை நாங்கள் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம்.

இதனால், எனது மகளுக்கு தனியா குடிசை அமைக்கப்பட்டு, அவள் அதில் தங்கினாள். அவளுக்கு துணையாக நானும் எனது அம்மாவும் அவளுடன் சென்று படுத்துக்கொண்டோம். சம்பவம் நடைபெற்ற அன்று, குடிசை மீது சாய்ந்த மரம் என் மகளின் நெஞ்சு பகுதியில் விழுந்தது.

வாயில் ரத்தத்துடன் நான் செத்திருவேன் மா சொல்லிவிட்டு அவள் இறந்துவிட்டாள். மரம் விழுந்த சமயத்தில் விஜயலட்சுமியின் நெஞ்சில் பலத்த காயம் ஏற்பட்டது. பானுமதியின் இடது கால் மீது மரத்தின் மற்றொரு பாகம் விழுந்ததால் வலி தாங்க முடியாமல் கதறினாள்.

என் அம்மா மட்டும் தப்பித்தார். அவர் சிரமப்பட்டு வெளியேறி தென்னந்தோப்பிற்கு அருகில் இருந்தவர்களை கூட்டிவர சென்றார். என் கணவரும் முடிந்தவரை மரத்தை இழுத்துப்பார்த்தார். முடியாமல் பதறினார். ஆனால், நான் என் மகள் துடிதுடித்து இறப்பதை பார்த்தபடியே ஒரு மணி நேரம் அவளோடு இருந்தேன்.

என் மகளை அடக்கம் செய்வதற்கு முன்பு அவள் முகத்தைக் கூட பார்க்கமுடியவில்லை. இறுதியாக அவள் உயிர் போகும் நேரத்தில் வாயில் ரத்தத்துடன் அம்மா என்று அழைத்ததும், நான் சாகப்போகிறேன்மா என்று சொன்ன வார்த்தைகளும் மட்டுமே என் கண்களில் வந்துபோகின்றன.இந்த நினைவுகளை சுமந்துகொண்டு எப்படி வாழ்வேன் என தெரியவில்லை என கண்ணீர் சிந்துகிறார் பானுமதி.

மனைவி எதிர்த்து பேசியதால் ஈவிரக்கமின்றி நாக்கை வெட்டிய கணவன் : அதிர்ச்சி சம்பவம்!!

நாக்கை வெட்டிய கணவன்

இந்தியாவில் வரதட்சணை கேட்ட போது எதிர்த்து பேசியதால் மனைவியின் நாக்கை கணவரே வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர் திருமணமானதில் இருந்து தனது மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்தார். இதனால் பொறுமை இழந்த அவரது மனைவி, கடந்த 6ம் திகதி ஆகாஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனால் ஆத்திரமடைந்த ஆகாஷ், தன்னை எதிர்த்துப் பேசியதாக மனைவியின் நாக்கை வெட்டியுள்ளார். இந்த சம்பவம் வெளியில் தெரிந்து விடாமல் இருக்க, அவரை வீட்டில் வைத்துப் பூட்டியுள்ளார்.

ஒருவழியாக ஆகாஷிடம் இருந்து தப்பி வந்த அவரது மனைவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தன் பிறந்த வீட்டில் தெரிவித்துள்ளார். பின்னர் பெற்றோர் உதவியுடன் பொலிஸ் புகார் அளித்துள்ளார். ஆனால் ஆகாஷின் தந்தையும் பொலிஸ் அதிகாரி என்பதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் அலைகழிக்கப்பட்டனர். இதனால் இந்த விவகாரத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்திருப்பதாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை பிறந்த சில நாட்களில் இளம்பெண் கொலை : கதறும் தந்தை : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

இளம்பெண் கொலை

என் மகள் உடம்பெல்லாம் காயங்கள் இருக்கு.. அவள் சாவிலும் மர்மம் உள்ளது” என்று பெண்ணின் தகப்பன் போலீசில் புகார் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காசிமேட்டை சேர்ந்தவர் ஜெகநாதன் என்பவர் தனது மகள் ஜெயஸ்ரீயை பார்த்தசாரதி என்கிற சரவணனுக்கு 2016-ல் கல்யாணம் செய்து கொடுத்துள்ளார். மாப்பிள்ளை சரவணன் ஒரு நகைக்கடையில் வேலை பார்க்கிறார். கல்யாணம் ஆனதிலிருந்தே வரதட்சணை பிரச்சனை ஆரம்பமாகியுள்ளது.

இதனால் ஜெயஸ்ரீ மாமியார் வீட்டில் நிறைய கஷ்டங்களை அனுபவித்ததாக கூறுகிறார்கள். சென்ற வருடம் ஜெயஸ்ரீக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து உடனே இறந்தும் விட்டது. இதனால் ஜெயஸ்ரீ கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அம்மா வீட்டுக்கு ஜெயஸ்ரீ கிளம்பி வந்துவிட்டார். ஆனாலும் பெற்றோர் அவருக்கு புத்தி சொல்லி, தனிக்குடித்தனத்திற்கு ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

இந்நிலையில் ஜெயஸ்ரீக்கு 13 நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இருப்பினும் ஆனாலும் வரதட்சணை தகராறு வலுத்து கொண்டே சென்றுள்ளது. ஓர் நாள் ஜெயஸ்ரீ தன் அப்பாவிடம் போன் செய்து நடந்தவற்றை கூறி அழுதுள்ளார்.

இதனால் மனம் நொந்த ஜெயஸ்ரீ அப்பா, ஜெயஸ்ரீயை நேரில் பார்த்து, தன்னுடன் வந்துவிடுமாறு கூப்பிட்டார். “எனக்கு சில பிரச்சனைகள் இருக்கு. அதை முடிச்சிட்டு நானே வர்றேன்” என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டார் ஜெயஸ்ரீ.

மகள் இப்படி சொல்லிவிட்டால் என்று மறுபடியும் போனில் பேச நினைத்து மகளை அழைத்தார். ஜெயஸ்ரீ செல்போன் சுவிட்ச் ஆப்பில் இருந்தது. அதனால் மாப்பிள்ளைக்கு போன் செய்தார் ஜெயஸ்ரீ அப்பா.

அதற்கு மாப்பிள்ளை, “உங்க பொண்ணு கதவை பூட்டிக்கிட்டு திறக்கவே மாட்டேங்கிறாள், நேத்து தூக்க மாத்திரை நிறைய சாப்பிட்டு விட்டாள்” என்று சொல்லவும் அப்பா பதறி கொண்டு ஓடிவந்தார். வீட்டிற்குள் வந்து பார்த்தால் மகள் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார்.

13 நாள் பச்சிளம் சிசு பக்கத்திலேயே அழுதுகொண்டிருந்தது. உடனடியாக மகளை தூக்கிக் கொண்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயும், காப்பாற்ற முடியவில்லை. ஜெயஸ்ரீ இறந்துவிடவும் அவரது சொந்தக்காரர்கள் எல்லாம் காசிமேட்டு போலீஸ் ஸ்டேஷன் முன்பு கூடிவிட்டார்கள்.

ஜெயஸ்ரீ மரணத்திற்கு காரணம் வரதட்சணை கொடுமை தான் காரணம் என்று கூறப்படுகின்றது. இதனிடையே, ஜெயஸ்ரீ அப்பாவும், “எனது மகளின் உடம்பில் காயங்கள் உள்ளன எனவும் மாமனார், மாமியார், புருஷன் மூவருமே அடித்து துன்புறுத்தி அவளை கொலையே செய்து விட்டனர் என்றும் தற்கொலை என்று டிராமா செய்வதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தார். இதுகுறித்து மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

4 வருடமாக தாய்மை அடையாத மனைவி : கணவனின் கொடூர செயலால் அதிர்ந்த பொலிசார்!!

உத்திரபிரதேசத்தில் 4 வருடமாக கர்பமடையாத மனைவியை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்ய முயற்சித்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் பகுதியை சேர்ந்த நபர் 4 வருடமாக தாய்மை அடையாத தன்னுடைய மனைவியை 2-வது மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இதனை பார்த்த பக்கத்து வீட்டார் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கை மற்றும் கால் பகுதியில் பலத்த காயமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் குற்றவாளியை கைது செய்த பொலிஸார் வீட்டில் சோதனை செய்யும் போது, 4 கைதுப்பாக்கிகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவற்றை கைப்பற்றிய பொலிஸார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில், பல மாதங்களாக மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தது தெரியவந்தது.சம்பவம் நடைபெற்ற அன்று துப்பாக்கியை கொண்டு மிரட்டியுள்ளார். பின்னர் துப்பாக்கியின் பின் பகுதியை வைத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்து ஜன்னல் வழியாக வெளியில் தள்ளிவிட்டது தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள் : குறிவைத்து கொல்லப்பட்ட தம்பதி : பதறவைக்கும் சம்பவம்!!

பதறவைக்கும் சம்பவம்

புதுச்சேரியில் முகத்தில் பெருக்கல் குறியிட்டும், தலையில் வட்டமிட்டும் தம்பதி கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அண்ணா நகரைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் (72). இவரின் மனைவி ஹேமலதா (65). பிரெஞ்சு குடியுரிமை பெற்றிருக்கும் இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.

பிள்ளைகள் அனைவரும் பிரான்ஸ் நாட்டில் இருக்கும் நிலையில் பாலகிருஷ்ணனும் அவரின் மனைவியும் அடுக்குமாடி வீட்டின் தரை தளத்தில் தனியாக வசித்து வந்திருக்கின்றனர். தினமும் காலையில் நண்பர் ஒருவருடன் பாலகிருஷ்ணன் வாக்கிங் செல்வார்.

அப்படி இன்று காலை அவர் வீட்டுக்கு நண்பர் சென்ற நிலையில் காலிங் பெல் அடித்தும் அவர் வெளியில் வரவில்லை. பின்னர் நண்பர் வீட்டுக்குள் சென்று படுக்கையறையில் பார்த்த போது கட்டிலில் பாலகிருஷ்ணனும் அவரின் மனைவியும் கட்டிலின் இருபுறமும் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு வந்து பொலிசார் ஆய்வு செய்தனர். வீட்டில் நகைகளும், வெள்ளிப் பாத்திரங்களும் அப்படியே இருப்பதால் அவைகளுக்காக கொலை நடந்ததாகத் தெரியவில்லை. அதேசமயம் வீட்டில் பல்வேறு இடங்களையும் அலசித் தேடிப் பார்த்தற்கான அடையாளங்கள் தெரிவதால் வேறு ஏதேனும் ஆவணங்களுக்காக கொலை நடந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகின்றனர்.

ஹேமலதாவை அவர்கள் தலையணை வைத்துக் கொலை செய்துள்ளனர். ஆனால், பாலகிருஷ்ணனை அவர்கள் அடித்து கொடுமைப்படுத்தியதற்கான அடையாளங்கள் உள்ளது அதேபோல பாலகிருஷ்ணன், தன் மனைவி மற்றும் மகன்கள், மருமகளுடன் எடுத்த குரூப் போட்டோ ஒன்று லேமினேட் செய்யப்பட்டிருந்தது.

அதை எடுத்து பாலகிருஷ்ணன் மற்றும் அவரின் மனைவி ஹேமலதா முகத்தில் பென்சிலால் பெருக்கல் குறியும், அவர்கள் பின்னால் நின்றிருக்கும் பெண்ணின் தலையில் வட்டமிட்டும், மற்றவர்கள் முகத்தில் டிக்கும் அடிக்கப்பட்டிருக்கிறது. அதனால் பழி வாங்கும் நோக்கத்தில் அரங்கேற்றப்பட்ட கொலையா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் விஷ்வரூபம் எடுத்துள்ள மிளகாய் தூள் தாக்குதல் : சீரழிந்து போன இளம் யுவதியின் வாழ்க்கை!!

இளம் யுவதி

இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் நடத்தப்பட்ட மிளகாய்தூள் தாக்குதலை உதாரணமாக கொண்டு பல குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் நாவலப்பிட்டி – அரங்கலை பிரதேசத்தில் 17 வயது யுவதி ஒருவருக்கு மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது,

நாவலப்பிட்டி – அரங்கலை பிரதேசத்தில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் 17 வயது யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் யுவதியின் தாயாருக்கு தெரியவந்த நிலையில், யுவதி வெளியில் சென்று வருவதற்கு உறவினர் ஒருவரின் முச்சக்கரவண்டியை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிலையில், காதலியை காணக்கிடைக்காத குறித்த இராணுவவீரர் நண்பர்களிடம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மிளகாய் தூள் தாக்குதலை காண்பித்து நாமும் இதை கடைப்பிடிப்போம் எனக் கூறியுள்ளனர்.

இதையடுத்து கடந்த 19ஆம் திகதி முச்சக்கர வண்டியில் செய்ற யுவதி மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதி மீது மிளகாய்த்தூள் கலந்த நீரை வீசி யுவதியை கடத்திச் சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தி உள்ளனர்.

இந்த சம்பவத்தில் இராணுவ வீரர் உள்ளிட்ட 3 பேரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். இவர்களை 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அண்மையில் தம்புள்ளை நகரில் சுற்றிவளைப்புக்காக சென்றிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீதும் மிளகாய் தூள் கலந்த நீரை வீசிவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

200 வருடம் பழமை வாய்ந்த மரத்திற்கு ஏற்பட்ட நிலை : அசௌகரியத்தில் மக்கள்!!

200 வருடம் பழமை வாய்ந்த மரம்

ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் இருந்த 200 வருடம் பழமையான பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் அவ் வீதியூடான போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு, மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை மல்லியப்பு பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். மேலும் மரத்திற்கு கீழே இருந்த ஆலயம் ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

கனரக வாகனங்கள் குறித்த வீதியினூடாக செல்ல முடியாத நிலையில் உள்ளது. எனினும், இந்த மரத்தினை வெட்டி அகற்றும் பணியில் பொது மக்களும், தலவாக்கலை மற்றும் லிந்துலை பொலிஸாரும் செயற்பட்டு வருகின்றனர்.

அத்தோடு, மின்சார இணைப்புகளை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளில் லிந்துலை மின்சார சபையினர் ஈடுப்பட்டுள்ளனர்.

நாளைய தினம் கூடும் நாடாளுமன்றம் : எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!!

பிரதி சபாநாயகர் தலைமையில் கடந்த 19ஆம் திகதி சில நிமிடங்களே நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்ற நிலையில் நாளைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் நாளைய அமர்வின் போது பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான பார்வை கூடத்தை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற அமர்வின் போது பொதுமக்களுக்கான பார்வை கூடம் மூடப்பட்டிருந்தது.

அத்துடன், மிளகாய்த்தூள் தாக்குதல் சம்பவத்தின் போது நாடாளுமன்றத்தில் பார்வையாளர் தரப்பிலிருந்து வீசப்பட்ட போத்தலையே நான் எறிந்தேன்.

அதற்குள் மிளகாய்த்தூள் இருந்தது எனக்கு தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பகுதிகளில் இன்று அடைமழை!!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று அடைமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்திலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணத்தின் சில பகுதிகளில் காலை நேரத்தில் பனி மூட்டமான காலநிலை நிலவும் என குறிப்பிடப்படுகின்றது.

இடியுடன் மழை பெய்யும் பிரதேசங்களில் தற்காலிகமாக காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை மின்னலினால் ஏற்படுகின்ற ஆபத்துக்களை குறைத்து கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டு கொண்டுள்ளது.

பொத்துவிலில் இருந்து திருக்கோணமலை மற்றும் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையிலான கடற்கரை பிரதேசங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் மற்றும் திருகோணமலை ஊடாக கடற்பகுதியில் 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் பிரதேசங்களில் 70 – 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், அந்த கடல் பிரதேசங்களில் தற்காலிகமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என திணைக்களத்தினால் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மூன்று பிரிவுகளாக பிளவடைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி? : பாரிய வெற்றியில் மஹிந்த!!

ஐக்கிய தேசிய கட்சி

சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக ஐக்கிய தேசிய கட்சி மூன்றாக பிளவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் ஏற்பட்ட பிரதமர் நெருக்கடி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் ஒரு தரப்பினர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவி கிடைக்க வேண்டும் கருத்து வெளியிட்டுள்ளனர். எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு போதும், ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்க மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடியான நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு பிரதமர் பதவி வழங்க வேண்டும் என கட்சியின் பெரும்பான்மையினோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கரு ஜயசூரியவுக்கு பிரதமர் பதவி வழங்க வேண்டும் என இன்னும் ஒரு தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக ஐக்கிய தேசிய கட்சி மூன்று பிரிவுகளாக பிளவு பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை, சர்ச்சைக்குரிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெரும் நன்மையாக அமைந்துள்ளது. நாளைய தினம் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், மஹிந்த – ரணில் தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக, மஹிந்தவுக்கு சாதகமான நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் தந்திரோபாயம் பாரிய வெற்றி பெற்றுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பேஸ்புக் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட இளைஞன்!!

பேஸ்புக் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

செல்போன்களை வழங்குவதாக கூறி, சந்தேக நபர் பேஸ்புக் மூலம் தொடர்புக்கொண்டு தனது வங்கிக் கணக்கில் பணத்தை வைப்புச் செய்யுமாறு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தமாக நீர்கொழும்பு மற்றும் ஜா-எல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர் நீர்கொழும்பு – பெரியமுல்லை பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞன் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியாவில் பெய்துவரும் மழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் உயர்வு : ஈரப்பெரியகுளத்தின் வான் கதவுகள் திறப்பு!!

வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் 16.11 அடியாக உயர்வடைந்துள்ளதுடன், ஈரப்பெரியகுளம் வான் பாய்ந்து வருவதாகவும் வவுனியா மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதுடன், சில குளங்கள் வான் பாய ஆரம்பித்துள்ளன.

அந்தவகையில் மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் காணப்படும் வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் 16.11 அடியாக உயர்வடைந்துள்ளது. அத்துடன் இராசேந்திரங்குளம் 9.9 அடியாகவும், முகத்தான்குளம் 11 அடியாகவும் உயர்வடைந்துள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் சில நட்களில் இவை வான் பாயக் கூடிய நிலை உள்ளது.

இவற்றுடன், மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள ஈரப்பெரியகுளம் 15.7 அடியாக உயர்வடைந்துள்ளமையால் வான் கதவுகள் திறக்கப்பட்டு வான் பாய்ந்து வருகிறது. மேலும், வவுனியா வடக்கு மருதமடு குளம் 12.1 அடியாகவும் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் வான் பாய்ந்து வருகின்றது.

பாவற்குளமானது 3 இஞ்ச் விவசாய நடவடிக்கைக்காக திறந்து விடப்பட்டுள்ளமையால் சடுதியான நீர் அதிகரிப்பு ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நீர்மட்ட அதிகரிப்பு காரணமாக இக் குளங்களின் கீழ் உள்ள மக்களுக்கோ, பயிர்ச்செய்கைக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. அத்துடன் அனர்த்தம் ஏற்பட்டால் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மாவட்ட மட்டத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பல வருடங்களின் பின் பெருங்கடலுடன் சங்கமித்த நந்திக்கடல் நீர்!!

நந்திக்கடல்

முல்லைத்தீவு நந்திக்கடல் நீர் வெட்டுவாய்க்கால் பகுதி இன்று உடைப்பெடுத்து பெருங்கடலுடன் சங்கமித்துள்ளது.

சுமார் 15 கிலோமீற்றர் நீளத்தை கொண்ட நந்திக்கடல் ஏரி, மழை காலங்களில் நீர்மட்டம் உயர்வடைந்ததும் இயற்கையாகவே பெருங்கடல் நோக்கிச் செல்வது முன்னர் வழக்கமாக இருந்தது என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் பல வருடங்களின் பின் இயற்கையாகவே இன்று அதிகாலை உடைப்பெடுத்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக முல்லைத்தீவில் தொடர்ந்த அடைமழையால் நந்திக்கடலின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதுடன், இன்று நந்திக்கடல் வெட்டுவாய்க்கால் பகுதியில் உடைப்பெடுத்து பெருங்கடலுடன் சங்கமித்துள்ளது.