நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம் : விசாரணைகள் நாளை வரை ஒத்திவைப்பு!!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நாடாளுமன்றை கலைத்திருந்தார். ஜனாதிபதியின் இந்த செயலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் சுமார் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதியரசர்களை கொண்ட குழு முன்னிலையில், இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

நீண்ட வாதப்பிரதிவாதங்கள் நடந்த பின்னர் இது தொடர்பில் மேலும் கால அவகாசம் தேவையென சட்ட மா அதிபர் தெரிவித்ததையடுத்து மனுக்கள் மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் நாளை தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லை மண்ணில் சிறப்பாக நடைபெற்ற ”துளிர்விடும் கனவுகள்” கவிதை நூல் வெளியீட்டு விழா!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பாரதிதாசன் சனசமூக நிலையத்தின் வெளியீடாக பாரதி மைந்தனின் “துளிர்விடும் கனவுகள்” எனும் கவிதை நூல் நேற்று (11/11/2018) மாலை 1.30 மணியளவில் பாரதிதாசன் சனசமூக நிலைய முன்றலில் தலைவர் அ.அனிஸ்ரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வவுனியா நகர சபை உறுப்பினரும் வவுனியா அல் இக்பால் ம.வி ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன், சிறப்பு அதிதிகளாக டான் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி பணிப்பாளர் பண்பலை வேந்தன் ரி.எஸ்.முகுந்தன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் குலசிங்கம் விக்ரர் ஜெயசிங்கம், புதுக்குடியிருப்பு இளைஞர் சேவை அதிகாரி அ.விஜிதரன் மற்றும்

கௌரவ அதிதிகளாக கவிஞர் தர்மலிங்கம் பிரதாபன், இசைக்கனல் பி.எஸ்.விமல், ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீசன், புவனேசன் அணிநிலவன், தமிழ் சிறகுகள் அமைப்பின் பிரதிநிதி க.துவாரகன், இளம் அறிவிப்பாளர் கே.சுரேன், இளம் நடிகர் அ.தினேஷ், வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன், முல்லைத்தீவு இளைஞர் கழக சம்மேளன தலைவர் முறிகண்டி லக்சிதரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

கிராம மக்களின் அமோக ஆதரவுடனும் கலை இலக்கிய சமூகங்களின் பெரு ஆதரவுடனும் விழா சிறப்புற நடைபெற்றது.

காதலனின் கண்ணெதிரிலேயே காதலிக்கு நேர்ந்த சோக சம்பவம்!!

கடலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதி முடிந்துவிட்டு காதலனுடன் மோட்டார் சைக்கிளில் வந்த காதலி பேருந்து விபத்தில் காதலன் கண்முன்னே தலை நசுங்கி உயிரிழந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பார்கவி (22) என்ற மாணவி சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் கல்வியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். பார்கவியும், அதே பகுதியை சேர்ந்த ராஜதுரை (24) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களது காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய இரு வீட்டு பெற்றோரும், பார்கவியின் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இதனிடையே டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு எழுதுவதற்காக நேற்று காலை பார்கவியை, ராஜதுரை தனது மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் பி.முட்லூர் அரசு கல்லூரிக்கு அழைத்து வந்தார்.

மதியம், தேர்வு முடிந்ததும் ராஜதுரை, பார்கவியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சிதம்பரம் நோக்கி வந்துகொண்டிருந்தனர். அப்போது, தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில், பேருந்தின் பின்சக்கரம் பார்கவியின் தலையில் ஏறி, இறங்கியது. இதில் தலைநசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ராஜதுரை காயங்களுடன் உயிர் தப்பினார்.

காயமடைந்த ராஜதுரை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பொலிசார், பார்கவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

காணாமல் போன காதல் ஜோடிகள் 4 பேரும் சடலமாக மீட்பு : பொலிஸார் அதிர்ச்சி!!

ராஜஸ்தான் மாநிலத்தில் இருவேறு இடங்களில் 2 காதல் ஜோடிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் கிராமம் ஒன்றின் புறவெளிப்பகுதி அருகே, மரத்தில் ஒரே கயிற்றில் இரண்டு பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி மேற்கொண்ட விசாரணையில், சுஜா பில் (18), ஜக்திஷ் பில் (21) என்ற காதல் ஜோடி சனிக்கிழமை காலை முதல் வீட்டில் இருந்து மாயமாகியிருப்பது தெரியவந்துள்ளது.

இதே போல பாலோடரா பகுதியில் 25 வயதான சுமேர் மற்றும் 22 வயதான உஷா என்ற காதல் ஜோடி ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமைமுதலே வீட்டிலிருந்து மாயமாகிவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருவேறு இடங்களில் நடைபெற்றுள்ள தற்கொலை சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கொழும்பு உயர் நீதிமன்றத்தை சுற்றி பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு : வரவுள்ள மிக முக்கிய செய்தி?

நாடாளுமன்றத்தை கலைத்தமை அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதா அல்லது இல்லையா என்பது தொடர்பாக வழக்கு விசாரணைகள் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தின் வளாகத்தில் ஊடகவியலாளர்கள் உட்பட பெருந்திரளானோர் திரண்டுள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் உயர் நீதிமன்றத்தை அண்மித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இன்று மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நாளை அல்லது பிறிதொரு நாளில் தீர்ப்பு வழங்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.

எப்படியாயினும் இன்னும் சற்று நேரத்தில்தான் முடிவை அறியமுடியும்.

வவுனியாவில் தந்தை இறந்த செய்தியறிந்த மகள் தற்கொலை : நாட்டை உலுக்கியுள்ள சம்பவம்!!

தந்தை இறந்த செய்தியறிந்த மகள் சோகம் தாங்க முடியாமல் பேராதனையில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை செய்துள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா – கற்குளம் 4ஐ சேர்ந்த செல்வநாயகம் என்பவர் நேற்றைய தினம் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப் பிரிவில் கற்று வரும் அவரது மகளான மதுசாவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக வவுனியா வருவதற்காக பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் தந்தையின் இறப்பை தாங்க முடியாத மதுசா பேராதனை யாக்கா பாலத்திற்கு சென்று அங்கு புகையிரத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகின்றது.

தற்பொழுது மதுசாவின் சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு உயர் நீதிமன்றத்தின் முன்னால் குழப்பம்!!

கொழும்பு உயர் நீதிமன்றத்தின் முன்பாக இன்று குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய இன்றைய தினம் பலர் உயர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.

இந்த நிலையில் அங்கு வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஊடகங்களுக்கு இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் அவர் அங்கிருந்து செல்ல முயற்சித்த போது கூட்டத்திலிருந்த அடையாளம் தெரியாத நபரொருவர் கூச்சலிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கோபமடைந்துள்ளார். இந்த நிலையிலேயே அங்கு சிறிது நேரம் குழப்பமான சூழல் நிலவியுள்ளது.

வவுனியாவில் தந்தை இறந்த சோகத்தில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை!!

வவுனியா கற்குளத்தில் தந்தை இறந்த செய்தியறிந்த மகள் சோகம் தாங்க முடியாமல் பேராதனையில் புகையிரத்தில் மோதுண்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

வவுனியா கற்குளம் 4 சேர்ந்த செல்வநாயகம் என்பவர் நேற்றைய தினம் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். இந் நிலையில் பேராதனை பல்கலைக்கழகத்தில் 2ம் வருடத்தில் கலைப்பிரிவில் கற்றுவரும் அவரது மகளான மதுசாவிற்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அவர் உடனடியாக வவுனியா வருவதற்கு பேரூந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.

எனினும் தந்தையின் இறப்பை தாங்க முடியாத மதுசா பேராதனை யாக்கா பாலத்திற்கு சென்று அங்கு புகையிரத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகின்றது.

இந் நிலையில் சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரியவருகின்றது.

இந் நிலையில் பேரூந்து நிலையத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள யக்கா பாலத்திற்கு எவ்வாறு சென்றார் என்பது தொடர்பாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு : விஜயதாச ராஜபக்ச!!

நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உண்டு என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

நாடாளுமன்றமும், நிறைவேற்று அதிகாரமும் இணைந்து நாட்டை ஆட்சி செய்ய முடியாத அரசியல் அமைப்பு ரீதியான நெருக்கடி நிலைமை ஏற்பட்டால், நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

19ஆம் திருத்தச் சட்டத்தின் 33(2) சரத்தில் இது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்பதனை 33(2) சரத்து தெரிவிக்கின்றது.

பழைய அரசியல் அமைப்பில் இந்த விடயம் இருக்கவில்லை, புதிதாக இணைக்கப்பட்ட 19ஆம் திருத்தச் சட்டத்தில் இந்த விடயம் இணைக்கப்பட்டுள்ளது.

தெளிவான காரணமொன்றின் அடிப்படையில் நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

நாடாளுமன்றிற்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் தெளிவான முரண்பாட்டு நிலைமை காணப்பட்டால் அந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றைத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என தெரிவித்துள்ளார்.

தான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட மைத்திரி : முறியடிக்கும் நடவடிக்கை தீவிரம்!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவே காரணமாகிவிட்டார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முன்னெடுத்த பொறிமுறையில் தானாகவே சிக்கிக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் மக்களின் ஆணைக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளும் பொருத்தமற்ற சூழ்ச்சிகளை சட்டரீதியில் முறியடித்து நாட்டில் சுபீட்சமான ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஆபத்தான கட்டத்தில் சுதந்திர கட்சி : அதிரடி நடவடிக்கையில் சந்திரிக்கா!!

சமகால அரசியல் நெருக்கடி காரணமாக பிரதான அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இல்லாமல் போகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சுதந்திர கட்சியை பாதுகாக்கும் தீவிர நடவடிக்கையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

மக்களுக்கு துரோகம் செய்த குழுவினரால், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு சந்திரிக்கா குமாரதுங்க கண்டனம் வெளியிட்டுள்ளார்.

விசேட உரையாற்றி அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் குழுவினர் இணைந்து ஜனநாயக நாடு ஒன்றை கட்டியெழுப்புவதற்காக போராடி வெற்றி கொண்டோம்.

தற்போதுதாமரை மொட்டுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இல்லாமல் செய்வதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை கைவிட்டு வேறு கட்சிக்கு யார் சென்றாலும் தான் தனது கட்சியை கைவிடப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீழ்ந்து போன கட்சியை மீளவும் கட்டியெழுப்பி வெற்றியின் பாதைக்கு கொண்டு செல்வதற்காக உண்மையாகவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை நேசிக்கும் தரப்பினருடன் தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

துமிந்த திஸாநாயக்க உட்பட குழுவினருடன் சந்திரிக்கா இன்றைய தினம் விசேட கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தந்தையை கைவிட்டு மஹிந்தவுடன் இணையும் மைத்திரியின் மகள்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேன இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தந்தையும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் தொகுதியான பொலநறுவையில் சத்துரிக்கா போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மஹிந்த ராஜபக்ச தலைமை வழங்கும் பொதுஜன பெரமுன கட்சியின் இணைந்து சத்துரிக்கா சிறிசேன போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்களை அடிப்படையாக கொண்டு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சத்துரிக்காவின் ஆலோசகரின் அறிவுரைக்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இம்முறை போட்டியிடும் உறுப்பினர்கள் வெற்றி பெற முடியாத நிலை காணப்படுவதாக ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதினால் ஜனாதிபதி மற்றும் மஹிந்தவுக்கு இடையில் அரசியல் கூட்டணியை வலுப்படுத்தி கொள்ள முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களே ஜனாதிபதியை புறுக்கணிக்கும் நிலைமைக்குள் அவர் தனிமைப்படுத்தப்படுவதனை தடுக்க எடுக்க வேண்டும். ஆனாலும் அவருக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள குற்றப் பிரேரணையை தடுப்பதற்கானவும், இந்த நடவடிக்கை முக்கியம் என சத்திரிக்காவிடம் அவரது ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானம் தொடர்பில் ராஜபக்ச தரப்பில் சிறப்பான பதில் ஒன்று கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடும் தொனியில் எச்சரித்த முன்னாள் சபாநாயகர் : தடுமாறும் அரச அதிகாரிகள்!!

சட்டவிரோதமான முறையில் பிறப்பிக்கப்படும் எந்தவொரு உத்தரவினையும் அரச அதிகாரிகள் பின்பற்றவோ அமுல்படுத்வோ வேண்டிய அவசியமில்லை என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மிகவும் கடும் தொனியில் இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றின் உரிமை, அரசியல் அமைப்பின் உன்னத தன்மை மற்றும் மக்கள் ஆணை என்பனவற்றை பாதுகாப்பதற்காக எவ்வாறான எதிர்விளைவுகளையும் சந்திக்க தயார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் அமைப்பினை பாதுகாப்பதற்கே அரசாங்க அதிகாரிகள் உள்ளனர், சட்டவிரோதமான உத்தரவுகளை எவரும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் சட்டவிரோதமாக கலைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர உள்ளதாகவும் என்னிடம் கட்சித் தலைவர்கள் அறிவிவித்துள்ளனர்.

நாடாளுமன்றினால் தீர்மானம் எடுக்கக்கூடிய உரிமையை ஜனாதிபதி தடுத்துள்ள காரணத்தினால், இது தொடர்பில் உச்ச நீதிமன்றில் சட்ட விளக்கம் கோரப்பட வேண்டும்.

மக்களினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரங்கள் பலவந்தமாக கவரப்பட்டுள்ளது.

இறைமையுடைய இலங்கையின் உன்னத தன்மை வேண்டுமென்றே உதாசீனம் செய்யப்படுகின்றது.

இந்த நிலைமையானது மக்களின் சுதந்திரத்திற்கும் உரிமைகளுக்கும் பாரதூரமான ஆபத்தினை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் அமைப்பினை பாதுகாப்பதாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட அனைத்து அரச ஊழியர்களும் அதனை உரிய முறையில் பின்பற்ற வேண்டும்.

சட்டவிரோதமான நிறைவேற்று அதிகாரத்தின் உத்தரவுகளை அனைத்து அரச ஊழியர்களும் நிராகரிக்க வேண்டும். ஜனநாயகத்தை உறுதி செய்யும் வகையில் அனைவரும் செயற்பட வேண்டியது அவசியமானதாகும்.

சபாநாயகரின் நடவடிக்கைகள் எல்லாம் நிறைவேற்று அதிகாரத்தினை சந்தோசப்படுத்தும் வகையில் அமையாது. தற்போதைய அரசாங்கத்தின் சட்டபூர்வ தன்மை குறித்து நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்துமாறு 116 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் என்னை சந்தித்து கோரியதுடன், எட்டு உறுப்பினர்கள் தொலைபேசி ஊடாக கோரியிருந்தனர்.

இதேவேளை, முன்னாள் இராணுவ அதிகாரியான நான், எனது தாய் நாட்டுக்காக எந்தவொரு தியாகத்தையும் செய்வதற்கு ஆயத்தமாக இருக்கின்றேன் என்றும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் காலை வேளையில் கடும் பனிமூட்டம்!!

சீரற்ற காலநிலையால் வவுனியாவில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், மக்களது இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளனர்.

இன்று அதிகாலையில் இருந்து காலை 8 மணிவரை வவுனியாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக ஏ9 வீதியும் பனிமூட்டமாக காட்சியளித்தது. காலையில் இவ் வீதி வழியாக பயணங்களை மேற்கொண்ட வாகனங்களின் சாரதிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்ததுடன் மக்களது இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்து காணப்பட்டது.

இதேவேளை இன்று மாலை வவுனியாவில் கடும் மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

வெருகல் பகுதியில் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று பிரதேசவாசிகளினால் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 08ஆம் திகதியிருந்து தேடப்பட்டு வந்த குறித்த நபர் இன்று வெருகல் முட்டுச்சந்து பகுதியில் வைத்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் வாகரை புளியங்கண்டலடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய தனபாலசிங்கம் கதீஸ்வரன் என வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் வெருகலில் உள்ள தனது மனைவியின் வீட்டிலிருந்து உறவினர் வீட்டிற்கு சென்ற வேளையில் வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தடையுத்தரவு கிடைத்தால் தேர்தல் பணிகள் நிறுத்தப்படும் : மகிந்த தேசப்பிரிய அதிரடி அறிவிப்பு!!

தேர்தல் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு செல்லாது எனவும், தடையுத்தரவு கிடைக்கும் தேர்தலுக்கான பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தடையுத்தரவு கிடைக்கும் வரை நாங்கள் பணிகளை செய்வோம். தடையுத்தரவு கிடைத்தும் பணிகளை நிறுத்தி விடுவோம். ஜனாதிபதிக்கே உயர்நீதிமன்றத்தின் சட்ட விளக்கத்தை கோர முடியும்.

நல்லவற்றுக்காக குரல் கொடுப்பேன். 1999ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி பிறந்தவர்களுக்கு இம்முறை வாக்களிக்க முடியும். இளைஞர்களுக்கு வாக்குரிமை இல்லாமல் இருப்பது குறிதது வருத்தப்படுகிறேன்.

அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமாயின் ஐஸ் கிரீம் விற்க வேண்டும். தற்போது இனிப்பில்லாத ஐஸ் கிரீமை விற்க வேண்டும் எனவும் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்