அபூர்வ வகை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஐந்து வயது சிறுவன் ஒருவன், உயிரிழக்குமுன் தன் தாயிடம் அம்மா இத்தகைய சூழல் ஏற்பட்டதற்காக வருந்துகிறேன் என்று கூறிவிட்டு உயிர் விட்ட சம்பவம் ஒன்று பிரித்தானியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Accringtonஐச் சேர்ந்த Charlie Proctor என்னும் அந்த சிறுவனுக்கு 2016இல் அபூர்வ வகை கல்லீரல் புற்றுநோய் ஏற்பட்டது. அவன் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ்வான் என சென்ற மாதம் மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
அவனைக் காப்பாற்றுவதற்கு 855,580 பவுண்டுகள் தேவை. அவனது சிகிச்சைக்காக அவனது பெற்றோரான Amber Schofield (24)மற்றும் Ben Proctor பணம் சேகரித்து வந்தனர். ஆனால் பாதி தொகை மட்டுமே சேர்ந்திருந்த நிலையில், சனிக்கிழமை இரவு Charlie தனது தாயின் கைகளில் தனது உயிரை விட்டு விட்டான்.
புற்றுநோய் பணக்காரர்களின் நோய், அதிக பணம் உங்களிடம் இருந்தால் உங்கள் குழந்தையை காப்பாற்றலாம், நாங்கள் பணக்காரர்களாக இல்லததால் என் குழந்தை இறந்தான் என்னும் விடயம் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்கிறார் Charlieயின் தாய்.
சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், மக்களது இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து அதிகாலையில் இருந்து காலை 8 மணிவரை வவுனியாவில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதுடன் குளிரான காலநிலையும் நிலவுகின்றது.
வவுனியாவில் கடும் மழை பெய்து வந்த நிலையில் தற்போது கடந்த மூன்று தினங்களாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏ9 வீதியும் பனிமூட்டமாக காட்சியளித்தது. பனிமூட்டத்தால் காலையில் இவ் வீதி வழியாக பயணங்களை மேற்கொண்ட வாகனங்களின் சாரதிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று தமிழ் தாய் இளைஞர் கழகத்தின் வேண்டுகோளுக்கினங்க வன்னி மண் நற்பணி மன்றத்தினால் ஒரு குடும்பத்திற்கு 5000 ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் வீதம் 10 குடும்பத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.
இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தமிழ் தாய் கழகத்தின் தலைவர் வ.பிரதீபன், வன்னி மண் நற்பணி மன்றத்தின் தலைவர் மயூரன், கிராம சேவையாளர் ப.பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்க தயாராக இருப்பதாக அந்த கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரதமர் வேட்பாளராகவும் போட்டியிட தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டால் எந்த பொறுப்பையும் ஏற்க தயார். அத்துடன், தற்போதை கட்சியின் தலைவர் மற்றும் ஏனையவர்கள் ஆதரிப்பார்களான இருந்தால் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்வேன்.
எவ்வாறாயினும், கட்டு சட்டங்களை பின்பற்ற தான் ஒருபோதும் தயாராக இல்லை” என அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் தொண்டர்கள் கோரிவருகின்றனர்.
அவ்வாறு தலைமைப் பதவியில் மாற்றம் செய்தால் மீண்டும் இணைந்து செயற்பட முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறிவருகின்றனர்.
இவ்வாறான பின்னணியிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்க தயாராக இருக்கதாக சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
அரசியல் குழப்பமான சூழ்நிலையில் சஜித் பிரேமதாசவின் இவ் அறிவிப்பு அரசியல் ரீதியில் பலரை திண்டாட வைத்துள்ளமை குறிப்பிடத் தக்கது
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நிகழ்வுகள் நேற்று 12.11.2018 திங்கட்கிழமை மிக சிறப்பாக இடம்பெற்றன.
காலைமுதல் அபிசேகங்கள் இடம்பெற்று கிரியைகளின் பின்னர் வசந்தமண்டப பூஜையும் தொடர்ந்து முருகபெருமான் வீதி வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது.
இலங்கையின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு தொடர்பில் வழங்கப்படவுள்ள தீர்ப்பு குறித்து, ஒட்டுமொத்த இலங்கையை மாத்திரமன்றி, உலகத்தின் கவனத்தையும் உச்சநீதிமன்றத்தின் மீது திருப்பியுள்ளது.
ஆயுட்காலம் முடிவடைய முன்னர் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்தமை குறித்து சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. 19வது அரசியலமைப்பு முரணாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, அதற்கு எதிராக 12 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகும் என அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு யானை சிக்கல் ஒன்று ஏற்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளளார்.
ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு சிங்கள மொழியில் குழப்பம் உள்ளது. அவர்கள் அரசியமைப்பின் ஆங்கில பதிப்பை மாத்திரம் பரிசோதித்தமையினால் யானைகள் சிக்கலில் சிக்கப்போகிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியமைப்பின் 33 (2) ஆம் சரத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு “மேலதிகமாக” என்ற வார்த்தையை ஐக்கிய தேசிய கட்சியினர் அவதானிக்க தவறியுள்ளார்கள் என கம்மன்பில தெரிவித்துள்ளார்
அத்துடன் அந்த சரத்தில் ஜனாதிபதிக்கு விருப்பமான அளவு நாடாளுமன்றத்தை பிற்போட முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்திற்கு சென்று இதற்கு தீர்வு பெற முடியாது. அரசியமைப்பிற்கு எதிராக ஜனாதிபதி செயற்படவில்லை. சிங்கள அரசியலமைப்பிற்கமைய பிரதமரை நீக்குவதற்கான அதிகாரம் உள்ளது. ஆங்கிலத்தில் அப்படி இல்லை.
ஆங்கில அரசியலமைப்பை அடிப்படையாக கொண்டு ஐக்கிய தேசிய கட்சி சட்டத்தரணிகள் வாதிடுகின்றார்கள். எனினும் இலங்கை உத்தியோகபூர்வ மொழி சிங்களம் என்பதனை மறந்து விட வேண்டாம்.
இன்னும் ஒரு விடயம் உள்ளது. எனினும் நான் அதனை கூற மாட்டேன். எங்கள் சட்டத்தரணிகள் அந்த விடயம் தொடர்பாகவே வாதிட உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் செயற்படும் போது அவருக்கு எதிராக தீர்ப்பு எப்போதும் வெளியாகது என சட்டவல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்த சஷ்டி உற்சவதத்தின் ஐந்தாம் நாள் நேற்று 12.11.2018 திங்கட்கிழமை இடம்பெற்றது .
காலைமுதல் கிரியைகள் இடம்பெற்று ஆறுமுகபெருமானுக்குஅபிசேகங்கள் இடம்பெற்று மதியம் வசந்தமண்டபபூஜையுடன் சுவாமி உள்வீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது .மேற்படி உற்சவத்தின் போது பெருமளவிலான கந்தசஷ்டி விரதமிருக்கும் அடியார்கள் கலந்து கொண்டனர்.
மாலையில் வசந்தமண்டப பூஜையின் பின் முருகபெருமான் உள்வீதி வெளிவீதி வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது.
திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை கடற்படை தலைமையகத்தில் கடமையாற்றும் 24 வயதுடைய இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். திருகோணமலை மட்டக்களப்பு பிரதான விதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இராணுவ வீரர் மாடு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
அதே சமயம் எதிர்த் திசையில் வந்த கெப் ரக வாகனம் இராணுவ அதிகாரியின் மீது மோதியுள்ளது. இதேவேளை, விபத்தில் இராணுவ வீரர் சம்ப இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், கெப் ரக வாகனத்தின் சாரதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த இராணுவ வீரர் விடுமுறையில் வீட்டுக்கு வரும் நிலையில் இந்த சம்வம் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் நான்காம் நிகழ்வுகள் நேற்று முன்தினம் 11.11.2018 ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்பாக இடம்பெற்றன.
காலைமுதல் அபிசேகங்கள் இடம்பெற்று கிரியைகளின் பின்னர் வசந்தமண்டப பூஜையும் தொடர்ந்து முருகபெருமான் வீதி வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது.
வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்த சஷ்டி உற்சவதத்தின் நான்காம் நாள் 11.11.2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது .
காலைமுதல் கிரியைகள் இடம்பெற்று ஆறுமுகபெருமானுக்குஅபிசேகங்கள் இடம்பெற்று மதியம் வசந்தமண்டபபூஜையுடன் சுவாமி உள்வீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது .மேற்படி உற்சவத்தின் போது பெருமளவிலான கந்தசஷ்டி விரதமிருக்கும் அடியார்கள் கலந்து கொண்டனர்.
மாலையில் வசந்தமண்டப பூஜையின் பின் முருகபெருமான் உள்வீதி வெளிவீதி வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது.
வவுனியாவில் இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை என்னும் குறுந்திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 10.11.2018 சனிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் பூந்தோட்டம் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.
BLITZ MUSIC UK தயாரிப்பில் 9D CREATION வழங்கும் குகதாசன் கோபிதாஸ் இயக்கத்தில் உருவான மாயை குறும்படத்தின் வெளியீட்டு நிகழ்வில் பிரதமவிருந்தினராக பண்டிதர் வீரசிங்கம் பிரதீபன் (கலாசார உத்தியோகத்தர் பிரதேச செயலகம் வவுனியா) பிரதம விருந்தினராகவும் மா.கலைச்செல்வன்(வைத்தியர் வவுனியா பொது வைத்தியசாலை) செ. மதுரகன் (வைத்தியர் வவுனியா பொது வைத்தியசாலை) த.பரத லிங்கம் (நகரசபை உறுப்பினர் வவுனியா) பா. பாலபிரசன்னா(நகரசபை உறுப்பினர் வவுனியா)ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் திரைப்படத்துக்கான மதிப்பீட்டுரையினை த. சுதன் ஆசிரியர் வழங்கினார்.
வவுனியா வெளிக்குளம் சித்திவிநாயகர் ஆலய கும்பாபிஷேக நிகழ்வுகள் இன்று 11.11.2018 கிரிகைகளுடன் ஆரம்பமாகியுள்ளது.
நாளை 13.11.2018 செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. தொடர்ந்து 14.11.2018 புதன்கிழமை காலை 9.15-10.15 கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வுகளில் கலந்துகொண்டு சித்திவிநாயகரின் அருளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
பிரித்தானியாவில் பார்னெட் மருத்துவமனையில் குடியிருக்கும் தாய் மற்றும் மகளால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் படுக்கை வசதி இன்றி பரிதவித்து வருகின்றனர்.
வடக்கு லண்டனில் உள்ள கிரிம்ஸ்பி பகுதியில் அரசு குடியிருப்பு ஒன்றில் குடியிருந்து வந்தவர்கள் Ruth Kidane(21) மற்றும் அவரது தாயார் Mimi Tebeje(50).
இந்த நிலையில் கடந்த ஆண்டு யூலை மாதம் ஊனமுற்றவரான ரூத் கிடேன் வடக்கு லண்டனில் உள்ள பார்னெட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அதே மருத்துவமனையில் உள்ள பொது வார்டில் அவரது தாயாரும் தங்கத் துவங்கியுள்ளார். இதனிடையே ரூத் கிடேனின் நோய் குணமடைந்ததாகவும், அவர் வீட்டுக்கு செல்லலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர்களின் கவுன்ஸில் குடியிருப்பை வேறொரு நபருக்கு அதிகாரிகளால் வழங்கப்பட்டதால் இவர்களுக்கு வேறு வீடு அமைத்து தருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இதுவரையில் கவுன்சில் நிர்வாகிகளால் இவர்களுக்கு என குடியிருப்பு ஒன்றை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
கடந்த 15 மாதங்களாக மருத்துவமனையில் தாயாரும் மகளும் குடியிருந்து வருவதால், நோயாளிகளுக்கு இவர்களின் படுக்கையை வழங்க முடியாமல் உள்ளது.
இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான நோயாளிகள் படுக்கை இன்றி பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மட்டுமின்றி பொதுமக்களின் வரிப்பணம் சுமார் 150,000 பவுண்டுகள் இந்த விவகாரத்தில் விரையமாகியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கென்யாவின் டானா ரிவர் பிராந்தியத்திலுள்ள ஒரோமோ சமுதாயத்தை சேர்ந்த மக்களிடையே பெண் குழந்தை பிறந்த முதல் நாளிலேயே நிச்சயிக்கும் பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நபர் ஒருவர் கூறுகையில், பிறந்து நான்கே மாதமான எனது குழந்தையை இப்ராஹிம் என்ற சிறுவனுக்கு நிச்சயித்துவிட்டேன்.
நான் இறந்துவிட்டால் கூட அவளை யாரும் திருமணம் செய்துக் கொள்ள மாட்டார்கள். எனவே அவள் அவனுக்காக காத்திருப்பாள் எங்களது கலாச்சாரம் அப்படி தான் உருவாக்கப்பட்டுள்ளது, இது இப்படியே தொடர்வதையே நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
ஒரு பெண் குழந்தைக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதை குறிப்பதற்காக எதிர்கால மாப்பிள்ளையின் தந்தை குழந்தையின் கையில் டாராரா என்ற கயிறை அணிவிப்பார். நான் அந்த சிறுவனை தேர்ந்தெடுத்து அவரது தந்தையிடம் என் குழந்தைக்கு டாராரா அணிவிக்குமாறு கூறினேன்.
குழந்தையாக இருக்கும் போதே அவளுக்கு திருமணம் நிச்சயிக்கபட்டுள்ளதை குறிக்க இது பயன்படுத்தப்படுகின்றது.
இதன் மூலம் தங்களது பெண் குழந்தைகளுக்கு எது நேர்ந்தாலும் பார்த்துக்கொள்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்று பெற்றோர் நம்புகின்றனர்.
தனது குழந்தைக்கு எது நல்லது என்பது தந்தைக்கு தெரியுமென்பதால் பெண்கள் மறுப்பு தெரிவிப்பதில்லை. குடும்பங்களுக்கு இடையேயான பிணைப்பை இந்த பாரம்பரியம் வலுப்படுத்துவதாகவும் இவர்கள் நம்புகின்றனர்.
ஹிந்தி நடிகை ராக்கி சாவந்த் மல்யுத்த வீராங்கனையின் சவாலை ஏற்று அவருடன் மோதியதில், எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல ஹிந்தி நடிகை ராக்கி சாவந்த், சண்டிகாரில் நடந்த மல்யுத்த போட்டியின் தொடக்க விழாவிற்கு நடனம் ஆட சென்றார். அங்கு நடனமாடிய அவர் பின்னர் பார்வையாளர்களுக்கான இடத்தில் அமர்ந்திருந்தார்.
அப்போது நடைபெற்ற போட்டியில், மல்யுத்த வீராங்கனை ரோபெல் தன்னை எதிர்த்து களமிறங்கிய வீராங்கனையை வீழ்த்தினார். பின்னர், தன்னுடன் மோத பெண்கள் யாராவது தயாராக இருக்கிறீர்களா என்று பார்வையாளர்களை நோக்கி சவால் விடுத்துள்ளார்.
ரோபெலின் சவாலை ஏற்ற ராக்கி சாவந்த், அவருடன் மோத மல்யுத்த மேடைக்கு சென்றார். அப்போது வீராங்கனையின் சவாலை தான் ஏற்பதாகவும், ஆனால் அவர் தன்னைப் போல் நடனமாட வேண்டும் என்றும் கோரினார்.
அதற்கு சம்மதித்த ரோபெல் முதலில் தன்னுடன் மோத வேண்டும் என்று கூறினார். ஒட்டுமொத்த பார்வையாளர்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் மற்றும் பெண் பொலிசார் அனைவரும் ராக்கி சாவந்திற்கு மல்யுத்தம் தெரியும் என்று நினைத்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனார்.
ஆனால், ஒரே நொடியில் ராக்கியை தலைகீழாக தூக்கி தரையில் வீசியெறிந்தார் ரோபெல். இதனால் ராக்கி மூச்சுபேச்சு இன்றி மயங்கிவிட்டார். அதனைத் தொடர்ந்து உடனடியாக மேடைக்கு வந்த நடுவர், பெண் பொலிசார் ராக்கியை கைதாங்கலாக வெளியே கொண்டு வந்தனர்.
அதன் பின்னர் ஸிராக்பூரில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராக்கிக்கு பலமாக அடிபட்டதில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து நிகழ்ச்சி தெரிவிக்க ஏற்பட்டாளர்கள் மறுத்துவிட்டனர்.
பள்ளிக்காலத்தில் ஆசையாக காதலித்த பெண்ணை காலங்கள் கடந்து அவள் விபத்தில் சிக்கி உருக்குலைந்தபோதும், அவள் மீது கொண்ட உண்மையான காதலால் அவளையே திருமணம் செய்து கொண்டுள்ளார் ஜெயப்பிரகாஷ். 2004 ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள பள்ளியில் ஜெயப்பிரகாஷ்ம் – சுனிதாவும் ஒன்றாக படித்துள்ளனர்.
சுனிதா பார்ப்பதற்கு பேரழகியாக இருந்ததால் முதல் பார்வையிலேயே தீபக்கின் மனதை கவர்ந்துவிட்டார். பள்ளிக்காலத்தில் விதிமுறைகள் அதிகம் என்பதால் சுனிதாவிடம் அதிகமாக ஜெயப்பிரகாஷ் பேசவில்லை.
இருவரும் ஒருவரையொருவர் கண்களால் பேசிக்கொண்டனரே தவிர, நேரில் பேசிக்கொண்டதே கிடையாது. ஒரு வழியாக இருவரும் பள்ளி இறுதியாண்டை நிறைவு செய்து, ஒரு வார்த்தை கூட பேசாமல் பிரிந்துசென்றனர்.
அன்று பிரிந்த அவர்கள் அதன்பின்னர் சந்தித்துக்கொள்ளவில்லை, இருப்பினும் இருவருக்குள்ளும் ஒரு ஏக்கம் இருந்தது. பள்ளி படிப்பை முடித்து இருவரும் கல்லூரியில் அடியெடுத்து வைத்தனர். சுமார், 3 வருடங்கள் கழித்து 2007 ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் பிறந்த நாள் வந்துள்ளது. மறுமுனையில் பேசியது சுனிதா.
காலங்கள் கடந்தும், நம்முடைய பிறந்தநாளை ஞாபகம் வைத்திருக்கிறாளே என எண்ணி வியந்துள்ளார் ஜெயப்பிரகாஷ். பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிவிட்டு, குறைந்த நிமிடங்கள் மட்டுமே சுனிதா பேசியுள்ளார். ஆனால் வாழ்நாளுக்கும் மறக்காத தருணமாக அமைந்துவிட்டது. அதன் பிறகு அவ்வப்போது பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
2011 ஆம் ஆண்டு நவம்பரில் நண்பன் ஒருவன் சுனிதாவிற்கு விபத்து ஏற்பட்டு கோவையில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஜெயப்பிரகாஷிடம் கூறியுள்ளான்.
அடித்து பிடித்து மருத்துவமனைக்குச் சென்று, ஜெயப்பிரகாஷ் பார்த்தபோது சுனிதா, முகம் சிதைந்து, தலையில் முடியில்லாமல் மூக்கு இல்லாமல், வாய் கிழிந்து பற்கள் இல்லாது கிடந்துள்ளாள்.
90 வயதைத் தாண்டிய பாட்டியைப் போல அவளது நடை இருந்தது. இருவர் கைதாங்கலாக பிடித்திருந்தார்கள். அதிர்ந்தே விட்டேன். உருக்குலைந்து கிடந்த சுனிதாவை பார்த்த அந்த நொடியில் தான் நான் முடிவு செய்தேன் இனி அவளை நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று.
ஆம், என்னுடைய முதல் காதலி, என் ஆசை நாயகி அவள். என்னைத் தவிர வேறு யாராலும் அவளை நன்றாக கவனித்துக் கொள்ள முடியாது என்று தோன்றியது. நேராக அவளிடம் சென்று என் காதலைச் சொன்னேன்.
இதனை கேட்டு சுனிதா மட்டுமல்ல எனது பெற்றோரும் அதிர்ந்தனர், ஒரு வழியாக எனது குடும்பத்தாரை சம்மதிக்க வைத்து, 2014 ஆம் ஆண்டு இருவரும் எளிமையாக திருமணம் செய்துகொண்டோம்.
இப்போது அவளைப் பார்த்து, அவளது தன்னம்பிக்கையை பார்த்து பிரம்மிக்கவே செய்கிறேன். என் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைத்ததாய் உணர்கிறேன். அவளால் என்னுடைய வாழ்க்கை அழகாகியிருக்கிறது என்கிறார் ஜெயப்பிரகாஷ் இப்போது, இவர்களின் அழகிய வாழ்க்கைக்கு பரிசாக ஆத்மியா, ஆத்மிக் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.