100 கிலோ மீற்றர் வேகத்தில் யாழ். குடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயல் : அவரச எச்சரிக்கை!!

வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலைகொண்டுள்ள கஜா புயல் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு பக்கமாக தென்மேற்கு திசை நோக்கி வலுப்பெறலாம் என எதிர்ப்பாரக்கப்படுகின்றது.

இந்நிலையில், கஜா புயல் காரணமாக எதிர்வரும் 14, 15ஆம் திகதிகளில் வடக்கு, வடமத்திய மாகாணங்கள், புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இதன்படி, யாழ். குடா நாட்டை அண்மித்த பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 100கிலோமீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும்.

மன்னார், புத்தளம், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் ஊடாகக் காற்று மணித்தியாலத்திற்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இதேவேளை, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அத்துடன், கிழக்கு கடற்பிராந்தியத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் பொத்துவில் முதல் திருகோணமலை, காங்கேசன்துறையினூடாக மன்னார் வரையிலான கடற்பிராந்தியங்களில் மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களை அறிவுறுத்தியுள்ளது.

மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை உடனே இராஜினாமா செய்ய வேண்டும்!!

தனது சுய மரியாதையை காப்பாற்றிக் கொள்ளும் வித்தில் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ச இராஜினாமா செய்ய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அவரின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் சற்று முன்னரை் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதேவேளை, பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த பதவி விலகவுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

பரபரப்படையும் கொழும்பு : சபாநாயகர் மேற்கொண்டுள்ள அவசர நடவடிக்கை!!

அவசரமாக கட்சி தலைவர்கள் கூட்டத்தை நாளை காலை நடத்துவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நாடாளுமன்றை கலைத்திருந்தார். ஜனாதிபதியின் இந்த செயலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் சுமார் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன்.

இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இன்று மாலை இடைக்கால தடைவிதித்திருந்தது.

இந்நிலையில், நாடாளுமன்றம் நாளை கூட்டப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நாளை காலை 8.30 மணியளவில் அவசரமாக கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்கு சபாநாயகர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார.

பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் மஹிந்த ராஜபக்ஷ?

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு மத்தியில் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட பிரதமர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்து கொள்வதாக மஹிந்த ராஜபக்ச கடிதம் மூலம் அனுப்பி அறிவித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் சட்ட விரோத பிரதமர் பதவியை தான் வைத்திருப்பது தனது சுயமதிப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தும். எனவே பதவியை இராஜினாமா செய்கிறேன் என மஹிந்த குறிப்பிட்டுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எப்படியிருப்பினும் இது தொடர்பில் ஜனாதிபதி ஊடக இயக்குனரிடம் வினவ முற்பட்ட போது அவரது தொலைபேசி செயழிலந்து காணப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைத்தமைக்கு எதிராக உயர் நீதிமன்றினால் இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ள நிலையில், மஹிந்தவின் ராஜினாமா தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

மஹிந்தவு ஆதரவான பெரும்பான்மை நிரூபிக்க முடியாத காரணத்தால் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவுக்கு அமைய அடுத்து வரும் சில நாட்களில் நாடாளுமன்றம் கூடவுள்ளது. இதன்போது பதவி நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மை நிரூபித்து மீண்டும் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வார்.

இதனை முன்னரே அறிந்த கொண்ட மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை ராஜினாமா செய்யும் நிலைப்பாட்டுக்கு தள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மஹிந்தவுக்கு ஆதரவாக 63 உறுப்பினர்கள் மாத்திரமே கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

200 வருட நீதித்துறைக்கு கிடைத்த பாரிய வெற்றி இது : எம்.ஏ.சுமந்திரன்!!

நாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை இலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான வெற்றி என்று எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பின்னர் இது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்வரும் 07ஆம் திகதிவரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணைக்குழுவுக்கும் உயர் நீதிமன்றம் அதிரடியாக இடைக்கால தடை விதித்துள்ளது!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்து எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நாடாளுமன்றை கலைத்திருந்தார். ஜனாதிபதியின் இந்த செயலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் சுமார் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதியரசர்களை கொண்ட குழு முன்னிலையில், இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்றை கலைப்பதாக ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்து இன்று மாலை உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து பொது தேர்தல் குறித்து இரண்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது தேர்தல் ஆணைக்குழுவுக்கும் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

நீரில் மூழ்கி காணாமல்போன மாணவன் : நண்பர்கள் மூலம் வெளிவந்த உண்மை!!

குருகொட ஓயாவில் குளித்துக்காண்டிருந்போது நீரில் மூழ்கி காணாமல்போன 17 வயதான மாணவன் தொடர்பில் யாருக்கும் தெரியாத இரகசியம் வெளிவந்துள்ளது.

தோலங்கமுவ மத்திய மகா வித்தியாலயத்தில் 12ம் தரத்தில் கல்வி பயிலும் அநுஜ தெவ்ரங்க பிரபாஸ்வர 17 வயதான மாணவன் யாருக்கும் தெரியாத இரகசியத்தை குறித்த மாணவனுடன் குளித்த நண்பர்கள் 7பேர் மரண பரிசோதனையின் போது தெரிவித்துள்ளனர்.

கடந்த 6ம் திகதி அநுஜ தெவ்ரங்க பிரபாஸ்வர உட்பட எட்டுப் பேர் புளத்கொஹூப்பிட்டிய பொலிஸ் பிரிவில் மோரோந்தோட்ட கல்ஹெடியான பிரதேசத்தில் குருகோடா ஓயாவில் மின்சக்தி ஆலைக்கு கீழ் குளித்துக் கொண்டிருந்தபோது, அநுஜ என்ற மாணவன் நீரில் மூழ்கி காணாமல்போயிருந்தார்.

குறித்த மாணவனின் சடலம் குறித்த இடத்திலிருந்து 300 மீற்றர் கீழே குருகொட ஓயா- கும்புக்கஸ் இடையே மிதந்து கிடந்த நிலையில் கடந்த 8ம் திகதி கண்டு பிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக விரிவான விசாரணைகளை புளத்கொஹூப்பிட்டிய பொலிஸ் ஆரம்பித்தது.

வரகாப்பொல அத்நாவல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவன் தோலங்கமுவ மத்திய மகா வித்தியாலயத்தில் 12ம் தரத்தில் கணிதப்பிரிவில் பயின்று வந்துள்ளார்.

உயிரிழந்த மாணவனின் பிறந்த தினம் நவம்பர் 2ம் திகதி என்பதால் அதற்கு நிகழ்வொன்றை நடாத்துவதற்காக முதல் நாள்நண்பர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், 6ம் திகதி வீட்டில் வகுப்புக்களுக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறி கேகலை நகருக்கு வந்துள்ளனர்.

அங்கு மதுபானம் மற்றும் ஏனைய பொருட்களும் வாங்கிக் கொண்டு குறித்த இடத்திற்குச் சென்று மதுபானம் அருந்தி குளித்து விட்டுச்செல்வதாக திட்டமிட்டுள்ளனர்.

இரண்டு மூன்று மணித்தியாலங்கள் குளித்துக்கொண்டிருந்போது தண்ணீரில் விழுந்த கைத்தொலைபேசியை தேடுவதற்கு ஏனைய நண்பர்கள் நீச்சலடித்துக் கொண்டிருந்தவேளை, கல்லின்மேல் உட்கார்ந்திருந்த அநுஜ தெவ்ரங்க நீரில் விழுந்து காணாமல்போயுள்ளார்.

இதனையடுத்து, இரண்டு மணித்தியாலங்கள் வரை அவரைத்தேடிய நண்பர்கள் அநுஜ கிடைக்காத்தால் தமது ஆடைகளை உடுத்திக்கொண்டு வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

அங்கு நடந்த சம்பவத்தை யாரும் வெளியில் சொல்வதில்லை என தீர்மானித்துக்கொண்டு வீட்டிற்கு செல்லஆயத்தமானபோது, நண்பர்கள் ஏழுபேரில் இருவர் மீண்டும் காணாமல்போன நண்பனைத்தேட ஓயாவுக்கு சென்றுள்ளனர். மிகுதி ஐந்து பேரும் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் மறுநாள் பாடசலைக்கு சென்ற இரு மாணவர்கள் எதையும் கேட்காமல் இருந்போது ஆசிரியர் விசாரித்துள்ளார். இதன்போது மாணவர்கள் இருவர் குறித்த சம்பவம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளனர்.

அதன் பின்னர் பாடசலை அதிபர் உட்பட்ட குழுவினர் உயிரிழந்த மாணவனின் வீட்டுக்குச்சென்று மாணவன் காணாமல்போனமை தொடர்பாக தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சூரன்போர்!!(படத்தொகுப்பு)

தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்காக இந்து மக்கள் அனுஸ்டிக்கும் விரதங்களில் மிக முக்கிய விரதமாக கந்தசஷ்டி திகழ்கின்றது.

இந்த கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று (13.11.2018) வவுனியாவில் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சூரன்போர் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியாவில் கந்தசாமி கோவில், தாண்டிக்குளம் முருகன் கோவில், கோவில்குளம் சிவன்கோவில், சிதம்பரபுரம் பழனி முருகன் கோவில், நெளுக்குளம் முருகன் கோவில், நெடுங்கேணி முருகன் கோவில் என்பவற்றில் சூரன் போர் சிறப்பாக இடம்பெற்றது.

பல வடிங்கள் எடுத்து வந்த சூரபத்மனை பக்த அடியார்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் முருகப்பெருமான் சங்காரம் செய்தார்.

வவுனியா கந்தசாமி கோவிலில் இடம்பெற்ற சூரன் போரில் முழுமையான படத்தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.

   

நாடாளுமன்றம் நாளை கூடுகின்றது?

நாடாளுமன்றம் நாளை கூட்டப்படலாம் என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உயர் நீதிமன்ற வாளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இதனை கூறியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நாடாளுமன்றை கலைத்திருந்தார். ஜனாதிபதியின் இந்த செயலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் சுமார் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதியரசர்களை கொண்ட குழு முன்னிலையில், இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்றை கலைப்பதாக ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால் தடையுத்தரவு பிறப்பித்து இன்று மாலை உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர்கள் இதனை கூறியுள்ளனர்.

ரத்ததால் பெயரை எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன் : அதிர்ச்சி தரும் பின்னணி!!

தமிழகத்தில் தன்னுடைய சாவுக்கு இவர்கள் தான் காரணம் என்று ரத்ததால் பெயரை எழுதி வைத்து விட்டு, இளைஞர் பள்ளி ஹெட்மாஸ்டர் அறையின் முன்பு தூக்குபோட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் கூட்டப்புளியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், அங்குள்ள பள்ளியில் பயிலும் மாணவியை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார்.
இதனால் அந்த மாணவியை அடிக்கடி சந்தித்து தன்னுடைய காதலை தெரிவிக்க முயற்சி செய்துள்ளார்.

இதை இப்படியே விட்டால், பிரச்சனை பெரிதாகிவிடும் என்பதால், இது குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோரும் அந்த இளைஞரை கண்டித்துள்ளனர். இருப்பினும் கிறிஸ்டோபர் மாணவிக்கு தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்ததால் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

விசாரணைக்கு அழைத்துச் சென்ற பொலிசார் அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறிய அவர், நேராகப் பள்ளிக்குச் சென்று அங்குள்ள தூணில் தனது ரத்தத்தைக் கொண்டு தன்னுடைய சாவுக்குக் இவர்கள் தான் காரணமானவர்கள் எனச் சிலரது பெயர்களை எழுதி கையெழுத்துப் போட்டுள்ளார்.

அதன் பின் தலைமை ஆசிரியரின் அறையின் முன்பாகத் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் யாரும் இல்லாத அதிகாலை நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பள்ளியில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளை பெற்றெடுத்த இலங்கைத் தாய்!!

கொழும்பு, சொய்சா மகளிர் வைத்தியசாலையில் பெண்ணொருவர் அதிஷ்டவசமாக ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

திருமணமாகி 3 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 5ஆம் திகதி சத்திர சிகிச்சை மூலம் ஒரே பிரசவத்தில் அழகிய 2 ஆண் குழந்தையும், 2 பெண் குழந்தைகளையும் இவர் பிரசவித்துள்ளார்.

சொய்சா வைத்தியசாலையின் மகப்பேற்று மருத்துவர் டாக்டர் ருவன் பாத்திரனவின் ஆலோசனைக்கிணங்க மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பின் குறித்த பெண்ணின் வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

விசேட மருத்துவ குழுவின் ஆலோசனைகளுக்கு இனங்க 4 குழந்தைகளும் சத்திர சிகிச்சையின் மூலம் பெற்றெடுக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளின் பெற்றோர்கள் இலங்கை விமானப்படையில் பணி புரிந்து வருகின்றனர்.

கோப்ரல் அயேசா தில்ஹானி மற்றும் கோப்ரல் தாரின் லக்மால் ஆகிய தம்பதியினரே இந்த குழந்தைகளின் பெற்றோர்களாவர்.

கொழும்பு உயர் நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு வெளியானது : ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு இடைக்காலத்தடை!!

நாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு, மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இதனால் கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. அதே நேரம் நாடாளுமன்றமும் ஜனாதிபதியால் 16 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பிரதமர் பதவிக்கு ரணில் மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் உரிமை கோரிவந்த நிலையில், மைத்திரி – மகிந்த தலைமையிலான புதிய அரசாங்கம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தது.

எனினும், நாடாளுமன்றை உடனடியாக கூட்டவேண்டும் என கோரிவந்த நிலையில், நாளைய தினம் (14ஆம் திகதி) கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாடாளுமற்றை கலைப்பதாகவும், எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதி பொது தேர்தல் இடம்பெறும் எனவும் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி வர்த்தமானி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்றை கலைப்பதாக தெரிவித்து ஜனாதிபதி வெளியிட்டிருந்த வர்த்தாமானியை இரத்து செய்யுமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், பொது அமைப்புகள் உயர் நீதிமன்றில் 17 மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

இந்த மனு பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதியரசர்களை கொண்ட குழு முன்னிலையில், இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

நீண்ட வாதப்பிரதிவாதங்கள் நடந்த பின்னர் இது தொடர்பில் மேலும் கால அவகாசம் தேவையென சட்ட மா அதிபர் தெரிவித்ததையடுத்து மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று காலை மனுக்கள் மீதான விசாரணைகள் இடம்பெற்றன. சட்டமாக அதிபர் தனது நிலைப்பாட்டை உயர் நீதிமன்றில் கூறியிருந்தார்.

குறிப்பாக நாடாளுமன்றை கலைப்பதாக ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானம் சரியென சட்டமா அதிபர் கூறியிருந்தார். வழக்கின் விசாரணைகள் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, நாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், இது குறித்த வழக்கு விசாரணைகளை அடுத்த மாதம் 18ஆம் திகதி வரையில் ஒத்திவைப்பதாகவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழில் களவாடப்பட்ட தாலிக்கொடியை மீண்டும் வீட்டில் போட்டுச் சென்ற கொள்ளையர்கள்!!

யாழ் – கொட்டடி , சூரிபுரத்தில் வீட்டில் கொள்ளையிடப்பட்ட 18 தங்கப் பவுன் தங்க நகைகளில் தாலிக்கொடியை மட்டும் நேற்று அதிகாலை வீட்டில் கொண்டு வந்து போட்டுச் சென்றுள்ளனர்.

குறித்த வீட்டிற்குள் 9ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் மூன்று கொள்ளையர்கள் குறித்த வீட்டுக்குள் புகுந்துள்ளனர். இவர்கள் தேடுதல் நடத்திய சமயம் வீட்டு உரிமையாளர் விழித்துக்கொண்டார். அவ்வாறு விழித்தவர் நிலைமையை ஊகித்து கொண்டு குரல் எழுப்பியுள்ளார்.

கணவரின் குரலைக் கேட்டு மனைவியும் விழித்தெழுந்த போது கத்தி முனையில் கணவரை அச்சுறுத்தியவாறு மனைவி அணிந்திருந்த தாலிக்கொடியை கழட்டுமாறு கொள்ளையர்கள் கேட்டுள்ளனர்.

இதற்கிடையில் கணவரை கத்தியால் வெட்டியுள்ளனர். இதனால் கணவரின் காலில் இருந்து இரத்தம் பெருகிய நிலையில் கணவர், கொள்ளையனின் கையில் இருந்த கத்தியை மடக்கிப் பறித்துள்ளார்.

இதனால் வீட்டில் இருந்த பொருட்களால் வீட்டு உரிமையாளரை தாக்கியவாறு மனைவியின் கழுத்தில் இருந்த 11 பவுன் தாலிக் கொடியினை அறுத்து எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இருவரும் தொடர்ந்து குரல் எழுப்பியமையினால் கையில் அகப்பட்ட 18 பவுன் நகைகளுடன் மூன்று கொள்ளையர்களும் வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டில் கைப்பற்றப்பட்ட கத்தி மற்றும் திருடர்கள் திறந்த கதவில் இருந்த கை அடையாளம் என்பவற்றினை சேகரித்து அதன் மூலம் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கத்தி அடையாளங்கள் தொடர்பில் குறித்த பகுதியில் கதைகள் வெளிவந்ததை அடுத்து களவாடப்பட்ட தாலிக்கொடியில் இருந்த காசுகள் அகற்றப்பட்ட 7 பவுனுக்கும் அதிக நிறைகொண்ட தாலிக்கொடி ஒன்று நேற்று காலையில் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மைத்திரி மற்றும் மகிந்த தரப்பு கூட்டணியின் பெயர் வெளியாகியது!!

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி என்ற கூட்டணியில் கீழ் தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இனங்கியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றிரவு நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், தேர்தல் பரப்புரை பணிகளை முன்னெடுக்க சுசில் பிரேமஜயந்த மற்றும் பசில் ராஜபக்ச தலைமையில் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

15 வயது மகளை 40 வயது நண்பருக்கு திருமணம் செய்து வைத்த தந்தை : அதிர்ச்சிப் பின்னணி!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயது மகளை 40 வயது நண்பருக்கு தந்தை கட்டாய திருமணம் செய்து வைத்த நிலையில் மகள் கர்ப்பமாகியுள்ளார்.

Al Ain நகரை சேர்ந்த நபர் ஒருவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் தனது மகளை 40 வயதான தனது நண்பருக்கு திருமணம் செய்து வைக்க அவர் முடிவெடுத்தார். 40 வயதான நபர் அதிக வரதட்சணை கொடுப்பேன் என உறுதி கொடுத்ததால் இந்த அதிர்ச்சி முடிவை எடுத்தார் தந்தை.

இந்த முடிவை சிறுமியின் தாய் எதிர்த்தும் பயனில்லை. இதையடுத்து சிறுமியின் விருப்பதையும் மீறி 40 வயதான நபருடன் அவருக்கு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் சில மாதங்கள் கணவருடன் வாழ்ந்த சிறுமி, அவருடன் தனது வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை எனவும், கணவர் தன்னை தவறாக நடத்துகிறார் எனவும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து மகளை நன்றாக கவனித்து கொள்ளும்படி மாப்பிள்ளையிடம் அறிவுறுத்தினார் தந்தை. இந்நிலையில் தனது 15 வயது மனைவியை அவர் பெற்றோர் வீட்டில் கொண்டு விட்டுள்ளார் கணவன். பின்னர் மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிந்து மீண்டும் தன்னுடன் வர அழைத்துள்ளார்.

ஆனால் சிறுமியின் தந்தை இதற்கு ஒப்பு கொள்ளாத நிலையில் நீதிமன்றத்தில் தனது மகளுக்கு விவாகரத்து கோரினார். இதையடுத்து சிறுமிக்கு விவாகரத்து வழங்கப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனாலும் 15 வயது மகளை திருமணம் செய்து வைத்த குற்றத்துக்காக தந்தை மீது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது.

800 வாரங்கள் கர்ப்பம் : 43 வயதில் 21 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!!

லண்டனை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனக்கு 20 குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது 21 வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

சூ ராட்ஃபோர்ட் – நோயல் தம்பதியினர்தான் 21 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். திருமணம் ஆனவுடன் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளவே எண்ணினோம், எனது 14 வயதில் முதல் குழந்தைக்காக கர்ப்பம் தரித்தேன் 43 வயதில் தற்போது 21வது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளேன்.

21 குழந்தைகளைப் பெற்றெடுக்க வாழ்நாளில் 800 வாரங்கள் கர்ப்பமாக இருந்துள்ளார் சூ. இனி நான் கர்ப்பம் தரிக்க மாட்டேன். அதேநேரம் என் புதுக் குழந்தையைக் கொஞ்சி விளையாட மற்ற குழந்தைகள் ஆர்வமாக உள்ளனர் என கூறுகிறார் தாய் சூ ராட்ஃபோர்ட் .