இலங்கையை நோக்கி வரும் காஜா சூறாவளி!!

மத்திய, வங்காள விரிகுடாவில் நிலவிய தாழமுக்க நிலை தற்போது சூறாவளிக் காற்றாக உருவாகி வருகிறது.

காஜா என்ற சூறாவளி காங்கேசன்துறையில் இருந்து 1100 கிலோ மீற்றருக்கு அப்பால் இலங்கையின் வடக்கு, கிழக்கு திசையில் இது நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று நண்பகல் வெளியிட்ட வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்குள் மேற்குத் திசை நோக்கி நகரக்கூடும்.

வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

பொத்துவிலில் இருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்குப் அப்பாலான கடல் பிரதேசத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்க முடியும்.

நாட்டின் தென்மேற்கு மற்றும் கிழக்குப் பிரதேச கடல் பகுதியில் காற்றின் வேகம் அடிக்கடி 40 முதல் 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

இவ்வாறான வேளையில் கடல் பிரதேசம் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது காற்றின் வேகம் உடனடியாக 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்த கடல் பிரதேசத்தில் கடல் உடனடியாக கொந்தளிப்பான நிலையை அடையக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கர்ப்பமடைந்திருப்பதாக கூறிய காதலியை உயிருடன் தீ வைத்து எரித்த சிறுவன்.. அதிர்ச்சி வாக்குமூலம்!!

விசாகப்பட்டினத்தில் கர்ப்பமடைந்திருப்பதாக கூறிய காதலியை, 17 வயது சிறுவன், உயிருடன் தீவைத்து எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தை சேர்ந்த 16 வயது மாணவி கடந்த 7ம் தேதி முதல் மாயமாகி விட்டதாக, சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமியின் காதலன் மற்றும் அவனுடனுடைய நண்பர்கள் அப்பகுதியில் சுற்றி திரிந்ததாக தெரியவந்தது.

அதன் பின் அந்த சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி தான் கர்ப்பம் அடைந்திருப்பதை போல் உணர்வதாக காதலனிடம் கூறியுள்ளார்.

இதனால் பயந்து போன அந்த சிறுவன், சிறுமிக்கு கர்ப்பம் கலைக்கும் மாத்திரைகள் கொடுத்துள்ளான். ஆனால் அதனை சிறுமி உண்ண மறுப்பு தெரிவித்திருக்கிறாள்.

இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரிந்தால் அவமானமாகிவிடும் என நினைத்த சிறுவன், 7ம் தேதியன்று ஆள் நடமாட்டம் இல்லாத பள்ளி மைதானத்திற்கு சிறுமியை வரவழைத்துள்ளான்.

அங்கு ஒரு இரும்பு கம்பியை கொண்டு சிறுமியின் தலையில் ஓங்கி அடித்துள்ளான். பின்னர் மயங்கி விழுந்த சிறுமியின் மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்துள்ளதாக பொலிசாரின் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார் தற்போது சிறுவன் மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த 2 சிறுவர்களை கைது செய்துள்ளனர். மேலும் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக பொலிஸார் காத்திருக்கின்றனர்.

ஆண் நண்பர்களுடன் இளம்பெண் செய்த செயலால் நடந்த விபரீதம்!!

இந்தியாவில் ஆண் நண்பர்களுடன் குடிபோதையில் காரை ஓட்டி வந்த பெண், எதிரே வந்த காரின் மீது மோதியதால் காரின் உள்ளே இருந்த பெண் பரிதாபமாக இறந்துள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த ஷிவானி மாலிக் என்ற 22 வயது பெண், கடந்த வெள்ளிக்கிழமை தன் ஆண் நண்பர்களுடன் கிளப்பிற்கு சென்று மது அருந்திவிட்டு, இரவு 11 மணியளவில் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். மது அருந்திய நிலையில் ஷிவானி காரை ஓட்டியதால், கார் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

கார் பஞ்சாபி பாக் மேம்பாலம் அருகே வந்த போது, எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதனால் அந்த காரின் உள்ளே இருந்த பெண் ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார்.

இது குறித்து தகவல்கள் தெரிவிக்கையில், விபத்திற்குள் சிக்கிய காரில் பயணம் செய்த குடும்பத்தினர் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்துவிட்டதாகவும், உள்ளே 4 பேர் இருந்ததாகவும், அதில் பூனம்(38) என்ற பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் அந்த பெண்ணின் 13 வயது மகளும் பலத்த காயமடைந்துள்ளார். ஆண் நண்பர்களுடன் சேர்ந்து குடி போதையில் காரை ஓட்டி வந்த பெண்ணால், தற்போது 13 வயது சிறும் தன்னுடைய தாயை இழந்து நிற்கிறாள்.

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் மூன்றாம் நாள்!

வவுனியா ஸ்ரீ கந்தசாமி  கோவிலின் கந்த சஷ்டி உற்சவதத்தின்  மூன்றாம்  நாள்  நேற்று  10.11.2018   சனிக்கிழமை  இடம்பெற்றது .

காலைமுதல்  கிரியைகள் இடம்பெற்று  ஆறுமுகபெருமானுக்குஅபிசேகங்கள் இடம்பெற்று  மதியம் வசந்தமண்டபபூஜையுடன்  சுவாமி  உள்வீதி  வலம்  வந்த நிகழ்வு இடம்பெற்றது .மேற்படி உற்சவத்தின் போது  பெருமளவிலான  கந்தசஷ்டி  விரதமிருக்கும் அடியார்கள்  கலந்து கொண்டனர்.

மாலையில் வசந்தமண்டப பூஜையின்  பின் முருகபெருமான்  உள்வீதி வெளிவீதி வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது.

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் மூன்றாம் நாள்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் மூன்றாம்  நிகழ்வுகள் நேற்று  10.11.2018   சனிக்கிழமைமிக சிறப்பாக இடம்பெற்றன.

காலைமுதல்  அபிசேகங்கள் இடம்பெற்று  கிரியைகளின் பின்னர் வசந்தமண்டப பூஜையும் தொடர்ந்து முருகபெருமான்  வீதி வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது.


வவுனியா வடக்கு காஞ்சிரமோட்டையில் மீள்குடியேறிய மக்கள் அடிப்படை வசதிகளற்ற நிலையில்!!

வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டை மக்கள் மீள்குடியேறிய போதும் அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு சிரமங்களைக்கு முகம் கொடுத்துள்ளனர்.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காஞ்சிராமோட்டை மற்றும் அதனை அண்டிய காட்டு பூவரசங்குளம், நாவலர் பண்ணை போன்ற கிராமங்களில் 1977ம் ஆண்டு முதல் 300 குடும்பங்கள் வரை வாழ்ந்துவந்தனர்.

1987 ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிலர் காணாமல் போயினர். இதனையடுத்து இப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்கள் வீடுகளிலும், வேறு பிரதேசங்களுக்கும் நகர்ந்து சென்றனர். இன்னும் சிலர் இந்தியாவிற்கு அகதிகளாக சென்றிருந்தனர்.

2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் முதற்கட்டமாக 9 குடும்பங்கள் குடியேறினர். அதில் 6 குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இல்லாமையால் மீண்டும் இடம்பெயர்ந்து சென்ற நிலையில் 3 குடும்பங்கள் தொடர்ந்தும் வசித்து வந்தனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த 38 குடும்பங்கள் காஞ்சிரமோட்டை மற்றும் அதன் அயல் கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

தற்போது மின்சார வசதிகள் அற்ற நிலையிலும் காட்டு மிருகங்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், இம் மக்கள் போக்குவரத்து வசதிகள், குடிநீர் வசதிகள் என எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் காட்டு விலங்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வாழ்ந்து வருகின்றனர்.

பாடசாலை மாணவர்கள் கூட சுமார் 12 கிலோமீற்றர் தூரத்திற்கு நடந்து சென்றே தமது கல்வியைத் தொடருகின்றனர். அத்துடன், நீண்டகாலமாக அம் மக்கள் இக் காணிகளில் வசிக்காமையால் அவை மரங்களாலும், புதர்களாலும் நிறைந்து காடுகள் போல் காட்சியளிக்கின்றது.

அவற்றை துப்பரவு செய்து அக் காணிகளில் மக்கள் குடியேறுகின்ற போது வன இலாகா திணைக்களம் அம்மக்களின் காணிகளை வன இலாகாவிற்கு சொந்தமானது என தெரிவித்து அவர்கள் குடியேறுவதற்கான அனுமதியை வழங்க மறுத்து வருகிறார்கள். அம் மக்கள் வாழ்ந்தமைக்கான தடயங்கள் பல இருந்தும் வன இலாகா அதிகாரிகள் அம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தடை ஏற்படுத்துவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இம் மக்களுக்கான தற்காலிக வீடுகள் வழங்கப்பட்டு தற்போது தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 5 இலட்சம் பெறுமதியான வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்ட போதும் அந்த வீட்டினை கட்டி முடிக்க முடியாத வகையில் வன இலாகாவினர் செயற்படுகின்றனர்.

இதனால் எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் பாடசாலை செல்லும் சிறுவர்கள், கைக்குழந்தைகளுடன் கொட்டும் மழைக்கு மத்தியில் இம் மக்கள் தற்காலிக குடிசைகளில் கண்ணீருடன் வாழ்ந்து வருகின்றனர்.

இதேவேளை, இம்மக்களினுடைய மீள்குடியேற்றப் பிரச்சனை தொடர்பில் மாவட்ட மற்றும் பிரதேச ஓருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் ஆராயப்பட்டதுடன், பல்வேறு அரசியல்வாதிகளும் குறித்த பகுதிக்கு சென்று மக்களினுடைய பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடிய போதும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வாள்வெட்டுச் சம்பவம் : ஒருவர் வைத்தியசாலையில்!!

வவுனியா பட்டக்காடு பகுதியில் இன்று (11.11.2018) மதியம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மன்னார் வீதி பட்டக்காடு பகுதியில் இருவருக்குக்கிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் இவ் வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் 23 வயதுடைய இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா தாண்டிக்குளத்தில் ஸ்கானர் இயந்திரத்துடன் ஒருவர் கைது!!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இ்ன்று (11.11.2018) ஸ்கானர் இயந்திரத்துடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தாண்டிக்குளம் இராணுவ முகாமிக்கு அருகே குறித்த சந்தேக நபரின் உடமைகளை சோதனையிட்ட சமயத்தில் ஸ்காணர் இயந்திரத்தினை வைத்திருந்த குற்றச்சாட்டில் நெடுங்கேனி பகுதியினை சேர்ந்த நபரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இறப்பிலும் பிரியாத தம்பதி : கணவர் இறந்தது கூட தெரியாமல் அருகில் இருந்த மனைவி!!

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கணவர் இறந்த செய்தி கேட்டு அடுத்த நிமிடமே மனைவியும் இறந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.

திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியை சேர்ந்தவர் 83 வயதான மகாலிங்கம். இவருடைய மனைவி அபூர்வ மணிக்கு 73 வயதாகிறது. இந்த தம்பதியினருக்கு 5 மகன்கள், ஒரு மகள் உள்ளார். இதில் 2 மகன்கள் சொந்த ஊரிலும், மற்ற 3 மகன்கள் சென்னையிலும் தங்கி வேலை செய்து வருகின்றனர். மகள் திசையன்விளை பகுதியில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.

வயது முதிர்ச்சியின் காரணமாக தம்பதியினர் இருவருமே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளனர். உள்ளூரில் தனித்தனியே வசித்து வரும் இரு மகன்களும் அடிக்கடி பெற்றோரையும் சென்று கவனித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் மூத்தமகன் மகாலிங்கம், தாய், தந்தையை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மகாலிங்கம் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவர் இறந்தது கூட தெரியாமல் தாயும் இருந்துள்ளார். இதனையடுத்து தன்னுடைய உறவினர்கள் அனைவருக்கும் மகாலிங்கம் தகவல் கொடுத்துள்ளார்.

வீட்டிற்கு அதிகமானோர் வருவதை பார்த்த அபூர்வமணி, நடந்தது பற்றி கேட்டுள்ளார். அப்போது தான் அவருக்கு கணவர் இறந்தது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அபூர்வ மணி, சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்து உயிரை விட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் இரண்டாம் நாள்!

வவுனியா ஸ்ரீ கந்தசாமி  கோவிலின் கந்த சஷ்டி உற்சவதத்தின்  இரண்டாம் நாள்  நேற்று முன்தினம்  09.11.2018  வெள்ளிகிழமை இடம்பெற்றது .

காலைமுதல்  கிரியைகள் இடம்பெற்று  ஆறுமுகபெருமானுக்குஅபிசேகங்கள் இடம்பெற்று  மதியம் வசந்தமண்டபபூஜையுடன்  சுவாமி  உள்வீதி  வலம்  வந்த நிகழ்வு இடம்பெற்றது .மேற்படி உற்சவத்தின் போது  பெருமளவிலான  கந்தசஷ்டி  விரதமிருக்கும் அடியார்கள்  கலந்து கொண்டனர்.

மாலையில் வசந்தமண்டப பூஜையின்  பின் முருகபெருமான்  உள்வீதி வெளிவீதி வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது.

இறுதிச் சடங்கின் போது திடீரென எழுந்து நின்ற முதியவர் : தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

ராஜஸ்தான் மாநிலத்தில் இறந்த முதியவர் இறுதிச்சடங்கில் போது, திடீரென உயிருடன் எழுந்துள்ள சம்பவம் அனைவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 95 வயதான ராம். வயது முதிர்ச்சியின் காரணமாக படுக்கையிலே கிடந்த ராம், தீபாவளியன்று எழாமல் நீண்ட நேரம் உறங்கி கொண்டிருந்துள்ளார்.

அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர் ராம் இறந்துவிட்டதாக குடும்பத்திற்கு தெரியப்படுத்தினர். உடனே அவருடைய உறவினர்கள் அனைவரும் வீட்டிற்கு வருகை தர ஆம்பித்தனர்.

உறவினர்கள் அனைவரும் அழுதுகொண்டிருக்கு, பூசாரியும், இறுதிச்சடங்கிற்கான வேலைகளை கவனிக்க ஆரம்பித்துள்ளார். அப்போது ராமின் உடலை கழுவ, அவருடைய நெஞ்சில் குளிர்ச்சியான நீரை ஊற்றியுள்ளனர். அடுத்த நிமிடமே திடீரென ராம் கண்விழுத்துள்ளார்.

இதனை பார்த்ததும் அங்கிருந்த உறவினர்கள் பயத்தில் திகைத்து போய் நின்றுள்ளனர். அதன் பின்னர் தான் தெரியவந்துள்ளது, ராம் நீண்ட நேரம் உறங்கிக்கொண்டிருந்துள்ளார் என்பது.

இந்த சம்பவம் குறித்து கூறியுள்ள அவருடைய மகன், தந்தை இறந்து விட்டதால், அனைவரும் சோகத்தில் மூழ்கிப்போனோம். ஆனால் அவர் திடீரென விழித்ததும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இதுதான் எங்களுடைய உண்மையான தீபாவளி என நினைத்தோம். அதனை நாங்கள் வெகுவிமரிசையாகவும் கொண்டாடினோம் என தெரிவித்துள்ளார்.

வவுனியா தாண்டிக்குளத்தில் புகையிரத்தில் இருந்து வீழ்ந்து வைத்தியர் படுகாயம்!!

வவுனியா தாண்டிக்குளத்தில் புகையிரத்தில் இருந்து வீழ்ந்து வைத்தியர் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதம் இன்று மதியம் 12.30 மணியளவில் தாண்டிக்குளம் புகையிரத நிலையத்தில் நிறுத்தியவுடன் முல்லைத்தீவை சேர்ந்த வைத்தியர் ஒருவர் இறங்க முற்பட்டுள்ளார்.

எனினும் புகையிரத நிலையத்தின் தளம் குறித்த பகுதி வரைக்கும் நீள்மானதாக இன்மையால் அவர் திடீரென பள்ளமான பகுதியில் வீழ்ந்துள்ளார். இதன் காரணமாக காலில் உடைவு ஏற்பட்ட நிலையில் குறித்த வைத்தியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் இரண்டாம் நாள்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் இரண்டாம் நிகழ்வுகள் கடந்த 09.11.2018 வெள்ளிகிழமையன்று மிக சிறப்பாக இடம்பெற்றன.

காலைமுதல்  அபிசேகங்கள் இடம்பெற்று  கிரியைகளின் பின்னர் வசந்தமண்டப பூஜையும் தொடர்ந்து முருகபெருமான்  வீதி வளம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது.



11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானம் : கீழே குதித்த வீரருக்கு நிறைந்த பரிதாபம்!!

இந்தியாவில் ராணுவ பயிற்சியின் போது, பாரசூட் விரியாததால், 11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த விமானப்படை வீரர் உயிரிழந்தார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்தீப் சிங். இவர் 5 ஆண்டுகளுக்கு முன் இந்திய விமானப்படையில் இணைந்தார். இந்நிலையில் ஆக்ரா ராணுவ பயிற்சி பள்ளி வளாகத்தில், பறக்கும் விமானத்திலிருந்து பாராசூட் மூலம் கீழே குதிக்கும் பயிற்சியில் அவர் ஈடுபட்டார்.

விமானமானது 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, ஹர்தீப் சிங் கீழே குதித்தார். அப்போது, அவரது பாராசூட் விரியாததால், அங்கிருந்து ஹர்தீப் தரையில் விழுந்தார். விழுந்த வேகத்தில் படுகாயமடைந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

துஷ்பிரயோகம் செய்யப்பட்டு உயிரோடு எரித்து கொல்லப்பட்ட 17 வயது சிறுமி : சிறுவர்களின் வெறிச்செயல்!!

ஆந்திராவில் 17 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பில்லாலா பத்மாவதி (17). இவர் தனது வீட்டருகில் வசிக்கும் ராஜூ என்ற தனது வயதுடைய சிறுவனை காதலித்து வந்தார். இதையறிந்த பத்மாவதியின் பெற்றோர் இருவரையும் கண்டித்தனர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பத்மாவதி அங்குள்ள காட்டு பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் பத்மாவதி பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்படுவதற்கு முன்னர் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக பத்மாவதியின் காதலன் ராஜூ உட்பட மூன்று சிறுவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். மூவரும் தான் இந்த செயலை செய்தார்கள் என சந்தேகிக்கும் பொலிசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இலங்கையில் உலக முடிவை தேடிச் சென்ற ஜேர்மன் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!!

உலக முடிவை தேடிச் சென்ற ஜேர்மன் நாட்டு பெண் ஒருவர் அங்கிருந்து கீழே விழுந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது நண்பர்களுடன் நுவரெலியாவிலுள்ள உலக முடிவை பார்க்க சென்ற ஜேர்மன் பெண் புகைப்படம் எடுப்பதற்காக முயற்சித்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்து கீழே விழுந்துள்ளார்.

இந்த பெண்ணை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.