மைத்திரிக்கு அமெரிக்க அரசிடமிருந்து வந்த கடும் எச்சரிக்கைக் கடிதம்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் கடும் சீற்றமடைந்துள்ள அமெரிக்க அரசு, தனது உயர்மட்டங்களில் இருந்து மிகத் தீவிரமான அழுத்தங்களைப் பிரயோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றது.

இதன் ஓர் அங்கமாக நேற்று அமெரிக்கக் காங்கிரஸிடம் இருந்து காரசாரமான அவசரக் கடிதம் ஒன்று நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் ஜனாதிபதி கடும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என அரச வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் காரணமாக இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளை நிறுத்தவேண்டிய நிலை ஏற்படலாம் என அமெரிக்கா தனது கடிதத்தில் கடுமையாக எச்சரித்துள்ளது.

அமெரிக்கக் காங்கிரஸ் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் எலியட் ஏஞ்சலினால், ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கக் காங்கிரஸ் சபையின் 3 பிரதிநிதிகள் இந்தக் கடிதத்தில் ஒப்பமிட்டுள்ளனர். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“உங்கள் நாட்டின் நாடாளுமன்றத்தை இடைநிறுத்திப் பிரதமரை அரசமைப்புக்கு முரணான விதத்தில் நீக்கிய உங்கள் நடவடிக்கை குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறும் தற்போதைய நெருக்கடிக்கு ஜனநாயக வழிமுறைகள் ஊடாக தீர்வைக் காணுமாறும் நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

2015 இல் நீங்கள் தெரிவு செய்யப்பட்டமை இலங்கையில் ஜனநாயக சீர்திருத்தம் பொறுப்புக் கூறப்படுதல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தியது.

நல்லிணக்க செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான உங்கள் அரசின் நடவடிக்கைகளும் அரசமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் இலங்கையில் ஜனநாயக ஆட்சிக்கான புதிய சமிக்ஞையை வெளிப்படுத்தின.

இந்த நடவடிக்கைகளுக்கு பதிலாக அமெரிக்கா இலங்கையுடனான உறவுகளில் முதலீடு செய்வதற்கான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

எனினும், துரதிஷ்டவசமாகச் சமீபத்தைய நடவடிக்கைகள் சரி செய்யப்படாவிட்டால் உங்கள் நாட்டின் ஜனநாயக அபிவிருத்தி மற்றும் அண்மைய வருடங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என நாங்கள் அச்சமடைந்துள்ளோம்.

அண்மைய நடவடிக்கைகள் இலங்கையில் அரசியல் நெருக்கடியை உண்டு பண்ணியுள்ளன. சபாநாயகர் கரு ஜயசூரிய இரத்தக்களறி அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளார்.

இலங்கையில் சமீபத்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் எம்.சி.சி. திட்டத்துக்கும், அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிக்கும் அமெரிக்காவின் ஏனைய திட்டங்கள் மற்றும் ஈடுபாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இலங்கை – அமெரிக்க உறவுகள் நல்லாட்சி ஜனநாயக விழுமியங்களுக்கான அர்ப்பணிப்பு என்ற பகிரப்பட்ட இலக்குகளில் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. இதன் காரணமாக நாடாளுமன்றம் தலையீடுகளின்றித் தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு அனுமதிப்பதன் மூலம் இந்த விழுமியங்களிற்கான உங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

யுவதி நஞ்சருந்தி மரணம் : இளைஞன் கைது!!

அம்பாறையில் காதலனுக்கும் காதலிக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் காதலி நஞ்சருந்தி மரணித்தமை தொடர்பில் இளைஞரை நேற்று கைது செய்து தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர் மூதூர் கங்குவேலி பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது 9ஆம் திகதி அம்பாறை பகுதியிலிருந்து மட்டக்களப்பு ஊடாக சேருநுவர பகுதிக்கு வருகை தந்திருந்த யுவதி தனது காதலனுக்கு தன்னை சந்திப்பதற்காக சேருநுவர பகுதிக்கு வருமாறு கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துள்ளார். குறித்த இளைஞன் அவ்விடத்திற்கு மோட்டார் சைக்கிளில் வருகை தந்துள்ளார்.

அதனையடுத்து இருவருக்குமிடையில் சிறு நேரம் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாகவும் பின்னர் இருவருக்குமிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

பின்னர் குறித்த யுவதி அருகிலுள்ள மரத்தடிக்குச் சென்றதாகவும், சிறிது நேரமாகியும் மரத்தடியிலிருந்து காதலி வராததை அடுத்து அவ்விடத்துக்குச் சென்ற போது காதலியான ஆனந்தன் ரஜனி என்ற யுவதி நஞ்சருந்தி கொண்டிருப்பதை அவதானித்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை உடனடியாக மோட்டார் சைக்கிளில் யுவதியை ஏற்றிக்கொண்டு அருகிலுள்ள சேருநுவர பிரதேச வைத்தியசாலைக்கு சென்றதாகவும் இதனையடுத்து மேலதிக சிகிச்சைக்காக மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் தெரியவருகின்றது.

ஆனால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலே குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த யுவதியின் சடலம் தற்பொழுது மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த யுவதி அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவருகின்றது.

குறித்த யுவதியின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் காதலனை கைது செய்துள்ளதுடன் மரண விசாரணைகளை மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ. ஜே.எம். நூருல்லாஹ் மேற்கொண்டார்.

இம்மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சடலத்தைக் கொண்டு செல்லுமாறும், குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறும் சேருநுவர பொலிஸாருக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி நூருல்லாஹ் கட்டளையிட்டுள்ளார்.

வவுனியா இறம்பைக்குளத்தில் தனியாரின் காணியில் இராணுவம் விவசாய செய்கை!!

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் இராணுவத்தினர் விவசாயம் செய்து வருவதாக வவுனியா நகரசபை மற்றும் வவனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவர்களிடம் காணி உரிமையாளர் முறையிட்டதையடுத்து குறித்த காணியை அவர்கள் பார்வையிட்டனர்.

யுத்த காலத்தில் 5 ஏக்கர் வயல் காணியை பாதுகாப்புக் காரணங்களுக்காக தமது கட்டுப்பாட்டில் எடுப்பதாகவும் அதற்காக 25000 ரூபா தருவதாகவும் தெரிவித்து உரிமையாளரிடம் இருந்து குறித்த காணியை இராணுவம் அபகரித்ததாக தெரிவித்த நகரசபை தலைவர் தற்போது குறித்த காணியில் இராணுவத்தினர் நெல் விதைப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந் நிலையில் குறித்த காணி தொடர்பாக அரசியல் மேல் மட்டங்களுக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் இதற்கு தீர்வினை பெற்று கொடுக்க அனைவரும் கரிசனை கொள்ள வேண்டும் எனவும் வவுனியாநகர சபை மற்றும் பிரதேசசபை தலைவர்கள் தெரிவித்தனர்.

மகிந்தவின் அதிரடி நடவடிக்கை : சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியில் இணைந்தார்!!

பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டுள்ளார். கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று முற்பகல் 11 அளவில் அவருக்கு கட்சியில் இணைந்தமைக்கான அங்கத்துவ அட்டை வழங்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்த 50 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துக்கொண்டனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துக்கொண்டவர்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 15 பேர் அணியின் உறுப்பினர்கள் சிலரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவர் என்பதுடன் அந்த கட்சியின் ஆலோசர்களில் ஒருவராக இருந்து வந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பலர் இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துக் கொண்டமையானது, ஸ்ரீலங்கா சுநதந்திரக்கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 50 லட்சத்து 6 ஆயிரத்து 837 வாக்குகளை பெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சுமார் 14 லட்சத்து 97 ஆயிரத்து 234 வாக்குகளை மாத்திரமே பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சி 36 லட்சத்து 40 ஆயிரத்து 620 வாக்குகளை பெற்றது. இதனடிப்படையில், இரண்டு பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருந்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிறிய கட்சியாக மாறியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வவுனியா இறம்பைக்குளத்தில் 82 வயது முதியவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

வவுனியா இறம்பைக்குளத்தில் 82 வயதுடைய முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (11.11.2018) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்க்கப்பட்டவர் வல்லிபுரம் தங்கவடிவேல் வயது 82 என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாருடன் இணைந்து தடவியல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் ஒளிவிழா!!

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் இன்று (10) ஒளிவிழா நிகழ்வுகள் கல்லூரியின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் முத்து ராதாகிருஸ்ணன் கலந்துகொண்டிருந்தார்.

ஒளி விழா நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனம், ஏஞ்சல் நடனம், மீனவ நடனம், அபிநய நடனம் மற்றும் நாடகம் என்பன அரங்கேற்றப்பட்டிருந்தது.

பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற ஒளிவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பிரதம விருந்தினருக்கு ஒளிவிழா நினைவுப்பரிசில் பாடசாலை அதிபரால் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்
.
நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அதிதிகளுக்கு ஒளிவிழா நினைவுப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது. இறுதியில் நத்தார் தாத்தாவின் நடன நிகழ்வுகள் நடைபெற்றிருந்தது.

ஒளிவிழா நிகழ்வில் வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தின் பங்குத்தந்தை ம.ஜெயபாலன் அடிகளார் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கியிருந்தார்.

வவுனியாவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!!

வவுனியாவில் தேக்கவத்தைப் பகுதியில் இன்று (10.11) மாலை 3மணியளவில் ஹெரோயினை தமது உடமையில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று மாலை தேக்கவத்தைப்பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது ஹெரோயினை தமது உடமையில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் அவரிடமிருந்து 520 மில்லிக்கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாகவும்,

35 வயதுடைய பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவரையே கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

அலரி மாளிகையை விட்டு வெளியேற மீண்டும் மறுக்கும் ரணில்!!

இலங்கையின் பிரதமர் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க தான் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையிலேயே ரணில் விக்ரமசிங்க தங்கியிருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை மேற்கொள்வதாக அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை இன்று சந்திப்பதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை உலுக்கிய பெரும் சோகம் : நீர்வீழ்ச்சியில் உயிரிழந்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகின!!

பலாங்கொடை – பொலிஹூல் ஓயா, பஹன்துடா நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளன. நீர்வீழ்ச்சியில் இன்று பிற்பகல் குளிக்க சென்ற மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. அனர்த்தத்தில் 25 வயதான செல்வரட்ணம் திசான், 23 வயதான சரவணபவன் கோபிசன், 25 வயதான கோபாலகிருஷ்ணன் சாரங்கன் ஆகியோரே உயிரிழந்தனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இந்த மாணவர்கள் மேலும் சில மாணவர்களுடன் இன்று நீர் வீழ்ச்சியில் குளிக்க சென்றுள்ளனர்.

உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளம் மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன் : காரணம் என்ன தெரியுமா?

இந்தியாவில் மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் கோலிபூர் கிராமத்தை சேர்ந்தவர் பிகாஷ் (32). இவருக்கும் சகரிகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2014-ல் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது.

பிகாஷ் கொல்கத்தாவில் பிளம்பராக பணிபுரிந்த நிலையில் ஆண்டுக்கு சில நாட்கள் மட்டுமே தனது வீட்டுக்கு வருவார்.
இந்நிலையில் தனியாக வசித்து வந்த சகரிகாவுக்கு சுரேஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பை பிகாஷின் பெற்றோர் சமீபத்தில் கண்டுப்பிடித்ததோடு இது குறித்து மகனுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து உடனடியாக தனது வீட்டுக்கு வந்த பிகாஷ் இது குறித்து மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். அதற்கு, தான் சுரேஷை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் சகரிகா கூறினார்.

மேலும், விருப்பம் கொண்டவருடன் சேர்ந்து வாழ்வது தவறில்லை என உச்சநீதிமன்றமே கூறிவிட்டது என கூறினார். இதை கேட்டு பிகாஷ் அதிரடி முடிவை எடுத்தார்.

அதன்படி தனது மனைவி சகரிகாவை அவரின் காதலன் சுரேஷுக்கே திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து இது குறித்து தனது குடும்பத்தார் மற்றும் சகரிகா குடும்பத்தாரிடம் பேசி சம்மதம் பெற்றார்.

இதன் பின்னர் பிகாஷ் முன்னிலையிலேயே சுரேஷ் – சகரிகா திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் சுகரிகா தனது குழந்தையை உடன் அழைத்து சென்றார்.

ஜனாதிபதியின் அதிரடி : 58 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட நிலைமை!!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்தமையினால் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்தப்படுத்திய முன்னாள் உறுப்பினர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

புதிய உறுப்பினர்கள் 58 பேர் இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளனர். ஓய்வூதியத்தை இழக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயர் விபரங்கள் வருமாறு,

மலிக் சமாரவிக்ரம
சரத் ​​பொன்சேகா
கருணாரத்ன பரணவிதான
கே காதர் மஸ்தான்
ஹெக்டர் அப்பூஹாமி
சிசிரா குமார அபேசேகர
துஷாரா இந்துனில் அமரேசேன
ஆனந்த அளுத்கமகே
எஸ்.எம். மொஹமட் இஸ்மாயில்
அரவிந்த குமார்
வேலு குமார்
நாலகா பிரசாத் கொல்லன்னே
கவிந்திரன் கோடீஸ்வரன்
சந்திம கமகே
மலித் ஜயதிலக
கவிந்த ஹேஷான் ஜயவர்தன
மைல்வாகம் திலகராஜா
மயந்த திசாநாயக்க
மொஹமட் நசீர்
சுஜித் சஞ்ஜய் பெரேரா
அசோக பிரியந்த
ஹிருணிகா பிரேமச்சந்திர
பந்துலால் பண்டாரிகொட
தரக்க பாலசூரிய
மொஹமட் மன்சீர்
எஸ்.எம். மரிக்கார்
இம்ரான் மஹ்ரூப்
ஆஷு மாரசிங்க
இஷாக் ரஹ்மான்
முஜிபூர் ரஹ்மான்
ஹர்ஷன ராஜகருணா
ஜயம்பதி விக்கிரமரத்ன
துசித்தா விஜேமன்ன
ரோகினி குமாரி விஜேரத்ன
சாமந்தி விஜேசிரி
ஹேஷா விதானகேஜ்
சந்தியா சமரசிங்க
எஸ்.சிவமோகன்
சத்துர சந்தீப் செனரத்ன
விஜேபால ஹெட்டியாராச்சி
இந்திக்கா அனுரு ஹெரத்
துஷ்மந்த
காஞ்சனா விஜேசேகர
பிரசன்ன ரணதுங்க
பிரசன்ன ரணவீர
தாரானத் பஸ்நாயக்க
எஸ் பிரேமரத்ன
சனத் நிஷாந்த பெரேரா
பியால் நிஷாந்த டி சில்வா
அனுருத ஜயரத்ன
டிவி சானக
சிசிரா ஜயகோடி
அங்கஜன் ராமநாதன்
எஸ் வியாழேந்திரன்
ஞானமுத்து ஸ்ரீ நேசன்
சாந்தி ஸ்ரீ ஸ்கந்தராஜா
சார்லஸ் நிர்மலாநாதன்
நலிந்த ஜயதிஸ்ஸ

கையடக்க தொலைபேசியில் பெண்ணின் புகைப்படம் : மின் கம்பத்தில் தொங்கிய இளைஞன்!!

பொலிஸ் அதிகாரிகள் தனது கைத்தொலைபேசியை உடைத்து எறிந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நபரொருவர் மின்கம்பத்தில் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார்.

களுத்துறை நகரின் மத்தியில் பெற்றோல் போத்தல் மற்றும் லைட்டருடன் மின்கம்பத்தில் ஏறி நேற்று காலை போராட்டம் நடத்தியுள்ளார்.

தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறி தீ மூட்டி தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.

போராட்டம் நடத்தியவர் களுத்துறை தெற்கு ஹொடபரகஹகேனே பகுதியில் வசிக்கும் கோரளகே சுஜித் தர்மசிறி என்ற 34 வயது நபராவார்.

களுத்துறை பொது மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் காணாமல்போன குறித்த நபரின் கைத்தொலைபேசியில், பெண்ணொருவரின் புகைப்படம் இருந்துள்ளதுடன் அது தொடர்பாக அந்த பெண்ணின் உறவினர்களுடன் முரண்பாடு ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து குறித்த நபரை கைது செய்த பொலிஸார் அவரை பிணையில் விடுதலை செய்திருந்த நிலையில், அவரது தொலைபேசியை அவரைக்கொண்டு பொலிஸார் உடைத்தெறிய வைத்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மின்சார சபைக்கு சொந்தமான வண்டியும் தீயணைப்பு படைக்கு சொந்தமான வண்டியும் குறித்த இடத்திற்கு வரவழைக்கப்பட்ட நிலையில், குறித்த நபரின் அட்டகாசத்தை நகரிற்கு வந்த பல மக்கள் கண்டுள்ளனர்.

இந்நிலையில் மேல் மாகாண சுகாதார அமைச்சர் மற்றும் களுத்துறை நகரசபைத் தலைவரும் மின்சார சபையில் வாகனத்தில் ஏறி இரண்டு முறை குறித்த நபரை இறக்க முயச்சித்தபோதிலும் அவர் மின்கம்பத்தின் நடுவிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் பொலிஸார் அங்கிருந்த வாகனங்களை அகற்றியுள்ளனர். பகல் 12.30 மணியளவில் குறித்த இடத்திற்கு சென்ற பிக்குவின் கோரிக்கைக்கு அமைய அவர் மின்கம்பத்திலிருந்து இறங்கியுள்ளார்.

அதன்பின்னர் பிக்கு அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப கோரி நபர் ஒருவர் நூதன போராட்டம்!!

வடக்கில் இன நல்லிணக்கம் சீர்குலைந்திருப்பதாகவும் அதனை மீள் கட்டியெழுப்ப வேண்டும் என வலியுறுத்தி பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் இன்று (10.11) வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இப் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், நாட்டின் தெற்கு பகுதியில் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக உள்ளார்கள். ஆனால் வடக்கில் அந்த நிலைமை இல்லை. எனவே இங்குள்ள மக்களும் தெற்கினைப் போன்று சமாதானமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்கள் சிங்கள மக்களை சந்தேகமாக பார்க்கக் கூடாது. அவ்வாறு இருந்தால்தான் இந்த நாட்டினை கட்டியெழுப்ப முடியும். வடக்கில் 10 வீதமானவர்கள் தீவிர மனப்பான்மையுடன் இருக்கிறார்கள். அந்த நிலைமை இல்லாது ஆக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த டீமன் ஆனந்த என்பவர் இன்று காலையில் கிளிநோச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு!!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் குறிப்பிட்ட காலத்திற்குள் முன் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் தோற்கடிக்க வேண்டிய அவசியம் ஜனாதிபதிக்கு தேவைப்பட்டது.

எனினும் அதற்கு தேவையான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை பெற்றுக்கொள்ளவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தோல்வி கண்டுள்ளார்.

இந்த தோல்வியை ஈடுசெய்யும் வகையிலேயே அவசரமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளர்.

கடந்த சில வாரங்களாக இலங்கையில் நிலவிய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு மிகவும் முக்கியமானதாக காணப்பட்டது.

எனினும் பலசுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு மறுத்துள்ளது.

ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கே ஆதரவு வழங்கவுள்ளதாக கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில், பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதில் ஜனாதிபதிக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டது.

அதேவேளை தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு இணங்க மறுத்து விட்டன.

அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து மேலதிக உறுப்பினர்களைப் பிடுங்கியெடுக்கும் முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

இந்தநிலையில், மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்படும் நிலை உருவானது.

இதன் காரணமாக ஜனாதிபதி வேறுவழியின்றி, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவுக்குச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, நேற்று மாலை ஊடகங்களிடம் தகவல் வெளியிட்ட அரசாங்க பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு போதிய பெரும்பான்மை இல்லை என்று ஒப்புக் கொண்டிருந்தார். 104 அல்லது 105 உறுப்பினர்களின் ஆதரவே தமது அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு 15 நாடாளுமன்ற உறுப்பினர்களை தன்வசம் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

சர்கார் படக் காட்சிகள் நீக்கம்!!

முறைப்படி தணிக்கை செய்து வெளியான சர்கார்’ படத்தின் சில காட்சிகளை நீக்கியது தொடர்பில் தயாரிப்பாளர்களான சன் பிக்சர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் சர்கார். இப்படம் வெளியானவுடன் அதிமுகவினர் சில காட்சிகளுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள்.

இது பெரும் சர்ச்சையாக உருவானதைத் தொடர்ந்து, படக்குழுவினர் அக்காட்சிகளை நீக்க ஒப்புக் கொண்டனர். மறுதணிக்கை செய்யப்பட்டு சில காட்சிகள் நீக்கப்பட்டு, படக்குழுவினருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், ‘சர்கார்’ சர்ச்சை தொடர்பாக, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், சர்கார் திரைப்படத்தில் வரும் சில காட்சிகளுக்கு எதிராக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பல திரையரங்குகள் முன் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, அதனால் திரையரங்க உடமைகளுக்கு சேதம் விளைவித்தனர்.

அதனைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் வேண்டுகோளை ஏற்றுத் திரையரங்குகளுக்கு, திரைப்படம் காண வரும் பொது மக்களின் உயிருக்கும்,

உடைமைக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது பாதுகாக்கும் ஒரே நோக்கோடு சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் ஓரிரு காட்சிகள் நீக்கப்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

பந்தயத்திற்காக அட்டையை சாப்பிட்ட நபருக்கு 8 வருடங்களின் பின் நேர்ந்த விபரீதம்!!

சாம் பலார்ட் என்பவர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு ரக்பி விளையாட்டு வீரர் ஆவார். 2010 ஆம் ஆண்டில் இவர் பந்தயம் ஒன்றின்போது தோட்டங்களில் இருக்கும் இரத்தம் உறுஞ்சும் அட்டையை விழுங்கியுள்ளார்.

அப்போது பந்தயத்தில் அவர் வெற்றிபெற்றிருந்த போதிலும் 8 வருடங்கள் கழித்து 2018 ஆம் ஆண்டில் வாழ்க்கையில் தோல்வியை தழுவியுள்ளார். அதாவது அவர் இறக்க நேரிட்டுள்ளது.

இருபது வயதை எட்டிய நண்பர்களுடன் அமர்ந்து ரெட் வைன் மற்றும் அல்ஹகோல்களை உட்கொள்ளும்போது மேசையின் மீது சென்ற அட்டையை உண்பதற்கு சகபாடிகள் விடுத்த பந்தயத்தை ஏற்றமையாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை குறித்த இளைஞனின் தாயான கேட்ரி பலார்ட் 7 நியூஸ் சிட்னிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.