வவுனியாவில் தேக்கவத்தைப்பகுதியில் நேற்று (08.11) மாலை3.30 மணியளவில் 3 பேரை ஹெரோயினை தமது உடமையில் மறைத்து வைத்திருந்ததற்காக கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று மாலை தேக்கவத்தைப்பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது ஹெரோயினை தமது உடமையில் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் மூவரைக் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து 700மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாகவு, தேக்கவத்தைப்பகுதியைச் சேர்ந்த மூவரையே கைது செய்துள்ளதாகவும்,
மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றய தினம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள நித்தகைகுளம் உடைப்பெடுத்தமையால் அப்பகுதி அனர்த்தத்தில் சிக்கியுள்ளது.
அதில் சிக்குண்ட சிலரை மீட்க முடியாத இக்கட்டான சூழலில் சிக்கி இருக்கின்றதாகவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு தகவல் வழங்கியும் அசட்டையீனமாக செயல்படுகின்றனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 1983ஆம் ஆண்டு குளத்தின் கட்டுமான பணியானது நடைபெற்றிருந்தவேளை நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வேளை குளத்தின் அணைக்கட்டு பாரிய உடைப்பு ஏற்பட்டு அன்றிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை குளம் நீர் இன்றி காணப்பட்டது.
மேற்படி கால வேளையில் அதன் கீழான வேளாண்மையும் பாதிப்படைந்திருந்தது. 2018 ஆம் ஆண்டு வடமாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் 15 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்டிருந்தது.
இக்குளம் 07.11.2018 அதிகாலை 12.10 மணியளவில் உடைப்பெடுக்கும் போது நீரின் கொள்ளளவு 15 அடியாக காணப்பட்டது.
இந்நிலையில் அப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்கள் வெள்ளத்தில் சிக்கி இருந்தனர். இவர்களை தேடி சென்ற உறவினர்கள் வெள்ளத்தின் மத்தியில் பகல் 11 மணியளவில் குளம் பெருக்கெடுத்த நிலையை அவதானித்தனர்.
இதன் பின்னர் மீட்கக்கூடிய உறவுகளை கடும் போராட்டத்தின் மத்தியில் மீட்டெடுத்தனர். இருந்தும் அங்கிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவன், மனைவி, அவர்களது 12 வயது மகன் ஆகியோருடன் உறவுகளான மூவர் உட்பட ஆறு நபர்களை மீட்க முடியாத நிலையில் பிற்பகல் 2 மணியளவில் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளரான லிங்கேஸ்குமார் என்பவருக்கு தகவல் வழங்க அவர் தனக்கு ஏற்கனவே தகவல் கிடைத்துள்ளதாகவும் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் இரவு ஏழு முப்பது மணிக்கு பின்னரே குமுழமுனை பகுதிக்கு உரிய பணிப்பாளர் கொண்ட குழாமால் வருகை தர முடிந்தது.
பகல் வேளையிலேயே பயணிக்க முடியாத காட்டாற்று வெள்ளத்துடன் உடைப்பெடுத்த குள நீரும் சேர்ந்து ஓடும் வேளையில் இரவில் எவ்வாறு மீட்பு பணியை மேற்கொள்வது.
பகல்வேளையில் நிலவரத்தை பார்வையிட்டு முடிவெடுக்க வேண்டிய அதிகாரி அவரது அசமந்தப் போக்கினால் சிக்கியிருக்கும் ஆறு உயிர்களை பொருட்டாக மதிக்காது இரவில் வருகை தந்து இராணுவத்தினரிடமும், கடற்படையிடமும்,
விமானப்படையினரிடமும், பொலிசாரிடமும் உதவி கோரிய போது தர மறுத்து விட்டதாகவும், இப்போது மீட்பு பணியை மேற்கொள்ள முடியாதெனவும் பொறுப்பற்ற வகையில் கூறி தனக்கு தகவல் கிடைக்கவில்லை எனவும் மேற்படி பொறுப்புக்கூறும் நடவடிக்கையிலிருந்து நழுவ முற்பட்டார்.
அதன் பின்னர் வருகைதந்த இராணுவத்தினர் 10 மீட்டர் தூரம் வரை முன்னேறி திரும்பிச் சென்றுவிட்டனர். அதன்பின் மக்களால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தகவல் வழங்கியதன் பெயரில் இணைப்பு அழைப்பின் (Conference call) மூலம் முப் படையினரிடமும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினருடனும் அழைப்பை ஏற்படுத்தி பேசியதன் பின் அனர்த்தத்தில் சிக்குண்டவர்களுடனும் பேசினர்.
பின் இரவு வேளையாகையாலும், காலநிலை சீரின்மையாலும் நாளை அதிகாலையிலே விமானப்படையினர் மீட்பு பணியை மேற்கொள்வதாக தெரிவித்திருந்ததாக தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவம் என்பது ஏற்கனவே திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும் ஒரு திட்டமாகும். வெள்ளமோ, சுனாமியோ ஓர் அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் மீட்பு பணியாளர்களை தேடுவது அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணியல்ல.
முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ பிரிவு பணிப்பாளருக்கு போதிய பயிற்சியோ, அறிவுறுத்தல்களோ இல்லாது பணி பொறுப்பினை வழங்கியமையால் அனர்த்தத்திற்குள்ளான மக்கள் உயிரிழக்கும் தறுவாயில் உள்ளனர்.
மேற்படி விடயத்தை அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மத்திய நிலையமும் சம்பந்தப்பட்ட அமைச்சும் கருத்திலெடுத்து எதிர்வரும் காலத்திலாவது உயிர்களுடன் விளையாடாது ஆக்கபூர்வமான பணியை செய்ய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
என்ற 50 வயது பெண்மணிதான் மிகவும் வயதான தாய் என அழைக்கப்படுகிறார். காரணம், இவருக்கு 30 மற்றும் 31 வயதில் 3 மகள்கள் மற்றும் 8 பேரக்குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது 50 வயதில் கர்ப்பமாகியுள்ளார்.
முதல் கணவரை விவாகரத்து செய்த பின்னர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள இவர் செயற்கை கருத்தரித்தல் மூலம் தற்போது கர்ப்பமாகியுள்ளார்.
இதற்காக, £7,000 பவுண்ட் செலவு செய்துள்ளதாக கூறும் இவர், மிகவும் பாதுகாப்பாக இந்த குழந்தையையும் பெற்றெடுத்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறுகிறார்.
11 வயதான தனது சகோதரியை இரண்டு வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்த தனது மூத்த சகோதரர், இந்த மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கம்பளை ஏத்கால பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்றுவரும் குறித்த சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிபுரிவதாக கூறப்படுகிறது.
எனவே, தாய் இல்லாத சிறுமி , இரண்டு வருடங்களாக வீட்டிலேயே பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அந்த சிறுமியின் தாயார் வீட்டிற்கு வந்திருந்தபோது, தனது மூத்த மகனின் செயல்கள் பிடிபட்டபின், கம்பளை பொலிஸிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
தாய் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தை அறிந்த கொண்ட சந்தேக நபர் வீட்டை வீட்டு ஓடிச்சென்றுள்ளார்.
இந்த நிலையில் மகியங்கணை பிரதேசத்தில் மறைந்திருந்தவேளை பொலிஸாரால்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா மடுகந்த பொலிஸ் பிரிவிலிருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று (08.11) மடுகந்த, மயிலங்குளம் பகுதியில் குளத்துடன் காணப்படும் வயல் கிணறு ஒன்றிலிருந்து மாடு மேய்ப்பதற்குச் சென்ற இளைஞர் ஒருவர் உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட சடலம் ஒன்றினை அவதானித்துள்ளார். இதையடுத்து மடுகந்த பொலிசாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற மடுகந்த பொலிசார் சடலத்தினை பார்வையிட்டுள்ளதுடன் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த ஆண் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் தொடர்பாக தகவல்கள் எதுவும் பொலிசாருக்குக்கிடைக்கவில்லை 45 தொடக்கம் 55 வயதிற்குட்பட்டவராக இருக்கலாம் என்று தெரிவித்த பொலிசார் உயிரிழந்தவரை இனங்காணுவதற்கு பொதுமக்களிடம் உதவியை பொலிசார் கோரியுள்ளனர்.
இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை மடுகந்த பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய நான்கரை ஆண்டுகள் நிறைவடையும் முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர இதனை கூறியுள்ளார்.
சபாநாயகர் தலைமையில் நேற்றைய தினம் நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சபாநாயகர் 14 ஆம் திகதி நிச்சயமாக வாக்கெடுப்பு நடத்தப்படும் எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தை கலைக்க தயாராகி வருகின்றனர். அரசியலமைப்புச்சட்டத்தின் அமைய நாடாளுமன்றத்தை கலைக்கும் உரிய ஏற்பாடுகள் உள்ளன.
ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என்ற போதிலும் 19 அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் மூலம் ஜனாதிபதிக்கு இருந்த அந்த அதிகாரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது எனவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிசூட்டில் ஒருவர் பரிதாபமாக பலியாகியதோடு, ஏராளமானோர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மதுபான விடுதியில், மர்ம நபர் இரவு 11.20 மணிக்கு (உள்ளுர் நேரப்படி) சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தில் 11 முதல் 20 பேர் காயமடைந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் கூறுகையில், நான் என்னுடைய தந்தையிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது மதுபான விடுதியை நோக்கி வந்த ஒரு இளைஞர் தன்னுடைய கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு பாதுகாவல் அதிகாரியை சுட்டுக்கொன்றனர்.
அதன் பிறகு உள்ளே சென்ற அந்த இளைஞர், 30 முறை சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். மேலும் அவர் கையில் வைத்திருந்த புகை குண்டையும் உள்ளிருந்தவர்கள் மீது தூக்கி எறிந்தார் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தாக்குதல் நடத்திய இளைஞர் இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் அதற்கான முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரசிகரை நாட்டை விட்டு வெளியேறுமாறு விராட் கோஹ்லி கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரது இந்த செயல் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தனது ரசிகர் ஒருவருக்கு அளித்த பதில் சர்ச்சைக்குள்ளானது. அதாவது, ரசிகர் ஒருவர் தனக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களை விட இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய வீரர்களின் ஆட்டத்தை காணவே பிடிக்கும் என கூறியிருந்தார்.
இதனைப் பார்த்த கோஹ்லி, அந்த ரசிகரை இந்தியாவில் வாழக் கூடாது என்றும், மற்ற நாடுகளை நேசித்தால் எதற்கு நம் நாட்டில் இருக்கிறாய்? வேறு நாட்டிற்கு சென்று ஏன் வாழக்கூடாது? உனக்கு எது முதன்மையானது என்பதை தேர்ந்தெடு என்று பதிலளித்தார்.
கோஹ்லியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நெட்டிசன்கள் அவருக்கு எதிராக சரமாரியாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோஹ்லி கருத்தால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தியடைந்துள்ளது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அனிருத் சவுத்ரி கூறுகையில், ‘கிரிக்கெட் வாரியம் ரசிகர்களை மதிக்கிறது. அவர்களின் தேர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நான் சுனில் கவாஸ்கர் பேட்டிங்கை ரசிப்பேன்.
அதோடு விவியன் ரிச்சட்ஸ், கிரீனிட்ஸ், தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ் ஆடுவதையும் ரசிப்பேன். சச்சின், சேவாக்கை போலவே மார்க் வாஹ், பிரையன் லாரா உட்பட பலரின் ஆட்டங்களை ரசிப்பேன். நாடு மற்றும் அரசியலைக் கடந்தது சிறப்பான கிரிக்கெட்டை மதிக்கும் பண்பு வேண்டும் என நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் மற்றொரு அதிகாரி ஒருவர் கூறுகையில், ரசிகர்களை வெளிநாட்டுக்கு செல்ல சொல்லும் விராட் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், Puma போன்ற நிறுவனங்கள் நூறு கோடி ரூபாய்க்கு அவரிடம் ஒப்பந்தம் செய்ய விரும்பாது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருமானம் வீழும். அது வீரர்களின் ஊதியத்தையும் பாதிக்கும். இப்படி கூறியிருப்பதன் மூலம் தனது ஒப்பந்தத்தையும் கோஹ்லி மீறியிருக்கிறார். விராட் சிறந்த வீரர், சிறந்த மனிதராகவும் மாற முயற்சிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பண்புள்ள அரசியலை மேற்கொண்டு வரும் நபர் என்ற வகையில் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பழிவாங்க போவதில்லை என ஐக்கிய தேசிய்க்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் சந்தேகம் மற்றும் அச்சத்தை போக்கும் வகையில் அவருக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ள ரணில் விக்ரமசிங்க, எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியை பழிவாங்க போவதில்லை எனக் கூறியுள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் கட்சித் தலைவர்கள் மனோ கணேசன், பழனி திகாம்பரம், வீ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று காலை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி முன்வைத்த மூன்று பிரதான விடயங்களை மனோ கணேசன் பகிரங்கப்படுத்தியிருந்தார். இதனையடுத்தே ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதிக்கு தனது செய்தியை அனுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்தால், ரணில் விக்ரமசிங்கவுக்கு பதிலாக வேறு ஒருவரை பிரதமராக தெரிவு செய்யுமாறு, ஜனாதிபதி கூறியதாக மனோ கணேசன் குறிப்பிட்டிருந்தார்.
ரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்ந்தும் இணைந்து பணியாற்ற முடியாது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இது சம்பந்தமான மனோ கணேசன் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பின்னர், ரணில், மனோ கணேசனை அழைத்து பேசியுள்ளார்.
தான் எந்த வகையிலும் ஜனாதிபதியையோ அவரது அணியை பழிவாங்க மாட்டேன் எனவும் தான் அங்கம் வகிக்கும் பண்புள்ள அரசியலில் பழிவாங்கல் உள்ளடக்கப்படவில்லை எனவும் இதனால், எந்த சந்தேகமும் அச்சமும் கொள்ள வேண்டாம் என ஜனாதிபதியிடம் கூறுமாறு ரணில் விக்ரமசிங்க, மனோ கணேசனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் ஒரு தவறை செய்து அதனை மறைக்க பல தவறுகளை செய்யாது, நடந்த தவறுகளை மறந்து மீண்டும் இணைந்து செயற்பட அழைப்பு விடுப்பதாகவும் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். எனினும் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி எப்படி தீர்க்கப்பட போகிறது என்பதை தன்னால் சரியாக கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் மின்சாரம் தாக்கியதன் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதிய காத்தான்குடி – அன்வர் பள்ளி வீதியைச் சேர்ந்த ஏ.எல்.எம்.அனீஸ் (வயது39) என்பரே இன்று அதிகாலையில் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போது பெய்து வரும் அடை மழை காரணமாக குறித்த நபர் தனது வீட்டு வளவில் மின் விளக்கைப் பொருத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.
அதற்காக போக்கஸ் மின் விளக்கு ஒன்றை பொருத்திக் கொண்டிருந்த போது விளக்கின் மின்சாரத் தொடர்பு வயர் வீட்டு முற்றத்தில் தேங்கிக் கிடந்த மழைநீரில் தொடர்புபட்டு குறித்த நபர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.
இதன் போது பாதிக்கப்பட்ட குறித்த நபரை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டிருந்ததாக வைத்தியாசாலை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
வவுனியா, நாகர்இலுப்பைக்குளம் பகுதியில் வீதிக்கு வந்த 12 அடி நீளமான முதலையால் இன்று(08.11) காலை பதற்ற நிலை ஏற்பட்டது.
வவுனியா, நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் வசிக்கும் மக்கள் காலை வீதியில் பயணித்த போது 12 அடி நீளமான முதலை ஓன்றை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து பதற்றமடைந்த மக்கள் முதலையை விரட்ட அவ்விடத்தில் கூடிய போது முதலை வீதியோரத்தில் இருந்த சிறிய பற்றைக்குள் புகுந்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டது.
இதனையடுத்து ஊர்மக்கள் பொலிசாருக்கு கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை வந்த வவுனியா பொலிசார், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை வரவழைத்தனர். அவர்கள் முதலையை மீட்டு பாதுகாப்பான இடத்தில் விடுவதற்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
மொனராகலையிருந்து திருகோணமலைக்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி ஒன்று மூதூர் பச்சை நூல் பகுதியில் பாதையை விட்டு விலகி வயலுக்குள் சென்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடும் மழை பெய்து கொண்டிருந்த வேளையில், சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக பஸ் வயல் வெளிக்குள் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் பயணிகள் யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
19ஆவது அரசியலமைப்பின் படி ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் உள்ளதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஒருவருக்கு நாடாளுமன்றதை ஒத்திவைக்கவும் கலைக்கவும் அதிகாரம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2002ஆம் ஆண்டு பதவி நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கமே 19ஆவது அரசியலமைப்பை கொண்டு வந்தது.
இந்த நிலையில் அந்த 19ஆவது திருத்தத்திலும் நிலைமைகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி ஒருவர் நாடாளுமன்றத்தை கலைக்கலாம் என்று பகுதி உள்ளதாக சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
இது அவரின் தனிப்பட்ட தீர்மானப்படியோ அல்லது நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தின் படியோ நாடாளுமன்றத்தை கலைக்கமுடியும் என்றும் சரத் என் சில்வா கூறியுயுள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் 3 வயது குழந்தையின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,
தீபாவளி அன்று வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சசிகுமார் என்பவரின் 3 வயது மகள் பட்டாசு விபத்தில் பலத்த காயமடைந்தார். அவரது வாய் சிதைந்த நிலையில் அலறித் துடித்தாள், அவளது வாயில் ஹர்பால் என்ற வாலிபர் பட்டாசு வைத்து வெடித்துள்ளார்.
உடனடியாக குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையின் வாய்ப்பகுதியில் 50 தையல்கள் போடப்பட்டுள்ளன. தொண்டையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவளது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இதுகுறித்து குழந்தையின் தந்தை பொலிசில் புகார் அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கொடிய விஷம் கொண்ட பாம்புடன் பயணம் செய்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். லட்சுமணன் என்பவர் தனது பைக்கில் சென்றுள்ளார். பயணத்தின்போது, சாலையோர டீக்கடையின் அருகே பைக்கை நிறுத்திவிட்டு டீ குடித்தார்.
அங்கிருந்து மீண்டும் புறப்படுவதற்காகப் பைக்கை எடுத்தபோது பெட்ரோல் டேங்கின் அடியில் இருந்து பாம்பு தலைகாட்டியுள்ளது.
இதனைப்பார்த்த அவர் அலறி கூச்சல் எழுப்பியதால் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் உதவிக்கு ஓடிவந்துள்ளனர்.
பாம்பு இன்ஜின் பகுதிக்குள் சுருண்டு படுத்துக்கொண்டது. அதனால், டீக்கடையில் இருந்து வெந்நீரை வாங்கி வந்து பெட்ரோல் டேங்கின் மேலாக ஊற்றினார்கள். அதில் பாம்பு இறந்துவிட்டது. அதன் பின்னரே பாம்பை வெளியே எடுத்துள்ளனர்.
6 அடி நீளம் கொண்ட அந்தப் பாம்பு விஷம் நிறைந்த கட்டுவிரியன் வகையைச் சார்ந்தது. டீ குடிக்க பைக்கை நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.
வேலூர் அருகே நீரில் மூழ்கிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அருகே உள்ள சதுப்பேரி பகுதியில் நீரில் மூழ்கியபடி இளம்பெண்ணின் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நீரில் சடலமாக மிதந்தவரின் பெயர் அனிதா என்பதும், தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது.
தீபவளியன்று அனிதாவிற்கும் பெருமாள் நகர் பகுதியில் வசித்துவரும் அவருடைய கணவர் கதிரேசனுக்கும் இடையில் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென அனிதா சடலமாக கிடந்ததால், அவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.