இறந்துபோன பிரபல இசையமைப்பாளர் : வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாக நம்பும் மனைவியின் பரிதாபம்!!

திருவனந்தபுரம் அருகே நடந்த கோர விபத்தில் இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் மற்றும் அவரது இரண்டு வயது குழந்தை தேஜஸ்வனி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

மகள் தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலா பாஸ்கரும் அவரது மனைவியும் பலத்த காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பாலா பாஸ்கர் ஒருவார சிகிச்சைக்கு பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள மனைவி லட்சுமி, தனது கணவர் மற்றும் குழந்தையின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ளார்.

இதனை அவரது மனம் ஏற்றுக்கொள்ளவில்லை, தீவிர சிகிச்சையில் இருந்து லட்சுமி வீடு திரும்பியுள்ளதால், எதுவும் பேசாமல் மிகவும் அமைதியாக இருக்கிறார்.

இந்நிலையில், தனது கணவர் வெளிநாட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றுள்ளதாக லட்சுமி நம்பியிருக்கிறார் என இறந்துபோன பாலாபாஸ்கரின் நண்பர் தேவ் தெரிவித்துள்ளார்.

பூட்டிய காருக்குள் ஒரு மணி நேரம் தவித்த பச்சிளம் குழந்தை : பெற்றோர் செய்த செயல்!!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பூட்டிய காருக்குள் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை பெற்றோரை காணாமல் தவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மீருட்டில் நொவ்சாண்டி சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் இருந்து ஒரு குழந்தையின் அழுக்குரல் கேட்டது.

இதனைத் தொடர்ந்து அங்கு சுற்றி இருந்த பொது மக்கள் அந்த காரின் அருகாமையில் கூடி விட்டனர். இருப்பினும் பெற்றோர் வர தாமதமானதால் காவல்துறையினருக்கு பொது மக்கள் தகவல் அளித்துள்ளனர்.

உடனடியாக அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கார் கண்ணாடியை உடைத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்டதும் சோர்வாக காணப்பட்ட குழந்தையை மருத்துவ பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னரே காரை நிறுத்தி இருந்த இடத்திற்கு பெற்றோர் திரும்பினர். அங்கிருந்த கூட்டத்தை கண்டதும் தாயார் நழுவி விட குழந்தையை மீட்ட தந்தையை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர்

விஜய் படத்தை முதல் காட்சியாக பார்த்த மாணவர்களுக்கு நேர்ந்த கோர சம்பவம் : கதறிய பெற்றோர்!!

தீபாவளி அன்று விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படத்தை பார்த்துவிட்டு திரும்பிய இரண்டு மாணவர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 18 வயதான தினேஷ்குமார் மற்றும் சித்திக் ஆகிய இருவரும் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இருவரும் விஜய் ரசிகர்கள். அதனால் தீபாவளி அன்று முதல் காட்சியிலேயே விஜய் நடித்த சர்கார் படம் பார்க்க சென்றுள்ளார்கள்.

அதன்படி காலை 6 மணி காட்சி பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் இருவரும் சென்றார்கள். படம் பார்த்துவிட்டு 9.45 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிச் சென்றுகொண்டு இருந்தபோது, எதிரே வந்த லாரியும், மோட்டார்சைக்கிளும் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இதில் படுகாயம் அடைந்த தினேஷ்குமாரும், சித்திக்கும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இளம் மகன்கள் இறந்துபோனது குறித்து பெற்றோர் கதறி அழுதுள்ளனர்.

இந்தோனேசிய விமான விபத்து திட்டமிட்ட சதியா? அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல்கள்!!

உலக மக்களை கண்ணீரில் மூழ்கடித்த இந்தோனேசிய விமான விபத்தானது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்ற தகவல் கசியத்துவங்கியுள்ளன.

189 பேரை பலிவாங்கிய போயிங் 737 மாக்ஸ் 8 ரக விமானம் தொடர்பில் அதிகாரிகள் தரப்பில் ஏற்பட்ட கடும் அக்கறையின்மையே முக்கிய காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த விமானத்தின் Flight Data Recorder-ல் பதிவான தகவல்களின் அடிப்படையிலேயே விமான விபத்து தொடர்பான காரணிகள் அம்பலமாகியுள்ளன. மட்டுமின்றி விபத்தில் மர்மம் இருப்பதாக பயணிகளின் உறவினர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

இத்தனை பிரச்னைகள் இருந்து குறித்த விமானத்தை ஏன் பயணத்திற்கு அனுமதித்தீர்கள் என்ற கேள்வியும் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் வேகத்தை காட்டும் கருவியானது தொடர்புடைய விமானத்தின் கடந்த 4 பயணங்களிலும் கோளாறாக இருந்தது என தெரியவந்துள்ளது.

மேலும் விபத்துக்குள்ளான விமானத்தின் CVR எனப்படும் Cockpit Voice Recorder இதுவரை நிபுணர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. விமானம் புறப்பட்டு வெறும் 13 நிமிடங்களிலையே விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்துள்ளது.

இச்சமயம் விமானிகள் பேசிக்கொண்ட உரையாடல்கள் பதிவான கருவி கிடைக்கும் எனில் விபத்துக்கான முக்கிய ஆதாரம் சிக்கும் என கூறப்படுகிறது.

இதனிடையே 737 போயிங் விமானத்தின் வேகத்தை காட்டும் கருவியில் கோளாறு இருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு போயிங் அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.

சர்வதேச அளவில் இதுவரை போயிங் நிறுவனம் 219 விமானங்களை கைமாறியுள்ளனர். மேலும் அடுத்த சில ஆண்டுகளில் மொத்தம் 4,564 விமான கட்டுமானங்களுக்கான ஒப்புதலையும் பல்வேறு நிறுவனங்களில் இருந்தும் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு முதல் சேவையை துவங்கிய போயிங் 737 மாக்ஸ் ரக விமானம் விபத்தில் சிக்குவது இது முதல் முறையாகும்.

மீண்டும் தாழமுக்கம் : இன்று முதல் இலங்கையில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம்!!

இலங்கைக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது தற்போது மேற்குத் திசையில் நகர்ந்து கொண்டிருப்பதால் மழையுடனான காலநிலையில் நாளை முதல் மாற்றம் ஏற்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.

தாழமுக்கமானது எதிர்வரும் 9 ஆம் திகதி தென்கிழக்கு வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் அந்தமான் தீவிற்கு அண்மையில் உருவாகும் சாத்தியமுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிலையப் பொறுப்பத்திகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்த மழை பெய்து வருகின்றது.

இதனால் பல கிராமங்களிலுள்ள உள்வீதிகள் மழை நீரில் மூழ்கியுள்ளதோடு, உள்ளுர் போக்குவரத்துக்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

இவற்றைவிட அண்மைக்காலமாக மழையின்றி காய்ந்து வரண்டுபோய் கிடந்த சிறிய குழங்கள் மழை நீரில் நிரம்பியுள்ளதுடன், வாய்க்கால்கள், குட்டைகள், ஏரிகளும், நிரம்பிக்காணப்படுகின்றன.

இதேவேளை, இவ்வாறான சூழலில் பொது மக்கள் மற்றும் வாகன சாரதிகள் மிக அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்!!

முல்லைத்தீவில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகளின் வருகை அண்மைய நாட்களாக அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைகளுக்கு மத்தியில் இலங்கையின் இயற்கையை ரசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகைத்தருகின்றனர்.

மேலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தினால் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தனது நாட்டு பயணிகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்திருந்தது.

எனினும், முல்லைத்தீவுக்கு வழமையான நாட்களை விட தற்போது அதிகளவான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைத் தருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய நிர்வாண மனிதர்!!

காலி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்று வரும் போட்டியில் நிர்வாணமாக நுழைந்த நபரினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

போட்டியின் இரண்டாவது நாளான நேற்று, ஓய்வு நேரத்தில் வெளிநாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் திடீரென மைதானத்திற்குள் நுழைந்துள்ளார்.

இதன்போது நிர்வாணமாக மைதானத்திற்குள் நுழைந்த நபர் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த நபரை பிடிப்பதற்கு பலர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் அவர் மைதானத்திற்குள் குழப்பம் விளைவித்துள்ளார். பலத்த முயற்சியின் பின்னர் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

மகிந்தவிற்காக என்னால் சேலையைக் கட்ட முடியாது : குமார வெல்கம அதிரடி!!

என்னால் மகிந்தவிற்காக சேலை கட்டிக் கொண்டு நாடாளுமன்றில் அமர முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மகிந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற ஆதரவு கொடுப்பேன். ஆனாலும் என்னால் சேலையைக் கட்டிக்கொண்டு நாடாளுமன்றில் அமர முடியாது.

அந்த அணியுடனும் அமர மாட்டேன். நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவேன். பெரும்பான்மையினை நிரூபித்தாலும் நான் அவரது அமைச்சில் அமைச்சர் பதவியினை ஏற்கமாட்டேன்.

இந்த நாட்டில் இப்போது இரண்டு பிரதமர்கள். ஒருவர் பிரதமர் அலுவலகத்தில் இருக்கிறார். ஒருவர் பிரதமரின் வாசஸ்த்தலமான அலரி மாளிகையில் இருக்கிறார். இதனால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

யார் இவர்களில் சரியான பிரதமர். எமது தலைவர் மகிந்த பிரதமராகியதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனாலும் இந்த பிரச்சினையை இதனைவிடவும் சிறப்பான வழியில் தீர்த்திருக்க முடியும்.

நான் ஒருபோதும், கட்சித் தாவமாட்டேன். மகிந்தவிற்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. அதனைக் காண்பித்தால் பிரச்சினைத் தீர்ந்து விடும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் யானைத் தாக்குதலில் விவசாயி தப்பி ஓட்டம் : மோட்டார் சைக்கிள் சேதம்!!

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் யானைத் தாக்குதலில் விவசாயி உயிர் தப்பியுள்ளதுடன் அவரது மோட்டார் சைக்கிள் சேதமைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

ஓமந்தை இளமருதங்குளம் பகுதியிலுள்ள தனது வயலினை பார்வையிடுவதற்காக பிற்பகல் 2மணியளவில் விவசாயி சென்றுள்ளார். இதன்போது அங்கு ஒழிந்திருந்த காட்டு யானை குறித்த விவசாயி வருவதை அவதானித்துள்ளதுடன் அவரைத்துரத்திச் சென்று தாக்க முற்பட்டுள்ளது.

சம்பவத்தினை உணர்ந்து அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர் அயலவர்களின் உதவியுடன் சம்பவ இடத்தில் கைவிட்டு சென்ற தனது பாவனையில் இருந்த மோட்டார் சைக்கிளினைத் தேடிச் சென்றபோது மோட்டார் சைக்கிள் யானையின் தாக்குதலில் சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

எனினும் அப்பகுதியில் யானைக்கான மின்சார பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. யானை மின்சார வேலிக்கு அமைக்கப்பட்ட வாசல் பகுதியால் வயலுக்கு வந்துள்ளது குறித்த வாசல்பகுதியில் காவலாளி காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் மழை நேரத்தில் வீதிகளில் தூங்கும் கட்டக்காலி மாடுகளால் பயணிகள் அசௌகரியம்!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீதிகளில் தூங்கும் கட்டாக்காலி மாடுகளால் விபத்துக்கள் ஏற்படக் கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையிடம் சுட்டிக்காட்டிய போதும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் நெளுக்குளம், இராசேந்திரங்குளம், பாரதிபுரம், குளுமாட்டுச்சந்தி, உக்கிளாங்குளம், கூமாங்குளம் போன்ற வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரவு மற்றும் காலை வேளைகளில் கட்டாகாலி மாடுகள் வீதிகளில் நிற்பதால் போக்குவரத்து செய்வோர் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதுடன் விபத்துக்களும் ஏற்பட்டுவருகிறன.

இது தொடர்பில் பிரதேசபை ஓலிபெருக்கியில் அறிவித்த போதும் எந்த பயனும் ஏற்படவில்லை. எனவே, பிரதேசசபை ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரியுள்ளனர்.

அலரி மாளிகைக்குள் தற்போது நடப்பது என்ன?

பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் தங்கியுள்ள அலரி மாளிகையின் தற்போதைய நிலைமை குறித்து மஹிந்த தரப்பினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர், பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் அலரி மாளிகையில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்கியுள்ளனர்.

புதிய பிரதமரை ஜனாதிபதி நியமித்தாலும், தானே இன்றும் உத்தியோகபூர்வ பிரதமர் என அறிவித்துள்ள ரணில் விக்ரமசிங்க, தொடந்தும் அலரி மாளிகையில் தங்கியுள்ளார்.

அலரி மாளிகைக்குள் இருப்பவர்கள் இரவில் பாடல் பாடி, நடனமாடி நேரத்தை செலவழித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற தினத்தன்று, ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியாக நேரத்தை கழித்த காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.

அங்கு முன்னாள் பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தங்கள் கட்சிக்காரர்களுடன் பாடல் பாடி நடனமாடுவதனை காண முடிந்துள்ளது.

பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள ரணில் தோல்வியை நெருக்கி விட்டார் என புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

எனினும் அலரி மாளிகையில் மிகவும் சந்தோஷமான முறையில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது குறித்து மஹிந்த தரப்பினர்அச்சம் அடைந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரபரப்பான சூழ்நிலையில் சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு!!

நாடாளுமன்றத்தை கூட்டும் தினத்தில் நிலையான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடிய பின்னர் முரண்பாடுகளை கைவிட்டு நிலையான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு உள்ள வாய்ப்பு தொடர்பில் உறுப்பினர்களின் கருத்தை அறிவிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பிரதிநிதிகளின் உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல் தொடர்பில் சபாநாயகரின் ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் செயலாளரினால் ஜனாதிபதியின் அழைப்பு உத்தரவு சபையில் வாசித்த பின்னர் அந்த நாளின் வேலை நடவடிக்கைகளை நிறைவு செய்து அன்றைய நாளுக்கு சபையை ஒத்தி வைப்பதே அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ள நிலைப்பாடாகும்.

ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் அந்த கருத்திற்கு எதிர்கருத்து வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், அன்றைய தினத்திற்கான வேலைத்திட்டத்திற்கு மேலதிகமாக நிலையான அரசாங்கத்தின் பெரும்பான்மை கருத்தை நாடாளுமன்றத்தில் வினவ வேண்டும் என ஏனைய கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு தரப்பின் கருத்திற்கும் அவதானம் செலுத்திய சபாநாயகர், எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடிய பின்னர் நிலையான உத்தரவை கைவிட்டு நிலையான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு உள்ள வாய்ப்பு தொடர்பில் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்தை அறிவிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்

கழுத்தறுக்கப்பட்ட கோழிகளுக்கு நடுவில் கிடந்த இளம்பெண் சடலம் : அதிர்ச்சி சம்பவம்!!

வட கிழக்கு உக்ரைனில் இளம்பெண் ஒருத்தி கழுத்தறுக்கப்பட்ட கோழிகளுக்கு நடுவில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனில் பள்ளிக்கு சென்ற Alisa Onyshchuk என்னும் 15 வயது மாணவி ஒருவர் திடீரென காணாமல் போனார்.

அவ்வழியே நடந்துபோன அவளது தாயார் தனது மகளின் காலணி தனியாக கிடந்ததைக் கண்டு கல்லூரிக்கு சென்று விசாரிக்க, அவர் கல்லூரிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

பொலிசார் உள்ளூர் மக்கள் துணையுடன் தேடுதல் வேட்டையில் இறங்கியபோது, 24 மணி நேரத்திற்குப்பின் காட்டுப்பகுதியில் சூறையாடப்பட்ட Alisaவின் உடலைக் கண்டனர்.

அவளைச் சுற்றிலும் கழுத்தறுக்கப்பட்ட கோழிகளின் உடல்கள் கிடந்ததோடு, அவள் முகம் முழுவதும் இரத்தமாக காணப்பட்டது.

பிரேத பரிசோதனையில் Alisa வன் புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டு கழுத்து நெறித்து கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 35 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஒரு நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

கர்ப்பிணி மனைவி, மகள்களை கொலை செய்த கணவனுக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை : நன்றி கூறிய குற்றவாளி!!

அமெரிக்காவில் கர்ப்பிணி மனைவி மற்றும் மகள்களை கொலை செய்த கணவனுக்கு நீதிமன்றம் வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பினை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த Christopher Watts தன்னுடைய 15 வார கர்ப்பிணி மனைவி மற்றும் மகள்களை கொலை செய்துவிட்டு காணாமல் போய்விட்டதாக ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்தார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், 3 பேரின் உடல்களையும் Christopher வேலை செய்துவந்த இடத்தில் ஒரு எண்ணெய் தொட்டியில் இருந்து கண்டெடுத்தனர்.

அமெரிக்காவையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக Christopher கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தன்னுடைய கர்ப்பிணி மகளை, குழந்தைகளின் கண்முன்னே துடிதுடிக்க கொலை செய்த Christopher -க்கு மரண தண்டனை கொடுக்க வேண்டாம் என இறந்த கர்ப்பிணி ஷானானின் தாய் சான்ட்ரா நீதிமன்றத்தில் கூறினார்.

Christopher-க்கு மரண தண்டனை கொடுக்கப்படுவதால் இறந்த என்னுடைய 4 குழந்தைகளும் திரும்ப வரப்போவதில்லை என வேதனையுடன் கூறினார்.

இதனை தொடர்ந்து வழக்கினை விசாரித்த நீதிபதி, குற்றவாளி Christopher-க்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அதன் பின்னர் தனக்கு கிடைக்கவிருந்த மரண தண்டனை ரத்தானதற்காக, ஷானான் பெற்றோருக்கு தன்னுடைய நன்றியினை தெரிவித்தார்.

நாடாளுமன்றம் 14 ஆம் திகதி கூடிய பின்னர் மீண்டும் ஒத்திவைக்கப்படும்!!

எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கூட்டப்படாது எனவும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடிய பின்னர் அன்றைய தினமே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் 14ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கை விளக்க உரை மாத்திரமே நாடாளுமன்றத்தில் நடக்கும்.

நாடாளுமன்றம் கூடிய பின்னர் நடைபெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும்.

எதிர்வரும் 14ஆம் திகதியின் பின்னர் இரண்டு வாரங்களில் இந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு வரும் எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வெளிநாடு சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடு திரும்பி வருவதாகவும் லசந்த அழகியவண்ண மற்றும் வீரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படும் எனவும் அபேவர்தன கூறியுள்ளார்.

நண்பனின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடிய மாணவனுக்கு நேர்ந்த கதி!!

நண்பனின் பிறந்த நாள் விழாவிற்குச் சென்று நீரில் மூழ்கி பாடசலை மணவன் ஒருவர் நேற்று மலை உயிரிழந்துள்ளார்.

குளியாப்பிட்டி, பன்னல- அலபடகம பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதான சானுக ஜயசிங்க என்ற பாடசலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் தனது பாடசாலை நண்பனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்தவற்காக குளியாப்பிட்டிய வல்பிடிகாம பிரதேசத்தில் அமைந்துள்ள ஹொட்டலுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கிருந்த நீச்சல் குளத்தில் குறித்த மாணவன் ஏனைய மாணவர்களுடன் குளித்துக் கொண்டிருந்துள்ளார்.

பின்னர் அவர்கள் அதே இடத்தில் உள்ள சேற்று ஏரியில் குளிக்க போயிருந்ததாக தெரியவந்துள்ளது. அங்கு குறித்த மாணவன் சேற்றில் விழுந்து மூழ்கியுள்ளார்.

பின்னர் நண்பர்கள் ஹொட்டல் நிர்வாகத்திற்கு அறிவித்ததையடுத்து, பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து நீரில் மூழ்கிய மாணவனை தேடி கண்டு பிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இறந்த மாணவரின் உடல் குளியாப்பிட்டிய ஆதார வைத்தியசலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரண பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களுக்கு ஒப்படைக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.