நாடாளுமன்றம் கலைக்கப்படாது : மஹிந்த ராஜபக்ச!!

நாடாளுமன்றம் கலைக்கப்படாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆளும் கட்சிக்கு உள்ளதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படாது என மஹிந்த கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பிர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சர்கார் விஜய்க்கு இது நல்லதல்ல : எச்சரிக்கை விடும் அரசியல் தலைவர்கள்!!

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்க்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள “சர்கார்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் – ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த வெற்றிப்படங்களான துப்பாக்கி, கத்தி சமூகத்திற்கு தேவையான ஏதேனும் ஒரு கருத்தினை மையப்படுத்தியிருக்கும்.

அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் சர்கார் படமும், ஓட்டுரிமை மற்றும் அரசியல் பற்றிய கருத்துக்களை மக்களுக்கு எடுத்துரைத்திருக்கிறது.

படத்தில் வரும் ஒரு காட்சியில் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படும் பொருட்களை பொதுமக்கள் தீயில் வீசி எறிவார்கள். இந்த நிலையில் படம் பற்றி பேசியுள்ள செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, “சர்கார் படத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை அவர்களாகவே நீக்கிவிட்டால் நல்லது. இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

நடிகர் விஜய் வளர்ந்து வரும் நடிகர். இது அவருக்கு நல்லதல்ல. எனவே சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

முன்னதாக பாஜக கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும், தேசிய செயலாளர் எச்.ராஜாவும் படம் பற்றி கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இளம் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு : திகைத்து போன பொலிஸார்!!

இலங்கையில் பொலிஸாருக்கு பெரும் நெருக்கடி கொடுக்கும் வகையில் செயற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மக்களின் பெருந்தொகை பணத்தை ஏமாற்றி மோசடி செய்த பெண் ஒருவர், தலைமறைவாகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றிய நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு லட்சம் ரூபாய் பணம் வைபை்பு செய்பவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் பாதுகாப்பு வட்டிப்பணம் வழங்குவதாக கூறி, பொது மக்களை குறித்த பெண் ஏமாற்றியுள்ளார்.

சுமார் 8 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிய ஷாமலி திஸாநாயக்க என்ற 29 வயதான இளம் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் பொலநறுவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவித்துள்ளார்.

ஒன்றரை மாத காலமாக குறித்த பெண் தான் வசித்த பகுதி மக்களுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டு வந்துள்ளார்.

மக்களின் நம்பிக்கையை பென்ற பெண் திடீரென தலைமறைவாகியுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி முதல் தலைமறைவாகிய பெண்ணை பொலநறுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பல வாரங்களாக பொலிஸாரை ஏமாற்றும் வகையில் தலைமாறைவாகி இருந்த பெண்ணின் செயற்பாடு பொலநறுவை பொலிஸாருக்கு திகைப்பை ஏற்படுத்தியுள்ளது

மைத்திரிக்கு ஏற்பட்ட அவமானம் : விருதை திருப்பி அனுப்பிய நேசையா!!

ஓய்வு பெற்ற அரச ஊழியரான தேவநேசன் நேசையாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்ட அதி உயர் விருதை அவர் திருப்பி அனுப்பியுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜனாதிபதியால் தேவநேசன் நேசையாவுக்கு “தேசமானிய” விருது வழங்கி வைக்கப்பட்டு இருந்தது.

எனினும் குறித்த விருதையும் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பதக்கத்தையும் தேவநேசன் நேசையா திருப்பி அனுப்பியுள்ளதுடன், கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

சட்டம், அரசியல் யாப்பு என்பவற்றை மீறி செயற்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த விருதை அவர் திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.

தேவநேசன் நேசையா 1959ஆம் ஆண்டு முதல் அரச சேவையில் ஈடுபட்டமைக்காக இவ்விருது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விஜய் பட சர்கார் போஸ்டரை கிழித்த இளைஞர் அடித்துக்கொலை?

விஜய் நடித்துள்ள சர்கார் போஸ்டரை கிழித்த விவகாரத்தில் இளைஞர் ஒருவர் இறந்துபோனது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று தீபாவளியை முன்னட்டு சர்கார் படம் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை பல இடங்களில் ஒட்டி கொண்டாடினர்.

இந்நிலையில், மணிகண்டன் என்பவரது வீட்டுக்கு அருகே சர்கார் படத்துக்கு விஜய் ரசிகர்கள் சிலர் பேனர் வைத்திருந்தனர். குடிபோதையில் இருந்த மணிகண்டன், சர்கார் பேனரைக் கிழித்துள்ளார்.

ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் 10-க்கும் மேற்பட்டோர் மணிகண்டனைச் சூழ்ந்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். உறவினர்கள் மணிகண்டனை மீட்டு அவரது சித்தப்பா வீட்டுக்குள் தள்ளி வெளிப்பக்கமாக கதவை பூட்டியுள்ளார்.

தன்னைத் தாக்கியவர்களை திரும்பத் தாக்க வேண்டும். கதவைத் திறந்துவிடுங்கள்’ என்று மணிகண்டன் கூச்சலிட்டார். உறவினர்கள் கதவைத் திறக்கவில்லை. விஜய் ரசிகர்கள் மேலும் சிலர் அப்பகுதியில் திரண்டனர். சிலமணி நேரம் கழித்து, உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மணிகண்டன் தூக்கில் பிணமாகத் தொங்கினார்.

மணிகண்டனின் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து விஜய் ரசிகர்கள் தாக்கியதால் அவமானத்தில் மணிகண்டன் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது பூட்டியிருந்த கதவைத் திறந்து மணிகண்டனை அடித்துக்கொன்று பிணத்தை தூக்கில் தொங்கவிட்டனரா? என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

தீபாவளிக்கு ஆடைகளை தைக்க முடியாததால் பெண் எடுத்த விபரீத முடிவு!!

தீபாவளிக்கு ஆடைகளை தைத்து கொடுக்க முடியாத காரணத்தால் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பாப்பண்ணா நகரில் கடந்த 5 ஆண்டுகளாக பத்மினி என்பவர், சொந்தமாக பெண்கள் தையல் நிலையம் நடத்தி வருகிறார். இவர் தைத்து தரும் துணிகள் நன்றாக இருந்ததால் அப்பகுதியை சேர்ந்த பலர் இவரிடம் தங்கள் துணிகளை கொடுத்து வந்துள்ளனர்.

தீபாவளியையொட்டி, கடந்த நான்கு நாட்களாக இரவு பகலாக அவர் துணி தைத்து வந்துள்ளார். எனினும் சிலருடைய துணிகளை தைத்து தர முடியாத நிலை ஏற்பட்டதால் வருத்தமடைந்த பத்மினி, சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த பொலிசார், பத்மினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்

முக்கிய தீர்மானத்தால் நாளை நள்ளிரவு முதல் ஏற்படவுள்ள மாற்றம்!!

பேருந்து பயணக் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் ஆராயும் சந்திப்பொன்று இன்றைய தினம் நடைபெற்றுள்ள நிலையில் முக்கிய தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாளை நள்ளிரவு முதல் பேருந்து கட்டணத்தை 2 வீதத்தால் குறைப்பதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

பேருந்து சங்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு என்பவற்றுக்கு இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே பேருந்து பயண கட்டணத்தில் குறித்த மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

எனினும் ஆரம்ப கட்டணத்தில் மாற்றம் இல்லை எனவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.

தாயின் கண்முன்னே துடிதுடித்து பலியான சிறுவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

தமிழகத்தின் அரியலூரில் தாயின் கண்முன்னே சாலையை கடக்க முயன்ற போது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூரின் வி.கைகாட்டி அருகே பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன், லாரி டிரைவரான இவரது மனைவி சரோஜினி, இவர்களது மகன் பார்க்கவன்(வயது 4).

சம்பவதினத்தன்று சரோஜினி தனது மகனுடன் பெரியநாகலூர் கிராமத்திலிருந்து ஜெயம்கொண்டம் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது பார்க்கவின் பெரியம்மாவை பார்த்ததும், தாயின் கையை விட்டுவிட்டு சாலையை கடக்க முயன்றுள்ளான்.

எதிர்பாராதவிதமாக அங்கு வந்த டிம்பர் லாரி மோதி தாயின் கண்முன்னே துடிதுடித்து பலியானான். இதனைதொடர்ந்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், இந்த ஏரியாவில் அதிகளவு சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் அதிகளவில் இருக்கிறது.

இதனால் லாரிகள் பயன்படுத்தப்படுவதால் விபத்துகள் அதிகம் நடக்கிறது, மாவட்ட நிர்வாகமோ, காவல்துறையோ இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர், இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். மேலும் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும் அனுப்பி வைத்தனர்.

இன்று நள்ளிரவு ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைப்பு?

நாடாளுமன்றத்தில் மைத்திரி அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை நிரூபிப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் நாடாளுமன்றத்தை கலைக்க வாய்ப்புள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படுவதற்கான வாய்ப்பு 90 சதவீதம் உள்ளதாக குறித்த தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

19ஆம் அரசியல் திருத்தச் சட்டத்தின் படி நாடாளுமன்றத்தை ஜனாதிபதியால் கலைக்க முடியாது. அப்படி கலைப்பதானால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்க வேண்டும்.

இவ்வாறில்லாமல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் உயர் நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

எனினும் ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு உட்பட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சரியா, பிழையா என்ற சூழ்நிலையில், ஜனாதிபதிக்கு எதிராக தீர்ப்பு வழங்க முடியும் என 19ஆம் திருத்த சட்டத்தில் எந்த விடயமும் குறிப்பிடப்படாததால் உயர் நீதிமன்றம் நாடாளுமன்றம் ஜனாதிபதியால் கலைக்கப்பட்டது சரியே என்ற தீர்ப்பை வழங்க சாத்தியம் உள்ளது.

நாடாளுமன்றில் மகிந்த மற்றும் ரணில் ஆகிய இரு தரப்புக்களும் பெரும்பான்மையை இழந்துள்ளமை, தற்போதைய நிலையில் மைத்திரிக்கு உள்ள அரசியல் நெருக்கடி , ஜனநாயகத்தை நிலை நாட்டவேண்டுமென்ற கோரிக்கையை அடிப்படையாக கொண்டு கட்சித் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பில் அவர்களின் சரியான பதில் கிடைக்காமை போன்றவற்றால் நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக சட்ட வல்லுனர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நெருக்கடிகளில் இருந்து தப்பிப்பதற்காக நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத நம்பகமான கொழும்புதகவல்கள் தெரிவிக்கின்றன.

-தமிழ்வின்-

வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் வழங்காத வெகுமதிகளை வழங்கவுள்ள மஹிந்த!!

இலங்கை வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் வழங்காத நிவாரணத்தை வழங்க மஹிந்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடைக்கால வரவு செலவுத்திட்ட கணக்கில் இந்த நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இதுவரையில் இது தொடர்பில் புதிய யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரூபாவின் பெறுமதியை நிலையான நிலைக்கு கொண்டு வருவதே தங்கள் நோக்கம் என அவர் கூறியுள்ளார். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது பெருமளவு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனை மீண்டும் கட்டியெழுப்புதவதற்கான நடவடிக்கைகளை ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.

மைத்திரியுடன் பேசியது என்ன? மனோ கணேசன் வெளியிட்ட அதிரடி தகவல்!!

மைத்திரி – மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இணைவதற்கு முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் இன்று காலை திடீர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

தற்போதைய சூழ்நிலையில் கட்சித்தாவல்கள் அதிகமாக இடம்பெறும் சந்தர்ப்பத்தில் மனோ – மைத்திரி சந்திப்பு சற்று பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் குறித்த சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நாகரீகமான ஒரு அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு எம்பிக்களும் ஒரு குழுவாக எனது தலைமையிலேயே, ஜனாதிபதி மைத்திரியை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலே சந்தித்து அவரது அரசாங்கத்தில் இணைய முடியாது என்று நேரடியாக கூறி விட்டோம்” என மனோ கணேசன் பதிவிட்டுள்ளார்.

தீபாவளி தினத்தன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சோகம்!!

தீபாவளி தினமான நேற்று யாழில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு விபத்துக்களில், நால்வர் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

யாழ் – கண்டி நெடுஞ்சாலை ஏ9 வீதியில் நேற்று இரவு 7 மணியளவில் எரிபொருள் தாங்கிய வாகனமும், மோட்டார் சைக்கிளிலும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை யாழ் – குப்பிளான் பகுதியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் பயணிந்த செ.நிரோசன் (வயது 20) எனும் இளைஞன் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த தூணுடன் மோதியதில் உயிரிழந்துள்ளார்.

மேலும், நல்லூர் – சங்கிலியன் வீதியில் லான்ட் மாஸ்டரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் கோப்பாய் வடக்கை சேர்ந்த சி. தர்மசீலன் எனும் இளைஞனும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வவுனியாவில் விநாயகர் ஆலயத்தில் புத்தர் சிலை அமைக்கும் முயற்சி முறியடிப்பு!!

வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் கோவிலில் தொல்பொருட் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடு காரணமாக மக்கள் விசனமடைந்துள்ளனர். இதுபற்றி தெரிய வருவதாவது,

வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயம் கடந்த 1952ம் ஆண்டு அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களினால் வழிபாடு செய்யப்பட்டுவரப்பட்டது. இதே வேளை இவ் கோவில் அமைந்துள்ள மலையில் தொல்பொருள் சின்னங்களான பண்டைய கற் தூண்கள், பாழடைந்த செங்கல் படிவங்கள், கட்டடங்கள் என பல காணப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த சில நாட்களிற்கு முன்னால் தொல்பொருள் திணைக்களத்தினால் கல், மணல் மற்றும் பல கட்டடபொருட்கள் இவ்வளாகத்தில் இறக்கி தமது வேலைகளை நேற்று முன்னெடுக்கவிருந்த நிலையிலேயே பொதுமக்களினால் இவ்வேலைகளை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தமையினால் பெரும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

இது தொடர்பாக பிரதேசவாசி ஒருவர் தெரிவிக்கையில்,
இவ்வாலயம் பரம்பரை பரம்பரையாக நாம் வழிபட்டு வருகின்றோம். ஆனால் தற்போது இவ்வாலயத்தில் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தம் என்ற ரீதியில் புத்தர் சிலையினை ஸ்தாபிக்க முயல்வதாக தெரிவித்தனர்.

இதேவேளை வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் து.நடராஜசிங்கம், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இது தொடர்பாக அப்பிரதேச மக்களுடன் கலந்துரையாடியதுடன் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளிடன் இது தொடர்பாக தொலைபேசியில் கலந்துரையாடியிருந்ததுடன்,

இது தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அவ்விடம் வந்த பொலிஸாரினால் ஆலய பரிபாலனசபையினர் மற்றும் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோரிடம் விசாரணைகளையும் முன்னெடுத்திருந்ததன் அடிப்படையில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இது தொடர்பாக தொல்பொருள் திணைக்கள பிராந்திய முகாமையாளரிடம் கேட்கப்பட்டபோது இவ்விடம் அனுராதபுரம் காலத்து புராதான சின்னங்களாகும் இவை அழியாமல் தடுப்பதற்காக இச்சின்னங்களை புனரமைக்கும் செயற்பாட்டினை செய்வதாக கூறியிருந்தார்.

வவுனியாவில் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!!

வவுனியாவில் நேற்று காலை முதல் பெய்து வரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டம் பல மாதங்களாக கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் தீபாவளி கொண்டாட்டங்களும் களை கட்டவில்லை என்றும், வீதிகளிலும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் பொது இடத்தில் புகைப்பிடித்தவருக்கு அபராதம்!!

வவுனியாவில் பொது இடத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக புகைப்பிடித்த ஒருவருக்கு இன்று வவுனியா நீதிமன்றத்தினால் 1000ரூபா அபராதம் அறவிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியாவில் பொது இடம் ஒன்றில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் புகைப்பிடித்த நபர் ஒருவரைக்கைது செய்த பொலிசார் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.

இதன்போது பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயற்பட்ட குற்றத்திற்காக 1000 ரூபா நீதிமன்றத்தண்டம் நீதிபதியினால் விதிக்கப்பட்டு அபராதம் அறவிடப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செலயகத்தில் கடற்படையின் சேவை நிலையம்!!

வவுனியா மாவட்ட செயலகத்திற்குள் இலங்கை கடற்படையின் சேவை நிலையம் ஒன்று செயற்பட்டு வருகின்றது. இவ்வியடம் குறித்து தகவல் அறியும் சட்டத்தினூடாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் மாவட்ட தகவல் அதிகாரியுமான ரி.திரேஸ்குமார் இவ்வாறு தகவல் வழங்கியுள்ளார்.

வவுனியா மாவட்ட செலயகத்திற்குள் பொருத்தப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத் தொகுதி ஏறக்குறைய 1.6 மில்லியம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு இலங்கை கடற்படையின் நிர்வாகத்தின் கீழ் செயற்பட்டு வருகின்றதுடன் கடற்படையைச் சேர்ந்த ய.விஜேரத்ன என்பவரால் பாராமரிக்கப்பட்டு வருகின்றது.

குறித்த அலுவலகர் விடுமுறையில் சென்றால் கடற்படையைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவார் என்று வழங்கப்பட்ட தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.