நாடாளுமன்ற கூட்டத் தொடரை பின்தள்ளிப் போடுவதால் நாட்டின் ஜனநாயகத்தை சவப்பெட்டிக்குள் வைத்து ஒவ்வொரு ஆணிகள் அடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம – பொல்கொட பாலத்திற்கு அருகில் உள்ள குறுக்கு வீதியில் காணப்பட்ட தலையும் எம்பிலிபிட்டிய செவனகல – கிரிஇப்பன் வாவியில் கண்டெடுக்கப்பட்ட உடற்பகுதியும் ஒரே பெண்ணினுடையதா என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று முற்பகல் பண்டாரகம – பொல்கொட பாலத்திற்கு அருகில் உள்ள குறுக்கு வீதியில் கண்டெடுக்கப்பட்ட தலை வெளிநாட்டு பெண்ணொருவருடையது என சந்தேகப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு குறித்த பெண் கொலை செய்யப்பட்டு, அவரின் தலை துண்டிக்கப்பட்டு பண்டாரகம- பொல்கொட பாலத்திற்கு அருகில் போடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் துண்டிக்கப்பட்ட தலை சீன அல்லது தாய்லாந்து நாட்டின் பெண்ணுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நேற்று பிற்பகல் எம்பிலிப்பிட்டிய – செவனகல – கிரிபன்பவெவவில் தலை மற்றும் கால் இல்லாத உடற்பகுதி கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இரத்தக்களறியை தடுக்கும் நேரம் கடந்துக்கொண்டிருக்கிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் அரசியலமைப்பை பாதித்துள்ள பிரச்சினை சில நாட்களில் தீர்க்கப்படும் என்று தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் வெளிநாட்டு செய்தி சேவை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்நிலைமை தொடரும் நிலையில் வன்முறைகளுக்கு செல்லவேண்டாம் என்றும் தமது கட்சி ஆதரவாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், வன்முறைகளில் நம்பிக்கையுள்ள சிலர் அதனை மேற்கொள்ளலாம் என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி தாவிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனை கூட்டமைப்பில் இருந்து நீக்குமாறு, புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பரிந்துரை செய்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“புளொட் சார்பிலேயே வியாழேந்திரன், கூட்டமைப்பில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவர் புளொட் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
வியாழேந்திரன் எமக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். எனவே, அவரை எமது கட்சியில் இருந்து நீக்க புளொட் மத்திய குழு தீர்மானித்துள்ளது.
அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும், அவரை கூட்டமைப்பில் இருந்து நீக்குமாறும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிடம் நாம் கோரியுள்ளோம்.
வியாழேந்திரன் ஒரு ஆசிரியர். அவர் புளொட் போராளி அல்ல. பிரபலம் பெற்ற ஒரு ஆசிரியர் என்ற வகையிலேயே அவரை 2015 பொதுத் தேர்தலில் புளொட் போட்டியில் நிறுத்தியது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் ஆவா குழு தொடர்பான துண்டு பிரசுரம் வினியோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் (02.11.2018) கைது செய்து சிறையிலடைக்கப்பட்ட ஊடகவியலாளர் ஒருவரை பிணையில் செல்ல வவுனியா மாவட்ட நீதிமன்றம் இன்று (05.11) அனுமதி வழங்கியுள்ளது.
வவுனியாவில் இருந்து வெளிவருகின்ற தினப்புயல் பத்திரிகையின் சிரேஸ்ட ஊடகவியலாளராகிய இமானுவேல் தர்ஷன் என்பவரே பொலிசாரினால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்ட நீதிமன்றம் அவரை விடுதலை செய்து வழக்கை ஜனவரி மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
ஆவா குழுவின் பிரசுரம் தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த மற்றுமோர் இளைஞனை பார்வையிட வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில் தன்னை கைது செய்த பொலிசார் தன்மீது ஆவா குழுவிற்கு ஆதரவாக துண்டு பிரசுரம் வினியோகம் செய்ததாக வழக்கு பதிவு செய்து தடுத்து வைத்ததாக தர்சன் தெரிவித்தார்.
விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய ஊடகவியலாளர் சார்பில் சட்டத்தரணி தயாபரன் முன்னிலையாகியிருந்தார்.
நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்கும் நிலையில் பொலிசார் ஊடகவியலாளர் ஒருவரை எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் கைது செய்திருப்பதானது ஒரு அச்ச நிலையை உருவாக்கும் என்பதுடன் அச்சிடப்பட்ட ஒரு பிரதியை ஊடகவியலாளர் ஒருவர் வைத்திருந்தார் என்பதற்காக எவ்வாறு அவரை பொலிசார் கைது செய்ய முடியும் என மன்றில் கேள்வி எழுப்பினார்.
குறித்த ஊடகவியலாளரிடமிருந்து எத்தகைய துண்டுப் பிரசுரங்களையும் பொலிசார் கைப்பற்றியிருக்கவில்லை என சுட்டிக்காட்டிய தயாபரன், அத்தகைய பிரசுரம் தொடர்பாக எவராவது பொலிஸ் நிலையத்தில் குறித்த ஊடகவியலாளர்தான் வினியோகம் செய்தார் என்றோ அல்லது அதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றோ முறைப்பாடுகள் ஏதேனும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பிய சட்டத்தரணி தயாபரன், நீதிமன்றம் குறித்த ஊடகவியலாளருக்கு பிணை வழங்க வேண்டும் என கோரினார்.
இதனையடுத்து பொலிசார் தகுந்த ஆதாரங்கள் எதனையும் நீதிமன்றத்தில் முன்வைக்க முடியாத காரணத்தினால் மன்று ஊடகவியலாளர் தர்சனை ஐம்பதினாயிரம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கியிருந்தது.
நாளை 06.11.2018 தீபாவளி தினத்தன்று வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் பாதுகாப்புப் படையின் அனுசரணையுடன் இடம்பெறவிருந்த கலை நிகழ்வுகள் மற்றும் மதிய போசனம் தவிர்க்க முடியாத காரணத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.
இச் செய்தியை வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தர்மகர்த்தா சபையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவர் கண் முன்பு குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் ஆலப்புழ மாவட்டத்தில் பாரக்கல் பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியை சேர்ந்த மாயா(19) மற்றும் திலீப்(24) தம்பயருக்கு பிறந்து 10 மாதமேயான மைதிலி என்ற பெண் குழந்தை இருந்தார். திலீப் நடன பஇற்சி அளிப்பதை தொழிலாக செய்து வந்துள்ளார். இதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
தமது கணவரை வேறு தொழில் தேடிக்கொள்ள மாயா தொடர்ந்து நிர்பந்தித்தும் வந்துள்ளார். ஆனால் நடன பயிற்சி அளிப்பதை கைவிடுவது இல்லை என திலீப் உறுதியாக தெரிவித்துள்ளார்.
சம்பவத்தன்று திலீப் நடனபள்ளிக்கு புறப்பட தயாரானார். இதற்கு மாயா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இனிமேல் நடன பயிற்சிக்கு சென்றால் தான் குழந்தையுடன் தற்கொலை செய்வேன் என்று மிரட்டினார். இதனை காதில் வாங்கிக்கொள்ளாமல் திலீப் புறப்பட்டார்.
இதில் ஆத்திரமடைந்த மாயா தனது குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள கிணற்று பகுதிக்கு சென்றார். திலீப் இதனை பார்த்தும் அவர்களை தடுக்காமல் அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது.
கண் இமைக்கும் நேரத்தில் குழந்தையுடன் மாயா 40 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த திலீப் சத்தம்போட்டு கிணறு அருகே ஓடினார். அங்கு தாயும், மகளும் தண்ணீரில் தத்தளித்தனர்.
அக்கம் பக்கத்தினர் கிணற்றில் இறங்கி அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் தண்ணீர் அதிகம் இருந்ததால் அவர்களை மீட்க முடியவில்லை.
இதனையடுத்து பரவூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தாய்- மகளை மீட்டு பாரிப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பாரிப்பள்ளி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மலையாள நடிகை சுவேதா மேனன் தனது முதல் திருமணம் முறிவு குறித்து மனம் திறந்துள்ளார். பிரபல மலையாள நடிகை சுவேதா மேனன், பாலிவுட் மொடலான பாபி போன்ஸ்லே என்பவரை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் அவருடனான கருத்து வேறுபாடு காரணமாக, பாபியை விவாகரத்து செய்த சுவேதா மேனன், கடந்த 2011ஆம் ஆண்டு ஸ்ரீவல்சன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு சபைனா மேனன் எனும் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தனது முதல் திருமணம் ஒரு கசப்பான அனுபவம் என சுவேதா மேனன் மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘பாபியுடனான எனது முதல் திருமணம் நான் என் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு. அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது. எனது தந்தை ஒரு கடுமையான நபராக இருந்திருந்தால், அந்த திருமணம் என் வாழ்வில் இடம்பெற்றிருந்திருக்காது.
ஒரு சிறுவனைப் போல சுதந்திரத்துடன் கூடிய மகிழ்ச்சியான வாழ்வை வாழ நான் போராடினேன். என்னைப் போன்ற ஒரு பெண், வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கொண்டிருப்பதை என் பெற்றோர் ஒருபோதும் விரும்பியதில்லை.
நான் வேலைக்கு சென்று சுதந்திரமாக வாழ வேண்டும் என்றே அவர்கள் விரும்பினர். மும்பையில் மொடலிங் மற்றும் படங்களில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில், என் பெற்றோர் என்னை வழிநடத்த என்னுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
நான் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால் தனிமையிலேயே தான் பொழுதை கழிப்பேன். அது தான் என்னை முதன் முதலில் காதலில் விழ தூண்டியது.
நான் பாபியை திருமணம் செய்துகொள்ள பிடிவாதம் பிடித்தபோது என் தந்தை என்னிடம், நீ வாழ்வில் வருத்தப்பட போகிறாய் என்று கூறினார். மேலும் மும்பையில் நடந்த என் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கு வந்த அவர், என்னிடம் எது குறித்து வேண்டுமானாலும் பேசலாம் என்று கூறினார்.
இப்போது அந்த தருணத்தை நான் நினைக்கையில், எனது திருமணம் விவாகரத்து வரை வரப்போகிறது என்பதை அவர் முன்பே அறிந்திருப்பார் என்பதை உணர்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, விவாகரத்து குறித்து வெளியான வதந்திகள் பற்றி சுவேதா மேனன் கூறுகையில், ‘ஆரம்பத்தில் அதுபோன்ற செய்திகளுக்கு பதிலளித்தேன். இப்போது அவற்றிற்கு சிரிக்க கற்றுக்கொண்டேன். எனது விவாகரத்திற்கு மக்கள் காத்திருப்பது போலவே இப்போதும் போலியான செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா விமான விபத்தில் சிக்கிய தனது தந்தை நீச்சலடித்து உயிருடன் வருவார் என 13 வயது மகள் காத்து கொண்டிருக்கும் சம்பவம் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
இந்தோனேசியாவின் ஜகர்டாவில் இருந்து பங்கல் பினாங்கு நோக்கி கடந்த திங்களன்று கிளம்பிய விமானம் கடலில் வீழ்ந்தது. இதுவரை 67 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பவுல் அயோர்பாபா (43) என்ற நபரும் பயணித்தார்.
இந்நிலையில் பவுல் குறித்து அவரின் மகளான பினண்டா நயிஷிபா (13) உருக்கமாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், முதல் தடவையாக என் தந்தை பங்கல் பினாங்குக்கு பணி விடயமாக சென்றார்.
என் தந்தைக்கு நீச்சல் நன்றாக தெரியும், அவர் எப்படியாவது நீந்தி உயிர் பிழைத்திருப்பார் என நம்புகிறேன். சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடுவேன் என என்னிடம் கூறிய வாக்குறிதியை அவர் நிச்சயம் காப்பாற்றுவார் என நம்புகிறேன் என உருக்கமாக கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் 46 முறை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கணவனை மன்னித்து, சிறைத்தண்டனை முடிந்த பிறகு மீண்டும் அவனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக மனைவி தெரிவித்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த மைக்கேல் பர்னார்ட் (25) தன்னுடைய 21 வயதான மனைவி ஷானோன் பார்னார்ட்க்கு தெரியாமல், மது அருந்தி, நைட்ரஸ் ஆக்சைடு எடுத்து வந்துள்ளார். மேலும், ஒரு பெண்ணை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
தனக்கு இழைத்த துரோகம் பற்றி தட்டிக் கேட்டதற்காக சமையலறையில் இருந்த கத்தியை கொண்டு, மைக்கேல் 46 முறை மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மைக்கேல் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு வழக்கினை விசாரித்த நீதிபதி குற்றவாளிக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அப்போது ஷானோன் , என்னுடைய கணவர் சிறையிலிருந்து வெளியானதும், அவரை மன்னித்து மீண்டும் சேர்ந்து வாழ விரும்புகிறேன். வாரத்திற்கு 2 முறை அவரை சிறையில் சந்திக்க எனக்கு அனுமதி கொடுங்கள் என நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
நாங்கள் இருவருமே ஒருவொருக்கொருவர் புரிந்துகொண்டு ஒரு நல்ல குடும்பத்தை அமைக்க விரும்புகிறோம் என தெரிவித்த ஷானோன், தான் அவரை அதிக அளவு அன்பு செய்வதாகவும், அவரும் தன்னை அன்பு செய்வதாகவும் தெரிவித்தார்.
இதனை கேட்டு நெகிழ்ந்த நீதிபதி, சிறையில் சந்திக்க அனுமதியளித்ததோடு, பலத்த காயங்களில் இருந்து உயிர் பிழைத்திருக்கும் உங்கள் மனைவி ஒரு அதிர்ஷ்டசாலி என தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து ஷானோன் கூறுகையில், அன்றைய தினம் நான் என்னுடைய படுக்கையில் இருந்து எழுந்த போது , கையில் ஒரு கத்தியுடன் என்னுடைய கணவர் என்னை நோக்கி வந்தார்.
நான் பயத்தில் என்னுடைய தந்தைக்கு போன் செய்கிறேன் என கத்தினேன். ஆனால் என்னுடைய கணவர், “நீ சாகப்போகிறாய்” என கூறிக்கொண்டு, என் மீதி ஏறி உட்கார்ந்து வயிற்றுப் பகுதியில் சரமாரியாக கத்தியால் குத்த ஆரம்பித்தார்.
என்னுடைய அலறல் சத்தம் கேட்டு வந்த கணவரின் பெற்றோர், நான் இருந்த நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
என்ன செய்துகொண்டிருக்கிறாய் என கணவரை அதட்டினர். அப்போது என்னுடைய கண்கள் உருள ஆரம்பித்துவிட்டன. நான் இறக்கப்போகிறேன் என கூறியதும் அவர்கள் என்னை வேகமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் என தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 8 ஆண்டுகள் கன்னியாஸ்திரிகள் மடத்தில் வாழ்ந்த இளம்பெண் ஒருவர் துறவறத்தை விடுத்து பாலியல் தொழிலாளியாக மாறிய சம்பவம் பரவலாக பேசப்படுகிறது.
குறித்த இளம்பெண்ணின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பாதிரியார் இவருடன் பேச முயற்சித்ததாகவும் ஆனால், அதை தாம் நிராகரித்ததாகவும் இவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
கொலம்பியாவின் Ituango பகுதியில் குடியிருந்து வருபவர் 28 வயதான Yudi Pineda. சிறுவயதிலேயே கன்னியாஸ்திரியாக துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசையால் அங்குள்ள மடம் ஒன்றில் தமது 10-வது வயதில் இணைந்துள்ளார்.
நீண்ட 8 ஆண்டுகள் அங்கே அவர் கன்னியாஸ்திரிகளுக்கான பயிற்சி மேற்கொண்டுள்ளார். அந்த 8 ஆண்டுகளும் தமது வாழ்க்கையில் மறக்கவே முடியாத மகிழ்ச்சியான நாட்கள் என குறிப்பிட்டுள்ள Pineda,
ஆசிரியர் ஒருவருடன் காதலில் விழுந்ததாகவும், அதன் பின்னர் தமது வாழ்க்கை தலைகீழாக மாறியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து தமது நீண்ட நாள் கனவான கன்னியாஸ்திரியாகும் முடிவை கைவிட்டு, மடத்தில் இருந்தும் வெளியேறியுள்ளார்.
பின்னர் நெஸ்லே நிறுவனத்தில் பணியாற்றி வந்த காலகட்டத்தில் ஜுவான் என்பவரை சந்திக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது.
அவர் ஆபாச வலைதளங்களுக்கான மொடல்களை தெரிவு செய்யும் பணி செய்து வந்துள்ளார். அவரது ஆலோசனையின்படி ஆபாச இணையதளம் ஒன்றில் மொடலாக இணைந்துள்ளார் Pineda.
துவக்க காலத்தில் மிகவும் அருவருப்பாக உணர்ந்ததாக கூறும் அவர் தற்போது அவ்வறாக இல்லை எனவும், ஒரு தொழில் எனவே இதையும் தாம் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும் மாதத்தின் ஒவ்வொரு ஞாயிறும் தாம் தேவாலயம் செல்வதாகவும், அது 8 ஆண்டுகள் கன்னியாஸ்திரி மடத்தில் இருந்தபோது பழக்கத்தில் கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வை இந்த மாதம் 14ம் திகதி காலை 10 மணிக்கு கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது.
16ம் திகதி வரையில் இடைநிறுத்தப்பட்டிருந்த நாடாளுமன்ற அமர்வை முன்கூட்டியே நடத்துமாறு பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், குறிப்பிட்ட தினத்துக்கு இரண்டு தினங்கள் முன்னதாக முன்கூட்டி நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி முடிவு செய்திருக்கிறார்.
எனவே சபாநாயகர் அறிவித்தபடி சபை தீபாவளிக்கு மறுதினம் கூடாது என தெரிவிக்கப்படுகின்றது.
14 வயதான சொந்தம் மகள் நள்ளிரவிலும் பசியால் அழுது அடம்பிடிக்கும்பொது என்ன செயவது என தெரியாமல் விழி பிதுங்கி நிர்க்கின்றனர் கேரளாவில் ஒரு பெற்றோர்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பிந்து மற்றும் பிஜு ஆகியோரின் மகள் கோபிகா. 14 வயதான குறித்த சிறுமி தொடர்ந்து பசி காரணம் அவதிப்பட்டு வருகிறார். அகோர பசியே சிறுமி கோபிகாவை வதைக்கும் முக்கிய பிரச்னை. பகல் அல்லது நள்ளிரவு என நேரம் காலம் பார்ப்பதில்லை.
கோபிகாவுக்கு 2 வயது இருக்கும்போது இந்த பிரச்னை முதன் முறையாக ஏற்பட்டுள்ளது. தற்போது 14 வயதாகும் சிறுமி கோபிகாவின் உடல் எடை 115 கிலோ.
ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட சிறுமியால் வாய் பேசவும் முடியாது. இருப்பினும் பசியால் துடித்துடித்து அழும்போது அவரது பெற்றோரான பிஜுவும் பிந்துவும் கண்கலங்கி நிர்க்கின்றனர்.
பாடசாலைக்கு செல்ல முடியாத சிறுமி கோபிகாவுக்கு அரசு சார்பில் குடியிருப்புக்கு வந்தே கல்வி அளிக்கப்படுகிறது. இது இவ்வாறு இருக்க கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் சிறுமி கோபிகாவின் தந்தை பிஜுவுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
ஆனால் அதன் தாக்கத்தால் பல மாதங்கள் கோமாவில் இருந்துள்ளார். பின்னர் எழுந்து நடக்கலாம் என்ற நிலை ஏற்பட்டபோது, பிழைப்புக்காக லொட்டரி விற்பனைக்கு இறங்கியுள்ளார்.
ஆனால் வழியில் தலைசுற்றி விழுவது பதிவாக நடந்து வந்ததால் அதுவும் தடைபட்டது. சிறுமி கோபிகாவின் சிகிச்சைக்காக வீடு மற்றும் இருந்த நிலங்களை விற்றுள்ள இந்த குடும்பம் தற்போது வாடகை குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகின்றனர்.
வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (05.11) விடுமுறை வழங்குமாறு ஆளுநர் ரெஜினோல்ட் குரே கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தீபத்திருநாள் பண்டிகையை முன்னிட்டு வடமாகாண மக்கள் அனைவரும் தீபாவளி தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் இந்த விடுமுறையை வழங்குமாறும் எதிர்வரும் சனிக்கிழமை பாடசாலை நடாத்தி அந்த விடுமுறைக்கான தினத்தினை சரி செய்து கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வடமாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் வட மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (04.11) அறிவித்தல் வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள வாகனத்தினை குத்தகைக்கு வழங்கும் நிலையத்திலிருந்து வாகனத்தினை பெற்றுச் சென்ற நபர் வாகனத்துடன் தலை மறைவாகியுள்ளார்.
வவுனியா குருமன்காட்டில் வாகனங்களை குத்தகைக்கு வழங்கும் நிறுவனத்தில் கடந்த 08.10.2018 அன்று நபரொருவர் தனக்கு 10 தினங்களுக்கு வாகனம் குத்தகைக்கு தேவையென தெரிவித்து வாகனத்தினை பெற்றுச்சென்றுள்ளார்.
10 தினங்களின் பின்னர் வாகனங்களை குத்தகைக்கு வழங்கும் நிறுவனத்தின் முகாமையாளர் குறித்த நபரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாகனம் தொடர்பாக வினாவிய சமயத்தில் சில தினங்களில் தருவதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் அவரது தொலைபேசி இணைப்பினை முற்றாக துண்டித்துள்ளார்.முகாமையாளர் கடந்த 29.10.2018 அன்று வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸில் முறைப்பாட்டினை மேற்கொண்டார்.
முறைப்பாட்டினை மேற்கொண்ட சில தினங்களின் பின்னர் வாகனத்தினை குத்தகைக்கு வழங்கும் நிறுவனத்தின் முகாமையாளருக்கு பிறிதொரு நபர் தொலைபேசி மூலம் தொடர்பினை மேற்கொண்டு,
உங்களது வாகனத்தினை மன்னார் பகுதியினை சேர்ந்த நபரொருவர் ஈடு வைத்துள்ளார். இரண்டரை லட்சம் ரூபா பணத்தினை செலுத்தி வாகனத்தினை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
பணத்தினை தருவதாக முகாமையாளர் சம்மதம் தெரிவித்ததுடன் எங்கே தருவது என குறித்த நபரிடம் வினாவிய சமயத்தில் வங்கி கணக்கிற்கு வைப்பிலிடுமாறு தெரிவித்துள்ளதுடன் அவர்கள் இருக்கும் இடத்தினை தெரிவிப்பதற்கு மறுத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சுப்பிரமணியம் சந்திரபோஸ் ( 783270951V) மன்னார் பகுதியினை சேர்ந்த நபரே தன்னிடம் வாகனத்தினை பெற்றுக்கொண்டதாகவும் இவருக்கு வஹனார் ரக வாகனத்தினை (NP-CAV-7294) குத்தகைக்கு வழங்கியதாகவும் குறித்த நபர் தொடர்பான தகவல் ஏதேனும் கிடைத்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு வாகனத்தினை குத்தகைக்கு வழங்கும் நிறுவனத்தின் முகாமையாளர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 2 குழந்தைகள் மர்மமாக உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தாயாரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தின் கட்டமுத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி ஜெயசித்ரா (27). இவர்களுக்கு மிதுன் (4) என்ற மகனும், லட்சன் என்ற 8 மாத கைக்குழந்தையும் இருந்தன. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் லட்சன் வீட்டில் இருந்த தண்ணீரில் பிணமாக கிடந்தான். அப்போது தாய் ஜெயச்சித்ரா தலைமறைவாகி விட்டார்.
பின்னர் அவரை பொலிஸ் பிடித்து விசாரித்த போது குழந்தை லட்சன் தவறி தண்ணீரில் விழுந்து இறந்தான் என கூறினார். இதனால் பொலிசார் அவரை விட்டுவிட்டனர். இந்த சோக சம்பவத்திற்கு பிறகு சிலம்பரசன் தனது மனைவி மற்றும் மகன் மிதுனுடன் விழுப்புரம் மாவட்டம் பனங்குப்பத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்கு குடி வந்தார்.
கடந்த 1-ஆம் திகதி சிலம்பரசன் வேலைக்கு சென்றார். வீட்டில் ஜெயசித்ராவும், மிதுனும் இருந்தனர். அப்போது வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுவன் மிதுனும் பிணமாக மிதந்தான். இதையடுத்து ஜெயசித்ரா தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.
இது குறித்து சிலம்பரசன் பொலிசில் புகார் செய்தார். அதில் எனது 2 குழந்தைகளின் சாவில் ஜெயசித்ரா மீது சந்தேகம் உள்ளது என்று கூறியிருந்தார். இதையடுத்து 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் அமுக்கி ஜெயசித்ரா கொலை செய்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகப்பட்டனர்.
இந்த 2 சம்பவங்களும் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்தது. எனவே 2 மாவட்ட பொலிசாரும் தலைமறைவாக உள்ள ஜெயசித்ராவை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் மேல்மருவத்தூர் அருகே ஒரு பகுதியில் ஜெயசித்ரா பதுங்கி இருப்பதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த இடத்துக்கு பொலிசார் விரைந்து சென்று ஜெயசித்ராவை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவரை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து ஜெயசித்ரா, அவரது தாய், தந்தை மற்றும் உறவினர்களை வளவனூர் அருகே உள்ள ஒரு ரகசிய இடத்தில் வைத்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் குழந்தைகள் இறந்த விவரம் தெரிய வரும்.