இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையினால் வவுனியா புதிய பேரூந்து நிலையம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமான தீர்ப்பு இன்று (02.11.2018) வவுனியா மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பின்படி கீழ் குறிப்பிட்ட நடைமுறைகள் அமுலுக்கு வருகின்றன.
1. பரீட்சார்த்த நடவடிக்கையாக ஒரே இடத்தில் இருந்து இ.போ.ச வும் தனியாரும் இணைந்த நேர அட்டவனையை நடைமுறைபடுத்தி பேரூந்துகளை இயக்க வேண்டும்.
2. யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் சகல பேரூந்துகளும் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் உள்நுழைந்து செல்லலாம்.
3. வெளி மாகாணத்தில் இருந்து வவுனியா ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் பேரூந்துகள் புதிய பேரூந்து நிலையத்துக்குள் வராது நேராக செல்ல வேண்டும் என்று தற்காலிக கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
4. இதேவேளை இரவு 21.00 மணியில் இருந்து அதிகாலை 03.30 மணிவரை வவுனியா புதிய பேரூந்து நிலையத்துக்குள் வெளி மாகாணங்களில் இருந்து வவுனியா ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் பேரூந்துகள் உள்நுழைந்து செல்லலாம்.
இதனை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நீதிமன்ற நீதவான் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான இளம் பெண்ணை கொலை செய்து இரத்தத்தை முகத்தில் பூசி கொண்ட முன்னாள் கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நோர்போல்க் கவுண்டியை சேர்ந்தவர் கெரி மெக்அவுலி (32). இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. கெரிக்கு தனது கணவர் ஜோ ஸ்டோரே (27) உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அவரை பிரிந்து வாழ்ந்தார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கெரி வீட்டுக்கு வந்த ஜோ அவரை கொடூரமாக கொலை செய்தார். பின்னர் கெரி மீதிருந்த இரத்தத்தை தனது முகத்தில் பூசி கொண்ட நிலையில் செல்போனில் செல்பி எடுத்துள்ளார்.
இதன்பின்னர் அங்கிருந்து வெளியில் சென்றுள்ளார். அப்போது வெளியில் சென்றிருந்த கெரியின் தாய் லெஸ்லே மற்றும் சகோதரர் வீட்டுக்கு வந்தபோது கெரி சடலமாக இருந்ததை பார்த்து அதிர்ந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவம் நடந்த 43 நிமிடத்தில் பொலிசார் ஜோவை கைது செய்தனர். இது குறித்து லெஸ்லே கூறுகையில், என் மகளின் இறப்பை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.
கெரியை ஏற்கனவே கடந்த 2016-ல் ஜோ கொடூரமாக தாக்கினான்.
இது குறித்து பொலிஸில் புகார் அளித்த அவள், புகைப்படங்களையும் சமூகவலைதளங்களில் வெளியிட்டார்.
ஆனால் பொலிசார் சரியான நடவடிக்கையை ஜோ மீது எடுக்கவில்லை, அப்படி எடுத்திருந்தால் என் மகள் இன்று உயிரோடு இருந்திருக்கலாம் என கூறியுள்ளார்.
இதனிடையில் சிறையில் உள்ள அதிகாரிகள் ஜோ மீதான பழைய குற்றங்களையும் தற்போது சுமத்தப்பட்ட குற்றங்களையும் சரியாக ஆராயவில்லை என புகார் எழுந்துள்ளது.
இதற்கு போதுமான ஊழியர்கள் தங்களிடம் இல்லை என சிறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இறுதிச்சடங்கு முடிக்கப்பட்டு புதைக்கப்பட்ட நபர் மீண்டும் உயிரோடு வந்ததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
வயநாடு அருகில் உள்ள ஆடிகொள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சஜி என்பவர், வீட்டை விட்டு வெளியேறி வேலைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். வழக்கமான நாட்களை விட அதிக நாட்கள் அவர் காணாமல் போனதால் பொலிசில் புகார் செய்தனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் பைரகுப்பா என்ற பகுதியில் சஜியை பார்த்ததாக சிலர் அவர் குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். இதற்கிடையே, பைரகுப்பா காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக பொலிசிற்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த உடலை பார்த்து சஜியின் சகோதரர் ஜினேஷ், இது அவர் உடல்தான் என்பதை உறுதியாகச் சொன்னார். முகம் சிதைந்த நிலையில் இருந்த அந்த உடலின் காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதற்கான அடையாளம் தெரிந்தது.
சஜிக்கும் அப்படியொரு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால் அது சஜிதான் என்று உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து, புனித செபாஸ்டியன் தேவாலய கல்லறையில் புதைத்து விட்டனர். 15 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் சஜி உயிரோடு வந்துள்ளார்.
அவரைக் கண்டதும் குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி. அப்படியென்றால் இறுதிச் சடங்கு செய்தது யாருடைய உடல்? என்று கேள்வி எழ இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இலங்கையில் தற்போதைய அரசியல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் பிரதி அமைச்சராக பதவி வகித்த கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதாவது “நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவையும் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்” என கருணா தனது டுவிட்டர் தளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். குறித்த செய்தியை “மகிழ்ச்சியான செய்தி” எனக் கூறி ஆங்கிலத்திலும் பதிவிட்டுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களே பிரதமர் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை காட்டுவதற்கு மஹிந்த தரப்பும், ரணில் தரப்பும் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர்.
மேலும், தமது அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசும் சம்பவங்களும் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 118 பேர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக உள்ளனர்.
மேலும், 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், 7 உறுப்பினர்களை தம்வசம் கொண்ட மக்கள் விடுதலை முன்னணியும் தமது ஆதரவை யாருக்கும் வழங்காமல் இதுவரை நடுநிலை வகித்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மையும், மஹிந்த ராஜபக்ஸவையும் சந்திக்க உள்ளதாக கருணா கூறியுள்ளமை அனைவர் மத்தியிலும் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து நேற்று (01.11.2018) மாலை 6.30 மணியளவில் வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்ட ரூபா 10 இலட்சம் பணம் இனந்தெரியாத இரு நபர்களினால் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து நேற்று மாலை 6.30 மணியளவில் வங்கி ஒன்றில் இயந்திரமூடாக பணத்தைப் பரிமாற்றம் செய்வதற்கு 10 இலட்சம் ரூபா எரிபொருள் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
வவுனியா இ.போ.ச சாலை அருகில் வெள்ளை நிற அப்பாச்சி ரக மோட்டார் சைக்கிலில் வந்த இனந்தெரியாத இருவர் குறித்த நபரை வழிமறித்து பணத்தை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து பணத்தைப் பறிகொடுத்த ஊழியர் குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு திரும்பிச் சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளதுடன் உடனடியாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் மேற்கொண்டுள்ளார்.
இவ்விடயம் குறித்து மேலதிக விசாரணைகளைப் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் மணப்பெண்ணை பார்க்க சென்ற நபரிடம் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதையடுத்து பொலிசார் இதுகுறித்து விசாரணை நடத்தியதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காளிசரன் என்பவர் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். 42 வயதான இவருக்கு பெண் தேடும் படலம் நீண்ட காலமாக நடந்துவருகிறது.
தன்னுடைய முழு விவரங்கள், ஜாதகம் ஆகியவற்றை தனியார் திருமண இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில், காளிசரணுக்கு ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய பெண், `உங்களின் ஜாதகம், முழுத் தகவல்களை எல்லாம் பார்த்தோம். உங்களின் புகைப்படத்தையும் பார்த்தோம். மணப்பெண்ணுக்குப் பிடித்துள்ளது.
வடபழனில் உள்ள ஒரு ஹொட்டல் அறைக்கு வாருங்கள் என கூறியுள்ளனர். மணப்பெண்ணைப் பார்க்கும் ஆவலில் அங்கு சென்றுள்ளார். அப்போது, அன்போடு வரவேற்று உபசரித்த பெண் மற்றும் இரண்டு ஆண்கள் திடீரென காளிசரணைத் தாக்கினர்.
பிறகு அவரிடமிருந்து ஐ போன், நகைகள் ஆகியவற்றைப் பறித்துவிட்டு அந்தக் கும்பல் தப்பி ஓடியது. இதுகுறித்து காளிசரண் வடபழனி பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் நடத்தப்பட்ட விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கேரளா, கொச்சியைச் சேர்ந்த சாவித்திரி மற்றும் அவரின் மகன் சிவா, சாவித்திரியின் தங்கை மகன் கோகுலகிருஷ்ணன் ஆகிய 3 பேர்தான் காளிசரணை ஏமாற்றி நகைகள், செல்போனைப் பறித்துச் சென்றுள்ளனர்.
கைதான 3 பேரிடம் விசாரித்தபோது தனியார் திருமணத் தகவல் இணையதளங்களில் மணப்பெண் தேவை என்று பதிவு செய்தவர்களின் விவரங்களை சேகரிப்போம். பிறகு அவர்களை செல்போனில் தொடர்பு கொள்ளோம்.
பேசும்போதே அவர்கள் குறித்த முழுவிவரங்களை சேகரித்துவிடுவோம். பெரும்பாலும் நீண்ட காலமாக திருமணமாகாத வாலிபர்களை குறி வைத்து ஏமாற்றுவோம் என வாக்குமூலம் அளித்துள்ளனர்.
காளிசரண், மணப்பெண்ணைப் பார்க்க ஆசையாக ஹொட்டலுக்கு சென்றபோது, அங்கு இருந்த சாவித்திரி, நான்தான் மணப்பெண்ணின் அம்மா, நீங்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள், சொந்த வீடு இருக்கிறதா, உங்களின் பூர்வீகம் எது என்று எல்லாவற்றையும் விசாரித்துள்ளார்.
அவர்களின் பேச்சை நம்பிய காளிசரணும் முழுவிவரங்களைத் தெரிவித்துள்ளார். அதன்பிறகுதான் சிவாவும் கோகுலகிருஷ்ணனும் சேர்ந்து காளிசரணைத் தாக்கியுள்ளனர் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் 7 வயது சிறுமி பலத்த காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் சாலக்குடி பகுதியை சேர்ந்தவர் 47 வயதான விபின். ஐக்கிய அமீரகத்தில் பணியாற்றிவரும் இவரது மனைவியும் 7 வயது மகளும் சாலக்குடியில் குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிறுமி ஆவணி பலத்த காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து வந்த சாலக்குடி பொலிசார் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகள் இறந்தது குறித்து துபாயில் இருக்கும் விபினுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இந்த நிலையில் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பொலிசில் புகார் அளித்துள்ளார். மகள் மரணமடைந்தது குறித்து அவரது தாயார் சைனிமோளிடம் விசாரணை நடத்தியபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.
இதில் சந்தேகம் அடைந்த பொலிசார் சாலக்குடி நீதிமன்ற உத்தரவு பெற்று திருச்சூர் மனநல மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்றபோது தாய் சைனிமோளை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்காதலில் மகளை கொன்று மனநல பாதிப்பு போல் நடிக்கிறாரா? அல்லது வேறு காரணமா? என்று பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹைதராபாத்தில் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவனின் தொல்லை தாங்காமல் பெண்மருத்துவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ, சீனாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது கார்த்திக் என்பவரை காதலிக்க ஆரம்பித்துள்ளார். இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் கூட, இருவீட்டாரின் சம்மதத்துடன் 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு முன் ஜெயஸ்ரீ குடும்பத்தினர், ரூ 25 லட்சம் ரொக்கபணம், 45 சவரன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி நகைகளை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
அதன்பின்னரும் கூட தேனிலவு கொண்டாடிவிட்டு திரும்பியதிலிருந்து வரதட்சணை கேட்டு ஜெயஸ்ரீயை கார்த்திக் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் சாதியினை சொல்லியும் காயப்படுத்தியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த ஜெயஸ்ரீ வீட்டில் யாரும் இல்லாதபோது அதிகமான தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஜெயஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணம் முடிந்த சில நாட்களில் கணவரின் பணம் மற்றும் சொத்துக்களை அபகரித்து கொண்டு ஓட்டம் பிடித்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் சாரா. இளம் பெண்ணான இவருக்கு அவரை விட அதிக வயது மூத்தவரான குள்ள மனிதருடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமண நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. பணத்துக்காக இவ்வாறு சாரா திருமணம் செய்து கொள்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்தது.
அதே சமயத்தில் வயதானவரை திருமணம் செய்து கொள்கிறோமே என்ற கவலையில் மணப்பெண் சாராவின் முகம் வாடிய நிலையில் இருந்ததும் தெரிந்தது. ஆனால் திருமணம் முடிந்த கையோடு தனது கணவருடன் சாரா மகிழ்ச்சியாக தேனிலவு சென்று வந்தார்.
இதன்பின்னர் சாரா செய்த செயல் தான் பகீர் ரகம். தேனிலவு முடிந்த கையோடு கணவரின் பணம் மற்றும் சொத்துக்களை எடுத்து கொண்டு தலைமறைவாகியுள்ளார் சாரா. இது அவரின் கணவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையடுத்து தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஓடி போன மனைவி சாரா குறித்து கணவர் புலம்பி வருவதாக தெரியவந்துள்ளது.
யேமன் நாட்டில் தாண்டவமாடிய கடும் பஞ்சம் தொடர்பில் உலக நாடுகளின் பார்வையை திருப்பிய 7 வயது சிறுமி அமல் ஹுசைன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
வடக்கு யேமனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பஞ்சத்தால் தோற்கடிக்கப்பட்ட சிறுமி அமல் சலனமற்று கிடப்பதாக சமூக ஆர்வலர்கள் கண்கலங்கியுள்ளனர்.
கடந்த வாரம் அமெரிக்காவின் முக்கிய நாளேடு ஒன்றில் பட்டினியால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமி அமல் ஹுசைனின் பரிதாபமான புகைப்படம் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குறித்த புகைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தால் பலர் சிறுமி அமலின் குடும்பத்தாருக்கு நிதி உதவி அளிக்க முன்வந்ததுடன், சிறுமியின் உடல் நலம் தேறியுள்ளதா என அக்கறையுடன் விசாரிக்கவும் செய்துள்ளனர்.
வியாழனன்று சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையில் இருந்து 4 மைல்கள் தொலைவில் உள்ள அகதிகள் முகாமில் வைத்து சிறுமி மரணமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அமலின் மரணம் தம்மை மிகவும் உலுக்கியதாக கூறும் தாயார் மரியம் அலி, எஞ்சிய குழந்தைகள் தொடர்பில் தமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
யேமன் நாட்டில் நீடிக்கும் உள்நாட்டுக் கிளர்ச்சி மற்றும் சவுதி அரேபியா தலைமையிலான வான்வழி தாக்குதல் உள்ளிட்டவையால் சுமார் 8 மில்லியன் மக்கள் போதிய உணவின்றி தவிப்பதாகவும்,
இது மிக விரைவில் 14 மில்லியன் என அதிகரிக்கும் எனவும் ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது யேமன் நாட்டின் சரிபாதி மக்கள் தொகையாகும். சவுதி தாக்குதலுக்கு அஞ்சியே சிறுமி அமலின் குடும்பம் உள்ளிட்ட பலர் தங்கள் குடியிருப்புகளை விட்டு அகதிகள் முகாம்களில் தங்குகின்றனர்.
அரேபிய மொழியில் அமல் என்றால் நம்பிக்கை என பொருள்படும். சிறுமியின் புகைப்படம் வெளியானதும் உலக நாடுகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும் என பலரும் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
ஆனால் இதுவரை சவுதி மீதும் யேமன் மீதும் உலக நாடுகளின் பார்வை திரும்பவில்லை என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானம் கடலில் வீழ்வதற்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறுகளை நிவர்த்தி செய்துள்ளதாக விமானி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகொண்ட விமானி சுனேஜா, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கும் அனைத்து ஏற்பாடுகளும் அதிகாரிகள் தரப்பு செய்துள்ளது.
ஆனால் அடுத்த சில நிமிடங்களில் விமானத்தில் கோளாறுகள் சரி செய்யப்பட்டதாகவும், பயணத்திற்கு பாதிப்பு ஏற்படாது எனவும் சுனேஜா தெரிவித்ததாக பாலி – நுஸா விமான நிலைய முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து அழைப்பு விடுத்தும், விமானி சுனேஜா மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் ஜகார்த்தா நோக்கி விமானத்தை அவர் செலுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி லயன் ஏர் விமானம் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் தரையிறங்க கோரிக்கை விடுத்த இன்னொரு விமானத்திற்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனுமதி மருத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் விமான நிலையத்தின் மேலே சில நிமிடங்கள் அந்த விமானத்தை வட்டமிடவும் கேட்டுக்கொண்டுள்ளனர். மட்டுமின்றி லயன் ஏர் விமானி சுனேஜா மற்றும் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் இடையே மேற்கொள்ளப்பட்ட உரையாடல்கள் தாம் கேட்டதாகவும் அந்த விமானி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரங்கள் தொடர்பில் விளக்கம் தெரிவிக்க லயன் ஏர் நிர்வாகிகள் தற்போது மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை நிபுணர்கள் கைப்பற்றியுள்ளதாகவும்,
அது விமானியின் அறையில் இருக்கும் கருவியா அல்லது, மொத்த விமானத்திற்கான கருவியா என்பதில் தெளிவான தகவல் வெளியாகவில்ல.
விமானம் புறப்பட்ட பின்னர் 13 நிமிடங்களில் ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பில் முக்கிய ஆதாரங்கள் அந்த கருப்பு பெட்டியில் இருந்து கிடைக்கலாம் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நான்கு குழந்தைகளின் தாயாகிய ஒரு பெண் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் தன் உடலை அடக்கம் செய்யும் செலவுகளுக்காகவும் அதற்கு முன் நடத்த திட்டமிட்டுள்ள தனது திருமண செலவுகளுக்காகவும் பணம் சேகரித்து வருகிறார்.
பிரித்தானியாவைச் சேர்ந்த Susan Rumney (26)க்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பதாக இரண்டு வாரங்களுக்கு முன் கண்டு பிடிக்கப்பட்டது. இறக்கும் முன் தனது நீண்ட கால காதலரான Jay (38)ஐ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவரது ஆசை.
இடுப்பு பகுதியில் அவரது புற்றுநோய் பரவி விட்டதால், ஒன்றும் செய்ய முடியாது என மருத்துவர்கள் கைவிட்டு விட்ட நிலைமையில் திருமணம் வரையாவது உயிரோடு இருக்க வேண்டும் என்ற ஆசையில் அவர் கீமோதெரபி என்னும் புற்றுநோய் சிகிச்சையை தொடங்கியிருக்கிறார்.
தினமும் இரவில் தூங்கப் போவதற்கு பயமாக இருப்பதாக கூறும் Susan, எங்கே ஒருவேளை தூக்கத்திலேயே உயிர் போய்விடுமோ என பயப்படுவதாக நடுக்கத்துடன் தெரிவிக்கிறார்.
இந்நிலையில் Susanஇன் தங்கையான Lisa (24) தனது அக்காவின் திருமணம் மற்றும் அடக்க செலவுகளுக்காக பணம் புரட்டத் தொடங்கியுள்ளார்.
ஒரு வாரத்திற்குள் 5,300 பவுண்டுகள் வரை சேர்ந்துள்ள நிலையில் தொடர்ந்து மக்கள் Susanஇன் ஆசை நிறைவேற உதவிவருகின்றனர்.
கேரளவில் உள்ள ஆலாப்புழாவைச் சேர்ந்தவர் கார்த்தியாயினி. அவருக்கு வயது 96. சிறுவயதில் பள்ளிக்கு சென்று கல்வி கற்க முடியாத சூழ்நிலையால் எழுதப் படிக்க தெரியாதவரான இந்த பாட்டிக்கு இப்போது திடிரென கல்வி கற்கும் ஆர்வம் உண்டானது. வெறும் எண்ணத்தில் மட்டும் இல்லாமல் செயலிலும் அதை நிறைவேற்ற வேண்டும் என முயன்ற கல்வி கற்ற பாட்டி இப்போது 98% மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார்.
கேரள மாநிலம் எழுத்தறிவு இயக்கத்தினரால் நடத்தப்பட்ட தேர்வுகளில் எழுத்துத் தேர்வில் 98 சதவீதமும் வாசிக்கும் தேர்வில் 100 சதவீதமும் பெற்றார்.
இதையடுத்து திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கும் விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கார்த்தியாயினி பாட்டிக்கு சான்றிதழ் கொடுத்து கௌரவிக்கவுள்ளார். தற்போது கேரளா முழுவதும் கார்த்தியாயினி பாட்டி தேர்வெழுதும் புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது.
கடந்த 3 வருட காலப்பகுதியில் வர்த்தக வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட 50 மில்லியன் ரூபா வரையிலான கடன் தொகைக்கு வட்டி மற்றும் தண்டப்பணம் முற்றாக தள்ளுபடி செய்யப்படுகிறது.
இந்த தொகையை அரசாங்கம் செலுத்தவுள்ளது. கடந்த 3 வருட காலப்பகுதியில் குறைந்த வளர்ச்சி வீதம் மற்றும் வாழ்க்கைச்செலவின் மூலம் பொருளாதாரம் பெருமளவில் வீழ்ச்சிகண்டிருந்தது.
இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரும் நிதி மற்றும் பொருளாதார அமைச்சரும் கவனம் செலுத்தியுள்ளனர்.
இந்த நிலை அதிகரித்தமை நாட்டில் நிலவும் நிலைமைக்கு பொருத்தம் மற்றும் தேசிய தொழிற்துறையினர் மற்றும் கைத்தொழில் துறைக்கு பெரும் பாதிப்பு முன்னைய அரசாங்கத்தின் கொள்கைகளின் பிரதிபலனாகும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் மிக பொருத்தமான காலநிலையுடன் 2018/2019 பெரும்போக நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. அத்தோடு மின் உற்பத்தி, குடிநீர் விநியோகம் மற்றும் உற்பத்திக்கு போதுமான வகையில் நீர் மற்றும் நீர்ப்பாசன முறை ஆகக்கூடிய செயல்பாட்டுக்கு வழிவகுத்துள்ளது.
இதன் மூலம் புதிய வலுவுடனான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
இது விவசாய உற்பத்தியின் மூலம் ஆகக் கூடிய பயன்களை பெற்றுக்கொள்வதற்கு நாட்டை தயார்படுத்துவதற்கு இது பொருத்தமான சந்தர்ப்பமாகும் என்று அரசாங்கம் நம்புகின்றது. இதனுடன் அதிக வாழ்க்கைச்செலவு மூலம் நுகர்வோர் மீது பாரிய சுமை சுமத்தப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில் பிரதமர் மற்றும் நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்காக கீழ் கண்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தேசிய விவசாயிகளை பாதுகாப்பதுடன் ஆக கூடிய வாழ்க்கை செலவின் காரணமாக ஏற்பட்டுள்ள அழுத்தத்தை சம படுத்துவதற்கு விசேட வர்த்தக பொருட்கள் வரி பருப்புக்காக ஒரு கிலோ கிராமிற்கு 5 ரூபா வீதமும் கடலை ஒரு கிலோ கிராமுக்கு 5 ரூபா விதமும் உளுந்துக்காக ஒரு கிலோவிற்கு 25 ரூபாவும் விலை குறைக்கப்பட்டுள்ளது.
கோதுமைக்காக நிலவிய ஒரு கிலோ கிராமிற்கு ரூபா 6 இற்கு இறக்குமதி நிவாரணம் 9 ரூபா வரை அதிகரிக்கப்படுகிறது.
சீனிக்கான விசேட வர்த்தக பொருட்கள் வரி ஒரு கிலோவிற்கு 10 ரூபாவினால் குறைக்கப்படுகிறது. இதற்கமைவாக அத்தியாவசிய பாவனையாளர்களுக்கான பொருட்களின் விலை உடனடியாக குறைக்கப்படுகிறது.
சமுர்த்தி பயனாளிகளுக்கு நன்மை கிடைக்க கூடிய வகையில் விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நெல் உற்பத்திக்காக வழங்கப்படும் 5 கிலோகிராம் எடை கொண்ட உர பொதியின் விலை 500 ரூபாவாக முன்னெடுக்கப்படுவதுடன் ஏனைய உற்பத்திகளுக்கான 50 கிலோ எடை கொண்ட உர பொதி நிவாரண விலை 1500 ரூபாயில் இருந்து 1000 ரூபாவாக குறைக்கப்படுகிறது.
நிதி நிறுவனங்களை நடத்தும் சேமிப்பு மற்றும் நிலையான வைப்பின் அடிப்படையில் கிடைக்கப்படும் வட்டி வரிகளில் இருந்து விடுவிக்கப்படுகிறது.
தொலைபேசி சேவைக்காக விதிக்கப்பட்டுள்ள வரியை கவனத்தில் கொண்டு 25 சதவீதமான தொலை தொடர்பு வரி 15 சதவீதமாக குறைவடைகின்றது.
சிறிய மற்றும் நடுத்தர ஆடை உற்பத்தி பயனாளிகளுக்கு வழங்குவதற்காக இறக்குமதி புடவை வரிக்காக வெட் வரி நீக்கப்படுகிறது.
அத்துடன் மொத்த மற்றும் சில்லரை வியாபார பிரிவின் வெட் வழங்கலுக்கு உட்பட்ட வருடாந்த பெறுமதி 50 மில்லியயன் ரூபாவில் இருந்து 100ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி விரும்பினால் அதற்கு ஆதரவளிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமது அரசாங்கத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று பொதுத் தேர்தலுக்கு செல்வேதேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஒன்றுக்கு செல்வது அவசியமானது எனவும், வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதே இதற்கான சுலபமான வழிமுறை எனவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதும், என்னை தோற்கடிப்பதும் தேர்தல் ஒன்றுக்கு செல்வதாகும், அதனை நான் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.