15 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த பொலிஸ் பொறுப்பதிகாரி!!

15 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்ட தொடங்கொட பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி சேவையிலிருந்து உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

‘’எங்களுக்காக நாங்கள்” நிகழ்ச்சித்திட்டத்திற்கு சிறுமியை அழைத்துச் செல்வதாக பெற்றோரிடம் கூறி அவர்களின் விருப்பத்திற்மைய சிறுமியை அழைத்துச் சென்று துஸ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரியை கடந்த மாதம் 20 ஆம் திகதி அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி களுத்துறை நகொட மருத்துவனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அநுராதபுரத்துக்கு சிறுமியை அழைத்துச் சென்ற பொறுப்பதிகாரி துஷ்பிரயோகம் செய்த பின்னர் சிறுமியை மீண்டும், தங்கியிருந்த ஓய்வு விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் உணவு வாங்கி வருவதற்காக வெளியில் சென்ற வேளை மேலும் பயமடைந்த சிறுமி விடுதியில் இருந்து வெளியேறி அந்த இடத்தில் தங்கியிருந்த கிராம பாதுகாப்பு உத்தயோகத்தரிடம் சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு தொடங்கொடக்கு வந்த சிறுமி, தனக்கு நேர்ந்தவைகளைப் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பெற்றார் களுத்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மகிந்தவின் தோல்வியையடுத்து தலைமுடி வளர்த்த இளைஞன் தற்போது செய்த காரியம்!!

 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இளைஞனொருவன் தலைமுடி மற்றும் தாடியை வளர்த்து வந்துள்ளார்.

கடந்த வாரம் மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவிப் பிரமாணம் செய்த பின்னர் குறித்த இளைஞன் தனது தலைமுடியை வெட்டி மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு தானம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிண்ணியாவில் செத்துக் கரையொதுங்கும் மீன்கள் : பீதியில் மக்கள்!!

கிண்ணியா கடற்கரையோரங்களில் அதிகளவான மீன்கள் இன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்த மீன்கள் கிண்ணியா பாலத்திலிருந்து உப்பாறு வரையான கடற்கரையோரங்களை வந்தடைந்துள்ளன. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

மீன்கள் உயிரிழந்தமைக்கான காரணங்கள் இன்னும் தெரியவரவில்லை என்றும், இதுதொடர்பாக மீனவர்கள் மீன்பிடி திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் விலைகள் குறைப்பு : மகிந்த எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, 92 ஒக்டைன் பெற்றோல் வகைகள் 10 ரூபாவால் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 155 ரூபாவில் இருந்த 145 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

டீசலின் விலை 7 ரூபாவினாலும் குறைக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே, டீசலின் புதிய விலை 123 ரூபாவில் இருந்து 116 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் ஏற்படுத்தப்பட்ட புதிய அரசாங்கத்தில் நிதி அமைச்சராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

வவுனியா மாவட்ட முதியோர் தினவிழா!!

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களமும் வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய வவுனியா மாவட்ட முதியோர் தினவிழா இன்று (01.11) வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதிய பேருந்து நிலையத்தில் காலை பேருந்துகளில் முதியோர்களின் பயண வசதிக்காக ஆசனம் ஒதுக்குகின்ற நிகழ்வு இடம்பெற்றிருந்ததோடு அதனை அடுத்து முதியோர் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற தொனிப்பொருளில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகரசபை கலாசார மண்டபம் வரை ஊர்வலம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஹனிபா கலந்துகொண்டதோடு மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஷ்குமார், செட்டிக்குளம் பிரதேச செயலாளர் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் கைதடி முதியோர் இல்லத்தில் பொறுப்பதிகாரி மற்றும் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஊர்வலத்திலும் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் கடினப்பந்து துடுப்பாட்ட சமர் : வெற்றிக் கிண்ணங்களின் வாகன பவனி!!

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரிக்கும் புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கும் இடையில் எதிர்வரும் 03.11.2018 அன்று கடினப்பந்து துடுப்பாட்ட போட்டி நடைறெவுள்ளது.

இந்துக் கல்லூரிக்கும் புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கும் நடைபெறவிருக்கும் கடினப்பந்து துடுப்பாட்ட சமருக்கான முன்னேற்பாடாக இன்று 01.11.2018 வெற்றிபெறவிருக்கும் அணியினருக்கு வழங்கப்படவிருக்கும் வெற்றிக் கிண்ணங்கள் வாகன பவனியாக புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

கோவில்குளம் இந்துக்கல்லூரியின் அதிபர் த.பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக வவுனியா நகரசபையின் உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணத்தின் வாகன பவனியை ஆரம்பித்து வைத்திருந்தார்.

கோவிற்குளம் இந்துக்கல்லூரியில் இருந்து பாண்ட் வாத்தியங்கள் முழங்க கல்லூரியின் துடுப்பாட்ட அணியினரால் வாகன பவனியாக வெற்றி கிண்ணங்கள் வவுனியா மணிக்கூட்டு சந்தியை அடைந்து அங்கிருந்து புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இம் மாபெரும் கடினப்பந்து துடுப்பாட்ட சமரானது எதிர்வரும் 03.11.2018 அன்று தெற்கு மற்றும் வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர்களான மு.ராதாகிருஸ்ணன், திருமதி எஸ்.அன்னமலர் ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தன் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் அர்ஜூன் மனு!!

கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகார் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி, நடிகர் அர்ஜூன் மனு அளித்துள்ளார்.

மீ டூ விவகாரம் திரைத்துறையில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்த நிலையில், நடிகர் அர்ஜூன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகாரை மீ டூ ஹேஷ்டாக் மூலம் தெரிவித்தார்.

இந்த புகாரை மறுத்த அர்ஜூன், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய உள்ளதாக கூறிய நிலையில், ஸ்ருதியிடம் மான நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் கேட்டு பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதன் பின்னர், கடந்த 2015ஆம் ஆண்டு தனியார் சொகுசு விடுதியில் அர்ஜூன் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும், தன் அறைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் ஸ்ருதி ஹரிஹரன் பொலிசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அர்ஜூன் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அர்ஜூனின் வழக்கறிஞர் இந்த பாலியல் புகார் வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கணவன் இறந்த செய்திகேட்டு அதிர்ச்சியில் மரணமடைந்த மனைவி : அனாதையான 2 மகன்கள் : கதறும் உறவினர்கள்!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே விஷத்தை குடித்து கணவன் பலியான சற்றுநேரத்தில் மனைவியும் இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி பெருமாள்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் (55), கூலித்தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இவருடைய மனைவி சித்ரா (45) இருதயநோய் உள்ளவர் என கூறப்படுகிறது.

இந்த தம்பதியினருக்கு 14 வயதில் லோகேஷ் என்ற மகனும், 9 வயதில் சூரியன் என்ற மகனும் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள வெங்கடாசலம், 29ம் தேதின்று மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை மது என நினைத்து குடித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவருடைய வாயில் இருந் நுரை தள்ளியுள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வெங்கடாசலம் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்தார்.

இந்த செய்தி உடனடியாக அவருடைய மனைவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. செய்தி கேட்ட அதிர்ச்சியில் அதிகாலை 2 மணிக்கு சித்ராவும் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அறிந்த பொலிஸார் சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் அனாதையான இரண்டு சிறுவர்களையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதி முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமையல் செய்ய மறுப்பு தெரிவித்த மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்!!

அந்தியூரில் சமையல் செய்ய மறுப்பு தெரிவித்த மனைவியை மண்வெட்டியால் கணவன் வெட்டி கொலை செய்துள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொல்கத்தா ஹசனாபாத் பகுதியை சேர்ந்தவர்கள் ரோஹித் காஜா (34) – தோமினா (30) தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

தம்பதியினர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்கத்தா பகுதியை சேர்ந்த சில தொழிலாளர்களுடன் சேர்ந்து ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தாசரியூர் பகுதியில் உள்ள செங்கல்சூளையில் வேலை செய்ய வந்தனர்.

கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் இடையில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று செங்கல்சூளையில் நின்று கொண்டிருந்த ரோஹித், மதிய நேரம் ஆகிவிட்டது என மனைவியை சமையல் செய்யுமாறு கூறியுள்ளார். அதற்கு தோமினா மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இதில் ஆத்திரமடைந்த ரோஹித் உடனடியாக மண்வெட்டியை கொண்டு, தோமினாவின் தலையில் வெட்டியுள்ளார். இதனை பார்த்த சக ஊழியர்கள் உடனடியாக தோமினாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அனுமதிக்கப்பட்ட தோமினா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் தலைமறைவாகியுள்ள ரோஹித்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பலியான மகளை நினைத்து கண்ணீர்விடும் தாய் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

தமிழகத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் பலியான லோகேஸ்வரி தாய், தன் மகளை நினைத்து தினந்தோறும் அழுது கொண்டிருப்பதாக வேதனையுடன் கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் நரசீபுரத்தில் உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் கடந்த ஜுலை மாதம் 13 ஆம் திகதி பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நடைபெற்றது.

அப்போது லேகேஸ்வரி என்ற பெண்ணை மாடியிலிருந்து பயிற்சியாளர் ஆறுமுகம் கீழே தள்ளிவிட அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

பயிற்சியாளர் லோகேஸ்வரியை தள்ளிவிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. அதன் பின் தமிழக அரசு 5 லட்ச ரூபாயும், கல்லூரி சார்பில் 6 லட்சம் ரூபாயும் கொடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் பிரபல தமிழ் ஊடகம் ஒன்று லோகேஸ்வரியி தாய் மற்றும் தந்தையிடம் லோகேஸ்வரி பற்றி கேட்டுள்ளனர். அப்போது லோகேஸ்வரியின் தாய் வேகமாக சென்று அந்த புகைப்படங்களை எடுத்து கண்ணீர்விட்டு மகளைப் பற்றி கூறியுள்ளார்.

எங்களுக்கு இரண்டு குழந்தைகள், பெரியவனின் பெயர் சுரேஷ், சின்னவளின் பெயர் தான் லோகேஸ்வரி. மிகவும் தைரியமாக இருப்பாள்.

ஆம்பளை மாதிரி இருப்பாள், அவளுக்கு பொலிஸ் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. நீ குண்டா இருக்க உனக்கு இது செட் ஆகாது என்று கூறினாலும், அவள் அதை எல்லாம் கேட்கமாட்டாள்.

வைராக்கியம் அவளுக்கு அதிகம், முதலில் தான் பொலிஸ் ஆகிவிட்டு அண்ணுக்கு கல்யாணம் செய்து பின்னரே தான் கல்யாண்ம செய்துகொள்வேன் என்று கூறுவாள்.

அண்ணன் என்றால் அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். சம்பவம் நடந்த அன்று கூட ஏதோ பரீட்சை என்று தான் சொல்லிவிட்டு சென்றாள், இது போன்ற பயிற்சி என்று அவள் சொல்லவில்லை, சொல்லியிருந்தாள் அவளை அனுப்பியிருக்கமாட்டேன்.

மேலும் திபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அவள் பிறந்தாள், ஒவ்வொரு ஆண்டும் அவளுடன் தீபாவளியை கொண்டாடுவோம், ஆனால் இந்த வருடம் என்று அழுதுள்ளார்.

மூன்று முறை அவளுக்கு விபத்து நடந்துருக்கு, அப்போ எல்லாம் தப்பிச்சவ, இப்படி இறந்து போயிட்டா. அந்த வீடியோவ பார்த்த போது செத்துகூட போயிடலாம் என்று தோன்றியது, அதன் பின் பல காரணங்களுக்காக விட்டுவிட்டோம் என்று, தற்போது அவளுடைய உடை, போன், வண்டியை பார்த்து அடிக்கடி அழுகிறோம் என்று கூறியுள்ளார்.

யாழில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பல்கலைக்கழக மாணவன் பலி!!

யாழ்.தெல்லிப்பளை பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பல்கலை கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்..

யாழ். பல்கலைகழக முகாமைத்துவ பீட முதலாம் வருட மாணவனான ஊரெழு வடக்கு சுன்னாகத்தை சேர்ந்த அழகராசா புவனநிதர்சன் (22) என்பவரே இவ்வாறு உயிரிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபரிடம் இருந்த சாரதி அனுமதி பத்திரத்தை வைத்தே பொலிஸார் விபத்துக்குள்ளான நபரின் அடையாளத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்த மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யானை தாக்கியதில் வயோதிபர் மரணம்!!

திருகோணமலை, தெவனிபியவர பகுதியில் யானை தாக்கிய நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த வயோதிபர் மஹாதிவுல்வெவ, தெவனிபியவர பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் ஏ.எச்.ஏ.சோமசந்திர (60 வயது) எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

ஐக்கிய தேசிய கட்சியின் ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்றிருந்த நிலையில்ஆர்ப்பாட்டத்திற்கு செல்வதற்காக வீட்டிலிருந்து பிரதான வீதிக்கு சக நண்பர்களுடன் வருகை தந்து கொண்டிருந்த வேளை யானை தாக்கிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் இவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டம் தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!!

எதிர்வரும் 5ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடனான கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை அறிவித்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை 16 ஆம் திகதி வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னர் ஒத்தி வைத்திருந்தார்.
இந்த நிலையில், எதிர்வரும் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதியின் செயலாளர் வெளியிடவுள்ளார்.

அரசியல் கொந்தளிப்புக்கு முற்றுப்புள்ளியா? சபாநாயகரின் அதிரடி நடவடிக்கை!!

நாடாளுமன்றத்தில் பிரதமர் ஒருவருக்கு கிடைக்கும் ஆசனம் மற்றும் அனைத்து வரப்பிரசாதங்களையும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய பிரதமர் தொடர்பான வெளியான வர்த்தகமானியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில், நாடாளுமன்றத்தில் புதிய பிரதமருக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.

திருமணமான 6 மாதத்தில் உயிரிழந்த கணவர் : உடலை பார்த்து கதறிய இளம் மனைவி!!

திருமணமான 6 மாதத்தில் பன்றி காய்ச்சலால் பொலிஸ்காரர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான விஜய் என்பவர் பொலிசாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் நர்மதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

கடந்த சில நாட்களாக விஜய், காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக கடந்த மாதம் 26ம் தேதி முதல் விடுமுறை எடுத்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் காய்ச்சல் குணமாகாமல் தொடர்ந்து அதிகமானது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கடந்த 29-ந் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது, அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஜய், மருத்துவமனையில் பரிதாபமாக இறந் தார்.

விஜயின் உடலை பார்த்து அவரது மனைவி நர்மதா கதறி அழுதார். விஜய் இறந்த துக்கம் தாங்காமல் அவருடைய குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.

தீபாவளிக்கு தயாரான குடும்பம் : இறுதிச் சடங்கை நிறைவேற்ற நேர்ந்த துயரம்!!

ஹேப்பி ஃபேமிலி – இது தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த சாஹுவின் வீட்டில் அவரது மனைவி ஹிமான்சலி சுவரில் மாட்டி வைத்திருந்த வாசகம். இது தற்போது வெறும் நினைவுகளாக மாறிவிட்டது.

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 12 முதல் இரண்டு கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.

நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த மாநிலத்தின் தாண்டேவாடே மாவட்டத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி செய்திக்குழுவினர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்கள் பாதுகாப்பிற்கு மத்திய பாதுகாப்பு படையான சிஆர்பிஎப் காவலர்களும் இருந்த நிலையில் அவர்கள் மீது நக்சல் தாக்குதல் நடைபெற்றது.

இதில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி கமெராமேன் அச்சுதானந்த் சாஹு (34) பரிதாபமாக பலியானார். இதுகுறித்து சாஹூவின் பக்கத்து வீட்டுக்காரர் பர்வீன் மோர் வேதனையுடன் பதிவு செய்துள்ளார்.

டிவி செய்திகள் மூலமே தன் கணவரின் இறப்பு ஹிமான்சலிக்குத் தெரிய வந்தது. அவரால் பேசக் கூட முடியவில்லை. அச்சுதானந்த சாஹுவின் பெற்றோர் செவ்வாய்க்கிழமை அன்று டெல்லிக்கு ரயிலில் வந்துகொண்டிருந்தனர்.

தன் மகன் மற்றும் மருமகளுடன் தீபாவளியைக் கொண்டாடுவதாகத் திட்டம். எதிர்பாராத விதமாகத் தெரிந்த மகனின் இறப்புச் செய்தியால் பாதி வழியிலேயே இறங்கிவிட்டனர்.

இறுதிச் சடங்குகளுக்காக வேதனையுடன் தங்களின் சொந்த ஊர் திரும்பினர். சத்தீஸ்கரின் எல்லையில் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள பொளங்கீர் மாவட்டத்தின் குசுரிமுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் அச்சுதானந்த் சாஹு. சில மாதங்களுக்கு முன்னர்தான் வேலை நிமித்தம் சொந்த ஊர் சென்றார் அச்சுதானந்த சாஹு.

டெல்லியில் அவருக்கு உறவினர்கள் இல்லாததால், சாஹுவின் உடல் அவரின் சொந்த ஊருக்கே எடுத்துச் செல்லப்பட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.