189 பேருடன் விபத்துக்குள்ளான விமானம் : மர்மம் விலகாத 60 மணி நேரம்!!

இதுவரை மாயமான மலேசிய விமானம் தொடர்பில் உறுதியான எந்த தகவலும் வெளியாகாத நிலையில், விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானம் தொடர்பில் நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்ப உலகம் அசுர வளர்ச்சி அடைந்த பின்னரும், விமானம் விபத்துக்குள்ளாகி 60 மணி நேரத்திற்கும் மேலாகியும் இதுவரை முக்கிய பாகங்கள் எதையும் நிபுணர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

விமானத்தின் பாகங்கள் என கருதப்படும் முக்கியமல்லாத பாகங்கள், பயணிகள் சிலரது சடலங்கள் என மீட்புக்குழுவினரால் மீட்கப்பட்டிருந்தாலும் விமானம் எங்கே என இதுவரை கண்டுபிடிக்க முடியாதது நிபுணர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமான விபத்திற்கு பின்னர் கடலுக்கடியில் தேடுவதற்கு பயன்படுத்தப்படும் சோனார் கருவிகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் அனைத்தும் பயன்படுத்தப்படுகிறது என்றபோதும் இதுவரை விமானம் விபத்துக்குள்ளான பகுதி எதுவென கண்டுபிடிக்க முடியவில்லை.

மட்டுமின்றி விபத்துக்கு உள்ளானபோது விமானத்தில் பதிவான தகவல்களை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினால் மட்டுமே, வெளியாகி வெறும் 2 மாதமேயான மேக்ஸ் 8 ரக போயிங் விமானம் விபத்துக்குள்ளானதன் காரணம் தெரிந்துகொள்ள முடியும்.

அது தெரிந்துகொண்டால் மட்டுமே எஞ்சிய விமானங்களின் தொழில்நுட்பங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்தி பெரும் விபத்துக்களை தவிர்க்க முடியும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி தொடர்பில் தீவிரமாக தேடி வருகின்றனர். கருப்பு பெட்டி இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளதாகவும் உடனடியாக மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி திங்களன்று காலை 6.30 மணியளவில் குறித்த விமானம் ரடாரில் இருந்து மாயமானது. அதன் பின்னர் மாயமான விமானத்தின் பாகங்கள் கடலில் 30 மீற்றர் ஆழத்தில் நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனிடையே லயன் ஏர் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் எஞ்சிய 11 போயிங் விமானங்களையும் நிபுணர்கள் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

விமானங்களை தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்தி உறுதிப்படுத்திய பின்னரே பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என இந்தோனேசிய அரசு லயன் ஏர் நிர்வாகத்திடம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

319 பந்துகளில் 556 ஓட்டங்கள் : இளம் வீரர் சாதனை!!

இந்தியாவின் பரோடாவைச் சேர்ந்த 14 வயது இளம் வீரரான பிரியான்ஷு மோலியா ஒரே இன்னிங்சில் 556 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காது திகைக்கவைக்கும் துடுப்பாட்டத் திறமையை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.

319 பந்துகளில் 98 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 556 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் திகழ்ந்தார் மோலியா.

மொஹீந்தர் அமர்நாத் கிரிக்கெட் அகடமிக்காக ஆடிய மோலியாவின் இந்த இன்னிங்சினால் அந்த அணி 826/4 என்ற இமாலய ரன் எண்ணிக்கையை எட்டியது.

தன் இன்னிங்ஸ் குறித்து மோலியா கூறும்போது, “என்னுடைய முந்தைய உயர்ந்தபட்ச ஓட்டங்கள் 254, நல்ல இன்னிங்ஸ்தான் பந்து வீச்சு நன்றாக இருந்தது 4,5 முறை பீட்டன் ஆனேன். 100, 100 ஓட்டங்களாக இலக்கு நிர்ணயித்து ஆடினேன்” என்றார்.

மேலும் தன் ஒப் ஸ்பின் பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் பிரியான்ஷு மோலியா.

வயிற்றிலிருந்த குழந்தையைக் காக்க உயிரைக் கொடுத்த தாய் : கண்ணீர் விட்ட டைட்டானிக் நாயகி!!

குழந்தை வயிற்றிலிருக்கும்போது கருப்பையில் புற்று நோய் ஏற்பட, கருவைக் கலைத்து விடுமாறு மருத்துவர்கள் எச்சரித்ததற்கு மாறாக புற்றுநோய் சிகிச்சையை ஒத்திப்போட்டதால் உயிரிழந்தார் ஒரு பிரித்தானியப் பெண்.

பிரித்தானியாவின் Lancashireஐச் சேர்ந்த Gemma Nuttall (29) கர்ப்பமுற்றிருக்கும்போது அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கருவைக் கலைத்துவிட்டு சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் குழந்தையை பாதிக்கக்கூடாது என்பதற்காக அவர் கீமோதெரபி என்னும் புற்றுநோய் சிகிச்சையை தள்ளிப் போட்டார்.

அதற்கு பதிலாக immunotherapy என்னும் மாற்று சிகிச்சையை அவர் சோதனை முறையில் மேற்கொண்டார். அந்த சிகிச்சைக்கு உதவுவதற்காக டைட்டானிக் புகழ் நடிகையான கேட் வின்ஸ்லட் பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.

சுமார் 300,000 பவுண்டுகள் சேர்த்து Gemmaவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் நோய் குணமாவது போல் தோன்றினாலும் அது மீண்டும் மீண்டும் வந்தது. அறுவை சிகிச்சை முறையில் அவருக்கு குழந்தை பிறந்தது.

அதற்குப்பின் கருப்பை புற்று, மூளை, நுரையீரல் போன்ற உறுப்புகளுக்கும் பரவிய நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன் அவர் உயிரிழந்தார்.

அவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என முயற்சி செய்தும் அவர் உயிரிழந்தது கேட் வின்ஸ்லட்டுக்கு பெரிதும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது அடக்க ஆராதனையில் கலந்து கொண்ட கேட், கண்ணீர் மல்க, Gemmaவின் அடக்க ஆராதனையில் கலந்து கொள்வதை தான் கௌரவமாக கருதுவதாகவும், Gemma அதற்கு தகுதியுடையவர் என்றும் தெரிவித்துள்ளார்.

விண்ணில் தோன்றிய கடவுளின் கை : நாசா வெளியிட்ட அதிர்ச்சிப் புகைப்படம்!!

சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் ஸ்பேஸ் டெலஸ்கோப் ஒன்று விண்ணில் கை வடிவத்தில் தோன்றிய விண்பொருளை (celestial object) புகைப்படம் எடுத்துள்ளது.

தற்போது அந்த புகைப்படம் ‘கடவுளின் கை’ என்று பெயர் சூட்டப்பட்டு வைரல் ஆகிக்கொண்டு வருகின்றது. குறித்த புகைப்படம் பற்றி நாசா விளக்கம் அளித்துள்ளது;

“ஒரு நட்சத்திர வெடிப்பு ஏற்பட்டு, அதன் மூலம் வெளியேறிய மாபெரும் மேக பொருட்கள் மூலம் கை போன்ற வடிவம் விண்ணில் உருவாகி உள்ளது.அந்த காட்சியை நாசாவின் நுக்லியர் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் டெலஸ்கோப் அர்ரே (Nuclear Spectroscopic புகைப்படத்தில் உயர் ஆற்றல் எக்ஸ் கதிர்கள் (high-energy X-rays) நீள நிறத்திலும், குறைவான ஆற்றல் கொண்ட எக்ஸ் கதிர்கள் சிகப்பு மற்றும் பச்சை நிறத்திலும் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளது.

மேலும் வெடிப்பில் வெளியான பருப்பொருட்கள் நிஜமாகவே கை போன்ற வடிவத்தை உருவாக்கியதா அல்லது பார்ப்பதற்கு அப்படி தெரிகிறதா என்று மக்கள் குழம்பி வருகின்றனர்.

இன்றே இந்த 6 பழக்கங்களை நிறுத்தி கொள்ளுங்கள் : உயிருக்கே ஆபத்து வருமாம்!!

தற்போதைய காலத்தில் அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகள் அவர்கள் தினமும் செய்யும் ஒரு சில செயல்களினால் தான் வருகின்றன என்பது அவர்களுக்கே தெரியாது. அந்த வரிசையில் நாம் இன்றே நிறுத்தி கொள்ள வேண்டிய ஒரு சில முக்கிய பழக்க வழக்கங்கள் என்னென்ன என்பதை அறிந்து கொள்வோம்.

மாத்திரைகள் : இரவு நேரங்களில் தூக்கம் வரவில்லை என்பதற்கான கண்ட தூக்க மாத்திரைகளையெல்லாம் நாம் சாப்பிடுகின்றோம். இந்த பழக்கம் நமது உடலுக்கும் பக்க விளைவு ஏற்படுத்தி, அல்சர், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.

நகம் கடிக்கும் பழக்கம் : ஒரு சிலருக்கும் எப்பொழுதும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். இப்படி செய்வதால் அவர்களுக்கு வயிற்றில் கோளாறுகள், நகத்தில் தழும்புகள், பற்களில் பிரச்சினை போன்றவை ஏற்படும்.

ஜங்க் உணவுகள் : வீட்டில் சமைக்கும் உணவுளை உண்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். எனெனில் கடைகளில் விற்கப்படும் ஜங்க் உணவுகள் நமது உடல் ஆரோக்கியத்தை கெடுக்குமே தவிர எந்த விதத்திலும் நமக்கு நன்மையை தராது.

புகை பிடித்தல் : புகை பிடித்தல் புற்றுநோய், இதய கோளாறுகள், நுரையீரல் பிரச்சினை போன்ற ஆயிர கணக்கான நோய்கள் வரும் என தெரிந்தும் நாம் பலரும் இதனை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

காலை உணவை தவிர்த்தால் : காலை உணவை தவிர்த்தால் கட்டாயம் உங்களுக்கு வருகின்ற பிரச்சினைகள் ஏராளம். மேலும் இதனால் உடல் பருமன், தொப்பை போடுதல், சோர்வு, மன அழுத்தம் ஆகியவை இதனால் ஏற்படும்.

பாத்ரூமில் மொபைல் பயன்படுத்துதல் : மொபைலை பாத்ரூமில் பயன்படுத்துவதால் பாத்ரூமில் உள்ள பாக்டீரியா, வைரஸ், E கோலி போன்ற நுண்ணுயிர்கள் நமது மொபைலில் ஒட்டி கொள்ளும். மேலும் இவற்றை நாம் பயன்படுத்துவதால் பல தொற்று நோய்கள், வயிற்று போக்கு, சுவாச பிரச்சினை போன்றவை ஏற்பட கூடும்.

வவுனியாவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!

வவுனியாவில் நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் நேற்றையதினம் (31.10) கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 3.30 மணியளவில் சட்டவிரோதமாக பதிவுகளின்றி கட்டுதுப்பாக்கியுடன் காட்டுப் பகுதிக்கு வேட்டையாட சென்றிருப்பதாக நெடுங்கேணி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக கட்டுத்துப்பாக்கி ஒன்றை அவரது வீட்டில் வைத்திருந்ததன் குற்றச்சாட்டில் செல்லையா ஜெயபாலசிங்கம் (வயது-50) என்பவரையே கட்டுதுப்பாக்கியுடன் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

இலங்கையை தாக்க வரும் சூறாவளி : கொழும்பின் பல பகுதிகளில் அடைமழை!!

இலங்கையை அண்மித்த பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் வலுவடைந்து சூறாவளியாக மாறும் அபாயம் உள்ளதாக என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று அதிகாலையில் இருந்து கொழும்பு உட்பட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் அடைமழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ள நிலைமையும் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாட்டின் பல பிரதேசங்களுக்கு அருகில் வாகனம் புகைமூட்டத்தினால் நிறைந்து காணப்படும்.

நாட்டின் பல பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு வடமேல் மற்றும் மத்திய மாகாணத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் வரையிலான அடைமழை பெய்ய கூடும்.

ஏனைய பிரதேசங்களிளல் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் வரையிலான அடை மழை பெய்ய கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களிலும் காலை புகைமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

தற்காலிகமாக கடும் காற்றும் மற்றும் மின்னலினால் ஏற்படுகின்ற ஆபத்துக்களை குறைத்துகொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

வவுனியாவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழப்பு : சோகத்தில் மூழ்கிய கிராமம்!!

வவுனியா மடுகந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழந்த சம்பவம் கிராமத்தை மட்டுமல்ல வவுனியாவையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.

வவுனியா மடுகந்தை பகுதியில் கடந்த 11.10.2018 அன்று முச்சக்கரவண்டி ஒன்றுடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த வவுனியா இலங்கை வங்கியின் ஊழியர் ஒருவரும் முச்சக்கர வண்டியின் உரிமையாளரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இவ் விபத்து சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இலங்கை வங்கியின் காவலாளியாக பணியாற்றிய விஜிதரன் (29)என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

இதேவேளை, மேலதிக சிகிச்சைக்காக அவரது நண்பர்களின் உதவியுடன் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்

அலரி மாளிகைக்குள் தற்போது நடப்பது என்ன? வெளியான அதிர்ச்சிப் புகைப்படங்கள்!!

இலங்கை பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அரச சின்னமாக உள்ள அலரி மாளிகை தலைகீழாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலரி மாளிகையில் தற்போது முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் தங்கியிருக்கும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி உள்ளன.

அரச மாளிகை மிகவும் அசுத்தமான நிலையில் காணப்படுவதுடன், பல இடங்களில் குப்பைகளும் கொட்டப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

நாட்டின் அரசியல் தீர்மானங்களை நிறைவேற்றும் இல்லத்தில், சிலர் கும்பலாக இணைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக இணையத்தளங்களில் வெளியாகி உள்ள நிலையில் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

பந்து தலையில் வீழ்ந்து மயக்கமடைந்த இலங்கை கிரிக்கெட் வீரர்!!

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினருக்கும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான பயிற்சி ஆட்டத்தின் போது இலங்கை வீரரின் தலையில் பந்து வீழ்ந்ததையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சோர்ட்லெக் பகுதியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த இளம் வீரர் பதும் சங்கவின் தலையிலே பந்து வீழ்ந்துள்ளது. அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் அடித்த பந்தை நிசங்க தடுக்க முயன்றுள்ளார். எனினும் பந்து நிசங்கவின் தலையைத் தாக்கியுள்ளது.

அவர் ஹெல்மட் அணிந்திருந்தபோதும் தலையில் பந்து பட்டவுடன் அவர் தலையைப் பிடித்துக்கொண்டு கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 20 நிமிடங்கள் நினைவற்ற நிலையில் கிடந்த நிசங்கவை அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் நிசங்க சுயநினைவுடன் இருப்பதாகவும் கழுத்தில் மட்டுமே வலி இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

வவுனியாவில் கலைஞர்கள் கௌரவிப்பு!!

 

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன், வவுனியா மாவட்ட கலாசார பேரவையும், மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழாவில் கலைஞர்கள் ஊடகவியலாளர் என பலர் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசாங்க அதிபர் எம்.ஐ.கனீபா கலைஞர்களுக்கான விருதுகளை வழங்கினார்.

வவுனியம் மூத்த கலைஞர் விருது மற்றும் வவுனியம் கலை இளவல் விருதுகள் வாத்தியம், இசை நாடகம், ஓவியம், ஊடகம், ஒளிப்படம், நடிப்பு, இலக்கியம் ஆகிய கலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

ஊடகத்துறையினூடாக கலை, இலக்கியத்திற்கு பணியாற்றியமைக்காக வவுனியா பிராந்திய ஊடகவியலாளர் கிருஸ்ணகுமார் வசந்தரூபனுக்கு பிரதேச செயலாளர் க.உதயராஜாவினால் வவுனியம் கலை இளவல் என்ற விருது வழங்கப்பட்டது.

வவுனியாவில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்பு!!

வவுனியா பிரமனாளங்குளம் நீலியாமோட்டை பகுதியிலுள்ள தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா பிரமனாளங்குளம் நீலியாமோட்டை பகுதியிலுள்ள தனியார் காணியினை இன்றைய தினம் (31.10) காலை 9.30 அளவில் நிலத்தை பண்படுத்தும் போது அப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு இருப்பதனை அவதானித்த காணியின் உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பொலிசாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் அப்பகுதியில் வெடிபொருட்கள் இருப்பதாக தேடுதல் மேற்கொண்டபோது ஒரு வெடிகுண்டு மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பறயனாளங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு கருப்பையில் பிறந்த ஒரு குழந்தை : உலகில் ஒரு வரலாற்று விந்தை!!

 

அமெரிக்காவை சேர்ந்த ஓரினசேர்க்கையாளர்களான இரண்டு பெண்கள், ஒரு குழந்தையை இருவரின் கர்பப்பையிலும் சுமந்து பெற்றெடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மகனாத்தி சேர்ந்த ஆஷ்லே மற்றும் ப்ளிஸ் என்ற ஓரினசேர்க்கையாளர்கள் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர்.

குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்ட இருவரும், செயற்கை கருவுறுதல் மையத்திற்கு சென்று மருத்துவர் கேத்தி டூடியின் ஆலோசனையை பெற்றுள்ளனர்.

பின்னர் நன்கொடையாளர் ஒருவரின் உயிரணுக்கள் பிளெஸ்ஸின் காப்சூலில் வைக்கப்பட்டு கருவுர செய்யபட்டது. ஆரம்ப கரு முட்டை வளர்ச்சியடைய துவங்கியதும், 5 நாட்களுக்கு பிறகு, பிளெஸ்ஸின் கருப்பையிலிருந்து அகற்றப்பட்டு ஆஷ்லேவின் கருப்பைக்கு மாற்றி வைக்கப்பட்டது.

9 மாதம் கழித்து இந்த தம்பதியினருக்கு ஸ்டெஸ்டனைப் என்ற மகன் பிறந்தான். ஸ்டெஸ்டன் தற்போது 5 மாத குழந்தையாக உள்ளான். இந்த சம்பவம் பற்றி பேசியிருக்கும் மருத்துவர்கள், இது மருத்துவ உலகில் ஒரு வரலாற்று விந்தை என தெரிவித்துள்ளனர்.

மனைவியை விவகாரத்து செய்ய 200 கோடி செலவுசெய்யும் பிரபல தொழிலதிபர்!!

இந்தியாவில் மனைவியை விவாகரத்து செய்ய பிரபல மருந்து உற்பத்தி நிறுவன அதிபர் 200 கோடி ரூபாய் கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் பல ஆண்டுகளாக கெடிலா பார்மசூட்டிகல்ஸ் என்ற நிறுவனம் மருத்துவ உலகில் பிரபலமாக இருந்து வரும் உற்பத்தி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் தான் ராஜிவ்மோடி. இவருக்கு மோனிகா என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் ராஜிவ்மோடிக்கும், மோனிகாவுக்கும் மோனிகாவுக்கும் அடிக்கடி குடும்பத்தில் கடும் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியிருந்தனர். நீதிமன்றமும் விவாகரத்து வழங்கியது.

இதற்காக உள்ள 6 மாதகால கட்டாய பிரிவு காலத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏனெனில் இருவரும் 2012 ஆண்டு முதலே தனியாக வாழ்ந்து வருவதன் காரணமாகவே தள்ளுபடி செய்ததாக கூறப்படுகிறது.

ராஜிவ் மோடி, அடித்துத் துன்புறுத்தியதாக மோனிகா புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து இருவரையும் காவல்நிலையத்தில் மூத்த வழக்கறிஞர்கள் காவல் உயரதிகாரிகள் கவுன்சிலிங் அளித்தனர்.

6 மணி நேர கவுன்சிலிங்குக்குப் பிறகு இருவரும் விவாகரத்துக்கு ஒப்புக் கொண்டதால், மனைவி மோனிகா, அதிபர் ராஜிவ் மோடி மீது கிரிமினல் புகார் அளிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தார்.

மனைவியை விவாகரத்து செய்ய 200 கோடி ரூபாய் அவருக்கு கொடுக்க வேண்டும் என்ற முடிவு எட்டப்பட இதற்கான டிமாண்ட் டிராப்ட்டை ராஜிவ் மோடி மோனிகாவிடம் அளித்தார்.

இதில் இந்த தம்பதிக்கு மகன் இருப்பதால், அவர் யாருடன் இருக்கப் போகிறார் என்ற கேள்வி நிலவியது. ராஜிவ்மோடி தன் மகன் தன்னிடம் தான் இருக்க வேண்டும் என்று கூறியதால், மோனிகா மகன் தந்தையிடமே வளரட்டும் என்று விட்டுக் கொடுத்துள்ளார்.

மேலும் ஒரு பிரபல மருந்து உற்பத்தி நிறுவன தொழிலதிபரே தன் மனைவி மீது குடும்ப வன்முறையைச் செலுத்தி விவாகரத்துக்காக 200 கோடி ரூபாய் கொடுத்தது சமூக ஆர்வலர்கள், பெண்ணியவாதிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாணவி தமிழ் தினப் போட்டியில் தேசிய ரீதியில் முதலாம் இடம் : மாணவிக்கு கௌரவிப்பு!!

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற தமிழ் தினப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய மாணவி பா.குமுதினியை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (31.10) இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் திருமதி கே.நந்தகுமார் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

முன்னதாக தேசிய ரீதியில் நடைபெற்ற விளையாட்டு மற்றும் தமிழ் தினப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்கள், விருந்தினர்கள் ஆகியோருக்கு மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், பிரதான மண்டபத்தில் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

தேசிய ரீதியில் நடைபெற்ற தமிழ் தினப் போட்டியில் பூந்தோட்டம் மகாவித்தியாலய வரலாற்றில் முதன் முதலாக ஒரு போட்டியில் மாணவி பங்கு பற்றியமை இதுவே முதல் தடவையாகும்.

அந்த வகையில் தேசிய தமிழ் தினப் போட்டியின் பிரிவு நான்கில் சிறுகதைப் போட்டியில் பங்குபற்றிய பா.குமுதினி முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றி பாடசாலைக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

குறித்த மாணவியின் சாதனையை இதன் போது வாழ்த்தி பலரும் கௌரவித்தனர். இந்நிகழ்வில் கோட்ட கல்வி அதிகாரி எம்.பி.நடராஜா, வவுனியா கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் ஐங்கரன், பழைய மாணவர் சங்க தலைவர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, அகில இலங்கை ரீதியான தமிழ் தினப் போட்டி கடந்த சனிக்கிழமை மாத்தளையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை புத்தாக்குனர் வரலாற்றில் ஏழு பதக்கங்களை பெற்று தமிழ் மாணவன் சாதனை!!

இலங்கை புத்தாக்குனர் வரலாற்றில் முதற்தடவையாக ஏழு பதக்கங்களைப் பெற்று தமிழ் மாணவன் சாதனை படைத்துள்ளார்.

சம்மாந்துறை, கோரக்கர் கிராமத்தை சேர்ந்த யாழ். பல்கலைக்கழக தமிழ் மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமாரே இந்த சாதனையை தனதாக்கியுள்ளார்.

இதற்கு முதல் 2012ஆம் ஆண்டில் கனிந்து நாணயக்கார என்ற கண்டுபிடிப்பாளர் மொத்தமாக 5 பதக்கங்களை பெற்று தனியொருவருக்கான உச்சக்கட்ட சாதனையை படைத்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த சாதனையை முறியடித்து இளம் விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் 3 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 7 பதக்கங்களையும் அதற்கான பரிசாக 4 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பணத்தையும் பெற்றுள்ளார்.

கடந்த 26ஆம் திகதி இலங்கை ஆய்வாளர்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கொழும்பு பி.எம்.ஐ.சி.எச்சில் நடைபெற்ற 3ஆவது தேசிய புத்தாக்குனர் தின விருது வழங்கும் விழாவில் அதிகூடிய 7 பதக்கங்களைப் பெற்ற சோ.வினோஜ்குமார் பலராலும் பாராட்டப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை கோரக்கர் கிராமத்தை சேர்ந்த இளம் விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் இதுவரை 86 கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளார்.

இவற்றில் 38 கண்டுபிடிப்புகள் தேசியமட்டத்தில் விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளன. 3 கண்டுபிடிப்புகள் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.