பிறந்தநாள் விழாவில் சிறுவனுக்கு நடந்த பரிதாப சம்பவம் : வைரலாகும் புகைப்படத்தின் பின்னணி!!

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த ஒரு சிறுவன் தன்னுடைய பிறந்தநாள் விழாவிற்கு அழைப்பு விடுத்தும் கூட யாரும் வராததால் மனம் உடைந்து போன நிலையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையதளம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த 6 வயது சிறுவனான டெட்டியின் பிறந்தநாள் கடந்த 3ம் தேதியன்று வந்துள்ளது. ஆனால் அலாஸ்காவில் வேலை செய்துகொண்டிருந்த சிறுவனின் தந்தையால் 18ம் தேதி தான் ஊருக்கு வரமுடிந்துள்ளது.

அதனால் சிறுவனின் பிறந்தநாளை 21ம் தேதியன்று பிரமாண்டமாக கொண்டாட அவனுடைய அம்மா சில் மாஜினி முடிவு செய்துள்ளார். அதன்படி 32 அழைப்பிதழ்களை ஏற்பாடு செய்து சிறுவனின் பள்ளி தோழர்களுக்கு கொடுத்துள்ளார்.


மேலும் அந்த சிறுவர்களின் அம்மாவிடமும் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட அன்று யாருமே விழாவிற்கு வருகை தரவில்லை. இதனால் அந்த சிறுவன் பீட்சாவால் நிறைந்திருக்கும் இரண்டு நீளமான மேஜைகளுக்கு மத்தியில் மனமுடைந்த நிலையில் காணப்பட்டான்.

இதை புகைப்படமாக எடுத்த அவனுடைய அம்மா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். புகைப்படம் இணையத்தில் வைரலானதை அடுத்து, Phoenix விளையாட்டு அணிகள் தங்களுடைய வரவிருக்கும் போட்டிகள் அனைத்தையும் இலவசமாக காண சிறுவனுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அதேபோல NBA அணி புதன்கிழமை நடைபெற உள்ள போட்டியை இலவசமாக காண சிறுவனின் குடும்பத்தாருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள கால்பந்து போட்டியை துணை குடியரசுத்தலைவருடன் சேர்ந்த காணவும் அழைத்துள்ளனர்.

எதிர்பாராத நிலையில் நடுக்கடலில் மிதந்த குடிசையில் 50 நாட்கள் வசித்த இளைஞனின் திக் திக நிமிடங்கள்!!

ஒரு வாரத்திற்கு மாத்திரமே போதுமன உணவு காணப்பட்டுள்ள நிலையில் 49 நாட்கள் நடுக் கடலில் வசித்து சாதனை படைத்துள்ளார் இந்தோனேசியா இளைஞர் ஒருவர்.

மீன்பிடிப்பதற்கென அமைக்கப்பட்டிருந்த சிறுகுடில் தனது ஆதாரங்களிலிருந்து விலகி கடலினுள் கிட்டத்தட்ட 1,200 மைல்கள் சென்றுள்ளதால் நடந்த துயர சம்பவவே இது. குறித்த இளைஞன் அப்பகுதியால் சென்ற சரக்குக் கப்பலின் உதவியுடன் பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இளைஞன், தான் மிகப் பயத்துடன் இருந்ததாககவும், குடிலானது அலையில் ஆட்டங்கண்ட போதெல்லாம் தான் பீறிட்டு அழுததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் மீட்கப்படும் வரையில் 10 கப்பல்கள் தன்னைக் கடந்து சென்றதாகவும், ஆனால் அவர்கள் தன்னை அவதானித்திருக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

18 – 19 வயது மதிக்கத்தக்க “அடிலாங்” என்ற இளையனே மேற்படி துயரநிலைக்கு ஆளாகிய இந்தோனேசிய இளைஞனாவான். இளைஞன் மாட்டிக்கொண்ட குடிசையானது இந்தோனேசிய கடற்கரையிலிருந்து 80 மைல் தொலைவில் கடலினுள் அமைக்கப்பட்டிருந்த மீன்பிடிக் குடிசை என்பது குறிப்பிடத்தக்கது.

நபர் ஒருவரின் வயிற்றில் இருந்த 122 ஆணிகள் : மருத்துவர்கள் அதிர்ச்சி!!

எத்தியோப்பியர் ஒருவர் வயிற்றில் இருந்து 122 இரும்பு ஆணிகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். எத்தியோப்பிய தலைநகரான Addis Ababaவைச் சேர்ந்த 33 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர், 10 சென்றிமீற்றர் நீளமுடைய 122 ஆணிகள், நான்கு பின்கள், பல் குத்தும் குச்சி ஒன்று மற்றும் உடைந்த கண்ணாடித்துண்டுகளை விழுங்கியிருந்ததாக செயிண்ட் பீட்டர் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவரான Dawit Teare தெரிவித்தார்.

மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அந்த நபர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிகிச்சையை நிறுத்தி விட்டதாகவும், ஒருவேளை அதனால் அவர் இவ்வாறு ஆணிகள் போன்ற பொருட்களை விழுங்கத் தொடங்கியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இரண்டரை மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவர்கள் அந்த ஆணிகள் முதலான பொருட்களை நோயாளியின் வயிற்றிலிருந்து அகற்றினர்.

ஒரு வேளை அவர் தண்ணீர் குடித்து குடித்து இந்த ஆணிகளை விழுங்கியிருக்கலாம், அதனால்தான் அவை அவரது வயிற்றைக் கிழிக்கவில்லை, அவ்வாறு கிழித்திருந்தால் அவருக்கு மோசமான நோய்த்தொற்று ஏற்பட்டு அதனால் மரணம் கூட ஏற்பட்டிருக்கலாம் என்றும் Dawit தெரிவித்தார்.

மனநலம் பாதிக்கப்பட்டு கூர்மையான பொருட்களை விழுங்கிய பலரை சந்தித்திருந்தாலும் இவ்வளவு பொருட்களை விழுங்கிய ஒருவரை இதுவரை சந்தித்ததில்லை என்றார் Dawit. அந்த நோயாளி குணமடைந்து வருவதாகவும் Dawit தெரிவித்தார்.

பாலியல் சீண்டல் செய்தவரை செருப்பால் அடித்த நடிகை கஸ்தூரி!!

நடிகை கஸ்தூரி சமூகவலைதளங்களில் எப்போது துடிப்பாக இருப்பவர். சமூகத்தில் நடக்கும் விஷயங்களுக்காக குரல் கொடுத்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

சமீபகாலமாகவே Me too மூலம் சினிமாவை சேர்ந்த பெண்கள் பலர் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் பற்றி வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.

அதில் சம்மந்தப்பட்டவர்களின் பெயர்களையும் போட்டு உடைத்து வருகின்றனர். இந்நிலையில் கஸ்தூரியிடம் ரசிகர் ஒருவர் “உங்களுக்கு பாலியல் தொல்லை இருந்தது என்று கூறியிருந்தீர்களே அவர்கள் பெயர்களை ஏன் வெளியிடவில்லை. தயக்கமா?” என கேட்டுள்ளார்.

இதற்கு அவர் “அதை சொல்ல தயக்கமில்லை. பரிதாபம். ஏற்கனவே என்னிடம் செருப்படி வாங்கிக்கொண்டு இன்றுவரை பொது இடத்தில் என்னை பார்க்கும்போதெல்லாம் எதுவுமே நடக்காத மாதிரி மழுப்புகிற சிலர்.

இறந்து விட்ட ஒருவர். இழுத்துக்கொண்டு ஒருவர். இவர்களை பற்றி இப்போது பேசுவதற்கு எனக்கே பாவமாக இருக்கிறது” என கூறினார்.

நாகப்பாம்பின் பின்புறத்தில் இருந்த காட்சி : வைரலான புகைப்படம்!!

காபி தோட்டத்தில் நாகபாம்பின் பின் பகுதியில் நெருப்பு போல் சிவப்பு வர்ணம் காட்சி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவின் கொப்பா தாலுகா ஹலேமக்கி கிராமத்தை சேர்ந்தவர் அவினாஷ். இவருக்கு சொந்தமான காபி தோட்டத்தில் நேற்று காலையில் நாய் குரைத்து கொண்டிருந்தது.

இதனால் அப்பகுதிக்கு சென்று அவினாஷ் பார்த்துபோது, நாகபாம்பு ஒன்று நாய் முன் படம் எடுத்தபடி நின்றது. மேலும் பாம்பின் பின்புறத்தில் நெருப்புபோல் சிவப்பு வர்ணம் தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவினாஷ் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதுகுறித்து அவினாஷ் கூறும்போது,நாய் குரைப்பதை கேட்டு தோட்டத்திற்கு சென்றபோது பாம்பு ஒன்று படமெடுத்து நிற்பதையும், அதன் பின்புறத்தில் சிவப்பு வர்ணம் காட்சி அளிப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

இதை மற்றவர்களுக்கு காட்டுவதற்காக உடனடியாக செல்போனில் படம் பிடித்தேன். சில நிமிடங்களுக்கு பின்னர் அங்கிருந்த புதருக்குள் பாம்பு சென்றுவிட்டது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து பாம்பை பிடிக்கும்படி கோரிக்கை விடுக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்.

வவுனியா குருமன்காட்டு சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

வவுனியா குருமன்காட்டு சந்தியில் இன்று (24.10.2018) மதியம் 1.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

குருமன்காட்டு சந்திக்கு அருகே திடீரேன வீதிக்கு ஏற முற்பட்ட மோட்டார் சைக்கில் மீது வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த பெண் ஒருவர் சிறு காயங்களுக்குள்ளாகிய நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடவுளின் பெயரில் 9 வயது சிறுவனை நரபலி கொடுத்த கொடூரன்கள் : அதிர்ச்சி சம்பவம்!!

ஒடிசாவில் காளி தெய்வத்திற்கு 9 வயது சிறுவனை நரபலி கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலங்கீரில் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவன் கன்ஷ்யாம், கடந்த 13ம் தேதி மயமாகிவிட்டதாக பொலிஸாரிடத்தில் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்தனர்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், 3 நாட்கள் கழித்து அப்பகுதியிலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சிறுவனின் சடலத்தை கண்டறிந்தனர். மற்றொரு பகுதியில் சிறுவனின் தலையை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து தீவிரமான விசாரணை மேற்கொண்டதில் சிறுவனின் மாமா குஞ்ஜா ரானா மற்றும் உறவினர் ஷோபபான் ஆகிய இருவரும் சிறுவனை இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த பொலிஸார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், நவராத்ரி அன்று காளி தெய்வத்திற்கு நரபலி கொடுத்தால் நல்லது என நினைத்தோம்.

எங்களுடைய இருசக்கர வாகனத்தில் சிறுவனை ஏற்றிக்கொண்டு காட்டுப்பகுதிக்கு சென்று கழுத்தை அறுத்து நரபலி கொடுத்தோம் என கூறியுள்ளனர்.

வவுனியா பொது மலசலகூடத்திலிருந்து வெளியேறும் மலசலம் : தொற்றுநோய் பரவும் அபாயம்!!

வவுனியா பழைய பேருந்து நிலையத்திலுள்ள பொது மலசலகூடத்திலிருந்து மலசலம் வெளியேறி கழிவு நீருடன் கால்வாயில் கலந்து செல்கின்றது. இதனால் பழைய பேருந்து நிலையப்பகுதியிலுள்ள உணவகங்கள், வியாபார நிலையங்களில் துர்நாற்றம் வீசுவதாகத் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா பழைய பேருந்து நிலையத்திலுள்ள பொது மலசலகூடத்திலிருந்து மலசலம் என்பன வெளியேறி கழிவு நீர் செல்லும் கால்வாயுடன் கலந்துள்ளது.

இதனால் அப்பகுதியிலுள்ள உணவகங்கள், வியாபார நிலையங்களில் துர்நாற்றம் வீசிவருகின்றது. இது குறித்து நகரசபையினருக்கு பல முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் இன்று வரையில் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

குறித்த பொது மலசலகூடம் கேள்வி கோரல் மூலம் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாவனையாளர்களுக்கு 20 ரூபாய் கட்டணம் அறவீடப்பட்டு வருகின்றபோதிலும் குறித்த மலசலகூடத்திலிருந்து மலசலம் கழிவுநீருடன் கால்வாயில் கலந்து செல்கின்றது.

தற்போது மழை காலமாவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசிவருகின்றது. நகரசபையின் பூரண கட்டுப்பாட்டிலுள்ள குறித்த மலசலகூடத்திற்கு நகரசபையின் பொது சுகாதாரப்பரிசோதகர்கள் சென்று நிலைமைகளை ஆராய்வதில்லை, சுகாதாரம் பேண எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனவே மலசலகூடத்திலிருந்து மலசலம் வெளியேறுவதால் குறித்த பகுதியில் தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

எனவே இதற்கு அவசரமான நடவடிக்கையினை நகரசபையினர் மேற்கொள்ளுமாறு உணவகத்தினர் உரிமையாளர்களும் வியாபார நிலையங்களின் உரிமையாளர்களும் கோரியுள்ளனர்.

அத்துடன் குறித்த மலசலகூடத்திற்கு பல தூர பிரதேசங்களிலிருந்து வரும் ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள், சொல்லெண்ணாத்துயரங்களுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே நகரின் பொறுப்பிலுள்ள அதிகாரிகள் இவ்விடயத்தில் கூடிய கவனம் எடுத்து இப்பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

14 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்த 2 குழந்கைளின் தந்தை : தலையை துண்டித்தது ஏன்? வெளியான வாக்குமூலம்!!

சேலம் மாவட்டத்தில் 8 ஆம் வகுப்பு படித்து வரும் ராஜலட்சுமி என்ற 14 வயது சிறுமியை திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கும் கார்த்திக் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

மாணவியின் தலையை துண்டித்து ரோட்டில் வைத்துவிட்டு தப்பி ஓட முயன்ற அவரை பிடித்து பொது மக்கள் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

பொலிசார் விசாரணையில் கார்த்திக் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் ராஜலட்சுமியை ஒருதலையாக காதலித்து வந்தேன, அவர் பள்ளிக்கு சென்று வரும்போதெல்லாம் அவரை பின்தொடர்ந்து செல்வேன்.

இதுகுறித்து ராஜலட்சுமி தனது தந்தையிடம் தெரிவித்து விடுவேன் என மிரட்டியதால் அவரை கொலை செய்தேன் என கூறியுள்ளார்.

மேலும், என்னை கொன்று விடுங்கள் என பொலிசாரிடம் கெஞ்சியுள்ளார். மேலும் நான் வெளியில் சென்றால், இதுபோல் வேறு யாரையாவது கொலை செய்து விடுவேன். எனவே என்னை உயிருடன் விட்டு விடாதீர்கள். தயவு செய்து என்னை கொன்று விடுங்கள்.

என்னை ரெயில் தண்டவாளத்தில் படுக்க வையுங்கள் என்று கூறியுள்ளார்.

தினேஷ்குமாருக்கு திருமணமாகி சாரதா என்ற மனைவியும், செல்வதரணிஷ் என்ற மகனும் உள்ளனர்.

சாரதா கூறியதாவது, எனது கணவர் அடிக்கடி சைக்கோ போல நடந்து கொள்வார். திடீரென மரத்தை வெட்டுவார். எப்போதும் ஏதாவது முணு முணுத்துக்கொண்டே இருப்பார்.

தான் சுடுகாட்டில் படுத்து தூங்குவேன் என்று கூறுவார். கோபத்தில் ஆவேசமாக திட்டுவார். உறவினர்களை அடிப்பார். அடிக்கடி சாமியும் ஆடுவார் என கூறியுள்ளார்.

தற்போது, இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகைக்கு நள்ளிரவில் நடந்த பாலியல் கொடுமை : Me tooல் சிக்கிய பிரபல இயக்குனர் : அதிர்ச்சித் தகவல்!!

தற்போது நாடு முழுக்க Me Too ல் பாலியல் சர்ச்சைகள் பற்றி தான் பேசப்பட்டு வருகிறது. இதில் சினிமா பிரபலங்கள் தான் அதிகமாக புகார் கூறி வருகிறார்கள். இந்த குற்றச்சாட்டில் பல ஆண்கள் சிக்கி வருகிறார்கள். அண்மையில் வைரமுத்து, சின்மயி சர்ச்சை பெரிதாக போய்க்கொண்டிருக்கிறது.

தமிழில் ராமகிருஷ்ணா படத்தின் மூலம் அறிமுகமான மலையாள நடிகை ஸ்ரீதேவிகா Me too ல் இயக்குனர் ஒருவர் மீது புகார் அளித்துள்ளார். கடந்த 2006 ல் ஒரு படத்தில் நடித்த போது ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தாராம்.

நள்ளிரவில் யாரோ தொடர்ந்து மூன்று நாட்களாக கதவை தட்டியிருக்கிறார்கள். ஆனால் தேவிகா கதவை திறக்கவில்லையாம். ஹோட்டல் நிர்வாகத்திடம் சொல்லி விசாரித்து பார்க்கையில் வந்தது தான் நடித்த படத்தின் இயக்குனர் தான் என தெரிந்ததாம்.

விசயத்தை ஹீரோவிடம் சொல்ல பின் இயக்குனர் தேவிகாவிடம் கடுமையாக நடந்துகொண்டதோடு காட்சிகளையும் குறைத்து சம்பளத்தையும் கொடுக்கவில்லையாம்.

இதுகுறித்து தேவிகா மலையாள நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்த போது அங்கிருந்த செயலாளர் இதை பெரிது படுத்தாதே உன் வாழ்க்கை நாசமாகிவிடும் என கூறினார்.

200 6 அவர் தெலுங்கில் ராஜ பாபு என்ற படத்திலும், கன்னடத்தில் மை ஆட்டோகிராஃப், நீலகண்டா என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படங்களை இயக்கிய இயக்குனர்களில் யாரோ ஒருவர் தான் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது.

தமிழர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் அதிசயம் : பறிக்க போட்டி போடும் உலக நாடுகள்!!

மன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

20 வருடங்களுக்கு 300 மெகாவோட் கணக்கில் மின்சாரம் உற்பத்தி செய்ய கூடிய இயற்கை எரிவாயு வைப்பகம் ஒன்று மன்னாரில் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வைப்பகம் 350 கன அடியை கொண்டுள்ளதாகவும், அதனை அபிவிருத்தி செய்வதற்காக திறந்த விலை மனு கோரல் ஒன்று எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எண்ணெய் மற்றும் எரிவாயு வைப்பங்களை ஆய்வு செய்யும் ஸ்லம்புஜா என்ற சர்வதேச நிறுவனத்தினால் மன்னார் கடல் பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் ZM 2Z என பெயரிடப்பட்ட பகுதியில் இந்த இயற்கை எரிவாயு வைப்பகம் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னார் கடல் பகுதியில் 1500 மீற்றர் ஆழ் கடலில் இருந்து மேலும் 2000 மீற்றர் தூர ஆழத்தில் இந்த வைப்பகம் அமைந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த வைப்பகத்தை பெற்றுக் கொள்வதற்காக 750 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்ய வேண்டும். அதற்காக சர்வதேச சந்தையில் விலை மனு கோரப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுவை பெற்றுக்கொள்ள பல உலக நாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இங்கிலாந்தை தெறிக்க விட்ட இலங்கை அணி அபார வெற்றி!!

தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியை, இலங்கை அணி 219 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 ஒருநாள், ஒரு டி20, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் 4 ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 3-0 என முன்னிலை வகிக்கின்றது. முதல் போட்டி மழை காரணமாக முடிவு கிடைக்கவில்லை.

5வது ஒருநாள் போட்டி கொழும்பில் நடைபெற்றுள்ளது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

இலங்கையின் டிக்வெல்ல 95, சமரவிக்ரம 54, தினேஷ் சாண்டிமல் 80, குசல் மெண்டிஸ் 56, என வரிசையாக சிறப்பாக விளையாடி ஓட்டங்களை குவிக்க 50 ஓவரில் 6 விக்கெட் இழந்து 366 ஓட்டங்களை இலங்கை அணி குவித்தது.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 26.1 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.

மழை விடாத காரணத்தால் இலங்கை அணி 219 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் லூயிஸ் முறையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஒருநாள் போட்டியின் தரவரிசையில் இங்கிலாந்து அணி நம்பர் 1 இடத்தில் உள்ளது. அதைக்காப்பாற்றிக் கொள்ளும் வகையில் சிறப்பாக விளையாடி 3-0 என ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியிருந்தது.

ஆனால் கடைசி மற்றும் 5வது ஒருநாள் போட்டியில் இலங்கை அபார வெற்றி பெற்று 3-1 என தொடர் முடிந்துள்ளது.

போட்டியின் ஆட்ட நாயகனாக நிரோசன் டிக்வெல்ல பெற்றார். தொடர் நாயகன் விருதை இங்கிலாந்து அணித்தலைவர் இயன் மார்கன் கைப்பற்றியுள்ளார்.

உலகை விட்டு செல்ல விரும்புகிறேன் : மூன்று குழந்தைகளுடன் இளம்தாய் செய்த விபரீத செயல்!!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்தூரை சேர்ந்தவர் முஸ்தபா. இவர் மனைவி ஷபானா. தம்பதிக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். இதில் 12 வயதான மூத்த மகனுக்கு இதய நோய் இருந்தது. மற்ற இரு பிள்ளைகளுக்கும் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

குடும்ப தலைவரான முஸ்தபா ஹொட்டலில் வேலை செய்து வந்த நிலையில் சமீபகாலமாக சரியாக வேலைக்கு செல்லவில்லை.
இதோடு மனைவி நடத்தையிலும் சந்தேகப்பட்டு அவருடன் சண்டை போட்டு வந்துள்ளார்.

குடும்ப வறுமை மற்றும் கணவரின் கொடுமையால் வாழ்க்கையை வெறுத்த ஷபானா சில தினங்களுக்கு முன்னர் தனது தாய்க்கு வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினார். அதில், முஸ்தபா குடும்ப செலவுக்கு பணம் தராததோடு, என்னையும் கொடுமைப்படுத்துகிறார்.

நான் இந்த உலகில் வாழ விரும்பவில்லை, என் குழந்தைகளுடன் சேர்ந்து தற்கொலை செய்ய விரும்புகிறேன் என குறிப்பிட்டார்.
இதன் பின்னர் ஷபானா தனது மகன்களுடன் மாயமாகி உள்ளார்.

இது குறித்து ஷபானாவின் தாய் பொலிஸ் புகார் அளித்த நிலையில் ஷபானா மற்றும் பிள்ளைகளை பொலிசார் தேடி வருகிறார்கள்.

கோடிக்கணக்கான சொத்துக்களை புறந்தள்ளிவிட்டு அண்ணன்-தங்கை எடுத்த அதிரடி முடிவு!!

குஜராத்தில் கோடிக்கணக்கான சொத்துக்களை புறந்தள்ளிவிட்டு தொழிலதிபரின் மகளும், மகனும் துறவறம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத்தின் ஆதினா பகுதியில் அமைந்திருக்கும் இஷிதா சொசைட்டி மிகவும் பிரபலமான ஒன்று. அதன் உரிமையாளரான ஜவுளி தொழிலதிபர் பாரத் வோரா (57) ஏராளமான கடைகளை வைத்து நடத்தி வருகிறார்.

இவருக்கு 22 வயதில் ஆயுஷி என்ற மகளும், 20 வயதில் யாஷ் என்ற மகனும் உள்ளனர். இருவரும் எப்பொழுது வெளியில் சென்றாலும் காரில் தான் செல்வார்கள். ஒருமுறை கூட காலனி இல்லமால் வெளியில் சென்றதில்லை.

கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு வாரிசுகளாக கருதப்பட்டு வந்த நிலையில், அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருவரும் துறவறம் ஏற்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த தகவல் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தாலும் அவர்களின் தந்தை பாரத், தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், எங்களுடைய பூர்வ கிராமத்தில் சொந்த பங்களாவுடன் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அங்கு 15 வீடுகள் சொந்தமாக உள்ளன. எங்களுடைய ஊரில் எல்லோருடைய வீட்டிலும் ஒரு துறவி உள்ளார். அந்த வகையில் தற்போது என்னுடைய வீட்டிலிருந்து இரண்டு பேர் துறவறம் ஏற்பது எனக்கு மகிழ்ச்சியே என கூறியுள்ளார்.

ஆயுஷி இதுபற்றி பேசுகையில், என்னுடைய தாயார் என்னை திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணாக பார்க்காமல், துறவியாக பார்க்க விரும்பினார். அவரின் ஆசைப்படி நான் துறவறத்தை பற்றி கற்றுக்கொள்ள ஆர்ம்பித்தேன். வரும் நவம்பர் 9ம் தேதி துறவறம் மேற்கொள்ள உள்ளேன் என கூறியுள்ளார்.

இதுபற்றி பேசிய யாஷ், நான் கல்லூரி படிப்பினை முடித்ததும், என்னுடைய தந்தையுடன் கடைக்கு சென்று ஜவுளி தொடர்பனா வேலைகளை பார்த்து வந்தேன். ஆனால் அது எனக்கு ஒத்து வருவதை போல் தெரியவில்லை. அப்பொழுது தான் என்னுடைய சகோதரி துறவறம் பற்றி பேசினார். அதன் மேல் ஏற்பட்ட ஆர்வத்தினால் தான் நானும் துறவறம் செல்கிறேன் என கூறியுள்ளார்.

வவுனியாவில் உழுந்து உற்பத்தியை அதிகரிக்க கமநல அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை!!

வவுனியாவில் உழுந்து உற்பத்தியை அதிகரிக்க வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பணிப்பாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உழுந்து உற்பத்தியை அதிகரித்து இறக்குமதியை குறைக்க வேண்டும் என்ற நோக்கிலும் உள்ளுர் விவசாயிகளினூடாக உழுந்து உற்பத்தியை அதிகரிப்பதற்காக வவுனியாவில் உழுந்து உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உழுந்திற்கு நியாயமான விலையை பெற்றுக்கொடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று விவசாய அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டமானது இலங்கையில் உழுந்து உற்பத்தியில் இரண்டாவது மாவட்டமாக திகழ்கிறது. சராசரியாக 18 ஆயிரம் ஏக்கர் உழுந்து வவுனியா மாவட்டத்தில் பயிர் செய்யப்படுகின்றது.

விவசாயிகளின் கோரிக்கைக்கு அமைவாக 50 வீதம் மானிய அடிப்படையில் விவசாயிகளுக்கு உழுந்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக வவுனியாவை விசேட வலயமாக பிரகடனப்படுத்தி விவசாய திணைக்களத்தினால் தரமான 28 மில்லியன் ரூபா பெறுமதியான உழுந்து விதைகள் வவுனியா விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியாவில் 16 ஆயிரம் ஏக்கருக்கு தேவையான உழுந்து விதைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எட்டு கமநல சேவை திணைக்களங்கள் ஊடாக தரமான உழுந்து விதைகள் ரூபா 180 வீதம் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

வவுனியா பூவரசன்குளம் வைத்தியசாலையில் நோயாளர் விடுதி திறந்துவைப்பு!!

 

வவுனியா பூவரசங்குளம் வைத்தியசாலையில் வடமாகாண
சபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் நோயாளர் விடுதி இன்று(23.10) திறந்து வைக்கப்பட்டது.

சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியில் ஆண், பெண் இருபாலாரும் தங்கி சிகிச்சை பெறக்கூடியதாக நோயாளர் விடுதி அமைக்கப்பட்டிருந்தது.

பிரதி பிராந்திய மாகாண சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.மகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வட மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் கட்டிடத்தினை வைத்தார்.

இதன்போது வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் வட மாகாணசபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தலைவர் து.நடராஜசிங்கம், பிரதேசசபை உறுப்பினர் குகதாஸ், வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி திருவேகரன் வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.செந்தூர்பதிராஜா என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.