தினமும் 2 நிமிடம் வெங்காயத்தை கைகளில் இப்படி தேயுங்கள் : அற்புதம் இதோ!!

வெங்காயத்தில் ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தாதுக்கள், மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளதால் இது பல்வேறு பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது.

அந்த வெங்காயத்தை தினமும் காலையில் இரண்டாக வெட்டி அதை சிறிது நேரம் தேய்து வந்தால் பல பிரச்சனைகளை சரிசெய்யலாம்.

வெங்காயத்தை கைகளில் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..

தீக்காயம் பட்ட இடத்தில் வெங்காயத்தை வைத்து தேய்த்தால் வலி குறைவதுடன் தொற்றுகள் ஏதும் அண்டாமல் பாதுகாக்கிறது.

முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் வெங்காய சாற்றுடன் சிறிது மஞ்சள் தூளை கலந்து மசாஜ் செய்ய வேண்டும், இப்படி செய்தால் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவு பெறும்.

கைகளில் வியர்வை அதிகரிப்பதால் ஏற்படுவதை தடுக்க வெங்காயத்தை தினமும் தேய்ப்பது மிகவும் நல்லது.

பல்வலி உள்ள இடத்தில் சிறு துண்டு வெங்காயத்தை வைத்தால் வலி குறையும். மேலும் சிறு பூச்சிகள் கடித்த இடத்தில் வெங்காயத்தை தேய்த்தால் எரிச்சல் இருக்காது.

வெங்காயத்தில் உள்ள ஃபாரிக் ஆசிட் பாதம் வழியே உறிஞ்சப்பட்டு, உடலின் தலை முதல் கால் வரை ரத்தோட்டத்தை சீராக்க உதவுகிறது.

மேலும் தலையில் வழுக்கை விழுந்த இடத்தில் வெங்காயத்தை தினமும் சிறிது நேரம் தேய்த்து வத்தால் முடி நன்கு வளரும்.

மாதவிடாய் வருவதற்கு சில நாட்களுக்கு முன் பச்சையாக வெங்காயத்தை உட்கொண்டால் மாதவிடாய் வலி குறையும்.

வெட்டிய வெங்காயத்தை படுக்கை அறையில் வைப்பதால் அந்த அறையில் உள்ள அனைத்து கெட்ட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் ஆகியவை தன்னுள் ஈர்த்து வைத்துக் கொள்ளும்.

காய்ச்சல் அதிகமாக இருக்கும் போது பாதத்தில் வெங்காயத்தை வைத்தால் காய்ச்சல் குணமாகும்.

சூடான நீரில் நறுக்கிய வெங்காயத் துண்டுகளை போட்டு கொதிக்க வைக்க வேண்டும், இரவு படுக்கும் முன் இந்த நீரை அருந்தினால் தொண்டை வலி குணமாகும்.

நடுத்தெருவில் நிர்வாணமாக ரத்தம் சொட்டச்சொட்ட காதலியை தாக்கிய நபர்!!

பிரித்தானியாவில் பிரிந்து செல்ல முயன்ற மனைவியை நடுத்தெருவில் வைத்து ரத்தம் சொட்டச்சொட்ட, நிர்வாண இளைஞர் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த ஜாக் புஷெல் (22) தன்னுடைய காதலியுடன் இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். அதிகாலை 5 மணிக்கு திடீரென வீட்டினுள் வைத்து ஒரு குழந்தைக்கு தாயான ஜேட் கல்லஹரை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் வலிதாங்க முடியாத ஜேட், ‘ஜூலி என்னை கொலை செய்ய போகிறான்’ என கூச்சலிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஒடிந்த வந்த பக்கத்து வீட்டு பெண், தலை முழுவதும் ரத்தத்துடன் தெருவில் ஓடிவந்த ஜேட்டை பார்த்துவிட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதற்கிடையில் வீட்டிலிருந்து நிர்வாணமாக தெருவில் ஓடிவந்த ஜாக், காதலியின் தலைமுடியை பிடித்து இழுத்து சரமாரியாக தங்கியுள்ளான். இதில் நிலைகுலைந்த ஜேட் அந்த இடத்திலேயே மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ரத்த காயங்களுடன் சுயநினைவின்றி கிடந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஜாக்கையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

உங்கள் மகளின் சடலத்தை ருசி பார்க்கலாமா : சதித்திட்டம் தீட்டிய இளைஞர் சிக்கிய பின்னணி!!

இளம்பெண்ணை கொலை செய்து அவருடைய சடலத்துடன் உறவு வைத்து விட்டு, உடல் பாகங்களை சாப்பிட வேண்டும் என கொடூரமான பதிவை வெளியிட்ட அமெரிக்க இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த அலெக்சாண்டர் நேதன் பார்டர், 21, என்ற இளைஞர் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட, the Dark Web-ஐ பயன்படுத்தியுள்ளார்.

அதில், “எனக்கு இளம்பெண்ணை கொலை செய்து அவளுடைய சடலத்துடன் உறவு வைத்துக்கொண்டதன் பின்னர், மாமிசத்தை ருசி பார்க்க வேண்டும் என ஆசை. சம்மதம் உள்ளவர்கள் யாராவது இருக்கிறீர்களா?” என பதிவிட்டுள்ளார்.

இதனை கவனித்த உளவுத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர், “எனக்கு ஒரு மகள் இருக்கிறாள் என பதில் கொடுத்துள்ளார். அதற்கு நேதன், “நல்லது! நான் கிழக்கு டெக்சாஸில் இருக்கிறேன். உங்கள் மகள் எவ்வளவு வயதானவர்? நாம் அவளை கொல்லலாமா?” என கேட்டுள்ளார்.

அதற்கு அந்த அதிகாரி ஒப்புக்கொள்ளவே, இருவரும் ஒரு ரகசியமான மின்னஞ்சல் முகவரிகளை பரிமாறிக்கொண்டு, மகளுடன் சந்திப்பதற்கான இடத்தையும் தேர்வு செய்தனர். அந்த திட்டத்தில், உங்களுடைய மகள் ஹோட்டலுக்கு காரை ஒட்டி வர வேண்டும். அங்கு வைத்து தாக்கி நான் கொலை செய்துவிடுவேன். அதன் பிறகு செல்போனை எரித்துவிட்டு, புதிய ஆடைகளை உடுத்திக்கொண்டு நான் அங்கிருந்து தப்பி விடுவேன். நீங்கள், உங்களுடைய மகள் வீட்டிலிருந்து ஓடிப்போய்விட்டால் என வெளியில் கூறி சமாளித்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளான்.

அதன் பின்னர் தன்னுடைய இணையத்தில், “நான் இந்த முடிவில் இருந்து மாறப்போவதில்லை. நான் நிச்சயமாக இதை செய்யத்தான் போகிறேன்” என பதிவிட்டான்.

இளைஞரின் திட்டங்களை நன்றாக கவனித்து கொண்ட அதிகாரி, மற்ற அதிகாரிகளின் உதவியுடன் இளைஞரின் இணைய முகவரியை கண்டறிந்துள்ளார்.

அதன்படி சந்திப்பு நாளான 19ம் தேதியன்று நேதனை கைது செய்த அதிகாரி, அவன் வைத்திருந்த பொருட்களை ஆய்வு செய்தார். அதில், ஒரு கத்தி மற்றும் பிளாஸ்டில் பை இருந்தது. இதனையடுத்து குற்றவாளி நேதன் மீது, மூலதன கொலை முயற்சி, சதித்திட்டம் மற்றும் குழந்தையை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்தல் உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து, Shelby County சிறையில் அடைத்தனர்.

135 பயணிகளுடன் கட்டுநாயக்க வந்த விமானம் திருப்பி அனுப்பி வைப்பு!!

கட்டுநாயக்க பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

UL 405 என்ற விமானமே மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாங்கொக்கில் இருந்து வந்த விமானமே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாலை 5.10 மணிக்கு தரையிற்றக்க திட்டமிட்டிருந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக மாலை 5.50 மணியளவில் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

135 பயணிகள் மற்றும் 9 ஊழியர்களுடன் பயணிக்கும் குறித்த விமானம் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

பின்னர் கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி புறப்பட்ட விமானம் சீரற்ற காலநிலை காரணமாக மீண்டும் மத்தள விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற இலங்கை குடும்பத்திற்கு நேர்ந்த பெரும் சோகம்!!

உயிரிழந்த உறவினரின் சடலத்தை பெற்றுக்கொள்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற இவருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தம்புளை கெக்ரிவா பகுதியின் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் வேன் ஒன்றும் சிறிய லொரி ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பெண் மற்றும் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த நிலையில் மேலும் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 55 மற்றும் 42 வயதுடையவர்கள் எனவும் காயமடைந்தவர்களில் 4 மற்றும் 6 வயதுடைய சிறியவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேனில் பயணித்தவர்களே உயிரிழந்த நிலையில், அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

குறித்த குடும்பத்தினரின் உறவினர் ஒருவர் கட்டாரில் பணி செய்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவரது சடலத்தை பெறுவதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் செய்த மோசமான செயல்!!

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற உள்ள சில மாணவர்களை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கம்பளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி பயிலும் நான்கு மாணவர்கள் பாலியல் ரீதியான உறவு கொண்டு அதனை காணொளியாக பதிவு செய்து கொண்டிருந்த போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

20 வயதான இளைஞன் ஒருவனுடன் இணைந்து இந்த நான்கு மாணவர்களும் மோசமான செயலை மேற்கொண்டுள்ளனர்.

கம்பளை – அம்புலவாவ என்னும் பகுதியில் கஞ்சா புகை பிடித்துக் கொண்டு, மாணவர்கள் தங்களுக்கு இடையில் பாலியல் ரீதியாக தகாத உறவு கொண்டிருந்த வேளையில் பொலிஸார் அந்த இடத்தை சுற்றி வளைத்து மாணவர்களையும் கைது செய்துள்ளனர்.

பாடசாலை சீருடையில் இந்த மாணவர்கள் இருந்தனர் எனவும், மாணவர்களிடமிருந்து ஒரு தொகை கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே பொலிஸார், நேற்று முன்தினம் குறித்த இடத்தை சுற்றி வளைத்துள்ளனர்.

மாணவர்களின் செல்லிடப்பேசிகளை பரிசோதனையிட்ட போது அவற்றில் குறித்த மாணவர்கள் பாலியல் ரீதியாக தொடர்பு கொள்ளும் காட்சிகள் காணொளியாக பதிவிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்ற உள்ள காரணத்தினால் மாணவர்களின் பெற்றோரை அழைத்து பொலிஸார் கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்த மாணவர்களும் மேலும் பல மாணவர்களும் அம்புலுவாவ காட்டுப் பகுதியில் இவ்வாறான மோசமான செயற்பாடுகளில் அடிக்கடி ஈடுபடுகின்றனர் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையை அச்சுறுத்தும் அடைமழை : 3 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!!

இலங்கையில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை இன்றையதினம் மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாட்டின் பல பகுதிகளில் மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணத்தின் பல இடங்களில் 100 – 150 கிலோ மீற்றருக்கும் இடையிலான அடைமழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடல் பிரதேசங்களில் காலை நேரங்களில் மழை பெய்யக்கூடும் என திணைக்களத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மழையுடன் கூடிய காலநிலை நிலவும் பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் எனவும், மின்னலினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்து கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கேட்டு கொண்டுள்ளது.

இதேவேளை, நுவரெலியா, மாத்தளை, மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கை இளைஞனின் வயிற்றுக்குள் சிக்கிய ஆபிரிக்காவின் அதிசயம்!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு தொகை இரத்தினக் கற்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆபிரிக்காவின் ருவன்டோவில் இருந்து இந்த இரத்தினக் கற்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இரத்தினக் கற்களை இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 25 வயதான பேருவளை பிரதேசத்தை சேர்ந்த இளம் வர்த்தகர் என கூறப்படுகின்றது.

இவர் தனது வயிற்றுக்குள் மறைத்த நிலையில் 329 கரட் நிறையுடைய இரத்தின கற்களை இலங்கைக்கு கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆபிரிக்காவில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த இரத்தினக் கல் வகையை சேர்ந்த கற்களே இளைஞனின் வயிற்றுக்குள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அழகிய இளம் பெண் செய்த பாரிய மோசடி!

இலங்கையில் இளம் பெண் ஒருவர் பாரிய பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலநறுவை பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான ஷ்யாமலி திஸாநாயக்க என்ற பெண், மூன்று கோடி ரூபாய் பண மோசடி செய்துள்ளார்.

குறித்த பெண் தற்போது தலைமறைவாகி உள்ள நிலையில், பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஷ்யாமலி திஸாநாயக்க என்ற பெண் கடந்த ஒன்றரை வருடமாக குறித்த பிரதேச மக்களுடன் மிகவும் நெருக்கதாக கொடுக்கல் வாங்கல் மேற்கொண்டுள்ளார். திடீர் பணத் தேவைகளின் போது அவர் பணம் வழங்கி உதவியுள்ளார்.

இவ்வாறு பலரது மனதை வென்ற இந்த பெண் ஒரு லட்சம் ரூபாய் பணத்திற்கு வாரத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் வட்டி பணம் வழங்கியுள்ளார். இதனால் பலர் அவரிடம் வைப்பு செய்வதற்கு ஆர்வம் காட்டியுள்ளனர்.

சிலர் தங்கள் வீட்டில் உள்ள மாடுகளை விற்பனை செய்து அவரிடம் பணம் வைப்பு செய்துள்ளனர். அவரால் அதிக வட்டி பணம் வழங்கப்படுகின்றமையினால் பொது மக்கள் இவ்வாறு செய்துள்ளனர்.

அவ்வாறான நிலைமையில் பணத்தை பெற்றுக் கொண்ட பெண் கடந்த 17ஆம் திகதி முதல் குறித்த பிரதேசத்தில் இருந்து காணாமல் போயுள்ளார். அவர் தொடர்பில் தகவல் அறிந்தால் பொலநறுவை பொலிஸாரிடம் அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டு கொண்டுள்ளனர்.

அவரது புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார் தகவல் அறிந்தால் 027 – 2222222 என்ற இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளனர்.

சிறுமியை நிர்வாணமாக கட்டி வைத்து சித்திரவதை செய்த 5 பேர்!!

தஞ்சாவூரில் சிறுமியை நிர்வாணமாக மரத்தில் கட்டி வைத்து அடித்து, உடலில் சூடு போட்ட 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் 16 வயது மகளுக்கு, மணல் ஏற்றும் வேலை செய்துவந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த சிறுவன் வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து அடிக்கடி, சிறுமியை வந்து சந்தித்துள்ளான். இதனை ஒருமுறை பார்த்த கோபாலகிருஷ்ணன், சிறுமியை கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட சிறுமியின் நடத்தை வெளியில் தெரிந்துவிட்டது.

இதனை அவமானமாக கருதிய சிறுமியின் தாய் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அம்மாவிடம் பேச ஆசைப்பட்ட சிறுமி, அதே பகுதியில் வசிக்கும் மகேந்திரன் என்பவரிடம் செல்போனை தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு மகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களிலே அவருடைய செல்போனும் காணாமல் போயுள்ளது. அதனை சிறுமி தான் திருடியிருப்பார் என கருதிய அவர், அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்களுடன் சிறுமியை நிர்வாணமாக மரத்தில் கட்டி வைத்து உடலில் சூடு வைத்துள்ளனர்.

அவர்கள் சென்றதும், கட்டுகளை அவிழ்த்து தப்பிய சிறுமி, வாழைத் தோட்டத்திற்கு வந்த ஒருவரிடம், நடந்தவை பற்றி தந்தையிடம் தெரிவிக்குமாறு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து விரைந்து வந்த தந்தை காயமடைந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.

பின்னர் மருத்துவமனைக்கு விரைந்த பொலிஸார் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், 6 மாதமாக 16 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்தல் கொடுத்திருப்பது தெரியவந்தது.

இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், கோபாலகிருஷ்ணன்(29), மகேந்திரன்(35), சிவக்குமார்(31), வித்யா(27), மற்றும் 16 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.

புதுமாப்பிள்ளை கொலையில் திடீர் திருப்பம் : பழிக்குப்பழி தீர்த்தது அம்பலம்!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமணமான 5 மாதத்தில் விஜீஸ் என்பவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்டார்.

பொலிசார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர் விசாரணையில் விஜீசின் நண்பர் நெல்சன் என்பவர் பொலிசாரிடம் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், தான் தான் விஜீசைக் கொலை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டார்.

கடந்த 5 மாதங்களுக்கு முன் தான் விஜீசுக்குத் திருமணம் நடந்துள்ளது. பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து கடத்திச் சென்று விஜீஸ் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், கடந்த 20-ம் தேதி விஜீஸ், மதுபோதையில் மனைவியின் உறவினர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் விஜீசின் மனைவி, மாமியார் உள்ளிட்டோர் கோபித்துக் கொண்டு நாகர்கோவிலில் உள்ள உறவினர்கள் வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.

வீட்டில் தனியாக இருந்த விஜீசை பக்கத்து வீட்டு நண்பர் நெல்சன் மது அருந்த வரும்படி அழைத்துள்ளார். இருவரும் சிறிது துாரம் சென்று மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. அந்த விரோதம் நெல்சன் மனதில் உறுத்திக்கொண்டே இருந்த காரணத்தால், அதுக்கு பழி தீர்த்துவிடலாம் என நெல்சன் முடிவு செய்துள்ளார்.

போதையில் இருந்த விஜீசின் கழுத்தை அறுத்து அங்கேயே புதருக்குள் போட்டு விட்டு வீட்டிற்குச் சென்று விட்டார். ஏற்கனவே காதல் திருமணம் தொடர்பான பிரச்னை விஜீசுக்கு இருந்ததால் அதன் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக ஒரு தோற்றம் ஏற்பட்டு விடும் என நெல்சன் நம்பியுள்ளார்.

ஆனால், பொலிசாரிடம் சிக்கியதையடுத்து நெல்சன் மீது கொலை வழக்குப் பதிவு செய்த பொலிசார்,, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதிவேகமாக 10 ஆயிரம் ஓட்டங்கள் : உலக சாதனை படைத்த விராட் கோஹ்லி!!

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10 ஆயிரம் ஓட்டங்கள் கடந்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடி வருகிறது.

அணித்தலைவர் விராட் கோஹ்லி இந்தப் போட்டியில் 81 ஓட்டங்களை எட்டியபோது, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10,000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

கோஹ்லி இதுவரை 213 ஒருநாள் போட்டிகளில் 205 இன்னிங்ஸ்களில் களமிறங்கி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதில் 36 சதங்கள் மற்றும் 49 அரை சதங்கள் அடங்கும்.

இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 259 இன்னிங்ஸ்களில் இதனை செய்திருந்தார். கோஹ்லி அவரது சாதனையை முறியடித்துள்ளார்.
மேலும், இந்திய வீரர்களில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த ஐந்தாவது வீரர் மற்றும் உலகளவில் 13வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட பதற்றம் : வெடித்து சிதறிய கொள்கலன் : அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்!!

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்று வெடித்தமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவந்த கொள்கலன்களில் ஒன்றே வெடித்துள்ளது.

இந்தக் கொள்கலன் பங்களாதேஷிற்கு அனுப்புவதற்கு தயாராக இருந்த நிலையில் திடீரென வெடித்து சிதறியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் JCT 3 மற்றும் 4 பகுதியில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை இந்த கொள்கலன் வெடித்துள்ளது.

குறித்த கொள்கலன் இருந்த வாகனத்தை ஓட்டிய சாரதி அதிர்ச்சியடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரசாயன பொருட்கள் அடங்கிய கொள்கலனே இவ்வாறு வெடித்துள்ளதாக துறைமுகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

14 வயது சிறுமிக்கு உறவினர்களால் நேர்ந்த கொடூரம்!!

கண்டியில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாதஹேவாஹட்ட -உடுவல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதான சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை, மாமா உட்பட ஐந்து போரை தலாதுஒய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

வீட்டிலிருந்த தனது மகளை காணவில்லையென கடந்த 4ம் திகதி தலாதுஒய பொலிஸ் நிலையத்தில் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்திய தாலதுஒய பொலிஸின் குற்றப் புலனாய்வு பிரிவினர், சிறுமி லுணுகல பொலிஸ் காவலில் இருப்பதை அறிந்து கொண்டுள்ளனர்.

தலாதுஒய பொலிஸ் அதிகாரிகள் அங்கு சென்று சிறுமியை அழைத்துக்கொண்டு தலாதுஒய பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

பின்னர், தலத்துோய பொலிஸ் குற்றவியல் புலனாய்வு பிரிவின் உத்தரவின் பேரில் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் உத்தியோகத்தர்களுடன் குற்றவியல் புலனாய்வு அதிகாரிகள் கூட்டாக, சிறுமி வீட்டை விட்டு வெளியேறியமை தொடர்பாக விசாரணை நடாத்தியுள்ளனர்.

இதன்போது தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் தாய் வெளிநாட்டில் வேலை செய்கிறார். தான் தந்தை மற்றும் தங்கையுடன் பாட்டியின் வீட்டில் வசிப்பதாக தெரிவித்துள்ளார். 10ம் வகுப்பில் கல்வி பயில்கிறார்.

தந்தை மற்றும் மாமா என அழைக்கப்படும் மற்றுமொரு நபரும் இன்னும் மூன்று பேரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த கொடுமையை தாங்கிக் கொள்ள முடியாத சிறுமி லுணுகலையில் உள்ள அவர் பாட்டி வீட்டிற்கு சென்றதாகவும், லுணுகல பொலிஸ் அதிகாரிகள் தன்னை கைது செய்ததாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கண்டி பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் தலாதுஒய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையின் ஒரு பகுதியில் திடீரென சிவப்பாக மாறிய கடல்!!

 

புத்தளம் பகுதியிலுள்ள கடற்பகுதியில் கடல்நீர் சிவப்பாக மாறியமையினால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. புத்தளம் களப்பிற்கு சொந்தமான சேருக்குளிய பகுதியிலுள்ள கடல்நீர் இன்று அதிகாலை சிகப்பு நிறமாக மாறியுள்ளது.

குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படும் நிர்மாணிப்பு நடவடிக்கை காரணமாக அங்குள்ள குப்பைகள் அடித்துச் சென்றமையினால் இவ்வாறு சிகப்பு நிறமாக மாறியுள்ளது.

நேற்று இரவு அருவன்காடு குப்பை மேட்டு பிரதேசத்தில் பெய்த அடைமழையினால் குப்பை மேட்டு பகுதியில் நீர் நிறைந்து அது களப்பிற்கு அடித்துச் சென்றுள்ளது. இதனால் களப்பு நீர் முழுவதும் சிகப்பு நிறமாகியுள்ளது.

இந்த குப்பை மேட்டிற்கு எதிராக அந்த பகுதி மக்கள் இதற்கு முன்னரும் எதிர்ப்பு வெளியிட்டனர். எனினும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமையினால் அசுத்தமான நீர் களப்பிற்கு சென்று சேர்வதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வவுனியா பூந்தோட்டத்தில் சர்வதேச முதியோர் தின விழா!!

வவுனியா பூந்தோட்டம் நரசிங்க ஆலய கலாச்சார மண்டபத்தில் இன்று(24.10) காலை 9.30 மணியளவில் சர்வதேச முதியோர் தினம் க.வேலாயுதம்பிள்ளை (ஆலோசகர் பூந்தோட்டம் முதியோர் சங்கம்) தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வடக்கு மீள்குடியேற்றப்பிரதி அமைச்சருமான கே. காதர் மஸ்தான், வடமாகாணசபை உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், ஈ.பி.டி.பி கட்சியின் நகரசபை உறுப்பினர் பா.பிரசன்னா, பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ.பிரதீபன்,

மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ். எஸ்.ஸ்ரீனிவாசன், பூந்தோட்டம் கிராம அலுவலர் மற்றும் பொது அமைப்பினர், அபிவிருத்தி அலுவலகர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டதுடன் முதியோர்கள் பென்னாடைபோர்த்தி கௌரவிக்கப்பட்டு முதியோர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.