18 மாதங்களாக தன் உடலுக்குள் சிக்கியிருந்த இளம்பெண், மீட்ட தாயின் இசை : ஒரு ருசிகர சம்பவம்!!

அபூர்வ நோய் ஒன்றினால் தன் உடலுக்குள் சிறை வைக்கப்பட்டிருந்த ஒரு இளம்பெண்ணை அவளது தாயின் இசை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது.

Miranda 13 வயதாக இருக்கும்போது locked-in syndrome என்ற பிரச்சினையில் சிக்கினாள். மூளையில் திடீரென எற்பட்ட இரத்தப்போக்கினால் கடுமையான தலைவலி, திடீரென்று கேட்கும் திறன் இழப்பு மற்றும் கைகள் செயலிழப்பு ஆகிய பிரச்சினைகள் ஏற்பட, மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Mirandaவுக்கு மிகவும் சிக்கலான ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

உயிர் பிழைத்தாலும் அவளுக்கு locked-in syndrome என்ற பிரச்சினை ஏற்பட்டது. அதாவது கோமா போன்ற ஒரு நிலை, ஆனால் அவளால் தன்னைச் சுற்றி நடப்பதை உணர முடியும், பதிலுக்கு ரெஸ்பாண்ட் செய்ய முடியாது.

இப்படி ஒரு பிரச்சினையில் சிக்கிய Mirandaவுக்கு அந்த பிரச்சினையிலிருந்து விடுபட 5 சதவிகித வாய்ப்பு மட்டுமே இருந்ததாக மருத்துவரான அவரது தாயான Stella (52) தெரிவிக்கிறார்.

Miranda மருத்துவமனையில் இருக்கும்போது உறவினர்கள் பாட அவரது தந்தையான John (54) கிட்டார் இசைப்பார்.

பிள்ளை செயலற்று இருப்பது மனதை வருந்தச் செய்தாலும் மனம் தளராத Mirandaவின் தாய் அவளது உறவினர்கள் எழுதிய கடிதங்களை வாசித்துக் காட்டுவார். அவற்றைக் கேட்கக் கேட்க Miranda கண்களை சிமிட்டத் தொடங்கினாள்.

திரைப்படங்களில் வருவது போல அவளது கைகள் அசையத் தொடங்கின. மூன்று மாதங்களாக விடாமல் மகளுக்காக தாய் பியானோ வாசிக்க, ஒரு நாள் Miranda தாயுடன் சேர்ந்து பாட ஆரம்பித்தாள்.

25 ஆண்டுகளாக நான் மருத்துவராக இருக்கிறேன், இப்படி ஒரு அதிசயத்தை நான் பார்த்ததில்லை என்று கூறும் Mirandaவின் தாய், மகளுக்கு பேச்சுப் பயிற்சி முதல் பல பயிற்சிகளைக் கொடுத்து வருகிறார்.

13 வயதில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த சிறுமி!!

கவுதமாலா நாட்டில் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 13 வயது சிறுமிக்கு மூன்று குழந்தைகள் பிறந்து, அதில் இரண்டு குழந்தைகள் இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவுதமாலா நாட்டின் Momostenango கிராமத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ்கா லோபீஸ் பெரேஸ் என்ற 13 வயது சிறுமி. இவர் தன்னுடைய 7 சகோதரன்கள் மற்றும் தாயுடன் வசித்து வருகிறார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெரேஸ்க்கு, காட்டு பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

அடுத்த சில மணிநேரங்களில் அவருக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. மூன்று குழந்தைகளுமே 1 கிலோ எடையில் இருந்ததால், மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது.

அங்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளன. ஆனால் மற்றொரு குழந்தைக்கு தினமும் ஆக்சிஜன் தேவைப்படுவதால் மருத்துவன்மனையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியிடம் விசாரிக்கையில், தெருவில் மிட்டாய் விற்பனை செய்யும் ஒருவர் துஸ்பிரயோகம் செய்ததாகவும், தற்போது அவர் யார் என்பது தனக்கு நியாபகம் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், கர்பமடைந்திருப்பதே தனக்கு தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள கவுதமாலாவின் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கிய மையம், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை கர்ப்பமடைந்த 10 முதல் 14 வயதிற்கு உட்பட்ட 2,102 கர்ப்பிணிகளில் இதுவும் ஒன்று. இதே காலகட்டத்தில் 15 முதல் 19 வயதிற்குட்பட்ட 59,584 இளம் பெண்கள்கர்பமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய உள்ளாடை கண்டுபிடிப்பு!!

பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்துவிட்ட நிலையில் அண்மையில் மீ டூ இயக்கம் சமூக வலைதளங்களில் தீவிரமாகியிருக்கிறது. இதன் மூலம் சில முக்கிய நபர்களின் லீலைகளும் அம்பலமாகி வருகின்றன.

இந்நிலையில் பெண்களுக்கு எதிரான் பாலியல் சீண்டல்களை தவிடுபொடியாக்க எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவிகள் கண்டுபிடித்துள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களை இடிப்பது, மார்பகங்களை இடிபதும் கூட்டத்தில் மறைந்து விடுவது போன்ற கொடுமைகள் தினமும் அரங்கேறுகின்றன. பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்துவிட்ட நிலையில் அண்மையில் மீ டூ இயக்கம் சமூக வலைதளங்களில் தீவிரமாகியிருக்கிறது.

இதன் மூலம் சில முக்கிய நபர்களின் லீலைகளும் அம்பலமாகி வருகின்றன. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான் பாலியல் சீண்டல்களை தவிடுபொடியாக்க எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவிகள் கண்டுபிடித்துள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களை இடிப்பது, மார்பகங்களை இடித்துவிட்டு கூட்டத்தில் மறைந்து விடுவது போன்ற கொடுமைகள் தினமும் அரங்கேறுகின்றன.

பெண்களின் மார்பை தவறான எண்ணத்தோடு பிடித்தால் இந்த உள்ளாடை 3800 கிலோ வால்ட் மின்சார அதிர்ச்சியைக் கொடுக்கும். அது தொடும் நபரை மயக்க நிலைக்கு தள்ளும். அதுமட்டுமன்றி சம்பவ இடம், நேரம் குறித்த தகவல்கள் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும், அருகில் உள்ள காவல் நிலையத்துக்கும் ஜி.பி.எஸ். மூலம் எஸ்.எம்.எஸ். சென்றுவிடும். 82 முறை ஷாக் கொடுக்க கூடிய அளவுக்கு திறன் வாய்ந்ததாக இந்த பிரா வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்படி அதி சக்திவாய்ந்த மின்சார தாக்குதல் கொடுக்கப்படும் பொழுது, அதை அணித்து இருக்கும் பெண்களுக்கு அது எந்த கேடும் விளைவிக்காத அளவுக்கு இந்த பிரா வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இலங்கை அகதி ஒருவர் எழுதிய கடிதம்!!

 

சென்னைப் புழல் சிறையில் முதல் வகுப்பு கைதியாக அடைக்கப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு எழுதிய கடிதம் ஒன்று இந்திய ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த அசோக்குமார் என்ற நபர் சென்னைப் புழல் சிறையில் முதல் வகுப்பு கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் புழல் சிறையில் நடந்து வரும் கொடுமைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்ய இருக்கிறார். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நேற்று மாலை திடீரென என்னை `ஏ’ வகுப்பில் இருந்து செல்லுலார் பிளாக் (Cellulor block) – தனியறைக்கு மாற்றம் செய்துவிட்டனர். காரணம் ஏதும் கூறவில்லை. `கண்காணிப்பாளர் கூறினார்’ என்று மாற்றம் செய்துவிட்டனர். தனியறையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறைவாசிகள், சிறைக் குற்றம் புரிந்த சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்தத் தொகுதியில் `ஏ’ வகுப்பு சிறைவாசியை அடைக்க வேண்டிய அவசியம் இல்லை. இது துன்புறுத்தும் நடவடிக்கையாகும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கண்காணிப்பாளர் செந்தில்குமார் என்னிடம், `இலங்கை சிறைவாசிதானே நீ. எதாவது செல்போனில் பேசுகிறாயா?’ என்றார்.

`இல்லை அய்யா…நான் இன்னும் 3 மாதங்களில் விடுதலையாக உள்ளேன். வாரம் இரண்டு முறை என் மனைவியை நேர்காணலில் சந்திக்கிறேன். நான் சிறையில் எந்தத் தவறான செயலிலும் ஈடுபடவில்லை’ என்று கூறினேன். இருப்பினும், திடீரெனப் பழிவாங்கும்விதமாக மனநலம் பாதிக்கப்பட்ட சிறைவாசிகள் அறையில் அடைக்கப்பட்டுள்ளேன்.

சந்தேகம் என்ற பெயரில், இலங்கை நாட்டைச் சேர்ந்த சிறைவாசி என்றாலும் சந்தேகப்படுவதும் கேவலமாக நடத்துவதும் மனவருத்தத்தைத் தருகிறது. மேலும் இந்தச் சிறையிலிருந்து வேறு மாவட்டங்களில் உள்ள சிறைக்கு மாற்றம் செய்யவும் அவருக்கு (கண்காணிப்பாளர்) அதிகாரம் உள்ளது.

ஆதலால், மனநிம்மதியின்றி, பாதுகாப்பற்ற சூழலில் உள்ளேன். தாங்கள் ஆணையின்படி, தங்கள் மேற்பார்வையில்தான் சிறையில் உள்ளேன். கடந்த மாதம் திருவள்ளூர் மாவட்ட நீதிபதி சிறைக்கு வந்து திடீரெனப் பார்வையிட்டபோது, அனைத்துச் சிறைவாசிகளையும் சந்தித்தார்.

அப்போது இதுபோன்ற செயல்கள் குறித்து சிறைவாசிகள் அவரிடம் கூறியபோது, `அப்படி எல்லாம் இவர்கள் செய்ய முடியாது. உங்கள் பிரச்னைகளைப் பற்றி நீதிமன்றத்தில் பதிவு செய்துவிடுங்கள். நீங்கள் தாக்கப்பட்டாலோ, துன்புறுத்தப்பட்டாலோ உங்களைக் கட்டாயப்படுத்தி எதாவது கேட்டாலோ அதைத் தயங்காமல் நீதிபதியிடம் தெரிவித்துவிடுங்கள்’ என்றார்.

அய்யா… எனக்குப் பெரிய அளவில் யாரும் இல்லை. உங்களை மட்டும்தான் மலை போல நம்பியுள்ளேன். நான் தாக்கப்பட்டாலோ அல்லது வேறு சிறைக்கு மாற்றப்பட்டாலோ அதற்கு கண்காணிப்பாளர் செந்தில்குமார்தான் பொறுப்பு. அவர் மேல் இதுவரையில் முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சரியான முறையில் வழக்கை நிரூபிக்காததால் மிஸ்டேக் ஆஃப் ஃபேக்ட் என்ற அடிப்படையில் பல வழக்குகள் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

சிறைக்குள் நான்கு சுவர்களுக்குள் அவர் மீது புகார் அளிப்பதும் அதை நிரூபிப்பதும் சாத்தியமில்லாத ஒன்று. ஆதலால், நீதிமன்றத்தில் எனக்குக் கிடைத்த வாய்ப்பில் பதிவு செய்கிறேன். எனக்கு உடல்ரீதியான எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாமலும் ஏன் தொகுதி மாற்றம் செய்தீர்கள் என்ற விளக்கத்தையும் என் மீது குற்றம் ஏதும் இல்லை என்றால் `ஏ’ வகுப்பு தொகுதியில் அடைக்கும்படியும் ஆணை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

16 வயது பாடசாலை மாணவி ஐந்து மாத கர்ப்பிணி : பரிசோதனையில் கண்டறிந்த மருத்துவர்கள்!!

செவனகல பிரதேசத்தில் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

செவனகல – களுதியஹார பிரதேசத்தை சேர்ந்த 16 வயதான பாடசாலை மாணவியே கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணவி 5 மாத கர்ப்பிணி என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து மருத்துவர்கள் மாணவி தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

பொலிஸார், மாணவியின் தாயாரிடம் இது சம்பந்தமாக விசாரணை நடத்தியுள்ளனர். எனினும் இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என மாணவி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

விசாரணைகளில் தெரியவந்த விடயங்களுக்கு அமைய மாணவியின் சிறிய தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாணவியின் கர்ப்பத்திற்கு மற்றுமொரு நபரும் காரணம் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எம்பிலிப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

செவனகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

வவுனியா றிசாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்!!

வவுனியா றிசாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை இன்று(25.10) காலை மேற்கொண்டனர்.

வவுனியா, சூடுவெந்தபுலவு, ரஹ்மத்நகர் றிசாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலயம் முன்பாக ஆரம்பித்த விழிப்புணர்வு ஊர்வலம் சூடுவெந்தபுலவு பள்ளிவாசல் வரை ஊர்வலமாக வந்து பின்னர் அங்கிருந்து பாடசாலையை நோக்கி சென்று பாடசாலை முன்றலில் முடிவடைந்தது.

ஊர்வலத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர். இவ் ஊர்வலத்தில் அதிபர், ஆசிரியர்கள், பொலிசார், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் வீதியிலுள்ள கால்நடைகளை அகற்ற நடவடிக்கை : தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் ரவி!!

வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள வீதியில் கைவிடப்பட்ட கட்டாக்காலி கால்நடைகளை அகற்ற இன்று முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத்தவிசாளர் து.நடராஜசிங்கம் (ரவி) தெரிவித்துள்ளார்.

வவுனியா மன்னார் வீதி நெளுக்குளம் பகுதியில் வீதிகளில் கைவிடப்பட்ட கட்டாக்காலி மாடுகள் தரித்து நிற்பதால் வாகனங்கள் பயணிப்பதில் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதுடன் வீதி விபத்துக்களும் இடம்பெற்று வருகின்றன. இவ் விடயம் தொடர்பாக வினவியபோது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கைவிடப்பட்டுள்ள கட்டாக்காலி கால்நடைகளை உரிமையாளர்கள் தமது வீடுகளில் கட்டிவைத்து பராமரிப்பதற்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

எனவே வீதிகளில் கட்டாக்காலி கால்நடைகளால் வீதி விபத்துக்கள் இடம்பெறுவது தொடர்பாக எனது கனவத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்றிலிருந்து எமது பிரதேச சபையினூடாக வீதிகளிலுள்ள கட்டாக்காலி கால்நடைகள் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

நடிகையின் பாலியல் புகார் : நடிகர் அர்ஜுன் எடுத்த அதிரடி முடிவு!!

தன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ருதி ஹரிஹரன் எழுத்துப் பூர்வமாக மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மட்டுமே இது குறித்த விசாரணை கூட்டத்தில் பங்கேற்பேன் என நடிகர் அர்ஜுன் அதிரடியாக கூறியுள்ளார்.

நிபுணன் என்ற திரைப்படத்தில் நெருக்கமான காட்சிகளில் அர்ஜுன் தன்னிடம் வரம்பு மீறியதாக ஸ்ருதி ஹரிஹரன் புகார் தெரிவித்திருந்தார், இதை அர்ஜுன் மறுத்தார்.

இந்நிலையில் அர்ஜுன் மீது பாலியல் புகார் தெரிவித்த, ஸ்ருதி ஹரிஹரனிடம் விசாரணை நடத்த, கன்னட திரைப்பட வர்த்தக கவுன்சில் கூட்டம் பெங்களூரில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அர்ஜுனையும் அழைத்து சமாதானம் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், ஸ்ருதி ஹரிஹரன் எழுத்துப் பூர்வமாக மன்னிப்பு கோரி கடிதம் தந்தால் மட்டுமே இக்கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதே போல் ஸ்ருதியும், அர்ஜுன் மீதான புகாரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப் போவதாக சவால் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஆண்டில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை : அடுத்தடுத்து இறந்த தம்பதி : அனாதையான 2 மாத குழந்தை!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தனிக்குடித்தனம் செல்வதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கணவன்- மனைவி அடுத்தடுத்து இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் ரிச்சர்டு பிராங்ளின் (30). ஜெபக்கூட்டத்தில் போதகராக இருந்து வரும் ரிச்சர்டு, அவினாசி தாரம்பாளையத்தை சேர்ந்த ஜெர்சி (28) என்ற பெண்ணை கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக திருமணம் செய்துள்ளார். பிரசவத்திற்காக தாய் வீட்டில் வீட்டில் இருந்த ஜெர்சிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் மனைவியை பார்ப்பதற்காக அவிநாசிக்கு சென்ற இடத்தில் தனிக்குடித்தனம் போகலாம் என ஜெர்சி பேச்சு கொடுத்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ரிச்சர்டு, அனைவரும் கூட்டு குடும்பமாக இருக்கலாம் என கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே விவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ரிச்சர்டு, வேகமாக பெட்ரோலை எடுத்துவந்து உடல் முழுவதும் ஊற்றியுள்ளார். அதனை பறிக்க முயன்ற போது ஜெர்சியின் உடலிலும் பெட்ரோல் விழுந்துள்ளது.

உடனே கையில் வைத்திருந்த தீப்பட்டியை கொண்டு ரிச்சர்டு உடலில் தீ வைத்துள்ளார். வலி தாங்கள் முடியாமல் கதறிய கணவனை காப்பாற்ற சென்ற ஜெர்சியின் மீதும் தீ பரவியுள்ளது.

இதனையடுத்து பலத்த தீ காயங்களுடன் மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அடுத்தநாளே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டிலிருந்து வெளியான கருகிய வாசம் : கை, கால்கள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் கிடந்த பாடகி!!

ஹைதராபாத் மாநிலத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் தீ வைத்து எரித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.

ஹைதரபாத் மாநிலம் ஒவைசி காலணி அருகே உள்ள வீட்டில் இருந்து கருகிய வாசம் வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டை திறந்துகொண்டு உள்ளே சென்று பார்த்த போது, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இறந்து கிடந்த பெண் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சோனியா பேகம் (25) என்பது தெரியவந்துள்ளது.

திருமண விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பாடகியாக இருந்த சோனியா, பார் ஒன்றில் வேலை பார்த்து வந்த சல்மான் என்ற இளைஞரை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அதன்பின் இருவரும் ஹைதராபாத்திற்கு குடி வந்துள்ளனர். அங்கு ஒரு வருடத்திற்கு முன்னதாக, இளைஞர் ஒருவருடன் சோனியாவிற்கு இருந்த உறவு பற்றி சல்மான் கண்டுபிடித்து சண்டையிட்டுள்ளார். மேலும் சோனியாவை தாக்கியும் வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 23-ம் தேதியன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் மனைவியின் கை, கால்களை கட்டிப்போட்டு சல்மான் தீ வைத்து எரித்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் தம்பதியினருக்கு பிறந்த 2 வயது குழந்தையை பெற்றோரின் வீட்டில் ஒப்படைத்த சல்மான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

பிரபல தமிழ் நடிகரின் தாய் கழுத்து அறுத்து கொலை : ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த கொடுமை!!

மறைந்த பிரபல நடிகர் அலெக்ஸ் சம்பந்தியும், நடிகர் ஜெரால்டு மில்டனின் தாயுமான வனஜா கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் திருச்சியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு வனஜா என்ற மனைவியும் ஜெரால்ட் மில்டன் என்கிற மகனும் ஜெனிதா என்கிற மகளும் உள்ளனர்.

இதில் ஜெரால்டு மில்டன் திருச்சி மாநகராட்சியின் 25-வது வார்டு அதிமுக கவுன்சிலர் பதவி வகித்து வந்தார். இதோடு சினிமாவில் நடிகராகவும் அவர் உள்ளார்.

கத்தி சண்டை, றெக்க உள்ளிட்ட திரைப்படங்களில் ஜெரால்டு நடித்துள்ளதாக தெரிகிறது. மேலும் இவர் மறைந்த பிரபல நடிகர் அலெக்ஸின் மருமகன் ஆவார்.

ஜெரால்ட் மில்டனின் தங்கை ஜெனிதா, மார்டின் என்பவரைத் திருமணம் செய்து பெங்களூருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். ஜெனிதாவின் குழந்தை கெல்வின் (5)-ஐ கவனித்து கொள்ள தாய் வனஜா பெங்களூரில் உள்ள அவர் வீட்டில் தங்கியிருந்தார்.

நேற்றுமுன்தினம் மதியம் தனது பேரன் கெல்வினை அழைத்துச் செல்வதற்காக அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே இறங்கி வந்தார் வனஜா. அப்போது 4 மர்ம நபர்கள் வீட்டில் மேல் ஏறுவதை பார்த்த வனஜா திருடன் திருடன் என கத்தியுள்ளார்.

நால்வரும் அந்த வீட்டில் இருந்த பீரோவை உடைத்து நகைகளைக் கொள்ளை அடித்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து சத்தம் போட்ட வனஜாவை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு நகைகளுடன் நால்வரும் தப்பியதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த பொலிசார் வனஜாவின் சடலத்தை கைப்பற்றினார்கள்.
வனஜா உண்மையிலேயே நகைக்காகக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாயை இழந்த பூனைக் குட்டிகளுக்கு தாயாக மாறிய நாய் : நெகிழ்ச்சியான தருணம்!!

தாய்ப்பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் நாயின் செயற்பாடு தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. பாணந்துறை கடற்கரையில் பூனைக் குட்டிகளை பாதுகாக்கும் நாயின் செயற்பாடு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த நாய் அண்மையில் குட்டிகளை போட்டுள்ளது. எனினும் அதன் குட்டிகள் அனைத்து உயிரிழந்துள்ளன.

இந்நிலையில் தாயினை இழந்த பூனைக் குட்டிகளுக்கு தாயப் பாசத்தை வெளிப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மனிதர்களை மிஞ்சியதாக நாயின் தாய்ப்பாசம் அமைந்துள்ள நிலையில், கடற்கரைக்கு வருவோரின் மனங்களையும் நெகிழச் செய்துள்ளது.

வவுனியாவிற்கு அமைச்சர் மனோகணேசன் விஜயம்!!

வவுனியாவிற்கு இன்று(25.10) காலை 9.30 மணியளவில் நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் விஜயம் செய்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டபோது வவுனியா வர்த்தகர் சங்கம், வவுனியா நகரசபை, பொது அமைப்புக்களின் வேண்டுகோளின் அடிப்படையில் பழைய பேருந்து நிலையத்திற்குச் சென்ற அமைச்சர் அதனைப்பார்வையிட்டுள்ளார்.

வவுனியா வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ்.சுஜனால் வர்த்தக நிலையங்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

பின்னர் நகரசபைத் தவிசாளர் இ.கௌதமனின் அழைப்பின்பேரில் இலுப்பையடிப்பகுதியிலுள்ள தினச்சந்தைக்குச் சென்று அதனைப்பார்வையிட்டுள்ளதுடன் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தின் பணிகள் முடிவடைந்துள்ளது குறித்து தினச்சந்தை வியாபரிகளினால் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

பின்னர் தினச்சந்தைக்குப் பின்னாலுள்ள குளத்தினையும் பார்வையிட்டுச் சென்றுள்ளார். இதன்போது நகரசபை தவிசாளர், உபதவிசாளர், கட்சியின் ஆதரவாளர்கள், தினச்சந்தை வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மலசலகூடத்தில் சட்டவிரோத நடவடிக்கை!!

வவுனியாவில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மலசலகூடத்தில் மது அருந்தும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதுடன் விடுதியாகவும் செயற்பட்டு வருகின்றதைக்காணக்கூடியதாக உள்ளது.

புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள குறித்த மலசலகூடம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவில்லை. இதில் சிலர் மதுப்பாவனையிலும் சட்விரோத நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவதுடன் விடுதியாகவும் செயற்படுத்திவருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக அமைக்கப்பட்டுள்ள புதிய மலசலகூடத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. இதனைத்திறந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவில்லை.

இதனால் குறித்த புதிய மலசலகூடத்தில் சட்டவிரோதமான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்துள்ளது. அத்துடன் பொது மலசலகூடத்தில் தொழில்புரியும் நபர்கள் மலசலகூடத்தை தவறான நடவடிக்கைக்குப் பயன்படுத்தி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

அப்பகுதியில் குடிமனைகளைச் சுற்றியுள்ளதால் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை அப்பகுதிக்கு சென்றபோது அங்கு தங்கியுள்ள இருவர் மதுபாவனையில் ஈடுபட்டுள்ளதை நேரடியாக அவதானிக்க முடிந்துள்ளது.

இவ்வாறு மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத்தில் மது பாவணையும் சட்டவிரோத நடவடிக்கையும் இடம்பெற்று வருவதை இங்குள்ள அதிகாரிகள் கண்டுகொள்வில்லையா?

மாணவியின் கொலையை மறைக்க முனி கொன்றுவிட்டது என நாடகமாடியது அம்பலம்!!

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவியின் தலையை துண்டித்துக் கொலை செய்துவிட்டு சுடுகாட்டு முனி பலியிட்டதாக கூறி நடித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி கிராமத்தை சேர்ந்த சாமிவேல். சின்னப்பொன்னு தம்பதியினரின் இளைய மகள் மகள் ராஜலெட்சுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 22 ந்தேதி ராஜலெட்சுமி, வீட்டில் தனது தாயுடன் அமர்ந்து பூ தொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து தோட்டத்தில் வசித்து வந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் உள்ளாடை மட்டுமே அணிந்த நிலையில் கொடுவாளுடன் வீட்டுக்குள் ஆவேசமாக புகுந்தார்.

ராஜலட்சுமியின் தலை முடியை பிடித்து இழுத்துச்சென்று வீட்டு வாசல் அருகே வைத்து அவரது தலையை துண்டித்து கொலை செய்தார். தலையை தூக்கிச்சென்று சாலையில் வீசி விட்டு உறக்க கூச்சலிட்ட படியே அவரது வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

சம்பவத்தை கண்ட அவரது தாய் அதிர்ந்து போனார். ரத்தம் தெறிக்க ஆவேசமாக காணப்பட்ட கொலையாளி தினேஷ்குமாரை காவல் நிலையத்தில் அமரவைத்து விட்டு, மாணவியின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

முதலில் அகோரி போல ஆவேசமாக காணப்பட்ட தினேஷ்குமார், தன்னை சுடுகாட்டு முனி என்றும் தனக்கு மல்லிகை பூ வாடை பிடிக்காது என்றும் அதனால் அவளை முனி கொன்று விட்டது என்றும் கூறி அதிரவைத்தான். அதோடில்லாமல் தனக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் நாடகமாடி உள்ளான்.

2 நாட்களாக தினேஷ், சைக்கோ போல முரண்பாடாக பேசி, நடித்து காவல்துறையினரை ஏமாற்றி வந்தார். இதையடுத்து காவல்துறையினர் அவனது மனைவி சாரதாவிடம் விசாரித்த போது கொலைக்கான பின்னணி வெளிச்சத்துக்கு வந்தது.

பக்கத்து தோட்டத்தில் வசிக்கும் சாரதாவுடன் மாணவி ராஜலெட்சுமி அன்பாக பழகி வந்துள்ளார். இதனை சாதகமாக்கிக் கொண்டு தினேஷ், ராஜலட்சுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளான்.

சம்பவத்தன்று மனைவி வெளியில் சென்றிருந்த நேரம் வீட்டிற்கு வந்த மாணவி ராஜலட்சுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளான் தினேஷ்.

அப்போது மனைவி சாரதா வந்துவிட்டதால் அவனிடம் இருந்து தப்பிய சிறுமி ராஜலெட்சுமி வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சாமி வந்தது போல நடந்து கொண்ட தினேஷ், தன்னுடைய லீலைகளை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி விடக்கூடாது என்பதற்காக ராஜலெட்சுமியை கொலை செய்து விட்டு முனி கொன்று விட்டதாக நாடகமாடியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கொலையாளி தினேஷை கைது செய்த காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தீயில் கருகி உயிரிழந்த அழகிய இளம்பெண் : திருமணமான சில மாதங்களில் சோகம்!!

இந்தியாவில் திருமணம் ஆன சில மாதத்தில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் பதஷாயி பகுதியை சேர்ந்தவர் திலீப்நாத். இவருக்கும் பரி (18) என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. பரியின் பெற்றோர் மேற்கு வங்கத்தில் உள்ள கோபிபல்பூர் கிராமத்தில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பரி தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்து கொண்டுள்ளார்.

இதையடுத்து வலியால் துடித்த அவரை குடும்பத்தார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரி உயிரிழந்தார். தற்கொலை முடிவை பரி எடுத்ததன் காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.