டெல்லியில் பக்கத்து வீட்டை சேர்ந்த இளைஞர்கள் கொடூரமாக தாக்கியதால் அவமானம் தாங்காமல் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டில்லி புகாரி பகுதியை சேர்ந்த தயாசங்கர் சர்மா – பிரேம் குமாரி தம்பதியின் மூத்த மகள் சில்பா (21). இவர் தன்னுடைய இளங்கலை படிப்பை முடித்துவிட்டு முதுகலை படிப்பிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
இவருக்கு பிரியங்கா ஷர்மா என்ற இளைய சகோதரி உள்ளார். தயங்கர் சர்மா அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த ஞாயிற்றுகிழமையன்று சில்பா குடும்பத்தாருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்தவரின் குடும்பத்துக்கும் கடுமையான சண்டை நடந்துள்ளது.
அதன் பிறகு சிறிது நேரம் கழித்து சில்பா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவருடைய அம்மா பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார்.
அந்த சமயம் பக்கத்து வீட்டை சேர்ந்த இளைஞர்களின் தந்தை ஷியாம்லால், சில்பாவிடம் சிறிது நேரம் பேச வேண்டும் என கூறி கதவை திறக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதைக்கேட்டு ஷில்பாவும் கதவை திறந்துள்ளார். அவர் கதவை திறந்ததும், பக்கத்து வீட்டு இளைஞர்களான சஞ்சய் மற்றும் அமர் வீட்டினுள் புகுந்து சரமாரியாக தாக்கியுள்ளார். உடைந்த கண்ணாடி பாட்டில் மற்றும் கட்டைகளை கொண்டு தாக்கியதில் ஷில்பா காயமடைந்துள்ளார்.
சம்பவம் அறிந்து வீட்டிற்கு ஓடி வந்த பெற்றோர் ஷில்பாவை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் சம்பவம் குறித்த விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
இதற்கிடையில் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஷில்பா, இரவோடு இரவாக வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மறுநாள் காலையில் மகள் நீண்ட நேரம் வெளியில் வராததை அறிந்து கதவை திறந்த பெற்றோர் மகளின் சடலத்தை பார்த்து கதறி அழுதுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கூறியுள்ள பொலிஸார், ஷில்பா பக்கத்து வீட்டை சேர்ந்த இளைஞரை காதலித்துள்ளார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவருடைய பெற்றோர் இளைஞர் வீட்டுடன் கடுமையாக சண்டையிட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட அவமானத்தை தாங்க முடியாமல் தான் ஷில்பா தற்கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் திருமணமான 15-வது நாளில் வயிற்று வலி என்று அனுமதிக்கப்பட்ட புதுமணப் பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ள சம்பவம் உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள கலைஞர் நகரைச் சேர்ந்த அஜீஸ். இவருக்கும் தர்மபுரி மாவட்டத்தைச் சேரந்த பர்வீன் பானு என்பவருக்கும் மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 15-நாட்களுக்கு முன் உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
அதன் பின் கணவரின் ஊருக்கு வந்த பர்வீன் பானு, கடும் வயிற்று வலி இருப்பதாகக் கூறி, அஜீஸுடன் சரிவர பேசாமலும் பழகாமலும் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு பர்வீன்பானுவுக்கு திடீரென வயிற்றுவலி அதிமானதால், அவரை அஜீஸ் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என கூறியுள்ளனர்.
திருமணம் ஆகி 15 நாட்கள் கூட முடியவில்லை, அதற்குள் எப்படி குழந்தை என்று அஜிஸ் விரக்தியுடன் மருத்துவமனையை விட்டு சென்றுள்ளார்.
இதனிடையே அதிகாலையில் பர்வீன்பானுவுக்கு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் பிறப்பை பதிவு செய்து சான்றிதழ் கொடுக்க வேண்டிய சூழலில்,மருத்துவமனையில் இருந்து அஜீஸ் சென்றுவிட்டதால், பர்வீன்பானுவின் உறவினர்களை அழைத்துப் மருத்துவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதை மறைத்த பர்வீன்பானு மற்றும் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தது குறித்து காவல்நிலையத்தில் அஜீஸ் புகாரளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வவுனியாவில் அங்காடி வியாபாரிகள் தங்களுக்கு வியாபாரம் செய்ய நிரந்தர இடம் ஒன்று வழங்குமாறு தெரிவித்து நகரசபைக்கு எதிராக இன்று (23.10.2018) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த அங்காடி வியாபாரிகளை அங்கு வியாபாரம் செய்ய வவுனியா நகரசபை தலைவர் தடை விதித்ததன் எதிரொலியாக அங்காடி வியாபாரிகள் இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வவுனியா பொது வைத்தியசாலை சந்தியிலிருந்து ஊர்வலமாக நகரசபையை வந்தடைந்து நகரசபை வாயிலை மறித்து நிலத்தில் அமர்ந்த நிலையில் சுமார் ஒரு மணிநேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகரசபை தலைவரே எங்களுடன் பேச மறுப்பது ஏன், முதலாளிகளுக்கு வாழ்வு எங்களுக்கு சாவா? அங்காடி வியாபாரிகளுக்கு நிரந்தர இடம் வழங்குங்கள், ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, நகரசபை தலைவரே தகாத வார்த்தை பிரயோகிக்காதே போன்ற வாசகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நகரசபை தலைவர் இ.கௌதமன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன் மற்றும் வவுனியா நகரசபை உறுப்பினர் பாலப்பிரசன்னா சமசரப் பேச்சவார்த்தைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து நகரசபை தலைவர் மற்றும் அங்காடி வியாபாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் எதிர்வரும் 06.11-2018 வரை தொடர்ந்து அங்காடி வியாபாரிகள் முன்னைய இடத்திலேயே வியாபாரத்தில் ஈடுபடுவது எனவும் நகரசபையின் சபை கூடி முடிவு எடுத்தபின் அங்காடி வியாபாரிகளுக்கான நிரந்தர இடம் வழங்கப்படும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நகரசபை தலைவர் இ.கௌதமன் , ஹொரவப்பொத்தான வீதியில் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் அங்காடி வியாபாரிகள் சிலர் தங்களுக்குள் தகாத வார்த்தை பிரயோகங்களை பிரயோகிப்பதன் காரணமாக பொது மக்களிடமிருந்து பல மறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்தே அவர்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட தடை விதித்திருந்தேன்.
வவுனியா நகரசபைக்கு முன்புறமாக அவர்களுக்கான பிரத்தியோக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் அதை புறக்கணித்த நிலையிலேயே வீதி ஓரங்களில் வியாபாரநடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற கோர விபத்து ஒன்றில் இலங்கையை சேர்ந்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் Clayton பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த காமில் யுசுப் என்ற 22 வயதான இளைஞன் இவ்வாறு உயிரிழந்துள்ளறார்.
மோட்டர் சைக்கிள் பிரியரான காமில் யுசுப், நீண்ட காலத்திற்கு பின்னர் மோட்டர் சைக்கிளில் பயணித்த வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
காமில் யுசுப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் சிக்கிய காமில் யுசுப், தெய்வாதீனமாக உயிர் தப்பியிருந்தார்.
கட்டுகுருந்தையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த காமிலின் உயிர் காப்பாற்றப்பட்டது. இதனையடுத்து பல எதிர்பார்ப்புகளுடன் காமில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தார்.
எனினும் வெளிநாட்டு சென்ற காமில் நீண்ட காலத்தின் பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் பயணிக்க ஆசை கொண்டுள்ளார். இதன்போது ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் மீது அதிக அன்பு வைத்திருந்த காமில், இலங்கையில் இடம்பெற்ற பல மோட்டார் சைக்கிள் ஓட்ட போட்டிகளில் பங்குபற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
களுத்துறை மாவட்டத்தின் பொலிஸ் நிலையமொன்றில் கடமையாற்றி வரும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், 15 வயதான பாடசாலை மாணவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
களுத்துறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் நேற்றைய தினம் இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பாலியல் துஸ்பிரயோக சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த 20ஆம் திகதி அபி வெனுவன் அபி என்னும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக மாணவனை பொலிஸ் அதிகாரி அநுராதபுரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் அநுராதபுரத்தில் உள்ள விடுதியொன்றில் வைத்து மாணவன் கடுமையான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவன், மருத்துவ பரிசோதனைக்காக களுத்துறை நாகொட வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த பொலிஸ் பரிசோதகர் 2 பிள்ளைகளின் தந்தை எனவும், அவரது மனைவி சுகாதார துறையில் உயர் பதவியொன்றை வகித்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் நிர்மாணிக்கப்படுகின்ற தாமரை கோபுரத்தின் பல இடங்களில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாமரை வடிவத்தில் நிறைவடைந்துள்ள பகுதிகளில் உள்ள கண்ணாடிகளில் இவ்வாறு நீர் கசிவதாக ஆராய்ந்த போது தெரியவந்துள்ளது.
அதற்கமைய இது தொடர்பில் மீண்டும் ஆராய்வதாக நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொள்கின்ற சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.
2012ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் இந்த நிர்மாணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 100 க்கு 70 வீதமான சீன நாட்டவர்களே இந்த நிர்மாணிப்பு நடவடிக்கை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிர்மாணிப்பு நடவடிக்கைக்காக 1404 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.
தற்போது நூற்றுக்கு 85 வீதமான நிர்மாணிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளது. எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் 8ஆம் திகதி இந்த தாமரை கோபுரம் திறந்து வைக்கப்படவுள்ளது.
தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமாக கருதப்படுகின்ற இந்த கோபுரம் 356 மீற்றர் உயரத்தை கொண்டுள்ளது.
மிகவும் உயரமான இந்தக் கோபுரம் உலகளாவிய ரீதியில் உயரமான கட்டடமாக ஒன்பதாவது பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வாறான நீர்க்கசிவு ஆபத்தான அறிகுறியாக இருக்கலாம் என பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முல்லைத்தீவில் வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவியொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.
12 வயதான குறித்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த சிறுமி மல்லாவி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் மேலதிக சிகிச்சைக்காக நேற்றைய தினம் நோயாளர்காவு வண்டியில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் சிறுமி நோயாளர்காவு வண்டியில் வைத்தே குழந்தையொன்றை பிரசவித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த சம்பவத்தின் பின்னர் தாயும், சேயும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் குறித்த மாணவி வசிக்கும் பகுதியை சேர்ந்த இளைஞரொருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கர்ப்பிணியான 15 வயது சிறுமியை திட்டமிட்டு கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வழக்கில் மேலும் ஒருவர் சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஹேரத் முதியன்சேலாகே டில்ஹானி குமாரி குணதிலக்க எனும் சிறுமியை குற்றவாளி திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து உறவு கொண்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த சிறுமி மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவரை திருகோணமலை – மொறவெவ, தம்பகஹவுல்பொத்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு வைத்து சிறுமியை குளத்து நீரில் மூழ்கடித்து கொலை செய்து உடலை புதைத்துள்ளார். இதன்பின்னர் கொலைக்குற்றச்சாட்டிலிருந்து தப்பிப்பதற்காக உடலை தோண்டி எடுத்து எரித்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவம் கடந்த 2010ஆம் ஆண்டு 06ஆம் மாதம் 27ஆம் திகதியன்று நடைபெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் முதலாவது எதிரியான மொறவெவ, இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த நயிது ஹென்னதிகே நிஷாந்த ஜெயலத் என்பவருக்கே மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முதலாவது எதிரியின் உறவினரான இரண்டாவது எதிரி பின்னதுவகே இஸுரு சமிந்த சில்வா என்பவர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு நாளைய தினம் 28 வயது பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமகாலத்தில் இலங்கையின் ரூபாவின் பெறுமதி நாளாந்தம் பாரிய வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் இலங்கை வரலாற்றில் மிக மோசமான பெறுமதியை ரூபாய் இன்று பதிவு செய்துள்ளது.
டொலர் ஒன்றுக்கான அதிக கூடிய வீழ்ச்சியை ரூபாய் இன்று பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கு அமைய இலங்கை ரூபாயின் பெறுமதி 174.12 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அத்துடன் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 170.23 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் இலங்கை ரூபாயின் பெறுமதி 170.23 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அடுத்து வரும் சில மாதங்களில் 200 ரூபாவை எட்டும் என பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாகவே உலகம் முழுவதையும் MeToo என்ற ஹாஸ்டேக் உலுக்கி வருகிறது. இதில் நிறைய பிரபலங்களின் உண்மை முகங்கள் வெளிகொண்டுவரப்பட்டு வருகின்றது.
இதற்கு ஆதரவாக ஏராளமான சமூக ஆர்வலர்கள் தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதேசமயம் ஒரு சில ஆண்கள் இதனை ஏற்க சற்று தயக்கம் காட்டியே வருகின்றனர். இதற்கு உலகில் பல சான்றுகள் இருந்தாலும், இந்திய முழுவதையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு சம்பவம் ஒன்று உள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதியன்று ஓடும் பேருந்தில் 19 வயதான 3 இளைஞர்களை இரண்டு பெண்கள் அடித்து வெளுத்து வாங்கினார்கள். இந்த வீடியோ இணையதளத்தில் வெளியானதும் ஒட்டுமொத்த இந்தியாவும் அவர்களை தூக்கி வைத்து கொண்டாடியது.
அனைத்து ஊடகங்களும் தங்களுடைய தலைப்பு செய்திகளில் அவர்களை ‘வீர மங்கைகள்’ என பெயர் சூட்டி மகிழ்ந்தனர். மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு பெண்களுக்கு ஒரு முன்மாதிரி என புகழாரம் சூட்ட ஆரம்பித்தனர்.
ஹரியாணாவின் ரோட்டக் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் ஆர்த்தி, பூஜா எனவும், அவர்கள் இருவரும் கல்லூரியில் படித்து வருபவர்கள் எனவும் பொலிஸாரால் அடையாளம் கண்டறியப்பட்டனர்.
அவர்களை கௌரவிக்கும் விதமாக ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கத்தார், குடியரசு தின விழாவில் இரண்டு பெண்களுக்கும் தலா 51,000 ரூபா ரொக்க பரிசாக வழங்கப்படும் என அறிவித்தார்.
இதற்கிடையில் குல்தீப், மோஹித் மற்றும் தீபக் என்ற மூன்று இளைஞர்களையும் பொலிஸாரால் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதேசமயம் நவம்பர் 2ம் தேதியன்று மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவ ஆரம்பித்தது. அதில் ஆர்த்தி, பூஜாவும் ஒரு இளைஞரை கடுமையாக தாக்கி கொண்டிருந்தனர். அந்த வீடியோவோம் இணையத்தில் வைரலானதை அடுத்து, பொலிஸார் விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
அந்த வீடியோ தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் வீடியோ ஒரு மாதத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்டது என தெரியவந்தது.
அதில், தங்களுக்கு பணம் தராவிட்டால், பாலியல் துஸ்பிரயோகம் செய்ததுவிட்டாய் என பொலிஸில் பொய் புகார் கொடுத்துவிடுவோம் என அந்த பெண்கள் மிரட்டியதாக தெரியவந்தது. மேலும் அந்த இளைஞரிடம் இருந்து ரூ.20,000 மிரட்டி வாங்கியிருப்பதும் கண்டறியப்பட்டது.
இதனால் பெரும் குழப்பத்திற்கு உள்ளான பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது பேருந்தில் பயணித்த பலரும் மூன்று இளைஞருக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தனர்.
அந்த பேருந்தில் மூதாட்டி ஒருவரின் இருக்கையை ஆர்த்தியும் பூஜாவும் ஆக்கிரமித்துள்ளனர். இதை ஆட்சேபித்த கல்லூரி மாணவர்கள் தீபக், மோஹித், குல்தீப் ஆகியோர் மூதாட்டிக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.
ஆத்திரமடைந்த அக்காவும் தங்கையும் 3 மாணவர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதனை செல்போனில் படம் பிடிக்குமாறு தங்கள் தோழியிடம் கூறியுள்ளனர். பின்னர் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டதோடு, அவர்களுடைய அம்மாவை அழைத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்திலும் புகார் அளித்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து உண்மை கண்டறியும் சோதனை இரண்டு பெண்களுக்கும் நடத்தப்பட்டது. அதில் இரண்டு பெண்களுமே தோல்வியடைந்தனர்.
இதனையடுத்து 50 சாட்சிகளின் அடிப்படையில் 200-பக்க குற்றச்சாட்டு அறிக்கை ரோட்டக் நீதிமன்றத்தில், கடந்த 2017 மார்ச்சில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை ஆராய்ந்த நீதிபதி 3 மாணவர்களும் நிரபராதிகள் என்று கூறி விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் இரு பெண்களும் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 11-ம் ரோட்டக் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
இளைஞர்களுக்கு ஆதரவாக வாதாடிய சந்தீப் ரதி கூறுகையில், இங்கு பெரும்பாலும் பெண்களுக்கு ஆதரவாகவே செய்திகள் வெளியிடப்படுகின்றன. சகோதரிகளுக்கு ‘வீரமங்கைகள்’ என்று பட்டம் சூட்டிய ஊடகங்கள், 3 மாணவர்களையும் அரக்கர்களைப் போன்று சித்தரித்தன. வீடியோ வெளியானபோது நாள்தோறும் பரபரப்பாக செய்திகள் வெளியாகின.
ஆனால் 3 மாணவர்களும் விடுதலைசெய்யப்பட்ட போது எந்த ஊடகமும் கண்டுகொள்ளவில்லை. போலி புகாரால் எதிர்காலத்தை தொலைத்து நிற்கும் 3 பேரும் அப்பாவிகள் என்பதை ஊடகங்கள் உரக்க அறிவிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் ஒருதரப்பாக செய்தி வெளியிடுவதைத் தவிர்த்து இருதரப்பு நியாயத்தையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்”என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் தீபக் மற்றும் குல்தீப் கூறுகையில், விடுதலையானாலும் எங்களுடைய வாழ்க்கை தொலைந்துவிட்டது. ராணுவத்தில் சேர அதிகபட்ச வயது 23. ஆனால் தற்போது எங்களுக்கு 24 வயதாகிவிட்டது. பொலிஸ் புகாரால் வாழ்க்கை பாழாகிவிட்டது. தீபக்கின் கல்லூரி படிப்பு பதியிலியேயே தடைபட்டுவிட்டது என தெரிவித்துள்ளார்.
அதேமசயம் இதுகுறித்து கூறிய மோகித், இந்த சம்பவத்தால் நானும் என்னுடைய பெற்றோரும் ஏராளமான அவமானங்களை சந்தித்து விட்டோம். பொலிஸில் சேர வேண்டும் என்ற என்னுடைய சிறு வயது கனவு தற்போது தகர்ந்துவிட்டது. வெளியில் பர்தா அணிந்து செல்லும் நிலைக்கு என்னுடைய தாய் தள்ளப்பட்டு விட்டார் என வேதனை தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் காதல் திருமணம் செய்துகொண்ட புதுமாப்பிள்ளை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கடேற்றி பகுதியைச் சேர்ந்த விஜீஸ் (32) என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக, தனது பக்கத்து வீட்டை சேர்ந்த சிந்து என்ற பெண்ணை காதலித்து, வீட்டின் எதிர்ப்பை மீறி கடத்தி சென்று திருமணம் செய்துண்டுள்ளார்.
இந்த நிலையில் இரணியல் அருகே முக்கலம்பாடு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்து சென்ற பொலிஸார் உடலை மீட்டு மேற்கொண்ட விசாரணையில் இறந்து கிடந்தது விஜீஸ் என்பதை கண்டறிந்தனர். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமான நான்கு மாதத்தில் புது மாப்பிள்ளை கொலை செய்யப்பட்டிருப்பதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது. கொலைக்கான காரணம் குறித்து பொலிஸாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மீடூ குறித்து தமிழ் திரையுலகில் உள்ள பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. வைரமுத்து, நடிகர் அர்ஜீன், இயக்குநர் சுசி கணேசன், நடிகர் தியாகராஜன் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
சில நடிகைகள் தாங்கள் இதுவரை பாலியல் தொந்தரவுக்கு ஆளானது கிடையாது என பேட்டி அளித்தாலும், பல நடிகைகள் தங்களுக்கு பாலியல் தொடர்பான அழைப்பு வந்ததும் என்றும், ஆனால் அதனை அந்த நொடியே நிராகரித்துவிட்டு சென்றுவிட்டோம் என பேட்டி அளித்துள்ளனர்.
அப்படி தனது திரையுலக பயணத்தில் தனக்கு நடந்தவை குறித்து நடிகை மும்தாஜ் கூறியதாவது, எனது முதல் படம் மோனிசா என் மோனாலிசா. அந்த படத்தையை டி.ராஜேந்தர் இயக்கினார்.
அவர் பெண்களை இதுவரை தொட்டு நடித்தது கிடையாது. நான் எனது முதல் படத்தில் எவ்வித பிரச்சனைகளையும் சந்தித்ததில்லை. ஆனால், அதன்பின்னர் என்னை பாலியல் ரீதியாக அணுகினார்கள்.
அதற்கு தயாராக இல்லை என்று அப்போதே மறுப்பு தெரிவித்து நான் அங்கிருந்து சென்றுவிட்டேன், ஒரு இயக்குநரை நான் செருப்பால் அடித்துள்ளேன். அன்றிலிருந்து அவர் என்னை பார்த்தால் பயப்படுவார்.
இப்போது, நான் அதுகுறித்து பேசவிரும்பவில்லை. ஏனெனில் அன்று எனக்கு பாலியல் ரீதியாக அணுகியவர்கள், இன்று திருந்தியிருக்கலாம். அதனால் என்றோ ஒருநாள் நடந்த சம்பவத்தை நான் மீடூ மூலம் புகாராக தெரிவிக்க விரும்பவில்லை என கூறியுள்ளார்.
லக்னோவில் வரதட்சணை கொடுத்தால் தான் தாலி கட்டுவேன் என கூறி திருமண மண்டபத்தை விட்டு எழுந்து சென்ற மாப்பிள்ளைக்கு மணமகள் குடும்பத்தார் மொட்டை அடித்துள்ளனர்.
குர்ரம்நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு, அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. திருமணம் நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே, மணமகன் வீட்டார் தொடர்ந்து வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
திருமணத்தன்று மணமகனுக்கு பல்சர் பைக் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஆனால், தனக்கு அப்பாச்சி பைக்தான் வேண்டும் என மணமகன் கேட்டதாகத் தெரிகிறது. அதை மாற்றித் தருவதாக மணமகள் வீட்டில் உறுதியளித்த பின்னர், தனக்கு தங்கச் செயின் வேண்டும் எனப் புதிதாக ஒன்றை மணமகன் தரப்பில் கேட்டதாகத் தெரிகிறது.
இதனால், மணமகள் வீட்டார் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். வரதட்சணையாகக் கேட்டவற்றை வழங்காவிட்டால் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் எனக் கூறி மணமகன் வீட்டார், மண்டபத்தை விட்டு வெளியேற முயன்றிருக்கின்றனர்
அவர்களை தடுத்த மணமகள் வீட்டார், மணமகன், அவரின் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோருக்கு மொட்டை அடித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் சேலத்தில் 13 வயது சிறுமியின் தலையை துண்டாக வெட்டியெடுத்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆத்தூர் அருகே உள்ள கிராமம் தளவாய்பட்டி. இங்கு வசிக்கும் சாமிவேல் – சின்னபொண்ணு தம்பதிக்கு ராஜலட்சுமி (13) என்ற மகள் உள்ளார். துறுதுறுவென இருக்கும் ராஜலட்சுமியிடம் அருகில் வசிப்பவர்கள் கேலி கிண்டல் செய்து ஜாலியாக விளையாடுவார்கள்.
அப்படி தான் கார்த்தி (27) என்ற இளைஞரும் கிண்டல் செய்தார். ஆனால் நாளடைவில் சிறுமியை சீண்ட தொடங்கினார் கார்த்தி. நேற்றிரவு 8 மணிக்கு சாமுவேல் வீட்டுக்குள் கார்த்தி முழு போதையில் நுழைந்தார். பின்னர் சிறுமி ராஜலட்சுமியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதையடுத்து சிறுமி அலறிய நிலையில் அங்கு வந்த அவர் தாய் சின்னப்பொண்ணு கார்த்தியை தடுத்தார். அவரை கீழே தள்ளிய கார்த்தி ஆத்திரத்தில் தன்னிடம் இருந்த கத்தியால் ராஜலட்சுமியின் கழுத்தை தனியாக துண்டித்து எடுத்தார்.
பின்னர் தலையை கையில் எடுத்து கொண்டு தெருவில் நடந்து வந்தார் கார்த்தி. இதை பார்த்த கார்த்தியின் மனைவி நேராக ஆத்தூர் டவுன் பொலிசில் கணவனை பிடித்து ஒப்படைத்தார்.
இதனையடுத்து கார்த்தி மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் சாலை நடுவே இருந்த சிறுமியின் தலை, மற்றும் வீட்டில் கிடந்த உடல் இரண்டையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
வவுனியாவில் மாமியார் உயிரிழந்து 24மணி நேரத்திற்குள் மருமகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா தரணிக்குளம், சாஸ்ரிதிகூழாங்குளம் பகுதியில் கடந்த 18ம் திகதி 84 வயதுடைய மாமியார் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
அவரின் இழப்பு தாங்க முடியாமல் சோகத்தில் மூழ்கியிருந்த 53வயதுடைய மருமகள் அன்றைய தினம் இரவு மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுள்ள நிலையில் மூளையிலுள்ள நரம்பில் வெடிப்பு ஏற்பட்டு மறுநாள் 19ஆம் திகதி மருமகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு ஒரு வீட்டில் அடுத்தடுத்து மாமியும் மருமகளும் இருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் அறிவித்துள்ளார்.
அதன்படி இங்கிலாந்து அணிக்கு எதிராக வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஹெரத் அதன்பின்னர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
குறித்த போட்டி காலி மைதானத்தில் நடக்கிறது.
ஹேரத் கடந்த 1999-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அவர் விளையாடிய முதல் போட்டியும் கலே மைதானத்தில் நடைபெற்ற நிலையில் கடைசி போட்டியும் அங்கு தான் நடைபெறவுள்ளது.
40 வயதாகும் ஹேரத் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 430 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இலங்கை அணி சார்பில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமை ஹேரத் வசம் உள்ளது.
இப்பட்டியலில் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஹேரத்தின் ஓய்வு முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.