9 வயது சிறுவனை கழுத்தறுத்து கொன்ற சொந்த சகோதரன் : அதிர்ச்சி காரணம்!!

இந்தியாவின் ஒடீஷா மாநிலத்தில் கழுத்தறுத்து கொடூரமாக கொல்லப்பட்ட 9 வயது சிறுவன் தொடர்பில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

ஒடீஷாவின் போலங்கிர் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்குள்ள நதிக்கரை ஒன்றில் இருந்து சிறுவனின் தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், அது மாயமானதாக பெற்றோரால் புகார் அளிக்கப்பட்ட 9 வயது கான்ஷியாம் ராணா என்ற சிறுவனின் தலை என தெரியவந்தது.

இதனையடுத்து பொலிசார் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களை விசாரித்துள்ளனர். இதில் சிறுவனின் சகோதரன் சம்பாபன் ராணா அளித்த மொழ்யில் பொலிசாருக்கு சந்தேகம் எழவே, அவரை கைது செய்த பொலிசார் அவருடன், அவரது மாமாவையும் கைது செய்து விசாரித்துள்ளனர்.

இருவரும் மந்திரவாதத்தில் நாட்டம் கொண்டவர்கள் எனவும், இதனால் துர்க்கா தேவிக்கு பலியிடும் நோக்கில் சிறுவனை கடத்திச் சென்றதாகவும்,

பூஜை அன்று சிறுவனை கழுத்தை துண்டித்து பலியிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். சிறுவன் மாயமானதாக தெரியவந்த 3 நாட்களுக்கு பின்னரே பெற்றோர் இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாருக்கு புகார் அளித்துள்ளனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தலையில்லாத சிறுவனின் உடலை பொலிசார் மீட்டுள்ளனர். தலையை முட்புதர் ஒன்றில் இருந்தும் கைப்பற்றியுள்ளனர். தற்போது கைதான இருவர் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

விமானத்தின் இறக்கை மீது நின்றபடி வீடியோ எடுத்த நபருக்கு நேர்ந்த கதி!!

கனடாவில் விமானம் ஒன்றின் இறக்கைமீது நின்றபடி வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ஒரு நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் உள்பகுதியில், Westwold பகுதிக்கு அருகில் wing walking எனப்படும் விமானத்தின் மீது நடக்கும் செயலில் ஈடுபட்டவாறே வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார் ஒருவர்.

திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழக்க, நிலை தடுமாறிய அவர் விமானத்தின் இறக்கையிலிருந்து கீழே விழுந்தார். விமானம் தரையை நெருங்கிக் கொண்டிருந்ததால் அவருக்கு தனது பாராசூட்டை திறக்கக்கூட நேரமில்லை.

வயல் ஒன்றில் முகங்குப்புற விழுந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முடிவுக்கு வந்த 9 வயது சிறுமியின் மரணப் போராட்டம் : நெகிழ்ச்சி சம்பவம்!!

அமெரிக்காவில் மூளைச் சாவு அடைந்த சிறுமி இயந்திரங்களின் உதவியுடன் உயிர் வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அவர் இயற்கையாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி பேடன் சம்மன்ஸ். இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூளைச் சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர், இயந்திரங்களின் உதவியுடன் பேடன் சம்மன்ஸ் உயிர் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு கொடுக்கப்பட்டு வந்த இயந்திரங்களின் உதவியை நிறுத்த மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஆனால் இதனை விரும்பாத சிறுமியின் பெற்றோர், இயந்திரங்களை அப்புறப்படுத்தக் கூடாது என்றும், அவர் மூளைச் சாவு அடைந்திருந்தாலும் அவரை உயிருடன் தான் வைத்திருக்க வேண்டும் என்று நீதிமன்றம் சென்று ஆணை பெற்று வந்தனர்.

இந்நிலையில், டெக்சாஸ் மாகாணத்தின் சட்டத்தின்படி மூளை செயல்பாடு நின்றுவிட்டால், அந்நபர் மரணமடைந்தவராகவே கருதப்படுவார் என்பதால், சிறுமி பேடன் சம்மன்ஸ் இயற்கையாக மரணமடைந்துவிட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளார்.

40 வயதில் 44 குழந்தைகள் : 18 ஆண்டுகள் பிரசவம் கணவனுடன் நரக வாழ்க்கை வாழ்ந்த பெண்!!

உகாண்டா நாட்டிலேயே அதிக குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணி மரியம் நபடான்ஸி ஆவார். முகோனோ மாவட்டத்தில் வசித்து வரும் இப்பெண்மணி வாழ்நாளில் 18 ஆண்டுகள் பிரசவ காலத்திலேயே கழிந்துவிட்டது.

40 வயதான இவருக்கு 44 குழந்தைகள்! இவற்றில் 6 இரட்டைக் குழந்தைகள், 4 முறை மூன்று குழந்தைகள், 3 முறை நான்கு குழந்தைகள், 8 தனிக் குழந்தைகள் என்று பிரசவித்திருக்கிறார்.

44 குழந்தைகளில் தற்போது 38 குழந்தைகள் உயிருடன் இருக்கின்றனர். சிற்றன்னையின் பராமரிப்பில் வளர்ந்த மரியத்துடன் பிறந்த சகோதரர்கள் 4 பேருக்கு அவரது சிற்றன்னையே விஷம் வைத்து கொலை செய்துவிட்டார்.

மரியம்முக்கு 12 வயது இருக்கும் போது 28 வயது நபருடன் திருமணம் செய்துவைக்கப்பட்டது. திருமணம் முடிந்த பின்னர், தினமும் கணவர் இவரை அடித்து உதைத்துள்ளார்.

தினமும் குடித்துவிட்டு ரகளை. நரக வாழ்க்கை. விருப்பம் இல்லாவிட்டாலும் மறுக்க முடியாது, குடும்பம் நடத்திதான் ஆக வேண்டும் என்ற நிலை. வீட்டில் இருக்கும் பலவேலைகளை செய்வது மட்டுமல்லாமல், வெளியில் சென்றும் வேலை செய்வேன்.

இதில் பெரும்பாலும் நான் கர்ப்பத்தோடுதான் இருப்பேன். ஆனாலும் குழந்தைகள் மூலமே கொஞ்சம் மகிழ்ச்சியும் வாழ்க்கை மீதான பற்றும் எனக்கு ஏற்பட்டது என்கிறார் மரியம். எனது கணவருக்கு நான் மட்டும் மனைவி அல்ல. பல மனைவிகள் உள்ளனர்.

ஆண்டுக்கு ஒருமுறை இரவில்தான் இங்கே வருவார். குடும்பம் நடத்துவார். அதிகாலை குழந்தைகள் கண் விழிப்பதற்குள் கிளம்பிவிடுவார். என் மூத்த மகனே 13 வயதில்தான் அவன் அப்பாவைப் பார்த்தான். என்னுடைய பல குழந்தைகள் அவரை இதுவரை பார்த்ததில்லை.

1994-ம் ஆண்டு 13 வயதில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அதற்குப் பிறகு 2, 3, 4 என்று குழந்தைகள் பிறந்துகொண்டே இருந்தன. என் அப்பாவுக்குப் பல மனைவிகள் மூலம் 45 குழந்தைகள் பிறந்தன.

25-வது குழந்தை பிறந்த பிறகு மருத்துவரிடம் சென்றேன். வயிற்றில் உருவான கருவைக் கலைக்கச் சொன்னேன். பல கருக்கள் இருந்ததால் கலைப்பது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று கூறிவிட்டார். இப்படி ஒவ்வொரு முறை வாந்தி எடுக்கும்போதும் மருத்துவரிடம் செல்வேன்.

அவரும் இது மரபணு பிரச்சினை. அதிகமான சினை முட்டைகள் உருவாகின்றன, கலைக்க முடியாது என்று கூறிவிடுவார். 44-வது குழந்தைக்குப் பிறகு கர்ப்பப்பையை நீக்கிவிட்டேன்.

துயரத்திலும் பயணிக்கும் அன்றாடம் வாழ்க்கை
ஒரு நாளைக்கு 10 கிலோ சோள மாவு, 4 கிலோ சர்க்கரை, 3 பார் சோப் எங்கள் குடும்பத்துக்குத் தேவைப்படுகிறது.

பணக்கஷ்டம் இருந்தாலும் அன்றாடம் வேலைக்கு சென்று எனது பிள்ளைகளுக்கு உணவு அளித்து வருகிறேன். இதுவரை பட்டினி போட்ட கிடையாது. கிடைக்கும் வேலைக்கு சென்று எனது குடும்பத்தை சந்தோஷமாக கவனித்து வருகிறேன் என்கிறார் மரியம்

பாலியல் புகாரில் சிக்கும் நடிகர் சிம்பு? பிரபல நடிகையின் பதிவு!!

கெட்டவன் மீ டூ என்று நடிகை லேகா வாஷிங்டன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் லேகா வாஷிங்டன்.

பாலிவுட் சென்ற இடத்தில் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார். மேலும் தமிழ் திரையுலகில் பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களையும் வெளியிட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார்.

இந்நிலையில் அவர் “கெட்டவன்” மீ டூ என்று ட்வீட் செய்துள்ளார். சிம்புவின் கெட்டவன் படத்தில் நடித்தவர் லேகா வாஷிங்டன். இந்நிலையில் அவர் கெட்டவன் என்றதும் சிம்புவை தான் கூறுகிறார் என்று நினைத்து அவரின் ரசிகர்கள் கோபம் அடைந்து லேகாவை விளாசி வருகின்றனர்.

கையில் படங்கள் இல்லாத லேகா வேண்டுமென்றே சிம்பு பெயரை வைத்து விளம்பரம் தேட முயல்கிறார் எனவும் ரசிகர்கள் டுவீட் செய்து வருகிறார்கள்.

மாணவியின் உடையை கழட்ட சொன்ன ஆசிரியர் : சரமாரியாக அடித்த பெற்றோர்.. வைரல் வீடியோ!!

தமிழகத்தின் திருவண்ணாமலையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை மாணவியின் உறவினர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

செங்கம் அருகே உள்ள மேல்நாச்சிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக இருப்பவர் கண்ணன். இவர் ஆயுதபூஜை விடுமுறைக்கு முன் பத்தாம் வகுப்பு மாணவியை சிறப்பு வகுப்புக்கு அழைத்து அவரது ஆடையை விலக்க சொன்னதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்ல மாட்டேன் என அந்த மாணவி அடம்பிடித்த நிலையில் பெற்றோரிடம் அனைத்தையும் கூறியுள்ளார்.

இதையடுத்து மாணவியின் பெற்றோரும், உறவினரும் அவர் பள்ளிக்கு சென்று வகுப்பறையில் இருந்த ஆசிரியர் கண்ணனை சரமாரியாக தாக்கினர்.

இதில் மண்டை உடைந்து பலத்த காயமடைந்த கண்ணன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வெளிநாட்டில் இலங்கை குடும்பத்திற்கு கிடைத்த பேரதிர்ஷ்டம் : ஆபத்திலிருந்து தப்பியது எப்படி?

நியூசிலாந்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தவிருந்த குடும்பம் ஒன்றுக்கு அந்நாட்டில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது. 8 வருட போராட்டத்தின் பின்னர் புகலிடக் கோரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த குடும்பம் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக போராடி நியூசிலாந்தில் தொடர்ந்து தங்குவதற்கு சந்தர்ப்பம் பெற்றுள்ளது.

2010ஆம் ஆண்டு குறித்த குடும்பம் நியூசிலாந்தின் Queenstown பகுதியில் குடியேறியுள்ளது. குடும்பத்தின் தலைவியான தாயார் தினேஷா அமரசிங்க நியூசிலாந்தில் மருத்துவ மாணவியாக பதிவு செய்துள்ளார்.

அவருக்கு 10 ஆண்டு தொழில் அனுபவம் உள்ளதோடு, நியூசிலாந்தின் திறமையான புலம்பெயர்ந்தோர் பிரிவின் கீழ் 2011ஆம் ஆண்டு முதல் ஆக்லாந்தில் சமையல் கலைஞராக பணியாற்றி வந்தார்.

2011 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்த குடும்பம் குயின்ஸ் டவுனுக்கு மாற்றப்பட்டது, அங்கு பிரபலமான Lone Star உணவகத்தில் தினேஷா சமையல் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார்.

அவரது விசாவில் கணவருக்கு திறந்த பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதற்கமைய அவர் New World சுப்பர் மார்க்கெட்டில் பணி புரிந்ததோடு, டெக்ஸி சாரதியாகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

2014ஆம் ஆண்டு தினேஷா தவறி விழுந்தமையினால் அவரது இடுப்பு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது காலில் வலி இருந்த போதிலும், சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தமையினால் அவர் தொடர்ந்து பணி செய்து வந்துள்ளார். எனினும் 2015 ஆம் ஆண்டு ACC என வருத்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு மே மாதம் அவரது தனது மூளையை பரிசோதித்து பார்த்த போது அவர் ஸ்களீரோசிஸ் (sclerosis) எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் தினேஷாவினால் பணி புரிய முடியவில்லை என்பதால், அவரது திறமையான தொழிலாளிக்கான தற்காலிக விசா நிராகரிக்கப்பட்டது. இதனால் அவரது கணவரால் வேலை செய்ய முடியாது என கூறப்பட்டதுடன், அவரது குடும்பத்தினர் கடந்த வருடம் நவம்பர் மாதம் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

பல்வேறு சட்ட சிக்கல்கள் காரணமாக அவர்கள் 2013ஆம் ஆண்டு விண்ணப்பித்த நிரந்தர விசா தாமதமாகியதாக கூறப்படுகின்றது. எனினும் அவர்களை தொடர்ந்து நியூசிலாந்தில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை அவரது வழக்கறிஞர் மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் இந்த குடும்பத்தை நியூசிலாந்தில் தங்க வைப்பதற்கு அந்த நாட்டு மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.

அதற்கமைய அவர்களது முறையீடு வெற்றி பெற்றுள்ளதுடன், Let’s Eat என திட்டத்தில் தினேஷாவுக்கு வேலை கிடைத்துள்ளது.

“தங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. நியூசிலாந்தில் 450 பேர் தங்களுக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 8 மாதங்கள் எங்கள் குடும்பம் குறித்து அக்கறை செலுத்தினார்கள். இந்தக் காலப்பகுதியில் நாட்டு மக்களே தமக்கு உணவளித்தனர்.

என்னால் இவற்றினை மறந்து விட முடியாது. ஒரு வருட போராட்டத்தின் பின்னர் இறுதியாக குடிவரவு அமைச்சர் நியூசிலாந்தில் தங்குவதற்கு அனுமதி வழங்கிவிட்டார்.

மக்கள் மற்றும் சட்டத்தரணி என அனைத்து நல்ல உள்ளங்களுக்கு நன்றி. மீண்டும் எனது இரண்டு பிள்ளைகளுக்கும் வாழ்க்கை கிடைத்துவிட்டது. எனது கணவருக்கு சாரதி வேலை மீண்டும் கிடைத்து விட்டது” என தினேஷா உணர்ச்சிவசத்துடன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இளைஞனின் அபார கண்டுபிடிப்பு : பலரும் வியப்பு!!

இலங்கை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இளைஞன் ஒருவர் மிகப்பெரிய நடமாடும் கோளரங்கம் ஒன்றை வெற்றிகரமாக அமைத்துள்ளார்.

பதுரலிய பிரதேசத்தை சேர்ந்த தரங்க குசும் சிறிகே என்ற இளைஞனே இந்த கோளரங்கத்தை தயாரித்துள்ளார்.

350 பேர் அமர்ந்து இந்த கோளரங்கத்தை பார்வையிடக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய கோளரங்கமாக இந்த கோளரங்கம் காணப்படுகின்றது.

பதுரலிய பிரதேசத்தை சேர்ந்த இந்த இளைஞன் தனது சிறு வயது முதல் விண்வெளி தொடர்பான தகவல்கள் தேடுவதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளார்.

எனினும் இதற்கு முன்னரே இதனை நிர்மாணிப்பதற்கு அவரது பொருளாதார பின்னணி போதுமானதாக இருக்கவில்லை.

இந்நிலையில் கொழும்பில் அமைந்துள்ள இலங்கையின் பிரதான கோளரங்கத்தை பார்வையிட சென்ற இந்த இளைஞனுக்கு நடமாடும் கோளரங்கம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இந்த யோசனைக்கு அவரது நண்பர்கள் சிரித்த போதிலும், தான் எப்படியாவது இதனை நிர்மாணித்திட வேண்டும் என தீவிரமாக செயற்பட்டுள்ளார்.

470 இரும்பு துண்டுகளை பயன்படுத்தி நடமாடும் கோளரங்கத்தை இந்த இளைஞன் நிர்மாணித்துள்ளார்.

இவ்வாறு நிர்மாணிக்கப்பட்டுள்ள கோளரங்கத்தை விரும்பிய இடத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

அதற்கமைய இலங்கையின் பின்தங்கிய கிராமங்களுக்கு இந்த கோளரங்களை கொண்டு சென்று மாணவர்கள் பார்வையிடுவதற்கான வசதிகளை அந்த இளைஞன் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

இளைஞனின் அபார திறமை குறித்து இலங்கை வாழ் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

நெஞ்சை நெகிழ வைத்த தாய் பாசம் : உயிரை தியாகம் செய்த தனயன்!!

குருணாகலில் தாய் உயிரிழந்தமையை தாங்கிக் கொள்ள முடியாத மகன் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

நிக்கவரெட்டியில் தாயின் உடலை நல்லடக்கம் செய்த பின்னர் 62 வயதான மகன் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார்.

குறித்த மகன் நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில் அவருடைய சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் திருமணமாகாதவர் என தெரிவிக்கப்படுகிறது.

நிக்கவரெட்டிய பிரதேசத்தை சேர்ந்த ஷெல்டன் பீட்டர் பெர்னாண்டோ என்பவரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.

உயிரிழந்தவர் தனியாக வீடு ஒன்றை கட்டி தாயின் தேவைகளை நிறைவேற்றி வந்துள்ளார்.

100 வயதான தாய் உயிரிழந்த பின்னர் இறுதி அஞ்சலி நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர் தற்கொலை செய்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை புதிய முறையில்!!

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முறைமையை மாற்றுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

உடவலவ பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

வழமையாக நடாத்தப்படும் புலமைப் பரிசில் பரீட்சையின் மூலம் உதவித் தொகைக்கான மாணவர்களை தெரிவு செய்வதற்கும், தரம்வாய்ந்த பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கு தனியாக வேறு ஒரு பரீட்சையை நடாத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் அகில விராஜ்காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் போட்டித் தன்மை குறைவடைவதாகவும், இது குறித்து ஆய்வு செய்ய குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

பாடசாலை நடைபெறும் காலத்தில் பிரத்தியேக வகுப்புக்களை நடாத்த தடை விதிக்கும் அமைச்சரவைப் பத்திரமொன்றை அடுத்து வரும் நாட்களில் முன்வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

100 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி : மூவர் படுகாயம்!!

லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து தலவாக்கலை – டயகம பிரதான வீதியில் நாகசேனை நகர பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

நாகசேனையிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட மூவர் பயணித்துள்ளதாகவும், மூவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் இளம் பெண்களுக்கு ஆபத்து : ஆபாச இணையத்தில் கசியும் அந்தரங்க படங்கள்!!

சமூக வலைத்தளமான பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றி அந்தரங்க புகைப்படங்களை எடுத்துக் கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அழகாக இளைஞன் ஒருவரின் புகைப்படத்தை பேஸ்புக் முகப்படமாக பதிவிட்டு, பல இளம் பெண்களை ஏமாற்றும் நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இளம் யுவதிகளை ஹோட்டல்களுக்கு அழைத்து சென்ற குற்றச்சாட்டில் இந்த நபர் தெஹிவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர் நுவரெலியாவை சேர்ந்த 26 வயதான இளைஞன் எனவும் அவர் பல பெண்களை ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் அழகாக இளைஞனின் புகைப்படங்களை பேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அதற்கு தனது தொலைபேசி இலக்கத்தையும் இணைத்துள்ளார். பின்னர் பெண்களுக்கு நட்பு அழைப்பு விடுத்து பின்னர் அவர்களின் நிர்வாண புகைப்படங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.

அந்த புகைப்படங்களை தனது ஆபாச இணையத்தளத்திலும் பதிவிட்டுள்ளார்.

சந்தேக நபர் பின்னர் அந்த பெண்களை சந்திக்க வேண்டும் என கூறி ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துள்ளார். அவ்வாறு ஹோட்டல் வர விரும்பாத பெண்களின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதாக அச்சுறுத்தி ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

சந்தேக நபருக்கு நிரந்தர தொழில் இல்லாமையினால் கொழும்பிலுள்ள ஆடை கடைகளில் தொழில் செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.

இவ்வாறான ஆபத்தான செயற்பாடுகளில் சிக்கிக் கொள்ளாமல் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

கொழும்பில் இளம் பெண் மீது கொடூர தாக்குதல் நடத்திய கும்பல் : வெளியான காணொளியால் சர்ச்சை!!

கொழும்பில் இளைஞன் மற்றும் பெண் ஒருவரை கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நுகேகொட பிரதேசத்தில் தனியார் வகுப்புக்கு அருகில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இளம் பெண் ஒருவருடன் சென்ற இளைஞன் ஒருவரை இன்னும் சில இளைஞர் இணைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

ஹெல்மட் உதவியுடன் கொடூரமான முறையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இளைஞனுடன் சேர்ந்து குறித்த பெண்ணும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

வவுனியாவில் கார், முச்சக்கர வண்டி மோதி விபத்து : மூவர் படுகாயம்!!

வவுனியா தாண்டிக்குளத்தில் காரும் முச்சக்கர வண்டியும் இன்று (22.10) நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாண்டிக்குளம் A9 வீதியில் சாரதி பயிற்சியில் ஈடுபட்டிருந்த முச்சக்கர வண்டியானது, வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த காருடன் நேருக்கு நேர் மோதியதன் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

காதலி இறந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட காதலன் : சோக சம்பவம்!!

காஞ்சிபுரத்தில் காதலி இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பியை சேர்ந்த உதயகுமார் என்பவரின் மகன் சுசீந்திரன் (20), தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார்.

அதேகல்லூரியில் படித்து வந்த ஒரு பெண்ணை சுசீந்திரன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண் உடல்நிலை சரியில்லாமல் இறந்துபோனார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுசீந்திரன் 12ம் தேதி தூக்குபோட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து அவரை மீட்ட குடும்பத்தினர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று சுசீந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது இச்சம்பவம் குறித்து பாலுச்செட்டிசத்திரம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோடிக்கணக்கான சொத்து : ஆனாலும் பிச்சையெடுக்க தயாராகும் இளம்பெண்கள்.. நெகிழ்ச்சி பின்னணி!!

தமிழகத்தின் திருவண்ணாமலையை சேர்ந்த தொழிலதிபரின் மகள்கள் 2 பேர் துறவிகளாக மாறும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலதிபர்களான கவுதம்குமார், அரவிந்த் குமார். 2 பேரும் சகோதரர்கள். ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள். கவுதம்குமாருக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். 2-வது மகள் பிரெக்ஷா (26). அரவிந்த் குமாருக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். 2-வது மகள் ஸ்வேதா (26). பிரெக்ஷாவும், ஸ்வேதாவும் ஜெயின் மதத்தில் துறவு வாழ்க்கையை மேற்கொள்ள உள்ளனர்.

இது குறித்து இருவரின் தந்தையும் பேட்டியளித்தனர். அவர்கள் கூறுகையில், எங்கள் மகள்கள் இருவரும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். பிரெக்ஷா எம்.பி.ஏ. படித்துள்ளார். ஸ்வேதா சி.ஏ. படித்துள்ளார்.

இருவரும் 22 வயது இருக்கும்போது ஜெயின் மதத்தில் துறவரம் போகப்போவதாக கூறினர். நாங்கள் அதை முதலில் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் துறவரம் செல்வதிலேயே உறுதியாக இருந்தனர்.

துறவரம் செல்வதில் கட்டுப்பாடுகள் அதிகம் என்று குடும்பத்தினர் எடுத்துக்கூறியும் அவர்கள் முடிவை மாற்றி கொள்ளவில்லை. பின்னர் நாங்கள் அவர்களின் முடிவை ஏற்றுக்கொண்டோம். ஜெயின் மதத்தில் துறவிகள் ஆக வேண்டும் என்றால் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.

எங்கு சென்றாலும் நடந்தே செல்ல வேண்டும். பிச்சை எடுத்து தான் சாப்பிட வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் உணவு உண்ணக்கூடாது. 3 ஆடைகள் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.

3 மாதத்திற்கு ஒருமுறை தங்களது தலைமுடியை தாங்களாகவே எடுத்துவிட வேண்டும். வெயிலோ, மழையோ, குளிரோ வேறு உடைகளை அணியவே கூடாது என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் உள்ளது. இவை அனைத்தையுமே எங்களது மகள்கள் ஏற்றுக்கொண்டனர் என கூறியுள்ளனர்.

இவர்களை வழியனுப்பும் விழா திருவண்ணாமலை மீனாட்சி திருமண மண்டபத்தில் 26-ந் திகதி நடக்கிறது. இதையடுத்து நவம்பர் 11-ஆம் திகதி சென்னை மாதவரத்தில் இவர்களின் குரு ஆச்சார்யா ஸ்ரீமகாஸ்ரமன் ஆசியோடு ஆன்மிக வாழ்க்கையில் இருவரும் பயணிக்க உள்ளனர்.