3 பிள்ளைகள் மரணமடைந்தது தெரியாமல் வெளிநாட்டில் இருந்து வந்த தந்தை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் 3 பிள்ளைகளும் ஆற்றில் மூழ்கி இறந்தது தெரியாமல் உறவினர்களின் அவசர அழைப்பை ஏற்று வெளிநாட்டில் பணிபுரியும் தந்தை நாடு திரும்பியுள்ளார்.

கேரளாவின் செறுவத்தூர் பகுதி மொய்தீன் மற்றும் கதீஜா தம்பதிகளே, திருமணம் முடிந்து நீண்ட 10 ஆண்டுகளுக்கு பின்னர் பிறந்த பிள்ளைகள் மூவரை ஆற்றுப் பெருவெள்ளத்தில் தொலைத்தவர்கள்.

ஐக்கிய அமீரகத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் மொய்தீன், சொந்த மக்கள் மூவரும் இறந்த கதை தெரியாமல் உறவினர்களின் அவசர அழைப்பை ஏற்று நேற்று நாடு திரும்பியுள்ளார்.

மொய்தீன் மற்றும் கதீஜா தம்பதிகளுக்கு ஷாகீர்(20), ஜுமானா(14) மற்றும் ஜாஸிம்(12) என மூன்று பிள்ளைகள். அவசர சிகிச்சையில் மனைவி உள்ளார் என உறவினர்கள் தொலைபேசி மூலம் மொய்தீனிடம் தெரிவித்ததை அடுத்தே அவர் நாடு திரும்பியுள்ளார்.

வீட்டுக்கு வந்ததும் தமது பிள்ளைகள் தொடர்பில் விசாரித்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாடசாலை விடுமுறையை அடுத்து உம்மத்தூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர் கதீஜாவும் அவரது மூன்று பிள்ளைகளும்.

இந்த நிலையில் அருகாமையில் உள்ள ஆற்றில் மூவரும் குளிக்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மழைக்காலம் என்பதால் அந்த ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதில் சிக்கிய மூவரும் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஷாகிர் மற்றும் ஜுமானாவின் சடலங்கள் மாலை நேரம் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டது. இரவு வெகுநேரம் வரை தேடிய நிலையில் ஜாஸிமின் சடலமும் மீட்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைரமுத்து பற்றி ஏ.ஆர் ரகுமான் என்னிடம் கேட்டார் : அவர் அப்படிப்பட்டவர் தான்.. சகோதரி பரபரப்புப் பேட்டி!!

வைரமுத்து சர்ச்சை குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் சகோதரி ஏ.ஆர் ரைஹானா பேசியுள்ளார். பாடலாசிரியர் மற்றும் கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்தார் என பாடகி சின்மயி புகார் தெரிவித்தார்.

இதோடு வைரமுத்து மீது சில பெண்கள் கூறிய பாலியல் புகார் தொடர்பான பதிவுகளை டுவிட்டரில் வெளியிட்டு சின்மயி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரைஹானா ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், அவ்வளவு பெரியவர் பற்றி எப்படி நான் சொல்வது. வைரமுத்து அப்படி இப்படி நடப்பது சினிமாவில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். சுமார் 3 பேர் இதுபற்றி என்னிடம் கூறியிருக்கிறார்கள். ஆனால் ரகுமானிற்கு இது தெரியாது.

சின்மயி சர்ச்சை ஏற்படுத்திய பிறகு ரகுமான் என்னிடம் இது உண்மையா? என கேட்டார் என ரைஹானா கூறியுள்ளார்

கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது இளம்தம்பதிக்கு நேர்ந்த சோகம் : அனாதையான பிஞ்சுக்குழந்தை!!

திண்டிவனம் அருகே நடந்த கார் விபத்தில் இளம்தம்பதியினர் உட்பட 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குன்றத்தூரை சேர்ந்த விஜயகுமார் (29), தொடர் விடுமுறை காரணமாக தன்னுடைய 8 மாத குழந்தைக்கு மொட்டையடிக்க தேனியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு செல்ல ஏற்பாடு செய்துள்ளார்.

அதன்படி, தன்னுடைய மனைவி சபரி(25), மகள் நானி, மாமியார் ராமலட்சுமி(45), நண்பர் ஜான்சாமுவேல்(29), அவரது மனைவி வின்சிமேரி(24) ஆகியோருடன் ஒரு காரிலும், மற்றொரு காரில் விஜயகுமாரின் நண்பர்களும் புறப்பட்டனர்.

தேனியில் மொட்டையடித்துவிட்டு, ஊட்டியில் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்து விட்டு, நேற்றைக்கு முன்தினம் சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.

அப்போது விஜயகுமார் குடும்பத்துடன் வந்து கொண்டிருந்த கார் திண்டிவனம் அருகே சாலையில் ஓரமாக பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது.

விஜயகுமார், சபரி, ராமலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதேசமயம் ஜான்சாமுவேல், வின்சிமேரி, கார் ஓட்டிவந்த அருண் மற்றும் நானி பலத்த காயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து நடந்ததற்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கூட்டு துஸ்பிரயோகத்திலிருந்து தப்பிக்க நிர்வாணமாக 3வது மாடியிலிருந்து குதித்த இளம்பெண்!!

ஜெய்ப்பூரில் கூட்டு துஸ்பிரயோகத்திலிருந்து தப்பிக்க பெண் ஒருவர் நிர்வாணமாக 3-வது மாடியிலிருந்து குதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர் மாநிலம் மோகனா பகுதி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டார் வேகமாக வெளியில் வந்து பார்த்த பொழுது பெண் ஒருவர் 3-வது மூன்றாவது மாடியிலிருந்து நிர்வாணமாக குதித்துள்ளார்.

உடனே அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து விரைந்து வந்த பொலிஸார் உடனடியாக சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் சம்மந்தப்பட்ட 23 வயதான பெண் நேபாளத்தை சேர்ந்தவர் என்பதும், கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக தன்னுடைய மாமியாரை சந்தித்து அழைப்பிதழ் கொடுக்க வந்துள்ளார். பாரத் அடுக்குமாடி குடியிருப்பில் யாரும் இல்லாத போது தனியாக இருந்த அந்த பெண்ணை அதே குடியிருப்பில் வசிக்கும் இரண்டு இளைஞர்கள் தூக்கி சென்று கூட்டு துஸ்பிரயோகம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

ஜெய்புரியா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உள்காயம் காரணமாக எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் தப்பிய குற்றவாளிகள் கமல் (24), லோகேஷ் (18) இருவரையும் கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்த பொழுது இருவரும் மது அருந்தியிருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டதில், இரண்டு இளைஞர்களும் அடிக்கடி பல பெண்களை அவர்களுடைய அறைக்கு அழைத்து வந்ததாக தெரியவந்துள்ளது. தற்போது இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் கைக்குண்டு உட்பட ஆயுதங்கள் மீட்பு!!

வவுனியா கனகராயன்குளம் பகுதியிலிருந்து நேற்று(22.10) இரவு ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்வியடம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு 7 மணியளவில் கனகராயன்குளம், மன்னகுளம் பகுதியில் வீதி ஓரத்தில் கைக்குண்டு, மகசின் அதற்குரிய ரவைகள் 30 என்பன இருப்பதாக பொலிசாருக்கு பொது மக்களினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் அதனை பார்வையிட்டுள்ளதுடன் எவ்வாறு எங்கிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது என்பது தொடர்பாக அப்பகுதியில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகத் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இளைஞன் மீது கத்திக்குத்து!!

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் நேற்று(21.10) இரவு 9 மணியளவில் இளைஞன் ஒருவர் மீது கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு ஆச்சிபுரம் பகுதியில் வசித்து வரும் 28 வயதுடைய இளைஞன் மீது இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட கத்தி குத்து தாக்குதலில் காயமடைந்த இளைஞன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடாத்தியவர்கள் தப்பிச் சென்றுவிட்ட நிலையில் அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் தனியார் பேருந்து தடம்புரண்டு விபத்து : மூவர் படுகாயம்!!

வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதியில் பயணித்த தனியார் பேருந்து தடம் புரண்டதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் நேற்று(22.10) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது.

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதி ஊடாக வவுனியா நகர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து மடுகந்தப் பகுதியில் பயணித்த போது வேகக் கட்டுப்பட்டை இழந்து தடம் புரண்டது.

இதேவேளை, திருத்த வேலைக்காக மடுக்கந்த பகுதிக்குச் சென்று வந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது. மேலும், இதில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காதில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்தால் இவ்வளவு பாதிப்புகள் வருமா?

பொதுவாக நாம் அனைவருமே வாரம் ஒரு முறை தலை குளிக்கும் போது, காதில் சேரும் மெழுகு போன்ற அழுக்களை குளித்து முடித்ததும் சுத்தம் செய்துவிடுவார்கள்.

சிலருக்கு காதில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்த பிறகு ஏதோ ஒரு புதிய உணர்வு தோன்றியது போலவும், சப்தங்கள் நன்றாக கேட்பது போன்றும் உணர்வார்கள்.

ஆனால், நமது காதில் உண்டாகும் அந்த மெழுகு போன்ற அழுக்கை நீக்க வேண்டாம். ஏனெனில் அதுதான் காதின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யக் கூடாது என்பதற்கு என்ன காரணம்?

நமது காதில் அழுக்கு போன்று உண்டாகும் அந்த மெழுகு போன்ற பொருளானது, கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றின் மூலம் உருவாகிறது.

நாம் அனைவரும் அழுக்கு என்று நினைத்து சுத்தம் செய்து அகற்றும் இந்த மெழுகு போன்ற பொருள் தான் நமது காதினை பாதுகாக்கும் காவலனாக இருக்கிறது.

நாம் அதிக சப்தம் மற்றும் பாடல்கள் கேட்பதால், நமது காதை அது வலுவாக பாதிக்கும். எனவே அதிக சப்தம் மற்றும் பாக்டீரியா போன்றவற்றிடம் இருந்து நமது காதை காக்கும் தடுப்பானாக இந்த மெழுகு போன்ற பொருள் பயன்படுகிறது.

பட்ஸ் அல்லது குச்சி போன்றவற்றை பயன்படுத்தி காதினை சுத்தம் செய்வதால், அந்த மெழுகு போன்ற பொருள் காதின் உட்புறத்தில் கெட்டியாக படர்ந்து பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும். எனவே இந்த முறையை நாம் முதலில் நிறுத்த வேண்டும்.

காதில் உருவாகும் இந்த மெழுகு போன்ற பொருள் அதிகரிக்கும் போது, காதின் மேல் பகுதியில் வெளிப்புறங்களில் தோன்றும். அப்போது மட்டும் காதின் வெளிப்புறத்தில் ஒரு சிறிய பஞ்சு, துணி, தண்ணீர் ஆகியவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும்.

கறிவேப்பிலை குச்சி, தீக்குச்சி போன்ற ஆபத்தான பொருட்களை பயன்படுத்தி நமது காதை சுத்தம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனால், காதின் உட்பகுதியில் இருக்கும் மென்மையான ஜவ்வு பகுதி பாதிக்கப்படுகிறது.

வவுனியா கோவில்குளத்தில் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்!!

வவுனியா கோவில்குளத்தில் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் இன்று (21.10) கிராம உத்தியோகத்தர் பி.பத்மரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.

கோவில்குளம் கிராம உத்தியோகத்தரின் காரியாலய மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா நகரசபை உறுப்பினரும், வன்னி மாவட்டத்தின் புளொட் அமைப்பின் பொறுப்பாளருமான க.சந்திரகுலசிங்கம் கலந்துகொண்டிருந்தார்.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் சிறுவர்களின் கலைநிகழ்வுகளும் முதியவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம் பெற்றிருந்தது.

வவுனியா கோவில்குளத்தில் நூறு வயதையும் கடந்து வாழ்ந்து வரும் வயோதிபத் தாயராகிய சண்முகம் மீனாட்சி விசேடமாக கௌரவிக்கப்பட்டிருந்தார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.க.சந்திரிக்கா கவிஞரும் எழுத்தாளருமான தமிழ்கவி அவர்களினால் கௌரவிக்கப்பட்டிருந்தார்.

கோவில்குளம் கிராம உத்தியோகத்தர் பி.பத்மரஞ்சனின் சேவையை பாராட்டி அவருக்கான கௌரவிப்பு நிகழ்வும் றொக்கற் விழையாட்டு கழகத்தின் தலைவர் எஸ்.நிரோசனால் நடத்தப்பட்டது.

நிகழ்வில் நூறு வயோதிபர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டு இலவச மூக்கு கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்டவர்களினால் சிறுவர்களுக்கு மற்றும் முதியவர்களுக்கு அன்பளிப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர் ரி.கே.இராஜலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், சமுதாய பொலிஸ் பொறுப்பதிகாரி சி.எம்.அரவிந்த, கிரம உத்தியோகத்தர் எம்.செல்வராசா மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா திறந்த பல்கலைக்கழகத்தில் பயிற்சிநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல்!!

வவுனியா திறந்த பல்பகலைக்கழகத்தில் பயிற்சியைப் பூர்த்தி செய்த 82 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் வவுனியா கிளையினால் நடத்தப்பட்ட ஆங்கிலம், மனிதவளமுகாமைத்துவம் உள்ளிட்ட குறுகிய கால சான்றிதழ் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த 82 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின், வவுனியா கற்கை நிலைய உதவிப் பணிப்பாளர் வ.திவாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மீன்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக முதல்வர் மங்களேஸ்வரன் உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா ஈச்சங்குளம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய மாணவனின் இறுதி பயணம் கண்ணீருடன்!!

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூம்புகார் கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி மரணமான சம்பவம் அக் கிராமத்தையே சோகமயமாக்கியுள்ளது.

வவுனியா பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்தில் கல்வி பயின்ற தேவகுமார் அனோஜன் என்ற 14 வயது சிறுவன் கடந்த (19.10) மாலை 5 மணியளவில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வைரவ மூன்று முறிப்பு குளத்திற்கு சென்ற போது தவறுதலாக நீரில் வீழ்ந்து மூழ்கி மரணமானார்.

குறித்த மாணவனின் இறுதிக்கிரியை இன்று காலை மாணவனின் இல்லத்தில் நடைபெற்று பாடசாலை மாணவர்களின் பாண்ட் அணிவகுப்புடன் பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்திற்கு அழைத்து சென்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்ற பின்னர் பூம்புகார் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இச்சம்பவமானது அப்பாடசாலை சமூகத்தை மட்டுமல்லாது கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சர்வதேச ரீதியாக சாதனை படைத்த இலங்கை சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!!

சர்வதேச ரீதியாக சாதனை படைத்த இலங்கை வீராங்கனைக்கு கொழும்பில் வீடு ஒன்றை பரிசாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆர்ஜெண்டீனாவில் நடைபெற்ற கோடைக்கால மூன்றாவது இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு பதக்கம் பெற்று கொடுத்த சிறுமிக்கே வீடு வழங்கப்படவுள்ளது.

பெண்களுக்கான 2000 மீற்றர் தடைத் தாண்டல் ஓட்டப் போட்டியில் பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா என்ற 16 வயது வீராங்கனை மூன்றாவது இடத்தைப் பெற்று இலங்கைக்கு வெண்கலப்பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.

சிலாபம் – இரணவில பிரதேசத்தை சேர்ந்த சிறுமிக்கு கொழும்பில் வீடு ஒன்றை வழங்க தீர்மானித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று காலை சிறுமியின் வீட்டிற்கு சென்ற இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக அவர் தற்போது வசிக்கும் சிலாபம் வீட்டினையும் 10 நாட்களுக்குள் புனரமைத்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.

வீட்டின் புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் புத்தளம் மாவட்ட அதிகாரிக்கு, ராஜாங்க அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, சிலாபம் பிரதேசத்தை ஏழ்மையான மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை இளைஞனை பயங்கவாத குற்றச்சாட்டில் சிக்க வைத்த அவுஸ்திரேலிய வீரரின் சகோதரர்!!

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞராக மொஹமட் நிஸாம்தீனை பயங்கரவாத குற்றச்சாட்டில் சிக்க வைக்க அவுஸ்திரேலிய வீரர் ஒருவரின் நெருங்கிய சகோதரர் ஒருவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளர்.

அந்நாட்டு ஊடகங்களை மேற்கொள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர் மொஹமட் நிஸாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை அண்மையில் செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் நிஸாம்தீன் பயங்கரவாத தாக்குதலுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும் அத்திட்டம் தொடர்பான ஆவணம் ஒன்றை வைத்திருந்ததாகவும் கூறி கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

குறிப்பாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மெல்கம் டேன்புல் மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷொப் ஆகியோர் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

மொஹமட் நிஸாம்தீன் குறித்த குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முழுமையாக பயங்கரவாத குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மொஹமட் நிஸாம்தீனை பயங்கரவாத குற்றச்சாட்டில் சிக்க வைக்க அவுஸ்திரேலிய வீரர் ஒருவரின் நெருங்கிய சகோதரர் ஒருவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளர்.

நான்கு மணி நேரத்தில் 3560 பேர் கைது!!

நாடளாவிய ரீதியில் நான்கு மணி நேரத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3,560 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 6,020 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

மருமகனால் மாமியாருக்கு நேர்ந்த கொடூரம் : மனைவியும் வைத்தியசாலையில்!!

திருகோணமலை – கோமரங்கடவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கஜுவத்தை பகுதியில் மாமியாரை தாக்கிய மருமகனை இன்று காலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான எஸ்.எம்.ரணசிங்க (37வயது) என்பவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

மதுபோதையில் வருகை தந்திருந்த எஸ்.எம்.ரணசிங்க தனது மனைவியான நிஷன்சலாவை (34 வயது) பொல்லால் தாக்கியுள்ளார்.

இதன்போது குறித்த பெண்ணின் தாயர் தடுப்பதற்காக சென்றபோதே சந்தேகநபர் அவரை பொல்லால் தாக்கியதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் காயமடைந்த சந்தேகநபரின் மாமியார் திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவருக்கு வலது கால் உடைந்துள்ளதுடன், இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் விபத்து சேவைப் பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அந்த நபரின் மனைவி அருகிலுள்ள கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் போதை மாத்திரை பிரதான விநியோகஸ்தர் உள்ளிட்ட இருவர் பொலிசாரால் கைது!!

வவுனியா, ஓமந்தை பொலிசாரின் விசேட நடவடிக்கையின் காரணமாக போதை மாத்திரை பிரதான விநியோகஸ்தர் உள்ளிட்ட இரு இளைஞர்களை ஓமந்தைப் பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டாயிரத்து 600 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை குறித்த இருவரும் ஓமந்தைப் பொலிசாரால் ஏ9 வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வெள்ளிக்கிழமை ஆயிரத்து 670 போதை மாத்திரைகளுடன் யாழில் இருந்து திருகோணமலை சென்ற இரு இளைஞர்களை ஓமந்தைப் பொலிசார் கைது செய்திருந்தனர். அவர்களை நீதிமன்றில் முற்படுத்தி, மேலதிக விசாரணைக்காக அவர்களை ஓமந்தைப் பொலிசார் தமது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அவர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கை காரணமாக சொகுசு கார் ஒன்றில் யாழில் இருந்து இரண்டாயிரத்து 600 போதை மாத்திரைகளுடன் ஏ9 வீதியில் பயணித்த பிரதான விநியோகஸ்தர் உள்ளிட்ட இருவரை ஓமந்தைப் பகுதியில் வைத்து பொலிசார் மடக்கிப் பிடித்தனர்.

வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அபய விக்கிரம வழிகாட்டலில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.எஸ.எம.தென்னக்கோன் நெறிப்படுத்தலில் ஒமந்தை பொலிசிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஸ் த சில்வா தலைமையிலான பொலிசாரே இவ் விசேட நடவடிக்கையை மேற்கொண்டனர்.

குறித்த இரு இளைஞர்களிடம் இருந்து போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சொகுசு காரும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த ஓமந்தை பொலிசார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 34 மற்றும் 23 வயதுடைய யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்தவர்களாவர்.