கல்லூரியில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல் : 20 பேர் பலி.. 68 பேர் படுகாயம் : அதிர்ச்சிக் காரணம்!!

கிரிமியாவில் நேற்று நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல் குறித்த வீடியோவும், அதிர்ச்சி தகவல்களும் வெளியிடப்பட்டன.

கிரிமியாவில் Vladislav Roslyakov என்ற 18 வயதான மாணவர், துப்பாக்கி மற்றும் குண்டுகளை கொண்டு பயங்கரமான தாக்குதல் நடத்தியதோடு, கல்லூரி உணவு விடுதியிலேயே தற்கொலை செய்துகொண்டு இறந்த போனார்.

உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்த கொடூர சம்பவத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 68 பேர் படுகாயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 பேர் கோமா நிலையில் இருப்பதாகவும், அவர்கள் நிலை கவலைக்கிடமாக இருப்பதாவதும் கூறியுள்ளனர்.

தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படாத நிலையில், அதிபர் புதினால் நியமிக்கப்பட்ட அதிகாரியின் கீழ் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தாக்குதலில் Vlad மட்டுமே ஈடுபட்டிருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், மேலும் ஒரு நபர் ஈடுபட்டார் என சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து Vlad-ன் வகுப்பு மாணவர் ஒருவர் கூறுகையில், திங்கட்கிழமையன்று Vlad பள்ளிக்கு வருகை தரவில்லை. ஒருவேளை அவன் முன்னாள் காதலியை சந்திக்க சென்றிருக்கலாம். அந்த பெண் மீது இருந்த ஆத்திரத்தில் தான் இப்படி செய்திருக்கலாம் என தெரிவித்தார்.

மற்றொரு மாணவர், Vlad அதிகமான கம்ப்யூட்டர் விளையாட்டுக்கள் விளையாடுவான். அதற்கு அதிகமாக அடிமையாகி இருந்ததால், அதன் மீது இருந்த தாக்கத்தில் இப்படி செய்திருக்கலாம் என கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை அதிகாரிகள் கூறுகையில், கொல்லப்பட்டவர்கள் அதிகமானோர் பெண்கள் தான். பெரும்பாலும் 15 முதல் 19 வயதிற்குட்பட்டவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வீட்டில் தயாரிக்கப்பட்ட 3 குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும், 20 குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வவுனியா குடியிருப்பு வீதி நீண்டகாலமாக திருத்தப்படவில்லை : மாணவர்கள் சிரமம்!!

வவுனியா குடியிருப்பு பகுதியிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதி நீண்டகாலமாக செப்பனிடப்படவில்லை இதனால் பாடசாலை மாணவர்கள், முச்சக்கரவண்டிகள், துவிச்சக்கரவண்டியில் பயணம் மேற்கொள்பவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதுடன் பாடசாலை மாணவர்கள் அடிக்கடி விபத்துக்களுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குடியிருப்பு பகுதியிலுள்ள இலங்கை தென்னிந்திய திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் பூந்தோட்டம் மாணவர்கள் பலர் இவ்வீதியை பயன்படுத்தி வருகின்றனர். இவ் வீதி நீண்டகாலமாகவே இவ்வாறு குன்றும் குழியுமாக காட்சியளிக்கின்றது.

மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் முதல் வாகனச்சாரதிகள் அனைவரும் இவ்வீதியைத் திருத்தித்தருமாறு கோரியுள்ள நிலையிலும் இன்று வரையிலும் இவ்வீதி திருத்தப்படவில்லை.

100 மீற்றர் நீளமுடைய வீதியில் சில இடங்களில் பாரிய குண்டும் குழியும் ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு சிறுவர் பூங்காவிற்கு பலர் தமது பிள்ளைகளை அழைத்துச் செல்வதும் இவ்வீதியூடாகவே. எனவே குறித்த வீதியைத்திருத்தி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

வவுனியாவில் இன்று (18.10) மாலை 5.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டு அறைக்குள் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிசார் சடலத்தினை மீட்டெடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா கற்குளம், சிதம்பரபுரம் பகுதியில் வசித்த வந்த மாணிக்கம் ஜெகதீஸ்வரன் என்ற 32வயதுடைய இளம் குடும்பஸ்தர் இன்று மாலை 5.30 மணியளவில் வீட்டு அறையினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

கணவனை நீண்ட நேரமாக காணவில்லையென மனைவி தேடியலைந்த பின்னர் வீட்டு அறையின் கதவை திறந்து பார்த்த போது 5.30 மணியளவில் வீட்டு அறையினுள்ளே கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக மனைவி தெரிவித்துள்ளார். இதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்குச் சென்ற சிதம்பரபுரம் பொலிசார் சடலத்தினை பார்வையிட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் வைத்தியசாலைக்கு சடலம் எடுத்து செல்லப்படவிருப்பதாகவும் குடும்ப பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்திருக்கலாம் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இறந்த நண்பனின் முன்னாள் காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞன் : அதிர்ச்சிக் காரணம்!!

மஹாராஷ்டிராவில் இறந்த நண்பனின் காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மாகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அபூர்வா யாதவ் (20) என்ற இளம்பெண் Sarthak Jadhav என்ற இளைஞரை காதலித்துள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், Jadhav-ன் காதலை முறித்துக்கொண்டு அபூர்வா வேறு ஒரு நபரை காதலிக்க ஆரம்பித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜாதவ் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். நண்பனின் தற்கொலைக்கு காரணம் அபூர்வா மற்றும் அவருடைய காதலன் தான் என நினைத்த அமர் ஷிண்டே (21) நீண்ட நாட்களாகேவ நண்பனின் காதலியை பழிவாங்க துடித்துள்ளார்.

இந்த நிலையில் கர்நாடகாவில் தங்கி படித்து வந்த அபூர்வவை வீட்டில் யாரும் இல்லாத போது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

வீட்டிற்கு திரும்பிய அபூர்வாவின் அம்மா, ரத்த வெள்ளத்தில் கிடந்த மகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அபூர்வா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

கழுத்தை அறுத்ததோடு மட்டுமின்றி அவருடைய உடலிலும் ஏராளமான இடங்களில் கத்தியால் குத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிஸார், தற்போது குற்றவாளி அமர் ஷிண்டேவை கைது செய்துள்ளனர்.

10 வருடங்களுக்கு முன்னர் நடந்த வைரமுத்து குறித்த ரகசியத்தை வெளியிட்ட மலேசிய வாசுதேவனின் மருமகள்!!

மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகளான ஹேமமாலினி தனது பேஸ்புக் பக்கத்தில் சின்மயிக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது,

தமிழ்த் திரையுலகம் ஏன் சின்மயிக்கு ஆதரவாக இல்லை என்பது எனக்குப் புரியவில்லை. வைரமுத்து ஒன்றும் துறவி இல்லை என்பது தமிழ் திரையுலகினருக்கு தெரியும் என்பது உறுதி. சின்மயி ஏன் இதை பத்து வருடங்களுக்கு முன் சொல்லவில்லை என்று ஏன் கேட்க வேண்டும்.

இப்போது அவர் புகார் சொல்லியுள்ளார், இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டும். நாம் ஏன் வைரமுத்துவை கேள்வி கேட்பதில்லை? சமூகம் ஏன் குற்றம் சாட்டப்பட்டவரை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவரைக் கேள்வி கேட்கிறது? என்ன ஒரு ஒருதலைப்பட்சமான துறை இது.

நான் சன் மியூசிக் சேனலில் இருந்தபோது, வைரமுத்து அங்கு வேலை செய்த ஒரு இளம் தொகுப்பாளரைத் தொடர்பு கொள்ள முயன்றதை அறிவேன். அவரைப் பற்றி பத்து வருடங்களுக்கு மேலாக பல தளங்களில் பேசியிருக்கிறேன்.

குரலற்றவர்களின் குரலாக ஒலித்த சின்மயிக்கு தலைவணங்குகிறேன். இந்தத் துறை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது.

பிரபாகரனின் புகைப்படத்தால் சிக்கிய தமிழ் இளைஞர்கள் : 10 மாதங்களுக்குப் பின் கிடைத்த மகிழ்ச்சி!!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்துடன் முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியை லைக், ஷேர் செய்த குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞர் ஒருவர் 10 மாதங்களுக்குப் பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகீ ராஜரத்ன நேற்று அனுமதியளித்துள்ளார்.

பிரபாகரனின் புகைப்படத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காக இரத்தினபுரியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர்.

தினேஸ் குமார் என்ற இளைஞனே பிரபாகரனின் புகைப்படத்துடன் வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளதாகவும், அதை லைக் செய்த குற்றத்திற்காக விதுசன் என்ற இளைஞன் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதில் குறித்த பதிவை லைக் செய்தமைக்காக கைது செய்யப்பட்டிருந்த விதுசனுக்கு பிணை வழங்க வேண்டுமெனக் கோரி தாக்கல் செய்த மீளாய்வு மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, அவரை பிணையில் செல்ல நீதிபதி அனுமதித்தார்.

அத்துடன், “முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனுக்கு ஒரே நாளில் பிணை வழங்க முடியுமெனில், லைக் செய்த இந்த இளைஞனை 10 மாதம் தடுத்து வைத்திருந்தது எவ்வகையில் நியாயம் என நீதிபதி வினவியுள்ளார்.

சர்ச்சைக்குரிய வாழ்த்துச் செய்தியை பதிவிட்ட குற்றச்சாட்டில் கைதான தினேஸ் குமார் என்ற இளைஞருக்கு பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் அவருக்கு பிணை பெறுவதில் சிக்கல் இருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் வீதியில் செல்லும் மாணவிகளிடம் பாலியல் சேட்டை : பல மாணவிகள் பாதிப்பு!!

யாழில் தனியார் கல்வி நிலையத்துக்கு சென்று திரும்பும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபருக்கு எதிராக மேலும் 4 வழங்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் சில மாணவிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்தில் குறித்த நபருக்கு எதிராக முறைப்பாடுகளை வழங்கியுள்ளனர்.

அந்த முறைப்பாடுகளை பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்தனர். இதையடுத்தே அவர் மீது நான்கு வழக்குகளை யாழ்ப்பாணம் பொலிஸார் தாக்கல் செய்துள்ளனர்.

யாழில் தனியார் கல்வி நிலையத்துக்கு சென்று திரும்பும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் குறித்த நபர் கடந்த 10ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இவரை 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டிருந்த நிலையில், மேலும் சில மாணவிகள் இவர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

அதனை அடுத்து சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிட்ட நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், அவரின் விளக்கமறியலை வரும் 30ஆம் திகதிவரை நீடித்தார்.

இந்த பெண் தொடர்பில் தெரிந்தால் உடன் அறிவியுங்கள்!!

தொழிலுக்காக வெளிநாடு சென்ற நிலையில் காணாமல் போன பெண் தொடர்பில் பொது மக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

லெபனான் நாட்டில் தொழிலாக சென்ற பெண் தொடர்பில் தகவல் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொது மக்களின் உதவியை நாடியுள்ளது.

ரம்புக்கனை, கொட்டவெல்ல பிரதேசத்தை சேர்ந்த ரேணுகா வனசிங்க என்ற பெண் தொடர்பிலேயே தகவல் கோரப்பட்டுள்ளது.

ரேணுகா வனசிங்க 2005ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி லெனான் நோக்கி சென்றுள்ளார். எனினும் இதுவரையில் அவர் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

இந்த பெண் தொடர்பில் தகவல் அறிந்தால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 0112 864 136 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் தகவல் வழங்க முடியும்.

வவுனியா பொது வைத்தியசாலையில் மரநாட்டும் நிகழ்வு!!

வவுனியா பொது வைத்தியசாலை வளாகத்தில் மரம் நாட்டுவதற்கு வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்தியரிடம் வவுனியாவிலுள்ள வர்த்தகர் என். எஸ். ரட்ணம் அவர்களினால் மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டது.

மரநாட்டும் நிகழ்வை முன்னிட்டு பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள், வைத்தியசாலை போன்ற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று காலை 10.30 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலையின் வெளிநோயளர் பிரிவு பொறுப்பு வைத்தியர் சுரேந்திரனினால் வைத்தியசாலை வளாகத்தில் மரம் நடும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வவுனியா வளாக முதல்வரின் பதவிக்காலம் நீடிப்பு!!

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி ரி.மங்களேஸ்வரனின் பதவிக்காலம் 3 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வளாகத்தின் வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக செயற்பட்டு வரும் கலாநிதி ரி. மங்களேஸ்வரனின் சேவைக்காலம் அண்மையில் முடிவடைந்த நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரனினால் 3வருடங்களுக்கான கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா வளாகத்தின் வளர்ச்சிக்கு பல்துறைகளினாலும் தனது பங்களிப்பை மேற்கொண்டு வரும் கலாநிதி ரி. மங்களேஸ்வரன் வவுனியா வளாகத்தினை வன்னி பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு தன்னாலான முயற்சியை எடுத்து வரும் நிலையில் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் வவுனியா மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

வவுனியாவில் பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தாயாருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை!!

வவுனியா செட்டிகுளம் பகுதியில் அண்மையில் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வதற்கு முயன்றுள்ள தாயும் பிள்ளைகளும் அதிஷ்டவசமாக காப்பாற்றப்பட்டனர்.

இதையடுத்து விஷம் வழங்கி தற்கொலைக்கு முயன்ற தாயாருக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எஸ்.எம்.என்.தென்னக்கோன் இன்று வவுனியாவில் தற்கொலைகளுக்கு எதிராக இடம்பெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தனது உரையில் தெரிவிக்கும்போது,
வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் 13 பொலிஸ் நிலையங்கள் இயங்கிவருகின்றன.

இந்த பொலிஸ் நிலையங்களிலே கடந்த பத்து மாதங்களுக்குள் இடம்பெற்ற தற்கொலைகள் தொடர்பாக எங்களுக்கு கிடைத்த தற்கொலைகளின் எண்ணிக்கைகளின் தகவல்களின் அடிப்படையில் பெண்கள் 10பேர், ஆண்கள் 12பேர், மொத்தமாக 22பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கின்றார்கள்.

இத் தற்கொலை செய்து கொண்டவர்களில் அதிகமானவர்கள் இளவயதினர். தற்கொலைக்கு இன்னுமொரு முறையை பயன்படுத்தியிருக்கின்றார்கள். விஷமருந்துகள். இதில் செட்டிகுளம் பகுதியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். எனினும் அதிஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

எங்களுக்கு ஆச்சரியமான விடயம் ஒன்று 14,15,16 வயது சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றார்கள். 21 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் 8 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். 31வயதிலிருந்து 35 வயதிற்குட்பட்வர்கள் 7 பேர் தற்கொலை செய்துள்ளார்கள். இந்த குறுகிய காலத்திற்குள் 22பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள்.

வவுனியாவில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சிறுவர், பெண்கள் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே தற்கொலை செய்து கொள்பவர்கள் எவருடனாவது பேச வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே தற்கொலை செய்து கொள்ள முயன்று வருகின்றார்கள்.

உங்களுக்கு என்ன பிரச்சினைகள் இருந்தாலும் பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று உங்களது பிரச்சினைகளை எம்முடன் பகிர்ந்து கொண்டுவிட்டுச் செல்லவும். இளம் வயதினரே தற்போது தற்கொலைகள் செய்து கொள்ள முயன்றுவருவது தெரியவந்துள்ளது.

நாங்கள் அனைவரையும் எமது பிள்ளைகள் என்றே நினைத்து கடமையாற்றி வருகின்றோம் எனவே இளம் வயதினர் நீங்கள் எங்களை உங்களது தாய் தந்தையர்கள் என நினைத்து எம்முடன் வந்து கலந்துரையாடவேண்டும் உங்களது பிரச்சினைகளை மனம்விட்டு பேச முன்வரவேண்டும்.

உங்களுக்கு சுகயீனம் ஏதும் இருந்தால் வைத்தியரிடம் சென்று சொல்லவேண்டும் அதேபோல உங்களுக்கு ஏதும் பிரச்சினைகள் இருந்தால் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று சொல்லவேண்டும். அவ்வாறு வந்து உங்களுடைய பிரச்சினைகளை எம்மிடத்தில் தெரிவிக்கும்போது உங்களுக்கு எங்களால் தீர்வு பெற்றுக்கொடுக்க முடியும்.

முன்னர் தற்கொலை செய்து கொண்டால் தண்டப்பணம் செலுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவ்வாறான நிலை இல்லை இதன்காரணமாகவே அனைவரும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்வருகின்றார்கள்.

அண்மையில் செட்டிகுளம் பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தியுள்ளார். அவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பித்துக்கொண்டார்கள். எனவே அதன் பின்னர் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். என்று மேலும் தெரிவித்துள்ளார்.

காருடன் நேருக்கு நேர் மோதிய டிப்பர் வண்டி!!

திருகோணமலை, ஹபரன பிரதான வீதியில் காரொன்று, டிப்பர் வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது. குறித்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இருந்து பொலன்னறுவைக்கு சென்ற கார் ஒன்றும், கந்தளாயை நோக்கி பயணித்த டிப்பருமே மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளன.

கார் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தினாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனினும் இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

வவுனியா நகரசபையில் வாகன கொள்வனவு தொடர்பில் சர்ச்சை!!

வாகன நகரசபைக்கு புதிய வாகனம் ஒன்று கொள்வனவு செய்ய வேண்டும் என தவிசாளர் இ.கௌதமன் அவர்கள் சபையில் கருத்து தெரிவித்தையடுத்து சபையில் நீண்ட விவாதம் ஏற்பட்டது.

வவுனியா நகரசபையின் இம் மாதத்திற்கான அமர்வு இன்று காலை தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது வவுனியா நகரசபையில் வாகனப் பற்றாக்குறை உள்ளதாகவும், தவிசாளர், உபதவிசாளர், செயலாளர் ஆகியோர் பாவிப்பதற்கு இரு வாகனங்கள் உள்ள போதும் அதில் ஒன்று அடிக்கடி பழுதடைவதால் புதிய வாகனம் ஒன்றை கொள்வனவு செய்யலாம் சபையின் கவனத்திற்கு தவிசாளர் கொண்டு வந்திருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா, சபை அமர்வு கூட்ட நிகழ்ச்சி நிரலில் குறித்த விடயம் குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு தெரிவிக்காத விடயத்தை உடனடியாக கொண்டு வந்து தீர்மானமாக நிறைவேற்ற முடியாது எனவும் நகரசபையில் உள்ள வாகனங்களை திருத்தி பயன்படுத்த வேண்டும். மேலதிகமாக புதிய வாகனத்தை கொள்வனவு செய்து நிதியை வீண் விரயம் செய்ய முடியாது எனத் தெரிவித்தார். குறித்த கருத்தினை உறுப்பினர்களான ரி.கே.இராஜலிங்கம், க.சந்திரகுலசிங்கம் ஆகியோரும் வலியுறுத்தினர்.

இதன்போது புதிய வாகனம் கொள்வனவு செய்வது என சபையின் ஒருவர் முன்மொழிந்து ஒருவர் வழி மொழிய முற்பட்ட போது உறுப்பினர்கள் சிலர் இது ஏகமனதான முடிவு அல்ல என தெரிவித்தையடுத்து வாக்கெடுப்புக்கு செல்வதா என கலந்துரையாடப்பட்டது. இறுதியில் வாகனக் கொள்வனவு தொடர்பில் அடுத்த அமர்வில் விவாதித்து தீர்மானம் எடுப்பதாக முடிவு செய்யப்பட்டது.

இதன்போது கடந்த 11 ஆம் திகதி தவிசாளர் குப்பை ஏற்றும் உழவு இயந்திரத்தில் பயணித்தமை அரசியல் நோக்கம் கொண்ட செயற்பாடு எனவும் உறுப்பினர்கள் சிலர் கருத்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது

கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலையின் மாணவிகளின் ஆபாச செயற்பாடுகள்!!

கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகள் இருவரின் மோசமான செயற்பாடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

பாடசாலை மாணவிகளான இருவர், தமது காதலர்களுடன் தகாத நடவடிகையில் ஈடுபட்ட போது மாணவகளில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை செல்வதாக கூறி விட்டை விட்டு சென்ற மாணவிகள் இருவர், காதலர்களுடன் மீகொட பொலிஸ் பிரிவிலுள்ள ஒரு மாணவியின் வீட்டிற்கு சென்று தகாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஒரு மாணவி மற்றும் அவரது காதலரை மீகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அங்கு அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார் என சட்ட வைத்தியர் தெரிவித்துள்ளார்.

ராஜகிரிய பிரதேச பாடசாலையில் கல்வி கற்கும் இந்த மாணவிகள் இருவர் அந்த பிரதேச பாடசாலை மாணவர்கள் இருவருடன் காதல் தொடர்பு ஏற்படுத்தி கொண்டுள்ளனர்.

பட்டவல வீட்டில் வசிக்கும் மாணவி தனது பெற்றோர் வீட்டில் இல்லாத போது தனது காதலனையும், நண்பியையும், அவரின் காதலனையும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் மாணவியின் தந்தை திடீரென வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டினுள் யாரோ இருப்பதனை அவதானித்த தந்தை வீட்டிற்கு பின்னால் மறைந்திருந்து பார்த்துள்ளார்.

திடீரென கதவை திறந்த போது ஒரு மாணவியின் காதலன், தந்தை தாக்கிவிட்டு காதலியை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளார். அவ்வாறு சென்றவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சித் தகவல்!!

இலங்கையில் புதிய வகை எரிபொருள் ஒன்றை அறிமுகம் செய்ய பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. குறைந்த செலவில் முச்சக்கரவண்டிகளுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் புதிய எரிபொருள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதற்கமைய ஒக்டேன் 87 அல்லது குறைந்த ஒக்டேன் ரக எரிபொருள் வகை ஒன்றை அடுத்த மாதம் சந்தையில் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையை விடவும் மிகவும் குறைந்த விலையில் புதிய எரிபொருள் விநியோகம் செய்யப்படவுள்ளது.

புதிய எரிபொருள் முச்சக்கர வண்டிகளுக்கு மாத்திரமன்றி, மோட்டார் சைக்கிள்களுக்கும் பயன்படுத்த முடியுமா என்பது தொடர்பில் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நன்மையை ஏற்படுத்தக் கூடிய புதிய எரிபொருள் திட்டம் வெற்றி பெறும். . எதிர்வரும் மாதத்தில் புதிய எரிபொருள் சந்தையில் அறிமுகம் செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துதுள்ளார்.

சமகாலத்தில் இலங்கையில் எரிபொருளின் விலை உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் குறைந்த விலையில் அறிமுகமாகும் எரிபொருள் மக்களுக்கு கிடைத்த பெரும் நிவாரணமாக அமையவுள்ளது.

இலங்கையில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்களின் அதிகளவில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறைந்த விலையில் எரிபொருள் விற்பனை செய்யப்படும் பட்சத்தில் சாரதிகளுக்கும், மக்களுக்கும் பெரும் நன்மையை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வவுனியாவில் தற்கொலைகளைத் தடுப்பது தொடர்பான கருத்தரங்கு!!

வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று (18.10) காலை 9.30 மணியளவில் வவுனியா பிரதேச செயலகம், இறம்பைக்குளம் ஈஷி மிஷன் பூரண சுவிஷேச சபை இணைந்து ஏற்பாடு செய்த உலக உளநல தினத்தை முன்னிட்டு இலவச கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயாளர் கா.உதயராசா, வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எஸ்.எம்.என்.தென்னக்கோன், உதவி பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இறம்பைக்குளம் ஈஷி மிஷன் பூரண சுவிஷேச சபையின் பிரதான பிஷப் பி.என்.இராஜசிங்கம்,

வவுனியா வைத்தியசாலையின் உளநலப்பிரிவு வைத்தியர் யுராஜ், வவுனியா வைத்தியசாலையின் சிரேஷ்ட உளநலப்பிரிவு வைத்தியர் சுதாகரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத்தலைர், வவுனியா நெடுங்கேணி பிரதேச சபைத்தலைவர், உறுப்பினர்கள், கிராம அலுவலர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் முதற்தடவையான ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வுகளின் அடிப்படையில் பாடசாலைகள், கிராமங்கள் என தொடர்ந்து இவ்விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

உளநல வைத்தியர்களின் ஆலோசனைகள், சிறப்புக் கருத்தரங்கு இடம்பெற்றதுடன் தற்கொலை தொடர்பான விழிப்புணர்வுகள், ஆலோசனைகளும் வழங்கப்பட்டவுள்ளன.