கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலையின் மாணவிகளின் ஆபாச செயற்பாடுகள்!!

கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகள் இருவரின் மோசமான செயற்பாடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

பாடசாலை மாணவிகளான இருவர், தமது காதலர்களுடன் தகாத நடவடிகையில் ஈடுபட்ட போது மாணவகளில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை செல்வதாக கூறி விட்டை விட்டு சென்ற மாணவிகள் இருவர், காதலர்களுடன் மீகொட பொலிஸ் பிரிவிலுள்ள ஒரு மாணவியின் வீட்டிற்கு சென்று தகாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஒரு மாணவி மற்றும் அவரது காதலரை மீகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அங்கு அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார் என சட்ட வைத்தியர் தெரிவித்துள்ளார்.

ராஜகிரிய பிரதேச பாடசாலையில் கல்வி கற்கும் இந்த மாணவிகள் இருவர் அந்த பிரதேச பாடசாலை மாணவர்கள் இருவருடன் காதல் தொடர்பு ஏற்படுத்தி கொண்டுள்ளனர்.

பட்டவல வீட்டில் வசிக்கும் மாணவி தனது பெற்றோர் வீட்டில் இல்லாத போது தனது காதலனையும், நண்பியையும், அவரின் காதலனையும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் மாணவியின் தந்தை திடீரென வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டினுள் யாரோ இருப்பதனை அவதானித்த தந்தை வீட்டிற்கு பின்னால் மறைந்திருந்து பார்த்துள்ளார்.

திடீரென கதவை திறந்த போது ஒரு மாணவியின் காதலன், தந்தை தாக்கிவிட்டு காதலியை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளார். அவ்வாறு சென்றவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சித் தகவல்!!

இலங்கையில் புதிய வகை எரிபொருள் ஒன்றை அறிமுகம் செய்ய பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. குறைந்த செலவில் முச்சக்கரவண்டிகளுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் புதிய எரிபொருள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதற்கமைய ஒக்டேன் 87 அல்லது குறைந்த ஒக்டேன் ரக எரிபொருள் வகை ஒன்றை அடுத்த மாதம் சந்தையில் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையை விடவும் மிகவும் குறைந்த விலையில் புதிய எரிபொருள் விநியோகம் செய்யப்படவுள்ளது.

புதிய எரிபொருள் முச்சக்கர வண்டிகளுக்கு மாத்திரமன்றி, மோட்டார் சைக்கிள்களுக்கும் பயன்படுத்த முடியுமா என்பது தொடர்பில் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நன்மையை ஏற்படுத்தக் கூடிய புதிய எரிபொருள் திட்டம் வெற்றி பெறும். . எதிர்வரும் மாதத்தில் புதிய எரிபொருள் சந்தையில் அறிமுகம் செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துதுள்ளார்.

சமகாலத்தில் இலங்கையில் எரிபொருளின் விலை உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் குறைந்த விலையில் அறிமுகமாகும் எரிபொருள் மக்களுக்கு கிடைத்த பெரும் நிவாரணமாக அமையவுள்ளது.

இலங்கையில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்களின் அதிகளவில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறைந்த விலையில் எரிபொருள் விற்பனை செய்யப்படும் பட்சத்தில் சாரதிகளுக்கும், மக்களுக்கும் பெரும் நன்மையை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வவுனியாவில் தற்கொலைகளைத் தடுப்பது தொடர்பான கருத்தரங்கு!!

வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று (18.10) காலை 9.30 மணியளவில் வவுனியா பிரதேச செயலகம், இறம்பைக்குளம் ஈஷி மிஷன் பூரண சுவிஷேச சபை இணைந்து ஏற்பாடு செய்த உலக உளநல தினத்தை முன்னிட்டு இலவச கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயாளர் கா.உதயராசா, வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எஸ்.எம்.என்.தென்னக்கோன், உதவி பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இறம்பைக்குளம் ஈஷி மிஷன் பூரண சுவிஷேச சபையின் பிரதான பிஷப் பி.என்.இராஜசிங்கம்,

வவுனியா வைத்தியசாலையின் உளநலப்பிரிவு வைத்தியர் யுராஜ், வவுனியா வைத்தியசாலையின் சிரேஷ்ட உளநலப்பிரிவு வைத்தியர் சுதாகரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத்தலைர், வவுனியா நெடுங்கேணி பிரதேச சபைத்தலைவர், உறுப்பினர்கள், கிராம அலுவலர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் முதற்தடவையான ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வுகளின் அடிப்படையில் பாடசாலைகள், கிராமங்கள் என தொடர்ந்து இவ்விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

உளநல வைத்தியர்களின் ஆலோசனைகள், சிறப்புக் கருத்தரங்கு இடம்பெற்றதுடன் தற்கொலை தொடர்பான விழிப்புணர்வுகள், ஆலோசனைகளும் வழங்கப்பட்டவுள்ளன.

வவுனியாவில் T56 துப்பாக்கி ரவையுடன் ஒருவர் கைது!!

வவுனியாவில் சின்னக்குளம், நேரியகுளம் பகுதியில் நேற்றைய தினம் (17.10) துப்பாக்கி ரவையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 10 மணியளவில் கஞ்சா வியாபாரம் செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சின்னக்குளம் நேரியகுளம் பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற செட்டிக்குளம் பொலிசார் வீட்டினை சோதனை செய்த போது கிணற்றின் அருகே இருந்து T56 துப்பாக்கி ரவைகள் 22 வைத்திருந்ததன் குற்றச்சாட்டில் 52 வயது நபரை கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் குறிப்பிடுகையில் தான் மீன் பிடிக்க குளத்திற்கு சென்ற போது குளக்கரையில் பொதி செய்யப்பட்ட நிலையில் ரவைகள் காணப்பட்டதாகவும், அதனை தான் எடுத்து வந்து வீட்டு கிணற்றருகே வைத்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலி : மூவர் படுகாயம்!!

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று(18.10) காலை 4.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி தண்ணீர் ஏற்றிச்சென்ற குளிரூட்டப்பட்ட ஹென்டர் ரக வாகனமும் ஹெக்கிராவையில் இருந்து மல்லாவி நோக்கி நெல்லு வெட்டும் இயந்திரத்தை ஏற்றிசென்ற உழவியந்திரமும் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

புளியங்குளம் எரிபொருள்நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் நெல்லு வெட்டும் இயந்திரத்தை ஏற்றிய உழவியந்திரம் தரித்து நின்ற சயமத்தில் கொழும்பில் இருந்து வந்த தண்ணீர் ஏற்றி வந்த குளிரூட்டப்பட்ட ஹென்டர் ரக வாகனம் மோதியதிலே குறித்த விபத்து இடம்பெற்றிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் தண்ணீர் போத்தல்கள் ஏற்றி சென்ற வாகனத்தில் பயணம்செய்த யாழ்பாணத்தை சேர்ந்த மரியதாஸ் நிறோசன் மரணமடைந்துள்ளதுடன், செ.அஜந்தன் என்பவரின் கை ஒன்று துண்டிக்கபட்டுள்ளது.

உழவியந்திரத்தில் இருந்த இளைஞன் படுகாயமடைந்ததுடன் இன்றுமொருவர் சிறு காயங்களிற்கு உள்ளாகியுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கண்ணீர் விட்டு கதறிய மனைவி : கல்லூரி மாணவியுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்த பேராசிரியர்!!

நாகர்கோவில் மாவட்டத்தில் கல்லூரியில் பணியாற்றி வரும் சிலம்பரசன் என்பவர் தனக்கு மனைவி , குழந்தைகள் இருந்த நிலையில் கல்லூரி மாணவியுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.

வசந்தி என்ற மாணவி வேதாரன்யத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்துவருகிறார். அதே கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறார் சிலம்பரசன்.

அவர் ஏற்கெனவே விதவையான ஒருவரை காதலித்து திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் வசந்தியோடு அதிக நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், கல்லூரியில் இருந்து இவர்கள் இருவரும் ஓடிப்போயுள்ளனர்.

இதற்கிடையில் ஆசிரியர் சிலம்பரசனும், மாணவி வசந்தியும் திருவிடைமருதூரில் இருப்பது தெரிந்து அங்கு வசந்தியின் பெற்றோர்கள் வந்து வீட்டிற்கு வரும்படி மன்றாடினர். நான் வரமுடியாது, எனக்கு சிலம்பு தான் முக்கியம், வாழ்ந்தால் அவர்கூடத்தான், செத்தாலும் அவர்கூடத்தான் என கூறியுள்ளார்.

மேலும், சிலம்பரசனின் மனைவி, வந்துவிடுங்கள் என கண்ணீர் விட்டு கதறியும், அதனை காதில் வாங்கிகொள்ளாத , நான் அவளுடன் தான் சேர்ந்து வாழப்போகிறேன் என உறுதியாக கூறியுள்ளார்.

வவுனியா காஞ்சிரமோட்டை மற்றும் வெடுக்குநாறி மலைப்பகுதிகளுக்கு மாகாணசபை உறுப்பினர்கள் விஜயம்!!

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சிரமோட்டை கிராமம் மற்றும் வெடுக்குநாறி மலைப்பகுதிகளுக்கு வட மாகாணசபை அவைத்ததலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையிலான 12 மாகாணசபை உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று (17.10) விஜயம் செய்துள்ளனர்.

வவுனியா வடக்கில் பழைய கிராமமான காஞ்சிரமாட்டை கிராமத்தில் வாழ்ந்த சுமார் 300 குடும்பத்தினர் யுத்தம் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்து இந்தியாவிற்கும் நாட்டின் பல இடங்களுக்கும் இடம்பெயர்ந்திருந்தனர்.

இந் நிலையில் 2011 ஆம் ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பிய இம் மக்களுடன் உள் நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுமாக உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்து கடந்த 5 மாதங்களுக்கு முன் காஞ்சிரமோட்டை கிராமத்தில் குடியேற்றப்பட்டனர்.

எனினும் அவர்கள் அங்கு வாழ்வதற்கு வன இலாகாவினர் அனுமதி மறுத்து வந்திருந்ததுடன் குறித்த பகுதி வன வளத்திணைக்களத்திற்குரிய பகுதி என தெரிவித்து குடியேறிய மக்களுக்கு தொடர்ச்சியாக இடையூறுகளை ஏற்படுத்தி வந்திருந்தனர். இதன் காரணமாக அம் மக்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகாரசபையால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் வட மாகாணசபையின் கவனத்திற்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கொண்டு வந்ததை அடுத்து வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் வடக்கு விவசாய அமைச்சர் க.சிவநேசன், உறுப்பினர்களான சபா. குகதாஸ், எம்.கே.சிவாஜிலிங்கம், இ.ஜெயசேகரன், அ.பரஞ்சோதி, ப.அரியரட்ணம், கே.தர்மலிங்கம், வ.கமலேஸ்வரன், ஆ.புவனேஸ்வரன், து.ரவிகரன், சு.பசுபதிப்பிள்ளை ஆகிய 12 மாகாணசபை உறுப்பினர்கள் அடங்கிய குழு குறித்த பகுதிக்கு வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடி நிலைமைகளை பார்வையிட்டிருந்தனர்.

இதன்போது அப்பகுதியில் இடிந்து போயுள்ள நாவலர் பண்ணை அரசினர் கலவன் பாடசாலையினையும் பார்வையிட்டிருந்ததுடன் அதனை மீள் இயக்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பது தொடர்பாகவும் மாகாணசபை உறுப்பினர்கள் முடிவெடுத்திருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்திருந்த அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், குறித்த பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான பல அடையாளங்கள் உள்ளது. எனினும் வன வளத்திணைக்களம் மக்களை அங்கு குடியேற தடை விதித்து வருகின்றனர்.

இது தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் கவனம் செலுத்தி இந்தியாவில் இருந்து வந்த மக்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும். அத்துடன் இவ்விடயம் தொடர்பாக இந்தியாவின் கவனத்திற்கும் கொண்டு செல்வோம் என தெரிவித்தார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன் : பரபரப்பை கிளப்பிய பிரபல இயக்குனர்!!

பெண் கவிஞரும் இயக்குனருமான லீனா மணிமேகலை தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அந்த இடத்திலேயே தூக்கில் தொங்குவேன் என இயக்குனர் சுசி கணேசன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் அத்துமீறல்களை அம்பலப்படுத்தும் மீ டூ இயக்கம் கலை, அரசியல் என பல்வேறு துறைகளில் புயலை கிளப்பியுள்ளது. தமிழகத்தில் பத்திரிகையாளர் சந்தியா மோகன், பாடகி சின்மயி உள்ளிட்ட சிலர் தங்களுக்கு நேர்ந்த துயரங்களையும், பலர் இவர்களுடன் பகிர்ந்துகொண்ட தகவல்களையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினர்.

இதில், பாடலாசிரியர் வைரமுத்து தம்மை படுக்கைக்கு அழைத்தார் எனவும், இளம்பெண் ஒருவருக்கு ஆபாச கவிதையை தொலைபேசியில் பாடினார் எனவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பெண் கவிஞரும், இயக்குனருமான லீனா மணிமேகலை, சக இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

காரில் ஒன்றாக சென்றபோது, பாலியல் ரீதியாக அத்துமீறியதாக லீனா மணிமேகலை கூறியதை மறுத்துள்ள சுசி கணேசன், தன் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்க தான் தயார் எனவும், இது தமக்கு அவமானமாக உள்ளது எனறும் அவர் தெரிவித்துள்ளார்.

தன் மீது எந்த தவறும் இல்லை எனவும் அதனை நீதிமன்றம் வரை கொண்டு சென்று நிரூபிக்க தயார் எனவும் தெரிவித்த சுசி கணேசன்,
அவ்வாறு தான் குற்றம் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் அந்த இடத்திலேயே தூக்கில் தொங்குவேன் என தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சுசி கணேசன் இவ்வாறு தெரிவித்திருப்பது அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கிண்டல் செய்ததால் பெண் வேடமிட்டு மியூசிக்லி செய்த இளைஞர் மனமுடைந்து தற்கொலை!!

 

சென்னையில் பெண் வேடமிட்டு மியூசிக்லி செய்து வீடியோ வெளியிட்ட இளைஞரை கிண்டல் செய்த காரணத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

கலையரசன். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
ஆப்பை பயன்பபடுத்தி பல சினிமா பாடல்களுக்கும் பெண்கள் போல வேடமிட்டு மியூசிக்லி செய்து வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இவரது வீடியோவை பார்த்து நண்பர்கள் பலரும் கிண்டல் செய்துள்ளனர். என்னை கிண்டல் செய்யாதீர்கள்… உங்களுக்கு விருப்பமென்றால் பாருங்கள், இல்லையென்றால் என்னை பிளாக் செய்துவிட்டு போங்கள் என கலையரசன் கூறியும், அதனை கேட்காத நண்பர்கள் தொடர்ந்து கிண்டல் செய்துள்ளனர்.

ஆனால் கேலி ஒரு கட்டத்தில் உச்சிக்கு செல்ல மனமுடைந்து இறுதியில் பொறுத்துக்கொள்ள முடியாத கலையரசன் கடந்த 12-ஆம் தேதி மின்சார ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இளைஞனுக்கு எமனாக மாறிய எருமை மாடு!!

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்து ஒன்றில் 19 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் மல்லிகைத்தீவு, மணற்சேனை பகுதியைச் சேர்ந்த 19 வயதான குமரகுருபரன் தனுஷ்கரன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞனட சம்பூர் பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு விட்டு சக நண்பர்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, நண்பர்களை மல்லிகை சந்தியில் இறக்கிவிட்டு மீண்டும் தோப்பூர் பகுதிக்கு சென்றுள்ளார். இதன் போதே எருமை மாட்டுடன் மோதி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனின் சடலம் மூதூர் பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இளைஞனின் மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.எம்.நூறுல்லாஹ் முன்னெடுத்துள்ளதுடன் மரணத்தில் ஏதும் சந்தேகம் இல்லாமையினால் அவரது சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாக மூதூர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை விபத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் எருமைமாடு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து பாலியல் வன்கொடுமை : என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என தாய் கண்ணீர்!!

தமிழகத்தில் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து கொள்ளையர்கள் அந்த பெண்ணிடம் அத்து மீறி நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் மண்ணிவாக்கத்தைச் சேர்ந்தவர் மொயின். கடந்த 15-ஆம் திகதி இவர், இவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென்று உள்ளேஎ நுழைந்த கொள்ளையர்கள், அவரின் மனைவியிடம் அத்துமீறி நடந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண் தமிழ் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். அதில் சம்பவ தினத்தன்று நான், கணவர், குழந்தைகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தோம்.

அப்போது திடீரென்று உள்ளே நுழைந்த நான்கு பேர், கணவனை கத்தியால், வெட்டிவிட்டு, அதன் பின் தன்னை ஓர் அறைக்குள் இழுத்துச் சென்றனர்.

அங்கு என்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றனர். நான் கடைசி வரை போராடினேன். இருப்பினும் என்னுடைய தொடை, மார்பு பகுதிகளில் பிளேடால் கிழித்து என்னை அரை நிர்வாணமாக்கினர்.

என்னுடைய அலறல் சத்தைக் கேட்டு, அருகிலிருந்த பாபு என்பவர் வீட்டினுள் வந்து சம்பவத்தைக் கண்டு, எங்களை காப்பாற்ற முயன்றார். அவரை அந்த நபர்கள் கத்தியால் வெட்டினர்.

அதன் பின் கணவர் மற்றும் அவரை முட்டி போட 20 நிமிடங்கள் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தனர். குழந்தைகளின் கழுத்தில் கத்தியிருந்ததால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மேலும் தகவல்கள் தெரிவிக்கையில், வீட்டுக்குள் நுழைந்த நான்கு பேரும் முதலில் செல்போன்களைப் பறித்துள்ளனர். பிறகு தாலியையும் வீட்டிலிருந்த 3,000 ரூபாயையும் கத்தியைக் காட்டி மிரட்டி பிடுங்கியுள்ளனர்.

அதன் பிறகுதான் மொய்தீனின் மனைவியிடம் தகாத முறையில் நடந்துள்ளனர். அதைத் தட்டிக்கேட்ட மொய்தீன், பாபு ஆகிய இரண்டு பேரையும் வெட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மொயினின் உறவினர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததால், அவர்கள் வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் தொல்லை குறித்து எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லை என்று பொலிசார் கூறியுள்ளார்.

வவுனியாவில் திருவள்ளுவர் சிலை திரைநீக்கம்!!

வவுனியாவில் திருவள்ளுவர் சிலை திரைநீக்கம் செய்யும் நிகழ்வும், தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளரை கௌரவிக்கும் நிகழ்வும் இன்று (17.10) இலங்கை திருச்சபை கலவன் பாடசாலையில் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை கலவன் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் முத்து ராதாகிருஸ்ணனால் திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் முத்து ராதாகிருஸ்ணன் துறைசார் ரீதியாக பதவி உயர்வு பெற்றுள்ளமையால் அவரை கௌரவிக்கும் முகமாக பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களால் மாலை அணிவத்து பொன்னாடை போர்த்தி பாண்டுவாத்தியங்கள் முழங்க பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து தெற்கு வலயக்கல்வி பணிப்பாளரால் பாடசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் முத்து ராதாகிருஸ்ணன் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் மாணவர்கள் மனவிருப்பதுடன் ஆசிரியர்களின் பங்களிப்புடன் கல்விகற்றால் நிச்சயமாக அதிகூடிய பெறுபேறுகளை பெற முடியும். ஆகவே இந்த சந்தர்ப்பத்தை ஆசிரியர்களும் மாணவர்களும் சரியாக பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மனைவியை நடுரோட்டில் வைத்து வெட்டி கொலை செய்த கணவர்!!

மதுரை மேலூர் அருகே பிரிந்து வாழ்ந்த மனைவியை பேருந்து நிறுத்தத்தில் வைத்தே கணவர் வெட்டிக்கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது.

மேலூர் அருகே அழகிரிபட்டியைச் சேர்ந்தவர் பிரபு (32). இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் ராதிகா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

டெல்லியில் உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த பிரபு, தனியாக உணவகம் ஒன்று ஆரம்பிக்க வேண்டும் என ராதிகாவின் நகைகளை அடமானம் வைத்து கடையை ஆரம்பித்துள்ளார். ஆனால் அதில் நஷ்டம் ஏற்பட்டதால், கணவன்-மனைவி இருவருக்குமிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் கணவனை பிரிந்த ராதிகா பெற்றோருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். மேலும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதனால் பிரபு மேலும் கோபத்தில் இருந்துள்ளார்.

பலமுறை ராதிகாவை சந்தித்து சமாதானம் பேச முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்ததால் ஆத்திரமடைந்த பிரபு நேற்று பணி முடிந்து பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்த ராதிகாவை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் சுருண்டு தரையில் விழுந்த ராதிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்த வழக்கு பதிவு செய்த பொலிஸார் தற்போது பிரபுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா இளைஞன் ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் : சிறந்த முறையில் இடம்பெற்ற கௌரவிப்பு!!

ஆசியா 2018 பரா விளையாட்டில் தங்கப்பதக்கம் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்த வவுனியா – பொகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த சரித்த நிர்மல புத்திக்க இந்திரபால கௌரவிக்கப்பட்டுள்ளார்.

வடமாகாணசபை உறுப்பினர் தர்மபாலா செனவித்தினாவின் மூன்றுமுறிப்பு அலுவலகத்திலிருந்து இன்று காலை அவருடைய பொகஸ்வெவ பகுதிக்கு வாகனப் பேரணியாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்தோனேசியா, ஜகார்த்தாவில் இடம்பெற்ற ஆசியா 2018 பரா விளையாட்டில் நீளம் பாய்தலில் தங்கப்பதக்கம், 200 மீற்றர் ஓட்டத்தில் பிறன்ஸ் பதக்கத்தையும், உயரம் பாய்தலில் 5ஆவது இடத்தினையும் பெற்று இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இவரை கௌரவிக்கும் நிகழ்வில் கிராம மக்கள் கலந்துகொண்டு வாகனப் பேரணியாக குறித்த இளைஞனை பாடசாலைக்கு அழைத்துச் சென்று கௌரவிப்பு செய்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 2016ஆம் ஆண்டு டுபாய் நாட்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் 100, 200 மீற்றர் ஓட்டம், உயரம் பாய்தலில் பங்கு பற்றி பதக்கங்களை பெற்று வெற்றி வாகை சூட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மக்களை வியக்கவைத்த இருவேறு அதிசயங்கள்!!

வவுனியா செட்டிகுளம், மகாறம்பைக்குளம் ஆகிய பகுதிகளில் இன்று இருவேறு அதிசங்கள் இடம்பெற்றுள்ளது.

வவுனியா செட்டிகுளம் பிரதேசத்திலுள்ள கங்கன்குளம் ஸ்ரீ சுப்பிரமணியம் வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி 9ஆம் நாள் பூஜையின்போது கும்பத்திற்கு வைக்கப்பட்ட தேங்காயில் மனித கண் தோன்றிய அதிசயம் நிகழ்ந்துள்ளது.

அத்துடன் வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியிலுள்ள வீட்டில் வழை மரம் ஒன்றில் நடுப்பகுதியில் வாழைப்பூ தள்ளிய அதிசயமும் இடம்பெற்றுள்ளது.

வாழைப்பூ வாழையின் மேலிருந்தே வருவதை அவதானிக்க முடியும் ஆனால். இன்று வழமைக்கு மாறாக வாழையின் நடுப்பகுதியில் வாழைப் பொத்தி தள்ளி அப்பகுதியில் அதிசயம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு இடம்பெற்ற இரண்டு அதிசயங்களையும் அறிந்த மக்கள் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!!

வவுனியா மாவட்டத்தில் 8,583 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேச செயலகப்பிரிவுகளிலும் 2370 குடும்பங்களைச் சேர்ந்த 8583 பேரே பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் சட்டத்தினூடாக கேட்கப்பட்ட தகவல்களுக்கு வழங்கப்பட்ட பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வறட்சி நிவராண செயற்பாடுகள் 2018 வவுனியா மாவட்டத்திலுள்ள செட்டிகுளம், நெடுங்கேணி, வவுனியா தெற்கு, வவுனியா ஆகிய நான்கு பிரதேச செயலகப்பிரிவுகளிலும், புரட்டாசி மாதம் வரை வறட்சியினால் பாதிக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ள 2370 குடும்பங்களை சேர்ந்த 8583 பேருக்கு ஏப்ரல் மாதத்திலிருந்து புரட்டாசி மாதம் வரையான காலப்பகுதிகளில் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இக்குடிநீர் விநியோகத்திற்காக 1.742 மில்லியன் ஒதுக்கீட்டினை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் வழங்கியுள்ளதுடன் புரட்டாசி மாதம் வரை அதற்கான மொத்த செலவீனம் 616.774.7 மில்லியனாக காணப்படுகின்றது.

மேலும் வறட்சி உலர் உணவு நிவாரணம் முதலாம் கட்டம், வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாய கூலியாட்கள் மற்றும் மேட்டு நில பயிர்ச் செய்கையாளர்களுக்கான நிவாரண உதவிகள் இரண்டாம் கட்டம், வறட்சியினால் பாதிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் நடைபெறும் பிரதேசங்களில் காணப்படும் பொதுக்கிணறுகள் ஆழப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.