நாட்டில் அடுத்து வரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே நாட்டில் குறிப்பாக மத்திய மாகணம் , ஊவா மாகணம் மற்றும் சப்ரகமுவ மாகாணம்,காலி, மாத்தறை மாவட்டங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் அடுத்து வரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் பிரதேசத்தில் 16 வயது மாணவி ஒருவரை ஆசைவார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயதுடைய ஆசிரியர் ஒருவரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
மண்டூர் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11 கல்வி கற்றுவரும் மாணவியை அப்பாடசாலையில் கடமையாற்றிவரும் பெரியநீலாவளையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய ஆசிரியர் நீண்ட நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளார் என பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவதினமான நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த ஆசிரியரை பொலிஸார் கைது செய்தனர்.
இதேவேளை, தாயார் வெளிநாட்டிற்கு வேலைக்காக சென்றதனால் பாதிக்கப்பட்ட மாணவி அவரது அம்மம்மாவுடன் வாழ்ந்துவருகின்றார்.
இந்த நிலையில் குறித்த ஆசிரியர் சிறுமிக்கு கையடக்கத் தொலைபேசி ஒன்றை வாங்கி கொடுத்து அதனூடாக சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி பாடசாலையில் சனி ஞாயிறு கிழமைகளில் நடக்கும் பிரத்தியோக கல்வி நடவடிக்கையின் போது பாடசாலையில் வைத்தும் ஏனைய இடங்களுக்கு வரவழைத்தும் பாலியல் துஷ்பிரயோம் மேற்கொண்டுவந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைளகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட ஆசிரியரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா ஓமந்தை பொலிசாரின் நடவடிக்கையின்போது இன்று(19.10) அதிகாலை 1670 போதை வில்லைகளுடன் திருகோணமலையைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 1.30 மணியவில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை சென்ற தனியார் பேருந்தை ஓமந்தை பகுதியில் வழிமறித்த பொலிசார் அதில் சென்ற இளைஞர்கள் இருவரை சோதனைக்குட்படுத்திய போது சட்டவிரோத போதை வில்லைகளை தமது உடமையில் வைத்திருத்த 23, 25 வயதுடைய திருகோணமலையைச் சேர்ந்த இருவரைக் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து 1670 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இந்நடவடிக்கையின்போது ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ் த சில்வா தலைமையில் சென்ற குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஓமந்தைப் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
காலி, எல்பிட்டிய பொது சந்தையில் மரக்கறி விற்பனை செய்யும் பல்கலைக்கழக பட்டாரி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
2012ஆம் ஆண்டு களனி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பெண் ஒருவரே இவ்வாறு மரக்கறி விற்பனை செய்து வருகின்றார்.
நிலந்தி விக்ரமசிங்க என்ற பெயருடைய அவர் எல்பிட்டிய ஆனந்த வித்தியாலயத்தில் உயர் தரத்தில் சிறந்த முறையில் சித்தியடைந்து களனி பல்கலைக்கழத்தில் படிப்பை தொடரும் வாய்ப்பை பெற்றார்.
நிலந்தியின் சிறு வயதில் நாட்டில் நிலவிய யுத்த நிலை காரணமாக அவரது தந்தை காணாமல் போயுள்ளார். இந்நிலையில், கடுமையான சிமரத்திற்கு மத்தியில் தாய் அவரை படிக்க வைத்துள்ளார். அவர் விசேட பட்டம் பெற்ற பட்டதாரி என்ற போதிலும், இதுவரை அவருக்கு நல்லதொரு தொழிலும் கிடைக்கவில்லை.
தாய் உடல் நலமற்ற நிலையில் உள்ளமையினால் அவரை தனியாக விட்டுவிட்டு தூர பிரதேசத்தில் தொழில் தேடி செல்ல முடியவில்லை. இதனால் அவர் மரக்கறி விற்பனை செய்வதற்கு அவர் தீர்மானித்துள்ளார்.
தன்னுடன் படித்தவர்களுக்கு தங்கள் ஊரில் நல்ல வேலைகள் கிடைத்த போதிலும் தனக்கு உரிய வேலை கிடைக்கவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
கிடைக்கும் வருமானத்தில் தாயை பாதுகாத்து வாழ்ந்து வருகின்றார். நிலந்தியின் செயற்பாடு குறித்து அந்தப் பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு நாடொன்றில் மிகவும் பெறுமதி வாய்ந்த வைர கல்லை திருடிய இலங்கையர்களுக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் அபூர்வமான வைர கல்லை திருடியவர்களுக்கே சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 73 மில்லியன் டினார் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வைரக் கல்லை, டுபாய் பொலிஸார் இலங்கையிலிருந்து மீட்டுள்ளனர். மிகவும் அரிய வகையிலான நீல வைரக் கல் ஒன்று இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கப்பல் ஊடாக பாதனி ஒன்றை அனுப்பி வைப்பதனை போன்று வைரக் கல்லை அந்தக் பாதணி பெட்டியில் மறைத்து வைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய இரண்டு இலங்கையர்களுக்கும் நேற்றைய தினம், டுபாய் குற்றவியல் நீதிமன்றத்தினால் 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொறு 38 வயதான இலங்கையருக்கு 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் பாதுகாப்பு பிரிவினரில் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வைரக் கல்லை மிகவும் நுட்பமான முறையில் திருடப்பட்டுள்ளது.
அமீரகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவரே இந்த வைரக் கல்லை மிகவும் நுட்பமான முறையில் திருடியுள்ளார். பின்னர் அதனை அவர் இலங்கைக்கு, அனுப்பி வைத்துள்ளார். அதற்கமைய சம்பவத்திற்கு தொடர்புபட்டவர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.
இந்த வைரக் கல் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பல ஆயிரம் பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் 8620 மணித்தியாலங்கள் சீ.சீ.ரீ.வி கமராக் காட்சிகள் கண்காணிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு யுவதி ஒருவரின் செயற்பாடு காரணமாக இலங்கையர் தலை குனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளிலுள்ள ரயில் நிலையத்தில் வீசப்பட்டிருந்த குப்பைகளை, வெளிநாடு யுவதி ஒருவர் தனியாக துப்பரவு செய்து வருகிறார்.
இலங்கையர்கள் பொறுப்பற்ற வகையில், குப்பைகளை கண்ட இடங்களில் வீசுவதன் மூலம் சூழலைக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர்.
இந்நிலையில், வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கை வந்த வெளிநாட்டு யுவதி ஒருவர், நாட்டின் அழகை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இது ஒட்டுமொத்த இலங்கையர்களையும் தலை குனிய வைத்துள்ளது.
இது குறித்து சமூக வலைத்தளங்களில் பாராட்டி பதிவுகள் இடப்பட்டுள்ளன.
“அக்கறை இல்லாத இலங்கையர்களுக்கு மத்தியில் இலங்கையின் அழகை பாதுகாப்பதற்கு கஷ்டப்படும் இந்த வெளிநாட்டு பெண்ணை பார்க்கும் போது உண்மையாகவே கவலையாக உள்ளது. ஏன் இலங்கையர்கள் இப்படி கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுகின்றார்கள்?” என குறிப்பிட்டு பேஸ்புக்கில் பலர் இந்த புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளனர்.
இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கைக்கு அமைய, அதற்கமைய 172.72 ரூபாயாக அமெரிக்க டொலரின் விற்பனை விலை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த 15ஆம் திகதி ரூபாயின் பெறுமதி தீடீரென அதிகரித்திருந்தது.
பல மாதங்களின் பின்னர் அந்த அதிகரிப்பு காணப்பட்ட நிலையில் நேற்று பழைய நிலைமைக்கு ரூபாய் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று வரை டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 168.84 ரூபாயாக பதிவாகியுள்ளது.
15ஆம் திகதிக்கு முன்னர் ரூபாயின் 172.90 ரூபாயாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வழக்குத் தாக்கல் செய்யப்படாதுள்ள 102 தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தான், கடந்தவாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடியபோது இது குறித்து விளக்கமளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
தமது விடுதலையை வலியுறுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் கொழும்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறினார். தொடர்ந்தும் பேசிய அவர்,
கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் சிலருக்கு எதிராக தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சுமார் 102 பேருக்கு எதிரான வழக்குகள் தாக்கல் செய்யப்படவில்லையென பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இவர்களில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டியவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும்.
அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பொது மன்னிப்பில் விடுவிக்கப்படக் கூடியவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.
எனினும், இவர்கள் அனைவருக்கும் எதிராக ‘பீ’ அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தன்னிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை படுகொலை செய்த குற்றவாளிகள் போன்றவர்களை விடுதலை செய்ய முடியாது என்பதை பிரதமர் எடுத்துக் கூறியிருந்தததாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
ஆசியாவிலேயே கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் முதல் குழந்தை பிறந்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த மீனாட்சி என்ற இளம் பெண் நீண்ட வருடங்களாகக் குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளார்.
மூன்று முறை கருச்சிதைவு, மேலும் ஒரு முறை குழந்தை இறந்தே பிறந்துள்ளது. இனிமேல் மீனாட்சிக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, மீனாட்சியின் தாய் அவருக்குக் கருப்பையைத் தானமாக வழங்கியுள்ளார். கடந்த வருடம் மே மாதம் மீனாட்சிக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
மீனாட்சி உடல்நிலை சற்று தேறிய பிறகு இந்த வருடம் ஏப்ரல் மாதம் இவருக்கு கருத்தரிப்பு சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த நிலையில், நேற்று புனேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மீனாட்சிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
மீனாட்சிக்குப் பிறந்த குழந்தை 1450 கிராம் எடையுடன் மிகவும் ஆரோக்கியமாக உள்ளதாகவும் தாய், குழந்தை இருவரும் நலமுடன் உள்ளனர் என்றும் அவர்களைக் கண்காணிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீனாட்சிக்குப் பிறந்த குழந்தை 1450 கிராம் எடையுடன் மிகவும் ஆரோக்கியமாக உள்ளதாகவும் தாய், குழந்தை இருவரும் நலமுடன் உள்ளனர் என்றும் அவர்களைக் கண்காணிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பம் ஒன்றை சேர்ந்த மாணவி ஒருவர் வேலை செய்து கொண்டே படித்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். வறுமையை தனது படிப்பால் வெற்றி கண்டுள்ள அந்த மாணவி குறித்த பதிவை பார்க்கலாம்.
தேனி மாவட்டம், பூசலூர்த்து என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராமலக்ஷ்மி. நல்லான், அழகம்மாள் என்ற விவசாய கூலி தம்பதியின் 5 மகள்களில் நான்காவது மகள் இவர்.
தனது ஊரிலேயே அரச பள்ளி ஒன்றில் படித்த ராமலக்ஷ்மியால் தனது சகோதரிகள் போலவே 12ஆம் வகுப்பு வரையே படிக்க முடிந்தது. வறுமை துறத்த படிப்பை தொடர முடியாமல் போனது, உகோவையில் உள்ள தனியார் ஆலையம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். ஆலையில் படித்து கொண்டே வேலை செய்ய கிடைத்த வாய்ப்பை ராமலக்ஷ்மி தவரவிடவில்லை.
கல்லூரி படிக்க வைக்கும் அளவுக்கு பெற்றோர்களுக்கு வசதியில்லை. அதனால் நான் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். பின்னர் படித்து கொண்டே வேலை செய்யும் சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது. அதற்கமைய படித்து கொண்டே வேலை செய்தேன் என ராமலக்ஷ்மி தெரிவித்துள்ளார்.
தாம் பயிற்சி BCA துறையில் 79 சதவீத மதிப்பெண்களை பெற்று தங்கம் வென்றுள்ளார் இந்த சாதனை நாயகி. மேலும் கனடாவின் காமன்வெல்த் வழங்கும் சிறப்பு விருதையும் பெற்றுள்ளார். சிறப்பு விருதுடன் பரிசாக பெற்ற 25000 ரூபாயில் மேற்படிப்பை படிக்கவுள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கிறார் ராமலக்ஷ்மி.
“எங்கள் குடும்பத்தில் நான் தான் முதல் பட்டதாரி. CEMCA AWARD பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை” என ராமலக்ஷ்மி குறிப்பிட்டுள்ளார்.
விவசாய கூலிகளாக இருந்தாலும் தங்கள் மகள்களை ஆழாக்கி அழகு பார்க்க நினைக்கும் ஏழை தம்பதிகளுக்கு தங்கள் மதிப்பெண்களாலும், தங்கத்தாலும் பெறுமை சேர்த்துள்ள ராமலக்ஷ்மி மற்றவர்களுக்கு நம்பிக்கை இருக்கின்றார் என்றால் அது மிகையல்ல.
பிரேசிலில் எட்டு மாத கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்துள்ள சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரேசிலின் Joao Pinheiro அருகே உள்ள பகுதியில் Mara Cristiana da Silva என்ற 23 வயது இளம் கர்ப்பிணி பெண் வயிறு கிழிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
இந்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார், இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் Angelina Rodrigues என்ற பெண்ணை கைது செய்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில், Mara Cristiana da Silva என்ற பெண் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அப்போது இவருக்கு Angelina Rodrigues என்ற பெண் உதவியாக இருந்துள்ளார். பணம் போன்றவைகள் எல்லாம் கொடுத்து உதவியுள்ளார்.
ஆனால் Angelina Rodrigues-க்கு குழந்தை என்றால் மிகவும் பிடிக்குமாம். இந்நிலையில் சம்பவம் நடத்த தினத்தன்று Mara Cristiana da Silva மது அருந்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது Angelina Rodrigues இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவரை ஒரு மரத்தில் கட்டி வைத்துள்ளார். அதன் பின் கத்தியால் அவரின் வயிற்றை கிழித்து உள்ளே இருந்த குழந்தையை எடுத்துள்ளார். இதில் Mara Cristiana da Silva உயிரிழந்துள்ளார்.
அதன் பின் Angelina Rodrigues குழந்தையை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, இது தனக்கு பிறந்த குழந்தை என்று அங்கிருக்கும் மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.
ஆனால் குழந்தை பெற்ற பெண் போன்று இல்லாமல் Angelina Rodrigues சாதரணமாக நடந்து வந்ததால், மருத்துவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னரே பொலிசார் Angelina Rodrigues-ஐ கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் இரண்டு பேர் ஈடுபட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
Mara Cristiana da Silva-ன் கணவர் மீதும் பொலிசாருக்கு சந்தேகம் இருப்பதால், அவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது வெளியில் எடுக்கப்பட்ட குழந்தை Patos de Minas பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் பத்திரமாக சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் Angelina Rodrigues கர்ப்பம் இல்லை என்பது தெரியவந்துள்ளதால், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையாக இருக்கலாம் என்று பொலிசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் Angelina Rodrigues கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினாரா அல்லது தோழியா என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.
அமெரிக்காவின் விஸ்கன்சின் மாகாணத்தில் பெற்றோர் கொல்லப்பட்டபின் காணாமல்போன 13 வயது சிறுமியை மாகாண அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஜேமி க்லாஸ் என்ற குறித்த சிறுமியின் பெற்றோர், ஜேம்ஸ் மற்றும் டெனிஸ் க்லாஸ், சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டுபிடித்துள்ள காவல் துறையினர்,
அச்சிறுமியும் தற்போது ஆபத்தை எதிர்கொண்டிருக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி அவரை மீட்கும்வரை நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த திங்கள் அன்று காலை சுமார் ஒரு மணியளவில் அவசர உதவி எண்ணான 911-ன் தரவுகளின்படி, தாக்குதல் நிகழ்ந்தபோது அச்சிறுமி வீட்டில் இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும் சிறுமி அளித்த தகவல்களின் அடிப்படையில் பொலிசார் குற்றவாளிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலையில் அச்சிறுமி மீது சந்தேகம் இல்லையென அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முகநூல் தலைவர் பொறுப்பில் இருந்து மார்க் ஜூக்கர்பெர்க்கை நீக்கும் திட்டத்திற்கு, பெரிய அளவிலான பங்குதாரர்களில் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முகநூல் மூலம் ரஷ்யா தலையிட்டதாக எழுந்த புகார், முகநூல் பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனம் அணுகியது உள்ளிட்ட சர்ச்சைகளை முகநூல் நிறுவனம் சரிவரக் கையாளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே முகநூல் இயக்குநர்கள் குழு தலைவர் பொறுப்பில் இருந்து மார்க் ஜூக்கர்பெர்க்கை நீக்கிவிட்டு, அதை சுயேச்சைத்தன்மை கொண்ட பதில் சொல்லக் கடமைப்பட்ட பொறுப்பாக மாற்றவேண்டும் என்று, பெரிய அளவில் பங்குகளை வைத்திருப்பவர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. முகநூல் நிறுவனத்தில் பெரும் எண்ணிக்கையில் பங்குகளை வைத்துள்ள பொது நிதியங்கள் இந்த முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
45 இலட்சம் பங்குகளை வைத்துள்ள நியூயார்க் சிட்டி ஓய்வூதிய நிதியம் 38 ஆயிரத்து 737 பங்குகளை வைத்துள்ள பென்சில்வேனியா கரூவூலம் 53 ஆயிரம் பங்குகளை வைத்துள்ள டிரில்லியம் அசெட் மேனேஜ்மெண்ட் போன்றவை இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
முகநூல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆண்டுக்கூட்டம் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற உள்ளது. அதில் முகநூல் தலைவர் பொறுப்பை சுயேச்சைத்தன்மை கொண்டதாக மாற்றும் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்படும்.
எனினும் முகநூல் பங்குதாரர்களுக்கு உள்ள மொத்த வாக்குரிமையில் 60 சதவீத வாக்குரிமை மார்க் ஜூக்கர்பெர்க் வசம் இருப்பதால் அவரது தலைவர் பதவிக்கு சிக்கல் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிஸ்லாந்தில் சக ராணுவ வீரர் ஒருவரை மற்ற வீரர்கள் சிரித்துக் கொண்டே கல்லால் அடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் தனித்து ஒரு வீரர் நிறுத்தப்பட்டிருக்க உயர் பதவியிலிருக்கும் ஒருவர் உத்தரவிட்டதும் மற்ற வீரர்கள் அவர் மீது கற்களை எறிகின்றனர். பின்னர் கல்லால் அடிக்க உத்தரவிட்டவர் கோபத்துடன் அந்த வீரரிடம் ஏதோ கூறி விட்டு செல்கிறார்.
எதற்காக அவர்மீது கற்களை எறிந்தார்கள்? அவர் ஏதாவது குற்றம் செய்தாரா? என்பது குறித்து இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. அது மட்டுமின்றி பழி வாங்கப்படலாம் என்ற அச்சத்தில், தான் தாக்கப்பட்டதாக அந்த வீரரும் புகாரளிக்கவில்லை.
ராணுவத்தினரிடையே பிரபலமான அந்த வீடியோ, பின்பு சமூக ஊடகங்களிலும் வெளியாக, தாக்கப்பட்ட அந்த வீரரின் தந்தை அந்த வீடியோவைப் பார்த்து விட்டு புகாரளித்ததால்தான் விடயம் வெளியில் வந்திருக்கிறது.
சம்பவ இடத்திற்கு ராணுவ தலைவர் சென்று விசாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ள ராணுவம், ராணுவத்தில் இத்தகைய தண்டனைகளுக்கு இடமில்லை என்றும், ராணுவ நீதித்துறை குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கிரிமியாவில் நேற்று நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல் குறித்த வீடியோவும், அதிர்ச்சி தகவல்களும் வெளியிடப்பட்டன.
கிரிமியாவில் Vladislav Roslyakov என்ற 18 வயதான மாணவர், துப்பாக்கி மற்றும் குண்டுகளை கொண்டு பயங்கரமான தாக்குதல் நடத்தியதோடு, கல்லூரி உணவு விடுதியிலேயே தற்கொலை செய்துகொண்டு இறந்த போனார்.
உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்த கொடூர சம்பவத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 68 பேர் படுகாயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 பேர் கோமா நிலையில் இருப்பதாகவும், அவர்கள் நிலை கவலைக்கிடமாக இருப்பதாவதும் கூறியுள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படாத நிலையில், அதிபர் புதினால் நியமிக்கப்பட்ட அதிகாரியின் கீழ் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தாக்குதலில் Vlad மட்டுமே ஈடுபட்டிருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், மேலும் ஒரு நபர் ஈடுபட்டார் என சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து Vlad-ன் வகுப்பு மாணவர் ஒருவர் கூறுகையில், திங்கட்கிழமையன்று Vlad பள்ளிக்கு வருகை தரவில்லை. ஒருவேளை அவன் முன்னாள் காதலியை சந்திக்க சென்றிருக்கலாம். அந்த பெண் மீது இருந்த ஆத்திரத்தில் தான் இப்படி செய்திருக்கலாம் என தெரிவித்தார்.
மற்றொரு மாணவர், Vlad அதிகமான கம்ப்யூட்டர் விளையாட்டுக்கள் விளையாடுவான். அதற்கு அதிகமாக அடிமையாகி இருந்ததால், அதன் மீது இருந்த தாக்கத்தில் இப்படி செய்திருக்கலாம் என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை அதிகாரிகள் கூறுகையில், கொல்லப்பட்டவர்கள் அதிகமானோர் பெண்கள் தான். பெரும்பாலும் 15 முதல் 19 வயதிற்குட்பட்டவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வீட்டில் தயாரிக்கப்பட்ட 3 குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும், 20 குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
வவுனியா குடியிருப்பு பகுதியிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதி நீண்டகாலமாக செப்பனிடப்படவில்லை இதனால் பாடசாலை மாணவர்கள், முச்சக்கரவண்டிகள், துவிச்சக்கரவண்டியில் பயணம் மேற்கொள்பவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதுடன் பாடசாலை மாணவர்கள் அடிக்கடி விபத்துக்களுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குடியிருப்பு பகுதியிலுள்ள இலங்கை தென்னிந்திய திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் பூந்தோட்டம் மாணவர்கள் பலர் இவ்வீதியை பயன்படுத்தி வருகின்றனர். இவ் வீதி நீண்டகாலமாகவே இவ்வாறு குன்றும் குழியுமாக காட்சியளிக்கின்றது.
மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் முதல் வாகனச்சாரதிகள் அனைவரும் இவ்வீதியைத் திருத்தித்தருமாறு கோரியுள்ள நிலையிலும் இன்று வரையிலும் இவ்வீதி திருத்தப்படவில்லை.
100 மீற்றர் நீளமுடைய வீதியில் சில இடங்களில் பாரிய குண்டும் குழியும் ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு சிறுவர் பூங்காவிற்கு பலர் தமது பிள்ளைகளை அழைத்துச் செல்வதும் இவ்வீதியூடாகவே. எனவே குறித்த வீதியைத்திருத்தி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.