துப்பாக்கி முனையில் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களுக்கு கிடைத்த தண்டனை!!

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தூத்துக்குடி மீனவர்கள் 8 பேருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை மற்றும் தலா 60 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கல்பிட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தகவலை அறிந்த தூத்துக்குடி மீனவர்கள் “சொந்தமா படகு இல்லாத காரணத்தினால் தான், நாங்களே மற்றவர்களின் படகுகளில் கூலிக்காக கடல் தொழிலுக்குப் போறோம். இந்த நிலையில 60 லட்சம் ரூபாய் அபராதமா? அவ்வளவு பணத்துக்கு நாங்க எங்க போவது? அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என கண்ணீர் வடித்துள்ளனர்.

இதில் தூத்துக்குடி திரேஸ்புரம் கடல்பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், அந்தோணி ரூபின்ஸ்டன், வில்பிரட், விஜய், ரமேஷ், ஆரோக்கியம், வினோதன் மற்றும் பாக்கியம் ஆகிய 8 மீனவர்களுக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் அவர்களைச் சுற்றி வளைத்து, “எல்லை தாண்டி மீன்பிடித்ததால் உங்களைக் கைது செய்கிறோம்” எனக்கூறி, துப்பாக்கி முனையில் படகுடன் இலங்கைக்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு, மீண்டும் கல்பிட்டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி, மீனவர் ஒருவருக்கு தலா 60 லட்சம் ரூபாய் அபராதமும், வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் திகதி வரை அதாவது மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையும் அளித்து தீர்ப்பளித்தார்.

இதைத் தொடர்ந்து, மீனவர்கள் மீண்டும் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனிதர்களை மிஞ்சிய தாய் பாசம் : சிறுத்தை குட்டிகளுக்கு தாயாக மாறிய பூனை!!

மஸ்கெலியாவில் தாயை பிரிந்த சிறுத்தை குட்டிகளுக்கு பூனை ஒன்று தாயாக மாறிய நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சாமிமலை, கரவில தேயிலை தோட்டத்தில் தாயை பிரிந்த சிறுத்தை குட்டிகளை பூனை தந்தெடுத்துள்ளது. சிறுத்தை குட்டிக்கு பூனையின் தாய் பாசம் கிடைத்துள்ளதாக நல்லதண்ணி வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளது.

தேயிலை தோட்டத்தின் வாய்க்காலுக்குள் இந்த சிறுத்தை குட்டிகள் இரண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சிறுத்தை குட்டிகளை தோட்ட தொழிலாளர்கள் வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

மூன்று வாரமுடைய சிறுத்தை குட்டிகளுக்கு பூனை பால் கொடுத்துள்ளது. பூனையின் மூன்று குட்டிகளையும் சேர்ந்து ஐந்து குட்டிகளாக பாசமாக வளர்த்து வருகிறது.

பூனையின் பாசமான செயற்பாடு குறித்து வனவிலங்கு அதிகாரிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

இலங்கைக்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த ஏழைச்சிறுமி : குவியும் வாழ்த்துக்கள்!!

ஆர்ஜெண்டீனாவில் நடைபெற்று வரும் கோடைக்கால 3ஆவது இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.

குறித்த போட்டியில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைத் தாண்டல் ஓட்டப் போட்டியில் பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா என்ற 16 வயதுச் சிறுமி, மூன்றாவது இடத்தைப் பெற்று இலங்கைக்கு முதல் வெண்கலப்பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இவர் சிலாபத்தில் ஏழ்மையான மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி என்பது குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.

இந்த நிலையில் குறித்த சிறுமிக்கு இலங்கையின் முக்கிய பிரமுகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் டுவிட்டர் தளத்தில் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அத்துடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹெல ஜயவர்தனவும் குறித்த சிறுமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நீண்ட காலத்தின் பின்னர் இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு!!

நீண்ட காலத்தின் பின்னர் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் 1,33 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்த இலங்கை ரூபாவின் பெறுமதி, இந்த மாதம் 9ஆம் திகதி ஆரம்பத்தில் வரலாற்றில் முதல் முறையாக 172 ரூபாவை கடந்தது.

இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை 171.60 ரூபாயாக பதிவாகியுள்ளது. கொள்வனவு விலை 167.73 ரூபாயாக பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 172.93 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி 10.8 ரூபாயில் வீழ்ச்சியடைந்துள்ளது.

அண்மைக்காலமாக ரூபாவின் பாரிய வீழ்ச்சியினால் இலங்கையின் பொருளாதாரம் பெரும் பின்னடைவு கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பட்டப்பகலில் யுவதி கடத்தல் : ஆடையை கழற்றி முகத்தில் வீசியதால் பதற்றம்!!

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் யுவதி ஒருவரை அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் செம்மணி பகுதியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முச்சக்கரவண்டியில் வந்த சிலரே இந்த கடத்தலை நடத்தியுள்ளனர்.
குறித்த முச்சக்கரவண்டி யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்தி யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட வீதியூடாக சென்றுள்ளது.

மேலும், குறித்த முச்சக்கர வண்டியை துரத்திச் செல்லும் போது கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதியின் ஆடையை கழற்றி, துரத்திச் சென்ற ஒருவரின் முகத்தில் வீசி விட்டு சென்றுள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் : மனைவி மீது இப்படியொரு பாசமா?

யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவரின் சடலத்தை புதைக்கச் சென்ற உறவினர்களுக்கு வியப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

39 வருடங்களுக்கு முன்னர் மனைவியை புதைத்த இடத்தில் கணவனின் சடலத்தை புதைக்க சென்ற போது, அவரின் புடவை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் வலிவடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் நடந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த கணவனின் சடலத்தை புதைக்கச் சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புதைக்கப்பட்ட மனைவிக்கு அணிவிக்கப்பட்ட புடவையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. புடவை பழுதுபடாமல் அப்படியே இருந்தமே பெரும் வியப்பாக மாறியுள்ளது.

1979 ஆம் ஆண்டு சுகயீனம் காரமணாக உயிரிழந்த மனைவி, வசாவிளான் பகுதியிலுள்ள கல்லறையில் புதைக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த அவரது கணவரை அடக்கம் செய்வதற்கு அவர்களது உறவினர்கள் குழி தோண்டினர்.

இதன்போது கல்லறையில் இருந்து அவரது மனைவிக்கு அணிவிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட புடவை கண்டெடுக்கப்பட்டது.

இந்த வியப்பான சம்பவம் உறவினர்களை பெரிதும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நான் கண்டிப்பாக சபரிமலைக்கு செல்வேன் : விரதம் இருக்கும் இளம்பெண்!!

நான் கண்டிப்பாக சபரிமலைக்கு செல்வேன் என 41 நாட்களாக விரதம் இருந்து வரும் கேரள பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, பெண்களும் சென்று தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பும், எதிர்ப்பும் ஒருசேர இருந்தது. அதனைத் தொடர்ந்து, கேரளாவின் பல பகுதிகளில் இத்தீர்ப்பினை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த ரேஷ்மா நிஷாந்த்(32) எனும் பெண் சபரிமலைக்கு செல்வதற்காக இருமுடி கட்டியுள்ளார். அத்துடன் தனி ஆளாக சபரிமலைக்கு செல்லும் உறுதியுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘நான் கடந்த 12 ஆண்டுகளாக ஒவ்வொரும் ஆண்டும், மண்டல காலத்தில் 41 நாட்கள் ஐயப்பனுக்காக விரதம் இருந்து வருகிறேன்.

ஆனால், என் வயது பெண்கள் சபரிமலைக்கு செல்லக் கூடாது என்பதால், விரதம் மட்டும் இருப்பேன், மலைக்கு சென்றதில்லை. தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், இந்த ஆண்டு வழக்கம் போல் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்ல இருக்கிறேன்.

எனக்கு ஆதரவாக எனது குடும்பத்தாரும், உறவினர்களும் இருக்கிறார்கள். இன்று நான் தனியாக இருக்கலாம், ஆனால் வரும் காலங்களில் நிறைய பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் என நம்புகிறேன்.

கடவுளை தரிசிப்பதில் ஆண்-பெண் பாகுபாடுகள் இருக்கக்கூடாது’ என தெரிவித்துள்ளார். அத்துடன் தனது முடிவுக்கு அரசும், மக்களும் ஆதரவு அளிக்குமாறு கோரியுள்ளார்.

பல வருடங்களாக சிறுநீரை குடித்து வாழ்ந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைமை!!

சிறுநீர் என்பது நமது உடலில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஆனால் இதனை குடித்து உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், உடல் எடையை குறைவதற்கு இது உதவுவதாகவும் பலர் வெளிப்படையாக கூறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேவீங்கடினில் வசிக்கும் 33 வயது யோகா ஆசிரியர் கெலீ ஓக்லீ, தனது சிறுநீரை குடிக்கத் தொடங்கிய பிறகு நீண்டகால உடல்நல பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள இவர், தொடர்ந்து சில ஆண்டுகளாக சிறுநீரை குடித்து வருகிறேன். சிறுநீர் குடிக்கும் பழக்கத்திற்கு ‘யூரோஃபோபியா’ சிறுநீர் சிகிச்சை.

சிறுநீரை குடித்தால், அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மீட்டெடுப்பதாகவும், ஆரோக்கியத்தை ஊக்குவித்து, சருமத்திற்கு நன்மையளிக்கும். அதனால் அதை முயற்சி செய்யலாம் என்று நினைத்தேன்.

அதன் பிறகு, சிறுநீர் குடிக்க ஆரம்பித்த கெலீ ஓக்லீ, இப்போது தனது சிறுநீரில் நனைக்கப்பட்ட பருத்தித் துணியால் தனது முகத்தில் ஒத்தடம் கொடுப்பதால் முகச் சருமம் ‘பளபளப்பாக’ இருப்பதாக நம்புகிறார்.

ஹஷிமோட்டோவின் தைராய்டு நோய் மற்றும் நீண்ட காலமாக வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது, ஆரோக்கிய நன்மைகள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

சிறுநீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுவதாக கனடாவின் ஆல்பர்ட்டாவைச் சேர்ந்த 46 வயது லீஹ் சாம்சன் கூறுகிறார்.
என் உடலில் சோடியத்தின் அளவு அதிகரிப்பதை உணர்ந்து, உட்கொள்ளும் உணவில் இருந்து சோடியத்தை குறைக்க முடிவு செய்தேன். இதனால், தினமும் காலையில் சிறுநீரை குடிக்கிறேன் என கூறுகிறார்.

சிறுநீர் குடிப்பது ஆரோக்கியமானது என்று கூறினாலும், இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல; கேடு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உடலில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுப்பொருளான சிறுநீரை மீண்டும் உடலுக்குள் அனுப்புவது சரியல்ல.

பொதுவாக சிறுநீரகத்தில் பாக்டீரியாக்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. அது உடலில் இருக்கும்போது எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை. ஆனால் உடலில் இருந்து வெளியேறிய சிறுநீர் நச்சாக மாறிவிடும். அதை மீண்டும் உடலில் ஏற்றிக் கொள்வது உடல்ரீதியிலான பிரச்சனைகளை அதிகரித்துவிடும்.”

யூரோஃபோபியாவால் உடல் நலத்துக்கு நன்மை ஏற்படும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை, உடலில் உள்ள நச்சுப் பொருட்கள்தான் சிறுநீராக உடலில் இருந்து வெளியேறுகிறது

ஆரோக்கியமான உடலின் சிறுநீரில் 95 சதவிகிதம் தண்ணீர் மற்றும் ஐந்து சதவிகித கழிவு உள்ளது. கழிவில் பொட்டாசியம் மற்றும் நைட்ரஜன் அடங்கியுள்ளது. இவை உடலில் அதிகமானால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.

சிறுநீர் குடிப்பதால் குடலும் சிறுநீரகமும் பாதிக்கப்படும் என்று மருத்துவர் கூறியுள்ளார்.

தன்னுடைய 7 ஆண்டுகால விடமுயற்சியால் ஆணாக மாறிய பெண்!!

அமெரிக்காவில் திருநங்கையாக இருந்து ஆணாக மாறிய ஹாரிசன் மாஸ்ஸியின் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் வசித்து வருபவர் ஹாரிஸன் மாஸ்ஸி. இவர் உடலாலும் மனதாலும் பெண்ணாக இருந்து வருபவர்.

இருப்பினும் இவர் கடந்த சில ஆண்டுகலாக தன்னை திருநம்பியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இதற்காக கடும் முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் தனது ஏழு வருட விடாமுயற்சியால் தற்போது ஹாரிசன் மாஸ்ஸி திருநம்பியாக மாறியுள்ளார். இவர், தன்னுடன் பெண் நண்பராக இருந்த ஹெவனுக்கு இடையே இருந்த உறவுமுறை பற்றியும், அதனால் அவர்கள் சந்தித்த கடினமான பிரச்னைகள் குறித்தும் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

அதில், அமெரிக்காவில் இருக்கும் செயின்ட் லூயிஸில், தான் சாண்ட்ராவை சந்தித்தேன். இது எனக்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு. எனக்கும் சாண்ட்ராவுக்கும் உள்ள உறவுமுறை ஆரோக்கியமானது. அவர் என்னுடைய வாழ்க்கைத் துணை மட்டுமல்ல. நாங்கள் இருவரும் நெருங்கிய நாண்பர்கள். என் வாழ்க்கையே சாண்ட்ராதான் என்று கூறியுள்ளார்.

மேலும், ஹாரிஸன் மாஸ்ஸி, என் வாழ்க்கை அழகானது, அதிர்ஷ்டவசமானது. முற்பிறவிப் பயனால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்.

ஏன்னென்றால் என்னைப்போல் திருநங்கையாகவும், திருநம்பியாகவும் மாறியவர்கள் எதிர்க்கொண்ட கஷ்டங்களை நான் அனுபவிக்கவில்லை. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. நான் திருநம்பியாக மாறியபின்னும் என்னுடன் உள்ள நண்பர்களும், உறவினர்களும் என் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறார்கள் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

உயிரை எடுத்து உயிர் கொடுத்த காதல் : பிணமாகிய இரு உயிர்கள்? கண்ணீர் சிந்தாமல் படிக்கவும்!!

ஒரு குட்டி காதல் கதை, அமைதியாக வாசிக்கவும்… ஒரு ஊரில் இளைஞன் ஒருவர் அழகான அறிவான பெண்ணைத் துரத்தி துரத்தி காதலித்துள்ளார். ஆனால், அந்த அழகிய பெண் அவனை விட்டு விலகி விலகி போய்க் கொண்டிருந்தாள். ஒரு நாள் அந்த இளைஞன் அவளிடம் தன் காதலை மனம் விட்டு கூறியுள்ளார்.

அந்த அழகிய பெண் இளைஞருக்கு ஒரு சவால் விடுத்துள்ளார். ஒரு மாதம் முழுவதும் அவளை பார்க்காமல் பேசாமல் அவன் இருக்கவேண்டும் என்று. அப்படி உன்னால் இருக்க முடிந்தால் உன்னை நான் காதலிக்கிறேன் என்று கூறினாள். அந்த இளைஞரும் சம்மதம் கூறி சென்றுள்ளார்.

ஒரு மாதம் முழுவதும் முடிந்தது ஆசையாக குறித்த இளைஞர் அந்த பெண்ணை பார்க்க சென்றுள்ளார். அவன் அவளை பார்ப்பதற்காக நிறைய காதலோடும், ஒரு சிவப்பு ரோஜாவை கையில் ஏந்தி கொண்டும் ஓடோடி சென்றுள்ளார்.

ஆனால், அவன் அங்கே கண்டது, காதலியின் மரண படுக்கையையும் அவளின் அழகிய கையில் இருந்த ஒரு கடிதத்தையும். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

நீ ஜெயித்துவிட்டாய், ஒரு மாதம் முழுவதும் உன்னால் என்னிடம் பேசாமலும், பார்க்காமலும் இருக்க முடியும் என நிரூபித்து விட்டாய். இனி வரும்காலங்களிலும் நீ இதே போல் வாழ்ந்து விடு,
நான் உன்னை உயிராக நேசித்தேன்.. என்ற வரிகள்.
அந்தப் பெண் புற்று நோய் காரணமாக உயிரிழந்துவிட்டார். இதேவேளை, இன்னும் அவளுக்காக சுவற்றில் அவளுடைய புகைப்படத்திற்கு அருகில் துணையாக புகைப்படமாக வாழ்கிறான் அந்த இளைஞர்.

அங்கே இரண்டு கடிதங்கள் இருக்கின்றன, ஒன்று அந்தப் பெண்ணுடையது, மற்றொன்று அவன் கடைசியாக ரோஜாவோடு கொண்டு வந்த அவளுக்கான கடிதம்.

அதில் இரண்டு வரிகள் இப்படி எழுதப்பட்டிருந்தது,
உன்னை காதலித்த பிறகு தான் அறிந்து கொண்டேன், ஒரு மாதம் தான் நீ உயிர் வாழ்வாய் என்று. அதனால்தான் என் வாழ்நாளையும் ஒரு மாதமாய் குறைத்து கொண்டேன்.

ஒரு மாதமாய் உன்னை பார்க்காமல் இருந்தது உன் காதலுக்கு நான் கொடுத்த மரியாதை. தற்போது உன் அருகில் அமைதியாகவும், என் ஆழமான காதலுடனும் உறங்க வருகிறேன் உயிரே…“ என்று எழுதப்பட்டிருந்தது.

உண்மையான காதல் கல்லறையில் வாழும் என்பதை குறித்த இளைஞர் நிறுபித்து விட்டார். இது குட்டி கதை மட்டும் இல்லை,உண்மை சம்பவமும் கூட. இந்த காதலர்கள் இன்று உயிருடன் இல்லை என்றாலும் காதல் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

வவுனியாவில் டிப்பர் வாகனத்தில் மண் பறித்த நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

வவுனியாவில் இன்று(16.10) அதிகாலை டிப்பர் வாகனச்சாரதி ஒருவர் மின்சாரம் தாக்கிய உயரிழந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா மணிப்புரம் பகுதிக்கு தனது டிப்பர் வாகனத்தில் மண் ஏற்றிச் சென்ற செட்டிகுளம் வீரபுரம் பகுதியைச் சேர்ந்த அன்ரன் ஜெகதீஸ்வரன் (ரமேஷ்) 43 வயது இன்று அதிகாலை 3 மணியளவில் டிப்பர் வாகனத்திலுள்ள மண்ணை வீட்டிற்குள் பறித்துவிட்டு உயற்றிய பெட்டியுடன் டிப்பர் வாகனத்தை வீட்டிற்கு வெளியே செலுத்தியுள்ளார். இதன்போது வீதியிலிருந்த மின்கம்பத்தில் பெட்டி முட்டியபோது மின்சாரம் டிப்பர் வாகனத்தில் பாய்ந்து சாரதியை தாக்கியுள்ளது.

இதன்போது சம்பவ இடத்திலேயே வாகனச்சாரதி உயிரிழந்துள்ளார். இதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா வடக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராய்வு!!

வவுனியா வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேசச் செயலாளர் க.பரந்தாமனின் நெறிப்படுத்தலின் கீழ் நெடுங்கேணி பிரதேசச் செயலக கேட்போர் கூடத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரின் இணைத்தலைமையில் இன்று இடம்பெற்றது.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் தொடர்பிலும் இப்பகுதியில் பரவும் சிறுநீரக பிரச்சினைகளுக்கு தீர்வாக குடிநீரை சுகாதார பரிசீலனைக்கு உட்படுத்தி பயன்படுத்தல், விவசாயிகள் யானைகளால் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வாக மின்சார வேலியமைத்தல், மற்றும் அமைச்சுக்களால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களின் நிலைமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்க்கொள்ளப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் வவுனியா ஐ.தே.க.அமைப்பாளர் கருணாதாச, வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் இ.தணிகாசலம், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், அரச உயர் அதிகாரிகள், பொலிஸார், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா மாவட்ட தமிழரசு கட்சியின் இளைஞரணி தலைவராக பா.சிந்துஜன் தெரிவு!!

வவுனியா மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்இளைஞர் அணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். தமிழ் அரசுக் கட்சியின் வவுனியாமாவட்ட அலுவலகமான தாயத்தில் கட்சியின் கிளைத்தலைவர்மருத்துவர் ப.சத்தியலிங்கம் தலைமையில் நேற்று முன்தினம்நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே தெரிவு நடைபெற்றது.

இளைஞர் அணியின் மாவட்ட தலைவராக பாலச்சந்திரன் சிந்துஜனும், செயலாளராக ஜெயராசா விதுசனும், உப தலைவராக ச.பத்மசீலனும், உப செயலாளராக சிவகுருபகீரதனும் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன் மாவட்டத்தின் சகல உள்ளுர் அதிகாரசபை பிரதேசங்களையும் பிரதிநித்துவப்படுத்தும் வகையில் 21 நிர்வாக உறுப்பினர்கள் அடங்கலாக 25 உறுப்பினர்களைக் கொண்ட புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்வி.முத்துராசா, மாவட்ட அமைப்பாளர் ந.கருணாநிதி உட்பட கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஆயிரத்திற்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை வெற்றிகரமாக நாடு கடத்திய சுவிஸ்லாந்து!!

புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த ஐரோப்பிய நாடுகள் பல தடுமாறிக் கொண்டிருக்கும் நேரத்தில், சுவிட்சர்லாந்து கடந்த ஆண்டில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை வெற்றிகரமாக நாடு கடத்தியுள்ளதாக சுவிட்சர்லாந்தின் புள்ளிவிவரங்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் 1,039 வெளிநாட்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட உத்தரவிடப்பட்டதாக சுவிஸ் ஃபெடரல் புள்ளிவிவரங்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவர்களில் அதிகம்பேர், அதாவது 348 பேர் Balkans நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

நாடு கடத்தப்பட்டவர்களில் 250 பேர் ஆப்பிரிக்கர்கள், 157 பேர் வட ஆப்பிரிக்காவையும் 93 பேர் மேற்கு ஆப்பிரிக்காவையும் சேர்ந்தவர்கள்.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள் 279 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளார்கள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் சுவிட்சர்லாந்து ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இது Schengen ஒப்பந்தத்தை மீறியதாக கருதப்படலாம்.

ஆனால் உண்மையில் சுவிஸ் குற்றவியல் விதிகளின் கீழ் குற்றவாளிகள் என தீர்க்கப்பட்ட, வயது வந்த வெளிநாட்டவர்களில், ஒரு சிறு பகுதியினர் மட்டுமே 2017ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2017இல் சுவிட்சர்லாந்தில், கொலை முதல் பாலியல் ரீதியான தாக்குதல்கள் வரையான தீவிர குற்றங்கள் செய்தவர்களை நாடு கடத்தும் உரிமையை நீதிமன்றத்திற்கு வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது.

அந்த சட்டம், முதல் முறை குற்றம் புரிவோரை 15 ஆண்டுகள் வரை சுவிட்சர்லாந்துக்குள் அனுமதிக்க தடை செய்யும் உரிமையையும், திரும்பத் திரும்ப குற்றம் செய்வோரை ஆயுட்காலம் முழுமைக்கும் தடை செய்யும் உரிமையையும் நீதிபதிகளுக்கு வழங்குகிறது.

கடந்த ஆண்டில் ஏராளமான அகதிகள் தலைமறைவானதாலும், சிலர் மருத்துவ சான்றிதழ்கள் பெற்று நாடு கடத்தப்படுவதிலிருந்து விலக்கு பெற்றதாலும், சில சம்பவங்களில் விமானிகள் நாடு கடத்தப்படுபவர்களை அவர்களது நாடுகளுக்கு கொண்டு செல்ல மறுத்ததாலும், ஜேர்மனி முதலான பல ஐரோப்பிய நாடுகளுக்கு வட ஆப்பிரிக்கா பொன்ற பகுதிகளுக்கு குற்றம் புரிந்த புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவது இன்னமும் கடினமாகவே உள்ள நிலையில் சுவிட்சர்லாந்து ஆயிரத்திற்கும் மேலானோரை நாடு கடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஜாம்பவான் ஜெயசூர்யா மீது வழக்கு பதிவு : ஐசிசி அதிரடி நடவடிக்கை!!

ஐசிசியின் ஊழல் தடுப்பு வழக்கு விசாரணைக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்காத இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யாவிற்கு 14 நாட்கள் கால அவகாசம் கொடுத்து ஐசிசி அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும், தேர்வுக்குழு தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர் 49 வயதான சனத் ஜெயசூர்யா.

ஐசிசியின் ஊழல் தடுப்பு குறியீட்டை இரண்டு முறை மீறியதாக சனத் ஜெயசூர்யா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஊழல் தடுப்பு குற்றசாட்டு விசாரணையில் ஒத்துழைக்கத் தவறிய அல்லது குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தல் மற்றும் விசாரணையை தடுத்தல் அல்லது தாமதப்படுத்துதல், எந்தவொரு ஆவணம் அல்லது தொடர்புடைய பிற தகவல்களையும் மூடிமறைத்தல், அல்லது அழித்தல் உள்ளிட்ட குறியீடுகளை மீறியதால் அக்டோபர் 15 முதல் அடுத்த 14 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

துப்பாக்கியுடன் போராடிய பொலிஸ் சார்ஜனுக்கு பேஸ்புக் குழுவினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

களுத்துறை- தெபுவன பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த பொலிஸ் சார்ஜன்ட் சனத் குணவர்தன பற்றி அண்மையில் நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது.

தன்னால் கைது செய்யப்பட்ட சட்டவிரோத மண் லொறியை பொலிஸ் பொறுப்பதிகாரி விடுவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து துப்பாக்கியுடன் நீதிகோரி போராட்டம் நடத்தியிருந்தார்.

அதன் பின்னர் கைது செய்யப்பட்ட அவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

அந்த சம்பவத்திற்கு பிறகு, உதவியற்றவரான சார்ஜன்ட் சனத் குணவர்தனவின் சம்பளத்தை செலுத்த பேஸ்புக் பயனர்கள் குழு சேர்ந்தது. அந்த குழுவால் சார்ஜண்ட் சனத் குணவர்தனவுக்கு வழங்க பணம் சேகரிக்க வங்கி கணக்கு ஒன்று தொடங்கப்பட்டது.

அதன் பின்னர் அந்த கணக்கில் சேகரிக்கப்பட்ட மூன்று லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை சார்ஜன்ட் வீட்டிற்கு சென்று வழங்குவதற்கு அந்தகுழு நடவடிக்கை எடுத்தது.

பேஸ்புக் பயனாளர் நிமல் எதிரிசிங்க உட்பட்ட குழுவிரே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.