தந்தை மற்றும் மூன்று பிள்ளைகளின் உயிர் பிரிந்த சோகம் : தாய் தனிமையில்!!

தாயை மட்டும் தனியாக விட்டு தந்தையும் மூன்று பிள்ளைகளும் உயிரிழந்த சம்பவம் தெஹியத்த கண்டியில் இடம்பெற்றுள்ளது.

தெஹியத்தகண்டிய பிதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுவன் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

35 வயதான தாய் மட்டுமே விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் பொலன்னறுவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று பிற்பகல் தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவில் சந்துன்புர – லிஹினியாகம வீதியில் உத்தலபுர பிரதேசத்தில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் தாய், தந்தை அவர்களின் மூன்று மகன்மாரும் பயணித்துள்ளனர். விபத்தில் படு காயமடைந்த 35 வயதான தந்தை, 14 மற்றும் 10 வயது மகன்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர்.

ஐந்து வயது மகன் மற்றும் 35 வயதான தாய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் தீவிர நிலையைக் கருத்தில் கொண்டு பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மேலதிக மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை ஐந்து வயதான சிறுவன் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துக்கான லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெஹியத்தகண்டிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கை பெண் : வைத்தியசாலையில் ஏற்பட்ட மாற்றம்!!

அமெரிக்காவில், இலங்கையை சேர்ந்த பெண் வைத்தியர் ஒருவரின் மகத்தான செயற்பாடு தொடர்பில் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கை வைத்தியரின் கண்கானிப்பில் உள்ள Rock hill Encompass Health சுகாதார மறுவாழ்வு வைத்தியசாலை மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் காணப்பட்ட Rock hill health south சுகாதார மறுவாழ்வு வைத்தியசாலையாக காணப்பட்ட இந்த வைத்தியசாலை மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டு Rock hill Encompass Health சுகாதார மறுவாழ்வு வைத்தியசாலையாக வளர்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுடன் போட்டியிட்டு மூன்றாவது முறையாகவும், அனைத்து பிரிவுகளிலும் சிறந்த வைத்தியசாலையாக இந்த வைத்தியசாலை தெரிவாகியுள்ளது.

இதற்கு மேலதிகமாக அதிக நோயாளர்களை குணப்படுத்தி திருப்பி அனுப்பிய வைத்தியசாலையாக இந்த வைத்தியசாலை மாறியுள்ளது.

வைத்தியசாலை நிர்வாகத்தில் உள்ள திறமை, ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் வைத்தியசாலையிலுள்ள வசதிகள் காரணமாக இந்த வைத்தியசாலை முதலிடத்தை பிடித்துள்ளது.

இலங்கை வைத்தியரான மாலிக்கா ஜயசூரியவின் செயற்பாடு மற்றும் ஆலோசனையின் கீழ் குறித்த வைத்தியசாலை இந்த அளவிற்கு மாற்றமடைந்துள்ளது.

அத்துடன் நோயாளர்களிடம் சிறந்த வைத்தியராக மாலிக்கா பெயர் பெற்றுள்ளார். அவர் பேராதனை மற்றும் ருகுணு வைத்திய பீடத்தில் கற்கை நெறிகளை அவர் நிறைவு செய்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, காலி வைத்தியசாலை, கண்டி வைத்தியசாலைகளிலும் மாலிக்கா பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் மாலிக்கா பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருமணமாகாத விரக்தி : வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்த மகன் செய்த திடுக்கிடும் செயல்!!

தமிழகத்தில் திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் கந்தன் (60). இவர் மனைவி கொடிசி (52). தம்பதிக்கு கோபி (35), ராஜீவ்காந்தி(32), குமார்(29), உதயசூரியன்(26), சின்னகவுண்டர்(25) என்ற 5 மகன்கள் உள்ளனர்.

இவர்களில் குமார், உதயசூரியன் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கோபி, ராஜீவ்காந்தி, சின்னகவுண்டர் ஆகிய 3 பேருக்கும் திருமணம் ஆகவில்லை. கோபி வெளிநாட்டில் வேலை பார்த்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் சொந்த ஊர் வந்தார்.

இந்நிலையில் தனது பெற்றோரிடம் தனக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்க கோபி கோரியும், அவர்கள் இது குறித்த முயற்சியில் ஈடுபடவில்லை என தெரிகிறது.

இதனால் பெற்றோரிடம் தகராறு செய்து வந்த கோபி நேற்று மது குடித்துவிட்டு வந்து இது குறித்து தனது தந்தை கந்தனிடம் சண்டை போட்டார்.

இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் கந்தனின் தலையை பிடித்து சுவரில் வேகமாக அடித்ததாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கந்தன் உயிரிழந்தார். இதையடுத்து பொலிசார் கோபியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வெளிநாட்டில் இருந்த வந்த கணவனை கொலை செய்தேன் : 11 ஆண்டுகள் கழித்து வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!

தக்கலையில் கள்ளக்காதலனுக்காக கணவனை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மனைவி பொலிசில் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு ராஜசேகர் – சுதா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ராஜசேகர் வெளிநாட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு ஊருக்கு வந்திருந்த அவர், திடீரென மாயமானார். இது குறித்து சுதாவின் சகோதரர் ரவி, பொலிசில் புகார் செய்தார்.

இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்திவந்தபோதும், கடந்த 11 ஆண்டுகளாகியும் இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கில் திருப்பமாக ராஜசேகரை அவரது மனைவி சுதா மற்றும் அவரது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட ராஜசேகரின் உடலை வீட்டின் பின்புறம் உள்ள செப்டிக்டேங்க்கில் வீசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. பொலிசார் செப்டிக்டேங்க்கில் கிடந்த எலும்புக்கூட்டை கைப்பற்றினர். பின்னர் தடயவியல்

சோதனையில் அந்த எலும்புக்கூடு ராஜசேகருடையது என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ராஜசேகரின் மனைவி சுதாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுதா பொலிசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில்,

நானும், ராஜசேகரும் கடந்த 2002-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பிறகு ராஜசேகரின் நண்பர்கள் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். இதில் பள்ளியாடியைச் சேர்ந்த ஆன்லின் சிபுவும் அடிக்கடி வந்து சென்றார். அவருக்கும் எனக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

நாங்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். ஆன்லின் சிபுவுடன் நான், நெருக்கமாக இருந்ததை எனது கணவர் நேரில் பார்த்து கண்டித்தார். இதனால் அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தோம்.

கடந்த 9.2.2007-ம் ஆண்டு மதுவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தோம். பின்னர் அரிவாளால் வெட்டியதுடன், தலையணையால் அமுக்கி கொன்றோம். வீட்டின் செப்டிக் டேங்க்கில் ராஜசேகர் உடலை வீசினோம். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் இருந்தோம்.

ராஜசேகரை சிலர் தேடினார்கள். அப்போது அவர் வெளிநாடு சென்று விட்டதாக கூறி நாடகமாடினேன் என கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட சுதாவை பொலிசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர், தக்கலை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் சுதாவின் கள்ளக்காதலன் ஆன்லின் சிபு உள்பட 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆன்லின் சிபு தற்போது கேரளாவில் தலைமறைவாகி உள்ளார். மற்றொருவர் வெளிநாட்டில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்தில் கணவனை கொல்ல முயன்ற புதுமணப்பெண் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

சென்னை கடற்கரையில் கணவனின் கண்ணை கட்டி காதலன் உதவியுடன் கொலை செய்ய முயற்சித்த மனைவியின் வழக்கில் அதிரடி திருப்பமாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த கதிரவன் (வயது 30) சென்னையில் தங்கி சோழிங்கநல்லூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார்.

இவர் கடந்த 30 நாட்களுக்கு முன்னதாக தூத்துக்குடியை சேர்ந்த அனிதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் நேற்று மாலை கடற்கரைக்கு சென்று கண்ணை கட்டி விளையாடியுள்ளனர்.

அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் கதிரவனை கொடூரமாக தாக்கி, அனிதாவின் கழுத்தில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக கதிரவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து பொலிஸாரிடத்திலும் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள் கதிரவனை தாக்கும்போது எந்தவித உண்ர்ச்சியுமின்றி சாதாரமான ஒரு பெண்ணை போல அனிதா நின்றுகொண்டிருந்ததால் பொலிஸாருக்கு சந்தேகம் வலுத்தது.

பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கல்லூரி படிக்கும்போது ஜெகன் என்கிற ஆண்டனியை (25) காதலித்ததாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்து வீட்டார் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக என்னுடைய கணவரை கொலை செய்ய முயற்சித்தோம் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதற்கிடையில் மதுரைக்கு விரைந்த தனி காவல்படையினர் ஜெகனை கைது செய்து அவனிடமும் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவலாக ஏற்கனவே ஒரு முறை கதிரவனை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அரங்கேறியிருப்பது தெரியவந்தது. தேனிலவு சென்ற போது மலையில் இருந்து தள்ளிவிட முயன்றதாகவும், ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததாலே மீண்டும் முயற்சி செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

பூட்டிய வீட்டினுள் ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தை : தூக்கில் தொங்கிய பெற்றோர்.. அதிர்ச்சி சம்பவம்!!

கடலூர் மாவட்டத்தில் பூட்டிய வீட்டினுள் ரத்த வெள்ளத்தில் குழந்தை ஒரு புறம் இறந்து கிடக்க, மறுபுறம் பெற்றோர்கள் தூக்கில் தொங்கியபடி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (25). இவருடைய மனைவி உஷா (20). இந்த தம்பதியினருக்கு 2 வயதில் பிரதியுஷா என்ற குழந்தை உள்ளது. பிரகாஷ் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வேலை பார்த்து வந்ததால் குடும்பத்துடன் அனைவரும் அங்கு தங்கியிருந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மூவரும் தங்களுடைய சொந்த ஊருக்கு வந்திருந்துள்ளனர். இந்த நிலையில் நீண்ட நேரமாக வீடு பூட்டியிருப்பதை பார்த்த, பிரகாஷின் தாய் இன்று அதிகாலை வீட்டை திறந்து பார்த்துள்ளார்.

அப்போது கழுத்தில் பிளேடால் அறுக்கப்பட்ட நிலையில் 2 வயது குழந்தையும், தூக்கில் தொங்கிய நிலையில் கணவன், மனைவி இருவரும் சடலமாக கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அதிபர்!!

மாணவிகள் இருவரை கடுமையாக பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பாடசாலை அதிபர் ஒருவர் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. களுத்துறை – தெபுவன பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

14 வயதான இரண்டு மாணவியரே இவ்வாறு கடுயைமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் இந்த மாணவியர், மருத்துவ பரிசோதனைக்காக களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலைக்கு வழங்கப்படும் பகல் உணவின் ஒரு பகுதியை காரியாலயத்திற்கு தருவித்துக் கொண்டு இந்த இரண்டு மாணவியரையும் காரியாலயத்திற்கு அதிபர் அழைத்துள்ளார்.

உணவு வழங்கும் போர்வையில் முதலில் மாணவியர் இருவரையும் தனது தலையில் உள்ள நரை மயிர்களை பிடுங்கச் செய்துள்ளார்.

அதன் பின்னர் இரண்டு மாணவியரையும் கடுமையாக பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை அதிபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தந்தையால் ஏழு வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

மகளை கொன்று உடலை தீயிட்டு கொளுத்திய தந்தையொருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புத்தளம் உயர் நீதிமன்ற நீதிபதி காந்த மத்துமபட்டபெந்தி குறித்த தந்தைக்கு மரண தண்டனை விதித்துள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒட்டுகுளம் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

7 வயதான சசினி நெத்மா என்ற சிறுமியே படுகொலை செய்யப்பட்டு, அவரது சடலம் எரிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து அம்பலமாகியுள்ளது.

இந்த நிலையில் சந்தன எதிரிசிங்க என்ற 32 வயதான சிறுமியின் தந்தைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொல்லப்பட்ட சிறுமி விசேட தேவையுடையவர் என்பது குறிப்படத்தக்கது.

இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் : வெளிநாடு ஒன்று வழங்கும் ஐந்து வருட வீசா!!

இலங்கையர்களுக்கு ஐந்து வருட வீசா வழங்க இஸ்ரேல் அரசாங்கம் முன்வந்துள்ளது. இஸ்ரேலில் விவசாய தொழிலில் ஈடுபடுவதற்காக இலங்கையர்களுக்கு 5 வருட வீசா வழங்குவதற்கு அந்த நாட்டு அதிகாரிகள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச குடியேற்ற நிறுவனத்தின் தலையீட்டிற்கமைய கைச்சாத்திட்ட ஒப்பந்தத்திற்கு அமைய இந்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

தங்கள் நாட்டில் உரிய வீசா காலத்தை கடந்து 500 இலங்கையர்கள் இஸ்ரேலில் தங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சினை தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார உட்பட இந்த நாட்டு பிரதிநிதிகள் சிலர் அந்த நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.

அதற்கமைய வீசா காலம் நிறைவடைந்த பின்னர் மீண்டும் இலங்கையர்களுக்கு விவசாய தொழில் துறையில் தொழில் வழங்குவதற்கு இஸ்ரேல் அதிகாரிகள் வாக்குறுதி வழங்கியுள்ளனர்.

வவுனியாவில் பேரூந்தின் சில்லில் அகப்பட்டு இராணுவ வீரர் பலி : சாரதி கைது!!

வவுனியா ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் இன்று (15.10.2018) காலை 9 மணியளவில் பேரூந்தின் சில்லில் அகப்பட்டு இராணுவ வீரர் ஒருவர்சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் துவிச்சக்கரவண்டியொன்றினை முந்திச்செல்ல முற்பட்ட சமயத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் பேரூந்தின் பின்பகுதி சில்லில் மோதுண்டு சம்பவ இடத்திலிலேயே பலியாகியுள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் பேரூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஒமந்தை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனகராயக்குளம் 561வது படைப்பிரிவினை சேர்ந்த 33வயதுடைய ரனசிங்க அராச்சிக்கே ரனுவீர ஒஸான் என்ற நபரே விபத்தில் உயிரிழந்தவராவார்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இந்திய உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து மாபெரும் கண்டனப் பேரணி!!

சபரிமலை ஐயப்ப சுவாமிகளை தரிசனம் செய்வதற்கு இளம் பெண்களுக்கு அனுமதி வழங்கிய இந்திய உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து ஐயப்ப பக்தர்களால் இன்று (15.10.2018) வவுனியாவில் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

வன்னி மாவட்ட ஐயப்ப சுவாமிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் போராட்டமானது வவுனியா கந்தசாமி கோவில் முற்றலில் ஆரம்பமாகி பசார் வீதிவழியாக சென்று அங்கிருந்து மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது.

10 வயது தொடக்கம் 55 ஐந்து வயது வரையுள்ள பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது என்ற விதிமுறையை மீறி இந்திய உயர்நீதிமன்றம் அனைத்து பெண்களும் சபரிமலை சென்று ஐயப்ப சுவாமிகளை தரிசிக்க முடியும் என வழங்கிய தீர்ப்பினை மீளப்பெறக் கோரி இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கெடுக்காதே கெடுக்காதே இந்துக்களின் பாரம்பரியத்தை கெடுக்காதே, சபரிமலை புனிதத்தை கெடுக்காதே, மாற்று மாற்று தீர்ப்பை மாற்று என்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.

மாவட்ட செயலகத்தை சென்றடைந்த ஐயப்ப பக்தர்கள் அரசாங்க அதிபர் ஐ.கனீபாவை சந்தித்து இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் கையளிக்குமாறு கோரி மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.

யாழில் மகனின் கண் முன்னே நடந்த கொடூரம் : பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் – ஊரெழு மேற்கில் மகனைத் தாக்க வந்த கும்பலை தடுக்கச் சென்ற தாயை கொலை செய்த சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரை கோப்பாய் பொலிஸாரின் விசேட அணியினர் இன்று காலை கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் 58 வயதுடைய சந்திரராசா விஜயகுமாரி என்ற தாயே உயிரிழந்திருந்தார்.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான நிலை காணப்பட்டதோடு, தாக்குதலில் உயிரிழந்த தாயின் மகனும் படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த குடும்பப் பெண்ணின் சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனையோர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

வவுனியாவில் விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!!

வவுனியாவில் இன்று (15.10) காலை ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை ஓமந்தை இறம்பைக்குளம் பகுதியில் துவிச்சக்கரவண்டியில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த போது மாடு குறுக்காக வீதியின் நடுவே பாய்ந்துள்ளது.

இதன்போது பின்னால் வந்த பேரூந்து குறித்த இளைஞனை மோதியபோது விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் கனகராயன்குளம் 561 படைப்பிரிவைச் சேர்ந்த இரானுவ வீரரான 33வயதுடைய ஒஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தற்போது இளைஞனின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

லொறி மீது கார் மோதிய கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலியான சோகம்!!

இந்தியாவின் சத்தீஷ்கர் மாநிலத்தில் லொறி மீது கார் மோதிய கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஷ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர், நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டுக்காக, சொகுசு கார் ஒன்றில் டொன்கர்கரில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்கள் பயணித்த கார் நாக்பூர்-ராய்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்த போது, அங்கு நின்றிருந்த லொறி ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்களில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தனர். மேலும் 4 நான்கு பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மரணமடைந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, காயமடைந்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் முச்சக்கரவண்டி சாரதியின் மனிதாபிமானம் : சமூக வலைத்தளத்தில் குவியும் பாராட்டு!!

 

கொழும்பில் நேர்மையாக நடந்து கொண்ட முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

முச்சக்கரவண்டி சாரதி தொடர்பில் நபர் ஒருவர் பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “அலுவலகத்திற்கு செல்வதற்காக முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு பெற்றுக் கொண்டேன். அலுவலகம் செல்வதற்கு முன்னர் வங்கிக்கு செல்ல வேண்டியிருந்தமையினால் முச்சக்கர வண்டியை வங்கிக்கு அருகில் நிறுத்தி விட்டு வங்கிக்கு சென்றேன்.

வங்கிக்குள் சென்ற சற்று நேரத்தில் முச்சக்கர வண்டி சாரதியிடம் இருந்து அழைப்பு ஒன்று வந்தது. “சர் உங்கள் பணத்தை தவறவிட்டு சென்றிருக்கின்றீர்கள் என முச்சக்கர வண்டி சாரதி குறிப்பிட்டார்.

நான் உடனடியாக வண்டிக்கு வெளியே வந்து பார்க்கும் போது சாரதி வண்டியை விட்டு வெளியே வந்துள்ளார்.

நான் பணத்தை அவதானித்தது முதல் வெளியே தான் நின்கின்றேன். பணம் சரியாக உள்ளதா என்பதனை சோதித்து பாருக்கள் என சாரதி குறிப்பிட்டார். பணத்தை திருடுபவராக இருந்தால், எனக்கு அழைப்பேற்படுத்தியிருக்க மாட்டார்.

அதனால் பணத்தை எண்ணி பார்க்காமல் பைக்குள் வைத்து கொண்டு அவரிடம் புகைப்படம் ஒன்றை எடுத்து கொள்ளுவோம் என அவரிடம் கூறினேன். எனினும் அவர் புகைப்படம் எல்லாம் அவசியமில்லை. பணத்தை தொலைத்தவர்கள் படும் வேதனை எனக்கும் தெரியும் என அவர் குறிப்பிட்டார்.

எனினும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். இப்படியான நேர்மையான மனிதர்களை பார்க்கும் போது ஆச்சரியமாக தான் உள்ளது” என அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த முச்சக்கர வண்டி சாரதியின் நேர்மையை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

கொழும்பிலிருந்து சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த கதி!!

 

திருகோணமலை – வவுனியா பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கொழும்பு, மருதானை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது. நிலாவெளி பகுதிக்கு சுற்றுலா வந்த நபர்களே விபத்தில் சிக்கியுள்ளனர்.

திருகோணமலையில் இருந்து வேகமாக வந்து கொண்டிருந்த பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியமையாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் விபத்து தொடர்பில் மொறவெவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.