ஐந்தாயிரம் ரூபாய் நாணயத்தாள் ஐம்பதாயிரமான சுவாரஷ்ய கதை!!

அண்மையில் இலங்கையில் கைப்பற்றப்பட்ட போலி நாணயத்தாள்கள் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் அம்பாவில தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பெருந்தொகையான ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான போலி நாயணத்தாள்கள் கைப்பற்றப்பட்டன.

ஐந்தாயிரம் ரூபாய் நாணயத்தாள் தோற்றத்தில் ஒரு பூஜ்ஜியம் அதிகரித்து ஐம்பதாயிரம் ரூபாய் நாணயத்தாளாக அச்சிடப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் அத்தியட்சகர் அம்பாவில,

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், விசாரணைகள் இன்னும் நிறைவு செய்யப்படவில்லை. இதன் காரணமாக மேலதிக தகவல்களை வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஐம்பதாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களை அண்மையில் குருநாகல் பகுதியில் இருந்து பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். இது குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அந்த பகுதியில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரும், பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவருமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பேரூந்து நிலையத்தின் நிலையை கருத்தில்கொண்டு உப நகரபிதாவின் செயற்பாடு!!

வவனியாவில் பல இடங்களில் வீதி மின்விளக்குகள் பொருத்தப்படாது காணப்படுகின்மை தொடர்பாக வவுனியா நகரசபையின் உப தலைவர் சு.குமாரசாமி உடன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

வவுனியாவில் பல வீதிகள் மற்றும் முக்கிய இடங்களில் வீதி மின்விளக்குகள் பொருத்தப்படாமலும் பொருத்திய மின்குமிள்கள் ஒளிராமலும் காணப்படுவது குறித்து சமூக ஆர்வலர்கள் வவுனியா நகரசபையின் உப தலைவர் சு.குமாரசாமிக்கு தெரியப்படுத்தியதை அடுத்து தன்னாலான உதவியை உடன் செய்து தருவதாக தெரியப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து விலையுயர்ந்த பிரகாசமான இரு வீதி மின்விளக்குகளை புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இருள் சூழ்ந்து காணப்படுவதனை கருத்தில் கொண்டு பொருத்தியதுடன் ஏனைய பல இடங்களிலும் பல்வேறு உதவிகளின் ஊடாக வீதி மின்குழிழ்களை பொருத்தியிருந்தார்.

சிறுமியின் வயிற்றில் பிரசவிக்கும் நிலையில் குழந்தை : பெரும் அதிர்ச்சியில் உறவினர்கள்!!

கேகாலையில் வலி காரணமாக வைத்தியசாலைக்கு சென்ற சிறுமியின் வயிற்றில் குழந்தை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக 14 வயதுடைய சிறுமி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். வைத்தியர்கள். சிறுமியை பரிசோதித்த போது வயிற்றில் பிரசவிக்கும் நிலையில் குழந்தை இருப்பதாக தெரியவந்துள்ளது.

அரணநாயக்க பிரதேசத்தில் பிரபல பாடசாலையில் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் வயிற்று வலி என வீட்டில் கூறியுள்ளார்.

உடனடியாக அரணநாயக்க மாவட்ட வைத்தியசாலைக்கு சிறுமி அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

சிறுமியை சோதனையிட்ட போது, குழந்தை ஒன்றை பிரசவிக்கும் நிலையில் சிறுமி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவர் வெளிநபருடன் உறவு வைத்து கொள்ளவில்லை என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவர் பலமுறை அவரின் தந்தையால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வைத்தியர்கள் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அதற்கமைய பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வைத்தியர்களின் தகவலை அறிந்த சிறுமியின் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வௌ்ளை சீனியின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம்!!

ஒரு கிலோ கிராம் வௌ்ளை சீனிக்கு அதிகபட்ச சில்லரை விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதியிடப்படாத ஒரு கிலோகிராம் வௌ்ளை சீனியின் விலை 100 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொதியிடப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 105 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

மேலும், இறக்குமதியாளர்கள் ஒரு கிலோ கிராம் வௌ்ளை சீனியை 92 ரூபாவை விட அதிக விலையில் விற்பனை செய்யக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவுத் திருமணம் செய்த பின்னர் தற்கொலை செய்துகொண்ட காதலர்கள் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் இருவேறு மதங்களை சார்ந்த காதலர்கள் தங்கள்திருமணத்தை முறைப்படி பதிவு செய்த பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலக்காடு மாவட்டத்தில் உள்ள இத்திரிக்கர பாலம் அருகே அமைந்துள்ள ஆற்றில் குதித்து காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

குறித்த பாலம் அருகே புதன் அன்று நள்ளிரவில் இருவரின் நடமாட்டம் தொடர்பில் சந்தேகம் எழுந்ததை அடுத்தே அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

மட்டுமின்றி சம்பவப்பகுதியில் இருந்து இருச்சக்கர வாகனம் ஒன்றும், அதில் ஒரு மொபைல் போன், பாஸ்போர்ட், திருமணம் பதிவு செய்ததற்கான ஆவணங்கள் மற்றும் 3,000 ரூபாய் பணம் என இருந்துள்ளது.

இதனையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சுமார் 2 மணி நேர தேடுதலுக்கு பின்னர் இருவரது உடல்களையும் மீட்டுள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட இளைஞர் மனு பரவூர் பகுதியில் குடியிருந்து வருபவர் எனவும், இஸ்லாமியரான சுறுமி என்பவரின் கணவரின் நண்பர் எனவும் தெரியவந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சுறுமியின் கணவர் விபத்து ஒன்றில் கொல்லப்பட, அப்போது சுறுமிக்கு தேவையான நிதி உதவிகளை மனு அளித்து வந்துள்ளார்.

இது நாளடைவில் காதலாக மாறவே இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

ஆனால் இருவேறு மதம் என்பதால் தங்களை ஒருபோதும் சேர்ந்து வாழ இருவரது குடும்பத்தினரும் அனுமதிக்கப்போவதில்லை என அறிந்த இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அடித்து உதைத்து பாலியல் வன்கொடுமை : தமிழ்பட நடிகைக்கு ஆதரவு தெரிவித்து ஐஸ்வர்யா ராய் எடுத்த அதிரடி முடிவு!!

நடிகை ஐஸ்வர்யா ராய் பாலியல் தொல்லைக்கு எதிர்ப்பு தெரிவித்து, படத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் சில படங்களில் நடித்த நடிகை புளோரா சைனி, ஹிந்தி தயாரிப்பாளர் கவுரங் தோஷி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தன்னை தாக்கி தாடையை உடைத்ததாகவும் சமீபத்தில் பரபரப்பு புகாரை தெரிவித்தார்.

அத்துடன் தனக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் தவிர வேறு எவரும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் குறித்து அவர் கூறுகையில்,

கவுரங் தோஷி எனக்கு செய்த கொடுமையை பார்த்து ஐஸ்வர்யா ராய் கோபம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து, கவுரங் தயாரிக்க இருந்த படத்தில் இருந்து ஐஸ்வர்யா வெளியேறினார்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தாக்கும் நபரின் படத்தில் நடிக்க முடியாது என்று அவர் கூறினார் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் இதுகுறித்து கூறுகையில், ‘இந்த பிரச்சனை குறித்து நான் ஏற்கனவே பேசியிருக்கிறேன், பேசுகிறேன், இனியும் தொடர்ந்து பேசுவேன்.

சமூக வலைதளங்கள் மூலம் பெண்களின் குரல் பலருக்கும் கேட்கிறது. Me Too இயக்கம் தான் தற்போது தேவை. இது வலுப்பெறும் என்று நம்புகிறேன்’ என ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.

18 வயதில் சிதைந்த வாழ்க்கை : தூக்கில் தொங்கிய கர்ப்பிணிப் பெண்!!

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாகவே குறித்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

18 வயதே ஆன காவியா என்ற அந்த பெண், அதே பகுதியை சேர்ந்த வசந்த குமார் என்பவரை தனது பள்ளி பருவத்திலேயே காதலித்து வந்துள்ளார்.

இதனிடையே பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. தற்போது 5 மாத கர்ப்பிணியான காவியா நேற்று இரவு கணவருடன் வாக்குவாதத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த காவ்யா தூக்குப் போட்டு தற்கொலை கொண்டதாக தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்துள்ள பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞனின் வயிற்றுக்குள் சிக்கிய பெருந்தொகை பொருள் : அதிர்ச்சியடைந்த வைத்தியர்கள்!!

தம்புள்ளையில் இளைஞன் ஒருவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 31 வயதான இளைஞனின் வயிற்றில் இருந்து பெருந்தொகை கண்ணாடி துண்டுகளை வைத்தியர்கள் அகற்றியுள்ளனர்.

தொழில் ரீதியாக சாகசம் செய்யும் இளைஞன், கண்ணாடி துண்டுகளை விழுங்கி மக்களை மகிழ்வித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஆபத்தான கண்ணாடி துண்டுகளை விழுங்கிய குற்றச்சாட்டில் குறித்த இளைஞனை தம்புள்ளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தம்புளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது, அவரின் வயிற்றில் இருந்து பெருமளவு கண்ணாடி துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் நாட்டில் பல்வேறு நகரங்களுக்கு சென்று கண்ணாடி துண்டுகளை விழுங்கி சாகசம் செய்து வந்துள்ளார்.
இதற்கு முன்னர் 6 தடவைகள் அவரது வயிற்றில் சத்திர சிகிச்சை மேற்கொண்டு கண்ணாடி துண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவனை கொலை செய்த நபருக்கு 22 ஆண்டுகளுக்கு பின் மரண தண்டனை!!

14 வயதான பாடசாலை மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்நோக்கிய நபருக்கு 22 ஆண்டுகளின் பின்னர் கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இதனை தவிர குற்றவாளி இரண்டு பேரை கத்தியால் குத்தி படுகாயம் ஏற்படுத்திய குற்றத்திற்கு தலா இரண்டு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி நிட்டம்புவை நிக்கஹெட்டிகந்தை பிரதேசத்தில் ஏ.டி.அஜித் ரோஹன என்ற பாடசாலை மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்து, மேலும் இரண்டு பேருக்கு காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 5 பிள்ளைகளின் தந்தையான 59 வயதான ஹெல்ல தேவகே கருணாரத்ன என்பவருக்கே இந்த மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நடந்த காலத்தில் குற்றவாளிக்கு 37 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் மோதுண்டு ஒருவர் பரிதாபமாக பலி!!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணி பகுதியில் ரயிலில் மோதுண்டு முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

கறுவப்பங்கேணி வயிரவர் ஆலயத்திற்கு முன்னால் உள்ள புகையிர தண்டவாளத்தில் நேற்று இரவு அமர்ந்திருந்த முதியவரே இவ்வாறு ரயிலில் மோதுண்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரை படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்ற போதிலும் அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் புன்னைச்சோலையினை சேர்ந்த கந்தையா வடிவேல் என்னும் 71வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அம்மா எழுந்திருங்கள் : சடலமாக கிடந்த தாயை பார்த்து கதறிய குழந்தைகள்!!

சென்னை பூந்தமல்லியில் இறந்துகிடந்த அம்மாவை பார்த்து எந்திரிம்மா என்றும் இறந்த அம்மா எப்போது திரும்பி வருவார் என்றும் கேட்டு குழந்தைகள் கதறுவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமணன்சாவடியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி துர்கா. தம்பதிக்கு சுப்ரியா (3) மற்றும் சிவன்யா (2) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவனும், மனைவியும் தங்களது வீட்டில் சடலமாக கிடந்துள்ளனர்.

இது குறித்து விசாரித்த பொலிஸ் கூறுகையில், வெங்கடேசன், சரிவர வேலைக்குச் செல்லாமல் மதுவுக்கு அடிமையானதால் கணவன் – மனைவி இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் துர்காவின் முகத்தில் தலையணையால் அமுக்கிக் கொலை செய்திருக்கலாம் என்று கருதுகிறோம். அதன்பிறகு வெங்கடேசன் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.இருப்பினும், பிரேதப் பரிசோதனையில் தான் துர்கா எப்படி இறந்தார் என்ற முழுவிவரம் தெரியவரும்.

தாய் இறந்த கிடந்ததை பார்த்த குழந்தை சுப்ரியா அம்மா எந்திரிம்மா என்று சொல்லியதைக் கேட்டவர்களின் கண்கள் கலங்கின என கூறியுள்ளனர்.

இதனிடையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வெங்கடேசன், துர்கா ஆகியோரின் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.

பிரேதப் பரிசோதனைக்காக அவர்களின் உறவினர்கள் அங்கு காத்திருக்கின்றனர். இந்தச் சமயத்தில் உறவினர்களிடம், அம்மா எப்போ வருவாங்க என்று சுப்ரியாவும் சிவன்யாவும் அடிக்கடி கேட்கின்றனர். அவர்களுக்கு இன்னும் சீக்கிரத்தில் வந்துவிடுவாங்க என்று கலங்கிய கண்களோடு உறவினர்கள் ஆறுதல் கூறுகிறார்கள்.

கணவனை நிர்க்கதியாக்கி விட்டு தன்னுயிரைக் காப்பாற்றிக் கொண்ட மனைவி!!

விபத்து சம்பவமொன்றில் மனைவி கணவரை நிர்க்கதியாகவிட்டு தன்னுயிரை மட்டும் காப்பாற்றிக் கொண்டுள்ள சம்பவமென்று இன்று பதிவாகியுள்ளது.

அலுத்கம முதல் காலி வரையில் பயணிக்கும் ரயில் ஒன்றில் கார் ஒன்று மோதுண்டதில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 57 வயதான கிங்தொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் கராபிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்பொழுது சாதாரண வார்டிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ரயில் தூரத்தில் வருவதனைக் கண்ட மனைவி காரின் கதவை திறந்து தான் மட்டும் விபத்தில் தப்பித்துக் கொண்டுள்ளார் என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, புகையிரத கடவையில் தற்காலிக அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த பெண், புகையிரத கடவை கடக்க வேண்டாம் எனக் கூறிய போதிலும் அதனை பொருட்படுத்தாது இவர்கள் வாகனத்தைச் செலுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும், மனைவி அந்த சந்தர்ப்பத்தில் தப்பிச் சென்றாரா அல்லது காப்பாற்ற முயற்சித்து அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததா என்பது பற்றிய சரியான விபரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை, கணவன் மனைவி உறவு புனிதமானதாக போற்றப்பட்டு வரும் நிலையில் தன்னுரை பணயம் வைத்து கணவனை காப்பாற்றிய பல்வேறு சம்பவங்கள் பற்றி கேள்வியுற்றிருக்கின்றோம், எனினும் இங்கு பதிவிடப்படும் சம்பவம் சற்றே வித்தியாசமானது.

வவுனியா விபுலானந்த கல்லூரியில் குடிநீர் சுத்தரிகரிப்பு இயந்திரத் தொகுதி திறந்து வைப்பு!!

வவுனியா விபுலானந்த கல்லூரியில் கல்வி கற்கும் 2200 பாடசாலை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா அவர்களின் 2018ம் ஆண்டுக்கான குறித்தொகுக்கப்பட்ட நிதியிலிருந்தும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் நிதியிலும் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்தரிகரிப்பு இயந்திர தொகுதி இன்று (12.10.2018) காலை 7.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் பொன்னையா சிவநாதன் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா கலந்து கொண்டு குடிநீர் சுத்தரிகரிப்பு இயந்திர தொகுதியினை திறந்து வைத்தார்.

வடமாகாணசபை உறுப்பினனர் இந்திரராஜாவின் 2018ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 150,000 ரூபாவும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் நிதியிலிருந்து ரூபா 50,0000 நிதியும் இத் திட்டத்திற்காக செலவழிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவினை வந்தடைந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவணி!!

அரசியல் கைதிகளில் விடுதலையை முன்நிறுத்தியும் அவர்களின் விடுதலைக்கு ஒரு தீர்க்கமான தீர்வினைப் பெற்றுத்தருமாறும் கோரிய நடைபவனி இன்று (12.10.2018) காலை வவுனியாவினை வந்தடைந்தது.

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவணி கடந்த 9ம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு நடைபவணியாக இயக்கச்சி, மாங்குளம், ஒமந்தை ஊடாக இன்று(12.10.2018) காலை வவுனியா நகரை வந்தடைந்தது. இப் பேரணி நாளையதினம் அனுராதபுரத்தினை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடைபவணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியா தாண்டிக்குளத்தில் வடமாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ம.தியாகராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதாராலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம், வவுனியா வர்த்தகர் சங்கம், பொது அமைப்புக்கள், வவுனியா வர்த்தகர் நலன்புரிச்சங்கம், உள்ளூர் விளை பொருள் விற்பனையாளர் சங்கம், வவுனியா மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம், பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு பேரணியுடன் இணைந்தனர்.

ஏ9 வீதியுடாக பயணித்த பேரணியானது ஹொரவப்பொத்தானை வீதியூடாக சென்று பஜார் வீதியுடாக மீண்டும் ஏ9 வீதியினை வந்தடைந்தது.

இதன் போது வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்றினைந்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் கோசங்களை எழுப்பி போராட்டத்திற்கு தங்களது ஆதரவினை வழங்கியிருந்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து நடைபவணியாக வந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு வவுனியா வர்த்தக சங்கத்தினால் மருத்துவ பொருட்கள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டன.

தொடர்ச்சியாக மதவாச்சி நோக்கி நடைபவணிக்கு ஏ9வீதியில் அமைந்துள்ள மதவுவைத்தகுளம் பிள்ளையார் ஆலயத்தில் அந்தனர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.

இன்று மாலை மதவாச்சி நோக்கி செல்லவுள்ளதுடன் நாளையதினம் அனுராதபுரத்தினை சென்றடையவுள்ளது.

வவுனியாவிலிருந்து யாழ் நோக்கி பயணித்த வாகனம் விபத்து : நால்வர் காயம்!!

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வாகனம் ஒன்று விபத்துக்குளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று (12.10) பகல் தாண்டிக்குளம் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

வாகனத்தில் பயணம் செய்த நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த 48 மணி நேரத்துக்கு உலக அளவில் முடங்கும் இணையம்!!

டொமைன் சர்வர்கள் பராமரிப்புப் பணிகள் இன்று நடைபெற இருப்பதால் உலகம் முழுவதும் இணைய சேவை பயன்படுத்துவர்களுக்கு இணைப்பு சிக்கல்கள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு இந்த பழுதுபார்ப்பு பணி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

”உலக அளவில் இணையம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இணைய சேவை பாதிப்பு நிகழலாம். நெட்வொர்க் கட்டமைப்புகளும் பாதிக்கப்படும்” என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இன்டர்நெட் கார்பரேஷன் ஆப் அசைண்டு நேம்ஸ் அண்டு நம்பர்ஸ் (ICANN) என்ற அமைப்பு இந்த திருத்தப் பணியை மேற்கொள்ள உள்ளது.

இதன்மூலம் இணையத்தில் இருக்கும் தகவல்களை பாதுகாத்து வரும் cryptographic key மாற்றப்படும் என்று தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் இணையத்தளங்கள் ஹேக் செய்யப்படும் சம்பவங்கள் அதிகமாக நடப்பதால் cryptographic key மாற்றப்பட வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், டொமைனில் இருக்கும் பெயர்கள் மற்றும் தகவல்களை பாதுக்காக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் கூறப்படுகின்றது.

இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்கு இணைய பக்கங்களை பெறுவது மற்றும் தகவல்கள் பரிமாற்றத்தில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.