தென்னிலங்கையில் இன்று காலையில் ஏற்பட்ட பாரிய விபத்து காரணமாக 80 பேர் வரையில் காயமடைந்துள்ளதுடன் ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் காயமடைந்தவர்களில் அதிகமானோரின் முகம், தலை மற்றும் முதுகு பாதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்ட, லுனுகம்வேஹேர பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
தனியார் மற்றும் அரச பேருந்தும் ஒன்றுக்கு ஒன்று மோதியமையால் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்திய தலைநகர் டெல்லியில் 19 வயது இளைஞர் தனது தாய், தந்தை உள்ளிட்ட மொத்த குடும்பத்தையும் கொன்று தள்ளிய சம்பவத்தின் பின்னணித் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிசார் சூரஜ் வர்ம என்ற 19 வயது இளைஞரை கைது செய்துள்ளனர்.
டெல்லியின் வசந்த்கஞ்ச் பகுதியில் புதன் அன்று காலை 5 மணியளவில் தேசத்தையே நடுங்க வைத்த இச்சம்பவம் வெளியானது.
காலையில் குடியிருப்புக்கு வந்த பணியாளரே சடலங்களை முதலில் பார்த்துள்ளார். உடனடியாக பொலிசாருக்கு தகவல் தரவும், சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
இந்த கொலை விவகாரத்தில் உயிர் தப்பிய சூரஜ்ஜிடம் பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கொள்ளை சம்பவத்திற்கு இடையே கொலை நடந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார். ஆனால் எந்த பொருளும் கொள்ளை போகாத நிலையில் சூரஜ்ஜின் வாக்குமூலம் பொலிசாருக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
மட்டுமின்றி குடும்பத்தில் உள்ள மூவரும் கொல்லப்பட்ட நிலையில் மகன் மட்டும் தப்பியதன் உண்மை காரணம் குறித்து தெளிவான பதிலை விசாரணை அதிகாரிகளுக்கு தெரிவிக்க சூரஜ் தவறியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சூரஜ்ஜை கைது செய்த பொலிசார், மீண்டும் விசாரித்துள்ளனர். இதில் திடுக்கிடும் தகவலை சூரஜ் வெளியிட்டுள்ளார்.
தமது பெற்றோர் எப்போதும் கல்வியில் கவனம் செலுத்த நிர்பந்தித்ததாகவும், நண்பர்களுடன் ஊர்சுற்ற அனுமதிப்பது இல்லை எனவும் சூரஜ் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
கொலை நடந்த அன்று தந்தை மிதிலேஷ் தம்மை கடுமையாக தாக்கியதாகவும், கோபமாக திட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதில் மனமுடைந்த சூரஜ் மொத்த குடும்பத்தையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து கடையில் சென்று கத்தி ஒன்றை வாங்கிய சூரஜ், அதிகாலை 3 மணியளவில் பெற்றோர் படுத்திருக்கும் அறைக்கு சென்று முதலில் தந்தையை கொடூரமாக கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
மிதிலேஷின் அலறல் கேட்டு கண் விழித்த தாயார் சியாவையும், பின்னர் சகோதரி நேஹாவையும் கொலை செய்துள்ளார். காலை 5 மணியளவில் குடியிருப்புக்கு வந்த பணியாளரிடம், கொள்ளை சம்பவத்தினிடையே பெற்றோர் கொல்லப்பட்டுள்ளதாக நம்ப வைத்துள்ளார்.
இதனிடையே கொலைக்கு பயன்படுத்திய கத்தியில் சூரஜ்ஜின் விரல் அடையாளம் பதிந்துள்ளதையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும், கொலைக்கு பின்னர் ரத்தக்கறைகளை கழுவியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உகண்டாவில் இளம் பெண்ணொருவர் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. லுலி ஜெமிமா என்ற இளம்பெண்ணை அவரின் பெற்றோர் திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
முதலில் திருமணத்தில் விருப்பமில்லாத ஜெமிமா தன்னை தானே திருமணம் செய்து கொண்டு பெற்றோருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த திருமணத்தில் ஜெமிமாவின் பெற்றோர் கலந்து கொள்ளவில்லை.
திருமண நிகழ்வில் உரையாற்றிய ஜெமிமா, திருமணம் செய்து கொள்ள மாப்பிள்ளை கிடைக்காததால் இந்த முடிவை எடுத்தேன் என கூறினார். தன்னை தானே திருமணம் செய்ய ஜெமிமாவுக்கு வெறும் $2.62 மட்டுமே செலவானது. இந்த செலவும் அவரின் பயணத்துக்கு தான்.
ஏனெனில் ஜெமிமாவின் திருமண உடையை அவரின் தோழி வாங்கி கொடுத்தார். அதே போல அவரின் சகோதரர் கேக் வாங்கிய நிலையில், திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள் அவர்களுக்கு ஆன செலவை அவர்களே ஏற்று கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் இருந்து டுபாய் சென்ற ஏர்இந்தியா விமானம் விமான நிலையத்தின் முடிவில் உள்ள பாரிய விமான போக்குவரத்து கட்டுப்பாடு கோபுரம் மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
குறித்த விபத்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்தத ஏர்இந்தியா விமானத்தில் 130 பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் இருந்துள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.
விமானம் திருச்சியில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போது விமான போக்குவரத்து கட்டுப்பாடு கோபுரம்மீது மோதி நிலைதடுமாறி சுற்று சுவரில் இடித்துள்ளது.
ஆனால் விமானத்தை மீண்டும் திருச்சியில் தரையிறக்க முடியாத சூழ்நிலை நிலவி உள்ளது. இதனால் விமானம் மும்பை நோக்கி திருப்பப்பட்டு மும்பையில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இதனால் பெரிய சேதம், பாரிய விபத்து தவிர்க்கப்பட்டது. உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 130 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர்.
இவர்கள் அனைவரும் வேறு விமானம் மூலம் டுபாய்க்கு அனுப்பப்பட உள்ளார்கள்.
எனினும் குறித்த ஏர்இந்தியா விமானத்தில் இலங்கையர்களும் உள்ளார்களா என்ற விடயம் இதுவரை வெளிவராத நிலையில், அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமகாலத்தில் இலங்கை முகங்கொடுத்துள்ள மோசமான நெருக்கடி நிலை குறித்து உலக நாடுகள் கவனம் செலுத்தியுள்ளன.
டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் தொடர்ச்சியாக பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையினால் இலங்கை சர்வதேசத்தின் அவதானத்திற்குள்ளாகியுள்ளது.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா உட்பட வளர்ந்து வரும் பொருளாதார சந்தையின் பரிவர்த்தனை விகித நெருக்கடியின் அடிப்படையில் சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தியுள்ளன.
இது தொடர்பான தகவல்களை பொருளாதாரம் தொடர்பான சர்வதேச நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
பரிவர்த்தனை விகித நெருக்கடி காரணமாக முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை, தென்னாபிரிக்கா, ஆர்ஜன்டீனா, பாகிஸ்தான், எகிப்து, துருக்கி, யுக்ரேன் ஆகிய நாடுகள் இந்த பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக சர்வதேச நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நாடுகளுக்குள் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் மிகவும் அவதான நிலையில், உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக விரிவுரையாளராக கடமையாற்றி வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட போதநாயகியின் வீட்டிற்கு வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் சென்றுள்ளார்.
வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் நேற்றைய தினம் போதநாயகியின் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இதன்போது போதநாயகியின் தாய் மற்றும் தந்தையுடன் கலந்துரையாடிய அவர் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் போதநாயகியின் திருமண வாழ்வின் பின்னரான நிலைமைகள் தொடர்பிலும் அனந்தி சசிதரன், போதநாயகியின் தாயாரிடம் உரையாடியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் கரப்பிணியான போதநாயகியின் மரணத்தில் அவரது கணவர் மீதே தமக்கு சந்தேகம் இருப்பதாகவும், எதிர்வரும் 22ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்தில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் அவர் இது தொடர்பான விசாரணைகளை சட்டமா அதிபரின் மூலமாக தீவிரப்படுத்துமாறு கோரி சட்டமா அதிபரிடம் கையளிப்பதற்காக கடிதம் ஒன்றினையும் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிடம் கையளித்துள்ளார்.
வவுனியாவில் அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு வறோட் அமைப்பினால் நேற்று (11.10.2018) விழிப்புணர்வு பேரணி ஒன்று நடைபெற்றது.
வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய இப் பேரணியானது வைத்தியசாலை வீதியூடாக இலுப்பையடியை சென்றடைந்து அங்கிருந்து பசார் வீதி வழியாக நகரசபை கலாசார மண்டபத்தை சென்றடைந்து அங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.
விழிப்புணர்வுப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கண்களை கறுப்பத்துணியால் கட்டி ஒருவர் பின் ஒருவராக கைகளை கோர்த்தபடி ஊர்வலமாக சென்றிருந்தனர்.
இந் நிகழ்வில் விசேடமாக கண்தானம் செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் கண்தானம் செய்ய விரும்புவர்களால் பூர்த்தி செய்து வழங்கப்பட்டிருந்தது.
விழிப்புணர்வு நிகழ்வில் யாழ் விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள் வன்னி விழிப்புணர்வற்ற சங்க உறுப்பினர்கள், தாதியர் கல்லூரி மாணவர்கள், மதகுருமார்கள், வவுனியா மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அதிகரித்துச் செல்லும் சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்கள் மீதான வன்கொடுமைகள் மற்றும் தற்கொலைகளுக்கு எதிராக வவுனியாவில் நேற்றைய தினம் வீதி நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டுள்ளது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் நேற்று மதியம் 1 மணிக்கு குறித்த வீதி நாடகம் நடத்தப்பட்டுள்ளது.
சீட் நிறுவனத்தின் அனுசரணையில் சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தொடர்பாக , பெற்றோர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்களுக்கு விழிப்பூட்டும் வகையில் குறித்த வீதி நாடகம் நடத்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு வவுனியா நகர மத்தியில் இந்த நாடகம் நடத்தப்படவுள்ளது.
தைரியமாக முன்னோக்கிச் செல்வதற்காக எமது சிறுவர்களைப் பலப்படுத்துவோம், இன்றைய பெரியவர்கள் நேற்றைய சிறுவர்கள் எனவே சிறுவர்களைப் பாதுகாப்பதும் அவர்களை முன்னோக்கிச் செயற்படவைப்பதும் நமது பொறுப்பு என எழுதப்பட்ட பதாதையுடன் விஷேட தேவைக்குட்பட்டவர்களின் பங்குபற்றலுடன் இந்த நாடகம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேனிலவுக்காக இலங்கைக்கு வந்த பிரிட்டிஷ் தம்பதியர் தங்கியிருந்த ஹொட்டலைப் பற்றி சர்வதேச ஊடகமொன்று அற்புதமான கதையை வெளியிட்டுள்ளது.
2017 டிசம்பர் மாதத்தில் 33 வயதான Gina Lyons மற்றும் 35 வயதான Mark Lee என்ற தம்பதியினர் தேன் நிலவுக்காக இலங்கைக்கு வருகை தந்து, தங்காலையில் அமைந்துள்ள ஒரு கடலோர ஹொட்டலில் தங்கியுள்ளனர்.
ஹொட்டலில் தங்கியிருக்கும் போது, ஒரு நாள் இருவரும் நன்றாக குடித்துக்கொண்டிருந்த வேளை அந்த ஹொட்டலின் பணியாளர் வந்து, ஹொட்டலை குத்தகைக்கு எடுத்த காலம் முடிடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அதிக மதுபோதையில் இருந்த குறித்த தம்பதியினர் ஹொட்டலை குத்தகை அடிப்படையில் வாங்குவதற்கு முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, பிரிட்டிஷ் பவுண் 30,000 இற்கு மூன்று வருடங்களுக்கு அவர்கள் ஹொட்டலை குத்தகைக்கு வாங்கியுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஜூலை முதலாம் திகதி 15,000 பவுண்கள் செலுத்தி அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடிந்த பிறகு குறித்த ஹொட்டலுக்கு ‘Lucky Beach Tangalle என பேர் வைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மிகுதி 15,000 பவுண் எதிர்வரும் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு 7000 பவுண்களும் ஹொட்டல் மறுசீரமைப்பதற்காக அவர்கள் 6,000 பவுண்களும் செலவிட்டுள்ளதாக குறித்த தம்பதியினர் வெளிநாட்டு ஊடமொன்றுக்கு தெரிவித்துள்ளனர்.
“நாங்கள் நன்றாக குடித்திருந்த வேளை ஹொட்டல் குத்தகை காலம் முடிந்துவிட்டதுதாக அவர் எங்களிடம் கூறினார். பின்னர் கணக்குப் பார்க்கும்போது வருடத்திற்கு ஹொட்டல் குத்தகை பணம் 10 ஆயிரம் பவுண் வருகின்றது. மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துக் கொள்ள நாங்கள் ஒரு நிமிடத்தில் முடிவு செய்தோம். நாங்கள் மதுபோதையில் இருந்தாலும் கவர்ச்சிகரமான முடிவை எடுத்தோம்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
திருவாரூரில் வரதட்சணை கேட்டு மனைவி குழந்தையை அரிவாளால் வெட்டி, மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற கணவனை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் வாசன் நகரில் வசித்து வருபவர் கிஷோர்ராஜா. இவர் கடந்த 2016-ம் ஆண்டு மன்னார்குடி பைங்காநாடு ஜெயநந்தினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
காட்டூரில் கார் பரிசோதனை மையம் நடத்தி வரும் கிசோர் தன்னுடைய தொழிலை விரிவுபடுத்துவதற்காக ஜெயநந்தினியிடம் ரூ.20 லட்சம் பணம் கேட்டுள்ளார். பணம் பெறுவதற்காக நந்தினியும் தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்றைய தினம் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது கிஷோர், மாமியார், மாமனார், நாத்தனார் ஆகியோர் நந்தினியிடம் பணம் கேட்டுள்ளனர். தற்போது பணம் இல்லை என நந்தினி கூற, ஆத்திரமடைந்த கிசோர் அரிவாளால் நந்தினியை வெட்டியுள்ளார். இதனையடுத்து உடனடியாக நந்தினி மற்றும் அவருடைய குழந்தையின் மீது மண்ணெண்னையை ஊற்றிய மாமியாரும், நாத்தனாரும் இருவரையும் எரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
உடனே கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அங்கிருந்து தப்பித்த நந்தினி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் சம்பவம் அறிந்த வந்த பொலிஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான கிசோர் மற்றும் அவருடைய குடும்பத்தாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நளாயினி என்பவருக்கு, ஆனந்த பிரகாஷ் என்பவருடன் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
திருமணமான 21 ஆவது நாளில், சவுதி அரேபியாவுக்கு ஆனந்த பிரகாஷ் சென்று விட்டார். தற்போது, தனது மனைவியை சவுதிக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை ஆனந்த பிரகாஷ் செய்து வந்துள்ளார். விமான டிக்கெட்டை அவர் அனுப்பிய நிலையில் கடந்த 7ம் தேதியில் இருந்து நளாயினி மாயமாகியுள்ளார்.
இதையடுத்து தேடுதல் வேட்டைக்கு பின்னர் அவர்கள் இருவரை மீட்டு ஏர்வாடி காவல்நிலையத்திற்க்கு கொண்டு வந்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.
பெண்ணோ என் கணவருடன் வாழ விருப்பமில்லை. நான் என்னுடைய பெற்றோருடன் சென்றால் கொன்றுவிடுவார்கள், நான் காதலனுடன் தான் செல்வேன் என்று தெரிவித்தார்.
இதன் பின்னர், காவல்துறையினர் நளாயினியை அவரது கள்ள காதலனுடன் அனுப்பி வைத்தனர். அதையடுத்து பெண்வீட்டார் காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு காவல்துறை சார்பு ஆய்வாளர் சரவணன், பெண்ணிற்கு வயது 22 ஆகிறது. அவர் யாருடன் செல்ல வேண்டும் என்று விரும்பிகிறாரோ அவருடன் தான் நாங்கள் அனுப்ப முடியும். நீதிமன்றமே கள்ளகாதலுக்கு தடையில்லை என்று தீர்ப்பு கூறியுள்ளது. நான் என்ன செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.
பஞ்சாப்பில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் தமிழக ராணுவ வீரர் ஜெகன் பலியாகியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வேலப்பரின் மகன் ஜெகன் (வயது 38). இவர் கடந்த 18 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவருக்கும், தெற்குசூரங்குடி பகுதியை சேர்ந்த சுபி என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது சுபி 8 மாத கர்ப்பமாக உள்ளார்.
இந்நிலையில் பஞ்சாப்பில் நக்சலைட் பயங்கரவாதிகளுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் ஜெகனும் ஈடுபட்டு இருந்தார். அப்போது பயங்கரவாதிகள் சுட்டத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஜெகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெகனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். ஜெகனின் உடல் இன்று சொந்த ஊர் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெகனின் தந்தை வேலப்பன் ஏற்கனவே இறந்துவிட்டார். தாயார் சீதாலட்சுமி, ஜெகனுக்கு 2 சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர்.
சிறு வயதில் இருந்தே குடும்ப பாரத்தை சுமந்த ஜெகன், இரண்டு சகோதரிகளையும் திருமணம் செய்து கொடுத்த பின்புதான் தனது 38-வது வயதில் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த வாழ்க்கையும் இப்படி 10 மாதத்தில் முடிவுக்கு வந்துள்ளது.
ரஷ்யாவில் தன்னுடைய பாதுகாப்பில் இருந்த 13 வயதிற்குட்பட்ட சிறுமிகளை 900க்கும் அதிகமான முறை துஸ்பிரயோகம் செய்த கொடூரனை வரலாற்றிலேயே மோசமான ஒரு குற்றவாளி என நீதிமன்றம் கூறியிருக்கிறது.
ரஷ்யாவை சேர்ந்த Viktor Lishavsky (37) – Olga தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மேலும் இந்த தம்பதியினர் ஒன்பதுக்கு அதிகமான சிறுவர்களை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.
இவர்களுக்கு மாநில அரசின் சார்பில் மாதம் தோறும் £ 265 பவுண்டுகள் நிதியாக வழங்கப்படுகிறது. காலணி கடை ஒன்றினை நடத்தி வந்த Viktor, தான் வளர்த்த 12 முதல் 17 வயது சிறுவர்களை ஐந்து ஆண்டுகளாக துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இந்த சம்பவம் குறித்து சிறுமி Olga-விடம் கூறியுள்ளார். இதனையடுத்து Olga உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குற்றவாளி Viktor-ஐ கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து கூறிய Olga, ஐந்து ஆண்டுகளாக எனக்கு தெரியாமலே இந்த சம்பவம் நடந்து வந்துள்ளது. இதுகுறித்து எந்த சிறுமியும் என்னிடம் கூறவில்லை. ஏனெனில் அனைவருமே அவரை தங்களுடைய தந்தையாகவே கருதி வந்தனர் என தெரிவித்தார்.
இந்த நிலையில் குற்றவாளி Viktor-ஐ பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்பொழுது குற்றவாளி, சிறுமிகளை கொடுமைப்படுத்தி, தன்னுடைய பாலியல் அடிமைகளாக 900கும் மேற்பட்ட முறை பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.
ரஷ்ய நாட்டின் வரலாற்றிலேயே Viktor தான் மோசமான ஒரு குற்றவாளி என தெரிவித்த நீதிபதி, அவனுக்கு 22 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
பிரேசில் நாட்டில் விபத்தில் சிக்கி ஒட்டுமொத்த குடும்பமும் உயிரிழந்த பின்னர், 6 வயது சிறுவன் மட்டும் தனியாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கதறி அழுதுகொண்டிருந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டை சேர்ந்த Belkis (35) என்ற பெண் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி விட்டு, கணவன் Alessandro (37) மற்றும் இரு மகன்களுடன் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்துள்ளார்.
அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத அதிவேக சாலையில் மற்றொரு காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நிலை குலைந்த கார் வேகமாக காட்டுப்பகுதியில் உள்ள பள்ளத்தில் புகுந்து நின்றது.
இந்த சம்பவத்தில் பரிதாபமாக Belkis, அவருடைய கணவன் மற்றும் 8 வயது மகன் சாமுவேல் பரிதாபமா காரிலே உயிரிழந்தார்.
இதில் சிறிய காயங்களுடன் உயிர்தப்பிய 6 வயது சிறுவனான பெஞ்சமின் இரண்டு நாட்களாக அங்கிருந்து செல்ல வலி தெரியாமல் அப்பகுதியில் கதறி அழுது கொண்டிருந்துள்ளான்.
இதற்கிடையில் அப்பகுதி வழியாக சென்ற ஒரு நபர் உடல்குன்றிய நிலையில் சிறுவனை பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் காரை வெளியில் எடுத்து மூவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய நபர்களை கண்டறியும் விதமாக சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
வைரமுத்து மீது இத்தனை காலமாக புகார் சொல்லாமல் தற்போது புகார் கூறுவது ஏன் என ஆங்கில சேனலுக்கு சின்மயி விளக்கமளித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து கடந்த 2005/2006 காலக்கட்டத்தில் சுவிட்சர்லாந்தில் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என பாடகி சின்மயி குற்றஞ்சாட்டினார். இதற்கு, உண்மைக்கு புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை. உண்மையை காலம் சொல்லும் என வைரமுத்து டுவிட்டரில் தெரிவித்தார்.
இதற்கு வைரமுத்து ஒரு பொய்யர் என பதிலடி கொடுத்தார் சின்மயி. இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்னர் வைரமுத்து இப்படி செய்ததாக கூறும் சின்மயி அதை ஏன் இப்போது தான் வெளியில் சொல்கிறார் என கேள்வி எழுந்தது. இதற்கு ஆங்கில ஊடகம் ஒன்றில் அவர் பதிலளித்துள்ளார்.
சின்மயி கூறுகையில், ஆம் இவ்வளவு நாளாக எனக்கு இதை சொல்ல தைரியம் இல்லை. அதற்கான சூழ்நிலை இல்லை. இப்போதுதான் அதற்கான சூழல் வந்துள்ளது.
தாங்கள் அனுபவிக்கும் பாலியல் தொல்லை குறித்து மக்கள் பலரும் தற்போது கூற தொடங்கிவிட்டதால் தான் நானும் அதில் இணைந்துள்ளேன். இல்லையென்றால் இந்த விடயம் வெளியில் தெரியாமல் இறுதியில் என் கல்லறைக்கு தான் சென்றிருக்கும்.
இது நடந்தபின்னர் அவர் எழுதிய பாடல்களை நான் பாடியுள்ளேன். அந்த பாடல் பதிவின் போது வைரமுத்துவுடன் நான் தனியாக இருக்க மாட்டேன். ஏன் எதாவது பொது நிகழ்ச்சியில் அவருடன் கலந்து கொண்டால் கூட அவரை விட்டு விலகியே இருப்பேன். பணி விடயமாக எதாவது பேச வேண்டும் என்றால் மட்டுமே பேசுவேன்.
பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசுவதற்கு துணிச்சல் வேண்டும், அது தான் இந்தியாவின் இன்றைய நிலை. இந்த துணிச்சல் இல்லாததால் பலர் தங்கள் வேலையையே விட்டுள்ளார்கள் என கூறியுள்ளார்.
திரையுலகை சேர்ந்த முன்னணி பிரபலங்கள் இந்த விடயம் குறித்து பேசவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த சின்மயி, யார் பேச வேண்டும், யார் பேச கூடாது என்பதை நான் சொல்ல முடியாது.
அவர்கள் வாழ்க்கையில் தனிப்பட்ட பிரச்சனை இருக்கலாம்.
என்னுடன் நெருக்கமாக இருப்பவர்களே எனக்கு ஆதரவு தர பயப்படுகிறார்கள், நான் அவர்களை குறை சொல்ல விரும்பவில்லை. ஆணோ அல்லது பெண்ணோ இது போன்ற பாலியல் துன்புறுத்தலை அனுபவித்தால் பயப்படாமல் வெளியில் சொல்ல வேண்டும் என சின்மயி கூறியுள்ளார்.