குழந்தைகளை கொலை செய்த பின்னர் அபிராமி செய்த செயல் : வெளியான எஃப்.ஐ.ஆர் தகவல்!!

பெற்ற குழந்தைகளை கொலை செய்த பின்னர் அபிராமி வீட்டில் எப்படியிருந்தார் என்று அவரின் கணவர் விஜய் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்த தகவலின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில், 1.9.2018-ல் வேலை முடிந்து அதிகாலை 4 மணிக்கு எனது வீட்டுக்கு வரும் வழியில் எனது மனைவி அபிராமிக்கு போன் செய்தேன். அபிராமிக்கு போன் போகவில்லை. உடனே மாமனார் வீட்டுக்குப் போனேன். அங்கு எனது மனைவியும் பிள்ளைகளும் இல்லாததால் சந்தேகமடைந்தேன்.

ஏற்கெனவே ஒரு முறை எனது மனைவி கோபித்துக்கொண்டு குன்றத்தூரில் உள்ள சுந்தரம் என்பவர் வீட்டுக்குச் சென்று இரவு தங்கியிருந்தார். அவரை நாங்கள் சுந்தரம் வீட்டிலிருந்து அழைத்தபோது வீட்டுக்கு வரமாட்டேன் என்று பிடிவாதம் செய்தாள். நானும் எனது மச்சான் பிரசன்ன மணிகண்டன், மாமா சௌந்தர்ராஜன், உறவினர்களும் சமாதானம் பேசி அழைத்து வந்தோம்.

எனவே அங்குச் சென்றிருக்கலாம் என்று நினைத்து எனது மச்சான் பிரசன்ன மணிகண்டனுடன் சுந்தரம் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அங்கு சுந்தரமும் இல்லை. எனது மனைவியும் இல்லை.

உடனே நானும் பிரசன்ன மணிகண்டனும் திரும்பி எனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது எனது வீட்டின் கதவு வெளியில் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. நான் கதவைத் திறந்து பார்த்தபோது எனது மகளும் மகனும் வாயில் நுரைதள்ளி இறந்துகிடந்தார்கள்.

அப்போது எனது மனைவி வீட்டில் இல்லை. எனது மனைவி அபிராமி சுந்தரம் என்பவனுடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவனுடன் சேர்ந்து வாழ என் குழந்தைகள் இடைஞ்சலாக இருக்கும் என்பதால் திட்டம் போட்டு எனது மகனையும் மகளையும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு சுந்தரத்துடன் தப்பிச் சென்று விட்டதாகத் தெரிகிறது.

எனவே எனது பிள்ளைகளை கொலை செய்த எனது மனைவி மற்றும் சுந்தரம் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று எஃப்.ஐ.ஆரில் தகவல்கள் உள்ளன.

குழந்தைகளின் இறப்புக்கான காரணம் குறித்த மெடிக்கல் ரிப்போர்ட்டுக்காக விசாரணை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
அந்த ரிப்போர்ட் வந்ததும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

பெண்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி மனஅழுத்தத்தில் இருப்பதால் அவர் தவறான முடிவு எதுவும் எடுத்துவிடாமல் தடுக்க 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் கண் எதிரில் மனைவியை கொன்ற கணவன் : அடுத்து செய்த திடுக்கிடும் செயல்!!

சென்னையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி சின்னமாங்காட்டைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவரது மனைவி துர்கா(26).

தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை வரும். இந்நிலையில் நேற்று வெங்கடேசனுக்கும், துர்காவுக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியதில் கோபமடைந்த வெங்கடேசன் தனது இரு பெண் குழந்தைகள் எதிரிலேயே துர்காவின் கழுத்தை நெரித்துக் கொன்றார். பின்னர் தனது குழந்தைகளை அருகில் உள்ள தாய் வீட்டில் விட்ட வெங்கடேசன், வீட்டுக்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

இதையடுத்து ஏதேச்சையாக துர்கா வீட்டுக்கு வந்த உறவினர்கள் வெங்கடேசனும், துர்காவும் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவம் குறித்து பொலிசாருக்கு தரப்பட்ட நிலையில் இரு சடலங்களையும் கைப்பற்றிய அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தெற்கு பிரான்ஸை சூறையாடிய வெள்ளம்!!

கடந்த மூன்று நாட்களாக பிரான்சின் தெற்கு பிராந்தியங்களில் பெய்து வரும் தொடர் மழையால் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. நேற்று தெற்கில் ஆறு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

Var மாவட்டத்தின் Saint-Maxime மற்றும் Roquebrune ஆகிய இரு நகரங்களுக்கு இடைப்பட்ட கடல் பிராந்தியங்களில் வெள்ளம் கடலுக்குள் சென்றதில், பல மகிழுந்துகளும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமையன்று மகிழுந்து சாரதி ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். இவரை தேடும் பணியில் 100 தீயணைப்பு படையினர் வரை களத்தில் போராடி வருகின்றனர்.

இது குறித்து அந்நகர முதல்வர் “வெள்ளத்தில் உங்கள் மகிழுந்தை காப்பாற்றும் நோக்கில் உங்கள் உயிரை பலியிட்டு விடாதீர்கள்” என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் குறித்த பிராந்தியத்தில் ஒரு இரவில் மாத்திரம் 210 மீட்டர்கள் மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சற்றுமுன் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி : ஒருவர் படுகாயம்!!

வவுனியா மடுக்கந்தை பகுதியில் இன்று (11.10.2018) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மடுக்கந்தை பகுதியில் காரும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரில் பயணித்த நபர்களுக்கு எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை

ராஜகருணா வயது -58, பாஸ்கரன் வயது – 48 ஆகிய இருவரே உயிரிழந்துள்ளதாகவும் தெய்வேந்திரன் என்பவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் தமிழ் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு : ஊரே சோகத்தில்!!

மட்டக்களப்பில் இளம் தமிழ் பெண்ணொருவர் நேற்றிரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எருவில் கிராமத்தை சேர்ந்த அருளானந்தம் சாலினி (18 வயது) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதை அவதானித்த உறவினர்கள் நேற்றிரவு 11 மணியளவில் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வித்தியா கொலை வழக்கில் தலைமறைவான பொலிஸ் அதிகாரிக்கு வலை வீச்சு!!

யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்கள் தப்பித்து செல்வதற்கு உதவி புரிந்ததாக கூறப்படும் பொலிஸ் அதிகாரி ஸ்ரீகஜனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு யாழ்.கயிட்ஸ் மஜிஸ்திரேட் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமார் உள்ளிட்ட ஏனைய சந்தேக நபர்கள் தப்பித்து செல்வதற்கு ஸ்ரீகஜன் உதவி புரிந்துள்ளார் என குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். இதைத் தொடர்ந்து ஸ்ரீகஜன் தலைமறைவானார்

இந் நிலையிலேயே நேற்று வழக்கை விசாரித்த யாழ். புங்குடுத்தீவு மஜிஸ்திரேட் ஸ்ரீகஜனை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

முச்சக்கரவண்டி பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி : இன்று நள்ளிரவு முதல் ஏற்பட போகும் மாற்றம்!!

முச்சக்கரவண்டி கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளுக்கான விலை உயர்வினை தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் முச்சக்கரவண்டிகளின் கட்டணங்கள் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கிலோமீற்றருக்காக தற்போது அறவீடு செய்யப்படும் 60 ரூபா என்ற தொகையில் மாற்றம் இருக்காது எனவும், இரண்டாம் கிலோமீற்றர் முதல் அறவீடு செய்யப்படும் தொகை 40 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாடசாலை வான் சேவைகளின் கட்டணங்களும் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் பற்றி எரியும் விற்பனை நிலையம் : களத்தில் விமானப் படை!!

கொழும்பின் புறநகர் பகுதியான பத்தரமுல்லையில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

பெலவத்தை ஆடை விற்பனை நிலையத்தில் பரவியுள்ள தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில், இலங்கை விமானபடையின் உதவி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் Bell 212 என்ற ஹெலிகொப்டர் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது. வானில் இருந்து நீர் பிரயோகம் மேற்கொண்டு தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக கொழும்பு தீயணைப்பு பிரிவின் 7 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 25 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இராணுவத்தினரின் உதவியும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை நிலையத்திற்கு பெருமளவு வாடிக்கையாளர்களும் மற்றும் ஊழியர்களும் இருந்துள்ளனர்.

தீ வேகமாக பரவி வரும் நிலையில் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அனைவரும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை வீரர் லசித் மலிங்க கொடுத்த பாலியல் தொல்லை : சின்மயி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

பெண் ஒருவரிடம் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க அத்துமீறி நடந்து கொண்டதாக சின்மயி தெரிவித்துள்ளார்.

வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என பாடகி சின்மயி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போல பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக டுவிட்டரில் பிரபலங்கள் பெயர்களை அவர் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் பெண் ஒருவர் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறிய பதிவை சின்மயி பகிர்ந்துள்ளார்.

அதில், சில ஆண்டுகளுக்கு முன்னாள் நான் மும்பையில் இருந்தேன். அப்போது நான் தங்கியிருந்த ஹொட்டலில் என் தோழியும் தங்கியிருந்ததால் அவரை தேடினேன்.

அப்போது ஐபிஎல் சீசனில் பிரபலமாக இருந்த இலங்கை வீரர் என்னிடம் வந்து உங்கள் தோழி என் அறையில் இருப்பதாக கூறினார்.

இதையடுத்து நான் அங்கு சென்றபோது தோழி அங்கு இல்லை. அப்போது கிரிக்கெட் வீரர் என்னை படுக்கையில் தள்ளி என் முகம் அருகில் வந்தார்.

அவர் வாட்ட சாட்டமாக இருந்ததால் அவரை எதிர்த்து என்னால் போராட முடியவில்லை. அப்போது ஹொட்டல் ஊழியர் கதவை தட்டினார், பின்னர் அவர் கதவை திறந்தவுடன் நான் வெளியே ஓடிவிட்டேன்.

இதை வைத்து அந்த வீரர் பிரபலமானவர் என்பதால் நான் வேண்டுமென்றே அவர் அறைக்கு சென்றதாக கூட சிலர் கூறலாம் என தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபை தலைவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை : குப்பை அள்ளும் வண்டியில் பயணம்!!

வவுனியா நகரசபை தவிசாளர் நகரசபையில் வாகனம் இல்லாத காரணத்தினால் குப்பை அள்ளும் வண்டியில் பயணித்த சம்பவம் ஒன்று இன்று (11.10.2018) வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா நகரசபை தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள வாகனமானது அடிக்கடி பழுதாகி விடும் நிலையில் உள்ளமையினால் அலுவலக தேவை நிமித்தம் மாவட்ட செயலகத்திற்கு கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக நகரசபை தலைவர் குப்பை அள்ளும் வண்டியில் பயணித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த வவுனியா நகரசபை தலைவர். இ.கௌதமன்,

வவுனியா நகரசபையினால் வழங்கப்பட்டுள்ள வாகனமானது பழுதடைந்துள்ளமையால் புது வாகனங்களை நகரசபைக்கு வழங்குமாறு பல தடவைகள் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அறிவித்துள்ளபோதும் எமக்கு வாகனங்கள் வழங்கப்படவில்லை . இதன் காரணமாக அலுவலக தேவைக்கு செல்வதற்கு பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியதாக உள்ளது.

அத்துடன் வவுனியா நகரசபையின் பல்வேறு வேலைப்பிரிவுகளுக்கு ஆளனிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வவுனியா நகரசபையில் 14 ஊழியர்களுக்கான வெற்றிடம் காணப்படுவதுடன் நகரசபை தலைவர், செயலாளர், கணக்காளர், நகரசபை ஊழியர்களின் தேவைக்கென நான்கு வாகனங்கள் தேவையுள்ளது. எனவே இவற்றையினை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு தெரிவித்தார்.

அனுப்பாமல் இருந்தால் என் மகளுக்கு இப்படி ஆயிருக்காதே : மகளை காப்பாற்றும் படி கதறும் தாய்!!

தமிழகத்தில் சாமி கும்பிடும்போது துப்பட்டா தீப்பிடித்து எரிந்ததால், சிறுமி ஒருவர் பாதி உடல் எரிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சேலம் மாவட்டம் மேச்சேரியை அடுத்த தெத்திகிரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதி மகாலிங்கம்-புனிதா. இவர்களுக்கு பூவரசன் என்ற மகனும், 6-ஆம் வகுப்பு படிக்கும் விஜயபாரதி என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் விஜயபாரதி கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு சென்ற போது, பள்ளியின் தலைமை ஆசிரியர் சர்க்குலர் ஒன்றை கொடுத்து வேறு ஒரு இடத்தில் இருக்கும் பள்ளியில் கொடுத்துவிட்டு வரும் படி கூறியுள்ளார்.

இதனால் பள்ளியில் கொடுத்துவிட்டு திரும்பும் போது, அருகிலிருக்கும் கோவிலில் விஜயா சாமி கும்பிட்டுள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக துப்பட்டா எரிந்ததால், பாதி உடல் தீக்காயம் அடைந்த நிலையில், தற்போது சேலத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து விஜயாவின் அம்மாவான புனிதாவிடம் கேட்ட போது, அன்றைய தினம் என் மகள் குளித்துவிட்டு, அழகாக பள்ளிக்கு சென்றிருந்தாள். திடீரென்று காலை 10 மணிக்கு மேல் உன் மகள் தீப்பிடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள், அதனால் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம் என்ற அதிர்ச்சி தகவல் வந்தது.

இதைக் கேட்டவுடன் என் உயிரே போயிருச்சு, கதறி அழுதவாறு மருத்துவமனைக்கு ஓடினோம். பள்ளியின் தலைமை ஆசிரியை குழந்தையம்மாள் என் மகளையும் கீர்த்திகா என்ற பெண்ணையும் அழைத்து சர்க்குலர் ஒன்றை கொடுத்து இன்னொரு இடத்தில் உள்ள பள்ளிக் கட்டடத்தில் கொண்டு போய் கொடுக்கச் சொல்லி இருக்கிறார். விஜயபாரதியும், கீர்த்திகாவும் கொடுத்துவிட்டு, அன்று வெள்ளிக்கிழமை என்பதால் வரும் வழியில் உள்ள கோயிலில் சாமி கும்பிடச் சென்றுள்ளனர்.

சாமி கும்பிடும்போது விளக்கில் இருந்த தீ துப்பட்டாவில் பிடித்திருக்கிறது. அது தெரியாமல் அவள் ஆழ்ந்து சாமி கும்பிட்டிருக்கிறார். பிறகு கீர்த்திகா பார்த்து அலறி இருக்கிறார்.

அதன் பிறகு அருகில் இருப்பவர்கள் ஓடி வந்து தீயை அணைத்திருக்கிறார்கள். இதனால் அவளுக்கு ஒரு பகுதியே வெந்துவிட்டது. என் குழந்தையை தலைமை ஆசிரியர் வெளியே அனுப்பாமல் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. ஆசிரியை பணம் கொடுப்பதாகச் சொல்லறாங்க. எனக்குப் பணமெல்லாம் வேண்டாம். என் குழந்தையைக் காப்பாற்றிக் கொடுத்தால் போதும் என்று கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.

இரண்டு பேரை திருமணம் செய்து ஏமாற்றியதாக இளம் பெண் : அதிர்ச்சிப் பின்னணி!!

தமிழகத்தில் இரண்டு பேரை திருமணம் செய்து ஏமாற்றியதாக இளம் பெண் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் சமிதா (18). இவருக்கும் சாலை நகர் பகுதியை சேர்ந்த உறவினரான சக்திவேல் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது குரூப் போட்டோ எடுப்பது தொடர்பாக மாப்பிள்ளை வீட்டிற்கும், பெண் வீட்டிற்கும் தகராறு வந்ததுள்ளது. பின்னர் சமரசம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதனை காரணம் காட்டி திருமணம் ஆன சில தினங்களிலேயே சமிதா கோபித்துக் கொண்டு தாய்வீட்டுக்கு சென்று விட்டார்.

சில நாட்கள் கழித்து மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வர சக்திவேல், மாமனார் வீட்டிற்கு சென்ற நிலையில் அவருடன் செல்ல சமிதா மறுத்துள்ளார். இந்நிலையில் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டி சக்திவேல் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார்.

அப்போது மனைவி சமிதா வேறொரு இளைஞருடன் கழுத்தில் புதிதாக கட்டப்பட்ட மஞ்சள் தாலியுடன் ஜோடியாக கிரிவலம் செல்வதை கண்டு திகைப்படைந்தார்.

அப்போது தான் சமிதாவுடன் கிரிவலம் வந்தவர் அவரின் பள்ளிபருவ காதலன் கார்த்திக் என்பதும் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து சக்திவேல், தனது மனைவி தன்னை விவாகரத்து செய்து கொள்ளாமல் வேறொரு இளைஞரை 2 வது திருமணம் செய்து கொண்டதாக பொலிஸ் புகார் அளித்தார்.

பொலிசார் விசாரணையில், சமிதா, 11 ஆம் வகுப்பு படிக்கும் போது கார்த்திக்கை காதலித்த நிலையில் கர்ப்பமாகியுள்ளார்.

கார்த்திக் தங்களை விட குறைந்த ஜாதி என்பதால் சமிதாவின் கர்ப்பத்தை கலைத்த குடும்பத்தினர் சமிதாவை உறவினர் சக்திவேல் வீட்டில் தங்க வைத்தனர்.

அங்கு 2 மாதம் தங்கி இருந்த நிலையில் சக்திவேலுவுக்கும், சமிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளது தெரியவந்தது.

கணவன் வீட்டாரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற சமிதா பழைய காதலன் கார்த்திக்கை சந்தித்து பேசி அவரை திருமணம் செய்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிசார் சமிதா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்

பிறந்தநாளன்று காதலியை சுட்டுக் கொல்ல காரணம் என்ன? வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!

தமிழகத்தில் காதலியை பிறந்தநாளன்று சுட்டுக் கொன்ற காதலன், சந்தேகத்தால் இந்த செயலை செய்துவிட்டு அதன் பின் தற்கொலை செய்து கொண்டுள்ளான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சேகர் – மரியம்மாள். இவர்களுக்கு தமிழ் ரோஜா, சரஸ்வதி என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

அதில் மூத்த மகள் தமிழ் ரோஜா பொறியியல் படித்துள்ளார். இளைய மகள் சரஸ்வதி ர் கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நர்ஸிங் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.

அப்போது, சென்னை கமாண்டோ பொலிஸ் பயிற்சிப் பள்ளியில் பணிபுரிந்து வந்த வேலூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியதா, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதையடுத்து கடந்த 2016-ஆம் ஆண்டு அரசு நடத்திய எம்.பி.பி.எஸ் கலந்தாய்வில் சரஸ்வதிக்கு இடம் கிடைத்ததால், நர்ஸிங் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, சென்னையில் கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்துள்ளார்.

சுமார் 3 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்களுக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். கார்த்திகேயனும் கமோன்டோ பயிற்சி பெற்று 15வது பட்டாலியனில் இருந்து வந்தார். தற்போது தமிழகப் பாதுகாப்புப் பிரிவில் ஓ.டி.யாக இருந்து வருகிறார்.

சென்னைக்கு மூன்று நாள் பயணமாக, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வருவதையொட்டி, அவர் தங்குவதற்கு வீடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வீட்டின் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பப்பட்டார் கார்த்திகேயன்.

இந்நிலையில் அக்டோபர் 10-ஆம் திகதி சரஸ்வதிக்குப் பிறந்தநாள் என்பதால், முன் தினம் இரவு அவர் சென்னையிலிருந்து அன்னியூர்கு சென்றுள்ளார்.

அப்போது சரஸ்வதியின் பெற்றோர் ஹாலில் டிவி பார்த்துக்கொண்டிருந்தனர். கார்த்திவேலும், சரஸ்வதியும் ஒரு அறையில் கதவை சாத்திவிட்டு பேசிக்கொண்டிருந்தனர்.

சமீபகாலமாகத் தன்னுடன் பேசாமல் இருபப்து குறித்து சரஸ்வதியிடம், கார்த்திகேயன் கேள்விகள் கேட்டுள்ளார். அந்த நேரத்தில் சரஸ்வதியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த கார்த்திகேயன், சரஸ்வதியிடம் மோதலில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் உச்சகட்டமாக, தன் இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்து சரஸ்வதியின் நெஞ்சில் இருமுறை சுட்டுக் கொலை செய்தார் கார்த்திகேயன்.

அதன்பின், தனது தலையில் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சந்தேகப் பிரச்சினையால், சரஸ்வதி கொஞ்சம் காலமாகக் கார்த்திகேயனை விட்டு ஒதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இரண்டு பேரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் சரஸ்வதிக்கு வேறு யாருடனோ நட்பு இருப்பதாக நினைத்து கார்த்திகேயன் அவரை கொலை செய்யும் முயற்சியோடு துப்பாக்கியுடன் வந்துள்ளனர். அதன் பின் நடந்த வாக்குவாதத்தில் இருவரும் பலியாகியுள்ளனர்.

இலங்கையில் அபூர்வ நோயினால் உயிருக்கு போராடிய இளைஞனின் பரிதாபம்!!

இலங்கையில் அபூர்வமான நோயினால் பாதிக்கப்பட்ட இளைஞனை காப்பாற்றும் முயற்சியில் நண்பர்கள் ஈடுபட்ட போதும், தோல்வியில் முடிந்துள்ளது.

அரிய வகை நோயான T-ALL எனப்படும் லியுகேமியா என்ற நோயில் பாதிக்கப்பட்ட 26 வயதான தீக்ஷன அபேசேகர உயிரிழந்துள்ளார்.

நோயினை குணப்படுத்த தேவையான 60 இலட்சம் ரூபாவினை நண்பர்களினால் சேகரித்த போதும், உயிரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

தீக்ஷன போராடி பொறியியலாளராக வாழ்க்கையில் சாதித்த போதிலும், வாழ முடியாமல் உயிரிழந்துள்ளார்.

தீக்ஷன அபேசேகர பொரளை கன்னங்கர வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி கற்று, கொழும்பு தேஸ்டன் வித்தியாலயத்தில் கணித பிரிவில் உயர் தரம் கற்றுள்ளார். பின்னர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் கற்கைககளை மேற்கொண்டவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொறியியலாளராகியுள்ளார்.

சிவில் பொறியியலாளராக சேவை செய்யும் இந்த இளைஞன், மிகவும் அரிய வகை நோயான T-ALL எனப்படும் லியுகேமியா என்ற நோயில் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 13ஆம் திகதி ஜயவர்தனபுர வைத்தியசாலையில் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

பல துன்பங்களை அனுபவித்த இளைஞனை காப்பாற்ற அவரது நண்பர்கள் ஒன்றிணைந்தனர். 60 இலட்சம் ரூபா சிகிச்சைக்காக தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. நண்பரை காப்பாற்ற வேண்டும் என போராடிய நண்பர்கள் ஒருவாறு பணம் சேகரித்துள்ளனர். எனினும் அவரின் உயிரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த அதிரச்சியை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது நண்பர்கள் கண்ணீருடன் பேஸ்புக்கில் சோகத்தை பதிவிட்டுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் : கண்டுகொள்ளாத உறவினர்களால் குழப்பம்!!

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பெண் ஒருவர் நீண்ட காலமாக வைத்தியசாலையில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெளிநாட்டு பணிக்காக சென்றிருந்த போது நோய்வாய்ப்பட்டு இலங்கை வந்த பெண் ஒருவர், ஒரு வருடமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதிலும் ,உறவினர் ஒருவரும் அவரை பார்வையிட வரவில்லை.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் தங்கொட்டுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும் உறவினர்கள் ஒருவரும் அவரை அழைத்து செல்லாமையினால் வைத்தியசாலை ஊழியர்கள் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

இனோகா தமயந்தி என்ற 44 வயதான பெண்ணுக்கு கடந்த ஜுலை மாதம் 10ஆம் திகதியுடன் சிகிச்சைகள் நிறைவடைந்துள்ளன.

குறித்த பெண் தொடர்பில் உறிவினர்களிடம் அறிவிக்குமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கு சரியான பதில் கிடைக்காமையினால் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

வயதில் குறைந்தவர் என்பதனால் அவரை முதியோர் இல்லத்திற்கும் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் திருமணமான அடுத்த நாளே மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

அனுராதபுரத்தில் திருமண ஒரு மாத காலத்திற்குள் கணவனுக்கு எதிராக மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தம்புத்தேகம பிரதேசத்தில் ஒரு வருட காதலின் பின்னர் திருமண பந்தத்தில் இருவரும் இணைந்துள்ளனர். திருமணத்தின் பின்னர் இளைஞன், மனைவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

எனினும் திருமணத்தின் பின்னர் எந்தவொரு தொழிலுக்கும் செல்லாமல் கணவன் வீட்டில் இருந்துள்ளார்.

எவ்வித வருமானமும் அந்த குடும்பத்திற்கு கிடைக்கவில்லை. திருமணத்தின் முன்னர் தொழில் செய்த இளைஞன், அதன் ஊடாக கிடைத்த வருமானத்தில் திருமணத்தை செய்துள்ளார். மணமகளுக்கு மோதிரமும் அணிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும், தொழில் இல்லாத இந்த இளைஞன் திருமணத்திற்கு அடுத்த நாளிலேயே மனைவி அணிவித்த மோதிரத்தை அடகு வைத்துள்ளார்.

எனினும் அதனை மீட்காமையினால் இருவருக்கும் இடையில் முரண்பாடு நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த மோதிரத்தை இளைஞன் மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

கணவனின் செயற்பாடு குறித்து அதிர்ச்சி அடைந்த மனைவி, பிரிந்து விட முடிவு செய்துள்ளார். இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளார்.

தான் அணிவித்த மோதிரத்தை திருமணத்திற்கு அடுத்த நாளே அடகு வைத்தமையினால் தன்னை மிகவும் அவமதித்து விட்டாதாக குறித்த பெண் கணவன் மீது முறைப்பாடு செய்துள்ளார்.