காதல் தோல்வியால் இரண்டாக பிளந்து போன இளைஞனின் உடல் : யுவதியின் அதிரடி செயற்பாடு!!

கம்பஹாவில் உயிரிழந்த இளைஞனின் சடலத்துடன் செல்பி எடுக்க பலர் முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கனேமுல்ல ரயில் நிலையத்தில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞனின் சடலத்து அருகில் செல்பி புகைப்படம் எடுக்க பலர் முயற்சித்துள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் அதிகவேக ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞனின் இரண்டாக பிரிந்த உடல், ரம்புக்கனையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் இரவு 9.30 மணியளவில் கனேமுல்லை ரயில் நிலையத்திற்கு சடலம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் அடுத்த நாள் காலை வரை ரயில் நிலைய பொருப்பதிகாரியினால், மரண பரிசோதகரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கடும் சிரமத்திற்குள்ளான அதிகாரி ரயில் நிலையத்தில் உள்ள நாய்களிடம் இருந்து விடியும் வரை சடலத்தை பாதுகாத்துள்ளார்.

அடுத்த நாள் தொழிலுக்கு செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு வந்த இளைஞர்கள் ரயில் நிலையத்தில் இருந்த சடத்துடன் செல்பி புகைப்படம் எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனை அவதானித்த இளம் பெண் ஒருவர் ரயில் நிலைய பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பினனர் உயிரிழந்த இளைஞனின் சடலத்தில் முகம் தெரியாத வகையில் மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட இளைஞன் பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் என தெரியவந்துள்ளது.

காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரயில் நிலையத்திற்கு சென்ற இளைஞனின் சகோதரன் சடலத்தை அடையாளம் கண்டுள்ளார்.

காதல் பிரிவால் தற்கொலை செய்து இரண்டு துண்டுகளான சடலத்துடன் செல்பி எடுக்கும் அளவிற்கு இந்த சமுதாயம் வக்கிரமான நிலையை அடைந்துள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரி கோபமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : இத்தனை ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பா?

அரச ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கான சம்பளம் ஐயாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

அதேவேளை வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் ஆராய சம்பள ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அறிக்கைக்கு அமைய சம்பள அதிகரிப்பு ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிய வருகிறது.

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் அடுத்த மாதம் நாடாளுமன்றில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பூட்டிய வீட்டில் சடலமாக தூக்கில் தொங்கிய மனைவி : பொலிஸ் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

சென்னையில் பொலிஸார் ஒருவரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை சேர்ந்தவர் விக்னேஷ்(25). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக என்ஜினியரிங் பட்டதாரியான லட்சுமி (24) என்பவரை திருமணம் செய்துகொண்டார். சென்னை பெருநகர போலீஸ் ஆயுதபடையில் பணியாற்றி வரும் விக்னேஷ், நேற்று பணி முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

பூட்டியிருந்த வீட்டின் கதவை நீண்ட நேரமாக தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளார். அங்கு மின்விசிறியில் தூக்கிட்டபடி லட்சுமி சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனே பொலிஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் லட்சுமியி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், லட்சுமியை வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக அவருடைய அப்பா ராமசாமி புகார் அளித்தார்.

மேலும் இந்த தம்பதியினருக்கு 1 வயதில் குழந்தை இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதன்பேரில் தற்போது பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான 3 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் : சோக சம்பவம்!!

திருவள்ளூர் மாவட்டத்தில் திருமணம் ஆன 3 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரகு. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக சிவகங்கையை சேர்ந்த தேன்மொழி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

அன்றிலிருந்தே இருவருக்கும் இடையில் சண்டை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த தேன்மொழி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தேன்மொழியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவருடைய கணவர் ரகுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடு முழுவதும் ரத்தம் : தனித்தனியாக கிடந்த சடலங்கள்.. கதறி அழுதுகொண்டிருந்த சிறுவன்!!

டெல்லியில் திறந்து கிடந்த வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டதோடு, சிறுவன் கதறி அழுதுகொண்டிருந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அருகே உள்ள Kishangarh கிராமத்தில் வசித்து வருபவர் மிதிலேஷ். இவருடைய வீடு திறந்து கிடப்பதை பார்த்த பக்கத்துக்கு வீட்டார் இன்று அதிகாலை 5 மணிக்கு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் வீட்டினுள் சென்று பார்த்த போது, படுக்கையறையில் மிதிலேஷ், அவருடைய மனைவி சியா மற்றும் மகள் நேஹா கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டறிந்துள்ளனர். பின்னர் அவர்களுடைய உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் வீட்டில் கதவு ஓரத்தில் பலத்த காயங்களுடன் அழுதுகொண்டிருந்த சிறுவன் சுராஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

வவுனியாவில் குடியேற்றப்பட்டவர்களுக்கு விவசாயக்காணிகள் வழங்கப்படவேண்டும் : ப.சத்தியலிங்கம்!!

வவுனியா மாவட்டத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் பல இடங்களில் புதிய குடியேற்றங்களாக குடியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கால் ஏக்கர் அல்லது அரை ஏக்கர் மேட்டுக்காணிகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு வயல் செய்யக்கூடிய விவசாயக் காணிவழங்கப்படவே இல்லை. அதன் காரணமாக குடியேற்றப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக கூலித் தொழிலாளியாகவே கடந்த 20, 30 வருடங்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்

இவ்வாறு நேற்று மாலை இடம்பெற்ற வவுனியா செட்டிகுளம் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய வடமாகாகாண சபை உறுப்பினரும் வவுனியா மாவடட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவருமான மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தனது உரையில்,

இவ்வாறு குடியேற்றப்பட்டவர்களின் வாழ்க்கையில் எந்தவிதமான முன்னேற்றங்களும் ஏற்படவில்லை. வவுனியா மாவட்டத்தில் பெருந்தொகையான காடுகளில் முறிப்புக்குளங்கள் நீண்டகாலமாக கைவிடப்பட்ட பல குளங்கள் இருக்கின்றது. ஆகவே என்னுடைய கோரிக்கை ஒன்றினை முன்வைக்கின்றேன். இந்தக்குளங்களை இனங்கண்டு இவ்வாறு குடியமர்த்தப்பட்ட குடும்பங்கள் எத்தனை, வயல்காணி அற்ற குடும்பங்கள் எத்தனை என்பதைக் கணக்கீடு செய்து அந்தக்குடும்பங்களுக்கு குறைந்தது ஒரு ஏக்கர் வயல் காணியை வழங்குவதற்கு இந்தப்பாழடைந்த கைவிடப்பட்ட குளங்களைப்பயன்படுத்தலாம்.

எனவே 2019ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் அதற்கான நிதியைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை வவுனிய மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளவேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபையினுள் ஈ.பி.ஆர்.எல்.எவ் அலுவலகம்? நிராகரிக்கும் தவிசாளர்!!

வவுனியா நகரசபைக்குள் தவிசாளருக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்குள் குளிரூட்டப்பட்ட சொகுசு முறையில் அமைக்கப்பட்டுள்ள அறை ஒன்றில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் சர்வதேச அலுவலகம் ஒன்று செயற்பட்டு வருவதாகவும் அவர்களின் ஆதரவாளர்கள், பங்காளிக் கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நகரசபைத்தவிசாளருக்கு அங்கிருந்து ஆலோசனைகள் வழங்கிவருவதாகவும் கடந்த நகரசபை அமர்வின்போது நகரசபை உறுப்பினர்கள் சிலர் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வவுனியா நகரசபை தவிளார் இ.கௌதமனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,

குற்றச்சாட்டினை மறுத்துள்ளதுடன் அவ்வாறு அலுவலகம் எதுவும் கிடையாது. குறித்த பகுதி எனது அலுவலகப்பாவனையிலுள்ளதாகவும் குறித்த குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது என்று தெரிவித்தார்.

வவுனியா நகரசபை தவிசாளர் அலுவலகத்திற்குள் ஒரு பகுதியில் குளிரூட்டப்பட்ட சொகுசு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது, ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் சர்வதேச அமைப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், பங்காளிக்கட்சியின் உறுப்பினர்களை அங்கு காணக்கூடியதாக உள்ளதாகவும் நகரசபை ஒரு கட்சி அலுவலகம்போல செயற்பட்டு வருவதாகவும் நகரசபை உறுப்பினர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள் : வைரமுத்துவின் பதில் இதோ!!

பிரபல பாடகியான சின்மயி வெளியிட்டுள்ள அடுக்கடுக்கான பாலியல் புகார் குறித்து, கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தியா மேனன் என்ற பெண் பத்திரிக்கையாளர், கவிஞர் வைரமுத்து ஒரு பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

அவருடைய கருத்தை ஆதரித்து பிரபல பாடகியான சின்மயி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், வைரமுத்து தனக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.

மேலும், வைரமுத்துவின் லீலைகள் பற்றி அவருடைய அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டால் தெரியும். எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. தொடர்ந்து அவருடைய செயல்களை அம்பலப்படுத்துவேன் என கூறியிருந்தார்.

அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.

அவருடைய இந்த பதிவு சினிமா வட்டாரம் துவங்கி இணையத்தளம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,

“அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்” என பதிவிட்டுள்ளார்.

வைரமுத்து மீது தொடர் பாலியல் குற்றச்சாட்டுக்கள் : அதிரவைக்கும் சின்மயியின் பகீர் ஆதாரங்கள்!!

கவிப்பேரரசு என்று நம்பிக்கொண்டிருந்த வைரமுத்து மீதான பாலியல் புகார்களை தொடர்ந்து டுவிட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் பாடகி சின்மயி. சின்மயி கூறியிருப்பதாவது,

கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புத்தக வெளியீடு வைத்திருந்தார் வைரமுத்து. அந்த விழாவுக்கு வந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று என்னிடம் கேட்டார்.

என்னால் முடியாது என்று சொன்னதும், ‘விழாவுக்கு வரப்போகும் அரசியல்வாதியைப் பற்றி நீ தவறாக மேடையில் பேசினாய் என்று நான் சொல்லுவேன்’ என மிரட்டி திட்டிவிட்டு போனை கட் செய்துவிட்டார்.

இதனால் நான் கதறி அழுவதைப் பார்த்த என் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் எனக்கு ஆறுதல் சொல்லி தைரியமும் கொடுத்தார்கள்.

அதன் பிறகு, வைரமுத்துவின் மேனேஜரை அழைத்து ‘அவர் சொன்ன அதே அரசியல்வாதியிடம் நான் அவரைப் பற்றி பேசியதாகச் சொல்லப்படுவது அத்தனையும் பொய்.

ஏனென்றால், இதுவரை நான் எந்த மேடையிலும் பேசியதில்லை எனச் சொல்வேன். அதை அவர் கண்டிப்பாக நம்புவார் எனக் கூறினேன்.

இப்படி வைரமுத்து எங்கே, எப்படி தன்னைப் பாலியல் மிரட்டலுக்கு ஆளாக்கினார் என்பதை ட்விட்டரில் தொடர் ட்வீட்டுகளாக வெளியிட்டு வருகிறார்.

வைரமுத்துவின் வீட்டுக்குப் பாராட்டுவதற்காகவும், தொழில் நிமித்தமாகவும் அழைக்கப்படும் பெண்கள் கதவு தாளிடப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதையும், அவர்களைப் பாராட்டுவது போல செய்யப்பட்ட அத்துமீறல்களையும் சின்மயிக்கு ட்விட்டரில் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

கோடம்பாக்கத்தில் உள்ள வைரமுத்துவின் பெண்கள் விடுதியில் அவர் அந்தப்பெண்களின் அனுமதியின்றி அவர்கள் அறையில் நுழைந்து தவறான விதத்தில் பேசியது குறித்தும், தவறாக நடந்துகொண்டது குறித்து சின்மயிக்கு தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.

சுவிஸ்ஸில் ஹோட்டல் அறையில் பாடகி சின்மயிக்காக காத்திருந்த கவிஞர் வைரமுத்து : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

ஏற்கெனவே ஒரு பாலியல் விவகாரத்தில் சிக்கியுள்ள கவிஞர் வைரமுத்து, பாடகி சின்மயிக்காக சுவிட்சர்லாந்தில் ஹொட்டல் அறையில் காத்திருந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தேசிய அளவில் மிகவும் பிரபலமான திரைப்பட பாடலாசிரியர்களில் ஒருவரும் 7 முறை தேசிய விருது பெற்றவருமான கவிஞர் வைரமுத்து மீது சந்தியா மேனன் என்பவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.

இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபல பாடகி சின்மயி வருடங்களுக்கு முன்னர் தனக்கு நேர்ந்த துயர சம்பவத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த சின்மயி, ஒரு முறை சுவிட்சர்லாந்தில் பாட்டுக் கச்சேரிக்கு சென்றிருந்தோம். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் சென்றுவிட்டார்கள். நானும் என் அம்மாவும் மட்டும்தான் இருந்தோம்.

அப்போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் வந்து, கவிஞர் வைரமுத்த உங்களுக்காக ஹொட்டல் ரூமில் வெயிட் பண்ணுகிறார் என தெரிவித்தார்.

நான் அப்போதே அவர் முகத்திரையைக் கிழித்திருப்பேன்.. அவர் மீது திரையுலகம் வைத்திருந்த மரியாதைக்காக விட்டுவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி அவரை பற்றி 0.2 சதவீதமே பேசி உள்ளேன். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டால் வைரமுத்துவின் பல லீலைகள் தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த உண்மையை சொல்வதால் திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் கவலையில்லை என சின்மயி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு செல்ல இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!!

உலகின் பலமான கடவுக்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது.

பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Passport Index) என்ற இணையத்தளதினால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் தரப்படுத்தலுக்கு அமைய இலங்கையின் கடவுச்சீட்டிற்கு 83வது இடம் கிடைத்துள்ளது.

இலங்கை கடவுச்சீட்டை வைத்துள்ள நபர் ஒருவர் விசா இன்றி உலகின் 47 நாடுகளுக்கு பயணிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது. குறித்த நாடுகளுக்கு சென்ற பின்னர் On Arrival Visa விசா பெற்றுக் கொள்ளும் வசதி 30 நாடுகளுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கடவுச்சீட்டு கொண்டவர்கள் ஏனைய 151 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு விசா விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய தரப்படுத்தலுக்கு அமைய முதலிடத்தை சிங்கப்பூர் மற்றும் ஜேர்மன் பெற்றுள்ளன. 165 நாடுகளுக்கு விசா இன்றி அல்லது குறித்த நாடுகளுக்கு சென்ற பின்னர் விசா பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

passportindex இணையத்தளத்தின் தரவுகளுக்கு அமைய இரண்டாவது இடத்தை 11 நாடுகள் பிடித்துள்ளன. டென்மார்க், சுவீடன், பின்லாந்து, லக்சம்பெர்க், இத்தாலி, பிரான்ஸ், நோர்வே, நெதர்லாந்து, ஸ்பெய்ன், தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.

குறித்த நாடுகளின் கடவுச்சீட்டு கொண்டவர்கள் 164 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கும் வாய்ப்பு உள்ளதாக இன்டெக்ஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.

யாழில் ஆவா குழுவை வேட்டையாட களத்தில் 300 பொலிஸார்!!

யாழ் குடாநாட்டில் வாள்வெட்டுகள் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும், ஆவா குழுவினரைக் கைது செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பான காவல்துறை மூத்த அதிகாரியான பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

”அதிகளவு குழு மோதல்கள் நிகழும் பகுதிகளான இணுவில் மற்றும் கொக்குவில் பகுதிகளை உள்ளடக்கியதாக, கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் காவல்துறைப் பிரிவுகளில் இந்த சிறப்புத் தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போது, ஆவா குழுவினரின் மறைவிடங்கள் என்று சந்தேகிக்கப்பட்ட, 21 வீடுகளில் தேடுதல்கள் நடத்தப்பட்டன. இதன் போது ஆவா குழுவினருடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சிறப்பு தேடுதல் நடவடிக்கையில், 300 சிறிலங்கா காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் பணியாற்றும், 200 காவல்துறையினரும், முல்லைத்தீவில் இருந்து அழைக்கப்பட்ட 50 காவல்துறையினரும், கிளிநொச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட 50 காவல்துறையினரும் இந்த தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவர்கள் தவிர புலனாய்வுப் பிரிவினரும் தேடுதல்களில் ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

இந்த தேடுதல் நடவடிக்கையின் ஒரு கட்டமாக, நேற்றுக்காலை 6 மணி தொடக்கம், 11 மணி வரை வாகனங்கள், குறிப்பாக, உந்துருளிகள் சோதனையிடப்பட்டு, 81 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

குழு மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இந்த காவல்துறை நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

சாதாரண மக்களின் வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களை குறிவைத்தே இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

சாதாரண மக்களின் வாழ்வை குழப்பாதபடி காவல்துறையின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முதலில் ஆவா குழுவினர் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் திரட்டப்பட்டு, ஆவா குழு மற்றும் ஏனைய குழுவினரின் தங்குமிடங்கள், மற்றும் நடமாடும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்ட பின்னரே, இந்த தேடுதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்படவுள்ள பாரிய நெருக்கடி : தவிக்கப் போகும் பொதுமக்கள்!!

இலங்கையில் பாரிய மின்சாரம் மற்றும் நிதி நெருக்கடி ஏற்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று உள்ளக தகவல்களை மேற்கொள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

2014ஆம் ஆண்டில் இருந்து 2018ஆம் ஆண்டு வரை இலங்கையில் முறையான மின் உற்பத்தித் திட்டம் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக எதிர்வரும் 5 வருடங்களில் பாரிய மின்சாரம் நெருக்கடி ஏற்படவுள்ளதாக மின்சார துறைத் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதே காலப் பகுதியில் பாரிய நிதி நெருக்கடி ஒன்றும் ஏற்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல மணி நேர மின்சார விநியோக தடை ஏற்படும் நிலையை தடுக்க முடியாதென மின்சார பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் திட்டத்தை, பயன்பாடுகள் ஆணைக்குழு குழப்பியமையினால் எதிர்வரும் காலங்களில் 536 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Stochastic Dual Dynamic Program என்ற மென்பொருள் ஊாக இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மின்சார விநியோக தடை ஏற்படுமாயின் அது மாணவர்கள் உட்பட பல தொழில்துறைகளை வெகுவாக பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழில் கடும் குளிர் : இருவர் பலி!!

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றத்தால் இருவர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கைதடி நுணாவில் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய சுப்பிரமணியம் கடோற்கசன் மற்றும் மீசாலை வடக்கை சேர்ந்த 96 வயதுடைய முருகன் கிருஷ்ணன் ஆகிய இருவருமே அவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

யாழில், கால நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் கடும் குளிர் காரணமாக இருவரும் உயிரிழந்துள்ளனர் என சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இதேவேளை, அண்மையிலும், யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் திடீரென ஏற்பட்ட உடல் நடுக்கம் காரணமாக உயிரிழந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் முன்னறிவித்தல் இன்றி அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு : மக்கள் விசனம்!!

வவுனியாவில் கடந்த சில தினங்களாக முன் அறிவித்தல் ஏதும் இன்றி பல இடங்களில் மின் துண்டிப்பினை மேற்கொண்டுவருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மின்சார சபையின் இச் செயற்பாடு காரணமாக பல வியாபார நிலையங்களில் வியாபாரம் மந்தகதியில் இடம்பெறுவதாக வியாபார நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திடீரென முன் அறிவித்தல் ஏதும் இன்றி மின்சாரம் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகவும், நேற்றும் இன்றும் வவுனியாவில் பல இடங்களில் திடீரென நிறுத்தப்பட்ட மின்சாரம் பிற்பகல் வேளை வரை வழங்கப்படவில்லையெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் நகரத்தினை அண்டிய பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்கள் வெறிச்சோடிக்காணப்பட்டதுடன் இச் செயற்பாட்டினால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உரிய அதிகாரிகள் மின்தடைகுறித்து முன்னறிவித்தல் விடுத்து மின்துண்டிப்பை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வவுனியாவில் துப்பறியும் மோப்ப நாய் கூப்பர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!!

வவுனியா பொலிசாருக்கு பக்கபலமாக இருந்து குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்களை இலகுவில் இனங்கண்டு துப்பறியும் கூப்பர் என அழைக்கப்படும் மோப்ப நாய் இன்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டடிருந்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதுடன் மோப்ப நாயை அழைத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று காலை வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக வளாகத்தில் துப்பறியும் 2 அரை வயதுடைய மோப்ப நாய் (கூப்பர்) காலை 6 மணியளவில் உடற்பயிற்சிக்கு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார். இதன்போது மைதான வளாகத்தில் மோப்ப நாய் மின்சாரத் தாக்கிய உயிரிழந்துள்ளது.

உடற்பயிற்சிக்காக நாயை அழைத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரான பொலிஸ் பரிசோதகர் 30018 (உதயகுமார்) மின்சாரம் தாக்கிய படுகாயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த மோப்ப நாயை கால் நடை வைத்திய அதிகாரியின் மருத்துவப்பரிசோதனைக்காக எடுத்ததுச் செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.