வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தையின் உயிரைக் காப்பற்ற உதவுமாறு கோரிக்கை!!

வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரின் உயிரைக் காப்பாற்ற உதவுமாறு மனைவி செல்வகுமார் அகில்ராணி தெரிவித்துள்ளார்.

வவுனியா, கோவில்குளம் பகுதியை சேர்ந்த ஐயாத்துரை செல்வகுமார் (வயது 41) என்பவர் குருதி உயர் அழுத்தம் ஏற்பட்டு தலை நரம்பு வெடித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டுமாயின் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு 25 இலட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. அவ்வாறான பணத்தை வழங்கக்கூடிய நிலையில் அந்தக் குடும்பம் இல்லை.

எனவே மூன்று பிள்ளைகளின் தந்தையின் உயிரை காப்பாற்ற கருணை உள்ளம் கொண்டவர்களின் உதவியை அவரது மனைவி எதிர்பார்த்துள்ளார்.

உதவி செய்பவர்கள் இலங்கை வங்கியின் செல்வகுமார் அகில்ராணி என்னும் பெயரில் உள்ள 81683649 என்னும் கணக்கிலக்கத்திற்கு பணத்தை செலுத்துமாறு மனைவி கோரியுள்ளார்.

தொலைபேசி இலக்கம்: 0762275971

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!!

வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று (09.10) இரவு 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கோவில்குளத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 28 வயதுடைய லதுசன் என்ற இளைஞனே நேற்று இரவு 09.30 மணியளவில் அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டவராவார்.

இவர் கடந்த இரண்டு மாத காலத்திற்குள் வெளிநாடு ஒன்றில் பணி புரிந்து இலங்கை திரும்பி இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அயலவரின் உதவியுடன் சடலம் கிழே இறக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் தபால் ஊழியருக்கு வந்த மர்ம பார்சல் : திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெண் தபால் ஊழியருக்கு வந்த பார்சலில் பாம்பு ஒன்றும், மிரட்டல் கடிதமும் இருந்த விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் வர்க்கலையைச் சேர்ந்தவர் அணிலா(60). இவர் தபால் அலுவலகத்தில் பணியாற்றினார். சமீபத்தில் இவர் ஓய்வு பெற்ற நிலையில், நேற்றைய தினம் பார்சல் ஒன்று இவருக்கு வந்துள்ளது.

இதுகுறித்து தபால் ஊழியர்கள் அணிலாவுக்கு தகவல் கொடுத்ததால், அலுவலகத்திற்கு சென்று பார்சலை அவர் பெற்றுக்கொண்டார். ஆனால், அந்த பார்சல் பிளாஸ்டிக் கவரால் உறுதியாக சுற்றப்பட்டிருந்ததால், தபால் அலுவலக மேஜையின் மீது அதனை வைத்துள்ளார்.

பின்னர், சக ஊழியர்கள் அந்த பார்சலை உடைத்து பார்த்த போது, அதனுள் 15 சென்டி மீட்டர் நீளம் கொண்ட பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் பார்சலை பரிசோதித்தில் அனுப்பியவரின் விவரம் எதுவும் இல்லை. எனினும், பார்சலுக்குள் மிரட்டல் கடிதம் ஒன்றும் இருந்துள்ளது.

இந்நிலையில், அணிலா இதுதொடர்பாக பொலிஸில் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘எனக்கு எதிரிகள் யாரும் இல்லை. அப்படி இருக்க எதற்காக பார்சலில் பாம்பும், மிரட்டல் கடிதமும் அனுப்பப்பட்டது என தெரியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பார்சலில் இருந்த பாம்பு வன ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அத்துடன் பார்சல் அனுப்பியவர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கணவர், குழந்தை இறந்த செய்தியை கேட்டு உணர்வின்றி இருக்கும் இசையமைப்பாளரின் மனைவி!!

மலையாள இசையமைப்பாளரும் சிறந்த வயலின் கலைஞருமான பாலபாஸ்கர் கடந்த வாரம் கார் விபத்தில் உயிரிழந்தார்.

திருச்சூர் வடக்குநாதர் கோயிலுக்குத் தன் குடும்பத்தினருடன் காரில் சென்றுவிட்டு அதிகாலை 4:30 மணிக்கு வீடுதிரும்பும்போது, பள்ளிப்புரம் அருகே வந்தபோது விபத்தில் சிக்கினார்.

இந்த விபத்தில் பாலபாஸ்கருக்கு பலத்த அடிபட்டு மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் கடந்த வாரம் உயிரிழந்தார்.

மேலும் அந்த விபத்தின்போது, முன் இருக்கையில் அமர்ந்திருந்த பாலபாஸ்கரின் இரண்டு வயது குழந்தை தேஜஸ்வினி படுகாயம் அடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மனைவி லட்சுமி அதிக காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கணவரும், குழந்தையும் இறந்த தகவல் இவருக்கு தெரிவிக்கப்படவில்லை.

சுயநினைவின்றி இருந்த காரணத்தால் இந்த தகவல் இவருக்கு தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று லட்சுமியின் தயார், நடந்த சம்பவங்களை கூறியுள்ளார்.

அதனை கேட்டு லட்சுமி எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் இருந்துள்ளார். இதனால், தாங்கள் சொல்வது லட்சுமிக்கு புரியவில்லை என நினைத்துள்ளனர்.

ஆனால், வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டிருப்பதால் லட்சுமிக்கு சுவாசித்தலில் சற்று பிரச்சனை இருக்கிறது. இதனால் சில நாட்கள் கழித்துதான் இந்த தகவலை கூற வேண்டும் என லட்சுமியின் தாயிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, திரவ உணவுகளை மட்டுமே எடுத்து வருகிறார்.

3 குழந்தைகளை நிர்வாணமாக வீட்டுச் சிறையில் வைத்திருந்த தம்பதி!!

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் சொந்த குழந்தைகளையே நிர்வாணமாக வீட்டுச்சிறையில் அடைத்து வைத்திருந்த பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் Buckeye பகுதியை சேர்ந்தவர் Mayra Ramirez. வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டு திறந்த பொழுது, அழுக்கு உடை அணிந்த நிலையில் சிறுவன் ஒருவனும், அருகில் நிர்வாணமாக 5 வயது சிறுமியும் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனே அந்த சிறுமிக்கு ஆடையினை உடுத்தி, சிறுமியின் வீட்டுக்கு அழைத்து சென்று கதவை தட்டியுள்ளார். ஆனால் யாரும் வந்து கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அந்த பெண் உடனே பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கதவை திறந்து பார்த்த பொழுது, காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு Alsatia Inks, 23 என்ற பெண் படுக்கையில் இருந்ததை பார்த்தனர்.

பின்னர் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போது, குழந்தைகள் இருவரும் வெளியில் சென்றது கூட தெரியாமல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பொலிஸார் வீட்டில் சோதனை மேற்கொண்ட போது, மற்றொரு 5 வயது சிறுவனையும் கண்டறிந்தனர்.

மேலும் சிறுவர்கள் தங்கியிருந்த படுக்கையறை மிகவும் மோசமாக, நாய் மற்றும் மனித கழிவுகள் நிறைந்து காணப்பட்டது. வீட்டின் சுவர் முழுவதும் கறைகளாக, மனிதர்கள் தங்குவதற்கு ஏற்ற சூழ்நிலையில் இல்லாமல் இருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சிடையந்த பொலிஸார் சிறுவர்களை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவர்களின் பெற்றோர் Alsatia மற்றும் Zachary Pacheco (27) ஆகியோரை கைது செய்து, பின்னர் விடுவித்தனர். மேலும் வரும் 26-ம் தேதி நடைபெற உள்ள விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

வவுனியா கோவில்குளம் பகுதியில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!!

வவுனியா கோவில்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியா கோவில்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது. கோவில்குளத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 28 வயதுடைய லதுசன் என்ற இளைஞனே இன்று இரவு 09.30 மணியளவில் அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்க்கப்பட்டவராவார்.

இவர் கடந்த இரண்டு மாத காலத்திற்குள் வெளிநாடு ஒன்றில் பணி புரிந்து இலங்கை திரும்பி இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஓர் சந்தர்ப்பம்!!

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வரோட் அமையம் சமூகத்திற்கிடையிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கட்டுரை போட்டியொன்றினை நடத்தவுள்ளனர்.

இக் கட்டுரைப்போட்டியில் பாடசாலை மட்டத்திலிருந்து தரம் 10 – 13 மாணவர்கள், ஆர்வமுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பங்குபற்றலாம். அத்துடன் தெரிவு செய்யப்பட்ட சிறந்த கட்டுரை பத்திரிகை மற்றும் இணையத்தளங்களில் பிரசுரிக்கப்படும்.

பாடசாலை மட்டத்தில் பங்குபற்றும் போட்டியாளர்கள் தமது விண்ணப்பப்படடிவத்தில் பாடசாலை அதிபரின் கையொப்பத்துடனும் ஏனையவர்கள் கிராமசேவையாளர் அல்லது மதகுருமாரின் கையொப்பத்துடன் நிறைவேற்று இயக்குனர், VAROD 4ம் கட்டை, மன்னர் வீதி, பம்பைமடு, வவுனியா எனும் முகவரிக்கு அணுப்பி வைக்குமாறு வரோட் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

போட்டி தொடர்பான மேலதிக விபரங்கள் கிழே இணைக்கப்பட்டுள்ளதுடன் விண்ணப்படிவங்கள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு கீழேயுள்ள தொலைபேசியிலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும்

தொலைபேசி இலக்கம்:-

அருட்தந்தை கிறிஸ்டி ஜோன் CMF – 0772207346

கஜேந்திரன் – 0772363532

விக்டர் – 0776330480

என்னை அடித்து உதைத்து.. பாலியல் வன்கொடுமை செய்தார் : புகைப்படத்தை வெளியிட்ட தமிழ்ப் பட நடிகை!!

பாலிவுட் திரையுலகில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது குறித்து நடிகைகள் தொடர்ந்து புகார் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகாரை கூறியிருந்தார். அவருக்கு பல்வேறு நடிகைகள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்நிலையில் நடிகை புளோரா புகைப்பட ஆதாரத்துடன் தான் தாக்கப்பட்ட விஷயத்தைத் தெரிவித்துள்ளார்.

தமிழில் விஜயகாந்தின் கஜேந்திரா, கார்த்திக்கின் குஸ்தி, ரஜினியின் குசேலன்’, கருணாசின், திண்டுக்கல் சாரதி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2007 ஆம் ஆண்டில் பிரபல இந்தி தயாரிப்பாளர் கவுரங் தோஷி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி தாடையை உடைத்து துன்புறுத்தினார் என்று பரபரப்பு புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அப்போது காயத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

2007 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று தோஷியால் தாக்கப்பட்டேன். அதற்கு முன் அவருடன் டேட்டிங்கில் இருந்தேன். ஒரு வருடம் அவரால் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டிருந்தேன்.

ஒரு தவறும் செய்யாத நான் அவரால் தாக்கப்பட்டு என் தாடைகளின் எலும்பு முறிந்த நிலையில் பயத்துடன் வெளியே வந்தேன். அப்போது அவர் சக்தி வாய்ந்த நபராக இருந்த காரணத்தால் நான் கூறியதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

தற்போது, பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து வெளிப்படையாக பேசுகின்றனர், இது வரவேற்கத்தக்கது என கூறியுள்ளார்.

தீ விபத்தில் பலரையும் காப்பாற்றிய பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த சோகம்!!

தில்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தின் போது பலரின் உயிரையும் காப்பாற்றிய பெண் இறுதியில் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தில்லி அருகே குர்கான் நகரில் 200 குடும்பங்கள் வசிப்பதற்கு ஏற்றவாறு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு கடந்த 7-ம் தேதியன்று நள்ளிரவு 2 மணியளவில் மின்கசிவு காரணாமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

இதனை பார்த்த ஸ்வாதி என்ற பெண் உடனடியாக அனைவரின் வீட்டு கதவுகளையும் தட்டி எச்சரித்து மாடிக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் அப்பகுதியே புகைமூட்டமாக காட்சியளிக்க, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினரும் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட ஆர்மபித்தனர்.

ஆனால் ஒரு மணி நேரமாகியும் ஸ்வாதி மட்டும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த குடியிருப்பு வாசிகள் தீயணைப்பு வீரர்களிடம் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் உள்ளே சென்று தேடுகள் வேட்டை நடத்தும்போது, பூட்டப்பட்ட ஒரு கதவின் ஓரமாக மயங்கிய நிலையில் ஸ்வாதியை மீட்டுள்ளனர். பின்னர் வேகமாக அவரை மருத்துவனைக்கு எடுத்து சென்று பரிசோதித்த போது, ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பலரின் உயிரையும் காப்பாற்றிய ஸ்வாதி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புனேவை சேர்ந்த ஸ்வாதி, மத்திய பிரதேசை சேர்ந்த க்ரிஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு குர்கான் நகரில் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் அஞ்சலி என்ற மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியும் ஒரு காதலா : காதலன் இறந்ததை கேள்விப்பட்டு விபரீத முடிவெடுத்த இளம்பெண்!!

மேற்குவங்க மாநிலத்தில் காதலன் இறந்த துக்கம் தாளாமல் பள்ளி மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் Mirjapur பகுதியை சேர்ந்த நித்யானந்தா தாஸ் என்ற 26 வயது இளைஞர், கடந்த 30-ம் தேதியன்று கொல்கத்தா நோக்கி உள்ளூர் ரயிலில் பயணம் செய்துள்ளார்.

காதில் ஹெட்செட் மாட்டியபடி படியில் நின்று பயணம் செய்த நித்யானந்தா திடீரென தடுமாறி கீழே விழுந்து இறந்துள்ளார். அவர் இறந்த செய்தி அணைத்து ஊடகங்களில் பரவியதில் இருந்து Sryeashi Maity என்ற 18 வயது மாணவியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பெரும் குழப்பத்தில் அமைதியாகவே இருந்ததை கவனித்த பெற்றோர், இருவரும் காதலர்கள் என்பதை புரிந்துகொண்டனர். மகளை பயிற்சி வகுப்பிற்கு அனுப்பிய நேரத்தில் தான் இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது என்பதை தெரிந்துகொண்டனர்.

மகளின் நிலையை கவனத்தில் கொண்டு தனித்து விடாமல் அவருடனே இருந்து வந்தனர். நித்யானந்தா இறந்து 8 நாட்கள் ஆகியிருந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, Sryeashi மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வெளியில் சென்றுவிட்டு திரும்பிய தாய் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார்.

பீசாவில் எச்சில் துப்பிய நபருக்கு 18 ஆண்டுகள் சிறை!!

துருக்கியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் புராக், பிரபல இணைய வணிக நிறுவனத்தில் உணவுப் பொருள்களை டெலிவரி செய்யும் பீட்சாவில் எச்சில் துப்பிய வீடியோ மிகவும் பரவலாக பரப்பப்பட்டது

எச்சில் துப்பிய காட்சியைப் பார்த்த நபர், வாடிக்கையாளருக்குக் கால் செய்து, `உன் வீட்டுக்கு டெலிவரி செய்யப்படும் பீட்சாவில் டெலிவரி பாய் எச்சில் உமிழ்ந்துவிட்டார். எனவே, அதைச் சாப்பிட வேண்டாம்’ என்று தொலைபேசியில் தகவல் கொடுத்தார். அதையடுத்து, அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளைப் பார்த்த வாடிக்கையாளர் ஆத்திரமடைந்து, புராக் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த வழக்கு, இந்த மாதம் நீதிமன்றத்துக்கு வந்தது. நீதிபதி புராக்கிடம், `ஒருவரின் உணவில் எச்சில் உமிழ்ந்து தருவது மனிதத் தன்மையற்ற செயல். ஏன் இப்படிச் செய்தாய்?’ என்று கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த புராக், `என் நண்பர் கடந்த வாரம் அதே வாடிக்கையாளர் வீட்டுக்கு பீட்சா டெலிவரி செய்தார். அதைப் பெற்றுக்கொண்ட அந்த வாடிக்கையாளர், பீட்சா சூடாக இல்லை என்று என் நண்பரைத் தரக் குறைவாகப் பேசி சண்டை போட்டார்.

என் நண்பரின் வேலை பறிபோகும் அளவுக்குப் புகாரும் கொடுத்தார். எனவே, இம்முறையும் பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதற்காக, பீட்சா சூடாக இருக்கிறதா என்பதைச் சோதிக்கவே திறந்து பார்த்தேன். ஆனால், பீட்சாவில் நான் எச்சில் துப்பவில்லை; பீட்சாவுடன் செல்ஃபி மட்டுமே எடுத்தேன்’ என்றார்.

ஆனால் புராக்கின் வாக்குமூலத்தில் திருப்தியடையாத நீதிபதி, அவருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
உணவை நாசப்படுத்தி வாடிக்கையாளரின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக, அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

வைரமுத்துவை தொடர்ந்து ராதாரவி மீது பாலியல் புகார்!!

சினிமா துறை வட்டாரத்தில் தினம் தினம் பாலியல் புகார் வந்தவண்ணம் உள்ளது. இதில் நேற்று கவிஞர் வைரமுத்துவின் மீது பெண் ஒருவர் பாலியம் குற்றச்சாட்டு கூறினார். இதனைதொடர்ந்து தற்போது நடிகர் ராதாரவியின் மீதும் ஒரு பெண் பத்திரிக்கையாளர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

பாலியல் தொல்லை குறித்தும், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் குறித்தும் சின்மயி தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் பேசி வருகிறார். தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியவர்கள் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து பேசி வருகிறார். இதில் அவர் சிறு வயதில் தனது உறவினர்களால் அனுபவித்த பாலியல் தொந்தரவுகள் குறித்தும் வெளிப்படையாக பேசி வருகிறார்.

இதனால் நம்பிக்கைப் பெற்ற பெண்கள் தாங்கள் அனுபவித்த பாலியல் தொந்தரவுகள் குறித்து அவரிடம் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அவர்களின் அனுமதியோடு அவற்றையும் தனது டிவிட்டரில் சின்மயி பகிர்ந்து வருகிறார்.

இந்த வரிசையில் நேற்று மாலை அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரு பெண் பத்திரிக்கையாளர் கவிஞர் வைரமுத்துத் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருந்ததை தனது பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த விஷயம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது.

இதனைதொடர்ந்து ராதாரவி மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதில் அவரை நான் வேலை விடயமாக பார்க்க சென்ற போது அவர் என்னை வீட்டிற்கு அழைத்தார். பின் என்னை அணைத்து முத்தமிட்டார்.

பின் உன் நண்பர்களோடு வரவேண்டாம், தனியாக வா என்றார். இப்போது வரை என் வேலை முடியவில்லை.அவருக்கு நிறைய அரசியல் செல்வாக்கு மற்றும் சினிமா துறையில் செல்வாக்கு உள்ளது. அதனால் தான் என் கருத்துகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டேன் என்கிறார்.

திருமண நாளில் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை : மகளை மாமனாருக்கு திருமணம் செய்த வைத்த தந்தை!!

பீகாரில் கடைசி நேரத்தில் மணமகன் ஓடியதால் மருமகளை மாமனார் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சமஷ்டிபூரை சேர்ந்தவர் ரோசன் லால். ரோசன் லால் தனது மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார். அதன்படி தன் மகனுக்கு சுவப்னா(21) என்ற பெண்ணை பார்த்து அவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் ரோஷன். இதனைத் தொடர்ந்து திருமண நிச்சயமும் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று முன் தினம் ரோஷன் மகனுக்கும், சுவப்னாவிற்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமண வீடே விழா கோலம் பூண்டது போல் காட்சியளித்தது. இரு வீட்டாரும் திருமண வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

யாரும் எதிர்பாராத விதமாக கடைசி நேரத்தில் மணமகன் மண்டபத்தில் இருந்து ஓடிவிட்டார். விசாரித்ததில் மணமகன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அவருடன் ஓடிவிட்டதாகவும் தெரியவந்தது.

இதனையடுத்து குடும்ப மானம் போகக்கூடாது என்பதற்காக சுவப்னாவின் தந்தை தனது மகளை, அவரின் மாமனாரான ரோஷன் லாலுக்கு திருமணம் செய்துவைத்தார். மகள் வயது பெண்ணை மாமனார் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

19 முறை சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் : அதிரடியாக தடை விதித்த ஐ.சி.சி!!

ஹொங்கொங் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள், சூதாட்ட தடுப்பு விதிகளை 19 முறை மீறியதற்காக ஐ.சி.சி இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ண தகுதிச்சுற்று போட்டிகளில், ஹொங்கொங் அணியைச் சேர்ந்த இர்பான் அகமது, நதீம் அகமது, ஹசீப் அம்ஜத் ஆகிய வீரர்கள் சூதாட்டப் புகாரில் சிக்கினர் .

சகோதரர்களான இர்பான், நதீம் இருவரும் 2016ஆம் ஆண்டு டி20 போட்டிகளிலும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இவை தவிர, 2014ஆம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் புகார் உள்ளது.

இதேபோல் இர்பான் 9 முறையும், நதீம் 5 முறையும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டனர். இந்நிலையில், 2014ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்துக்கு எதிரான போட்டியில் மூன்று வீரர்களும் மோசமாக ஆடியதாக எழுந்த புகார் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இர்பான் அகமது, நதீம், ஹசீப் ஆகிய மூன்று வீரர்களுக்கும் ஐ.சி.சி இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் இவர்கள் இரண்டு வாரத்திற்கு போட்டிகளில் பங்கேற்க முடியாது.

பயனாளர்களின் கணக்குகளை பாதுகாக்க தவறிய கூகுள் பிளஸ் : மூடப்படுவதாக அறிவிப்பு!!

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ‘கூகுள் பிளஸ்’, பயனாளர்களின் கணக்கு விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படவில்லை என்று எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மூடப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், டிரம்புக்கு ஆதரவாக கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம், பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், பயனாளர்களின் விவரங்கள் டிரம்புக்கு சாதகமாக தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, பேஸ்புக் பயனார்களின் கணக்குளில் பெரிய அளவில் பாதுகாப்பு குறைபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், சுமார் 5 கோடி பேரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்நிலையில், மற்றொரு சமூக வலைதளமான ’கூகுள் பிளஸ்’-யிலும் பயனாளர்களின் கணக்குகளை பராமரிப்பதில் குறைபாடு இருப்பதாகவும், அதனை சரிசெய்ய அந்நிறுவனம் தவறிவிட்டதாகவும் செய்தி வெளியானது.

இந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கூகுள் பிளஸ் நிறுவனம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், போதுமான வாடிக்கையாளர்களை ஈர்க்க தவறி விட்டதாலும், விரிவான சேவையை வழங்க முடியாத சூழல் இருப்பதாலும் ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைதளத்தை மூடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பை அண்மித்துள்ள சூறாவளி : இலங்கையை எந்த நேரத்திலும் தாக்கும் ஆபத்து!!

இலங்கையை எந்த நேரத்திலும் சூறாவளி தாக்கும் ஆபத்துக்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இலங்கைக்கு அருகில் உள்ள வளிமண்டலத்தில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தென்மேற்கு அரேபிய கடலில் நிலை கொண்டுள்ள LUBAN என்ற சூறாவளி புயல் கொழும்பை அண்மித்த பகுதியில் உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அடுத்து வரும் 12 மணி நேரங்களில் சூறாவளி புயல் மேலும் தீவிரமடைவதுடன், இலங்கையில் இருந்து நகர்ந்து செல்வதும் சாத்தியம் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அடுத்து வரும் இரண்டு, மூன்று நாட்களுக்குள் மழை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கடல் பிரதேசங்களில் கொந்தளிப்புடன் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல், ஊவா மாகாணத்திலும், மாத்தறை, காலி மாவட்டத்திலும் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் அவர் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த அழுத்தம் சூறாவளியாக மாற்றமடைய வாய்ப்புகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.