வெளிநாட்டிலிருந்து காதலனை வரவழைத்து கணவனை துடி துடிக்க கொலை செய்த மனைவி!!

காதலனுடன் ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்கு கணவன் தடையாக இருந்ததால், மனைவி அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் தானூரைச் சேர்ந்தவர் சாகத்(34). மீன் வியாபாரியான இவருக்கு சவுஜத்(30) என்ற மனைவியும் 4 வயதில் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் சவுஜத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த பஷீர் (32) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

அதன் பின் இருவரும் பல இடங்களுக்கு சுற்றித் திரிந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பஷீர் வேலை விஷயமாக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இருப்பினும் இருவரின் பழக்கமும் போனில் தொடர்ந்துள்ளது.

இதையடுத்து இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். ஆனால் இதற்கு சவுஜத்தின் கணவர் தடையாக இருப்பதால் அவரை கொலை செய்ய திட்டம் திட்டியுள்ளனர்.

இதற்கு பஷீரின் நண்பர் உதவியுள்ளார். அதன் படி பஷீர் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் கண்ணூர் வந்தார். கண்ணூர் விமான நிலையத்தில் அவரது நண்பர் காருடன் காத்திருந்தார்.

பின்னர் இருவரும் இரவு 11 மணியளவில் சவுஜத்தின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு சவுஜத் கதவை திறந்த நிலையிலே வைத்துள்ளார். உடனடியாக வீட்டிற்குள் புகுந்த பஷீர் தூங்கிக் கொண்டிருந்த சாகத்தின் தலையில் இரும்பு கம்பியால் பலமாக தாக்கியுள்ளார். இதனால் சாகத் இறந்துவிட்டதாக நம்பி பஷீர் உடனடியாக அங்கிருந்து சென்றுள்ளார்.

ஆனால் சாகத் மயங்கிய நிலையில் இருப்பதை அறிந்த அவரின் மனைவி, இன்னும் உயிர் பிரியவில்லையே என்ற ஆத்திரத்துடன் மீன் வெட்டும் அரிவாளை எடுத்து அவரின் கழுத்தை அறுத்து துண்டாக்கினார். அதன் பின் சிறிது நேரத்தில் சகாத்தின் உயிர் பிரிந்தது.

இதைத் தொடர்ந்து மர்மநபர்கள் கொலை செய்துவிட்டதாக கூறி சவுஜத் கதறி அழுதுள்ளார். இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவர அவர்கள் உடனடியாக உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, சவுஜத்திடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் அவர் முன்னுக்கு, பின்னாக பதில் கூறியதால், பொலிசார் அவரிடம் கிடுக்குப் பிடி விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அவர், காதலனுடன் சேர்ந்து வாழ கணவர் இடையூறாக உள்ளதாக நினைத்து வெளிநாட்டில் இருந்த கள்ளக்காதலனை விமானத்தில் வரவழைத்து கொன்றதை ஒப்புக் கொண்டார். இதற்கு பஷீரின் நண்பரும் உடந்தையாக இருந்ததாக கூறினார்.

இதனையடுத்து சவுஜத் மற்றும் கொலைக்கு உதவிய பஷீரின் நண்பரை கைது செய்த பொலிசார், பஷீரை தேடி வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய விமானத்தின் அருகே செல்பி எடுக்க ஓடிய இளைஞர்கள்!!

விமானம் ஒன்று விபத்தில் சிக்கியிருந்த நிலையில், அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் விமானத்தின் நிலை என்ன என்பதை அறியாமல் செல்பி எடுக்க ஆர்வம் காட்டியுள்ள சம்பவம் பலருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று வழக்கமான சோதனைக்காக புறப்பட்டு சென்றுள்ளது.

அப்போது விமானமானது விவசாய நிலம் ஒன்றில் மோதி விபத்துக்குள் ஆகியுள்ளது. இருப்பினும் விமானத்தில் இருந்த மூன்று பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்நிலையில் விமானம் விபத்துக்குள்ளான தகவல் அப்பகுதி மக்களிடையே வேகமாக பரவியதால், அவர்கள் அனைவரும் அந்த இடத்தில் கூடியுள்ளனர்.

கூடிய அவர்கள் விமானத்தின் நிலையை அறியாமல் தாங்கள் வைத்திருந்த செல்போன் மூலம், செல்பி எடுத்துக் கொள்வதும், விபத்துக்குள்ளான விமானத்தை படம் பிடிப்பதுமாக இருந்தனர்

விபத்தில் சிக்கியுள்ள விமானம் என்ன நிலையில் உள்ளது? அது வெடித்து சிதறும் அபாயம் உள்ளதா? என்பது பற்றி எதுவும் தெரியாமல் விமானத்தின் அருகே இருந்து கொண்டு பல்வேறு நிலைகளில் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியதால், இணையவாசிகள் பலரும் கோபமாக கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

அன்புள்ள கணவரே..என்னை மன்னித்துவிடுங்கள் : தற்கொலைக்கு முன்பு மனைவி எழுதிய உருக்கமான கடிதம்!!

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் எனபவரது மனைவி கவிதா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். கவிதாவின் கணவர் ராஜ்குமார் டாஸ்மாக் ஊழியராக இருக்கிறார். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கவிதா தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அன்புள்ள கணவருக்கு, உங்கள் அன்பு மனைவி கவிதா எழுதிக்கொள்வது.

எனக்கு வாழ விருப்பம் இல்லை. நான் பைத்தியக்காரி போல் இருக்கிறேன். நம்முடைய 2 குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும்.

குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள். என்னுடைய கடைசி ஆசை, நீங்கள் நல்ல பெண்ணை திருமணம் முடித்து கொள்ளுங்கள். நான் ஒரு கோழைத்தனமான முடிவை எடுத்து உள்ளேன்.

அம்மா என்னை மன்னித்து விடு. அப்பா இல்லாத வேதனையை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. அவரோடு நானும் போக முடிவு எடுத்து விட்டேன்.

யாரோ என்னை கூப்பிடுவது போல இருக்கிறது. என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள் என உருக்கமாக எழுதியிருந்தார்.

மூளை வளர்ச்சி குன்றிய மகளை விஷம் வைத்து கொலை செய்த பெற்றோர் : சோக சம்பவம்!!

விருதுநகர் மாவட்டத்தில் மூளைவளர்ச்சி குன்றிய மகளை பெற்றோரே விஷம் வைத்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாழைக்குளத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவருடைய மனைவி ரேவதி. முனீஸ்வரன் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

இந்த தம்பதியினருக்கு சாதனா என்ற 9 வயது மகள் உள்ளார். பிறவியிலிருந்தே மூளை வளர்ச்சி குன்றிய சாதனாவை பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதித்து பரிசோதனை மேற்கொண்டனர். ஆனால் சாதனாவின் மூளை வளர்ச்சியில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனால் மனமுடைந்த பெற்றோர் சாதனாவை நாகபாளையத்தில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, மகள் சாப்பிட்ட உணவில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளனர்.
மேலும் சிறுமியின் கழுத்தை நெறித்து கொலை செய்யவும் முயற்சித்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் முனீஸ்வரனை கைது செய்துள்ளனர்.

தில் இருந்தா என்கிட்ட மோதுங்க… அப்பா விஜயகுமார் செத்துபோகவேண்டும் : வனிதா அதிர்ச்சி பேட்டி!!

எங்க அப்பாவைப் பற்றிப் பல பேருக்குத் தெரியாது. அவர் நிறைய தப்பு பண்ணியிருக்கார் என அவரது மகள் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சொத்துப் பிரச்னை காரணமாக வனிதா மற்றும் அவரது தந்தை விஜயகுமாருக்கு இடையில் சண்டை ஏற்பட்டது.

தனது அம்மாவுக்கு சொந்தமான ஆலப்பாக்கம் வீட்டில் இருந்து தன்னை அடித்து துரத்திவிட்டதாக வனிதா கூறியுள்ளார். தனது அம்மாவுக்கு சொந்தமான வீட்டில் வசிப்பதற்கு தனக்கு உரிமை இருக்கிறது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சிறு வயதில் இருந்தே எனது குடும்பத்தினருடன் எனக்கு பிரச்சனை. ஆனால் அது வெளி உலகத்துக்கு தெரியவந்தது 2010 ஆம் ஆண்டுதான்.

எனது அப்பா நிறைய விடயங்களில் பழி சுமத்தியிருக்கிறார். தனது முதல் மனைவியின் பிள்ளைகளை நல்லபடியாக வைத்துக்கொண்டார். அவர்களை சினிமாவில் நடிக்கவைக்கவில்லை.

நல்லபடியாக சம்பாதித்து கொடுத்து தனது முதல் மனைவியின் பிள்ளைகளை நல்லபடியாக வைத்துள்ளார். அருண் விஜய்யை மட்டும் சினிமாவில் நடிக்க வைத்தார்.

ஆனால், இரண்டாவது மனைவியான எனது அம்மா மஞ்சுளாவுக்கு பிறந்த எங்களை சினிமாவில் நடிக்க வைத்து பணம் சம்பாதித்துள்ளார்.

நான் வீட்டினை அபரித்துவிட்டேன் என என்மீது புகார் கொடுத்தார் என்றால் இது ஒரு கேவலமான குடும்பம். இப்படி ஒரு குடும்பத்தில் நானும் செத்துபோகவேண்டும், எனது அப்பா விஜயகுமாரும் செத்துபோகவேண்டும்.

எங்க அம்மா உண்மையாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர் அந்த அளவுக்கு உண்மையாக இல்லை. எனது அம்மாவிடம் பணத்தினை வாங்கி அவரது முதல் மனைவியிடம் கொடுத்து வந்தார்.

எனது அண்ணன் அருண் விஜய், என்னிடம் பணியாற்றியவர்களிடம் மோதுகிறார், தில் இருந்தால் அவர் என்கிட்ட மோதவேண்டும். அருண் ஒரு குற்றவாளி.

அவனுக்கு பணம் வேண்டும். எங்க அப்பாவிடம் இருந்து பணத்தினை சுரண்டி வருகிறான். பெரிய சுயநலவாதி அவன்.

மேலும், எனது குடும்பத்து பிரச்சனைகள் பற்றி இரண்டு தங்கைகளான ப்ரீதாவுக்கும், ஸ்ரீதேவிக்கும் தெரியும். ஆனால் அவர்கள் ஒதுங்கியிருக்கிறார்கள். எங்க அம்மாவை குடிக்க வைத்து மன அழுத்தத்திற்கு ஆளாக்கியவர் தந்தை விஜயகுமார், இதன் காரணத்தினாலேயே எனது அம்மா உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என கூறியுள்ளார்.

பல ஆண்களிடம் மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் : அதிர்ச்சிப் பின்னணி!!

 

வாடிக்கையாளர்கள் பெயரில் கடன் பெற்று ரூ.3 கோடி மோசடி செய்த வங்கி பெண் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் காரைக்குடியை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர், கடந்த 1ம் திகதி பொலிசில் புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில், நான் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறேன். இதற்காக மூலிகை மரங்கள் மற்றும் செடிகளை வளர்த்து வந்தேன். அங்கு, திண்டுக்கல்லில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் பெண் மேலாளர் சொர்ணபிரியா என்பவர் சிகிச்சைக்காக வந்தார். அப்போது, மூலிகை தோட்டத்தை விரிவாக்கம் செய்ய கடன் வாங்கி தருவதாக கூறினார்.

இதை நம்பிய நான் வங்கிக்கு சென்று சொர்ணபிரியாவை சந்தித்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தேன். ரூ.50 லட்சம் கடன் தருவதாக கூறி, முதல்கட்டமாக ரூ.6 லட்சம் மட்டும் தந்தார். இதையடுத்து, பணம் வரவில்லை என்று கூறி காலம் தாழ்த்தி வந்தார்.

ஆனால், எனது வங்கி கணக்கை சரிபார்த்தபோது ரூ.50 லட்சம் கடன் பெற்றிருப்பது தெரியவந்தது. ரூ.6 லட்சத்தை மட்டும் தந்துவிட்டு மீதி பணத்தை சொர்ணபிரியா மோசடி செய்துவிட்டார்.

இதற்கு அவருடைய நண்பர்கள் ஹரிகரன், ராஜா மற்றும் வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட 4 பேர் உடந்தையாக இருந்துள்ளனர் என குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து பொலிசார் விசாரித்த நிலையில், சொர்ணபிரியா இதேபோல, திண்டுக்கல்லை சேர்ந்த குமரேசன் உள்பட மேலும் 6 பேருக்கு உதவி செய்ய நான் இருக்கிறேன் என கூறி கடன் பெற்று மொத்தம் ரூ.3 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்

இந்நிலையில், நேற்று முன்தினம் சொர்ணபிரியாவை பொலிசார் கைது செய்த நிலையில் அவரின் கூட்டாளிகளை தேடி வருகிறார்கள்

உயிரிழந்த பிரபல இசையமைப்பாளர் மற்றும் மகள் : மனைவியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

கேரளாவை சேர்ந்த இசையமைப்பாளர் பாலாபாஸ்கரின் மனைவி லஷ்மியின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாலாபாஸ்கர் கடந்த 25ம் திகதி தனது குடும்பத்துடன் கார் விபத்தில் சிக்கினார்.

இதில் அவரின் குழந்தை தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட, படுகாயமடைந்த பாலாபாஸ்கர், அவர் மனைவி லஷ்மி மற்றும் கார் ஓட்டுனர் அர்ஜூன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாலாபாஸ்கர் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இதையடுத்து ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் லஷ்மியின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அதாவது அவருக்கு வைக்கப்பட்டுள்ள ஆக்சிஜனின் அளவு 80 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதே போல ஓட்டுனர் அர்ஜூன் ஐசியூவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

லஷ்மி சமீபத்தில் மயக்க நிலை தெளிந்து தனது கணவர் மற்றும் குழந்தை குறித்து கேட்டுள்ளார். அவர்கள் சிகிச்சையில் உள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

காரணம், லஷ்மிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் விடயத்தை கூறக்கூடாது என மருத்துவர்கள் கூறிய நிலையிலேயே உறவினர்கள் அவ்வாறு தெரிவித்துள்ளனர்.

வேறு சாதி இளைஞரை நீ எப்படி திருமணம் செய்வாய் : ஊரார் முன்பு தந்தை கொடுத்த கொடூர தண்டனை!!

இந்தியாவின் பீகாரில் உள்ள கிராமத்தில் வேற்றுச் சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்து மணந்த இளம் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜவுளி என்னும் கிராமத்தை சேர்ந்த பெண் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த வேற்று சாதி இளைஞரைக் காதலித்து வந்தார்.

இந்த விவகாரம் பெண் வீட்டுக்கு தெரியவந்த நிலையில் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 30-ஆம் திகதி வீட்டிலிருந்து தப்பிய அப்பெண் தனது காதலரை திருமணம் செய்தார்.

அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்த பெண்ணின் குடும்பத்தார், பெண்ணை பஞ்சாயத்தில் நிறுத்தினர். ஊர் பெரியவர்கள், அந்தப் பெண் செய்த தவறுக்காக, மரத்தில் கட்டி வைத்து அடிக்க வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தனர்.

பின்னர் பல மணி நேரத்துக்கு அந்தப் பெண்ணை மரத்தில் கட்டிவைத்து கொடூரமாகத் தாக்கினர். பெண்ணின் தந்தை முதலில் அடிக்க, ஊர் மக்கள் ஒவ்வொருவராக அந்தப் பெண்ணைத் தாக்கினர்.

இது குறித்த வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் பீகார் அரசுத் தரப்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

வேறு சாதியை சேர்ந்த நபரை திருமணம் செய்தது தவறு என்பதாலேயே இந்த தண்டனை கொடுத்தோம் என பஞ்சாயத்து தலைவர்கள் கூறியுள்ளனர்

3 குழந்தைகளை ஆற்றில் எறிந்துவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சி சம்பவம்!!

ஹைதராபாத்தில் 3 குழந்தைகளையும் ஆற்றில் வீசி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற தாய் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹைதராபாத் மாநிலத்தை சேர்ந்த Cheruku Muthyalu என்ற நபர், நேற்று பெண் ஒருவர் தன்னுடைய 3 குழந்தைகளை ஆற்றில் தூக்கி வீசிவிட்டு, அவரும் குதித்து தற்கொலைக்கு முயல்வதை பார்த்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததோடு, மீட்பு பணியில் ஈடபட ஆரம்பித்தார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற Angothu Swathi-ன் கணவர் மோகன் உள்ளுர் காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இதில் ஆற்றில் தூக்கி எறியப்பட்ட அவர்களுடைய மகள்கள் Sathvika (6), Mithuna (4)-ன் உடல்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுன.

அவருடைய மகன் Mamanth Kumar (3) உடலை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். உயிருடன் மீட்கப்பட்ட Swathi, கவலைக்கிடமான நிலையில் யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சம்பவம் நடப்பதற்கு முன்பு மோகனுக்கு அவருடைய மனைவிக்கு சண்டை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என கூறியுள்ளனர்.

கணவன் இறந்த செய்தி கேட்டு அதே இடத்திற்கு சென்று தற்கொலை செய்துகொண்ட மனைவி : சோக சம்பவம்!!

ஆந்திராவில் ரயில் தண்டவாளத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் அவருடைய மனைவி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதியான Pamuluru Sudhakar (62) கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக வலியால் துன்பப்பட்டு வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த Pamuluru கடந்த வெள்ளிக்கிழமையன்று ரேணிகுண்டா பகுதியில் Chadalavada பொறியியல் கல்லூரிக்கு அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

கணவன் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த அவருடைய மனைவி Varalakshmi (56), கணவன் இறந்து கிடந்த இடத்திற்கு சென்று, அவரது உடலுக்கு அருகே தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சடலங்களை பார்த்த பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தையே எங்களுக்கு பிறக்கவில்லை : அதான் இப்படி செய்தோம் : தம்பதியின் உருக்கமான வாக்குமூலம்!!

தமிழகத்தின் திருப்பூரில் குழந்தை பாக்கியம் இல்லாததால் இன்னொருவரின் குழந்தையை கடத்தியதாக தம்பதி தெரிவித்துள்ளனர்.

ஒடிசாவை சேர்ந்த புத்ததேவ், பேபிராணி என்ற தம்பதி திருப்பூரில் வசித்து வருகிறார்கள். இவர்களின் ஒன்றரை வயது ஆண்குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிய போது காணாமல் போன நிலையில் புத்ததேவ் பொலிசில் புகார் அளித்தார்.

பொலிசார் விசாரணையில் அதே பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன் வசித்த சங்கர்ஷன் சேத்தி என்பவர் குழந்தையை கடத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து கோவை அருகில் பதுங்கியிருந்த சங்கர்ஷன் மற்றும் அவரது மனைவி சுசித்ராவை பொலிசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், எங்களுக்கு திருமணமாகி குழந்தை இல்லை. அதனால் குழந்தை ஆசையில் இப்படி செய்தோம் என கூறியுள்ளனர்.

குடும்ப தகராறு : மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் தற்கொலை!!

தமிழகத்தில் குடும்ப தகராறில் கணவர் மனைவியை வெட்டியதில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஞ்சுகிராமம் கனகப்ப புரத்தை சேர்ந்தவர் டால்டன் செல்வ எர்வர்ட்(வயது 40), இவரது மனைவி ஜெகதீஷ்(வயது 33).

இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர், குடும்ப பிரச்சனை காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவதினத்தன்று ஆத்திரமடைந்த டால்டன், ஜெகதீஷை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ஜெகதீஷை ஆபத்தான நிலையில் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆபத்தான முறையில் மரணமடைந்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த அஞ்சுகிராமம் பொலிஸ், கணவரை தேடி வந்தனர். இந்நிலையில் கர்நாடகாவில் ரெயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தாய்- தந்தையை இழந்து பிள்ளைகள் பரிதவிப்பதால் சொந்த பந்தங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

கண்ணீரே வராமல் கதறி அழுத பெண் : கணவரை கொன்று நாடகமாடியது அம்பலம்.. திடுக்கிடும் பின்னணி!!

தமிழகத்தின் வேலூரில் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவியை பொலிசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டையை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி ரம்யா. தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2ம் திகதி மனைவிக்கு உணவு வாங்கிவர கடைக்கு சென்ற அருண்குமார் வீடு திரும்பவில்லை.

மறுநாள் அங்குள்ள பகுதியில் முள்புதருடன் கூடிய கிணற்றின் மேல் அருண்குமார் சடலமாக கிடந்தார். இது குறித்து பொலிசார் விசாரித்து வந்த நிலையில் அருண்குமார் மனைவி ரம்யா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கண்ணீரே வராமல் அழுத ரம்யா மீது பொலிசாருக்கு சந்தேகம் வலுத்தது.

இதையடுத்து அவரது செல்போனை ஆய்வு செய்த போது சம்பவத்தன்று நள்ளிரவு ரம்யாவுடன் கடைசியாக பேசிய தாமஸ் என்பவரை பிடித்து விசாரித்த போது கொலைக்காண மர்மம் விலகியது.

ரம்யாவும் அதேபகுதியை சேர்ந்த தாமஸ் என்பவருக்கும் தவறான உறவு இருந்துள்ளது. இதனை அறிந்த அருண்குமார் ரம்யாவை கண்டித்துள்ளார். தங்களுடைய காதலுக்கு அருண்குமார் இடையூறாக இருப்பதால் அவரை தீர்த்துகட்ட முடிவு செய்துள்ளனர்.

அதன்படி கடந்த 2 ம் திகதி இரவு அருண்குமாரை ஓட்டலில் உணவு வாங்கிவரச்சொல்லி வெளியே அனுப்பிய ரம்யா, இதை தாமஸுடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து திட்டமிட்டபடி காத்திருந்த தாமஸ் தனது கூட்டாளிகளான சங்கீத்குமார் ,சரத்குமார், ரஜினி ஆகிய 3 பேருடன் சேர்ந்து அருண்குமாரை மறித்து கை மாற்று கால்களை கட்டிபேட்டு சரமாரியாக தாக்கி உள்ளனர். ஒரு கட்டத்தில் தலையில் கல்லைபோட்டு கொலை செய்து சடலத்தை அருகில் உள்ள முள்புதரில் வீசி எறிந்துள்ளார்.

பின்னர் அருண்குமார் கொலை செய்யப்பட்ட செய்தியை ரம்யாவிடம் செல்போன் மூலம் தாமஸ் தெரிவித்துள்ளார். கணவர் கொல்லப்பட்டதை கொண்டாடும் விதமாக தாமஸுடன் அன்று இரவு முழுவதும் தனிமையில் ரம்யா இருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தாமஸ், ரம்யா, சங்கீத்குமார், சரத்குமார், ரஜினி ஆகிய 5 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குழந்தை துடிதுடித்து இறந்தது கூட தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்த தாய்!!

பிரித்தானியாவில் 7 வார குழந்தை மூச்சுத்திணறி இறந்தது கூட தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்த தாய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த Stacey Atkinson (29) என்ற பெண் மது போதையில் அசந்து தூங்கியுள்ளார். அப்போது அவருடைய 7 வார குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் மதுபோதையில் இருந்ததன் காரணமாக Stacey-ஆல் கண்டுகொள்ள முடியவில்லை. மறுநாள் காலை எழுந்து பார்க்கும் போது அவருடைய குழந்தை Chloe Atkinson Wilkie மூச்சின்றி மயக்க நிலையில் கிடந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்து பொலிஸார் தண்டனை சட்டம் 1933 ன் பிரிவு 1 (1) படி குழந்தையை கவனிப்பதில் அலட்சியமாக இருந்த Stacey மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதுசம்மந்தமான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி Clement Goldstone, Stacey-ன் வழக்கறிஞரின் வாதத்தை ஏற்று வழக்கின் விசாரணையை 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும் Stacey-க்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

பெற்ற மகளின் உயிரை காப்பாற்ற முன்வராத பெற்றோர் : மாமியார் செய்த மனதை உருக்கும் செயல்!!

இந்தியாவில் பெண்ணுக்கு சிறுநீரகம் தர அவரின் பெற்றோர் மறுத்த நிலையில் மாமியார் தனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மெர் நகரை சேர்ந்தவர் சோனிகா (32). திருமணமான இவர் தனது கணவர் மற்றும் மாமியார் கனிதேவி (60) உடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் சோனிகாவின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளது. இதையடுத்து டயாலிஸில் செய்த வந்த அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர்.

சோனிகாவுக்கு அவரின் தாய் பன்வாரி தேவி, தந்தை மற்றும் சகோதரரின் சிறுநீரகம் பொருந்திய நிலையிலும் அவர்கள் யாரும் கொடுக்க முன்வரவில்லை.

இதையடுத்து சோனிகாவின் மாமியார் கனிதேவி தனது சிறுநீரகத்தை மருமகளுக்கு கொடுக்க முன்வந்தார். இதையடுத்து சோனிகாவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

என் மாமியாருக்கு நன்றி கடன் பட்டுள்ளேன், அவர் எனக்கு புதிய வாழ்க்கையை கொடுத்துள்ளார் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் சோனிகா.

மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மகளை திருமணம் செய்து கொண்ட தந்தை!!

பாகிஸ்தானில் மனைவியை விவாகரத்து செய்த கணவர் வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரிபூர் நகரை சேர்ந்தவர் வாரீஸ் ஷா. இவர் சமீபத்தில் தனது 40 வயதான மனைவியை விவாகரத்து செய்தார். இதையடுத்து மனைவிக்கு முதல் கணவருடன் பிறந்த மகளை வாரீஸ் திருமணம் செய்து கொண்டார்.

இதை எதிர்த்த வாரீஸின் மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அங்கு தாயும், மகளும் சண்டை போட்டு கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து வாரீஸின் வளர்ப்பு மகள், தந்தையை கணவனாக ஏற்று அவருடன் செல்லலாம் என நீதிமன்றம் கூறியது. ஆனால் இதை எதிர்த்த வாரீஸின் முதல் மனைவி இது சட்டவிரோதமானது என வாதிட்டார்.

இந்த வழக்கில் ஏற்கனவே வாரீஸின் தந்தை, வாரீஸ், வளர்ப்பு மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்தார்கள். அதே சமயத்தில் இந்த திருமணத்தை நடத்தி வைத்த பதிவாளர் அலி ஹசன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.