இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ தேங்காய்!!

இலங்கையில் வித்தியாசமான தேய்காய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புத்தளம் பகுதியிலுள்ள நபர் ஒருவரின் வீட்டில் வித்தியாசமான தேங்காய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த ஜேமிஸ் என்பவரின் வீட்டிலேயே இந்த தேங்காய் கிடைத்துள்ளது. காலை உணவிற்காக தேங்காய் உடைக்கும் போது அந்த தேங்காய்க்குள் இரண்டு தேங்காய்கள் காணப்பட்டுள்ளன.

வழமைக்கு மாறாக இவ்வாறு தேங்காய் காணப்படுவது மிகவும் அரிய சந்தர்ப்பமாகும்.

தான் காலை தேங்காய் உடைக்கும் போது, மிகவும் வித்தியாசமாக காணப்பட்டது. எனது வாழ்க்கையில் இப்படி ஒரு தேங்காயை பார்த்த முதல் சந்தர்ப்பம் இதுவென ஜேமிஸ் குறிப்பிட்டுள்ளார்.

15 வயதான பாடசாலை மாணவியை காணவில்லை!!

எம்பிலிப்பிட்டிய – பதலங்கல -தோறகல பிரதேசத்தில் 15 வயதான பாடசாலை மாணவியை கடந்த 10 நாட்களாக காணாவில்லை என உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தோறகல பிரதேசத்தை சேர்ந்த இந்த மாணவி இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி பகுதி நேர வகுப்பிற்காக வீட்டில் இருந்து சென்ற மாணவி வீடு திரும்பவில்லை என மாணவியின் தாய் கூறியுள்ளார்.

அதேவேளை, பொலன்நறுவை மெதிரிகிரிய – யாய ஹத பிசோ பண்டாரகம பிரதேசத்தில் காணாமல் போன 10 வயதான பாடசாலை மாணவன் சீகிரிய பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளார்.

இரண்டு தினங்களுக்கு முன்னர் தாயாருடன் பொலன்நறுவை வைத்தியசாலைக்கு சென்றிருந்த போது, சிறுவன் காணாமல் போயிருந்தார். சிறுவன் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையை எழுதியிருந்தார்.

இதனிடையே பலங்கொடை சமனலவத்தை பிரதேசத்தில் காணாமல் போன 10 வயதான சிறுவன் குறித்து இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. இந்த சிறுவன் காணாமல் போய் இரண்டு மாதங்களுக்கு மேல் கடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுவிஸ் தம்பதியினருக்காக இலங்கையில் திருடப்பட்ட குழந்தை : அம்பலமாகும் இரகசியங்கள்!!

சட்டவிரோதமான தத்தெடுப்பு மூலம் சுவிஸர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட சாரா இன்செச்சன் என்ற இலங்கை பெண், தற்போது இலங்கையில் பிள்ளைகள் திருப்பட்ட தாய்மாருக்கு உதவி வருகிறார்.

சாரா, குழந்தை வர்த்தகம் சம்பந்தமான பின்னணிக்கு எதிராக போராடி வருகிறார். இந்த பெண் தன்னிடம் தனது சிறுவயது புகைப்படங்களை கொண்ட தொகுப்பு ஒன்றை வைத்துள்ளார்.

அதில் சிங்களத்தில் மொழிப்பெயர்க்கப்பட்ட குறிப்புகளையும் எழுதியுள்ளார். இந்த புகைப்பட்ட தொகுப்பை அவரது தாய் ராணி வழங்கியுள்ளார்.

சாராவை சுவிஸை சேர்ந்த தம்பதியினர் 80 ஆம் ஆண்டுகளில் தத்தெடுத்துள்ளனர். மிக நீண்ட தேடலுக்கு பின்னர் சாரா, ராணியை இலங்கையில் கண்டுபிடித்துள்ளார்.

அவர் வழங்கிய புகைப்பட தொகுப்புடன் 37 வயதான சாரா சுவிஸர்லாந்து திரும்பியுள்ளார். ராணி என்ற பெண் பிறப்புச் சான்றிதழில் தாய் என குறிப்பிடப்பட்டுள்ளார். எனினும் அவர் சாராவை பெற்ற தாயல்ல.

இது குறித்து பத்திரிகை ஒன்றிடம் சாரா நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.

இலங்கையில் எனது முதல் விஜயமாக இது அமைந்தது. எனது நண்பர் ஒருவர் என்னை அங்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். எம்முடன் மொழிப்பெயர்ப்புக்கும் ஒருவர் இணைந்துக்கொண்டார்.

நாங்கள் மூவரும் அனைத்து அலுவலகங்களிலும் தேடினோம். எனது பிறப்பு மற்றும் எனது உண்மையான தாயின் அடையாளங்கள் எங்கும் கிடைக்கவில்லை. மருத்துவமனையில் கூட எனது பெயரோ, பிறப்பு பதிவுகளோ இருக்கவில்லை.

நாங்கள் காணாமல் போன நபர் பற்றிய விளம்பரம் செய்தோம். வயதானவர்களிடம் விசாரித்தோம். எதுவும் கிடைக்கவில்லை.

எனது பிறப்புச் சான்றிதழில் ஒரு முகவரி இருந்தது. அது கொழும்பு நகருக்கு மத்தியில் உள்ள குடிசை பகுதி. எங்களுக்கு உதவ முன்வந்த ஒரு பெரிய குடும்பத்தை நாங்கள் சந்தித்தோம். எனினும் அங்கும் எனது தாயை கண்டுபிடிக்க முடியவில்லை.

எனக்கு மூன்று பிள்ளைகள் பிறந்த பின்னர் என் தாயாரை பார்க்க வேண்டும் என்று முதன் முதலாக உணர்ந்தேன். அதற்கு முன்னர் எனது உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டேன். என்னை தத்தெடுத்த பெற்றோரை நான் காயப்படுத்த விரும்பவில்லை.

நான் எப்படியான பின்னணியை எதிர்கொள்வேன் என்ற அச்சம் ஏற்பட்டது. ஒருவர் தனது சொந்த தாயை அறிய விரும்புவது ஒரு பெரிய வலி. என்னுடை சொந்த பாதுகாப்புக்காக நான் அறியாமலேயே தடைகளை ஏற்படுத்திக்கொண்டேன்.

எனது வளர்ப்பு தாய் என்னுடன் சம்பந்தப்பட்ட எனது ஆவணங்களை வழங்க தற்போதும் மறுத்து வருகிறார். எனது பிறப்புச் சான்றிதழ், நுழைவு அனுமதி, சமூக அறிக்கை ஆகியவற்றை எனது வளர்ப்பு தாயின் முன்னாள் கணவரிடம் இருந்து பெற்றேன்.

ஒரு ஆணும், பெண்ணும் இலங்கையில் இருந்து குழந்தை ஒன்றை தத்தெடுக்க தீர்மானித்துள்ளதாக அந்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நான் பிறந்த இடமும் மருத்துவமனையும் அதில் குறிப்பிட்டிருந்தது.

இதனை படித்த பின்னர் என்னால் உறங்க முடியவில்லை. ஒரு திரை விழுந்து விட்டது போல் உணர்ந்தேன். தாயிடம் இருந்து பிரிந்த வலியை உணர்ந்தேன்.

தாயை கண்டுபிடிப்பது முற்றிலும் அவசியமானது என தோன்றியது.Canton Nidwalden அரச நிறுவனங்களின் எனது ஆவணங்களை பெற முயற்சித்தேன்.

தனிப்பட்ட இரகசியங்கள் காரணமாக அவர்கள் அவற்றை என்னிடம் கொடுக்கவில்லை. எனது வளர்ப்பு தாயின் முதல் கணவர் மீண்டும் எனக்கு உதவினார். எனினும் அப்போது எனக்கு அதனை பெற முடியவில்லை.

எனக்கு தெளிவான விளக்கங்கள் கிடைக்கவில்லை. எனது வளர்ப்பு பெற்றோர் அன்று நடைமுறையில் இருந்த சட்டத்தின் கீழ் இளமையாக இருந்தனர் எனினும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

சட்டங்களை மீறியே நான் சுவிஸர்லாந்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளேன். அப்போது நான் பிறந்து மூன்று வாரங்கள்.

ஒரு தாய் குழந்தையை பாதுகாக்க வேண்டுமாயின் குழந்தை பிறந்து ஆறு வாரங்களாவது கடந்திருக்க வேண்டும். சுவிஸர்லாந்தில் நடந்துள்ள இந்த விதி மீறல்கள் குறித்து நான் கேட்டிருக்கின்றேன். நான் தொடர்ந்தும் அவதானித்து வருகிறேன்.

இலங்கையில் உள்ள எனது நண்பர் எனது தாயாரை போல் சாயலை கொண்ட பெண்ணை அடையாளம் கண்டுள்ளார். எனினும் பிறந்த திகதி வேறு தினமாக இருக்கின்றது.

எனது கணவர் என்னை அந்த பெண்ணின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு இளம் மற்றும் முதியவர்கள் என 10 பேர் இருந்தனர். நாங்கள் யாரை தேடுகிறோம் என்ற கவனமாக தெளிவுப்படுத்தினோம்.

எனது கணவர் எனது பிறப்புச் சான்றிதழை வெளியில் எடுத்து காண்பித்தார். அங்கிருந்த பெண் மற்றும் அவரது மகளின் முகத்தில் பிரகாசம் ஏற்பட்டது. அவர்களிடம் இருந்து ஆவணங்களுடன் எனது ஆவணம் ஒத்திருந்தது. அவர் ஆச்சரியமடைந்தார்.

எனக்கு கீழே மூடப்பட்டிருந்த திரை திறக்கப்பட்டதாக நான் உணர்ந்தேன். அந்த பெண் எனது தாய் என கண்டுபிடித்தாக நினைத்தேன். எனது தத்தெடுப்பு ஒரு ஊழல் என்பதை நான் உணர்ந்தேன்.

நான் அழ ஆரம்பித்தேன். அந்த வீடு அமைதியாக இருந்தது. எனது தாய் என்னை கட்டியணைத்து என் கண்ணீரை துடைத்தார். அவரது அன்பான பிரதிபலிப்பு எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

எனினும் அந்த தாயும் எனது தாயல்ல. நடிக்கும் தாய் மரபணு பரிசோதனைகளில் அவர்கள் எனது உறவுகள் அல்ல என்பது உறுதியானது. இந்த நிலையில் சட்டவிரோதமான தத்தெடுப்புகளை எதிராக போராடி வருகிறேன்.

தொடர்ந்தும் அவ்வாறான செயல் நடப்பதை தடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் சாரா இன்செச்சன் தெரிவித்துள்ளார்

இரு வருடங்களில் 27 பாலியல் குற்றங்களை செய்த நபர் கைது!!

இரண்டு வருடங்களில் 27 சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றவாளி ஒருவரை கொஹூவலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர் நாட்டில் பல பிரதேசங்களில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேக நபரிடம் மேற்கொள்ள விசாரணைகளில் குற்றச் செயல்கள் சம்பந்தமான தகவல்கள் கிடைத்துள்ளன.

குருணாகல் மாவத்தகமை பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான இந்த சந்தேக நபர் நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி எனவும் அவருக்கு எதிராக வத்தளை, நுகேகொடை நீதினம்றங்களில் 11 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் கொஹூவலை, கல்கிஸ்சை, தெஹிவளை, கண்டி மற்றும் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையங்களில் 27 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றங்கள் சந்தேக நபருக்கு எதிராக பதிவாகியுள்ளதுடன் சிறிய குற்றங்கள் தொடர்பில் கண்டி பொலிஸ் நிலையத்தில் 5 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த சந்தேக நபர் விசாரணைகளுக்காக பொலிஸார் தேடப்பட்டு வந்துள்ளார். சந்தேக நபர் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை : உருக்கமான 7 கடிதங்கள் சிக்கியது!!

இந்தியாவின் கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாலப்புழா கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (48), இவர் மனைவி மினி (43). தம்பதிக்கு அனுஸ்ரீ (17) மற்றும் அபினவ் (12) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் தங்கள் வீட்டருகில் உள்ள முந்திரி தோப்பில் நால்வரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர். இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து நால்வரின் சடலங்களையும் கைப்பற்றிய நிலையில், வினோத் எழுதி வைத்திருந்த 7 கடிதங்களை கைப்பற்றினார்கள்.

கடிதங்களானது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சுயநிதி குழுக்களுக்கு எழுதப்பட்டிருந்தது. அதில், நாராயணன் என்கிற குட்டன் என்பவர் என்னையும் ஒரு பெண்ணையும் இணைத்து தவறாக பேசி வந்தார்.

அந்த பெண் எனது சகோதரி போன்றவர் ஆவார். குட்டனின் செயல் எங்கள் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதனால் நாங்கள் தற்கொலை செய்கிறோம், எங்கள் சடலங்களை குட்டனின் இடத்தில் உள்ள முந்திரி மரத்தின் அடியில் புதையுங்கள் என எழுதப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிசார் குட்டன் மீது வழக்குப்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மரண அறிவித்தல் : திருமதி கோபால் தங்கம்!!

கோபால் தங்கம்
பிறப்பிடம் : மிகிந்தலை
வசிப்பிடம் : பட்டானிச்சூர்,
வவுனியா.
மறைந்த நாள் : 30.09.2018

இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை : எந்த நேரத்திலும் நாட்டை தாக்கவுள்ள ஆபத்து!!

இலங்கையில் நிலவும் காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடைமழை பெய்யும் அபாயம் உள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அராபிக் கடலில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் வலுவடைந்து இலங்கை ஊடாக பயணிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன்போது நாட்டில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அராபிக் கடல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள குறைந்த தாழமுக்கம் வடக்கு அகலக்கோட்டில் 11.9 இலும், கிழக்கு அகலக்கோட்டில் 65.8இலும் நிலை கொண்டுள்ளது.

தாழமுக்கம் கொழும்பில் இருந்து 1650 கிலோமீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமுக்கம் நிலை கொண்டுள்ள இடத்தில் 100 – 200 கிலோமீற்றர் தூரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாழமுக்கம் மேலும் வலுவடைந்து எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் சூறாவளியாக மாறி, இலங்கை ஊடாக வடமேல் பகுதியை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் காலநிலையில் மாற்றம் ஏற்படும். அதற்கமைய இன்றைய தினமும் அடைமழையுடனான காலநிலை நீடிக்கும்.

தெற்கு, மத்திய, சப்ரகமுவ, மற்றும் மேல் மாகாணத்தில் பல பகுதிகளிலும் 150 மில்லிமீற்றரை தாண்டிய அடைமழை பெய்யக் கூடும் என குறிப்பிடப்படுகின்றது.

மன்னாரில் இருந்து புத்தளம் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மழை பெய்யும் போது 70 – 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். கடல் பிரதேசங்கள் கொந்தளிக்க வாய்ப்புகள் உள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள சிவப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் மற்றும் கடல் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினை பெற்ற மாணவனின் இலட்சியம்!!

நான் ஒரு பொறியியலாளராக மாறி ஏழைகளுக்கு சேவையாற்றுவதே எனது இலட்சியம் என புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் 2ஆம் இடத்தினை பெற்ற மாணவன் ஜெகநாதன் லதுர்சன் தெரிவித்துள்ளார்.

இவ் வருடத்திற்கான தரம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகி இருந்த நிலையில் வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தின் மாணவன் லதுர்சன் 193 புள்ளிகள் பெற்று மாவட்ட ரீதியில் 2ஆம் இடத்தினை பிடித்துள்ளார்.

இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் மூன்றாமிடத்தையும் வவுனியா மாவட்டத்தில் முதலாமிடத்தையும் மாணவி பாலகுமார் ஹரிதிக்ஹன்சுஜா பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பிரதான வீதியொன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய குழி!!

தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியின் பத்தனை, திம்புள்ள தோட்டத்திற்கு அருகிலுள்ள வீதியில் திடீரென பாரிய குழியொன்று ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வீதியூடாக கனரக வாகனங்கள் பயணிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மாற்று வழியாக ஹட்டன், கினிகத்தேனை வீதியை பயணிகள் பயன்படுத்த முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிறிய வாகனங்கள் இந்த வீதியூடாக பயணிக்க முடியுமென்ற போதிலும் மிகுந்த அவதானத்துடன் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பகுதியை திருத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செல்பி மோகத்தால் பரிதாபமாக உயிரிழந்த தமிழ் இளைஞன் : சோகமானது கொழும்பு!!

பலங்கொடயில் அருவி ஒன்றில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பெலிஹுல்ஓய பஹன்துடா அருவில் குளிக்க சென்ற இளைஞன் ஓருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான சஞ்சய் கிருஷ்ணா என்ற தமிழ் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து பலங்கொட சென்ற இளைஞர்கள் 10 பேர் பெலிஹுல்ஓயவில் கால்வாயில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இதன்போது சிலர் செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளனர்.

இதன்போது, ஹன்துடா அருவியில் விழுந்த ஒரு இளைஞன் உயிரிழந்துள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பலங்கொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆபத்து நிறைந்த இவ்வாறான பகுதிகளில் நீராடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் மக்களை கேட்டுள்ளனர்.

மிகவும் நட்பு ரீதியாக பழகக் கூடிய கிருஷ்ணாவின் அகால மரணம் கொழும்பு வாழ் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விரல்கள் இல்லாத போதும் தடைகளை தாண்டி சாதனை படைத்த மாணவன் : குவியும் பாராட்டு!!

குருணாகலில் மாணவன் ஒருவரின் அபார திறமை குறித்து ஊடகங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்பிலேயே கை மற்றும் கால்களில் விரல்களை இழந்த போதிலும், புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை மாணவர் ஒருவர் பெற்றுள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள ஐந்தாமாண்டு புலமைபரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளை பெற்று சமோதிய தினெத் ரத்நாயக்க என்ற மாணவன் சித்தியடைந்துள்ளார்.

குறித்த மாணவன் இப்பாகமுவ, கிரிபமுன வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகிறார். பிறக்கும் போதே கை மற்றும் கால்களில் விரல்களை இழந்த நிலையில் பிறந்துள்ளார்.

உடலில் எவ்வளவு குறைகள் இருந்தாலும், உணவு உட்கொள்வது, ஆடை அணிந்து கொள்வது உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் தனியாகவே சமோதிய செய்து வந்துள்ளார்.

ஒருபோதும் தனது குறை குறித்து வருத்தமடையாத சமோதிய கல்வி கற்பதிலும் சிறந்த நிலையில் காணப்படுகின்றார்.

மன தைரியத்துடன் வாழும் சமோதிய 181 புள்ளிகளை பெற்று புலமை பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

குடும்ப வறுமை மற்றும் உடல் ஊனத்துடன் வாழும் இந்த மாணவன், சமூகத்திற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு என்பதனை மறுக்க முடியாதென பாடசாலை சமூகத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இளைஞர் அமைப்பாளர் நியமனம்!!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வவுனியா மாவட்ட இளைஞர் அமைப்பாளராக கடந்த 04.10.2018 அன்று அபூதாஹிர் நபீஸ் என்பவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமான றிஷாட் பதியூதீனால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதத்தை அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அமைச்சரிடமிருந்து பெற்றுக்கொண்டார். கிராமியப் பொருளாதார பிரதி அமைச்சரும் கட்சியின் தவிசாளருமான எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் முன்னிலையில் பெற்றுக்கொண்டார்.

அபூதாஹிர் நபீஸ் NBC ஊடக வலையமைப்பின் பணிப்பாளரும் அகில இலங்கை சமாதான நீதவானும் ஊடகவியலாளரும் ஊடக விரிவுரையாளருமான இவர் கடந்த 13 வருடங்களாக றிஷாட் பதியூதீனுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெற்றிக்காக அயராது பாடுபட்டவர்களில் ஒருவராகத் திகழ்கின்றார்.

மேலும் அபூதாஹிர் நபீஸ் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் இன மத பேதமின்றி எந்நேரமும் மக்களுக்காக சேவை செய்யக்கூடிய மக்கள் சேவைக்குத் தன்னை அர்ப்பணித்து செயற்படுகின்ற கௌரவ அமைச்சர் அவர்கள் எந்தெந்த நேரத்தில் எந்தெந்த முடிவுகளை சரியாக எடுக்க வேண்டுமோ அந்தந்த முடிவுகளை சரியான நேரத்தில் எடுத்து கட்சித் தொண்டர்கள் ஏனைய அமைப்புகளில் உள்ளவர்கள் பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள்.

அந்த வகையில் மிக நீண்ட காலமாக கிடைக்கவேண்டிய இந்த அமைப்பாளர் பதவியானது இப்போது எனக்குக் கிடைத்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அதேவேளை கட்சியின் தலைவர் உயர்மட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த வேளையில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதே வேளை இந்த இளைஞர் அமைப்பு பதவியானது ஒரு தற்காலிகமான பதவியாகவே நான் கருதுகின்றேன். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வவுனியா மாவட்டத்தில் இருக்கின்ற இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து அவர்களுடைய பல்வேறு தேவைகளை அமைச்சினூடாக நிறைவேற்றிக் கொடுப்பதற்கும் இன மத பேதமின்றி நடுநிலையாகவும் செயற்படுவேன் என்றும் தெரிவித்தார்.

வவுனியாவில் பத்தாயிரம் பனை விதைப்பு செயற்றிட்டம் முன்னெடுப்பு!!

வவுனியாவில் சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் பத்தாயிரம் பனை விதைப்பு செயற்றிட்டம் முன்னெ டுக்கப்பட்டு வருகின்றது.

இச் செயற்றிட்டத்தின் ஏழாவது கட்ட நடவடிக்கை நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின் ஏற்பாட்டில் வவுனியா சாம்பல் தோட்டம் குளக்கரைக்கு அருகே இன்று (07.10.2018) காலை 7.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

இது வரையில் கிட்டத்தட்ட 4030 பனை விதைகள் விதைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் மேலதிகமாக 2000 பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன.

இச் செயற்றிட்ட நடவடிக்கையில் கிராமசேவகர் நா.ஸ்ரீரிதரன், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் க.விஜயரூபன், வெளி சஞ்சிகையின் ஆசிரியர் அருளானந்தன், அஸ்திரம் மக்கள் நற்பணி மன்றத்தின் செயலாளர் ந.கிருஸ்னமூர்த்தி, ஈரநிலம் அமைப்பின் தலைவர் ச.சுதன், தனியார் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் எஸ்.சுரேஸ், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு மிக ஆர்வத்துடன் பனை விதைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

வ‌வுனியா ந‌க‌ர‌பிதாவின் அதிரடி ந‌ட‌வ‌டிக்கை!!

வ‌வுனியா நகரசபை சிறுவ‌ர் பூங்காவில் பாட‌சாலை மாண‌வ‌ர்க‌ள் சிலர் விடுமுறை நாட்க‌ளில் த‌னியார் வ‌குப்பிற்கு செல்வ‌தாக‌க் கூறிவிட்டு சிறுவ‌ர்பூங்காவில் மக்கள் முக‌ம்சுழிக்கும் வ‌கையில் காத‌ல் ந‌ட‌வ‌டிக்கையில் ஈடுபட்டுவந்தனர்.

இது ந‌க‌ர‌பிதாவிற்கு அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து. பின்ன‌ர் அவ்விட‌ம் வ‌ந்த‌ ந‌க‌ர‌பிதா ஜோடிக‌ளை எச்ச‌ரித்து இது சிறுவ‌ர் பூங்கா ஒழுங்கின‌மாக‌ச் செய‌ல்ப‌டுவோர் மீது நிர்வாக‌ம் ந‌ட‌வ‌டிக்கை எடுக்கும் என்ப‌தை கூறிச்சென்றதுடன் இன்றிலிருந்து நகரசபை பூங்காவுக்குள் தமிழர் பாரம்பரியத்தையும் காலாச்சாரத்தையும் காப்பதற்காக காதல் ஜோடிகள் பூங்காவிற்குள் செல்வதற்கு தடை விதித்துள்ளார்.

இச்செயற்பாட்டால்‌ பொதும‌க்க‌ள் ந‌க‌ர‌பிதாவிற்கு ந‌ன்றி தெரிவித்த‌ன‌ர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்த மூன்று மாத யானைக்குட்டி : நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

வவுனியா போகஸ்வெவ நாமல்கம என்னும் கிராமத்தில் மூன்று மாத குட்டி யானை ஒன்று கிணற்றில் வீழ்ந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (06.10) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வனப்பகுதியில் இருந்து தாய் யானையுடன் மூன்று மாத குட்டி யானையும் கிராமத்தை நோக்கி வந்தவேளை யானைக்குரிய வேலி போடப்பட்டுள்ளதனால் தாய் யானை காணிப் பகுதிக்குள் செல்ல முடியவில்லை.

குட்டி யானை வீட்டுக் காணிக்குள் சென்று அங்குமிங்கும் ஓடியுள்ளது. அப்போது கட்டில்லாத கிணறாகையால் குட்டி யானை தவறி வீழ்ந்துள்ளது.

யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அங்கு வந்த காணி உரிமையாளர் கிணற்றை எட்டிப்பார்த்தபோது குட்டியானை உயிருக்குப் போராடியுள்ளது.

இது குறித்து நேற்று இரவு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததுடன் கிணற்றில் இருந்த குட்டி யானையை கிராமவாசிகளின் உதவியுடன் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு கிணற்றினுள்ளே வீழ்ந்த குட்டி யானையை மீட்டெடுத்துள்ளனர்.

யானைக் குட்டிக்கு பலமாக அடிபட்டுள்ளதால் அதற்குரிய சிகிச்சையை வழங்கி தாய் யானையுடன் குட்டியை சேர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

என் மனைவி இப்படி செஞ்சிட்டாளே : திருமணமான சில மாதங்களில் உயிரை விட்ட கணவன்!!

இந்தியாவின் ஹைதராபாத் நகரில் திருமணமான சில மாதங்களில் மனைவி பிரிந்து போனதால் கணவர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நவீன் (24) என்ற இளைஞரும், இளம் பெண் ஒருவரும் காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான புதிதில் தம்பதியின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.

ஆனால் பின்னர் இருவருக்கும் இடையில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் நவீனை பிரிந்து தனியாக வாழ விரும்புவதாக அவர் மனைவி கூறினார். இதையடுத்து நவீன் அவர் மனைவியை எவ்வளவோ சமாதானம் செய்தும் அவர் தனியாக சென்றுள்ளார்.

இதனால் மனவேதனையில் இருந்த நவீன், சம்பவத்தன்று தனது தாயிடம், ஏன் அவள் இப்படி செய்தாள், என்னை விட்டு போய்விட்டாளே என புலம்பியுள்ளார். பின்னர் இரவு நவீன் தனது அறைக்கு சென்று தூங்கினார்.

இதையடுத்து காலையில் நவீனின் அம்மா அவர் அறைக்கு சென்ற போது அவர் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுத்த அவர், தனது மகனின் சாவுக்கு அவர் மனைவி தான் காரணம் என கூறியுள்ளார். சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.