28 வயது பெண்ணின் மீது காதல் வந்ததால் சொத்துக்களை இழந்த 75 வயது கோடீஸ்வரர்!!

பிரித்தானியாவில் வசிக்கும் இந்தியரான Paul Davidக்கு 75 வயதில் 28 வயது Jobeth Daguia மீது வந்த காதல், அவரது கோடிக்கணக்கான சொத்துக்கள் முழுவதையும் இழப்பதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

Paul David தனது மனைவியான Sundraவின் மரணத்திற்குப்பின் மிகவும் தனிமையாக உணர்ந்தார். அவரது மகளான Audra Wamstekerஇன் குழந்தைகள்தான் அவருக்கு வாழ்க்கையே என்று ஆகிப்போன நிலையில், அவரது பேரக்குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக வந்தார் பிலிப்பைன்சைச் சேர்ந்த Jobeth.

தனிமையாகவே வாழ்வை கழித்த Paul Davidக்கு மிகவும் உதவியாக இருந்தார் Jobeth. ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் வந்தது, நெருங்கியும் பழக ஆரம்பித்தனர்.

இந்த விடயம் அவரது மகளான Audraவுக்கு தெரிய வர வீட்டில் பூகம்பம் வெடித்தது. தந்தைக்கும் Jobethக்கும் இடையே உள்ள உறவு தவறானது, அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் Audra.

மகளுக்கு தான் கொடுத்திருந்த குடும்ப நகைகளைக் கேட்டபோது, அவை தனக்கு பரிசாக வழங்கப்பட்டவை என்று கூறி அவைகளையும் திருப்பிக் கொடுக்க மறுத்துவிட்டார் Audra.

பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் இருக்கும் கோடிக்கணக்கான சொத்துக்கள் யாருக்கு என இருவரும் மல்லுக்கட்டினார்கள். இந்நிலையில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பு Audraவுக்கே சாதகமாக அமைந்துவிட்டது.

அதாவது சொத்துக்கள் மட்டுமின்றி, குடும்ப நகைகளும் Audraவுக்கே சொந்தம் என நீதிபதி தீர்ப்பு சொல்லிவிட்டார்.

சொத்துக்கள் அனைத்தும் பறிபோன நிலையிலும் தனது வயது வித்தியாசத்தைக் கூட பார்க்காமல் தன்னை மணந்து கொண்ட Jobethஐ மெச்சும் Paul David, அவள் எனது பணத்துக்காக என்னை மணந்து கொள்ளவில்லை என்கிறார். தற்போது Jobethஇன் வருமானத்தில்தான் குடும்பம் நடக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக எனது மகள் என்னை கவனிக்கவில்லை, என் மனைவிதான் என்னைக் கவனித்துக் கொண்டாள் என்று கூறும் Paul David, தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருக்கிறார்.

மேல் முறையீட்டில் நான் ஜெயிக்கும்போது என் காதல் மனைவிக்கு என்னுடையவை எல்லாவற்றையும் கொடுப்பேன் என்கிறார் Paul David.

கழுத்தறுக்கப்பட்டு தாய் இறந்தது கூட தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை!!

அவுஸ்திரேலியாவில் கழுத்தறுக்கப்பட்டு தாய் இறந்தது கூட தெரியாமல் அவருடைய குழந்தை அறையில் விளையாடி கொண்டிருந்துள்ள சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் Wollongong பகுதியை சேர்ந்தவர் Kristie Powell (39). தனியாக தன்னுடைய குழந்தையுடன் வாழ்ந்து வரும் Kristie, நேற்று அதிகாலை கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் சடலமாக கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் Kristie-ன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வீட்டின் உள் அறையில் எந்த வித காயங்களுமின்றி இருந்த அவருடைய குழந்தையை மீட்டு Kristie-ன் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டிருந்த Kristie-ன் தலை மற்றும் உடல் பகுதியில் ஒரு கூர்மையான பொருளை பயன்படுத்தி குற்றவாளி தாக்கியிருப்பதாகவும், அதற்கான காயங்கள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளி குறித்து எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில், அவருடைய முகப்புத்தக பதிவை வைத்து பொலிஸார் ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர்.

அதில் சம்மந்தப்பட்ட நபரின் பெயர் Bhanu Kirkman, 29 எனவும், இந்தியா அல்லது அதன் துணைக்கண்டத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரை பற்றிய தகவல் ஏதேனும் கிடைத்தால் உடனடியாக தகவல் கொடுக்கும் படியும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வவுனியாவில் பெண்களின் ஆழுமையை கட்டியெழுப்புவதற்கான கருத்தமர்வு!!

‘இயல் திறனை கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டம்’ எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அகமட் மனஸ் மக்சீன் தலைமையில் பெண்களுக்கான கருத்தமர்வு இடம்பெற்றது.

பெண்களின் ஆழுமைத்திறனை கட்டியழுப்புவது தொடர்பாகவும் அவர்களின் திறமைகளை எவ்வாறு வெளிக்கொண்டு வருவதுடன் பெண்கள் சமூகத்தில் ஆற்றிவரும் அரசியல், பொருளாதார பங்களிப்பு மற்றும் நாட்டின் தலைவர்களாக இருந்து தேசத்தை காப்பாற்றிய பெண்களின் தலைமைத்துவ பண்புகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கபே அமைப்பினரால் பிரத்தியோகமாக தேர்வு செய்யப்பட்ட 30 பெண்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இக் கருத்தமர்வில் வளவாளர்களாக வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியின் ஓய்வு நிலை பீடாதிபதி கெ.சிதம்பரநாதன், கபே அமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஜெ.விஜயகுமார், சாவகச்சேரி பிரதேச சபையின் உதவி தவிசாளர் எஸ்.மயூரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் ‘நாம் பயிரிட்டு நாம் உண்போம்’ திட்டத்தின் கீழ் பாரம்பரிய நெற்செய்கைக்கான மானியம் வழங்கல்!!

‘நாம் பயிரிட்டு நாம் உண்போம்’ என்னும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியாவில் உழுந்து மற்றும் பாராம்பரிய நெற்செய்கையை ஊக்குவிக்கும் வகையில் விவசாய அமைச்சரால் மானியம் வழங்கும் நிகழ்வும், இவ்வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வும் நேற்று மாலை நடைபெற்றது.

வவுனியா நகரசபை மண்டபத்தில் கமநல சேவைகள் திணைக்களத்தின் மாவட்டப் பணிப்பாளர் இ.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன், மீள்குடியேற புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

வெளிநாட்டு இறக்குமதிகளைக் குறைத்து நாட்டை விவசாயத்துறையில் தன்னிறைவு அடைச் செய்யும் முகமாக நல்லாட்சி அரசாங்கத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் விவசாய அமைச்சினால் நாம் பயிரிட்டு நாம் உண்போம் என்னும் தொனிப்பொருளில் விவசாய, தானிய உற்பத்திகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் பல்வேறு மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்டத்தில் உழுந்து செய்கையை ஊக்குவிக்கும் முகமாக 16 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உழுந்து பயிற்செய்கை மேற்கொள்வதற்காக 50 வீதமான மானியங்களை விவசாய அமைச்சு விவசாயிகளுக்கு வழங்கி வைத்துள்ளது. அத்துடன் வட பிராந்தியத்தில் பாராம்பரிய நெல்லுற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 550 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்வதற்கான மானியங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன், இதன் மூலம் நாட்டிற்கு தேவையான உழுந்து தேவையை பூர்த்தி செய்ய எதிர்பர்த்துள்ளதுடன் உழுந்து இறக்குமதியை கட்டுப்படுத்தவும் விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், பாராம்பரிய நெல் உற்பத்தியை தற்போதைய விலையை விட மும்மடக்கு விலையில் சந்தைப்படுத்துவதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் பாராம்பரிய முறையில் உற்பத்தி செய்யப்படும் நெல்லினை தற்போதைய விலையை விட மும்மடங்கு விலையில் கொள்வனவு செய்ய அக்சயா என்ற நிறுவனத்துடன், விவசாய அமைச்சர் மற்றும் பிரதி விவசாய அமைச்சர் ஆகியோர் இன்று ஒப்பந்தமும் செய்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் எம்.ஐ.ஹனீபா மற்றும் அரச அதிகாரிகள், அமைச்சின் செயலாளர், உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்பு தலைவர்கள், உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

உலகின் அறிவு கூர்மையின் ஆயுதங்களே ஆசான்கள் : வவுனியா நகர சபை உறுப்பினர் ஆசிரியர் காண்டீபன்!!

உலகத்தின் சகல தொழில்துறைகளையும் நெறிப்படுத்துகின்ற அறிவுகூர்மையின் ஆயுதங்களே அர்ப்பணிப்புள்ள ஆசான்கள். எனவே என் சக தோழமையுள்ள சகல ஆசிரிய சகோதர சகோதரிகளுக்கும் ஆசிரிய தின நல்வாழ்த்துக்கள் என தனது ஆசிரிய தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

வளமான ஒழுக்கமுள்ள சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஒவ்வொரு ஆசிரியரும் தமது வாழ்வை உருக்கி பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்காக உலக ஆசிரியர் தினம் ஐப்பசி 05ம் நாள் கொண்டாடப்படுகிறது. எனினும் இலங்கையில் ஐப்பசி 06ம் நாள் கொண்டாடப்படுகிறது.

வவுனியா நகர சபையின் உறுப்பினராக மக்கள் சேவையில் பரிணமித்தாலும், சம காலத்தில் வவுனியா அல் இக்பால் ம.வி ஆசிரியராக கடமையாற்றுவதால் எமது அர்ப்பணிப்பு மிக்க சேவையை நன்கு உணர்ந்தவனாக சமூகத்தில் வாழ்கின்றோம்.

இன்றைய சூழலில் சினிமா கலாசாரமும் அதனுடன் கூடிய போதை விளம்பரங்களும் சமூகத்தை அழிவு பாதைக்கு கொண்டு செல்கின்றன, இதன் தாக்கமிகு மாணவர் சமூகத்தில் மரியாதையற்ற போக்கும் நிலவுவதால் பல ஆசிரியர்கள் பல அழுத்தங்களின் மத்தியில் சேவையாற்ற வேண்டிய நிலமை உருவாகியுள்ளது.

ஆசிரிய நியமனங்கள் இனிவரும் காலங்களில் ஆசிரியர்களின் மனப்பாங்கை உணர்ந்து வழங்கப்பட்டு, நீண்டகாலமாக குறித்த பகுதியினுள் மாத்திரம் பணியாற்றுபவர்களையும் கருத்தில் கொண்டு சுயாதீன இடமாற்றங்கள் நிகழ நிர்வாக திறமைகள் முயல வேண்டும். ஆசிரியர்களுக்கு ஏற்படும் மன உழைச்சல் அந்த பாடசாலை சமூகத்தையும், ஆசிரியரின் குடும்ப சூழலையும் பின்னோக்கி கொண்டு செல்லும்.

இனிவரும் காலங்களில் ஆசிரிய பணி புரியும் உன்னத சமூகத்தின் நிர்வாக ஆளுமையுள்ளவர்கள் ஒவ்வொரு ஆசிரியரதும் நிலைமைகளை உணர்ந்து செயலாற்றினால் தேசத்தின் கல்வி வளர்சியில் சிறிய அதிகரிப்பை காணமுடியும். இந்த ஆண்டிலிருந்து ஆவது ஆசிரியர்களின் சேவையை உணர்ந்து செயலாற்ற சமூகங்கள் முன்வரவேண்டும்.

வட கிழக்கு தாயக பகுதிகளின் பின்தங்கிய பிரதேசங்களில் தமது அர்ப்பணிப்பு மிக்க ஆசிரிய பணியை கடுமையான சிக்கல்களின் மத்தியில் பணியாற்றும் ஒவ்வொரு சக ஆசிரியரும் மகா புருசர்கள் அவர்களுக்கு தலை சாய்ந்த கோடான நன்றிகளுடன் கூடிய பாராட்டுகள்.

சுந்தரலிங்கம் காண்டீபன் (B.Sc)
நகர சபை உறுப்பினர் – வவுனியா
ஆசிரியர் – வ/அல் இக்பால் ம.வி

வவுனியா நகரசபையினால் சோலைவரி அறவீட்டு நடவடிக்கை ஆரம்பம்!!

வவுனியா நகரசபையினரால் கடந்த பல வருடங்களாக சோலை வரி பெற்றுக்கொள்ளாத வர்த்தகர்களுக்கு எதிராக கடந்த இரண்டு நாட்களாக நகர் பகுதிகளில் நகரசபை உத்தியோகத்தர்களினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபை 2018.09.06.07 இலக்க சபை தீர்மானத்திற்கு அமைய நகரசபை செயலாளருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்திற்கு அமைவாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது வரை வவுனியா நகரசபைக்கு சோலை வரி நிலுவை செலுத்தப்படாதவர்களுக்கு எதிராக நகரசபை கட்டளைச்சட்டம் அத்தியாயம் 255 பிரிவு 170 இன் பிரகாரம் நகரசபை உத்தியோகத்தர்களினால் நடுக்கட்டு நடவடிக்கையாக ஆடம்பரப் பொருட்கள் கையேற்கப்பட்டு அவற்றை ஏல விற்பனை செய்வதன் மூலம் சோலை வரி நிலுவையைச்சீர் செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு நகரிலுள்ள பல வியாபார நிலையங்களுக்கு எதிராக கடந்த இரண்டு நாட்களும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பாலமோட்டை அ.த.க பாடசாலையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவர் விபரம்!!

வவுனியா பாலமோட்டை அ.த.க பாடசாலையில் 2018ம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் பாடசாலை அதிபர் பொ.தெய்வேந்திரன் வழிகாட்டலில் சு.சுவேந்திரன், பொ.சிவபாதம் ஆகிய ஆசிரியர்களின் வழிப்படுத்தலில் 8 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி ஒரு மாணவன் சித்தியடைந்ததுடன் ஏனைய 7 மாணவர்களும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

அவர்களின் விபரம்
1) க.கோபிதன் -165
2) க.பிரவின்- 160
3) சி.கிஷாளன்- 159
4) பு.சங்கவி – 154
5) இ.யதுசன் -138
6) நி.ரேனுஜா – 119
7) பி.யகித்தன் – 107
8) சி.தர்சிகன் – 105

இலங்கையர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு : ஆபத்து ஏற்படலாம்!!

படுக்கையறைகளில் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவது ஆபத்தை ஏற்படுத்தும் என சுகாதார அமைச்சு இலங்கையர்களுக்கு அறிவித்துள்ளது.

படுக்கையறையில் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்துவதால் மூளை மற்றும் நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உறங்க செல்வதற்கு முன்னர் படுக்கையறையில் இருந்து அவ்வாறான பொருட்களை அகற்றுமாறு பாவனையாளர்களை சுகாதாரப்பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

உலக மனநல தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நீண்ட நேரம் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்துவதும் உடல்பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்ற விடயமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தேசிய

இலங்கையர்களை கண் கலங்க வைத்த மாணவி : அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய தருணம்!!

உயிரிழந்த தந்தையின் சடலத்தை வணக்கி விட்டு, ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதச் சென்ற மாணவி சித்தி அடைந்துள்ளார்.

அம்பாறையில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்த நிலையில், மாணவி ஒருவர் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்.

அம்பாறை, மரியகந்த பிரதேசத்தில் சேர்ந்த 10 வயதான விஹங்கி ஆகர்ஷா என்ற மாணவியே பரீட்சையில் சித்தியடைந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.

புலமைபரிசில் பரீட்சைக்கு முதல் நாள் மாணவியின் தந்தை மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

தந்தையை இழந்த சோகம் தாக்க முடியாமல் பரீட்சைக்கு செல்ல மறுத்த மாணவி, வீட்டியில் இருந்தார். எனினும் மாணவி கல்வி கற்கும் பாடசாலையின் அதிபர் மாணவியின் வீட்டிற்கு சென்று, அவருக்கு ஆறுதல் கூறி பரீட்சையில் தோற்ற வைத்தார்.

அதற்கமைய நேற்று வெளியான ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுககு அமைய குறித்த மாணவி, சித்தியடைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மாணவி சித்தி அடைந்தமை பாடசாலைக்கு மட்டுமன்றி, அந்தப் பகுதி மக்களுக்கு பெருமை சேர்ந்த விடயமாக மாறியுள்ளதாக மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் சிவப்பு எச்சரிக்கை : கொழும்பின் பல பகுதிகளில் அடைமழை : இலங்கைக்கு ஆபத்தா?

கொழும்பின் பல பகுதிகளில் அதிகாலை முதல் அடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்படைத்துள்ளது.

பிரதான வீதிகளில் லேசான வெள்ள நிலைமை காணப்படுவதால் போக்குவரத்து நெரிசலும் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். மத்திய, வடமேல், வடமத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திலும், 100 மில்லி மீற்றர்களை தாண்டிய மழை பெய்யலாம்.

மேற்கு, தென் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் அடைமழை பெய்யும். சப்ரகமுவ, மேற்கு, மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை நேரத்தில் பனிமூட்டமான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அடுத்த வரும் நாட்களில் தமிழகத்தில் அடைமழை பெய்யும் என அந்நாட்டு வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டலாம் என எச்சரிக்கப்பட்டுள்ள அதேவேளை இலங்கையிலும் பல்வேறு பகுதிகளில் அடைமழை பெய்து வருகின்றமையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அடுத்து வரும் சில தினங்களில் தமிழகம், இலங்கையின் பல பகுதிகளின் வெள்ளத்தில் மூழ்கும் என அமெரிக்காவை தளமாக கொண்ட வானிலை நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

13 வயது சிறுமியின் உடற்பாகம் ஆய்வாளருக்கு அனுப்பி வைப்பு : ஹொட்டல் உரிமையாளர் கைது!!

காலி தடல்ல பிரதேச கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தாழை மரமொன்றில் கடந்த 2ம் திகதி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமியின் சடலம் தொடர்பான மரண பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் சிறுமியின் சடலத்தின் உடற்பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க ஆய்வாளருக்கு அனுப்பி அதன் அறிக்கை கிடைத்த பிறகு மரணத்திற்கான காரணத்தை கூற முடியும் என கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர் அஜித் ரத்னவீர தெரிவித்துள்ளார்.

கடந்த 2ம் திகதி கொடகவெல பல்லேவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதான ஹிருணி சுனேத்ரா விஜேசிங்க என்ற சிறுமி தாழை மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற காலி நீதவான் நீதிமன்ற நீதிபதி மரண பரிசோதனைகளுக்காக சடலத்தை கராப்பிட்டிய வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஓகஸ்ட் மாதம் குறித்த சிறுமியை பஸ் நடத்துனர் ஒருவர் ஹொட்டலுக்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகம் செய்ததாகவும் அந்த சம்பவம் தொடர்பாக குறித்த நபரை கைது செய்வதற்கு முடியாமல் இருப்பதால் ஹொட்டல் உரிமையாளர் கொடகவெல பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அதுதொடர்பான வழக்கு இரத்தினபுரி நீதிமன்றில் நடைபெறுவதாகவும் குறித்த சிறுமியை நன்னடத்தை இல்லத்தில் தங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கையில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெறாத மாணவர்களை உள ரீதியாக காயப்படுத்த வேண்டாம் என சுகாதார அமைச்சு பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சுகாதார அமைச்சின் உளவியல் சுகாதார பிரிவின் பணிப்பாளர் நிபுணத்துவ மருத்துவர் சித்ரமாலி டி சில்வா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் தொடர்ந்தும் கோருகையில்,

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் உரிய அடைவினை பெற்றுக் கொள்ள தவறிய மாணவர்களை பெற்றோர் திட்டக்கூடாது.

அடுத்து வரும் பரீட்சைகளில் சித்தி எய்த முடியும் என அவர்களை தைரியமூட்ட வேண்டும். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சில மாணவர்கள் சித்தி எய்தியிருப்பார்கள். மேலும் ஒரு தொகுதி மாணவர்கள் சித்தி எய்த தவறியிருப்பார்கள்.

பரீட்சையில் சித்தி எய்த தவறியமைக்காக தங்களது பிள்ளைகளை பெற்றோர் திட்டித் தீர்க்கக் கூடாது. “ஏன் புள்ளிகளை பெற்றுக் கொள்ளவில்லை, பாருங்கள் எத்தனை வகுப்புக்களுக்கு நாம் உங்களை அனுப்பியிருக்கின்றோம்” என கூறக்கூடாது.

ஏனைய பிள்ளைகளுடன் உங்கள் பிள்ளைகளை ஒப்பீடு செய்வதனை தவிர்த்து கொள்ளவும். பரீட்சையில் சித்தி எய்திய மற்றும் எய்த தவறிய மாணவ மாணவியரை உள ரீதியாக வீழ்த்த வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பிள்ளைகளை தூற்றுவதனால் அவர்கள் பிழையான முடிவுகளை எடுப்பதற்கான வாயப்பும், அவர்கள் உள ரீதியாக பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பும் உள்ளதாக அவர் பெற்றோரை எச்சரித்துள்ளார்

இலங்கை இளைஞனின் புதுமையான அபார கண்டுபிடிப்பு : வியப்பில் மக்கள்!!

இலங்கையில் இளைஞனின் புதிய கண்டுபிடிப்பு தொடர்பில் நாட்டுக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வாகன தயாரிப்பு துறையில் ஆர்வம் கொண்டுள்ள இளைஞன், வித்தியசமான மோட்டார் வாகனம் ஒன்றை தயாரித்துள்ளார்.

அனுராதபுரத்தை சேர்ந்த 21 வயதான தினேஷ் ராஜபக்ச என்ற இளைஞனே வித்தியாசமான முறையில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார்.

மோட்டார் வாகனம் முன்னோக்கி பயணிக்கும் போது தடை ஏற்பட்டால், மீண்டும் பின் பக்கமாக திரும்பி தடை இன்றி பயணிக்க கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய கண்டுபிடிப்பான வாகனம் பயணித்து கொண்டிருக்கும் போது, கையடக்க தொலைபேசியில் கட்டுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மோட்டார் வாகனம் பயணிக்க முடியாத வகையில் ஆழமான பள்ளங்கள் காணப்பட்டால், தானாகவே நின்று பின்னால் நோக்கி பயணிப்பதே கண்டுபிடிப்பின் விசேட தன்மையாகும்.

தினேஷின் அபார கண்டுபிடிப்பினை மேம்படுத்த உதவிகளை தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு உதவும் பட்சத்தில் இலங்கையில் தனித்துவமான மோட்டார் வாகனம் தயாரிக்கும் அளவு திறமையானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞனின் தாயார் வெளிநாட்டில் வசிக்கின்ற நிலையில், தந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணியாற்றி வருகின்றார்.

வறுமையிலும் தமிழ் மாணவி சாதனை : மகிழ்ச்சியில் மூழ்கிய கிராமம்!!

நாடளாவிய ரீதியில் 2018ஆம் ஆண்டுக்கான ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று வெளியாகி உள்ளன.

இதன் அடிப்படையில், 6 வருடங்களுக்கு பின்னர் கல்முனை ஸ்ரீ முருகன் வித்தியாலய மாணவி ஒருவர் படைத்துள்ள சாதனையை கிராமமே போற்றுகின்றது.

மத்தியமுகாம் பின்தங்கிய கிராமத்தில் ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தில் பயின்று வருகின்ற யோகராசா திலக்சிகா என்ற மாணவியே 172 புள்ளிகளை பெற்றுள்ளார்.

கற்றலில் ஊக்கம் நிறைந்த மாணவியாக திகழ்கின்ற திலக்சிக்கா ஆரியர்களுக்கு கீழ்ப்படிவான மாணவியும் கூட இதுவே மாணவியின் வெற்றியின் ரகசியம் என்று வித்தியாலய அதிபர் க.கதிரைநாதன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கற்பித்த ஆசிரியர் சக ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், எதிர்காலத்தில் மக்கள் சேவகியாக திகழ்வதே எனது இலக்காகும் என்று யோகராசா திலக்சிகா குறிப்பிட்டுள்ளார்.

ஈழப்போரின் மாறா வடு : பலரை நெகிழ வைத்த ஈழத்துச் சிறுமி!!

இவ்வருடத்திற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்றைய தினம் காலை வெளியாகியிருந்தன.

நாடளாவிய ரீதியில் பல்வேறு மாணவர்கள் அதி உயர் சித்திகளைப் பெற்று, தமது வீட்டுக்கும் பாடசாலைக்கும் பெறுமை சேர்த்திருந்தனர்.

இந்நிலையில், முல்லைத்தீவில் வசிக்கும் யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு தனது கையை இழந்த சிறுமி ஒருவரின் சாதனை அனைவரையும் அவர்பால் ஈர்க்கச் செய்துள்ளது.

முல்லைத்தீவு, முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவி ராகினி 169 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

கடந்த மூன்று தசாப்த காலமாக வடக்கு, கிழக்கு தாயகத் தமிழர்களை வதைத்து எடுத்த கோர யுத்தம் இந்த சிறுமியையும் விட்டுவைக்கவில்லை.

அந்த கொடூரங்களின் அடையாளமாக தனது கையை இழந்த நிலையிலும், அதில் மனம் தளராது இன்று அதி உயர் சித்தியினைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

குறித்த மாணவியின் இந்த சாதனையை பலரும் வெகுவாகப் பாராட்டி வருவதுடன் அதிகமானவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் 22 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!!

புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (05.10.2017) வெளியாகியிருந்த நிலையில் வவுனியா வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவர்களான சுதாகர் அபினுசன் 191 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் 5வது இடத்தினையும் சிவணேசன் ஆதித்யன் 190 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் 8வது இடத்தினையும் பெற்று பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

164 வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்று 22 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.