வவுனியா இறம்பைக்குளம் மகாவித்தியாலயத்தில் 76 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!!

புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (05.10.2017) வெளியாகியிருந்த நிலையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தில் மாணவர்களான ச.லதுஷனா 193 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாம் நிலையிலும் கொ.ஏஞ்ஷலின் அபி கெயில் 192 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் நான்காம் இடத்தினையும்,

ம.ஜதுசன், ந.நயனி ஆகிய இரு மாணவர்களும் 191 புள்ளிகளை பெற்று 5ம் இடத்தினையும், ச.சாயனி 189 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் 09வது இடத்தினையும், ஆர்.ருபேஸ் 188 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் 11வது இடத்தினையும் பா.சந்தோஸ், யூ.நில்பி பீரிஸ், ஜே.சாஹித்தியா ஆகிய மூன்று மாணவர்களும் 187 புள்ளிகளை பெற்று 14வது இடத்தினையும் ஹரிசாயினி , டே.யாசினி, எஸ்.டிபாணி ஆகிய மூன்று மாணவர்களும் 186 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் 20வது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

164 புள்ளிகளுக்கு மேல் பெற்று 76 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 100 – 163 புள்ளிகளை 100 மாணவர்களும் , 70 – 99 புள்ளிகளை 05 மாணவர்களும் , 40- 69 புள்ளிகளை 01 மாணவனும் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

வவுனியாவில் வீட்டிற்கு வெளியே சென்ற குடும்ப பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

வவுனியாவில் இன்று (06.10) காலை 5.30 தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டிற்கு முன்னால் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிசார் சடலத்தினை மீட்டெடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் வசித்த வந்த விவசாயியான கனகசிங்கம் கதிர்காமநாதன் 46வயதுடைய குடும்பஸ்தர் இன்று காலை 5.30 மணியளவில் வீட்டிற்கு முன்னாலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். நேற்று இரவு 10 மணியளவில் நித்திரைக்கு சென்றதாகவும் இன்று காலை 5.30 மணியளவில் வீட்டிற்கு வெளியே சென்ற போது கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக மனைவி தெரிவித்துள்ளார். இதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்குச் சென்ற ஈச்சங்குளம் பொலிசார் சடலத்தினை பார்வையிட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் வைத்தியசாலைக்கு சடலம் எடுத்து செல்லப்படவிருப்பதாகவும் குடும்ப பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்திருக்கலாம் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கி சடலமாக மீட்பு!!

வவுனியா ஈச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய கனகசிங்கம் கதிர்காமநாதன் எனும் குடும்பஸ்தரே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று(06.10.2018) காலை மீட்கப்பட்டுள்ளார்

நேற்றைய தினம் குடும்பத்தில் ஏற்பட்ட தகாறாறே தற்கொலை செய்வதற்கு காரணம் என அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

சம்பவ இடத்திற்க்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனைக்குப் பின்பே எதனையும் தீர்க்கமாக கூறலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பூந்தோட்டம் பிரதேசத்தில் திருத்த வேலையின் நிமித்தம் மின்சாரம் இடைநிறுத்தப்படும்!

வவுனியா பூந்தோட்டம் பிரதேசத்தில் இன்றும் 06.10.2018 நாளையும் 07.10.2018
காலை 8.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை திருத்த வேலைகளுக்ககாக மின்சாரம் இடைநிறுத்தப்படும்.

 

 

குடும்பத்தின் சூழ்நிலையில் சிறுவனின் ஆசை.. ஒரே புகைப்படத்தால் மாறிப்போன வாழ்க்கை!!

இன்றைய காலத்தில் படிப்பதற்கு பல அறக்கட்டளைகள் வந்த நிலையிலும், பல குழந்தைகள் குடும்பத்தின் சூழ்நிலைக் காரணமாக படிப்பை தொடர முடியாமல் பாதியில் நிறுத்தி விடுகின்றனர். மேலும், சிலர் பள்ளி பக்கமே செல்ல முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிரது.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு சிறுவன் படிப்பின் மீதான ஆர்வத்தினால் செய்த செயல் உலகளவில் தற்போது எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது.

அதாவது, வீட்டின் வறுமை நிலையிலும் அருகில் உள்ள மக்-டொனால்ஸில் உள்ள வெளிச்சத்தை பயன்படுத்தி தான் இவன் இரவு நேரத்தில் தனது வீட்டு பாடத்தை செய்கிறான்.

அவர்களது வீட்டில் ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சம் கூட இரவில் தருவது இல்லை. ஆனாலும் படிக்கவேண்டும் என்ற சிறுவனின் ஆசை பலருக்கு முன்னுதாரணமாக உள்ளது.

இந்தப் புகைப்படம் வெளியாகி பலரது உள்ளங்களை கவர்ந்துள்ளது. உலகில் உள்ள பல ஆயிரக்கணக்காம மக்கள் இச்சிறுவனின் படிப்புக்கு உதவிசெய்ய முற்பட்டுள்ளனர். ஒரு புகைப்படத்தால் இவன் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது

இளம்பெண் மசாஜ் என ஆசைப்பட்டு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய இளைஞர் ஒருவர், மசாஜ் அறைக்குள் நுழைந்துவிட்டு திரும்பிய போது உடல் முழுவதும் சிகப்பு நிறத்திலான கோடுகள் விழுந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

தெற்கு அவுஸ்திரேலியாவை சேர்ந்த Matthew, தன்னுடைய மனைவி Candise Raison மற்றும் அவருடைய சகோதரியுடன் 6 நாள் சுற்றுப்பயணமாக இந்தோனேசியாவிற்கு சென்றுள்ளார். அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அசதியில் இருவரும் மசாஜ் செய்தால் சற்று நிம்மதியாக இருக்கும் என நினைத்துள்ளனர்.

மேலும் நீண்ட நாட்களகாவே முதுகுவலி இருப்பதாக Matthew கூறி வந்ததால் அவருக்கு வலி குறையும் என நினைத்து Candise மசாஜ் செய்ய அழைத்து சென்றுள்ளார்.

அங்கு Candise முதலில் மசாஜ் செய்து முடித்துவிட்டார். பின்னர் மசாஜ் செய்யும் ஊழியர் Matthew-விற்கு ‘red dragon’ மசாஜ் செய்யலாமா என கேட்டுள்ளார். அந்த வகையான மசாஜ் என்ன என்பதே இருவருக்கும் தெரியாத நிலையில், என்னுடைய கணவர் எதுவாக இருந்தாலும் முயற்சி செய்வார் என தெரிவித்துள்ளார்.

அதன்படி அவருக்கு மசாஜ் முடிந்ததும், இந்த வகை சிகிச்சையானது குவா ஷா என்று அழைக்கப்படுகிறது. தசை திசுக்களிலிருந்து அசுத்தங்களை வெளியிட வடிவமைக்கப்பட்டுள்ளது. நாளைக்கு தான் red dragon தெரியும் என ஊழியர் கூறியுள்ளார்.

அதற்கு அடுத்த நாளே Matthew-வின் கழுத்து பகுதியில் இருந்து முதுகு முழுவதும் சிகப்பு நிறத்திலான கோடுகள் விழுந்துள்ளார். இதனால் பார்த்து குடும்பமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஆனால் அடுத்த 5 நாட்களில் இந்த கோடுகள் மறைந்துவிட்டதாக Candise கூறியுள்ளார்.

சுனாமியில் காணாமல்போன குழந்தை : பிணங்களுக்கு அடியிலிருந்து மீட்கப்பட்ட அதிசயம்!!

இந்தோனேஷிய சுனாமியில் காணாமல் போன குழந்தை ஒன்று அதிசயிக்கத்தக்க வண்ணமாக 24 மணி நேரத்திற்குப்பின் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.

மத்திய Sulawesi பகுதியைத் தாக்கிய சுனாமியில் குட்டிக் குழந்தை Wuhan (1) அடித்துச் செல்லப்பட்டாள். பெற்றோர் நம்பிகையிழந்துபோன நிலையில் காணாமல்போய் 24 மணி நேரத்திற்குப்பின் சேற்றில் புதைந்திருந்த இரண்டு சடலங்களுக்கு அடியில் அவள் கண்டுபிடிக்கப்பட்டாள்.

Wuhanஇன் தாயான Endang, குழந்தைக்கு கடவுள் கொடுத்த புதிய வாழ்வுக்காக நன்றி என்று கூறினார். நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் தாங்கள் வீடிழந்து எதிர்காலத்தைக் குறித்த கவலை ஏற்பட்டிருந்தாலும் தனது மகள் உயிருடன் கிடைத்ததற்காக நன்றியுடன் இருப்பதாக Endang தெரிவித்தார்.

Endangஇன் குழந்தைக்கு உணவளிப்பதற்காக அவருக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் மற்றும் தண்ணீர் கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து இந்தோனேஷிய ராணுவம் மீட்புப் பணிக்காகவும், தண்ணீர், உணவு மற்றும் உடைகளை பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவதற்காகவும் ஏராளமான ராணுவ வீரர்களை தொடர்ந்து அனுப்பி வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை மத்திய Sulawesiயை தாக்கிய நிலநடுக்கத்தால் உருவான சுனாமியால் 20 அடி உயர அலைகள் Paluவைத் தாக்கின.

1400பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000தை தொடலாம் என அஞ்சப்படுகிறது.

அன்று பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் : இன்று நோபல் பரிசு வாங்கி சாதனை!!

மகளிர் நல மருத்துவர் ஒருவருக்கும், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கூட்டுப்பாலியல் வன்முறைக்கு ஆளான ஒரு பெண்ணுக்கும் 2018ஆம் ஆண்டுக்கான பாலியல் வன்முறைக்கு எதிராக போராடியதற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

காங்கோ நாட்டைச் சேர்ந்த Dr. Denis Mukwege (63) மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளானபின்னும் தைரியமாக பாதிக்கப்படும் பெண்களுக்காக குரல் கொடுக்கும் Nadia Murad (25) ஆகிய இருவருக்கும் 2018ஆம் ஆண்டுக்கான பாலியல் வன்முறைக்கு எதிராக போராடியதற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்குமுன் கொலைகாரர்களின் தாக்குதலில் மயிரிழையில் உயிர்பிழைத்தபின்னும் உலகின் கவனம் காங்கோ பெண்களின்மீது விழும் வரையில் தொடர்ந்து பிரச்சாரம் செய்தவர் Dr. Denis Mukwege.

சரியான மருத்துவமனைகள் இல்லாத Bukavu என்னும் இடத்தில் போதுமான அளவில் மின் வசதியோ, மயக்க மருந்துகளோ இல்லாத நிலையிலும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட எண்ணிக்கையில் அடங்காத பெண்களுக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டவர் Dr. Denis.

பாலின சமத்துவம் மற்றும் போரில் பெண்கள் வன்புணர்வு செய்யப்படுதல் போன்றவற்றிற்கெதிராக காங்கோ நாட்டவர்களுக்காக மட்டுமின்றி உலகெங்கிலுமுள்ளவர்களுக்காக குரல் கொடுப்பவர் Dr. Denis.

2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில், பெண்களுக்கெதிராக வன்முறையை பயன்படுத்தும் மற்றும் பாலியல் வன்புணர்வை ஒரு போர் யுக்தியாக பயன்படுத்தும் அநீதியான யுத்தங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என உணர்ச்சிகரமாக உரையாற்றி முடித்து சொந்த நாடு திரும்பினார்

ஆனால் சில நாட்களுக்குள், ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் அவரது பாதுகாவலர்களைக் கொன்று விட்டு, அவரது பிள்ளைகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு நடத்திய தாக்குதலில் அதிசயவண்ணமாக உயிர் பிழைத்தார் Dr. Denis.

Nadia Murad தன் ஊரைச் சேர்ந்த பல பெண்களுடன் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.ஒரு ஐ.எஸ் நீதிபதியிடம் அடிமையாக விற்கப்பட்டார் அவர். அவன் அவளை கொடூரமாக பலமுறை வன்புணர்வு செய்ததோடு, அவள் தப்ப முயன்றபோது தனது பாதுகாவலர்களிடம் அவரை ஒப்படைத்தான்.

அவர்கள் ஒவ்வொருவராக அவரை பாலியல் வன்புணர்வு செய்தார்கள்.மீண்டும் தப்பிய Nadia Murad தைரியமாக தனது பெயரை ஊடகங்களில் வெளியிட அனுமதித்ததோடு, தனது புகைப்படத்தையும் ஊடகங்களில் வெளியிட வற்புறுத்தினார்.இன்றும் Nadia Murad பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

இளம்பெண்ணை கவர்வது எப்படி? வைரலாகும் குகை மனிதனின் காதல் பதிவு!!

உலகளவில் மிகவும் பிரபலமான தாய்லாந்து குகை மனிதன், சமீபத்தில் ரஷ்ய பெண்ணை கவர்ந்தது பற்றி வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் மிகவும் பிரபலமானவர் தாய்லாந்தை சேர்ந்த Jatuphum Losiri (48). இவரை பொதுமக்கள் பலரும் குகை மனிதன் என செல்லமாக அழைப்பார்கள்.

இவர் தன்னுடைய வாழ்நாளில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை முகப்புத்தகத்தின் வாயிலாக பதிவிட்டு வருபவர். அவரது பதிவுகளை உற்று கவனிப்பதற்காகவே ஏராளமானோர் அவரை பின் தொடர்க்கின்றனர்.

இந்த நிலையில் Losiri ரஷ்ய பெண்ணுடன் புகைப்படம் ஒன்றினை எடுத்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் எப்படி அந்த பெண்ணை கவர்ந்தேன் என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள குறிப்பில், இன்று நான் என்னுடைய மோட்டார் சைக்கிளில் குகைக்கு திரும்பி கொண்டிருந்தேன். அப்போது எதிர் திசையில் ஒரு பெண்ணை கண்டேன். மென்மையாக, அழகாக இருந்தாள். நான் அவளிடம் சென்று, “நான் என்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும்போது நீ என்னுடைய வழியில் குறுக்கிட்டுவிட்டாய். உன்னுடைய அழகு என்னை திரும்ப வைத்துவிட்டது”.

“நான் உன்னிடம் சிறிது நேரம் பேச வேண்டும். உன்னை போலவே உன்னுடைய மனதும் அழகாக இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்” என கூறினேன்.

ரஷ்யாவை சேர்ந்த அந்த பெண் பின்னர் என்னுடைய குகைக்கு வந்தார். அவருடன் ஒரு புகைப்படம் மட்டும் தான் எடுத்துக்கொண்டேன் முத்தம் கூட இடவில்லை என பதிவிட்டிருந்தார். இளம்பெண்ணை கவர்ந்த அந்த விதத்தை நெட்டிசன்கள் பலரும் வியந்து பாராட்டினாலும், ஒரு சிலர் இது பழைய முறை என கூறியிருந்தனர். இந்த பதிவானது 9 ஆயிரம் பேரால் பகிரப்பட்டதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோரால் கமெண்ட் செய்யப்பட்டிருந்தது.

அதன் பின்னர் சில நாட்கள் கழித்து Losiri, தன்னுடைய முகநூல் பக்கத்தில் பெண் ஒருவர், தன்னுடைய படுக்கையில் நிர்வாணமாக இருப்பதை போன்ற புகைப்படத்தினை பதிவிட்டார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரசரப்பட்டு உன்னை புகழ்ந்து விட்டோம். நீ காதல் கதைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு என நினைத்திருந்தோம். ஆனால் இப்படி செய்திவிட்டாய் என பதிவிட்டுருந்தனர்.

இதனை பார்த்த Losiri, இந்த பக்கத்தை பின்பற்ற யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. என்னுடைய கனவு மற்றும் வாழ்க்கைமுறையைப் பகிர்ந்துகொள்பவர்கள் மட்டுமே இருந்தால் போதும் என பதிவிட்டிருந்தார். மேலும் அவர், தனது படுக்கையில் நிர்வாணமாக எடுத்த புகைப்படம், ரஷ்ய சுற்றுலா பயணி அல்ல. அது மற்றொரு காதலி என குறிப்பிட்டிருந்தார்.

திருமணத்திற்கு பின் தெரிந்து போன ரகசியம் : ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்த இளம்பெண்!!

அகமதாபாத்தில் திருமணமான 5 மாதங்களிலே இளம்பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத்தில் சூரத் பகுதியை சேர்ந்தவர் Nayna (26). இவர் கடந்த மே 14-ம் தேதியன்று பெற்றோருக்கு கூட தெரியாமல் ரவி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜெயஸ்ரீ என்ற பெண் திருமணம் செய்துவைத்தார்.

திருமணம் முடிந்து 5 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில், Nayna கழுப்பூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சடலமாக கிடந்துள்ளார்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் Nayna விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதும், அவருடைய கணவர் மட்டும் உயிர் பிழைத்ததும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக Nayna-வின் தந்தை தினேஷ் சோலங்கி பொலிஸார் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். அதில், எங்களுடைய குடும்பத்திற்கு கூட தெரியாமல் ஜெயஸ்ரீ என்பவர் தான் திருமணம் செய்து வைத்துள்ளார்.

அதன் பின்னர் என்னுடைய மகள் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்ததும், தினமும் கொடுமைப்படுத்தியதோடு விவாகரத்து செய்யுமாறு, அவருடைய மாமியார் ரவியை தொந்தரவு செய்துள்ளார். அதன் பின்னர் ரவி கடந்த 22-ம் தேதியன்று என்னுடைய மகளுக்கு விவாகரத்து கொடுத்துவிட்டார் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ரவியின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், சம்பவம் நடைபெற்ற அன்று ரவியும், Nayna உடன் இருந்துள்ளார். இருவருமே விஷம் அருந்தியுள்ளனர். ஆனால் இதில் Nayna மட்டும் உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.

கல்லாகி போன பெற்றோரின் மனம் : காட்டுக்குள் கதறி அழுத குழந்தை!!

ஓசூர் அருகே சூளகிரியில் உள்ள காட்டுப்பகுதியில் மழையில் நனைந்தபடி கதறி அழுதுகொண்டிருந்த 2 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே உள்ள மேலுமலை வனப்பகுதி, மிகவும் அடர்ந்த காட்டுபகுதியாகும். இந்த காட்டு பகுதியில் நின்று கொண்டு 2 வயதுள்ள சிறுமி ஒருவர் மழையில் நனைந்தபடி அழுதுகொண்டிருந்துள்ளார்.

சிறுமியின் சத்தம் கேட்டு அப்பகுதி வழியே சென்ற பாலு என்பவர் திரும்பி பார்த்துள்ளார். யாருமில்லாத இடத்தில சிறுமி மட்டும் தனியாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், யார் அழைத்து வந்தது என சிறுமியிடம் விசாரித்துள்ளார்

அதற்கு அந்த சிறுமி கன்னட மொழியில், தந்தை பெயர் அஞ்சப்பா, தாயாரின் பெயர் அனிதா என்றும் இருசக்கர வாகனத்தில் வந்ததாகவும் அழுதபடியே பதிலளித்துள்ளார். ஆனால் அந்த சிறுமிக்கு தன்னுடைய பெயரை சொல்ல தெரியவில்லை.

இதனை கேட்டு என்ன செய்வதென தெரியாமல் திகைத்த பாலு, உடனே சிறுமியை மீட்டு தனது நண்பர் கிருஷ்ணன் வீட்டில் ஒப்படைத்தார்.

பின்னர் அவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததோடு, திமுக முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் வீட்டில் குழந்தையை ஒப்படைத்தார்.

தற்போது இச்சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை பெற்றோர் தனியாக அடர்ந்த காட்டுப்பகுதியில் தனித்து விட்டு சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா வர்த்தகர் சங்கம் முதலிடம் பெற்ற மாணவியின் கல்வி நடவடிக்கைக்கான செலவுகளை பொறுப்பேற்க தீர்மானம்!!

2018ம் ஆண்டு இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் மூன்றாமிடத்தையும் வவுனியா மாவட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்றுக்கொண்ட வவுனியா சிவபுரம் அரசினர் தமிழக்கலவன் பாடசாலை மாணவி பாலகுமார் ஹரிதிக்ஹன்சுஜா 197 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து இன்று பிற்பகல் மாணவியின் வீட்டிற்குச் சென்ற வவுனியா வர்த்தகர் சங்கப்பிரதிநிதிகள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதுடன் குறித்த மாணவியின் கல்வி நடவடிக்கையினை, உயர் கல்வியைத் தொடர்வதற்கும் தொடர்ந்து முற்று முழுதான நிதி உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாக வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ்.சுஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வவுனியா வர்த்தகர் சங்கத்தலைவர் தெரிவிக்கும்போது, வவுனியா மாவட்டத்தில் 197 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ள வவுனியா சிவபுரம் மாணவி செல்வி பாலகுமார் ஹரிதிக்ஹன்சுஜாவினால் வவுனியா மாவட்டத்திற்கும் தனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அத்துடன் வர்த்தக சங்கப்பிரதிநிதிகளாகிய நாங்களும் மகிழ்வடைகின்றோம். வர்த்தகர் சங்கமாகிய நாங்கள் இம் மாணவி உயர் கல்வியைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கி பொறுப்பேற்றுக்கொள்கின்றோம்.

தொடர்ந்தும் குறித்த மாணவி தனது கல்வியை தடையின்றி தொடர்ந்து மேற்கொண்டு எமது மாவட்டத்திற்கும் எமது தாய் நாட்டிற்கும் சேவையாற்ற முன்வரவேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகின்றோம் என்று தெரிவித்துள்ளார். இன்றைய இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், வர்த்தகர் சங்கப்பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை குறித்த பாடசாலையில் 165 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட செல்வக்குமார் டிலானி என்ற மாணவியின் வீட்டிற்குச் சென்று மாணவியின் கற்றல் நடவடிக்கைத் தேவைகளுக்கு வர்த்தகப்பிரதிநிதிகள் பண உதவிகளையும் வழங்கிவைத்தனர்.

வவுனியா சிவபுரம் அரசினர் தமிழ்கலவன் பாடசாலை மிகவும் பின்தங்கிய பாடசாலை வசதியற்ற மாணவர்களே கற்றல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். 49 மாணவர்களைக்கொண்டுள்ள பாடசாலையிலிருந்து குறித்த மாணவி தேசிய ரீதியில் மூன்றாமிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் கைதிகளின் விடுதலையினை வழியுறுத்தி அனுராதபுரத்தில் போராட்டம்!!

அரசியல் கைதிகளின் விடுதலையினை வழியுறுத்தி அனுராதபுரம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (05.10.2018) மதியம் 12.00 மணியளவில் ‘அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய், புதிய சி.ரி.ஏ சட்டத்தினை உடனே நிறுத்து என்ற பல்வேறு வாசங்களை தாங்கிய தமிழ் பதாதைகளுடனும் சிங்கள மற்றும் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட பாதாதைகளை தாங்கியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், முற்போக்கு கூட்டணி, அனுராதபுர விவசாய அமைப்புக்கள் கலந்து கொண்டிருந்தன

போராட்டத்தின் போது வீதி போக்குவரத்திற்கு இடையுறு ஏற்படுத்த வேண்டாமென போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் தள்ளியதினால் பொலிஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கிடையே சிறு முரன்பாடு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சின்னப்பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் 21 வருடங்களுக்குப் பின்னர் சாதனை படைத்த மாணவி!!

வவுனியா சின்னப்பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் 21 வருடங்களுக்கு பின்னர் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவி ஒருவர் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளார்.

செல்வி ஜூவரட்ணம் ஆரணி தனது விடா முயற்சியினாலும் பாடசாலை அதிபர் திரு செல்வதேவன் அவர்களின் வழிகாட்டலினாலும் ஆசிரியை செல்வி சிவலிங்கம் சிந்துஜா அவர்களின் அயராத கடும் உழைப்பினாலும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்துள்ளார்.

குறித்த மாணவி எந்த ஒரு மேலதிக வகுப்புகளுக்கும் செல்லாமல் பாடசாலை ஆசிரியரிடம் மட்டுமே பாடங்களை கற்றார் என்பதோடு குறித்த ஆசிரியை கல்வியியல் கல்லூரியில் இருந்து பயிற்சி பெற்று தனது சேவையை ஆரம்பித்த முதல் வகுப்பு இது என்பதும் குறிப்பிடத் தக்கது.

வவுனியா நகர்ப்புற பாடசாலைகளை பின்தள்ளி முதலிடம் பிடித்த சிவபுரம் அ.த.க. பாடசாலை மாணவி!!

வவுனியா சிவபுரம் அ.த.க. பாடசாலை மாணவி பாலகுமார் ஹரித்திக்ஹன் சுஜா தரம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் 197 புள்ளிகளை பெற்று மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

வவுனியாவில் பின்தங்கிய கிராமமான சிவபுரம் கிராமத்தின் பாடசாலையில் கல்வி பயின்று மாவட்ட ரீதியில் அதிகூடிய புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

புலமைப்பரீட்சையில் மாவட்ட ரீதியாக சாதனை படைத்த மாணவி கருத்து தெரிவிக்கையில், பாடசாலையில் மாத்திரமே கல்வி பயின்று வந்ததாகவும் தனக்கு கல்வி கற்பதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர், பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்தார் அத்துடன் தனது இலட்சியம் எதிர்காலத்தில் வைத்தியராகி ஏழை கிராமங்களில் பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

சிவபுரம் பாடசாலையின் அதிபர் எஸ்.ஜெராட் கருத்து தெரிவிக்கையில் எமது பாடசாலையில் ஒன்பது மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியிருந்தனர் அதில் இரண்டு மாணவர்கள் விசேட சித்திகளை பெற்ற நிலையில் ஒருவர் மாவட்ட ரீதியில் சாதனை படைத்துள்ளார் என தெரிவித்தார்.

மாவட்ட ரீதியில் சாதனை படைத்த மாணவியின் தாயார் பா.கிருஸ்ணவேணி கருத்து தெரிவிக்கையில், எனது மகளின் சாதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மிகவும் சந்தோசமாக இருக்கிறது. எந்தவிதமான பிரத்தியோக வகுப்புக்களுக்கும் செல்லாமல் எனது மகள் சாதனை படைத்துள்ளார். பின்தங்கிய கிராமங்களில் பாடசாலை மாணவர்கள் கல்வியில் ஊக்குவிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

மாவட்ட ரீதியில் சாதனை படைத்த மாணவிக்கு மக்கள் வங்கி முகாமையாளரால் துவிச்சக்கரவண்டி மற்றும் பாடசாலை உபகரணங்கள், நினைவுப் பரிசில் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவி : வைத்தியராகி வறிய கிராமங்களுக்கு சேவை செய்வதே எனது நோக்கம்!!

வைத்தியராகி வறிய கிராமங்களுக்கு சேவை செய்வதே எனது நோக்கம் என தேசிய ரீதியில் மூன்றாம் இடமும், மாவட்ட மட்டத்தில் முதலாம் இடமும் பெற்ற வவுனியா சிவபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவி பாலகுமார் ஹர்த்திக் ஹன்சுஜா தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த புலமைப் பரிசில் பரீட்சையில் 197 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தையும், மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் வவுனியா சிவபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவி பா.ஹர்த்திக் ஹன்சிகா பெற்றுள்ளார். இந்த வெற்றி குறித்து மாணவி தெரிவிக்கையில்,

வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சையில் 197 புள்ளிகளைப் பெற்றுள்ளேன். எனது பாடசாலை பின்தங்கிய கிராமத்தில் உள்ள ஒரு பாடசாலை. நான் இந்த நிலையை அடைய அப்பா, அம்மா, அதிபர், எனது பாடசாலை ஆசிரியர்களுமே காரணம்.

நான் காலையில் ஒவ்வொரு நாளும் ஒரு மணித்தியாலம் படிப்பேன். பாடசாலையில் தரும் வேலைகளை இரவில் செய்வதுடன், அதிக நேரம் படிப்பேன். நான் வைத்தியராக வரவேண்டும் என்பதே எனது விருப்பம். வைத்தியராகி வறிய கிராமங்களுக்கு உதவி செய்வதே எனது நோக்கம் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, 1990 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை தரம் 5 வரை உள்ள நிலையில் 48 மாணவர்கள் கல்வி கற்பதுடன் 2012 ஆம் ஆண்டு ஒரு மாணவி புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த நிலையில் இம்முறையே குறித்த பாடசாலை சாதனையை நிலைநாட்டியுள்ளது.