முல்லைத்தீவு நெடுங்கேணி மாமடு, பழம்பாசி அ.த.க.பாடசாலை மாணவி துஷ்சாதனா 2018 தரம் 5புலமைப்பரிசில் பரீட்சையில் 195 புள்ளிகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் நிலையில் உள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதியான மாமடு,பழம்பாசி அ.த.க.பாடசாலை பௌதீக வழங்கள் குறைந்த பாடசாலையில் தந்தையைப் பிரிந்து தாயின் அரவனைப்பில் வாழ்ந்து வரும் மாணவியை பாடசாலை அதிபருடைய ஊக்கமும் தரம் 5 வகுப்பாசிரியரின் அயராத உழைப்பின் பலனாக முல்லைத்தீவு மாவட்டத்திலேயே முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்ட மாணவிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
2018ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி உள்ள நிலையில் அனைத்து மாணவர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தியதை அவர்களின் பெறுபேறுகள் மூலம் காணக்கூடியதாக உள்ளது.
தமக்கு கல்வி கற்றுத்தந்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மாணவர்கள் பெறுமை தேடித்தந்துள்ளதுடன், அவர்களுக்கு அனைத்து மட்டங்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் இலங்கையில் அனைத்து பகுதிகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், மலையகத்தில் இருக்கும் ஒரு தமிழ் மாணவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
லிந்துலை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் செல்வகுமார் நிரஞ்சன் என்ற விசேட தேவைக்குரிய சிறுவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று அங்குள்ள அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார்.
22 மாணவர்கள் குறித்த பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய போதும், அதில் இம்மாணவர் மட்டுமே சித்தி பெற்றுள்ளார். அத்துடன் 18 மாணவர்கள் 70க்கும் மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
இதில் செல்வகுமார் நிரஞ்சன் என்ற சிறுவன் பிறப்பிலிருந்தே முதுகு எலும்பு பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் பெற்றோரின் உதவியுடனேயே பாடசாலைக்கு வருகின்றார்.
இவருடைய பெற்றோர் தோட்டத்தொழில் செய்து தமது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இவர் 166 புள்ளிகளைப் பெற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றுள்ள விடயம் அனைவர் மத்தியிலும் பெரிதும் பேசப்படுகின்றதுடன், குறித்த மாணவனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
சேமமடு சண்முகானந்தா பாடசாலையில் தரம் -5 புலமை பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் மாணிக்கவாசகர் அபிலன்(175),
இலங்கேஸ்வரன் கிருசாலினி(167)
ஆகியோர் பரீட்சையில் சித்தி பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
அவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர் செல்வி த. சோபிதா அவர்களுக்கும் பாடசாலை சமூகத்தின் வாழ்த்துக்கள் குறிப்பு அதி கஸ்ட பிரதேசத்தில் படிக்கும் இவர்கள் எந்த தனியார் வகுப்புகளுக்கும் சென்றதில்லை.
வெளியாகியுள்ள புலமை பரிசில் முடிவுகளின் படி வவுனியா சிவபுரம் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பாலகுமார் ஹரித்திக்ஹன் சுஜா என்ற மாணவி 197 புள்ளிகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தையும் தமிழ் மொழியில் 2ம் இடத்தையும் பெற்று மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
குறித்த சிறுமியின் தந்தை சாரதியாக பணிபுரிந்து வருவதுடன், அந்த மாணவி கல்வி கற்ற சிவபுரம் அ.தக. பாடசாலை கஸ்ட பிரதேச பாடசாலையாக காணப்படுகின்றது.
பின்தங்கிய கிராமத்தில் இருந்து கல்விகற்று தமது மாணவி சாதனைபடைத்திருப்பது பாடசாலைக்கு மட்டுமல்லாமல் மாவட்டத்திற்கே பெருமை சேர்ந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் பீற்றர் ஜெரா தெரிவித்துள்ளார்.
குறித்த பாடசாலையில் 9 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோன்றியதுடன் இருவர் சித்திபெற்றுள்ளனர். ஹரித்திக் ஹென்சுஜா, செல்வகுமார் டிலானி ஆகிய மாணவிகளே சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பாடசாலையின் ஆசிரியரான முத்துகுமார் லோகேஸ்வரியின் முயற்சி காரணமாகவே தமது மகள் சித்தி பெறமுடிந்ததாக மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார்.
இப் பாடசாலையில் மொத்தமாக 49 மாணவர்கள் கல்வி கற்கின்ற அதேவேளை 6 ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர்.
பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த இம் மாணவியை வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்.
நெடுங்கேணி மகா வித்தியாலய மாணவர்களான சி.கோமகள்,கி.புரட்சிவாணன்,பா.அகல்யா,பா.ஆரபி,ஆ.ஆரபி ஆகியோர் 2018 தரம் 5புலமைப்பரிசில் பரீட்சையில் 182,170,167,166,167 புள்ளிகளைப் பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்து உள்ளனர்.அவர்களுக்கு எமது பாடசாலை சமூகம் சார்பான பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். 2017 தொடக்கம் 2018 வரை இம்மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை நடாத்தி உதவிய நெடுங்கேணி மகாவித்தியாலய பிரித்தானியா கிளை பழைய மாணவர் சங்கத்துக்கு எமது பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கின்றோம்.
Name :KOMAKAL SIVAKUMAR
Index Number :8894914
Marks :182
District Medium Rank :53
Name :KIRUSNAKUMAR PURADSIVANAN
Index Number :8894736
Marks :170
District Medium Rank :197
Name :ARAVI ANANTHARASA
Index Number :8894841
Marks :167
District Medium Rank :252
Name :AKALYA PANDIYARAJA
Index Number :8894817
Marks :167
District Medium Rank :252
Name :ARABI BASKARAN
Index Number :8894833
Marks :166
District Medium Rank :275
தெலுங்கானா மாநிலத்தில் உயர்ந்த சாதி பெண்ணை காதலித்து ஓடிப்போக முடிவு செய்த நபரை அப்பெண்ணின் கொடூரமாக அடித்துள்ளனர்.
தாழ்ந்த சாதியை சேர்ந்த சாய்கிரண் என்பவர் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள உயர்ந்த சாதி பெண் ஹரிதாவை காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் பள்ளியில் இருந்தே ஒருவருக்கொருவர் தெரியும். இந்நிலையில், ஹரிதாவை தனது வீட்டுக்கு அழைத்து சென்று, நான் இப்பெண்ணை திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என தனது அம்மாவின் கூறியுள்ளார் சாய்கிரண்.
இதனைகேட்டு அதிர்ச்சியடைந்த சாய்கிரணின் தாய், அவள் உயர்ந்தசாதியை சேர்ந்தவள், இது நமது குடும்பத்துக்கு சரிப்பட்டு வராது, அப்பெண்ணை கொண்டுபோய் அவளது வீட்டில் விட்டுவிடு என கூறியுள்ளார்.
இதற்கு சாய்கிரண் மறுக்கவே, ஹரிதாவை அழைத்துக்கொண்டு அவளது வீட்டில் கொண்டுபோய்விட்டு, நடந்தவை குறித்து விளக்கம் அளித்து, இப்படியொரு சம்பவம் நடந்ததை மறந்துவிடுங்கள் என அப்பெண்ணின் வீட்டாரிடம் தெரிவித்துவிட்டு வந்துள்ளார் சாய்கிரணின் தாய்.
இப்படி ஒரு சம்பவத்தை அடுத்து ஹரிதாவை வீட்டுக்குள் அடைத்துவைத்த பெற்றோர், அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இந்த தகவலை ஹரிதா, காதலன் சாய்கிரணிடம் தெரிவித்துள்ளார்.
இதனால், ஓடிப்போக முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் ஹரிதா குடும்பத்தினர் ஒரு வாரமாக சாய்கிரணை நோட்டம் விட்டுள்ளனர். இவர்கள் ஓடிப்போக இருப்பதை அறிந்துகொண்ட ஹரிதாவின் பெற்றோர், ஆட்களை ஏற்பாடு செய்து சாய்கிரணை அடித்து உதைத்துள்ளனர்.
கண் மற்றும் கால்களை உடைத்தும், செருப்பால் அடித்தும், தாழ்ந்த சாதி நபருக்கு எங்கள் உயர்ந்த சாதி பெண் வேண்டுமா என கேட்டு அடித்ததில், சாய்கிரண் சம்பவ இடத்தில் சுயநினைவை இழந்தார்.
இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஹரிதாவின் பெற்றோர் மீதும் புகார் அளித்துள்ளதையடுத்து, ஹரிதாவின் தந்தையிடம் இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டின் போது தன்னுடைய குழந்தையை காப்பாற்ற முற்பட்ட தாய் 12 தோட்டாக்களை தன்னுடைய மார்பு பகுதியில் வாங்கியபடியே துடிதுடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கவை சேர்ந்த Dawn Boyd என்ற 22 வயது பெண் தன்னுடைய 11 மாத குழந்தை மற்றும் நண்பர்கள் 3 பேருடன் இரவு 9.30 மணியளவில் நண்பரின் வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது வேகமாக காரில் வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென துப்பாக்கியை கொண்டு கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்துள்ளார்.
இதனை பார்த்து பதறி போன Dawn, உடனடியாக தன்னுடைய குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தார். இதில் பறந்து வந்த குண்டுகள் அனைத்தும், Dawn உடைய மார்பு, கை, கால்களில் பாய்ந்தது.
அதேசமயம் அவருடன் நின்று கொண்டிருந்த 35 வயது நபருக்கு இடது கையிலும், 21 வயது இளைஞருக்கு கால் பகுதியிலும் 24 வயது நபருக்கு மார்பு பகுதியிலும் குண்டு பாய்ந்தது.
இந்த சம்பவம் அறிந்த விரைந்து வந்த பொலிஸார் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததால், Dawn அடுத்த சில நிமிடங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதேபோல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 வயதுடைய அவருடைய நண்பர் அடுத்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் அந்த 11 மாத குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்தது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார் இதுவரை சம்மந்தப்பட்ட நபர் மற்றும் கார் குறித்த எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து Dawn பெற்றோர் கூறுகையில், நல்ல வேளையாக எங்களுடைய பேத்திக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அதற்காக நாங்கள் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். ‘என் மகள் குழந்தைகளை காப்பாற்ற முயன்றபோது, அவள் உயிரை இழந்துவிட்டாள், அவளை ஒரு கதாநாயகியாக நாங்கள் கருதுகிறோம்.’ என கூறியுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மனைவி இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்து கணவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,
சண்முகம் (56) என்பவரது மனைவி பாலாமணி(55). இன்று பாலாமணி தனது தாய் மாராத்தாளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த கார் மீது இவர்களது வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பாலாமணி உயிரிழந்தார்.
இந்த தகவலறிந்த பாலாமணியின் கணவர் சண்முகம், தனது மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவர் அப்படியே உயிரிழந்துள்ளார்.
இவர்கள் இருவரும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்த தம்பதியினர் இறப்பிலும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
மும்பை மின்சார ரயிலில் பயணித்த யுவதி ஒருவர் ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிர் தப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ரயில் கதவருகே நின்றுக் கொண்டு பயணித்த யுவதியொருவர், கையை வெளியே நீட்டியவாறு பயணம் செய்துள்ளார்.
இதன்போது எதிர்பக்கத்திலிருந்து மற்றுமொரு ரயில் வேகமாக அருகே பயணித்த நிலையில், வீசிய பலத்த காற்றின் காரணமாக நிலை தடுமாறிய யுவதி ரயிலிலிருந்து தவறி விழுந்துள்ளார்.
தவறி விழுந்து மிதிப்பலகையை பிடித்து தொங்கிக் கொண்டிருந்த யுவதியை அருகிலிருந்த சக பயணிகள் போராடி காப்பாற்றியுள்ளனர்.
இந்த காட்சி சக பயணியொருவரின் இதனை படம்பிடித்து வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் அரியானா மாநிலத்தில் 3 வயது சிறுவன் கொடிய விஷம் கொண்ட இரண்டு பாம்புகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காணிளியில், அந்த 3 வயது சிறுவன் பாம்புகளை எந்த பயமும் இன்றி தூக்கி விளையாடுகிறான், அதன் மீது உட்காருகின்றான்.
இந்த காட்சிகளை பலர் பதற்றத்துடன் கண்டு நிர்க்கின்றனர். ஒரு கட்டத்தில் பாம்பு ஒன்றை அள்ளி எடுத்த சிறுவன், அதை கோபத்துடன் தூக்கி வீசுகின்றான்.
மகனின் செயல் கண்ட அவனது தந்தை, மகனை கண்டிக்கிறார், பாம்பை அவ்வாறு தூக்கி வீசாதே என்கிறார்.
இந்த காட்சிகளை காண்டு நின்ற மக்கள், அந்த சிறுவனின் குடியிருப்பில் பாம்பு வளர்ப்பது எங்கள் அனைவருக்கும் தெரியும், அந்த சிறுவன் இதேபோன்று தான் எப்போதும் பாம்புகளுடே விளையாடுவான் என்றனர்.
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் 11 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இன்றி தவித்த பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திரா மாநிலத்தின் பலாசா பகுதியில் குடியிருந்து வருபவர்கள் கனகதுர்கா(33) மற்றும் அவரது கணவர் வெங்கட சத்யநாராயணா ஆகியோர்.
திருமணமாகி இருவருக்கும் 11 ஆண்டுகள் கடந்த நிலையிலும் குழந்தைகள் இல்லை என்ற கவலை கனகதுர்காவை கவலையில் ஆழ்த்தி வந்துள்ளது.
இதே காரணத்தால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டும் வந்துள்ளது.
இந்த நிலையில் புதனன்று காலை கண்விழித்து பார்த்த கணவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கனகதுர்கா மின்விசிரியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவும், சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் மேற்கொண்ட சோதனையில் கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.
அதில் திருமணமாகி 11 ஆண்டுகள் கடந்த பின்னரும் குழந்தை இல்லை என்ற கவலை தம்மை வாட்டி வந்ததாகவும், அதனாலையே தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் கடிதம் மற்றும் கணவரின் மொழியில் சந்தேகம் இருப்பதாக கருதிய பொலிசார், வழக்கை தீவிரமாக விசாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.
திருமணமான ஒரு மாதத்தில் வெளிநாட்டவர் ஒருவர், மர்மமான முறையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் 40 வயதான ஆதாம் கிராஸ்வார்ட். சென்னையில் உள்ள தனியார் இசை பயிற்சி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அந்த நிறுவனத்தில் இசை பயிற்சிக்கு வந்த சென்னை, கொட்டிவாக்கம் பகுதி இளம்பெண் ரஷி (24) என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. மகளின் காதல் விவகாரம் குறித்து பெற்றோருக்கு தெரியவந்தது.
உடனே ரஷியின் பெற்றோர் ஆதாம் கிராஸ்வார்டை வீட்டிற்கு அழைத்து விசாரித்தனர். பின்னர், ஆதாம் கிராஸ்வார்டை அவரது பெற்றோரை அழைத்து வந்து முறைப்படி பெண் கேட்க ரஷியின் பெற்றோர் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் ஆதாம் ஏற்கெனவே திருமணமானவர் என்ற தகவல் ரஷியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் தங்கள் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க ரஷியின் பெற்றோர் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஆதாம் தமது முன்னாள் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்துள்ளார். தொடர்ந்து கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் இரு வீட்டார் சம்மதத்துடன் தனது காதலி ரஷியை திருமணம் செய்துள்ளார் ஆதாம்.
திருமணத்தை அடுத்து தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
சம்பவத்தன்று இரவு கணவரை திடீரென்று தேடிய ரஷி, அறை ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான வகையில் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனே, இதுகுறித்து கானத்தூர் காவல் நிலையத்தில் ரஷி புகார் அளித்தார். பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆதாம் கிராஸ்வார்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.
தற்கொலை தொடர்பாக அவரது மனைவி ரஷி மற்றும் அவரது பெற்றோரிடம் பொலிசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வலிப்பு நோய் மற்றும் மூளை பாதிப்புக்கு உள்ளான தனது 10 வயது மகனை , கருணைக் கொலை செய்ய அனுமதிக்க கோரி கடலூரை சேர்ந்த திருமேனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மகன் வலிப்பு நோயால் துடிப்பதை பார்ப்பது வேதனையாக உள்ளது, எனவே மகனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் என அனுமதி கோரியுள்ளனர்.
பெற்றோர் அளித்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மருத்துவ அறிக்கையை சமர்பிக்க உத்தரவிட்டனர். சென்னை அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அதன்படி இன்று மருத்துவ அறிக்கை வந்தது. மருத்துவ அறிக்கையில் சிறுவனை குணப்படுத்தமுடியாது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை படித்த நீதிபதி கிருபாகரன் கண்ணீர் சிந்தினார்.
சிறுவனை பராமரித்துக் கொள்ள தொண்டு நிறுவனம் தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்க, அச்சிறுவனின் தந்தை மறுத்து விட்டார்.
சிறுவனின் பெற்றோருக்கு மாதாந்திர நிதியுதவி வழங்க முடியுமா , மருத்துவ உதவி வழங்க முடியுமா என்பது குறித்து பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் பல ஆண்களுடன் தாய் சுற்றித்திரிந்த காரணத்தால் கோபம் கொண்ட மகன் தாயை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
லட்சுமி என்பவரது கணவன் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்துசென்றுவிட்டதால் இவர் தனது இரண்டு மகன்களையும் தையல் வேலை செய்து காப்பாற்றி வந்துள்ளார்.
மூத்தமகன் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 17 வயது உடைய இளைய மகன் திருப்பூரில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2 ஆம் திகதி லட்சுமி கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்து மூத்த மகன் அதிர்ச்சியடைந்தார்.
விசாரணையில், கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இரண்டாவது மகன், பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இந்த விவரத்தை அந்த மாணவர் தனது தாயாரிடம் தெரிவித்து, அந்த மாணவியை திருமணம் செய்து கொள்ள ஒப்புதல் கேட்டுள்ளார். அப்போது மாணவனின் தாயார், அந்த மாணவிக்கு வயது அதிகம் இருப்பதால் வயது வித்தியாசம் உள்ளது.
எனவே திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது மாணவனுக்கும், அவருடைய தாயாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த மாணவன் தனது தாயாரை பார்த்து “நீ என்ன யோக்கியமா, கண்ட கண்ட ஆண்கள் கூட சுற்றித்திரிகிறாய்” என்று கூறியுள்ளான்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த மாணவன், வீட்டில் இருந்த கயிற்றால் தயாரின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி அந்த பகுதியில் உள்ள கோவிலில் இரவு தங்கி உள்ளான்.
இதற்கிடையில் ஊர் பொதுமக்களுக்கு நடந்த விவரம் தெரிந்து விட்டதால் பயந்துபோய் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்துள்ளான்.
நடந்த சம்பவங்கள் அனைத்தையும் வாக்குமூலமாக பொலிசிடம் அளித்துள்ளான். இது குறித்து பொலிசார் கொலை வழக்குப்பதிவு செய்து அந்த மாணவனை கைது செய்து கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்