புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியான வெட்டுப் புள்ளி விபரம்!!

நடைபெற்று முடிந்த 2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட ரீதியாக வெட்டுப் புள்ளிகளும் பரீட்சைகள் திணைக்களத்தால் வௌியிடப்பட்டுள்ளன.

அதன்படி, மாவட்ட ரீதியாக தமிழ் மொழி மூலமான வெட்டுப் புள்ளிகள் விபரம் வருமாறு,

கொழும்பு – 165
கம்பஹா – 165
களுத்துறை – 165
கண்டி – 165
மாத்தளை – 165
நுவரெலியா – 162
காலி – 165
மாத்தறை – 165
ஹம்பாந்தோட்டை – 160
யாழ்ப்பாணம் – 164
கிளிநொச்சி – 163
மன்னார் – 162
வவுனியா – 164
முல்லைத்தீவு – 163
மட்டக்களப்பு – 164
அம்பாறை – 163
திருகோணமலை – 162
குருணாகல் – 165
புத்தளம் – 162
அநுராதபுரம் – 162
பொலன்னறுவை – 162
பதுளை – 163
மொனராகலை – 162
இரத்தினபுரி – 162
கேகாலை – 165

வவுனியா சிவபுரம் ஆரம்ப பாடசாலை மாணவி 197 புள்ளிகள் பெற்று தேசிய ரீதியில் 2ம் இடம் பெற்று சாதனை!!

வவுனியா சிவபுரம் ஆரம்ப பாடசாலை மாணவி பாலக்குமார் ஹரித்திக்ஹனுசுஜா 197 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் தமிழ் மொழியில் இரண்டாம் இடத்தையும் வவுனியா மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

நடைபெற்று முடிந்த 2018ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழில் இரு மாணவர்கள் தமிழ் மொழி மூலம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்கள்.

யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மற்றும் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 198 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இதில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலையின் மாணவன் மகேந்திரன் திகலோலிபவன் மற்றும் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையின் மாணவன் நவஸ்கன் நதி ஆகிய இருவரும் 198 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

தமிழ் மொழியில் இரண்டாம் இடத்தை வவுனியா சிவபுரம் ஆரம்ப பாடசாலை மாணவி பாலக்குமார் ஹரித்திக்ஹனுசுஜா பெற்றுள்ளார்.

முழுமையான தகவல்களுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

சாதனை படைத்த இம் மாணவிக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் முதலிடம் பிடித்த யாழ். மாணவர்கள்!!

நடைபெற்று முடிந்த 2018ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழில் இரு மாணவர்கள் தமிழ் மொழி மூலம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்கள்.

யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மற்றும் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 198 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இதில், யாழ். இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த மகேந்திரன் திகலோலிபவன் மற்றும், யாழ். சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை மாணவி நவஸ்கன் நதி ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர்

நடைபெற்று முடிந்த 2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் பிலியந்தலை, சேமவீர சந்திரசிறி வித்தியாலயத்தின் மாணவன் புமித் மெத்னுல் விதானகே மற்றும் வெயாங்காடை புனித மெரி மகா வித்தியாலயத்தின் குருகலசூரிய சனுப திமத் பெரேரா ஆகிய இருவரும் 199 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தை யாழ். மாவட்ட மாணவர்கள் இருவர் பெற்றுள்ளனர்.

யாழ். இந்து ஆரம்ப பாடசாலையின் மாணவன் மகேந்திரன் திகலோலிபவன் மற்றும் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையின் மாணவன் நவஸ்கன் நதி ஆகிய இருவரும் 198 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

சற்று முன் வெளியானது புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்!

2018ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 3,55,326 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வவுனியா பாடசாலைகளிலிருந்து 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் அவர்களது பெறுபேறுகளை எமது நியூஸ் வன்னி இணையதளத்தில் சற்று நேரத்தில் பார்வையிடலாம் என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

இலங்கையில் எந்தவொரு கிரிக்கெட் வீரரும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடவில்லை!!

இலங்கையில் எந்தவொரு கிரிக்கெட் வீரரும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடவில்லை என ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கடந்த பத்தாண்டு காலப் பகுதியில் எந்தவொரு கிரிக்கெட் வீரரும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதில்லை என்பதனை பொறுப்புடன் கூறுகின்றேன்.

அரசியல் தேவைகளுக்காக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நாட்டின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட கருத்து கண்டிக்கப்பட வேண்டியது.

கிரிக்கெட் வீரர்கள் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டமைக்கான எந்தவொரு சாட்சியங்களோ, ஆதாரங்களோ சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கோ, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கோ கிடைக்கவில்லை.

அல் ஜசீரா தொலைக்காட்சி போர் இடம்பெற்ற காலத்திலும் இவ்வாறு நாடு மீது சேறு பூசியது. அதேபோன்று தற்பொழுது கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பில் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் முன்னாள் வீரர்களான அர்ஜூன ரணதுங்க, அரவிந்த டி சில்வா ஆகியோர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக திலங்க சுமதிபால குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனநோயாளிகளாக மாறும் இலங்கையர்கள் : அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட வைத்தியர்!!

இணைய பாவனை காரணமாக இலங்கையர்கள் அதிகளவில் மனநிலை பாதிக்கப்படுவதாக மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் ஊடகங்கள், இணையம் போன்றவை முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதும், அவற்றுக்கு மக்கள் அடிமையாதலும், அபாயகரமான மட்டத்தை அடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலத்திரனியல் ஊடகங்கள், இணையம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகளைத் தாண்டி, சமூகத்தில் கூடுதலான தீமைகள் ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளதென உளவியல் நிபுணர் வைத்தியர் அபேக்ஷா ஹேவாகீகன தெரிவித்தார்

இணைய துஷ்பிரயோகமும், இணையத்திற்கு அடிமையாதலும், போதைப்பொருள் துஷ்பியோகத்திற்குச் சமமான பாதக விளைவுகளை ஏற்படுத்திக்கூடியன. எனவே, இளம் தலைமுறை மத்தியில் கல்விக்காக புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது பற்றி கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

தமது நாளாந்த செயற்பாடுகளை பாதிக்கும் வகையில் இணையத்தையோ, முகநூலையோ, திறன்பேசிகளையோ பயன்படுத்துதல் அடிமைத்தனமாகும்.

இரண்டு வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு இலத்திரனியல் ஊடக கருவிகளையோ, திறன்பேசிகளையோ பயன்படுத்த இடமளிக்கக்கூடாது. அதீத இணையப் பாவனை மூலம் மன அழுத்தம், பார்வைக் கோளாறுகள், செயற்றிறனில் வீழ்ச்சி, தூக்கமின்மை, முள்ளந்தண்டு நலிவடைதல் முதலான தீய விளைவுகள் ஏற்படுவதாக வைத்தியர் அபேக்ஷா ஹேவாகீகன தெரிவித்தார்.

இலங்கையில் ஒரு நாளைக்கு 8 பேர், வருடமொன்றுக்கு 3000 பேர்!!

நாட்டில் இடம்பெறும் ஒரு வீதி விபத்திற்காக அரசாங்கத்திற்கு 10 இலட்சம் ரூபா செலவிட நேர்கின்றதாக வாகன மற்றும் போக்குவரத்து பிரிவின் பிராந்திய பாதுகாப்பு பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இலங்கையில் நாளொன்றுக்கு வீதி விபத்தின் காரணமாக 8 பேரளவில் மரணிக்கின்றனர். அத்துடன், 20 பேர் வரை காயமடைகின்றனர். 100 முதல் 105 வரை விபத்துகள் பதிவாகின்றன.

குறித்த வீதி விபத்திற்காக செல்லும் பொலிஸ் அதிகாரிக்கும், நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரிக்கும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் என பணம் செலவாகின்றது.

வீதி விபத்து தொடர்பான ஒரு வழக்கு 5 வருடங்களுக்கு நீடிக்கின்றது. ஒரு நாளைக்கு 8 பேர் எனின், வருடமொன்றுக்கு 3000 பேரளவில் வீதி விபத்துகளினால் மரணிக்கின்றதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தாயினால் கொடுமைப்படுத்தப்பட்ட 11 வயது சிறுமி!

ஒரு குழந்தையினை நல்ல பிரஜையாக உருவாக்குவதற்கு பெற்றோர் பல்வேறு அர்ப்பணிப்புகளை செய்கின்றனர், அதன்மூலம் சிறந்த பண்பான சமூகத்தினை உருவாக்குகின்றனர்.

ஆனால் சிலர் தமது குழந்தைகளிடமே தமது வக்கிரபுத்திகளை காட்டி எதிர்காலத்தில் அவர்களை இந்த நாட்டில் ஒரு குற்றவாளியாகவோ சமூகத்திற்கு எதிரானவர்களாகவோ உருவாக்கும் பெற்றோரும் இந்த சமூகத்தில் இருக்கவே செய்கின்றனர்.

தான்பெற்று வளர்த்த பிள்ளையினையே தாய் ஒருவர் சூடுவைத்து வந்த சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

11வயதுடைய சுதாகரன் மேனகா என்னும் சிறுமியே தாயினால் இரும்புக் கம்பியினை காய்ச்சி சூடுகள் வைக்கப்பட்ட நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எருவில் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கற்றுவரும் குறித்த சிறுமி, பாடசாலைக்கு சென்றபோது காயங்களை அவதானித்த பாடசாலை ஆசிரியர்கள் குறித்த சிறுமியினை களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த சிறுமியின் இரண்டு கைப்பகுதியிலும் வாய்ப்பகுதியில் இந்த சூடு வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கு.சுகுணன் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு என்பனவற்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சற்று முன் வெளியானது புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்!!

2018ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 3,55,326 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

திருமணமான சில மணி நேரத்தில் உயிரிழந்த கணவன் : கோமாவில் இருந்து எழுந்த மனைவியின் உருக்கமான பதிவு!!

கானாவில் திருமணமான அன்றே விபத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில், கோமாவில் இருந்த மனைவிக்கு நினைவு திரும்பியுள்ளது.

திசு ககுரு என்ற இளைஞருக்கும் ஜானதில் என்ற பெண்ணுக்கும் கடந்த 30-ஆம் திகதி திருமணம் நடந்தது. இதையடுத்து அன்று மாலையே இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட இருந்தது.

இதில் கலந்துகொள்ள ககுருவும், ஜானதிலும் காரில் வந்து கொண்டிருந்த போது கார் வேகமாக மரத்தில் மோதியது. இதில் புதுமாப்பிள்ளை ககுரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து படுகாயமடைந்த அவர் மனைவி ஜானதில் மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது கோமாவில் இருந்து வெளிவந்துள்ளார் ஜானதில். இதையடுத்து மறைந்த தனது கணவர் குறித்து உருக்கமான பதிவை பேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ளார்.

அதில், பூமியில் உள்ள மனிதர்களை வணங்க அல்லா அனுமதி கொடுத்தால் நான் உங்களை தான் முதலும், கடைசியுமாக வணங்குவேன்.

கடவுளுக்கு பயப்படும் உங்களை போன்ற நபர் கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இளைஞரை கொலை செய்து உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்ட சிறுமி : அதிர்ச்சி வீடியோ!!

ரஷ்யாவில் காதலனுடன் சேர்ந்து இளைஞர் ஒருவரை கொலை செய்து உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்ட 12 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவருடைய பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது சிறுமியின் வீடு அமைந்திருக்கும் Sochi பகுதியில் இருந்து 1500 மைல் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுமி, 22 வயதுள்ள இளைஞருடன் வசித்து வருவதாக தெரியவந்தது.

மேலும் அந்த சிறுமி தன்னுடைய முகநூல் பக்கத்தில், “நான் ஒரு வேட்டைக்காரனை விரும்புகிறேன். நான் யாருக்காகவும் அவரை விட்டு கொடுக்க மாட்டேன். அவரை தவிர வேறு யாரும் எனக்கு தேவையில்லை” என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் wooden கிராமபுற பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து புகை வருவதாக ஒருவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சோதனை மேற்கொண்ட பொழுது, மனித மூளை சமைக்கப்பட்ட நிலையிலும், உடலின் பல்வேறு பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டு இருப்பதையும் பார்த்து அதிர்ச்சிடைந்துள்ளார்.

பின்னர் இதில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அந்த சிறுமி கோடரியை கொண்டு Alexander Popovich என்ற 21 வயது இளைஞரை கொலை செய்ததாகவும், அவருக்கு உடந்தையாக 22 வயதான வேட்டைக்காரன் இருந்ததும் தெரியவந்தது.

மேலும் அந்த சிறுமியை வேட்டைக்காரன் துஸ்பிரயோகம் செய்திருப்பதும் தெரியவந்து. இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், இதில் குற்றவாளியின் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் இதில் ஈடுபட்ட சிறுமி, தற்போது பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.

இறந்த தாயின் கைகளில் அழுதுகொண்டிருந்த குழந்தை : 15 வருடங்களுக்கு பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

பிரித்தானியாவில் தாயின் தற்கொலை சம்பவத்தின் போது உயிர் பிழைத்த 3 வயது குழந்தை 15 வருடங்களுக்கு பின்னர் அதேபோல தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த Maxine Carr என்ற பெண் கடந்த 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 தேதியன்று நெடுஞ்சாலை பகுதியில் உள்ள 100 அடி உயரம் கொண்ட பாலத்திலிருந்து தன்னுடைய குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார்.

அந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் கையில் வைத்திருந்த 3 வயது குழந்தை மட்டும் கை, விலா, தாடை மற்றும் மண்டை ஓடு உடைந்த நிலையில் உயிர் பிழைத்தது. பின்னர் மீட்கப்பட்ட அந்த குழந்தை சிகிச்சைக்கு பின்னர் பாட்டி மற்றும் தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

Maxine இறந்ததற்கான காரணம் எதுவும் சரியாக தெரியாத நிலையில், அவருடைய முன்னாள் காதலன் குழந்தையை கடத்தி ஸ்பெயினிற்கு எடுத்து செல்ல முற்பட்டதாலே அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 15 வருடங்களுக்கு பின்னர் நன்கு வளர்ந்திருந்த Yazmina Howard (18), அவருடைய தாய் தற்கொலை செய்துகொண்டு இறந்த அதே இடத்தில் மீண்டும் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

6 வயது மூத்த விதவை பெண்ணை திருமணம் செய்த இளைஞர் : நேர்ந்த விபரீத சம்பவம்!!

தமிழகத்தின் திருநெல்வேலியில் தன்னை விட வயதில் மூத்த விதவை பெண்ணை திருமணம் செய்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

முத்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் பாரதிராஜா (19). இவருக்கும் ராஜாங்கபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்து விட்டார். 5 வயதில் ஒரு மகன் உள்ளான். மேலும் பாரதிராஜாவை விட அவர் 6 வயது மூத்தவராவார்.

இந்நிலையில் அப்பெண்ணை கோவிலில் வைத்து சில தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்த பாரதிராஜா அவருடன் தனியாக குடும்பம் நடத்தி வந்தார்.

இது பாரதிராஜாவின் வீட்டுக்கு தெரியவந்த நிலையில் அவர்கள் கண்டித்தனர். இதனால் விரக்தியடைந்த பாரதிராஜா விஷம் குடித்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது. சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்

வவுனியா விக்ஸ்காட்டு கிராமத்தில் பதற்றம் : பாதுகாப்புப் பணியில் பொலிஸார்!!

வவுனியா பாரதிபுரம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட விக்ஸ்காட்டு கிராமத்தில் இன்று (04.10.2018) பிரதேச செயலகத்தினால் பதிவு செய்யப்பட்ட 47 குடும்பங்களுக்கு காணி அளவீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 2000ம் ஆண்டு காலப்பகுதியில் பல்வேறு பகுதிகளிலிருந்து அகதிகளாக வந்த மக்கள் விக்ஸ்காட்டுப்பகுதியில் குடியேறிய நிலையில் 2009 ஆம் ஆண்டில் வன இலாகாவினர் விக்ஸ் காட்டுப்பகுதியானது தங்களுக்கு சொந்தமானது என தெரிவித்து அப்பகுதியிலிருந்து மக்களை வேளியேற்ற நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் விக்ஸ் காட்டுப்பகுதியில் குடியேறிய மக்கள் 2016 ஆண்டுவரை தொடர் போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

இதன் காரணமாக பிரதேச செயலகமானது ஆரம்பத்தில் குடியேறிய 47 குடும்பங்களுக்கு காணி பெற்று தருவதாக வாக்களித்திருந்த நிலையில் இன்றையதினம் காணிகள் அளவீடு செய்யப்பட்டு அம்மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் குடியிருக்காத எழு குடும்பங்களுக்கு காணி வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தி வைக்கப்பட்டதால் அக்குடும்பத்தினர் பிரதேச செயலகத்தின் காணி உத்தியோகத்தருடன் முரண்பட்ட நிலையில் நெடுக்குளம் பொலிசாரின் பாதுகாப்புடன் காணிகள் அளவீடு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களிடம் போலிசார் மற்றும் பிரதேச கிராம உத்தியோகத்தர் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் குறித்த 47 குடும்பங்களில் எவராவது குடியேறாமல் இருந்தால் அக்காணியை பாதிக்கப்ட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் காணிப்பிரச்சனை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

காதலனை சந்திக்க செல்ல தாயிடம் பொய் கூறிய 12 வயது சிறுமி!!

சர்வதேச சிறுவர்கள் தினமான கடந்த முதலாம் திகதி 12 வயது சிறுமியை ஹொட்டலுக்கு அழைத்துச்சென்ற இளைஞனையும் ஹொட்டல் உரிமையாளரையும் கைது செய்துள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி அதே பிரதேசத்தில் வியாபார நிலையமொன்றில் வேலை செய்யும் 22 வயது இளைஞனை காதலித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் சிறுமி தனது தாயின் தொலைபேசி ஊடாக காதலனுடன் நீண்ட நாட்கள் தொடர்புகொண்டு வந்துள்ளார்.

காதலனின் வேண்டுகோளுக்கமைய சிறுமி முதலாம் திகதி அக்குரஸ்ஸ நகரிற்கு வந்துள்ளார். சிறுமி தனது காதலனை அக்குரஸ்ஸ பேருந்து நிலையத்திற்கு அருகில் சந்தித்துள்ளனர்.

இருவரும் சந்தித்த பிறகு பங்கம என்ற பிரதேசத்தில் அமைந்துள்ள ஹொட்டலுற்கு இளைஞன் சிறுமியை அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் நிஷங்கவிற்கு கிடைத்த இரகசிய தொலைபேசி அழைப்பிற்கமைய நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகள் பங்கம பிரதேசத்திற்குச் சென்றுள்ளனர்.

அங்கிருந்த ஹொட்டலில் சிறுமியையும், குறித்த இளைஞனையும் கைது செய்ததுடன் ஹொட்டல் முகாமையாளரையும் கைது செய்துள்ளனர்.

பொலிஸார் சிறுமியிடன் விசாரணைகளை மேற்கொண்டபோது, சிறுவர்கள் தினம் என்பதால் பாடசாலை சீருடையில் வரவேண்டாம் என அதிபர் கூறியதாகவும், அதனால் கலர் உடை உடுத்திக்கொண்டு பாடசாலை செல்வதாக தாயிடம் கூறிவிட்டு சிறுமி தனது காதலனைச் சந்திக்கச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

பேருந்து நிலையத்தில் இருவரும் பேசுவதற்கு நல்ல இடம் இல்லை என்பதால் தான் தனது காதலன் ஹொட்டலுக்கு அழைத்துச் சென்றதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பொது இடத்தில் மாணவிகளின் மோசமான செயற்பாடு : அதிர்ச்சியில் பெற்றோர்!!

குருணாகலில் பொது இடங்களில் அநாகரிகமான முறையில் நடந்த கொண்ட மாணவ, மாணவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருணாகல் பகுதியிலுள்ள ஏரி பகுதியில் மோசமான முறையில் நடந்து கொண்ட மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

15 முதல் 17 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவ, மாணவிகள் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக வகுப்பு செல்வதாக கூறி குருணாகலுக்கு செல்லும் இந்த மாணவர்கள், ஜோடி ஜோடியாக இணைந்து மோசமான முறையில் நடந்து கொள்வதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய இந்த மோசமான நடவடிக்கைகயை தடுப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த மாணவ, மாணவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோசமான நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் இளம் வயதுடையவர்கள் என்பதால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

கடும் எச்சரிக்கையினை அடுத்து அவர்கள் பெற்றோர்களிடம் பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் மாணவ, மாணவிகளின் செயற்பாடு குறித்து அறிந்த பெற்றோர் பெரும் அதிர்ச்சி நிலையை அடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.