வவுனியாவைச் சேர்ந்த வைத்தியர் அனுராதபுரம் வைத்தியசாலையில் செய்த சாதனை!!

எக்ஸ்ரே பரிசோதனையின் பின்னர் நோயாளி ஒருவரின் இடது பக்க சிறுநீரகத்தில் உருவாகியிருந்த சுமார் இரண்டு கிலோ கிராம் எடை கொண்ட பெரிய கல்லொன்றை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள் சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். கடந்த 2ம் திகதி இந்த சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.

பாம்பு தீண்டிய காரணத்தினால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியை எக்ஸ்ரே பரிசோதனை செய்த போது, அவரது சிறுநீரகத்தில் கல் இருப்பது கண்டறியப்பட்டது.

நொச்சியாகம, காலதிவுல்வெவ, 8 கிராமத்தை சேர்ந்த 41 வயதான ஜீ.ஜீ. காமினி ராஜபக்ச என்ற நோயாளிக்கு இந்த சத்திர சிகிக்சை நடத்தப்பட்டுள்ளது.

இந்த சத்திர சிகிச்சை குறித்து கருத்து வெளியிட்ட அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் ரி.அரவிந்தன்,

“ நோயாளியின் சிறுநீரகம் ஒன்றில் இவ்வளவு பெரிய கல் இருந்ததை நான் தற்போதுதான் முதலில் பார்த்துள்ளேன். சிறிய கல் உருவாகி நோயாளிகளை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

நான் உட்பட மருத்துவ குழுவினர் உடனடியாக நோயாளியை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தினோம். சிறுநீரகத்தில் இருந்த இரண்டு கிலோ கிராம் கல்லை அகற்றுவது சுலமான காரியமல்ல.

நாங்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் நோயாளியின் சிறுநீரகத்தில் இருந்த கல்லை துண்டு துண்டாக அகற்றினோம். நோயாளி உடல் நலத்துடன் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சத்திர சிகிச்சைக்கு மூன்று நேரம் சென்றது. அனுராதபுரத்தில் உள்ள குடிநீர் காரணமாகவே இப்படியான கற்கள் உருவாகின்றன.

அனுராதபுரம் மக்கள் தண்ணீரை அதிகளவில் பருக வேண்டும். இதன் மூலம் சிறு நீர் குழாய், சிறுநீரகங்களில் கல் உருவாவதை தடுக்க முடியும்.

சிறுநீரகத்தில் சிறிய கல் உருவாகினாலும் நோயாளிக்கு அதிகமான வலி ஏற்படும். எனினும் இந்த நோயாளிக்கு அப்படியான வலி இருக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் : 2 நாட்களுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட சடலங்கள்!!

ஊட்டி அருகே மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்தவர் ஜூட் அண்டோ கெவின் (வயது 34), கப்பல் கேப்டன். இவர் தனது நண்பர்களான சென்னை கொளத்தூரை சேர்ந்த ராமராஜேஷ் (36), வியாசர்பாடி இப்ராகிம் (35), பெரம்பூரை சேர்ந்த அருண் (36), வக்கீல் ரவிவர்மா (39) மற்றும் தொழில் அதிபர்கள் ஜெயக்குமார் (36), அமர்நாத் (35) ஆகியோருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றார்.

கடந்த 30ம் திகதி ஊட்டிக்கு சென்றவர்கள், 1ம் திகதி காலை விடுதியில் இருந்து மசினகுடி பகுதியை சுற்றிப்பார்க்க புறப்பட்டனர்.

அப்போது புதுமந்து பகுதியில் 35வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் காரில் இருந்த 7 பேரும் யிருக்கு போராடினர், மரங்கள் அடந்த பகுதி என்பதால் அப்பகுதியில் சென்றவர்களுக்கும் தகவல் தெரியவரவில்லை.

விபத்தில் சிக்கியவர்களின் சொந்த பந்தங்கள் செல்போனை எண்ணை தொடர்பு கொள்ள முயற்சித்த போது சிக்னலும் கிடைக்காததால் ஊட்டி பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து பொலிசார் நடத்திய தேடுதல் வேட்டையில், 200 அடி பள்ளத்தில் கார் கிடந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்ட நிலையில், ராமராஜேஷ், அருணை தவிர மற்றவர்கள் பரிதாபமாக பலியாகினர்.

படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, மலைப்பகுதியில் அதிக வேகத்தில் சென்றதே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்தால் வந்த வினை : தூக்கில் சடலமாக தொங்கிய காதல் மனைவி!!

சென்னையில் பெண் இன்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவை சேர்ந்தவர் சாய்தேஜா (26). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திவ்யஸ்ரீ (22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தம்பதிகள் சென்னை மதுரவாயலில் உள்ள வீட்டில் தங்கியிருந்து வடபழனியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இருவரும் இரவு பணிக்காக சென்றனர். சிறிது நேரத்தில் உடல்நிலை சரியில்லை என்று கூறி திவ்யஸ்ரீ மட்டும் வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டார்.

பணி முடிந்து நேற்று அதிகாலையில் வீட்டுக்கு வந்த சாய்தேஜா காதல் மனைவி திவ்யாஸ்ரீ வீட்டின் உள்ளே தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறினார்.

பின்னர் சுதாரித்து கொண்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு போன நிலையில் திவ்யஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

சம்பவம் குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், கணவர் மீது திவ்யஸ்ரீ அடிக்கடி சந்தேகப்படுவார் என்றும், இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

திவ்யஸ்ரீ செல்போனை பறிமுதல் செய்த பொலிசார், கடைசியாக அவர் யாரிடம் பேசினார்? என்பது குறித்து விசாரித்து வருவதோடு, தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

இரவில் தொழிலதிபர் வீட்டுக்குள் புகுந்து மிரட்டி பணம் பறித்த நடிகை!!

சென்னையில் இரவு தொழிலதிபர் வீட்டுக்குள் தனது கணவர் மற்றும் ரவுடிகளுடன் நுழைந்த சஜினி என்ற நடிகை ரூ.10 லட்சம் காசோலையை வாங்கிச்சென்றுள்ளார்.

முத்தையா(72) என்ற தொழிலதிபர் தனது வீட்டுக்கதவை மூட வரும்போது திடீரென உள்ளே நுழைந்த நடிகை சஜினி, அவரை ரவுடிகளுடன் சேர்ந்து பணம் கொடுக்குமாறு மிரட்டியுள்ளார்.

அவர் தன்னிடம் பணம் இல்லை என்று மறுத்துவிடவே, அப்படியென்றால் காசோலை வேண்டும், அது கொடுக்காமல் நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம் என மிரட்டியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து முத்தையா 10 லட்சம் ரூபாய் கசோலையை கொடுத்துள்ளார்.

நடிகை சஜினி மற்றும் ரவுடிகள் பலர் எனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, என்னை மிரட்டி, ரூ.10 லட்சம் காசோலையை வாங்கிச்சென்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி இருந்தார்.

இது தொடர்பாக பொலிசார் கூறியதாவது, பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.

பெற்றோருக்கு ரகசியம் தெரிந்ததால் பயத்தில் இளம் ஜோடி எடுத்த விபரீத முடிவு!!

ஹைதராபாத்தில் தங்கியிருந்த இடத்தின் ரகசியம் பெற்றோருக்கு தெரிந்ததால், இளம் ஜோடியினர் 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ள அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஹைதராபாத்தில் Alwal பகுதியை சேர்ந்த இளம் ஜோடியினர் மனிஷ் (20) மற்றும் அக்சயா (18). தூரத்து சொந்தங்களான இருவரும் 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

ஆனால் இவர்களுடைய காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் இருவரும் கடந்த மாதம் 28ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனை தொடர்ந்து அக்சயாவின் பெற்றோர் மகளை காணவில்லை என பொலிஸாரிடத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இருவரும் Sri Chakra complex-ல் அறை எடுத்து தங்கவிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அங்கு விரைந்த பொலிஸார் ஒவ்வொரு தளமாக சோதனை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் இருவீட்டாரின் பெற்றோர்களும், தங்களுடைய இருப்பிடத்தை கண்டறிந்து விட்டனர் என்பதை அறிந்த இருவரும் உடனடியாக 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட இருவரும் ஹைதராபாத் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காட்டுக்குள் சென்று வருவதாக கூறிய காதல் ஜோடி : சடலமாக தூக்கில் தொங்கிய பரிதாபம்!!

சேலம் மாவட்டத்தில் இரு வேறு சமூகத்தை சேர்ந்த காதல் ஜோடியினர் வீட்டில் சடலமாக தூக்கில் தொங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த தங்கபாலு (24) என்பவர், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா மோளக் கவுண்டம்பாளையம் பகுதியில் தங்கி பொக்லைன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.

அப்பொழுது அவருக்கும், அதேபகுதியை சேர்ந்த மைனாவதி (16) என்ற சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. சிறுமி 10-ம் வகுப்பு மட்டுமே படித்து வந்த நிலையில், காதல் விவகாரம் சிறுமியின் வீட்டாருக்கு தெரிந்ததால், படிப்பை பாதியில் நிறுத்தினர். மேலும் அங்கிருக்கும் ஒரு விடுதியில் மைனாவதியை தங்க வைத்துள்ளனர்.

இந்த நிலையில் விடுதிக்கு சென்ற தங்கபாலு, மைனாவதியை அழைத்து கொண்டு ஓமலூர் அருகே வசித்து வரும் தன்னுடைய அக்கா ஜெயாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மைனாவதியை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி, அக்கா ஜெயா மற்றும் அவருடைய கணவர் பிரகாஷை வற்பறுத்தியுள்ளார்.

இதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்ததோடு, பெரியவர்களிடம் பேசி தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

இதற்கிடையில் காட்டு பகுதிக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி இருவரும் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த ஜெயா, காட்டு பகுதியில் உள்ள தன்னுடைய மாமியாரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு தங்கபாலு தன்னுடைய காதலி மைனாவதியுடன் சடலமாக மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு தொங்கியுள்ளார். பின்னர் இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது

இலங்கையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி : திணறும் மத்திய வங்கி!!

வரலாறு காணாத வகையில் டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் தொடர் சரிவு ஏற்பட்டுள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்திற்கு அமைய இலங்கை ரூபாவின் இன்றைய விற்பனை பெறுமதி 171.42 ஆக பதிவாகி உள்ளது.

இலங்கை வரலாற்றில் ரூபாவின் பெறுமதி மிகவும் மோசமான வீழ்ச்சியை சந்தித்த முதல் சந்தர்ப்பம் இதுவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக ரூபாவின் பெறுமதி மிகவும் மோசமாக வீழ்ச்சி அடைந்து வருகின்றமையால் பொருளாதார ரீதியாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதனை கட்டுப்படுத்த இலங்கை மத்திய வங்கி பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது.

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியை நிலையாக பேண சமகால அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சமகாலத்தில் அதிகளவான கடன்களை திரும்ப செலுத்தி வருவதால் டொலரின் ஒதுக்கம் குறைவடைந்துள்ளது. அதேவேளை, இறக்குமதியாளர்களுக்கு டொலரின் தேவை அதிகரித்துள்ளன. இதன்காரணமாக இந்த நிலை ஏற்பட்டள்ளதாக பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

யாழ். குடாநாடு முழுவதும் நீரில் மூழ்கும் அபாயம்!!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டடங்கள் காரணமாக நிலத்தடி நீர் இல்லாமல் போகும் அபாயம் காணப்படுவதாக சிரேஷ்ட பொறியிலாளர் ம.இராமதாசன் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி யாழ். குடாநாடு முழுவதும் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிலத்தடி நீரை நம்பிவாழும் யாழ். குடாநாட்டு மக்களின் நன்மையை கருத்திற்கொண்டு, நன்னீர் தேக்கங்கள் மற்றும் குளங்களை பாதுகாப்பது அவசியமென அவர் இதன்போது குறிப்பிட்டார்.

சுமார் 40 குளங்கள் காணப்பட்ட யாழ்ப்பாணத்தில் 4 குளங்கள் முற்றாக அழிவடைந்துள்ளதாகவும் ஏனைய குளங்களும் அழிவடைந்து வருவதாகவும் பொறியிலாளர் இராமதாசன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், உரிய அதிகாரிகள் தலையிட்டு இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரிய அனர்த்தத்திற்கு யாழ்ப்பாணம் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டவிரோத கட்டடங்களால் வாய்க்கால்கள் மூடப்பட்டு நீர் வழிந்தோட முடியாமல் உள்ளதை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். யுத்தம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக, உரிய நியமங்கள் இன்றி இவ்வாறு பல கட்டடங்கள் கட்டப்படுதால் இந்த நிலை ஏற்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பில் மர்மமான முறையில் இறந்த தமிழ் பெண்!!

கொழும்பு – கொள்ளுப்பிட்டி நகரில், நெல்சன் ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலத்தை பொலிஸார் நேற்று மாலை மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக நீதவான் விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளன.

குறித்த வீட்டில் வசித்து வந்த 76 வயதான தமிழ் பெண்மணியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இந்த சம்பவம் குறித்து கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா செட்டிகுளம் உலுக்குளம் வீதியில் வீழ்ந்து கிடக்கும் மரத்தினால் போக்குவரத்துக்கு இடைஞ்சல்!

கடந்த 1 1/2 மாதங்களுக்கு மேலாக உலுக்குளம் செட்டிகுளத்தை இணைக்கும் துடரிக்குளம் வீதியின் குறுக்கே வீழ்ந்து கிடக்கும்  பாரிய மரம் இதுவரை  அப்புறப்படுத்தப்படாத நிலையில்   கிடப்பதனால்  போக்குவரத்துக்கு  இடைஞ்சலாக  இருப்பதாக  தினமும் அவ்வீதியால்  பயணம்  செய்யும்   பொதுமக்கள்  விசனம்  தெரிவிக்கின்றனர் .

செட்டிகுளம் பிரதேச  சபைக்குட்பட்ட    இந்த வீதியில்  வீழ்ந்து கிடக்கும் மரத்தை   சம்பந்தப்பட்ட  அதிகாரிகளின் கவனத்திற்கு   கொண்டு சென்று   மரத்தை  அகற்ற  நடவடிக்கை எடுக்குமாறு மக்கள்  கோரிக்கை விடுக்கின்றனர்.

 

வவுனியாவில் கஞ்சாவுடன் 3 இளைஞர்கள் கைது!!

வவுனியாவில் இன்று(04.10) பொலிசாரின் நடவடிக்கையின் போது வாகனம் ஒன்றில் கேரள கஞ்சாவினை எடுத்துச் சென்ற 3 இளைஞர்களைக் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து 12இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேவிக்கிரம தலைமையில் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினர் இன்று அதிகாலை ஓமந்தை சந்தியில் பகுதியில் கிளிநொச்சியிலிருந்து கிண்ணியா, திருகோணமலைக்குச் சென்ற டொல்பின் ரக வாகனம் ஒன்றினை மறித்து சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது அவ்வாகனத்தில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 7கிலோ 924கிராம் கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர்.

அதை எடுத்துச் சென்ற வாகனச்சாரதி உட்பட கிண்ணியாவைச் சேர்ந்த 19, 26, 32 வயதுடைய மூவரைக் கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்நடவடிக்கையின்போது உதவிப் பொலிஸ் உத்தியோகத்தர் ஜ. எம்.நசீம், பொலிஸ் பரிசோதகர்களான காமினி (24907), சிந்து (67099), அசேல (77582), நிரோஷன் (88567), பந்துல (34251) ஆகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் போதை ஒழிப்புப்பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் செயற்பாட்டால் மக்கள் அவதி!!

வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தின் பணிகள் நேற்றும் நேற்று முந்தினமும் மின்சாரம் தடைப்பட்ட காரணத்தினால் பணிகளில் தடை ஏற்பட்டுள்ளது.

பெருமளவானோர் நீண்ட நேரம் காத்திருந்து தமது தேவைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் இதனால் பலர் தூர இடங்களிலிருந்து சேவைகளைப் பெற சென்றவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குட்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகேயுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வடபிராந்திய அலுவலகத்திற்கு நேற்றும் நேற்று முந்தினமும் சென்ற பலர் மின்சாரத்தடையினால் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும்,

இதனால் பல தாமதங்கள் தடைகள் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளதுடன், தூர இடங்களிலிருந்து சென்ற பலர் திரும்பிச் செல்வதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இவ்வாறு அவசியத் தேவைகளினிமித்தம் குடிவரவு குடியகல்வுத்திணைக்களத்திற்குச் செல்லும் தமக்கு இலகுவான சேவையை மேற்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் அலுவலகரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வினவியபோது மின்சாரம் தடைப்பட்ட காரணத்தினால் இவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தமது அலுவலகத்திற்கு மின்பிறப்பாக்கி இல்லாமையினால் மின்சாரம் தடைப்படும்போது இவ்வாறு சிரமத்தை எதிர்நோக்கவேண்டியுள்ளதாகவும் கொழும்பு தலைமை அலுவலகத்திடம் இவ்விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மின்பிறப்பாக்கியை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இனி வரும் காலங்களில் இவ்வாறான நிலை ஏற்படாதிருக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

வவுனியா மகாறம்பைக்குளத்தில் விளையாட்டு முற்றம் திறந்து வைப்பு!!

வவுனியா மகாறம்பைக்குளத்தில் முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறனை அதிகரிக்கும் நோக்கோடு சரஸ்வதி முன்பள்ளியில் விளையாட்டு முற்றம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வட மாகாணசபை நிதியின் நிதியொதுக்கீட்டில் வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்நாதன் இதனை திறந்து வைத்திருந்தார். இதன்போது முன்பள்ளி மாணவர்களின் ஆக்கத்திறன் கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்விற்கு வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் முன்பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளர் மற்றும் முன்னாள் முன்பள்ளி இணைப்பாளர் அருள்வேல்நாயகி மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது உரையாற்றிய வட மாகாணசபை உறுப்பினர், இன்னும் இரண்டு அமர்வுகளுடன் மாகாணசபையின் காலம் நிறைவு பெறுகின்றது.

இக்காலப்பகுதியில் மாகாணசபையினால் நிதிகள் அனைத்தும் செலவிடப்பட்டுள்ளது. மாகாணசபைக்கு வந்த நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சிலர் கூறுவதாகும்.

எனினும் இன்னும் திறமையாக செய்திருக்கலாம் என்கின்ற கவலை இருக்கின்றது. அத்துடன் முன்பள்ளி ஆசிரியர்களை மாகாணசபை உள்ளீர்த்து அவர்களுக்கான வேதனத்தினை வழங்க முன்வரவேண்டும்

இரண்டு தடவைகள் இது தொடர்பாக சபையின் கவனத்திற்கு கோண்டு வந்திருக்கின்றேன். சுகாதார தொண்டர்களின் பிரச்சனை, பட்டதாரிகளின் பிரச்சனைகளுக்கு அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட அழுத்தமே காரணமாக அமைந்திருந்தது.

அதுபோல் முன்பள்ளி ஆசிரியர்களும் தங்களது கோரிக்கையை முன்னிறுத்தி மாகாணசபைக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டிகளில் செல்லும் பயணிகளுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!!

இலங்கையின் பல்வேறு பகுதியில் மோசடியான முறையில் கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்றை இனங்கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கும்பல், முச்சரவண்டிகளில் பயணிக்கும் பயணிகள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்து புதிய முறையில் கொள்ளையடித்து வருகின்றன.

முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் பயணிகளை அல்லது முச்சக்கர வண்டி சாரதிகளை வேறு பகுதிகளுக்கு இந்தக் கும்பல் அழைத்து செல்கிறது. இதன்போது மயக்கம் ஏற்படுத்தும் வகையில் போதைப்பொருள் கலக்கப்பட்ட பால் பக்கட், இளநீர் போன்றவற்றை வழங்கி, தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த கொள்ளை கும்பலினால் வழங்கப்பட்ட போதைப்பொருள் கலக்கப்பட்ட பால் காரணமாக பயணிகள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் மயக்கமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த கும்பல் பல முச்சக்கர வண்டி சாரதிகளின் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேபோன்று இராணுவ அதிகாரி ஒருவரும் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த தங்க நகைகள் உட்பட பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தினால் பிலியந்தலை, நுகேகொட, புறக்கோட்டை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, தெரியாத நபர்கள் வழங்கும் எந்தவொரு உணவுப் பொருட்களையும் உண்ண வேண்டாம் என பொலிஸார் பொது மக்களிடம் கேட்டு கொண்டுள்ளனர்.

காதலனுக்கு எதுவும் செய்ய வேண்டாம் : தற்கொலை செய்து பரபரப்பை ஏற்படுத்திய இளம் யுவதி!!

திருகோணமலையில் காதலனுக்கு எதுவும் செய்ய வேண்டாம் என கடிதம் எழுதிவிட்டு இளம் யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை பகுதியில் காதலித்து வந்த காதலனுடன் தொலைபேசியில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் கோபம் கொண்ட யுவதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருகோணமலை, சிறிமாபுற பகுதியைச் சேர்ந்த அமாளிகா விராஐனி சொய்சா என்ற 22 வயதுடைய யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த யுவதி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் தனது அக்காவிடம் அம்மாவை சிறந்த முறையில் பார்த்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

அத்துடன் தான் காதலித்து வந்த காதலனுக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் கடிதத்தின் மூலம் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இலங்கையில் உலக அழகி போட்டிகள்!!

2020 அல்லது 2021ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சு இந்த தகவலை தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை வென்ற மானுஷி சில்லர் உள்ளிட்ட Miss World Organization உயரதிகாரிகள் குழு கடந்த 30ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

இவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பின் போதே 2020 அல்லது 2021ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.