கொதித்தெழுந்த அழகக சங்கங்களின் சம்மேளனம் : சலூன், லோன்றியினால் வசமாக சிக்கிய உறுப்பினர்!!

வடமாகாண சபை கூட்டத்தில் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் முகமான வடமாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் உரையாடல்களுக்கு வடமாகாண அழகக் சங்கங்களின் சம்மேளனம் தனது கண்டத்தினை தெரிவித்துள்ளது.

வடமாகாண அழக சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் க.நாகராசா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது,

”வேலியே பயிரை மேய்வது போல” எமக்காக எம்மால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைக் கூட்டத்தில் எம் தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி சம்பந்தமாகக் கூடி முடிவெடுக்க வேண்டிய கூட்டங்களில் அவர்களது மறுமுகங்களை எமக்கு காட்டி நிற்கின்றனர்.

அண்மையில் நடைபெற்ற மாகாண சபைக் கூட்டத்தில் திரு.சிவக்கொழுந்து அகிலதாஸ் அவர்கள், ‘சலூன் சென்று உடுப்பு அயன் பண்ணவா? லோன்றியில் சென்று முடி வெட்டவா? ‘ என எமது தொழிலாளர்களை இழிவுபடுத்தும் முகமாக உரையாடியுள்ளார்.

எமக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய உறுப்பினர்களே எமது தொழிலாளர்களை கேவலப்படுத்தியுள்ளனர். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மாகாண சபைக் கூட்டங்களில் அபிவிருத்தியைப் பற்றிக் கதைப்பதா? அல்லது பிற சமூகங்களை இழிவுபடுத்துவதா? எமது தமிழ் பேசும் உறவுகளே சாதிய அடிப்படையில் கொள்ளை கொண்டவர்களாக இருந்தால் இவர்களா எமது பாதுகாவலர்கள்? இப்படிப்பட்ட செயற்பாடுகளை எமது நிறுவனம் வன்மையாகக் கண்டிக்கிறது. என அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தினுள் பேரூந்தினை கொண்டு சென்ற சாரதி, நடத்துனர் கைது!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தினுள் பேரூந்தினை கொண்டு சென்ற இ.போ.ச சாரதி மற்றும் நடத்துனரை வவுனியா பொலிஸார் இன்று (03.10.2018) கைது செய்து தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலைக்குரிய பேரூந்து நேற்று முன்தினம் (01.10.2018) வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் தரித்து பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது.

“புதிய பேரூந்து நிலையத்தினுள் பேரூந்தினை கொண்டு சென்றமை” என குற்றம் சாட்டப்பட்டு குறித்த இ.போ.ச பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனரை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு இன்றைய தினம் சமூகமளிக்குமாறு நேற்றையதினம் அழைப்பானை விடுக்கப்பட்டிருந்தது.

பொலிஸ் நிலையத்திற்கு இன்று (03.10.2018) சமூகமளித்த இ.போ.ச பேரூந்தின் சாரதி , நடத்துனரை பொலிஸார் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

குரங்கு பறித்த தேங்காய் தலையில் விழுந்து பெண் பலி!!

மாத்தளை, வட்டகொட – ஹூலங்கமுவ பிரதேசத்தில் குரங்கு பறித்து போட்ட தேங்காய் தலையில் விழுந்து வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மாத்தளை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை நடந்த இந்த சம்பவத்தில் மாத்தளை – வட்டகொட, ஹூலங்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 73 வயதான திலகா ரஞ்சனி குலரத்ன என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் வீட்டுக்கு வெளியில் முற்றத்தில் இருக்கும் போது வீட்டுக்கு அருகில் உள்ள தென்னை மரத்தில் இருந்த குரங்கு பறித்த தேங்காய் பெண்ணின் தலையில் விடுத்துள்ளது.

இந்த பெண்மணி திருமணம் செய்துக்கொள்ளாது வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டை காட்டி ஏமாற்றிய நபர் : இறுதியில் நேர்ந்த விபரீதம்!!

இஸ்ரேல் நாட்டில் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த ஒருவரை, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கம்பளை – புஸ்ஸசல்லாவை பகுதியில் வைத்து இந்த சந்தேகநபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் சந்தேகநபரை கைது செய்யும் போது பணம் பெற்றுக் கொண்டமைக்காக அவரால் வழங்கப்பட்ட ஒப்பந்த பத்திரங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது அவரை தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

புஸ்ஸல்லாவை சேர்ந்த சஹாப்தீன் மொஹமட் நௌசாட் என்ற நபரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை இளைஞனின் வியப்பான செயல் : பேஸ்புக்கில் பிரபலமாக்கிய சம்பவம்!!

இலங்கை இளைஞனின் செயற்பாடு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த இசுரு பிரபாஷ்வர என்ற இளைஞனின் செயற்பாடு தொடர்பிலேயே இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

போதைப்பொருளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இளைஞர் ஒருவர், பெறுமதியான கையடக்க தொலைபேசியை விற்பனை செய்ய முயற்சித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான குறித்த இளைஞன், தொலைபேசியை திருடி விற்பனை செய்ய் முயன்றுள்ளார்.

எனினும் இது திருடப்பட்ட கையடக்க தொலைபேசி என அறிந்த இசுரு அதனை பணம் கொடுத்து கொள்வனவு செய்துள்ளார். பின்னர் அதன் உண்மையான உரிமையாளரை தேடி சென்று ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

உண்மையான உரிமையாளரை கண்டுபிடிப்பதற்கு சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் உதவியை இசுரு பெற்றுள்ளார். அதற்கமைய அதன் உரிமையாளரை கண்டுபிடித்து ஒப்படைத்துள்ளார்.

இசுருவின் செயற்பாடு குறித்து பேஸ்புக்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

காதலியை தேடிச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி!!

காலியில் காதலியை பார்க்க சென்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கரன்தெனியவில் காதலியை பார்த்த சென்ற இளைஞன் ஒருவர் மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

ரஞ்சித் சுரங்க என்ற 22 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்க்பபட்டுள்ளார். நேற்று இரவு 7 மணியளவில் மடுகும்புர பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலத்தை அவதானித்த பிரதேச மக்கள் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞன் நேற்று அதிகாலை வீட்டின் ஜன்னல் ஒன்றை திறந்து விட்டில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் மாலை வரை வீட்டிற்கு வராத காரணத்தினால், பெற்றோர் கரன்தெனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பின்னர் பிரதேச மக்களுடன் இணைந்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது அவரது சடலம் காதலியின் வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் மீட்கப்பட்டுள்ளது.

மிருகங்களை வேட்டையாட பயன்படுத்தப்படும் மின்சார கம்பியில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவனை விட்டுச் சென்ற மனைவி : அப்பாவை குழந்தை போன்று பார்த்து கொள்ளும் 6 வயது மகள்!!

சீனாவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தந்தையை அவரது ஆறு வயது மகள் கண்ணும் கருத்துமாய் பார்த்து கொள்ளும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Ningxia மாகணத்தை சேர்ந்த சிறுமி தான் Jia Jia. 6 வயதான இவர் தினந்தோறும் காலையில் 6 மணிக்கு எல்லாம் எழுந்து தன்னுடைய தந்தையான Tian Haicheng-க்கு சுமார் அரைமணி நேரம் மசாஜ் செய்கிறார்.

அதன் பின் அப்பாவுக்கு பல் துலக்கிவிடுவது, குளிப்பாட்டி விடுவது போன்ற வேலைகளை பள்ளிக்கு செல்வதற்கு முன்பு செய்து முடித்துவிடுகிறார்.

அதன் பின் மாலை வீட்டிற்கு திரும்பியதும், அப்பாவுக்கு இரவு நேர டின்னர், பின்னர் சிறிது நேரம் வெளியில் அழைத்து செல்வது போன்று உதவுகிறார்.

இந்த சிறுமி குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவரின் தந்தையான Tian Haicheng கார் விபத்தில் சிக்கினார்.

திடீரென்று ஏற்பட்ட இந்த விபத்தின் காரணமாக அவருக்கு பக்கவாதம் வந்தது. இதையடுத்து இவரின் மனைவி கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு இவரை விட்டுச் சென்றார். ஆனால் உடன் செல்லும் போது, தன்னுடைய மூத்த மகனை அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இந்த தம்பதியின் மகள் Jia Jia, அம்மா இறந்த போதும் பக்காவாதத்தினால் பாதிக்கப்பட்ட தந்தையை ஒரு குழந்தை போன்று பார்த்து கொள்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், முதலில் அப்பாவிற்கு எப்படி ஷேவ் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை, இதனால் அவரின் முகத்தில் காயம் ஏற்பட்டு இரத்தம் கூட வந்தது.

ஆனால் தற்போது மிகவும் அழகாக ஷேவ் செய்கிறேன். என்னுடைய 40 வயது தாத்தா மற்றும் பாட்டி இருவரும் நீ சுத்தமாக அப்பாவிற்கு ஷேவ் செய்துள்ளாய் என்று கூறினர்.

அம்மாவை மிஸ் செய்கிறீர்களா என்று கேட்ட போது, இல்லை அப்பாவை பார்த்து கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது. ஆனால் என்னுடைய சகோதரனை மிகவும் மிஸ் செய்கிறேன், ஏனென்றால் அவனிடம் பேசுவதற்கு, விளையாடுவதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை என்று சிறுமி கூறியுள்ளார்.

சிறுமியான Jia Jia-வை Kuaishou என்ற ஆப்பில் சுமார் 480,000 பின்பற்றுகின்றனர். அவரின் இந்த செயலைக் கண்டு பலரும் நீ ஒரு குட்டி தேவை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மார்பகத்தில் பச்சை குத்திய 16 வயது இளம் கர்ப்பிணி பெண்ணின் பரிதாப நிலை : எச்சரிக்கை!!

கொலம்பியாவில் 16 வயது இளம் பெண் ஒருவர் மார்பகத்தில் பச்சை குத்தியதால், அதன் பாதிப்பு காரணமாக தன்னுடைய குழந்தையை இழந்து தவிக்கிறார்.

கொலாம்பியாவின் Casanare மாகாணத்தை சேர்ந்தவர் Luisa Fernanda(16). இவர் ஒரு வருடங்களுக்கு முன்பு தன்னுடைய வலது மார்பகத்தில் பச்சை குத்தியுள்ளார்.

பச்சை குத்தியதன் காரணமாக இவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த நோய் தொற்று அவரின் தண்டுவடம் வரை பாதித்துள்ளது.

இதனால் சிகிச்சைகள் மேற்கொண்ட அவர், அதிக மாத்திரைகள் சாப்பிட்டுள்ளார். இதனால் அவரின் கரு சிதைவுற்றது. அதுமட்டுமின்றி நடக்க முடியாமல் வீல் சேரில் உட்கார்ந்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் ஒரு வருடத்திற்கு முன்பு பச்சை குத்தி கொண்டேன். இதனால் நோய் தொற்று ஏற்பட்டது. அது என்னுடைய தண்டுவடத்தை பாதித்தது, நடக்க முடியாமல் தவிக்கிறேன்.

தற்போது உள்ள இளம் பட்டாளங்கள் பச்சை குத்துவதில் ஆர்வம் அதிகம் காட்டுகின்றனர். ஆனால் பச்சை குத்துவது எவ்வளவு ஆபத்து என்பதை நீங்கள் உணர வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

என்னால் நடக்க முடியவில்லை என்ற போது, என் அம்மா எனக்கு பெரும் உதவியாக இருக்கிறார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஒரு வீல் சேரில் நான் வெளியே வந்த போது, என் அம்மா உறுதியாக இல்லை, அதைத் தவிர கொஞ்சம் வெட்கமாகவும் இருக்கிறது.

ஏனெனில் தெருவில் செல்லும் போது அனைவரும் நம்மை பார்க்கின்றனர், இதனால் வீட்டில் அடைந்திருந்தேன். அதன் பின்பு வீட்டில் இருப்பது நல்லது இல்லை என்பதை உணர்ந்து வெளியில் வர ஆரம்பித்தேன் என்று கூறியுள்ளார்.

வயிற்று வலியால் துடித்த நபரின் எக்ஸ்ரேவில் கண்ட அதிர்ச்சி காட்சி!!

கொல்கத்தாவில் உள்ள பிரெஸிடென்சி சிறைச்சாலையில் கைதி ராமசந்திராவுக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.

வருக்கு வலி அதிகரிக்கவே உடனடியாக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவர்கள் ராமசந்திராவின் வயிற்றில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருத்தது.

அதிகாரிகளின் திடீர் சோதனையின்போது சிக்கிய ராமசந்திரா தன்னிடமிருந்த போனை மறைக்க அதை விழுங்கியுள்ளார். இதனால்தான் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

கைதி போனை விழுங்கியது எக்ஸ்ரேவில் தெரியவந்துள்ளது. பிறகு அவர் அங்கிருந்து நேற்று எம்.ஆர் பாங்கூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கே அவருக்குத் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

7 செமீ அளவுள்ள போனை விழுங்கியுள்ளார் என்பது எக்ஸ்ரே சோதனையில் தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் குடல் இயக்கம் வழியாகப் போனை வெளியில் எடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.

அது முடியாமல் போனால் கைதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என சிறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இரண்டு கால்களும் ஒட்டி வாலுடன் பிறந்த அதிசய குழந்தை!!

கர்நாடக மாநிலத்தில் இரண்டு கால்களும் ஒட்டிய நிலையில் வாலுடன் பிறந்த அதிசய குழந்தை பிறந்த ஒரு மணிநேரத்தில் இறந்துள்ளது.

மூர்த்தி என்பவரின் மனைவி சின்னம்மாவுக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சின்னம்மாவுக்கு குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை அதிசய குழந்தையாக பிறந்தது.

அதாவது அந்த குழந்தை 2 கால்களும் ஒட்டிய நிலையில், முதுகின் பின்னால் வாலுடன் பிறந்தது. மேலும் பிறந்தது ஆண் குழந்தையா? அல்லது பெண் குழந்தையா? என்று தெரியாமல் மருத்துவர்கள் குழம்பி போயினர்.

இந்த நிலையில் பிறந்த ஒரு மணி நேரத்தில் திடீரென அந்த குழந்தை இறந்து போனது. இதனால் டாக்டர்களும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். பின்னர் குழந்தையின் உடல் மூர்த்தியின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது

திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு : கதறும் பெற்றோர்!!

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் கணவரின் கொடுமை தாங்காமல் திருமணமான மூன்றே மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தின் விசாகபட்டினம் மாவட்டத்தில் வியாழனன்று இரவு இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் 25 ஆம் திகதி ரோகினி(25) என்பவருக்கும் பாரவாடா பகுதியை சேர்ந்த மோகன் குமார் என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.

திருமணத்தை அடுத்து புதுமணதம்பதிகள் குர்மன்னேபாளயம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செப்டம்பர் 3-ஆம் திகதியில் தனிக்குடித்தனம் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 27 ஆம் திகதி இரவு மோகன் அலுவலகம் முடித்து குடியிருப்பு திரும்பியபோது, தமது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை கண்டுள்ளார்.

உடனடியாக அவரது உறவினர்களுக்கு தொலைபேசியில் தகவல் அளித்துள்ளார் மோகன். இதனையடுத்து உடனடியாக சம்பவப்பகுதிக்கு விரைந்துள்ளனர் ரோகினியின் உறவினர்கள்.

மட்டுமின்றி ரோகினியின் தற்கொலை தொடர்பில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக கூறி பொலிசாருக்கும் புகார் அளித்துள்ளனர்.
கணவரின் கொடுமை தாங்காமலே ரோகினி தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அந்த புகாரில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக மோகன் தொடர்பில் தனது பெற்றோரிடம் புகார் அளித்துள்ளார் ரோகினி. ஆனால் திருமண பந்தத்தில் சகிப்புத் தன்மையே முக்கியம் எனக் கூறி ரோகினிக்கு உபதேசம் செய்துள்ளனர் அவரது பெற்றோர்.

தற்போது ரோகினி தற்கொலை செய்து கொண்டுள்ளதால் மோகன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

13 வயதில் திருமணம்… கருவுற்ற சிறுமியின் உடல்நிலை பாதிப்பு: நீதிமன்றத்தை நாடிய தாயார்!!

திருமணத்துக்கு பிறகு 13 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க கோரிய மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிறுமியின் உடல்நிலையை பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பெரம்பலூர் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரி என்பவரின் 13 வயது மகளுக்கு, ஐந்து மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவருடன் திருமணம் நடந்தது.

குழந்தை திருமணத்துக்கு அந்த கிராமத்தில் உள்ள பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் திருமணம் நடந்தது.

இந்நிலையில், அந்த சிறுமி கர்ப்பமானார். தற்போது, 12 வார கருவை சுமந்துள்ள அச்சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அவரது தாய் அழைத்துச் சென்றார்.

சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், குழந்தை திருமணம் பற்றி குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிறுமியின் கணவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை உள்ளதால், கருவை கலைக்கக்கோரி, சிறுமியின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை குறித்து பரிசோதித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவருக்கு உத்தரவிட்டுள்ளார்

சாதி வெறியின் கொடுமையால் 5 வருடங்களாக ஒதுக்கப்பட்ட குடும்பம் : ஒரு மாணவியின் கண்ணீர்!!

கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தைச்சேர்ந்த 17 வயது மாணவி லதா என்பவரின் குடும்பத்தை 5 வருடங்களுக்கு முன்பு சாதிப்பாகுபாடு காரணமாக அக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளனர்.

கிராமத்தினர் யாரும் இவர்களுடன் பேசுவதில்லை. இது குறித்து நாங்கள் காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பிரதமர் மோடிக்கும் கடிதங்கள் எழுதப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்த லதா, பின்னர் இனி நான் வாழ்வதற்கான எந்தக் காரணமும் இங்கு இல்லை எனக்கூறி தூக்கமாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இது குறித்து பேசிய லதாவின் தந்தை, தற்கொலைக்கு முயன்ற என் மகள் தற்போது தேறி வருவதாகவும்,24 மணிநேர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் பாட்டிலின் பெயரைச்சொல்லிதான் எனது இடம் பிடுங்கப்பட்டது. நாங்கள் அவரிடத்தில் புகார் தெரிவித்தும் பயனில்லை. காவல்துறையிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

லதாவின் உடல் தேறியபிறகு விசாரணை முடுக்கிவிடப்படும். லதாவின் தந்தை அளித்த புகாரின்படி விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குளியலறையில் இறந்து கிடந்த பிரபல நடிகை!!

பாலிவுட்டின் பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் குளியலறையில் இறந்து கிடந்துள்ளார். Yeh Hai Mohabbtein என்ற சீரியலில் வேலைக்காரி வேடத்தில் நடித்து வந்தவர் நடிகை நீறு அகர்வால்.

இவர் நேற்று குளியலறையில் மயங்கி கிடந்துள்ளார். அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என நினைப்பதற்குள் அவரின் உயிர் பிரிந்துவிட்டது. கடந்த நான்கு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

நீறு அகர்வால் இந்த தீடீர் மறைவுக்கு ரசிகர்களும் மற்றும் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவரின் இறப்பு செய்தியை இவருடன் இணைந்து நடித்த திவ்யங்கா திரிபாதி வெளியிட்டுள்ளார்.

வவுனியா மாணவி தேசிய ரீதியில் கராத்தே போட்டியில் சாதனை : சாதனை கெளரவிப்பு!!

தேசிய ரீதியில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பதக்கத்தை வென்ற இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவி ம.மோக்சிதாவை வயது (07) கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா வர்த்தக நலன்புரி சங்கத்தின் தலைவர் ஜி.சிறிஸ்கந்தராஜா தலைமையில் நேற்று மாலை (02.10) மாலை வவுனியா வாடி வீட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பண்டாரகமவில் தேசிய ரீதியில் நடைபெற்ற கராத்தே போட்டியில் (15.09.2018) கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்திருந்தார். அதனை பாராட்டி கௌரவிக்கும் முகமாக வவுனியா வர்த்தக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் வர்த்தகர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகளினால் மதிதரன் மொக்சிதாவிற்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ம.மொக்சிதாவிற்கு கராத்தே பயிற்சியினை வழங்கிய பயிற்றுவிப்பாளர் ஜெஸ்லி மார்சல் அதிதிகளால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்ட்டிருந்தார்.

தேசிய ரீதியில் கராத்தே போட்டியில் பதக்கத்தை வென்ற மதிதரன் மோக்சிதாவிற்கு வாழ்த்தி பாராட்டு கவிதை ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அதிதிகள் மதிதரன் மொக்சிதாவை பாராட்டி வாழ்த்துரைத்தனர்.

இலங்கையில் பேஸ்புக்கை தடை செய்ய நடவடிக்கை : அதிர்ச்சியில் இளைஞர், யுவதிகள்!!

இலங்கையில் பேஸ்புக் தடை ஒன்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரச தகவல் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு சமூகவலைத்தளங்களினால் ஏற்படவுள்ள அழுத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதன் காரணமாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இலங்கையில் தடை செய்ய தீர்மானிக்கப்பட்டு வருவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார்..

சீனா உட்பட பல நாடுகளில் இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

சிறுவர் தினத்தை முன்னிட்டு அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேஸ்புக் பாவனை இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. பெருந்தொகை இளைஞர்,யுவதிகள் பேஸ்புக் பாவனைக்கு அடிமையாகி உள்ளனர்.

இவ்வாறான நிலையில் இலங்கையில் பேஸ்புக்கை தடை செய்ய எடுக்கும் தீர்மானம் குறித்த பலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

-தமிழ்வின்-