விட்டுவிடுங்கள் அப்பா… கதறிய சிறுமி : தாயாரை பழிவாங்க தந்தை செய்த கொடூரம்!!

பிரித்தானியாவில் முன்னாள் மனைவியை பழிவாங்கும் பொருட்டு 8 வயதேயான சொந்த மகளை தந்தையே கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு மத்திய இங்கிலாந்தில் உள்ள Walsall நகரிலேயே இந்த ஆண்டு ஜனவரி மாதம் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தன்று பிரிந்து சென்ற மனைவி Tracey Taundry தமது முன்னாள் கணவரின் குடியிருப்பில் தங்கியிருந்த 8 வயது மகளை அழைத்துச் செல்ல வந்திருந்தார்.

டிரேசியுடன் சிறுமியும் கிளம்பிய சில நொடிகளில் திடீரென்று குடியிருப்பின் உள்ளே இருந்து வெளியே வந்த வில்லியம் பில்லிங்காம், தமது மகள் மிலியை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து மீண்டும் குடியிருப்புக்கு உள்ளேயே சென்றுள்ளார்.

பின்னர் சமையலறை கத்தியை எடுத்து சிறுமி மிலியின் மார்பில் குத்தி இறக்கியுள்ளார். சிறுமி மிலி விட்டுவிட கேட்டு கதறியும், கண்டுகொள்ளாத வில்லியம், அந்த சிறுமியை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

தகவல் அறிந்து பொலிசார் வரும்போது, சிறுமி மிலியின் உடலோடு அணைத்தபடி வில்லியம் படுத்திருந்துள்ளார். அவரது முகத்திலும் உடலிலும் ரத்தம் வழிந்தபடி இருந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில் வில்லியத்திடம் இருந்து பிரிந்து சென்ற மனைவி டிரேசி இன்னொரு பெண்ணுடன் ஒருபால் உறவு வைத்துக் கொண்டது இவருக்கு ஆத்திரத்தை தந்துள்ளது என தெரியவந்துள்ளது.

இருப்பினும் அவர்களது உறவில் தமக்கு எவ்வித பிரச்னையும் இல்லை என்றே பொலிஸ் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

நாளை கொலை குற்றம் தொடர்பில் நீதிமன்றம் தண்டனை விபரங்களை அறிவிக்கும் என கூறப்படுகிறது.

வவுனியா செட்டிகுளம் மக்கள் வங்கி கிளையில் சர்வதேச சிறுவர்தினக் கொண்டாட்டம்!!

வவுனியா வெங்கலச் செட்டிகுளம் மக்கள் வங்கி கிளையின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் நேற்று அதன் முகாமையாளர் ஏ.எச்.எம். அரூஸ் தலைமையில் வெகு விமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது.

குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக மக்கள் வங்கியின் வடமாகாணத்துக்கான பிரதி முகாமையாளர் எச்.எம்.யூ.ஹேரத் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாலர் பாடசாலைகளில் கல்வி பயிலும் 200க்கும் மேற்பட்ட சிறார்கள் கலந்துகொண்டதுடன், வர்ணம் தீட்டுதல், உருவங்களை பொருத்துதல், உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

மேலும் குறித்த நிகழ்வில் மக்கள் வங்கி கிளையில் சிறுவர் கணக்கில் பண வைப்பீடு செய்துள்ள சிறார்களின் மூவர் தெரிவுசெய்யப்பட்டு துவிச்சக்கர வண்டிகளும் பிரதம அதிதியினால் வழங்கப்பட்டதுடன் ஏனைய சிறார்களுக்கு ஊக்குவிப்பு பரிசில்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பாலர் பாடசாலை சிறார்கள், அதிதிகள், ஆசிரியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சிறுவர் தின நிகழ்வும்!!

வவுனியா நகரசபையின் பொது நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சர்வதேச சிறுவர்கள் தினமும் இன்று(01.10) முற்பகல் 11 மணியளவில் நகரசபையின் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் பொது நூலகர் திருமதி பாமினி உருச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

கதை சொல்லும் நேரம் முன்பள்ளி மாணவர்களினால் இடம்பெற்றது. சர்வதேச வாசிப்பு தினம் சர்வதேச சிறுவர் தினம் தொடர்பாக நகரசபை செயலாளர் உரையாற்றினார். இறுதியில் கலந்துகொண்ட முன்பள்ளி மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன், நகரசபை கணக்காளர் நித்தியகுமார், நிர்வாக உத்தியோகத்தர் நிஷங்க, சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் வத்சலா கிருபானந்த சர்மா மற்றும் நகரசபை உத்தியோகத்தர்கள், முன்பள்ளி மாணவர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

வழக்குகள் தொடரப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் துரிதமாக விடுதலை செய்யப்பட வேண்டும் : கே.கே. மஸ்தான்!!

வழக்குகள் தொடரப்படாமல் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் துரிதமாக விடுதலை செய்யப்பட வேண்டும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இன்று (01.10) கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பேதே மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் கே.கே. மஸ்தான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பான போராட்டங்களில் ஏன் கலந்துகொண்டிருந்தேன் என்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் மற்றும் பிரதமருடனும் பேசியிருந்தேன்.

வழக்குகள் தொடரப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் துரிதமாக விடுதலை செய்யப்பட வேண்டும் அதற்கு நான் அரச உயர்மட்டங்களுக்கு அழுத்தங்களை கொடுப்பேன் என தெரிவித்தார்.

சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஈரோஸ் அமைப்பின் இணைச் செயலாளர் ஜீவன் ராஜேந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க தமிழ் பேசும் மக்கள் மிகப்பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்குள் இலங்கை அணியில் இதை எல்லாம் கண்டுபிடியுங்கள் : குமார் சங்கக்கார அறிவுரை!!

இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் சங்கக்கார துடுப்பாட்ட வரிசை பலமாக்குவதுடன், அது ஒரு தீர்வான துடுப்பாட்ட வரிசையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

துபாயில் நடைபெற்று முடிந்த ஆசியக்கோப்பை தொடரில் இலங்கை அணி லீக் சுற்றிலே வெளியேறியது. கத்துக்குட்டி அணிகளான ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுடன் மோதி தோல்வியடைந்ததால், அந்தணி கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்தி வீரர் சங்கக்கார, நாம் சரியான நிலையில் தான் இருக்கிறோமா என்பதை முதலில் அறிய வேண்டும், இல்லையென்றால் நாம் அதை மாற்ற வேண்டும்.

வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் முடிவு மிகவும் முக்கியமானதாகும். 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை வரவுள்ளது.

அதனால் அதற்குள் நாம் சரியான ஒரு துடுப்பாட்ட வரிசையை கண்டுபிடிக்க வேண்டும், துவக்க வீரர்களை சரியாக அடையாளம் காண வேண்டும், மூன்றாவது மற்றும் ஆறாவது இடங்களில் நிலையாக விளையாடக்கூடிய வீரர்கள் யார் என்பதை அறிய வேண்டும்.

ஆசியகோப்பை தொடரில் துடுப்பாட்ட வரிசையில் சில மாற்றங்கள் இருந்தது. ஒரு வீரரை நாம் முன்னர் அல்லது பின்னர் இறக்கும் போது அவரின் நம்பிக்கை குறையும், யார் எந்த இடத்தில் இறங்கினால் சிறப்பாக விளையாடுவார்கள் என்பது அறிய வேண்டியது மிகவும் முக்கியம், மூன்றாவது,நான்காவது மற்றும் ஐந்து, ஆறாவது வீரராக துடுப்பெடுத்தாட வருபவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும்.

ஏனெனில் ஆரம்ப வீரர்கள் சொதப்பிவிட்டால், அவர்கள் அணியை முன்னெடுத்து செல்ல வேண்டும். இதனால் ஒரு நல்ல துடுப்பாட்ட வரிசையை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மனைவியால் என் உயிருக்கு ஆபத்து : பொலிஸ் பாதுகாப்பு கேட்டுள்ள இந்திய அணியின் முக்கிய வீரர்!!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால் துப்பாக்கிய ஏந்திய பொலிசாரின் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி மீது கடந்த மார்ச் மாதம் அவரது மனைவி ஜஹான் பல்வேறு புகார்களை கூறினார்.

அப்போது அவர், முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக அவரது குடும்பத்தினர் என்னை கொடுமைப்படுத்தி வருகிறார்கள். அவர்களை என்னை கொலை செய்ய கூட முயற்சித்தார்கள் என்று கூறியிருந்தார். ஆனால் இதற்கு எல்லாம் முகமது ஷமி மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் மாவட்ட நீதிபதிக்கு அளீத்துள்ள மனுவில் தனக்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதிகாப்பு கேட்டு ரிநுதார் மாவட்ட நீதிபதி ஹேமந்த் குமார் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

மாவட்ட நீதிபதி தனது கீழ்நிலை அதிகாரிகளை மனுவைப் பரிசீலுக்கும் படி கூறியுள்ளார். முகமது ஷமிக்கு அளிக்கபட்டு வந்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்கனவே விலக்கி கொள்ளப்பட்டது குறிப்பிடதக்கது.

விமான பயணத்தில் மரணமடைந்த இளம்பெண்… ஏற்கெனவே மரணத்தை வென்றவள் : தாயார் உருக்கம்!!

சான்விச் ஒவ்வாமையால் பறக்கும் விமானத்தில் சுருண்டு விழுந்து மரணமடைந்த பிரித்தானிய இளம்பெண்ணை மரணம் இரண்டாவது முறையாக அழைத்து சென்றுள்ளதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய தொழிலதிபரின் மகளான 15 வயது Natasha Ednan-Laperouse தமது நெருங்கிய தோழி மற்றும் தந்தையுடன் பிரான்சின் நைஸ் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

இந்த நிலையில் விமானத்தில் வைத்து தாம் வாங்கிச் சென்ற எள் விதைகள் சேர்க்கப்பட்ட சான்விச் ஒன்றை சாப்பிட்டுள்ளார். இது அவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்த, அவரது குடியிருப்பில் இருந்து சுமார் 800 மைல்கள் தொலைவில் இருக்கும் Cote d’Azur நகரில் வைத்து சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் நடாஷாவின் மொத்த குடும்பத்தையும் கடுமையாக உலுக்கியுள்ள நிலையில், தமது மகளை எவ்வாறு இதுபோன்ற சிக்கலில் இருந்து இதுவரை காத்து வந்தது தொடர்பில் நடாஷாவின் தாயார் மனம் திறந்துள்ளார்.

ஒவ்வாமை அவர்களது குடும்ப வியாதியாக இருந்தாலும் முட்டை உள்ளிட்ட குறிப்பிட்ட பொருட்களின் வாசம் அல்லது பயன்பாடு நடாஷாவுக்கு எக்ஸிமா என்ற நோய் பாதிப்பை அளித்துள்ளது.

நடாஷா 6 மாத குழந்தையாக இருக்கும்போது வாழைப்பழம் ஒன்றை சுவைத்த நிலையில் முதன் முறையாக அவருக்கு ஒவ்வாமை இருப்பது குடும்பத்தாருக்கு தெரியவந்தது.

சம்பவத்தன்று மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பித்த அவரை மருத்துவர்கள் போராடி மீட்டுள்ளதாக தாயார் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் நடாஷா ஒரு போராளியாகவே இதுவரையான காலகட்டத்தில் வாழ்ந்து வந்ததாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

9 மாதம் இருக்கும்போது பால் வடிவத்தில் அடுத்த சோதனை நடாஷாவுக்கு ஏற்பட்டுள்ளது. அப்போதும் அந்த முயறிசியில் இருந்து நடாஷா மீண்டு வந்துள்ளார்.

பால் பொருட்களின் துகள்கள் காற்றில் கலந்திருந்தாலே அது நடாஷாவுக்கு ஒவ்வாமையை அளித்தது. மட்டுமின்றி நடாஷா குடும்பத்தினர் வெளியே எங்கு சுற்றுலா சென்றாலும், சொந்தமாக தயாரித்த உணவுகளையே எடுத்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் நடந்த ஜூலை 17, 2016 ஆம் ஆண்டு காலை 9.50 மணியளவில் நடாஷா சான்விச் ஒன்றை வாங்கி விமானத்தில் வைத்து சாப்பிட்டுள்ளார்.

10.50 மணியளவில் ஒவ்வாமை காரணமாக விமானத்திலேயே நடாஷா சுருண்டு விழுகின்றார். அடுத்த 50 நிமிடங்களில் நடாஷாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து நைஸ் நகர மருத்துவனையில் சேர்ப்பிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. ஆனால் சிகிச்சை பலனின்றி இரவு 8 மணியளவில் நடாஷா மரணமடைந்த தகவல் மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுகிறது.

15 ஆண்டு காலம் பல முறை ஒவ்வாமை காரணமாக மரணத்தை எதிர்கொண்டு வெற்றிகண்ட நடாஷா அன்று மரணத்திற்கு தன்னை ஒப்படைத்துள்ளதாக அவர் தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

பிச்சை எடுப்பது அவமானமாக இருந்ததால் இதை செய்தேன் : இளம்பெண்ணின் தன்னம்பிக்கை கதை!!

வங்கதேசத்தில் பிச்சை எடுத்து வந்த மாற்றுத்திறனாளி பெண் தனது தன்னம்பிக்கையால் தற்போது சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.

டாக்காவை சேர்ந்தவர் ரோஜினா பேகம். கால்கள் சரியாக நடக்கமுடியாத மாற்றுத்திறனாளியான இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரை பிச்சை எடுத்து தனது குழந்தைகளை காப்பாற்றி வந்தார்.

இது குறித்து என் குழந்தைகளின் நண்பர்கள் அவர்களை கிண்டல் செய்தார்கள். என்னால் என் குழந்தைகளுக்கு அவமானம் ஏற்படக்கூடாது என முடிவெடுத்தேன்.

இதையடுத்து சகோதரர் ஒருவர் மோட்டரில் இயங்கும் ரிக்‌ஷாவை கற்றுத்தர வேண்டினேன். அவரும் எனக்கு ஆறு மாதத்தில் கற்றுக்கொடுத்தார்.

தொடக்கத்தில் நான் பெண் என்பதால் என் ரிக்‌ஷாவில் ஏற மக்கள் தயங்கினார்கள். அவர்கள் மறுக்கும்போது நான் மாற்றுத்திறனாளி எனக்கு வாழ உதவுங்கள் என்பேன். இதன்பின்னர் மக்கள் என் ரிக்‌ஷாவில் ஏற தொடங்கினார்கள்.

தினமும் 200லிருந்து 250 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். இதன்மூலம் குழந்தைகளின் உணவு மற்றும் பிற தேவைகளை பூர்த்தி செய்ய முடிகிறது.

எனக்கு பிச்சை போட்டவர்கள் தற்போது என்னை வேலைக்கு போகும் பெண்ணாக பார்க்கிறார்கள். என் ரிக்‌ஷாவிலும் அவர்கள் பயணிக்கிறார்கள் என கூறியுள்ளார்.

ஒரே மாணவியை காதலித்த 2 மாணவர்கள் : ஒருவருக்கொருவர் தீ வைத்துக் கொண்டதில் ஒருவர் பலி!!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஒரே மாணவியை காதலித்த 2 பள்ளி மாணவர்கள், ஒருவருக்கொருவர் தீ வைத்துக்கொண்டதில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஜக்டியா நகரில் உள்ள பள்ளி ஒன்றில், 10ஆம் வகுப்பு படித்து வந்த ரவி தேஜா மற்றும் மஹேந்தர் என்ற இரண்டு மாணவர்கள் ஒரே மாணவியை காதலித்து வந்துள்ளனர்.

இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றைய தினம் இருவரும் மது அருந்தியுள்ளனர்.

அதன் பின்னர் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது மாணவர்கள் ஒருவருக்கொருவர் தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

உடலில் தீப்பற்றியதில் மஹேந்தர் என்ற மாணவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். படுகாயமடைந்த மற்றொரு மாணவரான ரவி தேஜா, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டதில், மேலும் ஒரு மாணவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்திலிருந்து பீர் போத்தல்கள் மற்றும் கைப்பேசிகளை கைப்பற்றிய பொலிசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்களும் வகுப்புத் தோழர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் முதல் முறையாக சிறுவர்களுக்கான கராத்தே பயிற்சி நிலையம்!!

 

வவுனியாவில் நேற்று 30.09.2018 முதல் Sensei J.நந்தகுமார் Secretary (Black Belt 5th dan (SLKF) அவர்களினால் முதல் முறையாக சிறுவர்களுக்கான கராத்தே பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் இடம்பெற்று அவர்களுக்கான வர்ணப்பட்டிகள் வழங்குவதற்கான தரப்படுத்துதல் President & Chief Instructor Shihan I.A.Asanar (Black Belt 8th Dan (SLKF) அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

  

வவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தினம்!!

 

சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் வவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் பாடசாலை அதிபர் அ.அப்துல் நஸார் தலைமையில் சிறப்பாக இன்று இடம்பெற்றது.

தைரியமாக முன்னோக்கிச் செல்வதற்காக எமது சிறுவர்களைப் பலப்படுத்துவோம் என்னும் கல்வி அமைச்சின் கொள்கைக்கு ஏற்ப பல்வேறு நிகழ்வுகள் பாடசாலையில் மாணவர்கள் மத்தியில் இடம்பெற்றது.

சுற்று சூழல் தொடர்பில் மாணவர்களை விழிப்புணர்வூட்டும் வகையில் மரநடுகை இடம்பெற்றதுடன், மாணவர்களின் திறமைளை வெளிப்படுத்தும் வகையிலும் மாணவர்களின் தோழமை பண்மை வளர்க்கும் வகையில் பாராம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மணவர்களுக்காக மதிய உணவும் வழங்கப்பட்டது.

பாடசாலை மாணவர்கள் சிறுவர் தினத்தில் தமது திறன்களை வெளிப்படுத்தி சிறப்பாக செயற்பட்டிருந்தனர். இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் தனியார் பாடசாலை வாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் மின்மாற்றியை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்!!

வவுனியாவில் தனியார் பாடசாலை ஒன்றின் வாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் மின்மாற்றியை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (01.10) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள தனியார் ஆங்கில பாடசாலை வாயில் முன்பாக அமைந்துள்ள மின்மாற்றியை அகற்ற மின்சாரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து அப் பாடசாலையின் அதிபர் திருமதி.நகுலேஸ்வரன் கீதாஞ்சலி தலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக பாடசாலை அதிபர் கருத்து தெரிவிக்கையில், மின்மாற்றியை அகற்றுவதற்கு மின்சாரசபை பணம் கேட்பதாகவும் மழை காலம் என்பதால் மாணவர்களுக்கு குறித்த மின்மாற்றி அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் தனியார் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கையில் கையடக்க தொலைபேசிகளிற்கு வந்த மவுசு : அதிர்ச்சியில் பாவனையாளர்கள்!!

இலங்கையில் திடீரென கையடக்க தொலைபேசிகள் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமகால அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய கொள்கையினால் கையடக்க தொலைபேசிகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.

இலங்கையில் நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வரும் ரூபாவின் பெறுமதியை நிலையாக பேண பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இதற்காக பல புதிய சட்டங்களை அரசாங்கம் செயற்படுத்தி வருகின்றது.

அதற்கமைய இலங்கையில் ஒரு வருட காலப்பகுதியில் தொலைக்காட்சி, குளிர்சாதனபெட்டி, கையடக்க தொலைபேசி போன்றவற்றை கொள்வனவு செய்வதனை கடுமையாக அரசாங்கம் மட்டுப்படுத்தியுள்ளது.

தற்போது மின் உபகரணங்கள் கொள்வனவு செய்தால் அதற்காக 100 சதவீத பெறுமதியை செலுத்தி பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.

எனினும் இனி வரும் காலங்களில் மின் உபரகரணங்கள் கொள்வனவு செய்தால், பணம் செலுத்திவிட்டு நீண்ட காலம் சென்ற பிறகே பெற்றுக் கொள்ள முடியும் என கூறப்படுகின்றது.

இலங்கையில் மின் உபகரணங்களின் பெறுமதி 50 வீதம் வரை அதிகரிக்கும் என சந்தை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய எதிர்வரும் காலங்களில் கையடக்க தொலை, தொலைக்காட்சி மற்றும் குளிர்சாதன பெட்டி ஆகியவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படவுள்ளது.

தற்போது சந்தையில் 20000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் கையடக்க தொலைபேசி ஒன்று எதிர்வரும் நாட்களில் 30000 ரூபா வரை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கைத்தொலைபேசிகளுக்கான பணத்தை செலுத்தும் நுகர்வோர் அதனை பெற சில காத்திருக்க வேண்டும். அதனை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு சில காலம் எடுக்கும் சந்தை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான புதிய நடைமுறை காரணமாக இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் அதிகளவு போதையில் மிதந்த பெண் வைத்தியர் : இளைஞர்களுடன் நடந்து கொண்ட விதம்!!

கொழும்பில் பெண் வைத்தியர் ஒருவரின் அளவுக்கு அதிகமான குடிபோதையினால் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த வைத்தியர் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் இன்று வெளியிட்டுள்ளனர்.

கொழும்பின் புறநகர் பகுதியான பொரலெஸ்கமுவ பிரதேசத்தில் அதிக குடிபோதையில் பெண் வைத்தியர் ஒருவர் ஓட்டிய வாகனம், பொலிஸ் பரிசோதகர் ஒட்டிய வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இந்த விபத்தினால் பொலிஸ் பரிசோதகர் உயிரிழந்த நிலையில், அவர மனைவி மற்றும் பிள்ளைகள் படுகாயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நேற்று அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 51 வயதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த பெண் வைத்தியர் அதிக குடி போதையில் இருந்துள்ளார்.

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்தில் கலந்து கொண்ட பெண் வைத்தியர் அளவுக்கு அதிகமாக குடித்துள்ளார். இதனையடுத்து இரு பெண்கள் மற்றும் இளைஞர்களையும் அழைத்து கொண்டு வாகனத்தை ஓட்டிய நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அளவுக்கு அதிகமான குடிபோதையில் மற்றுமொரு விருந்தில் கலந்து கொள்வதற்கே இந்த குழுவினர் சென்றிருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தினால் பொலிஸ் பரிசோதகரின் முழு குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் உறவினர்களின் வீடு ஒன்றிற்கு சென்று திரும்பி வரும்போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தை ஏற்படுத்திய 39 வயதான டிரான் காவிந்தியா என்ற பெண் வைத்தியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வவுனியா நகரை வந்தடைந்த விழிப்புணர்வு துவிச்சக்கர வண்டிப் பயணம்!!

‘சுற்றுப்புறச்சூழலினை பாதுகாத்து அழகான இலங்கையினை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலிருந்து நேற்றையதினம் (30.09.2018) ஆரம்பித்த துவிச்சக்கரவண்டி விழிப்புணர்வு பயணம் இன்று (01.10.2018) மதியம் 12.30 மணியளவில் வவுனியா நகரை வந்ததடைந்தது.

இலங்கை ஒர் சிறிய நாடு இதனை மக்கள் ஆகிய நாங்கள் தான் அழகாக வைத்திருக்க வேண்டும் . மரங்களை வெட்டுவதனை நிறுத்த வேண்டும் மேலும் குப்பைகளை சீரான முறையில் அகற்ற வேண்டும் அப்போது தான் நாங்கள் அனைவரும் சுத்தமான சூழலில் நோயின்றி நிம்மதியாக வாழ முடியும் என தெரிவித்து கேகாலை மாவட்டத்தினை சேர்ந்த நாலக்க சேனடிர (வயது 27) என்ற இளைஞன் விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டி பயணத்தினை ஆரம்பித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலிருந்து நேற்றையதினம் (30.09.2018) காலை 5 மணிக்கு ஆரம்பமான விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டி பேரணியானது நேற்று மாலை மாங்குளத்தினை வந்தடைந்தது.

மாங்குளத்திலிருந்து இன்று (01.10.2018) காலை பயணத்தினை ஆரம்பித்து மதியம் 12.30 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தார். வவுனியாவிலிருந்து ஆரம்பித்த பயணம் மாலை அனுராதபுரத்தினை சென்றடையவுள்ளது.

தொடர்ச்சியாக பத்து நாட்கள் (480-500 கிலோ மீற்றர் தூரம்) பல மாவட்டங்கள் பயணித்து மாத்தறை நோக்கி செல்லவுள்ளார்.

600 பேரை காப்பாற்றிய இளைஞன் பரிதாப பலி : என் அம்மாவை அவர் தான் காப்பாற்றினார் என இளம் பெண் கண்ணீர்!!

கேரள வெள்ளத்தில் சிக்கிய மக்களைக் காப்பாற்றிய இளைஞர் வாகன விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் அம்மாநில மக்களை பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர்.

இந்த சம்பவத்தின் போது, வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றுவதற்காக மீட்பு படையினருடன் மீனவர்களும் இணைந்து மக்களைக் காப்பாற்றினார்.

அப்படி வெள்ளத்தில் சிக்கிய மக்களைக் காப்பாற்றியவர் தான் ஜெனிஸ். 24 வயதான இவர் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் சாலை விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.

இதை அறிந்த மக்கள் அவருக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர். இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

அப்போது Chengannur பகுதியின் நகரச் செயலாளர் முதலில் ஜெனிசை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது Chengannur பகுதி வெள்ளத்தில் சிக்கியுள்ளது. இதில் ஏராளமான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு போராடி வருகின்றனர். அதனால் உங்களின் உதவி தேவை என்று கூறியுள்ளார்.

இதையடுத்து ஜெனிஸ் உட்பட அவரது குழுவினர் அப்பகுதியில் சிக்கியிருந்த மக்களை காப்பாற்றியுள்ளனர். இப்படி அவர்கள் சுமார் 600-பேரை காப்பாற்றியுள்ளனர்.

இது குறித்து அமெரிக்காவில் இருக்கும் லீனா என்பவர் கூறுகையில், வெள்ளத்தின் போது நான் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்தேன். என்னுடைய 83 வயது அம்மா என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

பல முயற்சிகள் எடுத்தும் அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. இதனால் எனக்கு பதற்றம் ஏற்பட்டது. 3-4 நாட்களாக ஒன்றும் தெரியாமல் பயந்தேன். அதன் பின் எம்.எல்.ஏ Saji Cherian பேஸ்புக் லைவ்வில் வந்தார்.

அப்போது நான் என் அம்மாவை பற்றி கமெண்டில் போட்டேன், அடுத்த சில மணி நேரங்களில் என் அம்மா பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வந்தது. அம்மாவை ஜெனிஸ் குழுவினர் தான் பத்திரமாக காப்பாற்றியுள்ளனர். அம்மாவை காப்பாற்ற கடவுள் தான் அவரை அனுப்பி வைத்துள்ளார் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.