வெளிநாட்டிலிருந்து வந்த தமிழ் பெண் மர்மநபர்களால் கடத்தல் : மனைவியின் பிரிவால் தவிக்கும் கணவன்!!

வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பிய பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளார். கடந்த 13ம் திகதி நாடு திரும்பி கோபாலகிருஷ்ணபிள்ளை நந்தினி என்ற இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கட்டாரில் மூன்றாண்டுகளாக பணி புரிந்த நிலையில் கடந்த 13ம் திகதி நாடு திரும்பியுள்ளார்.

வாழைச்சேனை சேர்ந்த நந்தினி, இலங்கை வரும் தகவலை இரு தினங்களுக்கு முன்னர் கணவனுக்கு அறிவித்துள்ளார். இந்நிலையில் கணவனும் ஆவலுடன், விமான நிலையத்திற்கு சென்று காத்து இருந்துள்ளார்.

விமான நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்த போதும் மனைவி வரவில்லை. பின் மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என பதில் வர கணவன் மனைவி வரவில்லை என்று எண்ணி வீடு திரும்பி உள்ளார்.

பலமுறை மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய போது தொடர்பு கொள்ள முடியாமையின் காரணத்தால் மனைவி பணி புரிந்த வீட்டிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி விசாரித்த போது அவர்கள் 13-09-2018 காலை 6.30க்கு விமான நிலையத்திற்கு அழைத்து சென்று இலங்கைக்கு அனுப்பி வைத்ததாக கூறினார்கள்..

இது குறித்து உடனடியாக கணவன் அருகில் உள்ள வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முற்பட்ட போது பொலிஸ் அதிகாரி கணவரை விமான நிலைய பொலிஸ் பிரிவுக்கு சென்று புகார் அளிக்குமாறு கூறினர்.

இதனையடுத்து கடந்த 15ம் திகதி விமான நிலைய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் விமான நிலைய சிசிரிவி கமரா காணொளிகளை பொலிஸார் ஆராய்ந்து பார்த்துள்ளனர்.

இதன்போது தனது மனைவி 3 பைகளுடன் விமான நிலையத்தில் நின்றதும் சிறிது நேரத்தின் பின் ஒரு முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்ட விடயம் தெரிய வந்தது.

பின்பு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் செய்துள்ளார் கணவர். இதனைத் தொடர்ந்து கணவன் கொழும்பு முழுவது சுற்றித்திரிந்து வீடு வந்து சேர்ந்தார்.

அதன் பின் மிகவும் மன வேதனையோடு கணவனும் இரண்டு பிள்ளைகளும் தன் மனைவியை தேடித் திரிந்தும் இதுவரை கண்டறிய முடியவில்லை.

குறித்த பெண் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரிந்தால் 0762940741 என்ற தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீதியால் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எச்சரிக்கை!!

மொனராகலையில் வீதியால் சென்ற பெண்ணெ வழிமறித்த மர்ம குப்பல் வலுக்கட்டாயமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பெண்ணை வீதியில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தனமல்வில செவனகல பொலிஸ் பிரிவில் கிரிவெவ பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் இருவர் அவரை வீதிக்கு அருகிலுள்ள பகுதிக்கு இழுத்து சென்று கொடூரமாக துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

குறித்த பெண் அவல குரல் எழுப்பிய நிலையில், அங்கிருந்தவர்கள் இளைஞர்களை சுற்றிவளைத்துள்ளனர். எனினும் சந்தேக நபர்களில் ஒருவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மற்றைய சந்தேக நபர் பெண்ணின் கழுத்தில் இருந்த 40 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க சங்கிலியை கொள்ளையடித்து கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அதே பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான நபர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், இவ்வாறான பாதிப்புக்களிலிருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

யாழிலிருந்து சென்ற ரயிலுக்கு ஏற்பட்ட வில்லங்கம் : அதிரடியாக செயற்பட்ட மாணவனுக்கு கிடைத்த அங்கீகாரம்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினை சீர்செய்த இளைஞனுக்கு போக்குவரத்து அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜேர்மன் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் கல்வி கற்கும் ஜனித் திமந்த விதானாராச்சி என்ற மாணவன் ரயிலின் கோளாறை சீர் செய்திருந்தார்.

கடந்த வாரம் இடம்பெற்ற இந்த செயற்பாடு காரணமாக குறித்த இளைஞன் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்தார்.

இது தொடர்பில் தகவல் அறிந்த போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, குறித்த இளைஞனை அமைச்சுக்கு அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரயில் திணைக்களத்தினால் குறித்த இளைஞன் பாராட்டப்பட்டதுடன், போக்குவரத்து அமைச்சினால் அவருக்கு பாராட்டு கடிதம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விபரித்த இளைஞன், நான் குடும்ப உறவினர்கள் சிலருடன் அனுராதபுரத்தில் இருந்து ரயிலில் வந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றது. அந்த சந்தர்ப்பத்தில் நான் ரயிலில் உறங்கி கொண்டிருந்தேன். எனது அம்மா இந்த ரயிலின் கோளாறினை தீர்க்க முடியுமா என என்னிடம் கேட்டார். அதற்கமைய அதிகாரிகளின் அனுமதியுடன் என்ன கோளாறு என பார்த்து அதனை சீர்செய்தேன்.

இந்த சம்பவத்தை யாரோ ஒருவர் பேஸ்புக் மூலம் வெளியிட்டதனை தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வெளியாகியது. அதற்கு போக்குவரத்து அமைச்சர் என்னை பாராட்டியிருந்தார். மகிழ்ச்சியாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அபார திறமையை வெளிப்படுத்தும் இளைஞன் பரிதாபமாக மரணம்!!

இலங்கையில் மோட்டார் சைக்கிளில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அத்துருகிரிய நுழைவாயிலுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹொரனை பிரதேசத்தை சேர்ந்த திலான் பத்திரகே என்ற 23 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார்.

எதிர் பக்கத்தில் இருந்து வந்த மோட்டார் வாகனத்துடன் இளைஞன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மோதியமையினாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இளைஞனின் நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட காயமே மரணத்திற்கு காரணம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் முதன் முறையாக 5 தம்பதிகளுக்கு ஒரே நேரத்தில் வரவேற்பு நிகழ்வு!!

 

வவுனியா புகையிரத நிலையத்திற்க்கு முன்பாக உள்ள புலேஸ் விருந்தினர் விடுதியில் ஐந்து புதுமண தம்பதியினருக்கு ஒரே நேரத்தில் வரவேற்பு வைபவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்நிகழ்வு பற்றி மேலும் அறியவருவதாவது

நேற்று முந்தினம் (30.09.2018) அன்று வவுனியா புகையிரதநிலையத்திற்க்கு முன் உள்ள புலேஸ் விருந்தினர் விடுதி மண்டபத்தில் ஒரே நேரத்தில் ஐந்து புதுமண தம்பதியினருக்கு வரவேற்ப்பு வைபவம் ஒன்று இடம்பெர்றுள்ளது. தம்பதிகளின் நண்பர்கள் வட்டம் இந்த வைபவத்தை சிறப்புடன் நடாத்தியுள்ளனர்.

புதிதாக திருமணம் முடித்த ஐந்து புதுமணத்தம்பதிகளின் நண்பர்கள் ஒரே நேரத்தில் ஐந்து தம்பதிகளையும் வரவேற்று விருந்துபசாரத்தையும் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு ஐந்து தம்பதிகளையும் ஒரே இடத்தில் வரவேற்பு நிகழ்வுகளை செய்ததென்பது வவுனியாவிலேயே இதுவே முதல் தடைவை என்பது குறிப்பிடத்தக்கதுடன் சிறந்த நண்பர்கள் வட்டத்திற்க்கு இந்நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இடம்பெற்ற போராட்டத்தை புறக்கணித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு!!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியாவில் நேற்று(01.10) இடம்பெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புறக்கணித்துள்ளனர்.

நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 12 பேர் தம்மை விடுவிக்குமாறும், தம்மீதான வழக்குகளை துரிதப்படுத்துமாறும் கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகம் அருகாமையில் காலை 7 மணிமுதல் 5 மணிவரை சத்தியாகிரகப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

இப்போராட்டத்தில் அரசியல் கைதிகளின் நிலையினை கருத்தில் கொண்டு இன, மத பேதமின்றி பல்வேறு அரசியல் கட்சிகளும், பொது அமைப்புக்களும் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான இ.இந்திரராஜா, ம.தியாகராசா மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி, ஸ்ரீ ரெலோ கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, ஈழவர் ஜனநாயக முன்னணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ரெலோ, புளொட், தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் என எவரும் இதில் கலந்து கொள்ளவில்லை.

இது தொடர்பில் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைகலநாதன் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவர் தொலைபேசி அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதேவேளை, வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக செல்வம் அடைக்கலநாதன், சிவமோகன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா ஆகியோரும் வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களாக ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வீட்டுத்திட்டத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து குடும்பம் ஒன்று போராட்டம்!!

வவுனியாவில் இன்று காலை 8.30 மணியளவில் குடும்பம் ஒன்று வீட்டுக்கடன் வழங்கும்போது வீட்டுத்திட்டம் என்கின்ற பெயரில் மக்களுக்கு வீண் சட்டங்கள் திணிக்கப்படுகின்றன. மக்கள் வாழ்வதற்கு வீடா? அல்லது அரசாங்க விளம்பரத்திற்கு வீடா? எனத் தெரிவித்து காட்சிப்படுத்தப்பட்ட பதாதையுடன் வவுனியா தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினரின் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

இவ்விடயம் குறித்து வவுனியா அண்ணாநகரில் வசித்து வரும் குடும்பத்தலைவர் தெரிவிக்கும்போது, அண்ணாநகர் பகுதியில் நான்கு பிள்ளைகளுடன் காணி ஒன்றில் வசித்து வருகின்றேன். எனது தொழில் சாரதி. கடந்த 20 வருடங்களாக வீட்டுத்திட்டம் இன்றி இடம்பெயர்ந்து வசித்து வருகின்றேன்.

இந்நிலையில் வீடமைப்பு அதிகார சபையினரிடம் வீட்டுக்கடன் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வழங்கியிருந்தேன். தற்போது அத்திவாரம் வெட்டப்பட்ட நிலையில் எனது கடன் விண்ணப்பம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

காரணம் கேட்டால் ஐந்து இலட்சம் வீட்டுக்கடனுக்கு 500சதுர அடி வீடு பெற்றுக்கொள்ள முடியும் ஆனால் எனது அத்திவாரத்தின் அளவு 600 சதுர அடியைக் கொண்டுள்ளது. எனவே தேசிய வீடமைப்பு அதிகாரசபையினரின் திட்டத்திற்குட்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

எனது வீட்டிற்கு மேலதிகமாக வரும் செலவுகளை நான் பொறுப்பேற்றுக்கொள்கின்றேன். எனக்கு வழங்கவேண்டிய வீட்டுக்கடன் பணத்தை தருமாறு பல தடவைகள் கோரியிருந்தேன். ஆனாலும் வழங்கவில்லை. இதையடுத்தே இன்று காலை குறித்த அலுவலகத்திற்கு முன்பாக எனது குடும்பத்தினருடன் போராட்டம் மேற்கொண்டுள்ளேன்.

அங்கு வருகை தந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் போராட்டம் மேற்கொண்ட குடும்பஸ்தருடன் கலந்துரையாடியதுடன் வவுனியா தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் திருமதி வீ.எம்.வீ.குறூஸ்சுடன் அலுவலகத்தில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மாவட்ட முகாமையாளர் தெரிவிக்கும்போது, வீட்டுக்கடன் வழங்கும்போது கடன் உடன்படிக்கை விண்ணப்பப்படிவத்தில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 500 சதுர அடியில் வீடு அமைக்கப்படவேண்டும். அதற்கு உடன்படுகின்றேன் எனத் தெரிவித்து ஒப்பமிடப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த வீடு 600 சதுர அடியைக் கொண்டுள்ளது எனவே எமது சட்டத்திற்கு வீடு அமையவில்லை. தற்போது இவருக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டால் இவரைப்பார்த்துவிட்டு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது தானே எமக்கும் வழங்கவேண்டும் என்று பலரும் என்னிடம் வந்து இதே நடைமுறையில் தமக்கு வீட்டுக்கடன் வழங்குமாறு தமது கோரிக்கைகளை முன்வைப்பார்கள் எனவே அதை வழங்க முடியாது.

கடந்த வருடம் அவ்வாறு பல விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டபோதிலும் இன்று வரையில் பல வீடுகள் முழுமை பெறவில்லை.பல வீடுகள் பாதியில் நிற்கின்றதை அவதானிக்க முடிகின்றது.

இவ்வருடம் இவ்வாறான திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கு மேற்பட்ட பல வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எமக்கு வழங்கப்பட்ட சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே எம்மால் வீட்டுக்கடன் வழங்க முடியும்.

இவரின் கோரிக்கை குறித்து கொழும்பு தலைமை அலுவலகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று இரு தினங்களில் பதில் பெற்றுத்தருவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து இரு பகுதியினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டு போராட்டம் மேற்கொண்ட குடும்பஸ்தர் தனது போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.

வவுனியாவில் போக்குவரத்துப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையினால் 30க்கு மேற்பட்டவர்கள் சிக்கினர்!!

வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் நேற்று (01.10.2018) மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 30க்கு மேற்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

குருமன்காடு, வைரவப்புளியங்குளம், புகையிரத நிலைய வீதி, மாடசாமி கோவிலடி, யங்ஸ்டார் மைதானத்திற்கு அருகே போன்ற பகுதிகளில் மாலை நேரங்களில் பாடசாலை இளைஞர்கள் மற்றும் வீதியில் இளைஞர்கள் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணிவதில்லை, ஓர் மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது தொடர்பாக பல முறைப்பாடுகள் பொதுமக்களினால் பொலிஸாருக்கு முன்வைக்கப்பட்டது.

இதனை கருத்தில் கொண்ட வவுனியா மாவட்ட போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான போக்குவரத்து பொலிஸார் குறித்த பகுதிகளில் மாலை 3 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இத் திடீர் சோதனை நடவடிக்கையின் போது சுமார் 30க்கு மேற்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த மாதம் 12ம் திகதி வவுனியா யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 20க்கு மேற்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  

உடல் எடையைக் வேகமாக குறைக்க வேண்டுமா : இதில் ஒன்றை முயற்சி செய்யுங்கள்!!

உடலில் அதிகப்படியான கொழுப்புக்களின் தேக்கத்தால் ஒருவரது உயரத்திற்கும் அதிகமான உடல் எடை கூடுகிறது. உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வதற்கு, பாரம்பரியமாக நம் முன்னோர்கள் பின்பற்றிய சில இயற்கையான வழி முறைகளைப் பற்றி பார்ப்போம்.

எலுமிச்சை பழம் : தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடித்து வர வேண்டும். இந்த பானத்தை தொடர்ந்து குறைந்தது 3 மாதம் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பூண்டு பால் : ஒரு டம்ளர் பாலில் 4-5 பூண்டை போட்டு அதனை கொதிக்க வைத்து இறக்கி பின் பாலுடன் பூண்டை சாப்பிட வேண்டும். இதனால் பூண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும்.

கற்றாழை : கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து அதனுடன் 1 கப் ஆரஞ்சு அல்லது திராட்சை அல்லது வெறும் நீரை மட்டும் ஊற்றி, 2-3 நிமிடம் அரைத்து அதை தினமும் ஒரு முறை என்று 1 மாதம் தொடர்ந்து குடிக்க, வேண்டும்.

மாட்டுப் பால் : தினமும் வெதுவெதுப்பான மாட்டுப் பாலில் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.

இஞ்சி சாறு : இஞ்சி சாறு உடலில் மெட்டபாலிசத்தின் அளவு அதிகரித்து உடலில் உள்ல கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறையும். எனவே இஞ்சி சாற்றினை அன்றாடம் ஒரு டம்ளர் பருகி வர உடல் எடை குறையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

புடலங்காய் : புடலங்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும் புடலங்காய் பொரியல் செய்து, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

கரட் மற்றும் மோர் : தினமும் மோரில் கேரட்டை அரைத்து கலந்து குடித்து வந்தால் உடல் எடை மிக வேகமாக குறைவதை நன்கு பார்க்கலாம்

க்ரீன் டீ : தினமும் 3-4 கப் க்ரீன் டீ குடிக்கலாம் அல்லது க்ரீன் டீயுடன் இஞ்சி சாறு அல்லது மிளகுத் தூள் கலந்து குடித்து வந்தால் உடல் எடையில் சிறப்பான மாற்றத்தைக் காணலாம்.

பப்பாளி : பப்பாளிக் காயை பருப்புடன் சேர்த்து அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர, அதுவும் உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

கறிவேப்பிலை : தினமும் 10 கறிவேப்பிலை இலைகளை காலையில் எழுந்ததும் சாப்பிடுவதன் மூலம், உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றைத் தடுக்கலாம் என ஆயுர்வேதம் கூறுகிறது. அதிலும் குறைந்தது 3-4 மாதம் தொடர்ந்து கறிவேப்பிலையை குடித்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமனில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

தக்காளி : தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 தக்காளியை சாப்பிட வேண்டும். அதுவும் தக்காளியை தோல் மற்றும் விதையுடன் சாப்பிட வேண்டும்.

முட்டைக்கோஸ் : முட்டைக்கோஸை பச்சையாக அல்லது வேக வைத்து சாப்பிடுவதன் மூலம், உடல் எடையைக் குறைக்கலாம். மேலும் இதனால் உடலில் கொழுப்புக்கள் தேங்காமல் செய்து, மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் பல பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது.

இந்தோனேசியா பூகம்பம் : 2,000 பேர் நிலச்சரிவில் சிக்கி மாயம் : வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே நகரத்தில் மட்டும் சுமார் 2,000 பேர் வரை புதைந்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசிய சுனாமியால் கடுமையாக பாதிப்புக்குள்ளான பலு நகரில் 100 மீற்றர் நீளத்தில் குப்பைகளும் கட்டிட இடிபாடுகளும் மலைபோல் குவிந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

வெள்ளியன்று இரவு கடற்கரை ஆண்டு திருவிழாவில் பங்கேற்றிருந்த ஆயிரக்கணக்கானோர் 20 அடி உயரத்தில் தாக்கிய சுனாமி பேரலைக்கு இரையாகியுள்ளனர்.

பலு நகரம் உருக்குலைந்து காணப்படுகிறது. இதுவரையான ஆய்வுகளின்படி சுமார் 1,203 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மாயமானவர்களின் எண்ணிக்கை பதின்மடங்கு என்பதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சுகாதாரம் மற்றும் மத காரணங்களுக்காக இன்றைய தினமே மீட்கப்பட்டுள்ள உடல்களை குவியல் குவியலாக அடக்கம் செய்துள்ளனர். இஸ்லாமிய நாடு என்பதால் மரணமடைந்து ஒரு நாட்களுக்குள் சடலத்தை அடக்க வேண்டும் என்பது அவர்களது மத நம்பிக்கையாகும்.

ராணுவ தளபதி Tiopan Aritonang வெளியிட்ட தகவல்படி, ஒரே ஒரு மருத்துவமனையில் இருந்து மட்டும் சுமார் 545 சடலங்களை ஒரே குழியில் புதைத்ததாக தெரியவந்துள்ளது.

அனைத்து சடலங்களின் புகைப்படங்களையும் அதிகாரிகள் பாதுகாக்க உள்ளனர். தேடி வரும் உறவினர்களுக்கு அது உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி புதைக்கும் முன்னர் ஒவ்வொரு உடலாக பொதுமக்களுக்கு அதிகாரிகளால் காண்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களும் இதுபோன்று சடலங்களை புதைக்க இருப்பதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் மாயமாகியுள்ளதாக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது.

நிலச்சரிவுகளில் சிக்கி Petobo நகரில் 2,000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். கடுமையான நிலநடுக்கம் காரணமாக சக்திவாய்ந்த நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Petobo நகரில் இதுவரை மீட்பு நடவடிக்கை முடிவுக்கு எட்டவில்லை எனவும், அங்குள்ள மோசமான சூழல் மீட்பு நடவடிக்கையை தாமதப்படுத்துவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பலு மற்றும் டோங்கலா பகுதியில் மட்டும் ராணுவம், பொலிசார் உள்ளிட்ட 1,300 மீட்பு குழுவினர் துரித நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாயின் சடலத்தின் மீது உட்கார்ந்த அகோரி : பூஜை செய்து உடலை அடக்கம் செய்த வீடியோ!!

தமிழகத்தில் தாயின் சடலத்தின் மீது உட்கார்ந்து பூஜை நடத்திய அகோரியைக் கண்டு அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துள்ளனர். திருச்சி மாவட்டம் அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையில் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது.

காசியில் அகோரி பயிற்சி பெற்ற திருச்சியை சேர்ந்த மணிகண்டன் நிர்வாகித்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டனின் தாயார் மேரி காலமானார். இதையடுத்து அரியமங்கலம், மத நல்லிணக்க இடுகாட்டிற்கு சென்ற மணிகண்டன், தாயின் சடலம் மீது அமர்ந்து பூஜை செய்தார்.

அதன் பின் உடலை அடக்கம் செய்தார். அகோரிகளின் இந்த விசித்த பூஜையானது அப்பகுதினரிடையே வியப்பை ஏற்படுத்தியது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.

மனைவியின் உடல் பருமனை விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த கணவன்!!

தனது மனைவியின் உடல் பருமனை கிண்டல் செய்த நபர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் கணவர். சுஜித்-சுவேதா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்கள் தங்கள் திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தனர்.

அத்துடன் சுஜித் தனது பேஸ்புக் பக்கத்தில், தங்கள் தேன்நிலவு கொண்டாட்டத்தை பதிவு செய்திருந்தார். இவர்கள் பதிவுகளை சிலர் விமர்சித்தனர். குறிப்பாக சுவேதாவின் உடல் பருமனை குறிப்பிட்டு விமர்சித்திருந்தனர். இந்நிலையில் தான் அதற்கு பதிலளிக்கும் வகையில் சுஜித் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், உடல் பருமன் என்பதில் ஒன்றுமில்லை. இவளுக்குள் ஒரு சிறிய இதயம் உள்ளது. அது மிகவும் அழகானது. உடல் பருமனாக இல்லாதவர்கள் தான் வாழவேண்டும் என்றில்லை. நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். எனக்கு உடல் பருமனாக இருப்பது தான் பிடிக்கும்.

மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு உடல்பருமன், வெளிப்புற அழகு இதெல்லாம் முக்கியமில்லை. நல்ல மனது தான் முக்கியம். அது இவளிடம் இருக்கிறது என்று நம்பிக்கையுடன் பேசியுள்ளார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

மனைவி இறந்துவிட்டதாக கருதி தண்டவாளத்தில் தலை வைத்த கணவன் : அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

தமிழ்நாட்டின் நாகர்கோவிலில் மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய கணவர் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டார்.

டால்டன் செல்வ எட்வர்ட் என்பவர் வழக்கறிஞராக இருந்த நிலையில் அவரது மனைவி சைனி பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.

தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அடிக்கடி எதாவது விடயம் தொடர்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சொந்த வீடு கட்டுவது தொடர்பாக கணவன்- மனைவி இருவரும் பேசி உள்ளனர். அப்போது எட்வர்ட் போதையில் இருந்ததால் மீண்டும் சைனியுடன் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஆத்திரமடைந்த எட்வர்ட் அரிவாளை எடுத்து சைனியை சரமாரியாக வெட்ட அவர் பலத்த காயத்துடன் மயங்கி சரிந்துள்ளார்.

மனைவி இறந்து விட்டதாக கருதிய வழக்கறிஞர் எட்வர்டு, மைசூருக்கு தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைனி உயிருக்கு போராடி வருகிறார்.

இந்நிலையில், மைசூரில் ரெயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் எட்வர்டு சடலமாகக் கிடந்தார். அவரது சட்டை பையில் இருந்த அடையாள அட்டையை வைத்து, தற்கொலை செய்தது அவர் தான் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

தாய் தந்தையரின் ஈகோ யுத்தத்தால் அவர்களின் இரு குழந்தைகளும் தவித்து வரும் சூழலில் பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

மகன் இறந்த அதிர்ச்சியில் தாயாரும் மரணம் : கதறும் உறவினர்கள்!!

தமிழகத்தில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாயாரும் உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தக்கலை அருகே திக்கணங்கோடு மாங்காடு பகுதியை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ்(வயது 46). இவருக்கு செல்லா பங்கஜம் என்ற மனைவியும், ஜெனிலா, ரீபன் என இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

ஐஎஸ்ஆர்ஓ நிறுவனத்தில் டெக்னீசியனாக பணியாற்றி வந்த மைக்கேல்ராஜீக்கு திடீரென உடல்நலம் குன்றியது. இதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த 29ம் திகதி கலமானார்.

இவரது சடலத்தை உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு வந்த போது, தாயார் மரியரோசிலி(வயது 70) கதறி அழுதார். மகனை பார்த்த அதிர்ச்சியில் மயங்கி விழவே, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மைக்கேல்ராஜ் இறந்த துக்கம் தாங்காமல் இருந்த உறவினர்கள், மரியரோசிலியும் இறக்க சோகத்தில் மூழ்கிப்போயினர். முதலில் மகனையும், பின்னர் தாயாரையும் அடக்கம் செய்தனர்.

திருமணமான 5 மாதத்தில் உயிரை மாய்த்து கொண்ட புதுப்பெண்!!

இந்தியாவின் ஹைதராபாத்தில் திருமணமான 5 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சந்தீப் என்ற இளைஞரும், ரூபிணி (25) என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் காதலுக்கு ரூபிணியின் தந்தை முரளி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எதிர்ப்பை மீறி சந்தீப்பும், ரூபிணியும் திருமணம் செய்துகொண்டு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த ரூபிணியின் திருமண வாழ்வில் சந்தீப்பின் பெற்றோர்களான சத்யநாராயணா மற்றும் லலிதா மூலம் பிரச்சனை வந்தது.

காதல் திருமணம் செய்ததால் வரதட்சணை எதுவும் ரூபிணி தராத நிலையில், அவரின் தந்தை முரளியின் சொத்தில் பங்கு கேட்டனர் சந்தீப்பின் பெற்றோர். இதையடுத்து ரூபிணியை சந்தீப் மற்றும் அவர் பெற்றோர் கொடுமைப்படுத்த தொடங்கினார்கள்.

இது குறித்து ரூபிணி, தனது தந்தை முரளியிடம் கூற அவர் வந்து சந்தீப் மற்றும் அவர் பெற்றோர்களிடம் சமாதானம் பேசினார். சிறித்து காலம் கழித்து சொத்தை பிரித்துதருவதாக கூறினார். ஆனாலும் அவர்களின் கொடுமை ரூபிணிக்கு தொடர்ந்தது.

இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து முரளி பொலிசாரிடம் புகார் அளித்த நிலையில் சந்தீப் மற்றும் அவர் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் சந்தீப்பை கைது செய்துள்ளனர்.

நடிகர் கலாபவன் மணி கொல்லப்பட்டாரா? காட்சியால் சர்ச்சை!!

சாலக்குடிக்காரன் சங்ஙாதி என்ற திரைப்படத்தில் நடிகர் கலாபவன் மணி கொல்லப்பட்டதாக காட்சிகள் வருவதால் இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி மர்மமான முறையில் கொச்சி தனியார் மருத்துவமனையில் இறந்தார்.

அவரது உடலில் விஷ சாராயத்தில் காணப்படும் மெத்தனால் என்ற வேதிப் பொருள் காணப்பட்டதால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

ஆனால், பின்னர் நடந்த பிரதேச பரிசோதனையில் அவரது உடலில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருப்பது தெரிய வந்தது. இதனால் கலாபவன் மணி விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.

கலாபவன் மணி மரணம் குறித்த போலீஸ் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் கலாபவன் மணியின் சொந்த கதையை மையமாக வைத்து பிரபல இயக்குனர் வினயன் ‘சாலக்குடிக்காரன் சங்ஙாதி’ என்ற பெயரில் சினிமாவை இயக்கினார்.

இந்த படம் கடந்த வாரம் வெளியாகி சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் கடைசியில் கலாபவன் மணி கொல்லப்படுவதாக காட்சிகள் வருகிறது.

இதுகுறித்து அறிந்த, சிபிஐ அதிகாரிகள், இதுபற்றி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறி இயக்குனர் வினயனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

கலாபவன் மணியின் மரணம் குறித்து வினயனுக்கு தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.