வவுனியாவில் 20 வருடங்கள் காணி அனுமதிப்பத்திரம் இன்றி வசிக்கும் குடும்பங்கள்!!

வவுனியா காத்தார்சின்னக்குளம் 215பி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள 10 குடும்பங்கள் சுமார் 20 வருடமாக காணி அனுமதிப்பத்திரம் இன்றி வசித்து வருகின்றனர். இதனால் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை மற்றும் தமது தேவைகளுக்கு காணி அனுமதிப்பத்திரங்களை கோரி வருகின்றனர்.

இதனால் பல்வேறு அடிப்படைத்தேவைகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளது, எனவே நாங்கள் குடியிருக்கும் காணிக்கு அனுமதிப்பத்திரம் பெற்றுத்தருவதுடன் வீட்டுத்திட்டங்களையும் வழங்குமாறு கோரி இன்று நண்பகல் வவுனியா தேசிய வீடமைப்பு அதிகாரி சபையின் அலுவலகத்திற்கு குறித்த 10 குடும்பங்களும் சென்று தமது நிலைப்பாடுகள் தொடர்பாக வவுனியா தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அலுவலகரைச்சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வியடம் குறித்து அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கும்போது,  காத்தார்சின்னக்குளம், ஸ்ரீராமபுரம் வீட்டுத்திட்டத்தில் வசித்து வரும் எங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை. பொதுத் தேவைக்கு ஒதுக்கப்படாத காணியில் கடந்த 20 வருடமாக குடியிருந்து வருகின்றோம்.

அந்த நேரத்தில் அக்காணியினை தேசிய வீடமைப்பு அதிகார சபையினர் கேள்விக் கோரல் மூலம் அறிவித்தல் கோரப்பட்டது. நாங்கள் வசித்து வரும் காணிக்கு கேள்விக் கோரல் போடப்பட்டுள்ளதால் எமது பகுதியை விடுத்து வேறு பகுதியிலிருந்து கேள்விக் கோரல் மூலம் பலர் விண்ணப்பித்துள்ளனர்.

இதையடுத்து நாங்கள் இவ்விடயம் குறித்து தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அலுவலகத்திற்குச் சென்று கேட்டபோது குறித்த கேள்விக் கோரல் அறிவித்தல் அப்படியே கைவிடப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். எனினும் எமது காணி விடயம் குறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. நாங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சென்று எமது காணியின் ஆவணப்பத்திரம் குறித்து கேட்டு வருகின்றோம்.

ஆளுநர், பிரதேச செயலாளர், கிராம அலுவலகர் அனைவருக்கும் கடிதங்கள் அனுப்பியிருந்தோம். எவரும் பதில் அனுப்பவில்லை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கொழும்பு தலைமையகத்திலிருந்து எமக்கு இன்னும் பதில் வரவில்லை என்று தெரிவித்து வருகின்றனர்.

கடந்த இருபது வருடமாக எங்களுக்கு எவ்விதமான முடிவுகளையும் பெற்றுத்தரவில்லை. எமது தேவைகள் குறிப்பாக பாடசாலையில் மாணவர்களைச் சேர்ப்பது முதல் கிராம அலவலகரின் தேவைகளுக்குச் சென்றால் கூட காணி அனுமதிப்பத்திரங்களைக் கோரி வருகின்றார்கள்.

நங்கள் வசித்துவரும் பகுதியில் நாட்டப்பட்ட தென்னைமரத்திற்குக்கூட அவர்களுக்கு பதில் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு நாட்டப்பட்ட 14 தென்னை மரங்களையும் எங்களை வைத்து அகற்றியுள்ளனர்.

மலசலகூடம் அமைக்கவேண்டாம் என்று தெரிவித்துள்ளதுடன் மூன்று குடும்பங்கள் இன்று வரையில் மலசலகூடம் அமைக்கப்படவில்லை. மறைப்புக்களை வைத்துக்கொண்டே பயன்படுத்தி வருகின்றோம். கிராம சேவையாளரிடமிருந்து எமக்கு எவ்வித வாழ்வாதர உதவிகளையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

எமக்கு காணி ஆவணம் பெற்றுக்கொள்வதற்கும் இன்று ஒரு முடிவினைப்பெற்றுக்கொள்ளவே நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று வருகை தந்திருக்கின்றோம். எமக்கு நிரந்தரமாக அக்காணியினை பெற்றுத்தரவேண்டும் வீட்டுத்திட்டத்திற்குள் உள்வாங்கப்படவேண்டும். குறித்த 10குடும்பங்களுக்கும் அக்காணியினைப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று மேலும் கோரியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுயிலுள்ள 10 குடும்பத்தினரையும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளரைச் சந்தித்தபோது, அமைச்சரவை அனுமதியுடன் 10 பேர்ச் காணியினையே பெற்றுக்கொள்ள முடியும். இவர்கள் குடியிருக்கும் பகுதி தேசிய வீடமைப்பு அதிகார சபையினருக்கு பாரப்படுத்தப்பட்ட காணி எனினும் பிரதேச சபையினரின் அனுமதியுடன் 20 பேர்ச் காணியினை பெற்றுக்கொடுக்க நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.

அரசாங்கத்தின் சுற்றறிக்கைக்கு மாறாக நாங்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. இவர்கள் அக்குடியிருப்புக்குள் விடப்பட்ட பொதுக்காணியில் அத்துமீறி குடியேறியவர்கள் என்றும் சொல்லாம். இவர்களுக்காக வேலையைச் செய்வதற்கு எங்கள் மட்டத்தில் எதனையும் செய்துகொள்ள முடியாது. தலைமை காரியாலயத்திலுள்ள சொத்து முகாமையாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து வடக்கு புனர்வாழ்வு மீள் குடியேற்றப் பிரதி அமைச்சர் கே. காதர் மஸ்தானின் கவனத்திற்கு அப்பகுதியிலுள்ளவர்களினால் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து பிரதி அமைச்சர் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அலுவலர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியதுடன் இன்று கொழும்பிலுள்ளதாகவும் ஓரிரு தினங்களில் தேசிய வீடமைப்பு அதிகார சபை, குறித்த 10 குடும்பங்கள், பிரதி அமைச்சர் ஆகிய முற்தரப்பினரையும் ஒன்றிணைத்து ஒரு கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு இன்று இணக்கம் ஏற்பட்டுள்ளது.

வவுனியாவில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நூலகக் கண்காட்சி!!

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் நூலகக் கண்காட்சி இன்று (27.09) பாடசாலை அதிபர் த.பூலோகசிங்கம் தலமையில் இடம்பெற்றது.

கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட மாணவர்களுக்கு பயன்படக்சுடிய ஒரு தொகுதி புத்தகங்கள் வாசிப்பு தினத்தை முன்னிட்டு கண்காட்சிக்காக வைக்கப்பட்டது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கோவில்குளம் கிராம உத்தியோகத்தர் பி.பத்மரஞ்சன் நூலகக்கண்காட்சியை திறந்து வைத்தார்.

பாடசாலை மாணவிகளால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு நூலக கண்காட்சி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதிதிகள் நூலகக் கண்காட்சியை பார்வையிட்டதை தொடர்ந்து பாடசாலை மாணவர்கள் நூலகக் கண்காட்சியை பார்வையிட்டிருந்தனர்.

இக்கண்காட்சியில் பொது அறிவு, கல்வியல், கலை, புவியியல், தகவல் தொழில் நுட்பம் மற்றும் மாணவர்களுக்கான பயன்தரும் நூல்கள் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வை பாடசாலை நூலகப் பொறுப்பாசிரியர் திருமதி மேசி அருள்னேசன் ஒழுங்குபடுத்தியிருந்தார்.

நிகழ்வில் விருந்தினர்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஆர்.சந்திரிக்கா, பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள்,மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு நூல்களை பார்வையிட்டிருந்தனர்.

யாழில் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த சிங்களவர்!!

யாழ். பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் சிங்கள நபர் ஒருவரால் தனி மனித போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கில் சமாதானம் சீர்குலைந்திருப்பதால் அதனை கட்டியெழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இவர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

யாழ். பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று காலை 9.00 மணி முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

“கிழக்கில் சமாதான மாதா மரண பங்கத்தில் இருக்கும் நிலையில், வடக்கிலும் சமாதானம் சீர்குலைவது ஆபத்து என்பதால் சமாதானத்தை பாதுகாத்து, உலக சமாதானம் உருவாக வேண்டும்” என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிங்கள நபர் தெரிவித்துள்ளார்.

சகோதர இனத்தைச் சேர்ந்த குறித்த நபர் தனி மனிதனாக யாழ்ப்பாணத்தில் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை அங்குள்ள அனைவர் மத்தியிலும் பெரிதாக பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

6 மனைவிகள், 13 பிள்ளைகள் : உல்லாசமாக வாழ்ந்த கணவனுக்கு மனைவி கொடுத்த தண்டனை!!

மனைவி தும்புத்தடி உடையும் வரை தன்னை தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடு செய்த மருத்துவரொருவருக்கு குறித்த சட்டரீதியான மனைவிக்கு மேலதிகமாக 5 மனைவிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

அத்துடன் மொத்தமாக 13 பிள்ளைகள் இருப்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்ட ரீதியான மனைவிக்கு 3 பிள்ளைகள் இருப்பதுடன், இந்த மூன்று பிள்ளைகளில் இரண்டரை வயது மகனை அழைத்து செல்ல வந்த போதே, மனைவி தும்புத்தடி உடையும் வரை கணவனை தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.

மனைவியின் தாக்குதலை பொருட்படுத்தாது மகனை அழைத்துச் சென்று அந்த மருத்துவர் தனது இரண்டாவது மனைவியிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த நிலையில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் தலையிட்டு பிள்ளையை மீட்டு முதல் மனைவியிடம் ஒப்படைத்துள்ளனர்.

தும்புத்தடி உடையும் வரை மனைவி தன்னை தாக்கியதாக மருத்துவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய கொழும்பு தெற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஈ.எஸ்.தயாரத்னவின் விசேட ஆலோசனையின் பேரில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரதீப் விக்ரமரத்ன மற்றும் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி பரீஷிகா இனோகா குமாரி ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது மருத்துவர் மற்றும் அவரது சட்டரீதியான மனைவி ஆகியோரை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையின் போது அந்த மருத்துவர் கொழும்புக்கு வெளியில் உள்ள பிரதேசம் ஒன்றில் இருக்கும் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றி வந்த நிலையில், சேவையை கைவிட்டுச் சென்றிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மருத்துவரின் சட்ட ரீதியான முதல் மனைவி, மருத்துவருக்கு சொந்தமான கொள்ளுப்பிட்டியில் உள்ள ஆடம்பர வீட்டில் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகின்றதுடன் அவர், தனது கணவனுக்கு மேலும் 5 மனைவிகள் இருப்பது குறித்து திருமணமாகி சில காலங்களின் பின்னரே அறிந்து கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும் மனைவி, மருத்துவரை தும்புத்தடி உடையும் வரை தாக்கியதாக செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான விசாரணை இணக்க சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் கூறியுள்ளனர்.

யாழில் இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை கடத்தல் : 14 வருடங்களுக்குப் பின் பெறப்பட்ட வாக்குமூலம்!!

2004ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் உள்ளிட்ட மூவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைகள் யாழ். நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் உள்ளிட்ட மூவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. மேலும், விரைவில் முழுமையான விசாரணை அறிக்கை மன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

2004ஆம் ஆண்டு வல்வெட்டித்துறை கரணவாய் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் பிரசவத்துக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இதன்போது, தனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாகவும் மகப்பேற்று நிபுணர்களின் உதவியுடன் தன்னுடைய ஒரு குழந்தை கடத்தப்பட்டுள்ளதாகவும் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைகள் தற்போது யாழ். நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது.

இதன்போதே வழக்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குப் பாரப்படுத்துமாறும் இது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுமாறும் நீதிவான் கட்டளை பிறப்பித்திருந்தார்.

இதையடுத்தே, குறித்த வழக்கின் முழுமையான விசாரணை அறிக்கை விரைவில் மன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று அறிவித்துள்ளனர்.

யாழிலிருந்து கொழும்பு சென்ற ரயிலில் ஏற்பட்ட சிக்கல் : அதிரடியாக செயற்பட்ட மாணவன் : குவியும் பாராட்டு!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற ரயிலில் ஏற்பட்ட கோளாறினை, அதே ரயிலில் பயணித்த மாணவன் ஒருவன் அதிரடியாக சீர் செய்துள்ளார்.

தொழில்நுட்ப கல்லூரி மாணவரான ஜனித் தீமந்த என்ற இளைஞனின் அபார திறமை குறித்து கொழும்பு ஊடகங்கள் பாராட்டி பேசியுள்ளன.

கடந்த 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணித்த ரயில் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இடை நடுவில் நின்ற ரயிலை குறித்த மாணவன் உடனடியாக சரி செய்து மீண்டும் பயணத்தை தொடர உதவியுள்ளார்.

மஹகல்கடவல பிரதேசத்தில் வைத்தே இந்த சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. கோளாறு ஏற்பட்டு ரயில் நிறுத்தப்பட்ட இடம் ஒரு காட்டு பகுதி என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தர்ப்பத்தில் இந்த ரயிலில் பணி செய்த தொழில்நுட்ப பிரிவு நபரால் 45 நிமிடங்கள் முயற்சித்த போதிலும் ரயிலை மீண்டும் இயக்க முடியாமல் போயுள்ளது.

பின்னர் அவ்விடத்திற்கு வந்த மாணவர் அதனை சீரமைப்பதற்கு தன்னார்வமாக முன்வந்துள்ளார். அதற்காக ரயில் அதிகாரிகள் மற்றும் பயணிகளும் உதவியுள்ளனர்.

20 நிமிடங்கள் என்ற சிறிய நேரத்திற்குள் குறித்த மாணவன் அதனை மீளவும் இயக்கி பயணிகளின் ரயில் பயணத்தை தொடர உதவியுள்ளார்.

மாணவனின் அபார திறமையினால் பயணிகளுக்கு ஏற்படவிருந்த அசௌகரியங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து பலரும் மாணவனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் புனர்வாழ்வு பெற்ற மூவர் சமூகத்துடன் இணைவு!!

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் கடந்த ஒரு வருடமாக புனர்வாழ்வு பெற்று வந்த மூவர் இன்று (27.09.2018) காலை சமூகத்துடன் இணைத்து வைக்கும் நிகழ்வு பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி கப்டன் எதிரிசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணிமனையகத்தினால் கடந்த பல வருடங்களாக சிறையிலிருந்து புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒரு வருடம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைந்து கொண்ட ஜீ. புஸ்பராஜ் (தலவாக்கலை) , கமலநாதன் (திருகோணமலை) , புருஷோத்மன் (யாழ்ப்பாணம்) ஆகிய மூன்று பேரும் இன்று சமூகத்துடன் அவர்களது உறவினர்களிடம் இணைத்து வைக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பணிப்பாளர் வன்னி கேணல் அசேல ஒபேசேகர, வன்னி மீள் பரிசோதனை அதிகாரி கேணல் ஏமன் பெர்ணன்டோ, மும்மத சமயத்தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், தொழிற்பயிற்சி அதிகாரிகள், பொலிசார், பொதுமக்கள் மற்றும் புனர்வாழ்வு பெற்று சமூகமயமாக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

திருமணமான 3 நாட்களில் மணப்பெண்ணின் முடிவு : மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்ட கணவன்!!

சேலம் மாவட்டத்தில் திருமணமான 3 நாட்களில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் மனம் உடைந்த கணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்லதுரை – தீபா ஆகிய இருவரும் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த பின்னர், தனது கணவர் வீட்டுக்கு வந்த தீபா, அங்கு கழிவறை இல்லை என்பதை தெரிந்துகொண்டார்.

கழிவறை இல்லாத வீட்டில் என்னால் வாழ இயலாது. நான் எனது அம்மா வீட்டிற்கு செல்கிறேன் என கூறிவிட்டு தனது கணவனை விட்டு பிரிந்துசென்றுவிட்டார்.

தீபாவை சமாதானம் செய்ய செல்லதுரை முயன்றும் அவரது வீட்டில் வந்து வசிக்க தீபா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், மனமுடைந்த செல்லதுரை தனது வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதனால் செல்லதுரையில் பெற்றோர் சோகத்தில் உள்ளனர்.

யானை புலிகளுடன் காட்டிற்குள் தனியாக வாழும் பாட்டி : நெஞ்சை உறைய வைக்கும் உண்மை!!

யானைகளும் புலிகளும் நிறைந்த அடர்ந்த காடு நடக்க பாதை கூட இல்லாத அளவிற்கு அடர்ந்து ஓங்கி நிற்கும் மரங்கள். அத்தைகைய அடர்ந்த காட்டில் மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்றால் நம்பலாம். ஆனால், வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் நம்ப முடியுமா ஆனால் அப்படியும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஒரு குடும்பம்.

இது வெளிநாடுகளில் இல்லை நாம் தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் இருந்து கேரளா வரைக்கும் பரவி இருக்கும் பொதிகை மலைத் தொடரில் வாழும் கனபழக்கூடியினரின் வாழ்க்கை.

இப்பொழுது ஐந்து குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் கொஞ்சம் ஆழமாக சென்று பார்த்தால் இவர்கள் அனைவரும் ஓரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். ஒரே தாய் வாயிற்றில் இருந்து பிறந்தவர்கள் தான் கனபழக்கூடு வழக்கத்தின் படி குழந்தைகள் கொஞ்சம் பெரியவர்கள் ஆகிவிட்டால் தனி குடி போய்விடுவார்களாம்.

அங்கு இவர்களின் தாய்யும் தனியாக வசித்து வருகிறார் அவருக்கும் நூற்றி ஐந்து வயது இருக்கும் அவருடன் ஒரு வேட்டை நாயையும் வளர்த்து வருகிறார்.

1917 யில் செங்குஞ்சி மரங்களை பயிரிடவும் ஏலக்காய் எஸ்டேட் உருவாக்கவும் ஆங்கில வனத்துறை முடிவெடுத்தது. அதற்காக கனி என்ற குடியிருப்பில் இருந்து பத்து குடும்பங்களை அழைத்து வந்து இஞ்சி குடியில் குடி அமர்த்தினார்கள். அப்பாடி அழத்து வரப்பட்ட குடும்பங்களில் ஒன்று தான் களியாம்மாவின் குடும்பம்.

அப்போது அவருக்கு 5 முதல் 8 வயது இருந்து இருக்கலாம் என தோறயமாக சொல்கிறார்கள். அப்போது களியம்மா கூறுகையில் செங்குஞ்சி தோட்டத்திற்கு 100 ஆண்டு வரை ஓப்பந்தம் போடபட்டு இருந்தது. அந்த தோட்டத்தின் 100 ஆண்டு ஓப்பந்தம் சென்ற ஆண்டு 2017 யில் தன் நிறைவடைந்தது.

மீண்டும் வனத்திற்குள் யாரும் இதுமாதிரி சொல்லி கொண்டு வர கூடாது என அங்கு இருந்த எலக்காய் தோட்டங்களை நாங்கள் அழித்து விட்டோம். செங்குஞ்சி மரங்களை மட்டும் நூற்றாண்டு அடையாளமாக விட்டுவிட்டோம். களியம்மா அதை தான் குழந்தையாக இருக்கும் போது பயிரிட்டதாக கூறுகிறார். அங்கு வாழ்ந்த மாற்ற குடும்பங்கள் எல்லாரும் மலையில் இருந்து கிராமத்திற்கு சென்று விட்ட நிலையிலும் களியம்மா குடும்பம் மட்டும் அந்த காட்டில் வசித்து வருகிறார்கள்.

இறந்த மகளுக்காக கல்லறையை ஐபோனாக மாற்றிய தந்தை : நெகிழ்ச்சி சம்பவம்!!

ரஸ்யாவில் தந்தை ஒருவர் இறந்த தன்னுடைய மகளுக்காக ஐபோன் வடிவில் கல்லறை அமைத்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த Rita Shameeva என்ற 25 வயதான இளம்பெண் கடந்த 2016-ம் ஆண்டு உயிரிழந்தார். Rita அதிகமாக செல்போனை பயன்படுத்திக்கொண்டு இருப்பவர். அவருக்கு ஐபோன் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று.

இந்த நிலையில் மகள் இறந்து இரண்டு வருடங்களுக்கு பின்னர், அவருடைய தந்தை Rais Shameev ஐபோன் வடிவிலான ஒன்றினை அமைத்து கல்லறையில் பொறுத்தியுள்ளார். மிகவும் வித்தியாசமாக இருக்கும் இந்த கல்லறையினை பார்க்க பொதுமக்கள் பலரும் குவிந்து வருகின்றனர்.

இதுகுறித்து வடிவமைப்பாளர் Ilgam Galliulin கூறுகையில், நாங்கள் அந்த ஐபோனை கருங்கல்லை கொண்டு வடிவமைத்துள்ளோம். அந்த வடிவமைப்பு பலரும் பிடித்துப்போனதால் தற்போது ஏராளமானோர் வித்யாசமாக நிறைய ஆர்டர்களை கொடுக்கின்றனர். எங்களுக்கு மிகவும் வியப்பாக உள்ளது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

விமானத்தில் குழந்தைக்கு தாய்பால் கொடுத்த பெண்ணிற்கு ஏற்பட்ட நிலை : கண்ணீர் விட்டு அழுத பரிதாபம்!!

பிரித்தானியாவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தில் குழந்தைக்கு தாய் ஒருவர் பால் கொடுக்க முற்பட்ட போது, விமான ஊழியர் கொடுக்ககூடாது என்று கூறியதால், அவர் கண்ணீர்விட்டுள்ளார்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Gatwick விமானநிலையத்திலிருந்து ஸ்பெயினின் Fuerteventura தீவுக்கு Kelly Edgson-Payne என்ற 36 வயது பெண், தன்னுடைய கணவர் Ross(40) மற்றும் நான்கு குழந்தைகளுடன் ஈஸி ஜெட் விமானநிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் சென்றுள்ளார்.

அப்போது விமானமானது புறப்பட்ட போது Kelly Edgson-Payne தன்னுடைய ஒரு வயது குழந்தை Lex-ற்க்கு தாய்ப் பால் கொடுத்துள்ளார்.

இதைக் கண்ட விமானத்தில் இருந்த விமான ஆண் ஊழியர் உடனடியாக வந்து விமானம் புறப்படும் போது பால் கொடுக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

இதனால் அந்த பெண் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நான் எப்போதும் வருவேன் அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது என்று கூறியுள்ளார்.

விமானத்தில் பலர் இருக்கும் போது அவர் கூறியதால், சங்கடத்திற்குள்ளான அவர் அழுதுள்ளார். அதன் பின் விமானம் தரையிறக்கப்பட்ட பின் அவர் இதை பெரிய பிரச்சனையாக எடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கூறுகையில், அவர் என்னிடம் அப்படி கூறும் போது என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவர்களின் இணையதளத்தில் விமானத்தில் எப்போது வேண்டும் என்றாலும் நீங்கள் குழந்தைக்கு பால் கொடுக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி நான் பல முறைந்த இந்த நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் சென்றிருக்கிறேன், கொடுத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதைப் பற்றி நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைக்கு இமெயில் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் என்னிடம் கூறிய போது, நான் என் குழந்தைக்கு பால் கொடுப்பதை நிறுத்திவிட்டு, கணவனிடம் கொடுத்துவிட்டு விமான ஊழியரிடம் பேசினேன். நான் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட போது கூட, இடையில் என் குழந்தைக்கு பால் கொடுத்தேன்.

இப்படி நான் என் குழந்தைக்காக ஒரு போதும், பால் கொடுப்பதை நிறுத்துவதில்லை, அந்த நபர் அப்படி கூறும் போது கண்ணீர் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கையில், எங்கள் நிறுவனம் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை எப்போதும் ஆதரிக்கிறது. எங்கள் நிறுவனத்தில் எப்போது வேண்டும் என்றாலும் கொடுக்கலாம், ஆனால் அன்று அந்த விமானம் எங்கள் சார்பில் மற்றொரு விமானநிறுவனத்தால் இயக்கப்பட்டது.

இதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம், வரும் காலத்தில் இது போன்று நடக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது என்னுடைய குழந்தை அல்ல : அவசரப்பட்டு கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவன்!!

அமெரிக்காவில் மனைவியின் வயிற்றில் வளர்வது தன்னுடைய குழந்தை அல்ல என சந்தேகித்து நிறைந்த கர்ப்பிணியை கணவன் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடத்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் Jose Soto-Escalera (41), இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயிற்றில் வளரும் குழந்தையை கலைக்க சொல்லி மனைவியிடம் 500 டொலர்களை கொடுத்துள்ளார்.

ஆனால் கருவை கலைக்காத அவருடைய மனைவி Tania Wise (23), அந்த பணத்தினை தன்னுடைய முன்னாள் காதலனிடம் செலவுக்கு கொடுத்துள்ளார். இதனை அறிந்த கொண்ட Jose கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதியன்று, ஆத்திரத்தில் கர்ப்பிணி மனைவி Tania-வை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், அன்று இரவு 10 மணிக்கு Jose போனிலிருந்து மனைவி Tania-விற்கு அழைப்பு சென்றிருப்பதை வைத்து கைது செய்தனர்.

இந்த நிலையில் குற்றவாளியிடம் கடந்த திங்கட்கிழமையன்று வாக்குமூலம் பெறப்பட்டது. அதில் கூறிய Jose, நான் என்னுடைய மனைவியிடம் கருவை கலைக்க கூறியும் அவள் அதனை கலைக்காமல் முன்னாள் காதலனுக்கு கொடுத்திருக்கிறார். அதனால் தான் எனக்கு கோபம் வந்து கொலை செய்தேன். அவளுடைய வயிற்றில் வளர்ந்தது என்னுடைய குழந்தையும் அல்ல. அது அவளுடைய முன்னாள் காதலனின் குழந்தை என கூறியுள்ளார்.

இதனையடுத்து இறந்த 8 மாத கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த குழந்தையின் கருவை வைத்து டிஎன் ஏ சோதனை மேற்கொண்டனர். அதில், வயிற்றில் வளர்ந்தது Jose குழந்தை தான் என்பது தெரியவந்தது. மேலும் குழந்தை பிறப்பதற்கு இன்னும் ஒரு வார காலமே உள்ளது. அதற்குள் Jose அவசரப்பட்டு கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இறந்து கிடந்த குழந்தை : ஆர்வமாக வீடியோ கேம் விளையாடிய தந்தை!!

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 5 மாத குழந்தை இறந்துகிடக்க வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயது தந்தையான Cordarius Cotton தனது 5 வயது மகனை குளியல் தொட்டிக்குள் வைத்துவிட்டு வீடியோ கேம் விளையாட சென்றுள்ளார்.

வீடியோ கேமில் ஆழ்ந்த கவனத்தில் இருந்த தந்தைக்கு, தனது குழந்தையை குளியல் தொட்டிக்குள் வைத்தோம் என்ற நியாபகம் வரவில்லை.

சில மணிநேரங்கள் ஆனபின்னர் நியாபகம் வந்தவுடன் வேகமாக சென்று பார்த்துள்ளார், குழந்தை சுயநினைவின்றி கிடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனால், வீட்டிற்கு வந்து பார்த்தபோது குழந்தை இறந்துகிடந்துள்ளது. விசாரணையில் இந்த சம்பவம் நடைபெற்ற போது தாய் வீட்டில் இல்லை. மேலும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வீடியோ கேம் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக இப்படி ஒரு உயிர் போயுள்ளது என தந்தை Cordarius Cotton கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீதியில் குழந்தைகளுடன் பள்ளி வேன் : டிரைவரின் மோசமான செயல் : கமெராவில் சிக்கிய காட்சி!!

இந்தியாவில் பள்ளிக் குழந்தைகளை அழைத்து வரும் வேன் ஓட்டுனர் ஒருவர், சாலையில் வேனை நிறுத்திவிட்டு மது அருந்த சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.

லக்னோவில் சரஸ்வதி கியான் மந்திர் என்ற பள்ளிக்கூடத்தின் வேன் டிரைவர் ஒருவர் பிற்பகலில் பள்ளி முடிந்தவுடன் குழந்தைகளை வேனில் அமர்த்திக் கொண்டு, வேனை எடுத்து சென்றுள்ளார்..

அப்போது வரும் வழியில் தெருவோரத்தில் வேனை நியூட்ரல் கியரில் நிறுத்திவிட்டு, அருகில் இருக்கும் ஒயின் ஷாப்பிற்கு சென்றுள்ளார்.

இந்த சாலையில் வழியே சென்ற நபர், குழந்தைகளுடன் பள்ளி வேன் தனியாக நிற்கிறதே என்று உள்ளே இருக்கும் குழந்தைகளிடம் சென்று டிரைவர் எங்கே என்று கேட்டுள்ளார்.

உள்ளே இருக்கும் குழந்தை டிரைவர் சென்ற சாலையை காட்டியுள்ளது. அதன் பின் அவர் உடனடியாக அங்கிருக்கும் ஒயின் ஷாப்பிற்கு சென்று, குழந்தைகள் இருக்கிற வேனை நியூட்ரலில் போட்டுவிட்டு வந்த டிரைவர் யார் என கத்தியுள்ளார்.

இதைக் கேட்ட உள்ளே இருந்த டிரைவர் பதறிபோய் உடனடியாக வேன் இருக்கும் பகுதியைக் நோக்கி ஓடுகிறார்.

மேலும் அந்த வீடியோவில் வேனின் உள்ளே இருக்கும் சிறுவன் கியரையே பார்த்துக் கொண்டிருக்கிறான். தெரியாமல் கூட அவன் ஸ்டார்ட் செய்துவிட்டால், உள்ளே இருக்கும் குழந்தைகளின் நிலை என்ன ஆகும். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணமாகி 5 மாதங்களில் செல்ல நாய்க்காக காதல் கணவனை காட்டிக்கொடுத்த மனைவியின் வாக்குமூலம்!!

சென்னையில் தனது காதல் கணவனை விட தனது செல்ல நாய்தான் முக்கியம் என்பதற்காக நாயை கொலை செய்த கணவனை பொலிசில் காட்டிக்கொடுத்துள்ளார் மனைவி.

ஜெகநாத் – செல்வி ஆகிய இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் தான் திருமணம் செய்துகொண்டனர். செல்விக்கு நாய் என்றால் அதிகப் பிரியம். இதனால், பர்னி என்ற செல்லநாயை வளர்த்து வந்துள்ளார்.

காதலிக்கும்போது, ஜெகநாத்தும் பர்னி மீது பாசமாக இருந்துள்ளார், ஆனால் திருமணத்துக்கு பிறகு ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக தனது கோவத்தை பர்னி நாயிடம் காட்ட ஆரம்பித்துள்ளார்.

மேடவாக்கத்தில் புதிதாக வாங்கிய வீட்டுக்கு பர்னியுடன் சென்றுள்ளார் செல்வி. இது, ஜெகநாத்துக்குப் பிடிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட ஜெகநாத் குடித்துவிட்டு வந்து பர்னியை அடித்துள்ளார், இதனை தட்டிக்கேட்ட செல்வியின் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சித்தபோது அவரது பிடியில் இருந்து செல்வி தப்பித்து ஓடியுள்ளார்.

இதனால் அவருக்கு கோபம் அதிகமாக, பர்னியை அடித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து செல்வி பொலிசில் புகார் அளித்ததையடுத்து, பொலிசார் ஜெகநாத்தை கைது செய்துள்ளனர்.

மேலும், தனது காதலனை விட நாய்தான் எனக்கு முக்கியம். நாயை கொலை செய்த குற்றத்திற்காக எனது கணவர் சிறைக்கு போனால் கூட பரவாயில்லை என செல்வி பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு ஜெகநாத்திடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

பழிக்குப்பழி : மகனை கொலை செய்தவனை நடுரோட்டில் வெட்டி சாய்த்த தந்தை – பின்னணி தகவல்கள்!!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் சொந்த மகனின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில், இளைஞரை பரபரப்பான சாலையில் ஓட, ஓட விரட்டி தந்தையும், மாமாவும் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான அட்டப்பூர் சாலையில், ரத்தத்தை உறையவைக்கும் இந்தக் கொலை நடந்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் மகேஷ் கவுட். இவரும் ரமேஷ் கவுட்(38) என்பவரும் நெருங்கிய நண்பர்கள். இதில் ரமேஷ் கவுடுக்கும், இளம் பெண் ஒருவருக்கும் தொடர்பு இருந்துள்ளது.

அந்தப் பெண்ணுடன் மகேஷும் பேசியுள்ளார். இதைக் ரமேஷ் கண்டித்தும் மகேஷ் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது கூட்டாளிகள் 3 பேர் உதவியுடன் மகேஷை மலைப்பகுதி கோயிலுக்கு அழைத்துச்சென்று மது குடிக்கவைத்து கொலை செய்து எரித்துவிட்டனர்.

அதன்பின்னர் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், மகேஷை கொலை செய்தது, அவரின் நண்பர் ரமேஷ் என்கிற தகவல் தெரியவந்தது. இதனையடுத்து பொலிசார் அவரைக் கைது செய்தனர். அந்தக் கொலை வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

இதனிடையே மகேஷை கொலை செய்த ரமேஷை பழிவாங்குவதற்காக மகேஷின் தந்தை கிருஷ்ணா கவுடும், உறவினர் லட்சுமண் கவுடும் நீண்டநாட்களாகத் திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக இன்று ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு ரமேஷ் கவுடு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது ஹைதராபாத்தில் உள்ள அட்டப்பூர் பிவிஎன்ஆர் எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று காலை 11 மணி அளவில் ரமேஷ் வந்தபோது, அவரை மகேஷின் தந்தை கிருஷ்ணாவும், மாமா லட்சுமனும் கையில் கத்தியுடன் துரத்தி ஓட ஓட வெட்டினார்கள். ரத்த காயத்துடன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ரமேஷ் தலைதெறிக்க ஓடினார்.

வாகனப் போக்குவரத்து மிகுந்த சாலையில் ரமேஷால் ஓடமுடியாமல் கீழே விழுந்தார். அவரை கிருஷ்ணாவும், லட்சுமணும் பட்டப்பகலில் அனைத்து மக்களும் பார்க்கும் வகையில் வெட்டிக் கொலை செய்துவிட்டு, வெற்றி எனக் கூறி அங்கிருந்து புறப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் ஒருவர் கூட இதைத் தடுக்கவில்லை, மாறாக செல்போனில் படம் பிடித்துக்கொண்டிருந்தனர். மேலும், இந்தச் சம்பவம் நடக்கும் போது ஒரு பொலிஸ் வாகனம் சென்றுள்ளது, அவர்களும் இதைக் கண்டும் காணாமல் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தை நேரில்பார்த்த மக்கள், இந்தச் சம்பவம் நடக்கும் இடத்தின் அருகே இரு பொலிஸ் காவலர் நின்றிருந்தும் கொலைகாரர்களைத் தடுக்கவில்லை,

அந்தப் பகுதியில் ஒரு பொலிஸ் வாகனம் சென்றது, அவர்கள் வாகனத்தை நிறுத்தி இதைத் தடுத்திருக்கலாம் ஆனால், அவர்களும் தடுக்கவில்லை என்றனர். பட்டப்பகலில் ஒருவரை வெட்டிக் கொலைசெய்த சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

கொலை நடந்து சிறிது நேரம் கடந்த நிலையில் அங்கு வந்த பொலிஸார் கொலையாளிகள் சென்ற வாகனத்தை விரட்டிப் பிடித்து அதில் இருந்த கிருஷ்ணாவையும், லட்சுமணனையும் கைது செய்தனர்.

ஆனால், கொலை செய்தவர்கள் எந்தவிதமான பயமும் இல்லாமல் சட்டை பட்டன்களை கழற்றிவிட்டு மிகவும் இயல்பாக பொலிஸ் வாகனத்தில் ஏறிச் சென்றனர். ஹைதராபாத்தில் பட்டப்பகலில் நடந்த சம்பவம் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.