16 ஆண்டுகளுக்கு பிறகு கடவுள் கொடுத்த வரம் : பிஞ்சு மகள் இறந்தது தெரியாமல் உயிருக்கு போராடும் இசையமைப்பாளரின் நிலை!!

மாங்கல்ய பல்லாக்கு என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் பாலா பாஸ்கர். திருச்சூரிலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது ஓட்டுநரின் கவனக்குறைவால் கார் சாலையோர மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது.

இதில் அவரது இரண்டுவயது குழந்தை தேஜஸ்வினி உயிரிழந்தது.
இசையமப்பாளர் பாலாபாஸ்கர் மற்றும் அவரது மனைவி லட்சுமி படுகாயமடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதில், மனைவி ஆபாய கட்டத்தை தாண்டிவிட்டார், ஆனால் பாலா பாஸ்கருக்கு பலத்த அடிபட்டிருப்பதால் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

பாலா பாஸ்கருக்கு திருமணமாகி 16 ஆண்டுகளாக குழந்தை இல்லை. குழந்தை ஆசையில் இருந்த இந்த தம்பதியினருக்கு 16 ஆண்டுகள் கழித்து தேஜஸ்வினி என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து பாலாவின் நெருங்கிய நண்பர் பெரோஸ் கூறியதாவது, தனது மகள் தான் உலகம் என நினைத்து வாழ்ந்துகொண்டிருந்தார் பாலா. திருமணமாகி குழந்தை இல்லை. சிகிச்சைக்கு பிறகே தேஜஸ்வினி பிறந்தார்.

இது கடவுள் கொடுத்த வரம் என பாலா அவ்வப்போது கூறுவார். ஆனால் அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை. தனது ஆசை மகள் இறந்துவிட்டார் என்பது தெரியாமல் சுயநினைவின்றி இருக்கிறார். இதனை நினைத்து பார்க்கையில் மிகவும் வருத்தமாக இருக்கிறது.

அவர் விரைவில் குணம்பெற்று வரவேண்டும். தற்போது குழந்தையின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டுள்ளது. பாலா பாஸ்கருக்கு சுயநினைவு வந்தவுன் இறுதிசடங்கு மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

65 வயதான ஆசிரியரை உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்துகொண்டது எதற்கு : 20 வயது மாணவியின் அதிரடி பதில்!!

65 வயதான தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் என்பது குறித்து 20 வயது மாணவி பொலிசில் விளக்கம் அளித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர் ஜெய்கிருஷ்ணன்(65). இவருக்கு திருமணமாகி 3 மகன், ஒரு மகள் உள்ளனர், மனைவி இறந்துவிட்டார்.

அவர் தலைமை ஆசிரியராக வேலைபார்த்து வந்த பள்ளியில் தான் மகத் என்ற மாணவி படித்துவந்தார். இவர் பள்ளியில் இருந்து ஓய்வுபெற்ற பின்பும், மாணவிக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கூறியதுடன், டியூசனும் எடுத்துவந்தார்.

இதனால் ஜெய்கிருஷ்ணன் மீது மாணவிக்கு ஈர்ப்பு உருவானது. ஆனால் இதை யாரும் ஒரு பொருட்டாக கருதவில்லை. ஆசிரியர், மாணவி உறவு என்றே நினைத்துக்கொண்டனர். ஆனால் இருவரும் காதல் வயப்பட்டு வீட்டுக்கு தெரியாமல் வெளியே சுற்றத்தொடங்கினர்.

இரு தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் சென்று தந்தை–மகள் என்று கூறி விடுதியில் அறை எடுத்தனர். இதற்கிடையே மகத்தின் தந்தை பொலிசில் புகார் கொடுத்ததால் செல்போன் சிக்னலை வைத்து தேடியபோது ராமேஸ்வரத்தில் இருப்பது தெரியவந்தது
பஞ்சாப் பொலிசாரின் தகவலை தொடர்ந்து ராமேஸ்வரம் பொலிசாரிடம் அவர்கள் சிக்கினர்.

வாழ்ந்தால் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனுடன்தான் வாழ்வேன். என் கணவரை என்னைவிட்டு பிரித்துவிடாதீர்கள் என கதறி அழுது கெஞ்சி இருக்கிறார்.

மகத்தின் தந்தை வங்கி அதிகாரி ஆவார். ஒரே மகள் என்பதால் செல்லமாக வளர்த்தனர். ஆனால், மகத்தின் மனப்போக்கில் ஏற்பட்ட மாறுபாட்டை அவருடைய குடும்பத்தினர் கண்டறிந்து எடுத்துக்கூறி சரிசெய்யாமல் விட்டதுதான் இந்த காதலுக்கு தூபம் போட்டது போல் அமைந்துவிட்டது.

தலைமை ஆசிரியர் கூறியதாவது, உடல் சுகத்துக்காக நான் மகத்தை திருமணம் செய்யவில்லை. மனைவியை இழந்த என் மீது மகத் அளவு கடந்த பாசம் வைத்துள்ளாள் என்பதுதான் காதலுக்கான காரணம் என கூறியுள்ளார்.

மாணவி மகத் கூறுகையில், சிறு வயதில் இருந்தே என் மீது அவர் காட்டிய அக்கறைதான் ஜெய்கிருஷ்ணன் மீது மதிப்பை ஏற்படுத்தியது.

நாளடைவில் என்னை அறியாமலேயே அவர் மீது அளவற்ற பாசம் வைத்துவிட்டேன். என்னுடைய காதல் தவறு என தெரிந்தாலும் நான் அவருடன்தான் வாழ்வேன். என் வாழ்க்கை அவரோடுதான், நான் பெற்றோருடன் செல்ல மாட்டேன் என கூறியுள்ளார்.
ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி இருவரும் பஞ்சாப்புக்கு திரும்பி சென்றுள்ளனர்.

கடனை திருப்பித் தராததால் நண்பரின் மனைவியை திருமணம் செய்த நபர் : அதிர்ச்சிப் பின்னணி!!

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், வாங்கிய கடனை நண்பர் திரும்பி செலுத்தாததால் அவரின் மனைவியை திருமணம் செய்து கொண்ட நபரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பைல்ஹொன்குல் தலக் மற்றும் ரமேஷ் ஹுக்கேரி ஆகிய இருவரும் ஒரே ஹொட்டலில் வேலை செய்து வரும் நண்பர்கள் ஆவர்.

தன்னுடன் வேலை செய்யும் பார்வதி என்ற பெண்ணை தலக் திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் நண்பர் ரமேஷிடம் தலக் ரூ.500 கடனாக வாங்கிய நிலையில் அதை திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து கடனை திரும்ப தராததால் தன் மனைவியை இரண்டு மாதங்களுக்கு முன்னர் ரமேஷ் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டதாக தலக் தற்போது கூறியுள்ளார்.

தலக் கூறுகையில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் என் மனைவி பார்வதியை, ரமேஷ் திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார்.

தற்போது பார்வதி மீண்டும் கர்ப்பமாக உள்ளார், என்னுடன் சேர்ந்து வாழவும் மறுக்கிறார். இது குறித்து ரமேஷிடம் கேட்டால் அவர் என்னை மிரட்டுகிறார்.

பொலிசாரிடம் நான் அப்போதே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, இதனால் இன்று காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் செய்தேன் என கூறியுள்ளார்.

தலக்கின் புகாரையடுத்து பொலிசார் இது குறித்து விசாரிக்க காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

விஜயகுமாருக்கு 2 மனைவிகள்… 6 பிள்ளைகள் : விஸ்வரூபம் எடுக்கும் குடும்ப சண்டை!!

நடிகர் விஜயகுமாரின் குடும்ப பிரச்சனை தொடர்ந்து கோடம்பாக்கத்தை கலக்கி வருகிறது. 2010 ஆம் ஆண்டில் விஜயகுமாரின் குடும்பத்துக்கும் அவரது மகள் வனிதா விஜயகுமாருக்கும் இடையே நடந்த அடிதடி சண்டை விஸ்வரூபம் எடுத்தது.

அன்றிலிருந்து தொடர்ந்து நடந்து வரும் இந்த பிரச்சனை மீண்டும் தற்போது வீட்டு பிரச்சனைக்காக மோதல் வந்துள்ளது. இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு மூலக்காரணமே சொத்துதான் என கூறப்படுகிறது. இதனை வனிதாவே பல ஊடகங்களில் பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.

விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி முத்துக்கண்ணு, இவருக்கு பிறந்தவர்கள் கவிதா, அனிதா மற்றும் நடிகர் அருண் விஜய். இரண்டாவது மனைவி நடிகை மஞ்சுளா. இவர்களுக்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி.
கலைக்குடும்பம் என கொண்டாடப்பட்டு வந்த இந்த குடும்பத்தின் சண்டை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

என் அப்பாவிற்கு இரண்டு மனைவிகள், ஆறு குழந்தைகள். இதனால், குடும்பத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார் மகள் வனிதா.

வனிதாவின் மூத்த மகன் ஸ்ரீஹரி. இவர்தான் விஜயகுமாரின் முதல்பேரன் என்பதால் இவரது பெயரில் சொத்துக்களை விஜயகுமார் வாங்கியதாகவும், அதன்பின்னர் வனிதா தனது கணவனை விட்டு பிரிந்து இரண்டாவது திருமணம் செய்த காரணத்தால் பேரனை, தனது மகளோடு அனுப்ப மாட்டேன் என விஜயகுமார் பிரச்சனை செய்தார்.

தற்போது, மீண்டும் ஆலப்பாக்கத்தில் உள்ள மஞ்சுளாவின் வீட்டில் தான் தங்கவேண்டும் என மகள் வனிதா கூறி பிரச்சனை செய்து வருகிறார். தனது குடும்ப பிரச்சனையை ஒவ்வொரு ஊடகங்களாக சந்தித்து பேட்டி அளித்து வருகிறார் வனிதா. ஆனால், விஜயகுமார் இதுகுறித்து எவ்வித தகவலும் தெரிவிக்க முன்வரவில்லை.

இலங்கை கிரிக்கெட் வீரரின் ஆபாச காணொளி : பொலிஸார் தீவிர விசாரணை!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் இருக்கும் ஆபாசா காணொளி எனக் கூறி, சமூக வலைத்தளங்களில் காணொளியை வெயிட்ட இரண்டு பேரை கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரியவருகிறது.

வேறு ஒரு காணொளியை தொகுத்து இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொகுக்கப்பட்ட இந்த காணொளியை காரணம் காட்டி கிரிக்கெட் வீரர் ஒருவரும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதானி ஒருவரும் இணைந்து மெத்தியூஸை அணியில் இருந்து விலகும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் சம்பந்தப்பட்ட அந்த ஆபாச காணொளியில் இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் போட்டி வீரர் ஒருவரே இருப்பதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிய கிண்ணப் போட்டிகளில் ஏற்பட்ட தோல்வி காரணமாக அணித் தலைவர் பதவியில் இருந்தும், ஒரு நாள் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஏஞ்சலோ மெத்தியூஸ் விலகுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரசபையால் நகரிலிருந்து 600 தொண் குப்பை அகற்றப்படுகின்றது!!

வவுனியா நகரசபையினரால் நகரத்திலிருந்து ஒரு மாதத்திற்கு 600 தொண் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. என்று தகவல் அறியும் சட்டத்தினூடாக கேட்கப்பட்ட தகவலுக்கு நகரசபையினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

நகரத்திலிருந்து அகற்றப்பட்டு வரும் குப்பைகள் நகரிலிருந்து 10 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள பம்பைமடு பகுதியில் குப்பை மீள் சூழற்ச்சி செய்யப்படுவதற்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றன. எனினும் அங்கு மீள் சுழற்சி செய்யப்படவில்லை.

வவுனியா நகரிலிருந்து ஒரு நாளைக்கு 18 தொடக்கம் 20 தொண் வரையான குப்பைகள் உழவு இயந்திரம் கனரக வாகனங்களில் அகற்றப்பட்டு வருகின்றன.

எனினும் அகற்றப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்படுவதில்லை. அதேபோன்று ஒதுக்கப்பட்ட பகுதியில் ஒழுங்குமுறை பின்பற்றப்படவில்லை.

சாரதிக்கு ஏற்றது போல தான் விரும்பிய இடங்களிலேயே குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனைச் சென்று பார்வையிடுவதற்கு அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை.

அவ்வாறு நியமிக்கப்பட்டால் ஒழுங்கு முறை பின்பற்றி செயற்படுவதில்லை. சுகாதாரப்பரிசோதகர் இப்பகுதிக்குச் சென்று தனது கடமைகளை சரிவர மேற்கொள்வதில்லை. அதற்கான அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படுவதில்லை.

இங்கு பாதுகாப்பு கடைமையிலுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர் தொடர்ந்து கடமையாற்றுவதில்லை. அங்கு கொட்டப்படும் குப்பைகள் எரிக்கப்படுவதால் சுவாச பிரச்சினைகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர். இக்குப்பைகள் இரும்புகள் எடுக்க வருபவர்களினால் எரிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த யூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து யூலை மாதம் முதலாம் திகதி வரையான ஒரு மாத காலப்பகுதியில் நகரசபையினால் 600 தொண் குப்பைகள் நகரிலிருந்து அகற்றப்பட்டு பம்பைமடுவில் கொட்டப்பட்டுள்ளது.

இக்குப்பைகள் அனைத்தும் மீள் சூழற்சி மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறு மீள் சூழற்சி மேற்கொள்ளாமல் கொட்டப்படுவதால் நகரசபையினருக்கு கிடைக்கும் வருமானம் இன்றிச் செல்கின்றது.

இக்குப்பைகள் மீள் சுழற்சி மேற்கொள்வதால் பலருக்கு வேவைவாய்ப்புக்கள் கிடைக்கவும் வழிகள் ஏற்படுவதுடன் நகரசபைக்கு வருமானமும் அதிகரிக்க வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

வவுனியா மாணவி தேசிய ரீதியில் கராத்தே போட்டியில் பதக்கம் பெற்று சாதனை!!

தேசிய ரீதியில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த மாணவி வெள்ளிப்பதக்கத்தை பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் மாணவி மோக்சிதா வயது (07) மதிதரன் தேசிய ரீதியில் பண்டாரகமவில் 15.09.2018 அன்று நடைபெற்ற கராத்தே போட்டியில் பங்குகொண்டு இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

பயிற்றுவிப்பாளர் ஜெஸ்லி மார்சலின் வழிநடத்;தலின் கீழ் வடமாகாண ரீதியில் சம்பியன் பட்டத்தை வென்று குறித்த மாணவி தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் 23 வயது இளைஞனுக்கு மரண தண்டனை!!

 

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கி கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

9.41 கிராம் ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் குறித்த இளைஞனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றவாளிக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளும் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் ஜனாதிபதியின் உத்தரவு கிடைக்கும் தினத்தன்று உயிர் பிரியும் வரை தூக்கிலிட உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க உத்தரவிட்டுள்ளார்.

கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்த 23 வயதான ரங்க சுமித் பண்டார என்ற இளைஞனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் கடந்த 2012ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இந்த குற்றத்தினை மேற்கொண்டுள்ளதாக சட்ட மா அதிபர் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கொலை செய்த கணவன் வெளியிட்ட தகவல்!!

கடந்த 14ம் திகதி நள்ளிரவு மாத்தறை பொது வைத்தியசாலை பொலிஸாரிடமிருந்து டிக்வெல்ல குற்றப் பிரிவு பொலிஸ் அதிகாரிக்கு தொலைபேசி அழைப்பொன்று வருகிறது.

அதில், டிக்வெல்ல உந்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பாத்தேகம, கட்டுகஹேவத்த, கொட்டகொட என்ற பகுதியில் வசிக்கும் பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் பற்றி அறிந்த உடனேயே அந்த இடத்தில் விசாரணைகளை மேற்கொள்ள அதிகாரிகள் அனுப்பப்பட்டனர்.

39 வயதான திஸ்னா பிரியதர்ஷினி என்ற ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் தூங்கிக்கொண்டிருந்தபோது கொடூரமாக தாக்கப்பட்டு இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த பெண்ணின் கணவர் ஒரு மீனவர் ஆவார். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவர் பிரதேசத்திலிருந்து காணாமல்போய்விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் திஸ்னாவின் மரணம் தொடர்பாக பொலிஸாருக்கு சந்தேகம் வலுத்தது. சுமித் என்ற குறித்த நபர் திஸ்னாவைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ஐந்து பிள்ளைகளும் இருவருக்கும் பிறந்துள்ளனர். இந்த நிலையில் சுமித் குடிப் பழக்கத்திற்கு அடிமையானதால் திஸ்னா தொடர்பாக வேறு சந்தேகம் ஏற்பட திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கந்தர பொலிஸ் குழுவினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோது வீதியில் நடந்து சென்ற நபரொருவரிடம் விசாரணை செய்துள்ளனர்.

இதன்போது குறித்த நபர் மகிழ்ச்சியற்றவராக காணப்பட்டுள்ளார்.

அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணைகளை மேற்கொண்டபோது திஸ்னாவின் மரணம் தொடர்பாக மேலதிக தகவல்களை தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடபெற்ற தினமன்று திஸ்னாவின் மகளின் மகளுக்கு சாப்பாடு ஊட்டும் விழா இருந்த நிலையில் திஸ்னா மற்றும் அவரது கணவர் அங்கு வந்துள்ளனர்.

நிகழ்வு முடிடைந்ததும் திஸ்னா கணவருடன் தங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார். குழந்தைகள் கட்டில் மீது தூங்கியுள்ளார்கள். இந்த நிலையிலே திஸ்னா காலை செய்யப்பட்டுள்ளார்.

அவள் படுக்கையில் இருக்கும்போது நெஞ்சில் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். திஸ்னாவின் மரண பரசோனையில் 9 அங்குலம் வரை ஆழமான காயம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் கணவரான சந்தேக நபர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்பத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம்தொடர்பாக மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன

புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!!

புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதன் மூலம் பல நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் வசிப்போர் இலங்கைப் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்ய முடியும்.

பிரஜாவுரிமையினை பெற்றுக்கொண்டவர்கள் வெளிநாடுகளிலேயே வசிக்காமல், அனைத்துத் துறைகளிலும் நாட்டின் மேம்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும் என அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நிலையில், புலம்பெயர் நாடுகளில் வாழும் ஒருதொகுதியினருக்கு இன்று பிரஜாவுரிமை வழங்கி வைக்கப்பட்டது.

இது தொடர்பான நிகழ்வு இன்று பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

வவுனியாவில் தேசிய சாதனையாளர்கள் கௌரவிப்பு!!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 30வது தேசிய விளையாட்டுப் போட்டியில் வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இலங்கை திருச்சபை தமிழ் கலவன் வித்தியாலயத்தின் தடகள வீராங்கனை செல்வி எஸ்.ஹேமப்பிரியா (1ம் இடம் – 21km அரை மரதன்), வூசோ வீராங்கனை செல்வி எம்.கிருபாலினி (2ம் இடம்- வூசோ) , மாவட்ட தடகள வீரர் செல்வன் எம்.கௌரிநாதன் (6ம் இடம்- மரதன்) ஆகிய வீரர்களுக்கான கௌரவிப்பும் தடகள பயிற்றுவிப்பாளரான நவநீதன், வூசோ பயிற்றுவிப்பாளர் நந்தகுமார் ஆகியோருக்கான கௌரவிப்பு நிகழ்வும் இன்று (26.09.2018) இடம்பெற்றது

இளைஞர் சேவைகள் மன்றத்தின் வாயிலில் ஆரம்பித்து வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் வலயத்தின் பணிப்பாளர் தலைமையில் கௌரவிப்பு நடைபெற்று இறுதியாக வித்தியாலய முதல்வர் தலைமையில் இலங்கை திருச்சபை தமிழ் கலவன் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

மீண்டும் பயங்கரம் : பட்டப்பகலில் இளைஞர் துடிதுடிக்க வெட்டி கொலை : வெளியான அதிர்ச்சி வீடியோ!!

இந்தியாவில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலிக் கொடூரமாக கொலை செய்யப்படும் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் அட்டபூர் அருகே இருக்கும் பாலத்திற்கு அருகில் இளைஞர் ஒருவரை கோடாரியால் நபர் ஒருவர் கொடூரமாக பல முறை வெட்டி சாய்க்கிறார்.

இதில் அந்த நபர் இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து இறக்கிறார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை என்ன காரணத்திற்காக செய்யப்பட்டது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. ஆனால் இறந்த நபர் நீதிமன்றத்திற்கு சென்று திரும்பும் போது இது நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சமீபத்தில் தான் பிரனாய் என்ற இளைஞர் தன் மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்று திரும்பும் போது கூலிப்படை ஏவி கொலை செய்யப்பட்டார்.

அந்த சம்பவமே நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது, மக்களுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் மண் பரிசோதனை ஆய்வுகூடம் திறந்து வைப்பு!!

விவசாயிகளின் நலன்களை கருத்திற்கொண்டு மண் பரிசோதனை ஆய்வு கூட நிலையமொன்று நேற்று வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா பூங்கா வீதியில் அமைக்கப்பட்ட மண் பரிசோதனை ஆய்வு கூடத்தினை வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

விவசாயிகள் தமது விவசாய நிலங்களில் தேவையற்ற பசளை வகைகளை பயன்படுத்தாது மண்ணின் தன்மையை மாற்றியமைக்காது இருப்பதற்கும், விவசாய நிலத்திற்கு தேவையான பசளையை கண்டறிந்து அதனை பயிருக்கு இட்டு அதிகளவான விளைச்சளை ஏற்படுத்துவதற்கு வசதியாகவும் மண் பரிசோதனை ஆய்வு கூடம் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர்களான எம்.தியாகராசா, ஆர். இந்திரராசா, நீர்ப்பாசன திணைக்கள பொறியிலாளர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சிக்கியவருக்கு உதவப் போன பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

அவுஸ்திரேலியாவின் Melbourne பகுதியில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் சிக்கியவருக்கு உதவப் போன ஒரு பெண் மீது இன்னொரு வாகனம் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Melbourne பகுதியில் நேற்றிரவு கார் ஒன்று வலது புறமாக திரும்ப முயற்சிக்கும்போது மிக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அதன்மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் படுகாயமடைந்தார்.

சம்பவம் நடைபெற்றபோது அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த Emily (27) என்னும் பெண் அந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபருக்கு உதவுவதற்காக ஓடியிருக்கிறார். அப்போது வேகமாக வந்த இன்னொரு கார் Emily மீது மோதியது.

அதில் சம்பவ இடத்திலேயே Emily பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு குழந்தைகளின் அன்புத்தாயான Emilyயின் மரணம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

65 வயது ஆசிரியரை உயிருக்கு உயிராக காதலித்த 20 வயது மாணவி : ரகசியமாக நடந்த சம்பவம்!!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜெய்கிருஷ்ணன் என்பவர் தன்னிடம் டியூசன் படிக்க வந்த 20 வயது இளம் மாணவியை ரகசிய திருமணம் செய்துகொண்டார்.

பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர் ஜெய்கிருஷ்ணன்(65). இவருக்கு திருமணமாகி 3 மகன், ஒரு மகள் உள்ளனர், மனைவி இறந்துவிட்டார்.

அவர் தலைமை ஆசிரியராக வேலைபார்த்து வந்த பள்ளியில் தான் மகத் என்ற மாணவி படித்துவந்தார். இவர் பள்ளியில் இருந்து ஓய்வுபெற்ற பின்பும், மாணவிக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கூறியதுடன், டியூசனும் எடுத்துவந்தார்.

இதனால் ஜெய்கிருஷ்ணன் மீது மாணவிக்கு ஈர்ப்பு உருவானது. ஆனால் இதை யாரும் ஒரு பொருட்டாக கருதவில்லை. ஆசிரியர், மாணவி உறவு என்றே நினைத்துக்கொண்டனர். ஆனால் இருவரும் காதல் வயப்பட்டு வீட்டுக்கு தெரியாமல் வெளியே சுற்றத்தொடங்கினர்.

இரு தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் சென்று தந்தை–மகள் என்று கூறி விடுதியில் அறை எடுத்தனர். இதற்கிடையே மகத்தின் தந்தை பொலிசில் புகார் கொடுத்ததால் செல்போன் சிக்னலை வைத்து தேடியபோது ராமேஸ்வரத்தில் இருப்பது தெரியவந்தது

பஞ்சாப் பொலிசாரின் தகவலை தொடர்ந்து ராமேஸ்வரம் பொலிசாரிடம் அவர்கள் சிக்கினர். நானும், ஜெய்கிருஷ்ணனும் ஏற்கனவே திருமணம் செய்துகொண்டதாக மகத் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இருவரையும் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, பஞ்சாப் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

நிம்மதி போனது… பெற்ற மகனை கொலை செய்து எரித்த பெற்றோர் : பின்னணி தகவல்கள்!!

மது குடித்துவிட்டு துன்புறுத்தி வந்த மகனை கொன்று எரித்த வழக்கில் பெண் அதிகாரி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த முருகன் – சாந்தி தம்பதியினரின் மகன் சிலம்பரசன் (28). சாந்தி அரசு அதிகாரி ஆவார்.

மகன் சிலம்பரசன் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். காதல் திருமணம் செய்துகொண்ட இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

சிலம்பரசன் வேலைக்கும் செல்லாமல் தனது தாய் மற்றும் தந்தையுடன் ராஜபாளையத்தில் வசித்தார். பெற்றோரிடம் தினமும் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து அவர்களை துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் பெற்றோர் நிம்மதி இழந்துள்ளனர். சிலம்பரசன் மது போதையில் அடுப்பில் அப்பளம் பொறித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது தந்தை ஏதோ கூற இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமுற்ற சிலம்பரசன் கொதிக்கும் எண்ணெய்யை முருகனின் காலில் ஊற்றியுள்ளார்.

இதுபோன்ற சிலம்பரசனின் மோசமான செயல்களை பெற்றோரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் மகனை கொலை செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.

5.10.2016 அன்று ராமராஜுன் ஆட்டோவை வரச் சொல்லி, சிலம்பரசனுக்கு பெண் பார்க்கப் போவதாகக் கூறி அவரை சில பெண தரகர்களிடம் கூட்டிச் சென்று காட்டியுள்ளார்கள். பின்னர் வீடு திரும்பியதும் சிலம்பரசன் மிகுந்த மகிழ்ச்சியில் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார்.

அதன்படி, ஆட்டோ டிரைவர் ராமராஜுடம் பணம் கொடுத்து, மகன் சிலம்பரசனுக்கு அளவுக்கு அதிகமாக மயங்கும் அளவிற்கு மது வாங்கிக் கொடுக்குமாறு கூறி அனுப்பியுள்ளனர்.

அதன்படி மதுகுடித்து மயக்க நிலையில் வந்த சிலம்பரசனை முருகன், ராமராஜ், சாந்தி ஆகியோர் சேர்ந்து நைலான் கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்கள்.

மூவரையும் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி முத்துசாரதா, குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளார்.