புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதன் மூலம் பல நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.
நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் வசிப்போர் இலங்கைப் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்ய முடியும்.
பிரஜாவுரிமையினை பெற்றுக்கொண்டவர்கள் வெளிநாடுகளிலேயே வசிக்காமல், அனைத்துத் துறைகளிலும் நாட்டின் மேம்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும் என அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நிலையில், புலம்பெயர் நாடுகளில் வாழும் ஒருதொகுதியினருக்கு இன்று பிரஜாவுரிமை வழங்கி வைக்கப்பட்டது.
இது தொடர்பான நிகழ்வு இன்று பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 30வது தேசிய விளையாட்டுப் போட்டியில் வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இலங்கை திருச்சபை தமிழ் கலவன் வித்தியாலயத்தின் தடகள வீராங்கனை செல்வி எஸ்.ஹேமப்பிரியா (1ம் இடம் – 21km அரை மரதன்), வூசோ வீராங்கனை செல்வி எம்.கிருபாலினி (2ம் இடம்- வூசோ) , மாவட்ட தடகள வீரர் செல்வன் எம்.கௌரிநாதன் (6ம் இடம்- மரதன்) ஆகிய வீரர்களுக்கான கௌரவிப்பும் தடகள பயிற்றுவிப்பாளரான நவநீதன், வூசோ பயிற்றுவிப்பாளர் நந்தகுமார் ஆகியோருக்கான கௌரவிப்பு நிகழ்வும் இன்று (26.09.2018) இடம்பெற்றது
இளைஞர் சேவைகள் மன்றத்தின் வாயிலில் ஆரம்பித்து வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் வலயத்தின் பணிப்பாளர் தலைமையில் கௌரவிப்பு நடைபெற்று இறுதியாக வித்தியாலய முதல்வர் தலைமையில் இலங்கை திருச்சபை தமிழ் கலவன் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்தியாவில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலிக் கொடூரமாக கொலை செய்யப்படும் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் அட்டபூர் அருகே இருக்கும் பாலத்திற்கு அருகில் இளைஞர் ஒருவரை கோடாரியால் நபர் ஒருவர் கொடூரமாக பல முறை வெட்டி சாய்க்கிறார்.
இதில் அந்த நபர் இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து இறக்கிறார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை என்ன காரணத்திற்காக செய்யப்பட்டது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. ஆனால் இறந்த நபர் நீதிமன்றத்திற்கு சென்று திரும்பும் போது இது நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சமீபத்தில் தான் பிரனாய் என்ற இளைஞர் தன் மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்று திரும்பும் போது கூலிப்படை ஏவி கொலை செய்யப்பட்டார்.
அந்த சம்பவமே நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது, மக்களுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளின் நலன்களை கருத்திற்கொண்டு மண் பரிசோதனை ஆய்வு கூட நிலையமொன்று நேற்று வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா பூங்கா வீதியில் அமைக்கப்பட்ட மண் பரிசோதனை ஆய்வு கூடத்தினை வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
விவசாயிகள் தமது விவசாய நிலங்களில் தேவையற்ற பசளை வகைகளை பயன்படுத்தாது மண்ணின் தன்மையை மாற்றியமைக்காது இருப்பதற்கும், விவசாய நிலத்திற்கு தேவையான பசளையை கண்டறிந்து அதனை பயிருக்கு இட்டு அதிகளவான விளைச்சளை ஏற்படுத்துவதற்கு வசதியாகவும் மண் பரிசோதனை ஆய்வு கூடம் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர்களான எம்.தியாகராசா, ஆர். இந்திரராசா, நீர்ப்பாசன திணைக்கள பொறியிலாளர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவின் Melbourne பகுதியில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் சிக்கியவருக்கு உதவப் போன ஒரு பெண் மீது இன்னொரு வாகனம் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Melbourne பகுதியில் நேற்றிரவு கார் ஒன்று வலது புறமாக திரும்ப முயற்சிக்கும்போது மிக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அதன்மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் படுகாயமடைந்தார்.
சம்பவம் நடைபெற்றபோது அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த Emily (27) என்னும் பெண் அந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபருக்கு உதவுவதற்காக ஓடியிருக்கிறார். அப்போது வேகமாக வந்த இன்னொரு கார் Emily மீது மோதியது.
அதில் சம்பவ இடத்திலேயே Emily பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு குழந்தைகளின் அன்புத்தாயான Emilyயின் மரணம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜெய்கிருஷ்ணன் என்பவர் தன்னிடம் டியூசன் படிக்க வந்த 20 வயது இளம் மாணவியை ரகசிய திருமணம் செய்துகொண்டார்.
பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர் ஜெய்கிருஷ்ணன்(65). இவருக்கு திருமணமாகி 3 மகன், ஒரு மகள் உள்ளனர், மனைவி இறந்துவிட்டார்.
அவர் தலைமை ஆசிரியராக வேலைபார்த்து வந்த பள்ளியில் தான் மகத் என்ற மாணவி படித்துவந்தார். இவர் பள்ளியில் இருந்து ஓய்வுபெற்ற பின்பும், மாணவிக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கூறியதுடன், டியூசனும் எடுத்துவந்தார்.
இதனால் ஜெய்கிருஷ்ணன் மீது மாணவிக்கு ஈர்ப்பு உருவானது. ஆனால் இதை யாரும் ஒரு பொருட்டாக கருதவில்லை. ஆசிரியர், மாணவி உறவு என்றே நினைத்துக்கொண்டனர். ஆனால் இருவரும் காதல் வயப்பட்டு வீட்டுக்கு தெரியாமல் வெளியே சுற்றத்தொடங்கினர்.
இரு தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் சென்று தந்தை–மகள் என்று கூறி விடுதியில் அறை எடுத்தனர். இதற்கிடையே மகத்தின் தந்தை பொலிசில் புகார் கொடுத்ததால் செல்போன் சிக்னலை வைத்து தேடியபோது ராமேஸ்வரத்தில் இருப்பது தெரியவந்தது
பஞ்சாப் பொலிசாரின் தகவலை தொடர்ந்து ராமேஸ்வரம் பொலிசாரிடம் அவர்கள் சிக்கினர். நானும், ஜெய்கிருஷ்ணனும் ஏற்கனவே திருமணம் செய்துகொண்டதாக மகத் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இருவரையும் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, பஞ்சாப் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
மது குடித்துவிட்டு துன்புறுத்தி வந்த மகனை கொன்று எரித்த வழக்கில் பெண் அதிகாரி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த முருகன் – சாந்தி தம்பதியினரின் மகன் சிலம்பரசன் (28). சாந்தி அரசு அதிகாரி ஆவார்.
மகன் சிலம்பரசன் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். காதல் திருமணம் செய்துகொண்ட இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
சிலம்பரசன் வேலைக்கும் செல்லாமல் தனது தாய் மற்றும் தந்தையுடன் ராஜபாளையத்தில் வசித்தார். பெற்றோரிடம் தினமும் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து அவர்களை துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் பெற்றோர் நிம்மதி இழந்துள்ளனர். சிலம்பரசன் மது போதையில் அடுப்பில் அப்பளம் பொறித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது தந்தை ஏதோ கூற இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமுற்ற சிலம்பரசன் கொதிக்கும் எண்ணெய்யை முருகனின் காலில் ஊற்றியுள்ளார்.
இதுபோன்ற சிலம்பரசனின் மோசமான செயல்களை பெற்றோரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் மகனை கொலை செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.
5.10.2016 அன்று ராமராஜுன் ஆட்டோவை வரச் சொல்லி, சிலம்பரசனுக்கு பெண் பார்க்கப் போவதாகக் கூறி அவரை சில பெண தரகர்களிடம் கூட்டிச் சென்று காட்டியுள்ளார்கள். பின்னர் வீடு திரும்பியதும் சிலம்பரசன் மிகுந்த மகிழ்ச்சியில் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார்.
அதன்படி, ஆட்டோ டிரைவர் ராமராஜுடம் பணம் கொடுத்து, மகன் சிலம்பரசனுக்கு அளவுக்கு அதிகமாக மயங்கும் அளவிற்கு மது வாங்கிக் கொடுக்குமாறு கூறி அனுப்பியுள்ளனர்.
அதன்படி மதுகுடித்து மயக்க நிலையில் வந்த சிலம்பரசனை முருகன், ராமராஜ், சாந்தி ஆகியோர் சேர்ந்து நைலான் கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்கள்.
மூவரையும் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி முத்துசாரதா, குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளார்.
எனது தந்தை விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள், அவர் எனது வாழ்க்கை குறித்து கேட்பதற்கு எந்த தகுதியும் கிடையாது என மகள் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
எனது குடும்பத்துக்கு நான் அச்சுறுத்தலாக இருக்கிறேன் இதன் காரணத்தினாலேயே எனக்கும் எனது தந்தைக்கும் அடிக்கடி பிரச்சனை இருந்துகொண்டே இருக்கிறது.
எனது சகோதரிகள் எனக்கு பிரச்சனையில்லை, ஆனால் அவர்கள் பின்னணியில் இருக்கும் ஆண்கள் தான் என்னுடன் மோதுகிறார்கள். அண்ணன் அருண் விஜய் எனது தந்தைக்கு அழுத்தம் தருகிறார். மருமகன் ஹிரியும் தனது வேறு பக்கம் அழுத்தம் தருகிறார்.
எனது குடும்பத்தில் நான் மிகவும் தைரியமானவள். என்னுடைய இந்த குணம் அவர்களுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கலாம். எனது அம்மா பெயரில் இருக்கும் சொத்துக்களை விற்று புது சொத்து வாங்குவார் எனது தந்தை.
வாங்கப்பட்ட புது சொத்தில் ஆடிட்டிங் பிரச்சனை இருப்பதாக கூறி எனது அம்மாவை நம்ப வைத்து அந்த சொத்தினை அவரது முதல் மனைவி முத்து கண்ணு அவர்கள் பெயரில் எழுதிவைப்பார். அதன் பின்னர் அந்த சொத்து அப்படியே அருண் விஜய் பெயரில் மாற்றப்படும்.
எனது தந்தை சம்பாதித்த பணத்தை அண்ணன் அருண் விஜய் அழித்துவிட்டார். அவருக்கெல்லாம் இப்போது படங்களில் சான்ஸ் கிடைப்பதே பெரிய விசயம். இதில் அவருக்கு வருமானம் எப்படி வரும்.
எனது தந்தையிடம் இருந்து அவரும், அவரது அம்மாவும் பணத்தினை எதிர்பார்த்து இருக்கின்றனர். இதுதான் எங்கள் குடும்பத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. நான் பயந்து ஓடவேண்டும், இதுதான் அவர்கள் என்னை எதிர்பார்க்கிறார்கள்.
நான் இரண்டு திருமணம் செய்துகொண்டதை பற்றி பேசுகிறார்கள், அப்படியென்றால் எனது அப்பாவுக்கு இரண்டு மனைவி. அவர் ஒன்றும் ஸ்ரீராமபுத்திரன் கிடையாது. அவருககு என்னை பற்றி கேட்பதற்கு எந்த தகுதியும் கிடையாது.
நான் வசிப்பது குடும்பமே கிடையாது. எனது அண்ணன் அருண் விஜய்யை ஆம்பளையா என்று கேட்கிறேன், ஆனால் அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் வெளியிடுகிறார்.
தேவையில்லாமல் இந்த வயதில் எனது தந்தை இப்படி நடந்துகொள்கிறார். நான் எனது அப்பாவிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன். இனி சம்பாதித்து யாருக்கு கொடுக்கப்போகிறீர்கள். அமைதியாக இருங்கள் என கூறிவிட்டேன். ஆனால் அவர் இவ்வாறு நடந்துகொண்டார் என கூறியுள்ளார்.
கேரளாவில் கார் விபத்தில் சிக்கிய இசையமைப்பாளரின் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாங்கல்ய பல்லாக்கு என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் பாலாபாஸ்கர்.
திருச்சூரிலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது ஓட்டுநரின் கவனக்குறைவால் கார் சாலையோர மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் அவரது இரண்டுவயது குழந்தை தேஜஸ்வினி உயிரிழந்தது.
இசையமப்பாளர் பாலாபாஸ்கர் மற்றும் அவரது மனைவி லட்சுமி படுகாயமடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலாபாஸ்கருக்கு திருமணமாகி 16 ஆண்டுகளாக குழந்தை இல்லை. குழந்தை ஆசையில் இருந்த இந்த தம்பதியினருக்கு 16 ஆண்டுகள் கழித்து தேஜஸ்வினி என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால், அந்த சந்தோஷம் இவர்களுக்கு நீடிக்கவில்லை. குழந்தை இறந்துபோனது அவரது உறவினர்கள் உட்பட அனைவரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
திருமணமாகி 16 வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தை உயிரிழந்துள்ளதால் அவரது உறவினர்கள் உட்பட அனைவரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வீ.இராதகிருஷ்ணன் கல்வி நிர்வாக சேவையில் இரண்டாம் தரத்திலிருந்து முதலாம் தரத்திற்கு பதவி உயர்வு கிடைக்கப் பெற்றமையடுத்து இன்று (26.09.2018) காலை 8.30 மணியளவில் கௌரவிப்பு இடம்பெற்றது.
வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாலையணிவித்து பொன்னாடை போர்த்தி ஊர்வலமாக வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலத்திற்கு அழைத்து வரப்பட்டு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இக் கௌரவிப்பு நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர், கோட்டக்கல்விப் பணிப்பாளர், உதவிக்கல்விப் பணிப்பாளர், ஆசிரியர் ஆலோசகர்கள், ஆசிரிய வளவாளர்கள், கணக்காளர், முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியாவில் அதிகரித்துள்ள குரங்குத் தொல்லைகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு நேற்றைய தினம் (25.09.2018) துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குரங்களினால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக மக்கள் தொடர்ச்சியாக முறைபாடுகளை முன்வைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அதற்கு தீர்வை வழங்கும் வகையில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் துப்பாக்கிகளை வழங்கி வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வு வவுனியா விவசாய திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது குரங்குகளை விரட்டக்கூடிய வகையிலான துப்பாக்கிகளையே விவசாய இளைஞர் கழகத்தின் பிரதிநிதிகளிடம் அவர் கையளித்துள்ளார்.
அந்தவகையில் குரங்களிடமிருந்து மக்களின் பயிர்ச்செய்கைகளை பாதுகாப்பதற்காகவே அவர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கினோம் என இதன்போது அவர் தெரிவித்தார்.
அவர் இன்று பிற்பகல் சிறி ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்ட போது ஞானசார தேரர் தாடியுடன் உள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஞானசார தேரர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக வைத்தியர்களின் பரிந்துரைக்கேற்ப இன்று மீண்டும் மாற்றப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றசாட்டின் பேரில் ஞானசார தேரருக்கு 6 வருட கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
களனியில் திருமணமான இரண்டு நாட்களின் கணவனின் மறுபக்கத்தை தெரிந்த கொண்ட மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையான கணவன், திருமணமான இரண்டு நாளில் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த நபர் ஒருவரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் போதைப்பொருளுக்கு தீவிரமாக அடிமையானவர் என களனி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருமணத்திற்கு முன்னர் கஞ்சாவுக்கு அடிமையாகியிருந்த குறித்த நபர் திருமணத்திற்கு பின்னரும் அவரால் அந்த பழக்கத்தை கைவிட முடியாமல் போயுள்ளது.
இந்நிலையில் மனைவிக்கு தெரியாமல் கஞ்சா பயன்படுத்த சென்ற குறித்த நபர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். தான் கஞ்சா வைத்திருந்த விடயத்தை மனைவிக்கு தெரிவிக்க வேண்டாம் என அவர் பொலிஸாரிடம் கெஞ்சியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பலத்த நம்பிக்கையுடன் வாழ்க்கை பயணத்தில் இணைந்த புதுமண பெண்ணுக்கு, கணவன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்ற விடயம் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக மணப்பெண் உட்பட குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை, வீதி நல்லூரில் உள்ள மந்திரிமனைக்குள் நின்ற காதல் ஜோடியை விரட்டியடித்த வயதான காவலாளி மீது இளைஞர் குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நல்லூர் மந்திரிமனைக்குள் கடந்த வாரம் இளைஞர் ஒருவரும், இளம் பெண் ஒருவரும் இருந்துள்ளனர். இதன்போது குறித்த இளைஞன் இளம் பெண் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். இதனை அவதானித்த காவலாளி இருவரையும் அங்கிருந்து விரட்டியடித்துள்ளார்.
இதன் பின்னர் இன்று மத்தியம் 3 பேர் கொண்ட இளைஞர் குழு கம்பிகள், தடிகள் சகிதம் மோட்டார் சைக்கிளில் வந்திறங்கி மந்திரிமனையின் காவலாளியை அழைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் வயதான காவலாளி பாடுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்தவர்களின் உதவியுடன் காவலாளி யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை மந்திரிமனைக்குள் இவ்வாறான சமூக பிறழ்வு நடத்தைகள் அவ்வப்போது நடப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா – பூந்தோட்டம் பகுதியில் இரவு வேளையில் வீட்டிற்குள் பாரிய முதலை ஒன்று புகுந்ததால் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், வனஜீவராசிகள் அதிகாரிகள் குறித்த இடத்திற்கு வருவதற்கு தாமதித்த நிலையில் இன்று காலையே வந்துள்ளனர்.
இதையடுத்து இன்று காலை முதலையை பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பூந்தோட்டம் – இந்து மயானத்திற்கு அருகிலுள்ள வீட்டு வளவு ஒன்றிற்குள் நேற்று இரவு 8 மணியளவில் பூந்தோட்டம் குளத்திலிருந்த முதலை ஒன்று உணவு, தண்ணீர் தேடிச் சென்றுள்ளது. வீட்டு நாயின் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் சென்று பார்வையிட்ட போது முதலை நின்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அயலவர்களின் உதவியுடன் முதலையை கயிற்றினால் கட்டி வெளியே செல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மகாறம்பைக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இரவு பொலிஸார் சென்று பார்வையிட்டுள்ளதுடன் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
இன்று காலை அவ்விடத்திற்குச் சென்று முதலையை அங்கிருந்து எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி நிலை காரணமாக குளத்திலுள்ள முதலைகள் உணவிற்கும் தண்ணீருக்கும் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி படையெடுக்கின்றன.
எனவே இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கி வருகின்றனர்.